Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அவசர அமைச்சரவைக் கூட்டம் தேவை' - ரவூப் ஹக்கீம்

Featured Replies

கண்டியில் நடந்த கூட்டம் ஒன்றில் பொதுபல சேனா அமைப்பின் பௌத்த பிக்கு ஒருவரே, ''பெஷன் பக்'' என்னும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனத்தின் மீதான தாக்குதலுக்கு மறைமுகமாகத் தூண்டியதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் அவர்கள், இது குறித்து ஆராய அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்றை நடத்துமாறு ஜனாதிபதியை கேட்டிருக்கிறார்.

ஒரு சிங்கள பெண்ணை அந்த நிறுவனத்தில் பலவந்தப்படுத்தியதாக பொய்க்குற்றஞ்சாட்டியே அப்படி அவர் தூண்டியதாக ரவூப் ஹக்கிம் கூறியுள்ளார்.

இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறுபான்மை மக்கள் மீது ஒரு உதிரிக்கும்பல் இலக்கு வைத்து தாக்குவதற்கு அரசாங்கமே இடமளித்ததாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறுகிறார்.

கோட்டாபாய மீது விமர்சனம்
அண்மையில் பொதுபல சேனா அமைப்பின் கட்டடம் ஒன்றை இலங்கை பாதுகாப்பு செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்ததை கடுமையாக விமர்சித்துள்ள அமைச்சர் ஹக்கீம் அவர்கள், அந்தக் கூட்டத்தில் அவரை கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று தான் முன்னதாகவே ஜனாதிபதியை கேட்டிருந்ததாகவும் கூறினார்.

அப்படி பாதுகாப்பு செயலர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டதே, பொதுபல சேனா அமைப்பு இன்று அசுர தாண்டவம் ஆடுவதற்கு தூண்டுகோலாக அமைந்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவை குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

இதேவேளை, இலங்கையில் முஸ்லிம்கள் கௌரவமாக வாழ்வதற்கு தமது அமைச்சுப் பதவிகள்தான் தடையாக இருக்குமானால், அதனை துறக்க தாம் தயாராக இருப்பதாக இலங்கையின் மற்றுமொரு அமைச்சரான ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார். ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/03/130329_rauffhakkimonputhu.shtml

  • தொடங்கியவர்

முஸ்லிம்களின் மீது நேரடித் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன: றிசாத்

பெஷன் பக் வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலை தாக்கப்பட்டமையின் பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் குறித்து துரித நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என  ஜனாதிபதி,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் தான் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு குறித்த களஞ்சியசாலை தாக்கப்பட்ட தகவல் கிட்டியதும்,ஸ்தலத்திற்கு விரைந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் சேதத்துக்குள்ளான பொருட்களை பார்வையிட்டுள்ளதுடன் உரிமையாளருடனும் கலந்துரையாடியுள்ளார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்  இவ்வளவு காலமாக முஸ்லிம்களின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலையேற்படுத்தி வந்த அமைப்பு இன்று நேரடியாக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால் என்பதை விளக்கப்படுத்தியுள்ளதுடன்,இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு,இந்த செயல்கள் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் சலசலப்பையேற்படுத்தியுள்ளதெனவும் இவ்வாறான செயல்களை எவர் செய்தாலும் அவர்கள் தாரதரம் பாராமால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இனிமேலும் இவ்வாறான செயல்கள் இடம் பெறாமல் இருப்பதை பொலிஸார் உறுததிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய அமைச்சர். இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை அடையாளம் காண்பதற்கு போதுமான வீடியோ ஒளிப்பதிவுகள் உரியவர்களிடம் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=3731

இதேவேளை, இலங்கையில் முஸ்லிம்கள் கௌரவமாக வாழ்வதற்கு தமது அமைச்சுப் பதவிகள்தான் தடையாக இருக்குமானால், அதனை துறக்க தாம் தயாராக இருப்பதாக இலங்கையின் மற்றுமொரு அமைச்சரான ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார். ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கருணாநிதியின் சீஷ்சயர்கள். <_<
  • கருத்துக்கள உறவுகள்

அவளைத் தொடுவானேன்.. கவலைப்படுவானேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அன்று இலங்கையின் சோனகத் தலைவர்கள் முன்பு தமிழர்களின் விடுதலைக்கான போரில் சிங்களத்துடன் இணைந்து தமிழர்களைக் காட்டிக்கொடுத்தார்கள்.

இன்று தங்களது சொந்த மக்களையே பதவிக்கும் பணத்துக்கும் விற்கத் தொடங்கிவிட்டார்கள். கோத்தாபய நல்லவர் மாதிரியும், அவர் பொதுபலசேனா நிகழ்வுக்கு ஒரு சிறப்பு விருந்தினர் போன்று போனது மாதிரியும் ஹக்கீம் நல்லா கதைவிட்டிருகிறார்.

சோனகர் சமூகம் நன்றாக அடிபட்டுத் தானாகத் தமிழரைத்தேடி வரும்வரை தமிழன் பார்வையாளனாகவே இருக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தேர்த்தலில் முஸ்லிம் தலைவர்கள் அரசை நம்பி போனதால் அரசு செய்வது சரி என்பதாலேயே சென்றுள்ளார்.(ஹக்கீம்).கூட்டமைப்பை விட்டு  அரசு தான் தேவை என ஓடியவர்கள் சிங்களவர்களிடம் அடி வாங்கி தான் திருந்துவார்கள் போலுள்ளது.

பகிடி என்ன வென்றால் யாழ்ப்பாணி மேட்டுக்குடிப் புலிகள் தான் கொன்றார்கள் என்று யாழில் ஒப்பாரிவைப்பவர்கள் இப்படி முஸ்ளீம் தலைமைகள் வைக்கும் போலி நாடகத்தை கண்டு கொள்வதிலை. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அன்று இலங்கையின் சோனகத் தலைவர்கள் முன்பு தமிழர்களின் விடுதலைக்கான போரில் சிங்களத்துடன் இணைந்து தமிழர்களைக் காட்டிக்கொடுத்தார்கள்.

இன்று தங்களது சொந்த மக்களையே பதவிக்கும் பணத்துக்கும் விற்கத் தொடங்கிவிட்டார்கள். கோத்தாபய நல்லவர் மாதிரியும், அவர் பொதுபலசேனா நிகழ்வுக்கு ஒரு சிறப்பு விருந்தினர் போன்று போனது மாதிரியும் ஹக்கீம் நல்லா கதைவிட்டிருகிறார்.

சோனகர் சமூகம் நன்றாக அடிபட்டுத் தானாகத் தமிழரைத்தேடி வரும்வரை தமிழன் பார்வையாளனாகவே இருக்கவேண்டும்

எத்தனை தரம் கெஞ்சினோம்

எத்தனை அழைப்பு விட்டோம்

கொத்து கொத்தாக எமது மக்கள் வீழ்த்தப்பட்ட போது பார்த்து ரசித்த கூட்டம்

அனுபவிக்கும்

அல்லா இருப்பது உண்மையானால் இன்னும் அனுபவிக்கும்

இப்பொழுதெல்லாம் வஞ்சம் உடனுக்குடன்

அடுத்த பிறவியில் கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை அழித்த மகிந்த அரசுக்காக வக்காலத்து வாங்க ஜெனிவா வரை சென்ற முஸ்லிம் தலைவர் கக்கீம்.பல தமிழ் இளைஞர்கள், யுவதிகள் சிறையில் அடைக்கப்பட்டோ, காணாமல் போயோ இருக்கும் நிலையில் தமிழ் மக்களுக்காக எந்த உதவியும் செய்யாமல் இருப்பவர் நீதி அமைச்சர் கக்கீம்.இன்று தமது மக்களுக்கு சிங்களவர்களால் கொடுமை இழைக்கப்படும் போதும் உதவி செய்ய விரும்பினாலும் முடியாத நிலையில் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

பொது பல சேனா, சிஹல ராவய அமைப்புக்கள் மீது றிசாத் பதியுதீன் முதல் முறையாக கடும் தாக்குதல்! 30 வருட யுத்தத்தால் சீரழிந்து சின்னாபின்னமான இலங்கைத் திருநாடு யுத்தம் நிறைவு பெற்ற நிலையில் இன்று மீண்டும் அபிவிருத்திப் பாதையில் வீறு நடைபோட்டுக் கொண்டிருப்பதை பொறுக்க முடியாத சில தேச விரோத சக்திகள் நாட்டில் கலவரத்தைத் தோற்றுவித்து இந்நாட்டை மீண்டும் பாதாளத்துக்குள்; தள்ள பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள அச்ச சூழ் நிiலை குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலேயே மேற்கண்டவாறு அவர் கூறினார். மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- இவர்கள் ´பொது பல சேன´, ´சிங்கள ராவய´ என்று பல பல பெயர்களில் இயங்கிக் கொண்டு ஒரே இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டு தொடர்ச்சியாக முஸ்லிம்களின் உணர்வுகளை குத்திப் பார்க்கின்ற செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நாட்டின் பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இச் சிறிய குழுக்களின் துவேசப் பேச்சுக்களை ஆதரிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் அவர்கள் எப்போதும் பொறுமையைக் கடைப்பிடிக்கின்ற ஒரு சமூகமாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். அரசியல் பின்னணியுடன் 1983ம் ஆண்டு ஒரு பாரிய இனக்கலவரம் ஏற்பட்ட போதும் அதன் பின்னர் அவர்கள் ஒரு பொறுமையான சமூகம் என்று சர்வதேச சமூகத்திற்கு நிரூபித்ததை நாம் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். அம்பாறை அறந்தலாவையில் பௌத்த பிக்குகள் கொல்லப்பட்ட போதும், கண்டி தலதா மாளிகை மீது தாக்குதல் தொடுக்கப்பட்டபோதும், கெப்பிட்டி கொல்லாவையில் பஸ்ஸில் சென்றவர்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் அவர்கள் காட்டிய பொறுமையை வரலாறு தம் பக்கங்களில் பதிவு செய்திருக்கின்றது. எனவேதான், இந்நாட்டு முஸ்லிம்களின் அதி உயர் மார்க்க பீடமான ஜம்மியதுல் உலமாவை, இத்தேச விரோத சக்திகள் ஈவிரக்கமின்றி, மிகக் குரூரமான முறையில் விமர்சனம் செய்தபோது எம் இதயம் ரணகளமாகியும் நாம் பொறுமை காத்தோம். நாம் இத்தேச விரோத சக்திகளுக்கெதிராக அள்ளி எறிகின்ற வார்த்தைகள். பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைப் புண் படுத்திவிடக் கூடாதே! என்பதில் அக்கறையாக இருந்தோம். ஹலால் விவகாரச் சூடு ஓரளவு தணிந்த நிலையில் இன்று புதிய புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் பெண்கள் அணிகின்ற ஆடை இன்று இவர்களது கண்களை உறுத்துகின்றது. முஸ்லிம்களின் பொருளாதாரம் இவர்களின் இலக்காக மாறியுள்ளது. முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனையே இவர்கள் இன்று இழிவுபடுத்த தொடங்கியுள்ளார்கள். சிங்கள பௌத்த மக்களை உணர்ச்சி வசப்படுத்தி முஸ்லிம்களுக்கெதிராக கிளர்ந்தெழச் செய்வதற்காக பச்சைப் பொய்களையும் புழுகுகளையும் கட்டவிழ்த்து விடுகின்றார்கள். ´முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உணவு வழங்குகின்றபொழுது மூன்று முறை துப்பவிட்டு வழங்கும்படி திருக்குர்ஆனில் குறிப்பிடப்படுள்ளதாக ஒரு பச்சைப் பொய்யை நாகூசாமல் கூறியிருக்கின்றார்கள். இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இப்பொழுது ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றது. திடீரென முஸ்லிம்களின் மீது இவ்வெறுப்பு ஏற்படுவதற்கு முஸ்லிம்கள் செய்த குற்றமென்ன? என்று வினவ விரும்புகின்றோம். பல இழப்புக்களுக்கு மத்தியில் இந்நாடு பிளவுபட்டுவிடக் கூடாது என்பதற்காக செயற்பட்டது குற்றமா? அல்லது இந்நாட்டிற்கெதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவரப்பட்ட பொழுது நாட்டுக்காக முஸ்லிம் நாடுகளின் ஆதரைவக் கோரியது குற்றமா? அல்லது முஸ்லிம் நாடுகள் ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதராவாக வாக்களித்தது குற்றமா? அல்லது பல நூற்றாண்டுகளாக சிங்கள சமூகத்துடன் அந்நியோந்யமாக வாழ்ந்தது போல் தொடர்ந்தும் வாழவேண்டுமென்று ஆசைப்படுவது குற்றமா? அல்லது முப்பது வருடங்கள் சீரழிந்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல எத்தனிக்கின்ற ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தியது குற்றமா? என்று கேட்க விரும்புகின்றோம். ஜம்இய்யதுல் உலமா கப்பம் பெறுவதாக குற்றஞ் சாட்டுபவர்களிடம் கேட்க நாம் விரும்புவது 1. ஜம்இய்யதுல் உலமா பலவந்தமாக ´ஹலால்´ சான்றிதழை வழங்கியதாகக் கூறினீர்கள். அவ்வாறு பலவந்தப்படுத்துவதற்கு அவர்களிடம் இருந்த ´பலமோ´ அல்லது ´அதிகாரமோ´ என்னவென்று கூறமுடியாது. எவ்வாறு அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டார்கள் என்று கூறமுடியுமா? 2. அவ்வாறு பலவந்தப்படுத்தப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் பொலிஸில் முறையிடவில்லை என்று கூறமுடியமா? 3. ஆகக் குறைந்தது இவ்வளவு போராட்டத்தை நீங்கள் நடாத்தியும் ஏன் குறித்த வர்த்தகர்கள் (இரண்டொரு பேரைத் தவிர) ஹலால் சான்றிதழை வாபஸ் பெறவில்லை என்று கூற முடியுமா? 4. ´ஹலால்´ சான்றிதழைப் பெறுகின்ற வர்த்தகர்களை விட்டுவிட்டு அவர்களுக்கு உதவி செய்யப்போன ஜம்இய்யதுல் உலமா சபையை மிகவும் அசிங்கமான முறையில் தொடர்ச்சியாக விமர்சிப்பது எந்தத் தார்மீகத்தின் அடிப்படையில் என்று கூறமுடியுமா? 5. மறைந்த தலைவர் அஷ்ரப் இரண்டு ஆயுதக் கொள்கலன்கள் கொண்டு வந்திருந்தால் அவர் மறைந்த 12 வருடங்களில் ஏன் வாய்திறக்கவில்லை என்று கூறமுடியுமா? 6. அல்லது இப்பொழுதுதான் யாராவது அவ்வாறான ஒரு கட்டுக்கதையைக் கூறச் சொல்லியிருக்கின்றார்கள் என்றால் அதையாவது கூறமுடியுமா? 7. குர்ஆனில் மூன்று முறை துப்பச் சொல்லிருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது எத்தனையாம் அத்தியாயம் வசனம் என்று கூறமுடியுமா? 8. அவ்வாறு கூறமுடியாவிட்டால் ´மக்களை ஏமாற்றுவதற்காக பொய் கூறினோம்´ என்பதையாவது ஏற்றுக்கொள்வீர்களா? 9. இந்நாட்டில் ஒரு சிங்கள - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி இந்நாட்டின் அபிவிருத்தியை மீண்டும் மழுங்கச் செய்வதன் மூலம் நீங்கள் அடைய எத்தனிக்கின்ற லாபமென்ன? என்பதையாவது கூறுவீர்களா? 10. இந்நாடு யுத்தமொன்றைச் சந்திக்காமல் இருந்திருந்தால் சிங்கப்பூரைவிட உயர்ந்த நிலையை அடைந்திருக்கும். ஆனால் உங்களைப் போன்றவர்களின் இனவாத செயற்பாடு அதனை அன்று தடுத்ததன் காரணமாக இந்நாட்டில் கணிசமானோர் இன்னும் வறுமைக் கோட்டின் கீழ் வாடுகின்றார்கள். படித்தவர்கள் தொழிலின்றி அலைகின்றார்கள். அடிப்படை வசதிகள் இல்லாமல் எத்தனையோ பேர் தவிக்கின்றார்கள். இந்நிலையில் இந்நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல ஜனாதிபதி முயற்ச்சிக்கும் பொழுது இனவாதத்தைத் தூண்டி அதற்கு முட்டுக் கட்டை போட எத்தனிக்கின்றீர்களே! இந்நாட்டின் மீதும் இந்நாட்டு மக்களின் மீதும் உங்களக்குப் பாசமே இல்லையோ? இந்நாட்டை இனவாதத்தீக்குள் தள்ளி அமைதியின்மையை தோற்றுவிக்க முயற்சிக்கின்றீர்களோ? 11. இந்நாடு பாதிக்கப்படும் பொழுது இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான சிங்கள பௌத்த மக்கள் தானே முதலில் பாதிக்கப்படப் போகின்றார்கள். சிங்கள பௌத்த மக்களுக்காக பாடுபடுகிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களுக்கே எதிராகவும் செயற்பட நீங்கள் போடும் வேசம் இல்லையா? எனவே வேசம் கலையுங்கள் முஸ்லிம்களை நிம்மதியாக வாழவிடுங்கள். இந்நாட்டிற்கு திரும்பியிருக்கின்ற அமைதிக்காற்றை சகலரும் நிரந்தராமாக சுவாசிக்க அனுமதியுங்கள். வெளிநாட்டு சக்திகளுக்கு துணைபோகும் கைங்கரியத்தை நிறுத்துங்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கேட்டுள்ளார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=37021

பதியுதினின் அத்தனை வசனங்களும் அரச பக்கத்தால் எழுத்திக்கொடுக்கப்பட்டவை. 1915 ல் இராமநாதன் தலையிட்டு நிறுத்திய முஸ்லீம்-சிங்கள இனக்கலவரத்திற்கு பிறகு மகிந்தா ஆட்ச்சியில் தான் இன்னொன்று ஆரம்பமாகிறது. ஆனால் இந்த அடிவருடி மகிந்தா புகழ்தான் பாடுகிறார்.  :unsure:

எத்தனை தரம் கெஞ்சினோம்

எத்தனை அழைப்பு விட்டோம்

கொத்து கொத்தாக எமது மக்கள் வீழ்த்தப்பட்ட போது பார்த்து ரசித்த கூட்டம்

அனுபவிக்கும்

அல்லா இருப்பது உண்மையானால் இன்னும் அனுபவிக்கும்

இப்பொழுதெல்லாம் வஞ்சம் உடனுக்குடன்

அடுத்த பிறவியில் கிடையாது

என்ன எழுதுவது என்று ஒரு விவஸ்தையே கிடையாதா ?  சொல்லுங்கோ ஒருக்கா எத்தனை தரம் கெஞ்சினீர்கள் என்று ? எத்தனை தரம் அழைப்பு விட்டீர்கள் என்று ? சான்றுகள் எதுவும் இருந்தா சொல்லுங்கள் .

கொத்து கொத்தாக எங்களது  மக்கள் வீ ழ்த்ப்பட்ட போது அவர்கள் ரசித்ததை பார்த்தீர்களா ?

எங்கள் அரசியலுடன் அவர்கள் உடன் படவில்லை ,சிங்களத்துடன் நின்றார்கள் அதற்கான பலனை அனுபவிக்கின்றார்கள் .அதைவிட்டு சும்மா கேணைத்தனமாக எழுத கூடாது .

முஸ்லிம்களுக்கு இவ்வளவு அநியாயம் புலிகள் செய்த பின்பும் கக்கீம் வன்னிக்கு வந்து பிரபாகரனை சந்தித்தார் கடைசி அதாவது தெரியுமா ?

இன்றும் புத்தளத்தில் புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் முகாம்களில்  இருக்கின்றார்கள் அதாவது தெரியுமா ?

சும்மா இணையம் தானே என்று வந்து படம் காட்டி சீன் போடக்ககூடாது .இதுவே இப்ப தொழிலாய் போச்சு .

நீங்கள் எழுதிய எதற்கும் ஆதாரம் இருந்தால் இணைக்கவும் .

அர்ஜுன் , நான் சுகையீனம் காரணமாய் ஒதுங்கி இருந்தேன் இப்போ மீண்டு யாழுக்கு  வந்துள்ளேன்...! இனித்தான் ஆரம்பம்!  இங்கு விசுகு அண்ணாவின் கருத்தில் என்ன பிழை? ஆதாரம் தாங்க என்று  கேட்கிறீங்க..! தமிழனாய் இருந்தால் இப்படி கேட்கமாட்டீங்க அர்ஜுன். உங்க புலிகாச்சலை மதம் தளுவியதாய் கொண்டு வந்து பிரிவினை உண்டு பன்னாதீங்க...!

  • தொடங்கியவர்

'ஞானசார தேரரே பொறுப்பு' - அமைச்சர் ஹக்கீம்

பொதுபல சேனா அமைப்பின் பௌத்த மத குரு ஒருவரே முஸ்லிம் வர்த்தக நிலையம் மீதான தாக்குதலை மறைமுகமாக தூண்டியதாக இலங்கையின் நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/03/130329_rauffaudio.shtml

சாதாரண வன்முறைகளும் இனவாதமா?: ஞானசார தேரர்

கொழும்பின் புறநகர்ப் பகுதியான பொரலஸ்கமுவையில் முஸ்லிம் உரிமையாளர்களுக்குச் சொந்தமான துணிக்கடை தாக்கப்பட்டச் சம்பவம் பற்றி பிபிசி தமிழோசை எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், அந்த தாக்குதல் சம்பவத்துக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார்.

சர்வதேச ஊடகங்களும் தேசத்துரோக சக்திகளுமே தமது அமைப்பின் மீது சேறு பூசுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
அதேவேளை, நாட்டில் மக்கள் தமக்கிடையில் வன்முறைகளில் ஈடுபடும் சம்பவங்களுக்கு இனவாத சாயம் பூச சிலர் முற்படுவதாகவும் அவர் வாதிட்டார்.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/03/130329_bodubalasena.shtml

முஸ்லிம்களுக்கு இவ்வளவு அநியாயம் புலிகள் செய்த பின்பும் கக்கீம் வன்னிக்கு வந்து பிரபாகரனை சந்தித்தார் கடைசி அதாவது தெரியுமா ?

அரிசுனின் வழமையான திரிப்பு இது . அந்த கக்கீம்தான், கூட்டமைப்பு அவருடன் பேச கொழும்பில் போய்க் காத்திருக்க, அலரி மாளிகைக்கு சென்று போனை நிறுத்தி வைத்திட்டு ஒளித்திருந்தாரா?

அந்த நேரத்தில் தலைவர் கக்கீமுடன் மட்டும் பேசவில்லை. பல அரசியல்வாதிகளை அழைத்து தமிழர் பிரச்சனைகளை பேசியிருந்தார். கக்கீம் மட்டும் வெல்லப்போகிறவருடன் பேசும் மனநிலை கொண்டவர். என்வே தலைவர் அழைத்த போது அந்த நேரத்தில் சென்று பேசினார். அதன் பின்னர் புலிகள் தோற்கப் போகிறார்கள் என்றவுடன் தனி அலகு கதையை தோப்புக்குள் போட்டுவிட்டு அலரி மாளிகைக்குள் ஒழித்துவிட்டார்.

காட்டிக்கொடுப்புகளுக்கு பிறகு தலைவர் கக்கீமை அழைத்துப் பேசினார். ஏன் எனில் தன்னால் காட்டிக்கொடுப்புகளுக்கு மேலால் போக முடியும் என்று நம்பினார். ஆனால் அரிசுனனின் கீழ் தரம், இப்போது முஸ்லீம்கள் அவதிப்படுகிறார்கள்; இவர்கள் இந்த தேவைக்காகத்தன்னும் தமிழர்களுடன் சேர்ந்துவிடப்போகிறார்கள்; அதை உடனே தடுக்க வேண்டும் என்று துடிக்கிறார்.

அர்ச்சுனன் முஸ்லீம் அல்ல. கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் அரசை எதிர்த்து, கூட்டமைப்புடன் சேர்ந்து தமது உரிமைகளை பெறத்தான் வாக்களித்தார்கள். முஸ்லீம் மக்கள் தமிழருடந்தான் நிற்கிறார்கள். கக்கீம்தான் மாறியவர்.  

அரிச்சுன்னின் PhD க்கு இன்னும் ஒரு முஸ்லீம் பிரதிநிதித்துவமும் வந்து கிடைக்க வில்லை. அவர் முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப் படுத்த முடியாது. அவர் ஒரு தமிழ் அல்லது முஸ்லீம் தொகுதி ஒன்றில் நின்று பார்த்தால் தெரியும் அவரது கதை எவ்வளவத்திற்கு அவிகிறது என்பதை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எழுதுவது என்று ஒரு விவஸ்தையே கிடையாதா ?  சொல்லுங்கோ ஒருக்கா எத்தனை தரம் கெஞ்சினீர்கள் என்று ? எத்தனை தரம் அழைப்பு விட்டீர்கள் என்று ? சான்றுகள் எதுவும் இருந்தா சொல்லுங்கள் .

கொத்து கொத்தாக எங்களது  மக்கள் வீ ழ்த்ப்பட்ட போது அவர்கள் ரசித்ததை பார்த்தீர்களா ?

எங்கள் அரசியலுடன் அவர்கள் உடன் படவில்லை ,சிங்களத்துடன் நின்றார்கள் அதற்கான பலனை அனுபவிக்கின்றார்கள் .அதைவிட்டு சும்மா கேணைத்தனமாக எழுத கூடாது .

முஸ்லிம்களுக்கு இவ்வளவு அநியாயம் புலிகள் செய்த பின்பும் கக்கீம் வன்னிக்கு வந்து பிரபாகரனை சந்தித்தார் கடைசி அதாவது தெரியுமா ?

இன்றும் புத்தளத்தில் புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் முகாம்களில்  இருக்கின்றார்கள் அதாவது தெரியுமா ?

சும்மா இணையம் தானே என்று வந்து படம் காட்டி சீன் போடக்ககூடாது .இதுவே இப்ப தொழிலாய் போச்சு .

நீங்கள் எழுதிய எதற்கும் ஆதாரம் இருந்தால் இணைக்கவும் .

அண்ணா கலக்குறீங்கள் !

நீங்கள் எழுதிய அடைமொழி சொற்களுக்கு ஆதாரம் இருந்தால் நீங்கள் ஒருக்கால் இணைச்சு விடுங்கோ.
 
புலிகள் அழைத்து கூட்டமைப்பினரின் வாக்குறுதிகளின் பிற்பாடே கக்கீம் வன்னிக்கு சென்றார்.
 
இன்றைய முஸ்லிம் மக்களின் மொத்த பொருளாதார நிலை என்ன? 
இடம்பெயர்ந்த அகதிகளுக்கு என்று உலக நாடுகள் ஒதுக்கிய பணம் இன்னெரு இலங்கையையே கடலுக்குள் கட்டியிருக்க போதுமானது.
முஸ்லிம் நாடுகளின் பொருளாதார நிலை என்ன?
 
இதை கடந்தும் மன்னாரில் முஸ்லிம் மக்கள் அகதிமுகாமில் இருக்கிறார்கள் ஏன்?
அவர்கள் அங்கே இருந்தால்தான் இவர்கள் அமைச்சர் ஆகலாம். புலிக்கு எதிரான பிரச்சாரம் செய்யலாம்.
 
உங்களுக்கு புலிவாந்தி பத்திரிக்கை செய்திகள்தான் தெரியும். 
உண்மை உங்களை வந்தடைய இன்னும் நூறு ஆண்டு தேவை. 
உண்மைக்கு அப்படி எந்த வில்லங்கமும் இல்லை.
 
1990ஆம் ஆண்டு கிழக்கிலே என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியவே வாய்ப்பில்லை.
மூடிக்கொண்டு இருக்க உங்களுக்கு தெரியாது என்பது எங்களுக்கு தெரிந்த ஒன்றுதான். 
ஆனால் இந்த நாற்றம் பிடித்த கதைகளை அவிக்க முடியாது என்பதை மட்டும் சொல்லி கொள்கிறேன்

என்ன எழுதுவது என்று ஒரு விவஸ்தையே கிடையாதா ?  சொல்லுங்கோ ஒருக்கா எத்தனை தரம் கெஞ்சினீர்கள் என்று ? எத்தனை தரம் அழைப்பு விட்டீர்கள் என்று ? சான்றுகள் எதுவும் இருந்தா சொல்லுங்கள் .

கொத்து கொத்தாக எங்களது  மக்கள் வீ ழ்த்ப்பட்ட போது அவர்கள் ரசித்ததை பார்த்தீர்களா ?

எங்கள் அரசியலுடன் அவர்கள் உடன் படவில்லை ,சிங்களத்துடன் நின்றார்கள் அதற்கான பலனை அனுபவிக்கின்றார்கள் .அதைவிட்டு சும்மா கேணைத்தனமாக எழுத கூடாது .

முஸ்லிம்களுக்கு இவ்வளவு அநியாயம் புலிகள் செய்த பின்பும் கக்கீம் வன்னிக்கு வந்து பிரபாகரனை சந்தித்தார் கடைசி அதாவது தெரியுமா ?

இன்றும் புத்தளத்தில் புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் முகாம்களில்  இருக்கின்றார்கள் அதாவது தெரியுமா ?

சும்மா இணையம் தானே என்று வந்து படம் காட்டி சீன் போடக்ககூடாது .இதுவே இப்ப தொழிலாய் போச்சு .

நீங்கள் எழுதிய எதற்கும் ஆதாரம் இருந்தால் இணைக்கவும் .

இதை தாங்களும் ஒரு முறை படித்து பார்த்தால் நல்லம் 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கு இவ்வளவு அநியாயம் புலிகள் செய்த பின்பும் கக்கீம் வன்னிக்கு வந்து பிரபாகரனை சந்தித்தார் கடைசி அதாவது தெரியுமா ?

இன்றும் புத்தளத்தில் புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் முகாம்களில்  இருக்கின்றார்கள் அதாவது தெரியுமா ?

புலிகள் முஸ்லிம் மக்களை யாழ்ப்பானத்தில் இருந்து துரத்தியமைக்கு தலைவர் பிரபாகரன் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.அதே வேளை  கிழக்கில் முஸ்லிம் காடையர்களால் விரட்டியடிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் (முஸ்லிம் தலைவர்களின் அனுசரணை இல்லாமல் நடக்க சாத்தியம் இல்லை) இன்று வரை எந்த முஸ்லிம் தலைவரும் மன்னிப்பு கேட்கவில்லை.
 
முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்த புலிகளால் தமிழ் மக்களுக்கு அநியாயம் செய்த முஸ்லிம் தலைவர் ஹக்கீம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டார். தொண்டமான், சந்திரசேகரன் போன்றோரும் அழைக்கப்பட்டனர்.
 
கடந்த வருடம் புலிகள் இல்லாத நிலையில் கிழக்கில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்த்தலில் கிடைத்தை ஆசனங்களின் அடிப்படையில் அறுதி பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் ஹக்கீம் கூட்டமைப்புக்கு தண்ணீர்காட்டி விட்டி அமைச்சர் பதவிக்காக அரசுடன் சேர்ந்தார்.பின்னர் ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தொடரிலும் தமிழ் மக்களுக்கு எதிராக சாட்சியாக சென்றிருந்தார்.

பொது பல சேனா, சிஹல ராவய அமைப்புக்கள் மீது றிசாத் பதியுதீன் முதல் முறையாக கடும் தாக்குதல்! 30 வருட யுத்தத்தால் சீரழிந்து சின்னாபின்னமான இலங்கைத் திருநாடு யுத்தம் நிறைவு பெற்ற நிலையில் இன்று மீண்டும் அபிவிருத்திப் பாதையில் வீறு நடைபோட்டுக் கொண்டிருப்பதை பொறுக்க முடியாத சில தேச விரோத சக்திகள் நாட்டில் கலவரத்தைத் தோற்றுவித்து இந்நாட்டை மீண்டும் பாதாளத்துக்குள்; தள்ள பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள அச்ச சூழ் நிiலை குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலேயே மேற்கண்டவாறு அவர் கூறினார். மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- இவர்கள் ´பொது பல சேன´, ´சிங்கள ராவய´ என்று பல பல பெயர்களில் இயங்கிக் கொண்டு ஒரே இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டு தொடர்ச்சியாக முஸ்லிம்களின் உணர்வுகளை குத்திப் பார்க்கின்ற செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நாட்டின் பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இச் சிறிய குழுக்களின் துவேசப் பேச்சுக்களை ஆதரிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் அவர்கள் எப்போதும் பொறுமையைக் கடைப்பிடிக்கின்ற ஒரு சமூகமாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். அரசியல் பின்னணியுடன் 1983ம் ஆண்டு ஒரு பாரிய இனக்கலவரம் ஏற்பட்ட போதும் அதன் பின்னர் அவர்கள் ஒரு பொறுமையான சமூகம் என்று சர்வதேச சமூகத்திற்கு நிரூபித்ததை நாம் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். அம்பாறை அறந்தலாவையில் பௌத்த பிக்குகள் கொல்லப்பட்ட போதும், கண்டி தலதா மாளிகை மீது தாக்குதல் தொடுக்கப்பட்டபோதும், கெப்பிட்டி கொல்லாவையில் பஸ்ஸில் சென்றவர்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் அவர்கள் காட்டிய பொறுமையை வரலாறு தம் பக்கங்களில் பதிவு செய்திருக்கின்றது. எனவேதான், இந்நாட்டு முஸ்லிம்களின் அதி உயர் மார்க்க பீடமான ஜம்மியதுல் உலமாவை, இத்தேச விரோத சக்திகள் ஈவிரக்கமின்றி, மிகக் குரூரமான முறையில் விமர்சனம் செய்தபோது எம் இதயம் ரணகளமாகியும் நாம் பொறுமை காத்தோம். நாம் இத்தேச விரோத சக்திகளுக்கெதிராக அள்ளி எறிகின்ற வார்த்தைகள். பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைப் புண் படுத்திவிடக் கூடாதே! என்பதில் அக்கறையாக இருந்தோம். ஹலால் விவகாரச் சூடு ஓரளவு தணிந்த நிலையில் இன்று புதிய புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் பெண்கள் அணிகின்ற ஆடை இன்று இவர்களது கண்களை உறுத்துகின்றது. முஸ்லிம்களின் பொருளாதாரம் இவர்களின் இலக்காக மாறியுள்ளது. முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனையே இவர்கள் இன்று இழிவுபடுத்த தொடங்கியுள்ளார்கள். சிங்கள பௌத்த மக்களை உணர்ச்சி வசப்படுத்தி முஸ்லிம்களுக்கெதிராக கிளர்ந்தெழச் செய்வதற்காக பச்சைப் பொய்களையும் புழுகுகளையும் கட்டவிழ்த்து விடுகின்றார்கள். ´முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உணவு வழங்குகின்றபொழுது மூன்று முறை துப்பவிட்டு வழங்கும்படி திருக்குர்ஆனில் குறிப்பிடப்படுள்ளதாக ஒரு பச்சைப் பொய்யை நாகூசாமல் கூறியிருக்கின்றார்கள். இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இப்பொழுது ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றது. திடீரென முஸ்லிம்களின் மீது இவ்வெறுப்பு ஏற்படுவதற்கு முஸ்லிம்கள் செய்த குற்றமென்ன? என்று வினவ விரும்புகின்றோம். பல இழப்புக்களுக்கு மத்தியில் இந்நாடு பிளவுபட்டுவிடக் கூடாது என்பதற்காக செயற்பட்டது குற்றமா? அல்லது இந்நாட்டிற்கெதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவரப்பட்ட பொழுது நாட்டுக்காக முஸ்லிம் நாடுகளின் ஆதரைவக் கோரியது குற்றமா? அல்லது முஸ்லிம் நாடுகள் ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதராவாக வாக்களித்தது குற்றமா? அல்லது பல நூற்றாண்டுகளாக சிங்கள சமூகத்துடன் அந்நியோந்யமாக வாழ்ந்தது போல் தொடர்ந்தும் வாழவேண்டுமென்று ஆசைப்படுவது குற்றமா? அல்லது முப்பது வருடங்கள் சீரழிந்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல எத்தனிக்கின்ற ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தியது குற்றமா? என்று கேட்க விரும்புகின்றோம். ஜம்இய்யதுல் உலமா கப்பம் பெறுவதாக குற்றஞ் சாட்டுபவர்களிடம் கேட்க நாம் விரும்புவது 1. ஜம்இய்யதுல் உலமா பலவந்தமாக ´ஹலால்´ சான்றிதழை வழங்கியதாகக் கூறினீர்கள். அவ்வாறு பலவந்தப்படுத்துவதற்கு அவர்களிடம் இருந்த ´பலமோ´ அல்லது ´அதிகாரமோ´ என்னவென்று கூறமுடியாது. எவ்வாறு அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டார்கள் என்று கூறமுடியுமா? 2. அவ்வாறு பலவந்தப்படுத்தப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் பொலிஸில் முறையிடவில்லை என்று கூறமுடியமா? 3. ஆகக் குறைந்தது இவ்வளவு போராட்டத்தை நீங்கள் நடாத்தியும் ஏன் குறித்த வர்த்தகர்கள் (இரண்டொரு பேரைத் தவிர) ஹலால் சான்றிதழை வாபஸ் பெறவில்லை என்று கூற முடியுமா? 4. ´ஹலால்´ சான்றிதழைப் பெறுகின்ற வர்த்தகர்களை விட்டுவிட்டு அவர்களுக்கு உதவி செய்யப்போன ஜம்இய்யதுல் உலமா சபையை மிகவும் அசிங்கமான முறையில் தொடர்ச்சியாக விமர்சிப்பது எந்தத் தார்மீகத்தின் அடிப்படையில் என்று கூறமுடியுமா? 5. மறைந்த தலைவர் அஷ்ரப் இரண்டு ஆயுதக் கொள்கலன்கள் கொண்டு வந்திருந்தால் அவர் மறைந்த 12 வருடங்களில் ஏன் வாய்திறக்கவில்லை என்று கூறமுடியுமா? 6. அல்லது இப்பொழுதுதான் யாராவது அவ்வாறான ஒரு கட்டுக்கதையைக் கூறச் சொல்லியிருக்கின்றார்கள் என்றால் அதையாவது கூறமுடியுமா? 7. குர்ஆனில் மூன்று முறை துப்பச் சொல்லிருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது எத்தனையாம் அத்தியாயம் வசனம் என்று கூறமுடியுமா? 8. அவ்வாறு கூறமுடியாவிட்டால் ´மக்களை ஏமாற்றுவதற்காக பொய் கூறினோம்´ என்பதையாவது ஏற்றுக்கொள்வீர்களா? 9. இந்நாட்டில் ஒரு சிங்கள - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி இந்நாட்டின் அபிவிருத்தியை மீண்டும் மழுங்கச் செய்வதன் மூலம் நீங்கள் அடைய எத்தனிக்கின்ற லாபமென்ன? என்பதையாவது கூறுவீர்களா? 10. இந்நாடு யுத்தமொன்றைச் சந்திக்காமல் இருந்திருந்தால் சிங்கப்பூரைவிட உயர்ந்த நிலையை அடைந்திருக்கும். ஆனால் உங்களைப் போன்றவர்களின் இனவாத செயற்பாடு அதனை அன்று தடுத்ததன் காரணமாக இந்நாட்டில் கணிசமானோர் இன்னும் வறுமைக் கோட்டின் கீழ் வாடுகின்றார்கள். படித்தவர்கள் தொழிலின்றி அலைகின்றார்கள். அடிப்படை வசதிகள் இல்லாமல் எத்தனையோ பேர் தவிக்கின்றார்கள். இந்நிலையில் இந்நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல ஜனாதிபதி முயற்ச்சிக்கும் பொழுது இனவாதத்தைத் தூண்டி அதற்கு முட்டுக் கட்டை போட எத்தனிக்கின்றீர்களே! இந்நாட்டின் மீதும் இந்நாட்டு மக்களின் மீதும் உங்களக்குப் பாசமே இல்லையோ? இந்நாட்டை இனவாதத்தீக்குள் தள்ளி அமைதியின்மையை தோற்றுவிக்க முயற்சிக்கின்றீர்களோ? 11. இந்நாடு பாதிக்கப்படும் பொழுது இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான சிங்கள பௌத்த மக்கள் தானே முதலில் பாதிக்கப்படப் போகின்றார்கள். சிங்கள பௌத்த மக்களுக்காக பாடுபடுகிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களுக்கே எதிராகவும் செயற்பட நீங்கள் போடும் வேசம் இல்லையா? எனவே வேசம் கலையுங்கள் முஸ்லிம்களை நிம்மதியாக வாழவிடுங்கள். இந்நாட்டிற்கு திரும்பியிருக்கின்ற அமைதிக்காற்றை சகலரும் நிரந்தராமாக சுவாசிக்க அனுமதியுங்கள். வெளிநாட்டு சக்திகளுக்கு துணைபோகும் கைங்கரியத்தை நிறுத்துங்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கேட்டுள்ளார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=37021

விசுவாசத்துக்கான இரங்கலின் ஏக்கம்.... 

ஒன்று இரண்டு மூன்று என்று இலக்கங்களை அடுக்குவதில் பயனில்லை, இப்போது நடப்பது விசுவாசத்துக்கான எலும்புத்துண்டுகட்டத்தை கடந்து கனகாலம் ஆயிட்டுது என்பது மட்டுமே. 

புலிகளுடன் மோதும்போதே அபிவிருத்தி அடைந்தொமேன்று நீங்கள் எல்லாம் விட்ட பில்லாக்கள் எல்லாம் எங்கே? இப்போதுமட்டும் யுத்தத்தால் அபிவிருத்தி தடைபட்ட மாதிரியும் நீங்கள் அதை திருப்தி செய்வதையும் சொல்லுவதை கேடுகும்போது சிரிப்பு த்தான் வருது.

உங்களுடன் வரவிருக்கும் இன முரண்பாட்டினால் அபிவிருத்தி குறையும் என்று பயந்து சிங்களவன் உங்களுடன் இனிமேலும் ஒட்டி உறவாட மாட்டான். அபிவிருத்தி என்று சிங்களவன் நினைப்பதே இலங்கைத் தீவை சிங்கள மயமாக்குவதைத்தான். 

நீங்கள் எங்களுக்கு செய்ததைப்போல் நாங்கள் அரசுடன் ஒட்டியிருந்து உங்களின் அழிவை நிச்சயமாக இரசிக்க மாட்டோம் ஆதரிக்கவும் மாட்டோம். அனால் தயவுசெய்து உங்களுக்காக வீதியில் இறஞ்கமுடியாது. அப்படி இறங்கினால் நாங்கள் முதுகில் மீண்டும் குத்தப்படமாட்டோம் என்பதுக்கு என்ன உத்தரவாதம்?

உணமையைச் சொல்லுங்கள் நீங்கள் சனாதிபதியின் கரங்களை பலப்படுத்திநீர்களா? அல்லது பலப்பட்ட சனாதிபதின் பின்னால் ஒட்டிக்கொண்டீர்களா? 

உங்களை பார்த்து சிங்களவன் சொல்லுவது என்னதெரியுமா? எப்பிடியடிச்சாலும் திரும்ப வந்து நக்குகிரானே ரொம்ப நல்ல கொமாலியோ என்றுதான். 

உங்களுக்கே தெரியும் இது சிங்களத்தின் திட்டமிட்ட ஒரு நகர்வென்று அப்படி இருக்க இன்னும் எதுக்கு இது ஒரு சிறு சதிகார கும்பலின் வேலை என்று உங்களை நம்பும் மக்களை ஏமாற்ற நினகிரஈகள்? 

பெரும்பனமை மக்களின் மனங்களை காயப்படுத்தக் கூடாதேன்பதுகா நீங்கள் அறிக்கை விடவில்லையா? இது எதைக்காட்டுகிறது? பயமா? அல்லது விசுவாசமா? அல்லது சலுகைகள் விட்டுப் போய்விடும் என்பதாலா? உண்மை என்னவெனில் உங்களுக்குத் தெரியும் இதன் பின்னணியில் இருப்பவர்களை அவர்களுடன் பகைத்தால் பதவி போய்விடும் ஆகவே உங்களுக்கு வாக்களித்த மக்களை மீன்றும் ஏமாத்தி அடுத்தமுறையும் உங்களின் பதவியை பெரம்பெசவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.