Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதேசவாதத்தை தூண்டிய உதயன் : பத்திரிகையை எரித்த வன்னி மக்கள்!

Featured Replies

 
தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் தமது கருத்துக்களுடன் உடன்படாதவர்களைப் பழிவாங்கவும் துரோகிகள், அரச கைக்கூலிகள் போன்ற முத்திரைகளைக் குத்துவதற்கு பெரும்பாலானவர்கள் தயங்குவதில்லை என்பதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகின்ற உதயன் பத்திரிகை திகழ்ந்திருக்கின்றது என்ற கசப்பான உண்மை நடைபெற்றிருக்கின்றது.
ஊடகங்களில் பேசப்படாத ஆனால் பேசப்படவேண்டிய ஒரு கவலை தரும் விடயம் 20-03-2013 அன்று முல்லைத்தீவில் நடைபெற்றிருக்கின்றது. உதயன் பத்திரிகைப் பிரதிகள் முல்லைத்தீவில் தீவைத்து எரிக்கப்பட்டமையே குறித்த சம்பவமாகும்.
உதயன் பத்திரிகை எரிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியவுடன் உடனடியாக இராணுவப் புலனாய்வாளர்கள் அல்லது இராணுவத்தினர் தான் எரித்திருப்பார்கள் என்ற கேள்வி வாசகர்கள் மத்தியில் உடனடியாக எழுந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பத்திரிகையினை எரித்தவர்கள் தமிழ்த் தேசியத்தினை நேசிக்கின்ற தமிழ் மக்கள் தான் என்பது தான் சுட்டிக்காட்டத் தக்கவிடயமாகும்.
 
பத்திரிகையில் வெளியாகியிருந்த ஒரு கவிதை தொடர்பில் கேள்வி எழுப்பிய மக்களுக்கு உரிய பதிலை உதயன் வழங்கத் தவறியதுடன் தட்டிக்கேட்டவர்களை அரச கைக்கூலிகளாக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதன் பலனே பத்திரிகை எரிப்புச் சம்பவமும் வன்னியில் உதயன் பத்திரிகை விநியோகத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடியுமாகும்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை (17-03-2013) உதயன் நாளிதழில் “ஆங்கிலத்தில் ஆளுநருக்கு…” என்ற கவிதை வடிவிலான மடலில் வன்னி மாணவர்களையும் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தினையும் கொச்சைப்படுத்தும் வகையிலான வரிகள் இடம்பெற்றிருந்தன. ஆசிரியர்கள் தமக்கான இடமாற்றம் தொடர்பில் தெரிவிக்கும் கருத்துக்களின் தொகுப்பு வடிவைக் கொண்டதே குறித்த படைப்பு, அதில்
 
 
“….கண்ணகியாய் தலைவிரித்து
வழிமறித்தாள் இன்னொருத்தி
வாருமையா வாசனையா
வந்ததையா விபரீதம்
எனக்கு வற்றாப்பளைக்கு இடமாற்றம்
அடிக்கடி எனக்கு காக்கை வலிப்பு வரும்
உடுக்குச் சத்தம் கேட்டால் அம்மன் கலைவரும்
குடும்பச் சுமை வேறு
எப்பிடி நான் வன்னி சென்று மாடு மேய்ப்பேன்…”
 
uthayan-3.jpg
 
குறித்த பதிவில் “எப்படி நான் வன்னி சென்று மாடு மேய்ப்பேன்” என்று ஆசிரியர் கேள்வி எழுப்புவது,. வன்னியில் உள்ள மாணவர்களை மாடுகளாக குறிப்பிடப்படுகின்றது என்பதே அந்த மக்களின் குற்றச்சாட்டாகும். அதேபோல வற்றாப்பளை அம்மன் தொடர்பில் எழுதப்பட்டுள்ள வரிகள் வரலாற்றுப்பிரசித்தி பெற்ற ஆலயத்தை கொச்சைப்படுத்துவாக அமைகின்றது என்பது அந்த மக்களின் கொதிநிலைக்கான காரணமாகும்.
 
குறித்த பதிவு தொடர்பில் அதிர்ப்தியடைந்த மக்கள் பிரதிநிதிகள் உதயன் நாளிதழைத் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பியிருந்தனர். அரச செயலக அதிகாரி, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வற்றாப்பளை அம்மன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், ஊடகத் துறை சார்ந்தோர் என சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள் உதயன் ஆசிரியர் பீடத்தினைத் தொடர்பு கொண்டு குறித்த ஆக்கம் தொடர்பில் மாற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவிடுத்திருந்தனர்.
 
கோரிக்கைவிடுத்தவர்கள் தம்மை அடையாளப்படுத்தி தமது கருத்துக்களை முன்வைத்த போதிலும் உதயன் ஆசிரியர் பீடத்தில் இருந்தவர்கள் எவரையும் மதிக்கும் வகையிலோ பொறுப்பான வகையிலோ பதிலளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. ஆசிரியர் பீடத்தினைச் சேர்ந்த ஒரு சிலர் தன்மையாக பதிலளிக்க முற்பட்டபோதிலும் ஆசிரியர் பீடத்தினைச் சேர்ந்த ஏனைய சிலர் இடைமறித்து கேள்வி எழுப்பியவர்களை இழிவான வார்த்தைகளால் மிக மோசமாகத் திட்டியிருக்கின்றனர். அதனை விடவும் ஊடகம் என்றால் என்னவென்று தெரியுமா? நாங்கள் சர்வதேச தரத்தில் இருக்கின்றோம்? ஒரு ஊடகத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உதயன் பத்திரிகையை காடு என்று நினைத்தீர்களா? உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். என இடைவிடாது திட்டித் தீர்த்திருக்கின்றார்கள். குறிப்பாக இணையத்தில் பிரயோகிக்கக்கூடிய வார்த்தைகளை கணிசமானவர்கள் பயன்படுத்தவேயில்லை. அவ்வளவு மோசமான இழிவான வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
 
இத்தனைக்கும் மத்தியிலும் குறித்த ஆக்கம் வன்னி மக்களை புண்படுத்துவதாக உள்ளது. அதற்கு வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிடுமாறு கோரிய போது, “நீங்கள் விரும்பினால் எழுதித் தாங்கோ.. நாங்கள் பிரசுரிப்போம், வெளியில் இருந்து வந்த படைப்புக்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல” என்று பொறுப்பற்ற வகையில் பதிலளிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு பத்திரிகையில் பிரசுரமாகின்ற விளம்பரங்கள் தவிர்ந்த அனைத்து விடயங்களுக்கும் பதிலளிக்கவேண்டிய முழுமையான பொறுப்பு பத்திரிகை ஆசிரியருக்கே உள்ளது என்பதை அங்கு பணி செய்பவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லையா? அல்லது அதனை விளங்கிக் கொள்ளும் பக்குவம் அவர்களிடம் இல்லையா? என்பது புரியவில்லை என்கின்றனர் வன்னி மக்கள்.
 
இந்தப் பாணியினை உதயன் கடந்தகாலங்களிலும் முன்னெடுத்தே வந்திருக்கின்றது. தனிப்பட்ட நபர்களையோ நிறுவனங்களையோ பற்றி எழுதுவது, அது தொடர்பில் அதிர்ப்தி தெரிவித்து யாராவது உதயன் பத்திரிகை அலுவலத்திற்குச் சென்றால் வெள்ளைத் தாள் கொடுத்து அதற்கு மறுப்பு எழுதித் தந்துவிட்டுச் செல்லுங்கள் பிரசுரிக்கப்படும். நாங்களாக மறுப்பு பிரசுரிக்கமாட்டோம் என்பது அவர்கள் நிலைப்பாடாக இருக்கும். சர்வாதிகாரப் பாணியில் அவர்கள் ஏனையவர்கள் மீது கையாள்கின்ற கெடுபிடி நடவடிக்கை இன்று வன்னி மக்களின் உணர்வுகளைத் தட்டிப்பார்த்திருக்கின்றது.
 
இந்த விடயம் முதலில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்திலேயே எதிரொலித்திருக்கின்றது. குறித்த படைப்பில் வன்னியும் வற்றாப்பளையும் இழிவாக சித்திரிக்கப்பட்டிருக்கின்றமைக்கு வருத்தம் தெரிவித்து உதயன் பத்திரிகை செய்திவெளியிடும் வரையில் உதயன் பத்திரிகையை பெற்றுக்கொள்வதில்லை என்று வற்றாப்பளை பத்திரிகை விற்பனை நிலைய முகவர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.
 
இதனை அடுத்து 20-03-2013 உதயன் பத்திரிகை தனது முதல் பக்கத்தில் “அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களால் பத்திரிகை முகவர்களுக்கு முல்லைத்தீவில் மிரட்டல்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கின்றது. முதல் பக்கத்தில் குறித்த செய்தி அச்சிடப்பட்டு வன்னியில் விநியோகிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த செய்திக்கு பதிலாக ஜெனீவா விவகாரம் அடங்கிய செய்தியினை பிரசுரித்து யாழ்.குடாநாட்டிலும் ஏனைய பகுதிகளிலும் பத்திரிகை விநியோகம் இடம்பெற்றிருக்கின்றது.
 
நியாயமான முறையில் கேள்வி எழுப்பிய மக்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக மக்களை அரச அமைச்சர் ஒருவருடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டிருக்கின்றமை மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றது. முல்லைத்தீவு முள்ளியவளையில் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கென அரசாங்கம் மேற்கொண்டுவருகின்ற தீவிர நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து நெருக்கடிகளை எதிர்கொண்டுவருபவர்கள் முள்ளியவளைக் கிராம மக்கள். இந்த நிலையில் அதே மக்கள் அமைச்சரின் நெருக்கமானவர்களாக மாறினார்கள்? என்பதற்கான பதிலை உதயன் பத்திரிகை வைத்திருக்கிறதா? என்ற கேள்வியை முன்வைக்கலாம். அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களால் முல்லைத்தீவில் பத்திரிகை முகவர்களுக்கு மிரட்டல் என்ற செய்தி வெளியாகியதும் ஆத்திரமடைந்த மக்கள் முல்லைத்தீவு அரச செயலகத்தின் முன்பாக உதயன் பத்திரிகைப் பிரதிகளை தீயிட்டுக் கொழுத்தினர்.
uthayan-vanni-723x1024.jpg
 
முல்லைத்தீவில் அமைச்சர் றிசாட் பதியுதீனின் தலைமையில் மேற்கொள்ளப்படுகின்ற நில அபகரிப்பு அத்துமீறிய குடியேற்றங்களுக்கு எதிராக போராடிவருகின்ற அதே மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது தாம் இழைத்த அநீதிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அந்த மக்களையே அரச ஆதரவாளர்களாக சித்தரித்தது மிக மோசமான இழிவான ஊடக தர்மம் என்பதை அதன் நிர்வாகியும் அதன் ஆசிரியர் பீடமும் ஏற்றுக்கொண்டே தான் ஆகவேண்டும்.
 
இதனைத் தொடர்ந்தும் தனது இழிவான செயற்பாடுகளை உதயன் கைவிடவில்லை. பத்திரிகை தீயிடப்பட்டதற்கு மறுநாள், 17ஆம் திகதி வெளியாகிய படைப்புத் தொடர்பில் நியாயப்படுத்தும் பாணியிலான ஒரு சிறிய செய்திக் குறிப்பினை சுமார் நூறு வரையான பத்திரிகைப் பிரதிகளில் இணைத்து வன்னிக்கு குறிப்பாக வற்றாப்பளையை அண்டிய பகுதிகளுக்கு மட்டும் விநியோகம் செய்திருக்கிறார்கள். அந்தச் செய்திக் குறிப்பு இடம்பெற்ற பகுதியில் வேறு செய்திகள் இணைக்கப்பட்டே யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சி உட்பட்ட பகுதியிலும் உதயன் நாளிதழ் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  குறித்த செய்தி தொடர்பிலான உதயனின் செய்திக் குறிப்பினை சில பிரதிகளுக்கு மட்டும் பிரசுரித்து விட்டு ஏனைய பிரதிகளில் வேறு செய்தியை வெளியிட்ட உதயனின் நேர்மைத் தனத்தை எந்த வகையில் நியாயப்படுத்தப் போகிறது உதயன் நிர்வாகம்.
 
உதயனின் இந்த நடவடிக்கை தொடர்பிலும், ஆசிரியர் பீடத்தினர் மக்களுடன் உரையாடிய விதம் தொடர்பிலும் சமூகத்தில் உயர் நிலையில் இருப்போர் ஊடாக பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தமது நிறுவனத்தில் இருந்து எவரும் அவ்வாறு கடுமையாக மக்களுடன் கதைக்கவில்லை என்று கூறியிருக்கின்றார். அதற்கான ஆதாரங்களை குறித்த ஊடகம் எதிர்பார்க்குமாக இருந்தால் உரையாடிய மக்கள் பிரதிநிதிகளின் வாக்குமூலங்களை இணைப்பதற்கு தமிழ்லீடர் தயாராக இருக்கின்றது என்பதைக் குறிப்பிட விரும்புகின்றோம்.
 
தனிப்பட்ட வியாபார நோக்கத்திற்காக போரின் சுமையோடு போராடி இன்று வரை மீள முடியாத இழப்புக்களோடு வாழும் மக்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்த்திருக்கிறது உதயன் நிர்வாகம். இந்த நடவடிக்கை தமிழ்த் தேசியம் தொடர்பிலான பற்றுறுதியுடனும் அசையாத நம்பிக்கையுடனும் இருக்கின்ற தமிழ் மக்களை கூட்டமைப்பு என்கின்ற சக்தியில் இருந்து திசை திருப்பி விடும் அபாயத்தை சரவணபவன் எம்பி புரிந்து கொண்டிருக்கவில்லையா? அல்லது அவருடைய ஏவலாளிகள் சொல்பவை மட்டுமே வேதம் என்று எண்ணிக் கொள்கின்றாரா? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
 
நியாயம் கோரிய மக்களை அரச ஆதரவாளர்களாகச் சித்தரித்த உதயன் நிர்வாகத்தின் வலையில் வவுனியா நகரசபையும் விழுந்திருப்பது வன்னியில் குறிப்பாக முல்லைத்தீவு வாழ் மக்களை மிகுந்த வேதனைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரியவருகின்றது. உதயன் மீது அச்சுறுத்தல் என்ற பெயரில், நியாயம் கோரிய மக்களுக்கு எதிராகவே வவுனியா நகர சபை தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மிகுந்த மன உழைச்சலை ஏற்படுத்தியிருக்கின்றது. நியாயத்திற்காக கொதித்தெழுந்த மக்களின் உணர்வுகளை திசை திருப்பி அதிலும் இலாபம் ஈட்டுவதற்கு உதயன் நிர்வாகம் முற்பட்டிருக்கின்றது.
 
நியாயம் கிடைக்கும் வரை பத்திரிகையை புறக்கணிப்போம் என்ற மக்களின் உணர்வு அரச சார்புடையவர்களின் அச்சுறுத்தலாக புனையப்பட்ட கதையே நகர சபையின் தீர்மானம் வரை சென்றிருப்பதாகவே முல்லைத்தீவு மக்கள் கருதுவதாக அறிய முடிகின்றது. இவ்வாறான வேதனை தரும் விடயத்தினை மேற்கொண்டிருக்கின்ற உதயன் பத்திரிகையின் வியாபார நோக்கத்திற்காக மக்களின் உணர்வுகளை அடகு வைக்கவேண்டாம் என்பதை வவுனியா நகர சபைக்கும் அதன் உப தலைவருக்கும் சுட்டிக்காட்ட வன்னி மக்கள் முற்படுகின்றார்கள்.
 
அனாதரவாக ஏதிலிகளாக வாழும் வன்னி மக்களுக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை. அவர்கள் மனங்களை புண்படுத்தாமல் விட்டாலே அவர்களுக்கு அது ஆறுதலாக இருக்கும்.. வியாபாரிகளுக்கு மனித உணர்வுகள் புரியுமா? என்பது கேள்விக்குரியதுதான்.
 
-தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்
  • கருத்துக்கள உறவுகள்

உதயன் பத்திரிகையின், சரித்திரத்தை உங்களுக்குச் சொல்லி மினக்கெட்டு, எனது.... நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
வன்னி மாடு, நல்ல மாடு தானே....
அதுக்கும்.... உதயன் தலையங்கத்துக்கும் என்ன சம்பந்தம்.
சும்மா.... பிரிவினையை... மேலும் அதிகரிக்க வேண்டாம். ஓகே.... :)  :rolleyes:  :wub:

 

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது

Edited by நியானி

உதயன் பத்திரிகையின், சரித்திரத்தை உங்களுக்குச் சொல்லி மினக்கெட்டு, எனது.... நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

வன்னி மாடு, நல்ல மாடு தானே....

அதுக்கும்.... உதயன் தலையங்கத்துக்கும் என்ன சம்பந்தம்.

சும்மா.... பிரிவினையை... மேலும் அதிகரிக்க வேண்டாம். ஓகே.... :)  :rolleyes:  :wub:

 

உதயன் எப்போதும் அரசுடன் தொடர்புடையதென சந்தேகத்துக்கு இடமான பத்திரிகையே! உதயனூடாக சில பிரிவினைகளை பேரினவாதம் செய்வதற்கு சந்தர்ப்பம் உண்டு. இல்லாதபட்சத்தி்ல் பத்திரிகைகள் இவ்வாறு வார்த்தைப்பிரயோகங்கள் விட சந்தர்ப்பம் இல்லை.

  • தொடங்கியவர்

உதயன் பத்திரிகையின், சரித்திரத்தை உங்களுக்குச் சொல்லி மினக்கெட்டு, எனது.... நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

வன்னி மாடு, நல்ல மாடு தானே....

அதுக்கும்.... உதயன் தலையங்கத்துக்கும் என்ன சம்பந்தம்.

சும்மா.... பிரிவினையை... மேலும் அதிகரிக்க வேண்டாம். ஓகே.... :)  :rolleyes:  :wub:

 

மாணவர்களை மாடுகளாக வர்ணித்த உதயனைவிட்டிட்டு வன்னி மாடுகள் நல்லமாடு என்று சொல்லி அவர்களை மேலும் துன்பத்துக்கு ஆளாக்காதீர்கள்.  

 

உதயன் என்ன சொன்னாலும் சரியென வாதிடுகிறீர்களா?  கடந்த கால நல்லவர்கள்தான் இன்றைய துரோகிகள் என்பதையும் மறக்கவேண்டாம் . உதாரணம் கருணா, கேபி. (உதயனை நான் இங்கே துரோகி என்று குறிப்பிட்டதாக அர்த்தப்படுத்த வேண்டாம்.)

Edited by கலையழகன்

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் எப்போதும் அரசுடன் தொடர்புடையதென சந்தேகத்துக்கு இடமான பத்திரிகையே! உதயனூடாக சில பிரிவினைகளை பேரினவாதம் செய்வதற்கு சந்தர்ப்பம் உண்டு. இல்லாதபட்சத்தி்ல் பத்திரிகைகள் இவ்வாறு வார்த்தைப்பிரயோகங்கள் விட சந்தர்ப்பம் இல்லை.

 

உதயன், தன்னைத் தானே........ தாழ்த்திக் கொண்டது.

சில வருடங்களுக்கு முன்பு, அப்பாவின் மரண அறிவித்தல் கொடுக்க உதயன் அலுவலகத்துக்கு, நேரடியாகச் சென்ற போது, அங்கு பல சிங்கள‌வர்கள் கடைமை ஆற்றியதை கவனித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களை மாடுகளாக வர்ணித்த உதயனைவிட்டிட்டு வன்னி மாடுகள் நல்லமாடு என்று சொல்லி அவர்களை மேலும் துன்பத்துக்கு ஆளாக்காதீர்கள்.  

 

உதயன் என்ன சொன்னாலும் சரியென வாதிடுகிறீர்களா?  காடந்த கால நல்லவர்கள்தான் இன்றைய துரோகிகள் என்பதையும் மறக்கவேண்டாம் . உதாரணம் கருணா, கேபி. (உதயனை நான் இங்கே துரோகி என்று குறிப்பிட்டதாக அர்த்தப்படுத்த வேண்டாம்.)

 

எனக்கு, நீண்ட...... பெருமூச்சை விடத்தான்.... முடிகின்றது.

என்ன... செய்வது, உதயனும்.... சிங்களவனிடம்  விலைக்குப் போயுள்ளது போலுள்ளது.ஹ்ம்ம்ம்ம்....

(1) முல்லைத்தீவு மக்களின் கோபம் நியாயமானது

(2) இந்தக் கவிதையை
எழுதியவர் மீது கோபப்படுவது தான் முதலாவது நியாயமாக இருக்கும் உதயனிடம்
இல்லை. (இந்தக் கவிதையை பத்திரிகை நிர்வாகமே பிரசுரிக்கவில்லை என்று
நினைக்கிறேன்)

(3) ஆனால் அதைப் பிரசுரித்த பத்திரிகை என்ற முறையில் கவிதையின் காடைத்தனத்தை சுட்டிக்காட்டி மறுப்பு எழுதி அதைப்  பிரசுரிக்க  கேட்கலாம்.

(4) அதனை பிரசுரிக்காத இடத்து அல்லது பொறுப்பான பதிலைக் கூறாதவிடத்து, பத்திரிகை மீது கோபப்படுவது நியாயம்.

(5) பத்திரிகை நிர்வாகம் தான்தோன்றித் தனமாக பிரச்சினையை திசை திருப்ப முயலுவது தவறு. எனவே மக்கள் அதன் மீது கோபப்படுவது நியாயம்.

(6) இதை பிரதேசவாதமாக ஒரு பத்திரிகை மீது பழி சுமத்துவது அபாண்டம்.

ஆசிரியத் தொழிலுக்கு பொருத்தமில்லாத ஓர் அப்பட்டமான சுயநலவாதி ஒருவரால் தான் இவ்வாறான ஒரு கவிதையை  எழுத முடியும். டக்லஸ் போன்ற சிங்களப் பயங்கரவாதிகளின் கைக்கூலிக் கும்பலின் அனுசரணையில் ஆசிரியத் தொழிலுக்கு வந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்.

பிரதேசவாதத்தை வளர்க்காமல் இப்படிபட்டவர்களின் கருத்தை கருத்தால் வெல்வது ஆரோக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

பழைய சிறீமாவோ கால தமிழ் சித்தாந்தவாதிகள் இன்னும் திருந்தல்ல என்று இக்கவிதை சொல்லி நிற்கிறது. உதயனுக்குள்ளும் அது கொஞ்சம் இருக்கவே செய்கிறது. அதற்கு மேலால்...

 

வன்னியோ.. எதுவோ.. பிந்தங்கியுள்ள போரால் மிகவும் பாதிப்பட்டுள்ள எமது மக்களை மண்ணை வளப்படுத்த வேண்டும் என்ற சிந்தனைப் போக்கு அருகிவருவதையும் பழைய காலம் போல.. ரெயில்.. பஸ் போற இடங்களில் வேர்வை இல்லாத தொழில்தான் செய்வோம் என்ற தமிழ் மேட்டுக்குடியின் திமிர்த்தனம் இதில் தொனிக்கிறது.

 

இதனை வளர்ப்பது போல.. உதயன் போன்ற சமூகப் பொறுப்புணர்ந்துள்ள போராட்ட காலம் நெடுகிலும் பயணித்த ஒரு ஊடகம்  தவறுகளை தெரிந்தோ தெரியாமலோ செய்வது கண்டிக்கத்தக்கது. மேலும் ஊடகம் ஒன்றின் தவறை அவர்களுக்கு முறையிட்டு மக்கள் திருத்திக் கொள்ள வேண்டும். திருத்தாத பட்சத்திலேயே எரிப்பு அதுஇதென்று இறங்கலாம். இன்றேல் அது எமக்கிடையே பிரிவினைகளை தூண்டிவிடக் காத்திருப்போருக்கு மெல்ல நல்ல அவலாகி விடும்.

 

காரணம்.. கவிதை எழுதுபவரின் சிந்தனை தான் ஊடகத்தின் சிந்தனை என்று எண்ண முடியாது. ஊடகம் கவிதையின் வரிகளை சரிவர கவனிக்காமல் விட்டிருக்கலாம். அதனால் அதற்கு திருத்த அல்லது திருந்த ஓர் இடமளிப்பது நன்று. இந்த எரிப்புக்குப் பின்னால்.. தமிழ் பேசும்.. மக்களிடையே பிரிவினைகளை தூண்டிவிட விரும்புவோர் இருந்திருக்கலாம். உதயனின் அந்தச் செய்தியிலும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் உதயன் தனது தவறையும் அதில் தெரிவித்து.. பிரிவினையை தூண்டிவிடுபவர்களுக்கு...தான் பிரசுரித்த கவிதை துணை போனதற்கு உதயன் மன்னிப்புக் கேட்பதே நியாயம். அதுமட்டுமன்றி இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் நிகழலாமல் பார்த்துக் கொள்வதோடு.. போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நல்ல மனதோடு சேவை வழங்க முன்வர மக்களை ஊக்குவிக்கவும் வேண்டும்.

 

எமக்கிடையே பிரிவினைகளை தூண்டிவிட.. எமது தமிழீழக் கனவை சிதைக்க.. எமது ஒற்றுமையை சிதைக்க இன்று எதிரியும் எம் துரோகிகளும்.. இன்னும் பலரும் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில்.. பலவீனமாக உள்ள நாம் எப்போதும் செயலுக்கு முன் சற்று சிந்தித்துச் செயற்படுவது நன்று. அது வன்னி மக்களாக இருந்தால் என்ன.. வட தமிழீழ மக்களாக இருந்தால் என்ன.. தென் தமிழீழ மக்களாக இருந்தால் என்ன..இந்தப் பொறுப்புணர்வை மக்கள் உள்வாங்கிக் கொள்வதும் அவசியம்.. ஊடகங்கள் தமது செய்திகள் ஆக்கள்.. தனியார் ஆக்கங்கள் தொடர்பில் அவதானமாக இருந்து அவற்றைப் பிரசுரிப்பதும் அவசியம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தின் திமிர்பிடித்த அதிகார வர்க்கத்தினர். காரியம் ஆகவேண்டுமெனில் காலில் விழுவார்கள். இதற்கு முன்னாநாள் அரசஅதிபர் கணேஸ் அவர்கள் சிறந்த உதாரணம். இப்போது யாழ்ப்பணத்தில் கல்விநிலை மிகவும் மோசம். சிறார்களது கல்வியில் தனியார் வங்கிகளும் பெரும் முதலீட்டு நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்தி அவர்களை விளம்பரத்துக்கான ஊடகமாகவே மாற்றி வைத்துள்ளனர் அதற்கு உதாரணம், புலமைப்பரிசில் வினாத்தாள்கள்.

 

எனது கிட்டடி உறவு ஒண்டு வன்னியில் மல்லாவிக்கு மாற்றலாகி ஐந்து வருடங்கள் கழிந்த நிலையிலறின்னமும் அதிகாரிகளது கிருபையில் யாழ்ப்பாணத்தைவிட்டு இன்னமும் கிளம்பவில்லை. அவரது தந்தையாரு ஆசிரியரே அவர்கூறுகிறார் அங்சாறு பிள்ளைகளுக்கு படிப்பிக்கிறது பம்பல் இல்லையாம். அதாவது அக்குழந்தைகளது கல்விபெறும் உரிமையை பறிப்பதை யாராலும் மறுதலிக்க முடியாது. முள்ளிவாய்கால் அவலம் நந்தபோது சொக்கட்டான் பந்தல் போட்டு சாமத்திய வீடு செய்தவர்களே யாழ்ப்பாணிகள். உதயன் கருத்து என்னவெனில் வன்னி மாணவர்களை யாழ்ப்பாணத்து திமிர் பிடித்த கல்விச் சமூகம் மாடுகளாகவே மதிக்கின்றது. இது உண்மையே.

  • கருத்துக்கள உறவுகள்

"அருகிப்போன சில திமிர்தனங்களை கருத்தியல்வாக்கத்தின் மூலம் உயிர் கொடுப்பதிற்கு சிங்களவன் முனைகிறான்" என நம்மை ஏமாற்றுவதை விட்டு உடனடியாய் மன்னிப்பு கேட்பது உதயனுக்கு நல்லது அதுதான் படித்தவர்களின் பண்பு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பத்திரிகை ஒரே நாளில் இரு வேறு விதமான செய்திகளைத் தருவது பத்திரிகை தர்மமாகாது.அதுவும் பிரச்சினைக்குட்பட்ட செய்தியை குறிப்பிட்ட பகுதி மக்களுக்குள் பிளவை உண்டு படுத்தக் கூடியவாறு எழுதுவது உதயனின் குற்றமுள்ள மனது குறுகுறுக்கும் என்பதைத்தான் காட்டுகிறது.ஒரு குறிப்பிட்ட ஆக்கம் ஒருசில வாசகர்களைப் புண்படுத்துமாயின் அதனை நீக்கி விடுமாறு படைப்பாளியிடம் கேட்பதே பத்திரிகையாசிரியரின் பொறுப்பாகும்.அதைவிடுத்து எவர் என்ன எழுதினாலும் கண்ணை மூடிக்கொண்டு பிரசுரிப்பதாயின் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியர் தேவையில்லை.அச்சுத் தொழிலாளர்கள் போதும்.பத்திரிகையில் வந்த விகாரத்துக்குரிய செயத்திக்கு விளக்கம் கொடுக்க வேண்டியது ஆசியரின் பொறுப்பும் பத்திரிகை தர்மமுமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகைகள் செய்திகளைத் திரிப்பதில் ஒன்றும் புதுமையில்லை!

 

ஜனநாயக விழுமியங்களைப் பேணுவதாகச் சொல்லிக்கொள்ளும் மேலை நாடுகளில் கூட இது நடைபெறுகின்றது! வாசகர்கள், அந்தப்பத்திரிகையை வாங்காமல் விடலாம். அந்தப்பத்திரிகைக்கு, விளம்பரங்கள் கொடுக்காமல் விடுவதன் மூலம்,அந்தப் பத்திரிகைக்கு, அதன் தவறை உணரவைக்கலாம்!

 

ஆனால், ஒரே பத்திரிகை, இரண்டு பிரதேசங்களில் வெவ்வேறு விதமாக ஒரே கவிதையை வெளியிடுவதென்பது தான் புதுமையாக உள்ளது! 'உதயனின் கரங்கள் யாரால் நகர்த்தப்படுகின்றன என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகின்றது!

 

இருப்பினும், மேட்டுக்குடி, யாழ்ப்பாணி போன்ற பெரிய வார்த்தைகளை இதனுள் இழுத்து வருவது, எனக்குச் சரியாகப் படவில்லை. 

 

ஒருவேளை 'உதயனும்; அதைத்தான் எதிர்பார்த்து இந்தச் செயலைச் செய்திருக்கலாம்! அப்படியாயின் அதன் முகத்திலடிப்பது மாதிரி, இதைப் பெரிது படுத்தாமல், விட்டுவிடுவதே புத்திசாலித் தனமாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகையில் வரும் ஆக்கங்கள் எல்லாவற்றையும் எடிட்டர் (ஆசிரியர்) ஒப்புப் பார்த்துத்தான் பிரசுரிக்கின்றார்கள்.  எனவே ஆசிரியர் சரியாகக் கவனிக்கவில்லை என்றுதான் கருதவேண்டும்.

 

ஆனாலும் வன்னிப் பகுதி பின்தங்கிய பகுதி என்று கருதி ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்கள் என்று பலரும் அங்கு வேலை செய்வதற்குத் தயங்குவது வழமைதானே. அதனால்தான் படிக்காமல் குழப்படி செய்பவர்களை "வன்னிக்குப் மாடு மேய்க்கப் போ" என்று முன்னைய காலங்களில் சொல்வார்கள். அதே மனப்பான்மையில் உள்ளவர் எழுதிய கவிதை போலுள்ளது. ஆனால் பிரதேசவாதத்தை வேண்டுமென்றே காட்டவில்லை. உள்ளே ஊறி இருப்பது வெளியே வந்திருக்கின்றது!

இதில தூக்கிபிடிப்பதுக்கு ஒண்டுமில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
முக்கிய பிரச்சனை பிரதேசவாதம் என்பது அல்ல .. 
 
இப்போது எங்களுக்கு வேண்டியது எமது மக்களுக்கான நிரந்தரமான தீர்வு. 
 
அதற்காக எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும். 
 
பிரதேசவாதம் பற்றி பேசுவதே .... தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை நீர்த்து போக வைப்பதாக அமையும்.  
  • கருத்துக்கள உறவுகள்

 தவறுகள் நடக்க இடமுண்டு. குளோபல்நியூஸ்.கொம்மின் சில செய்திகள் தவறான மொழி பெயர்ப்பு, தவறான படம் போன்றன யாழில் வாசகர்கள் சுட்டிக்காட்டிய பின்  அவ் ஆசிரியருக்கு தெரியப்படுத்தி  திருத்திக்கொண்டார். ஆகவே தவறுகள் எங்கும் நிகழலாம்.

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.