Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012 க.பொ.த சா/த தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2012 க.பொ.த சா/த தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

 

images33.jpg2012 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப்பரீட்டை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடுவோருக்கு பரீட்டைகள் திணைக்களத்தினால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

 

1 உங்களது பெறுபேற்றினைத் தெரிந்துக்கொள்வதற்கு உங்களது பரீட்சைச் சுட்டெண்ணைத் திருத்தமாக உட்படுத்துக. வேறொரு சுட்டெண்ணை உட்படுத்துவதால் வேறொருவரது பெயரும் பெறுபேறும் பெறப்படும்.

2 இப்பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகளோ விசாரணைகளோ இருப்பின், இலங்கை பரீட்சைத்திணைகளத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேர்  சகல பாடங்களிலும் ஏ  சித்திகளைப் பெற்று உள்ளனர்.

இப்பரீட்சையில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் 239 பேர் தோற்றி இருந்தார்கள்.

இம் மாணவர்களில் 18 மாணவர்கள் 9 ஏ சித்தி, 37 மாணவர்கள் 8ஏ சித்தி, 13 மாணவர்கள் 7ஏ சித்தி பெற்றுக் கொண்டார்கள்.

9ஏ சித்தி பெற்று கல்லூரிக்கு பெருமை சோ்த்த 18 மாணவர்களின் பெயர் விபரம்:

1) கி.சண்முகேசன்

2) ரா.சுதர்சன்

3) க.தர்சிகன்

4) பா.ஆதீபன்

5) சு.வித்தியாசாகர்

6) ம.ஜெசுரன்

7) சு.கரிவர்த்தன்

8) கி.கீர்த்தனன்

9) ர.கோபிசாந்

10) து.நிலக்ஸன்

11) த.நினுஜன்

12) செ.சேந்தன்

13) சி.சிவசெந்தூரன்

14) த.சோபிதன்

15) சி.தேனுகானன்

16) ப.தினேசன்

17) த.டிலக்ஸன்

18) கி.லோகிசன்

 

http://thainaadu.com/read.php?nid=1365149662#.UV7EhRcU-Ws

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

347276670images.jpg

அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் விபரம்

நேற்று இரவு வெளியான 2012 க.பொ.த சா/த தர பரீட்சை பெறுபேறுகளின் படி அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்துக் கொண்ட மாணவர்களது விபரங்கள் வெளியாகியுள்ளன. 

முதல் இடத்தை இரு மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த தசன் ஜெயசிங்க மற்றும் கொழும்பு சங்கமித்த கல்லூரியைச் சேர்ந்த சத்துரிக்கா ஆகியோர் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். 

அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை சங்கமித்தா கல்லூரியைச் சேர்ந்த காயத்திரி அல்விஸ் பெற்றுக் கொண்டதுடன் மூன்றாம் இடத்தை கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மடஸ்மித்தா ரணவக்கேயும் பெற்றுக் கொண்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்துவின் மைந்தர்களுக்கு எனது வாழ்த்துகள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

க.பொ.த. (சா/த) பரீட்சை 2012: 64 வீதமானோர் உயர்தரத்துக்கு தகுதி நாடளாவிய ரீதியில் கடந்த வருடம் க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு தோற்றியோரில் 64 வீதமான மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஜயந்த புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இது அதன் முன்னைய வருடத்தினை விட 4% அதிகமெனவும் ஜயந்த புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பரீட்சைக்கு தோற்றியோரில் 73.2 வீதமானோரும், குருணாகல் மற்றும் காலியில் முறையே 68.3 மற்றும் 68.19 வீதமானோரும் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

 

இம்முறை 4500 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர். கடந்த வருடத்தில் 3900 பேர் மட்டுமே 9 ஏ சித்திகளை பெற்றிருந்தனர்.

 

இதேபோல் பரீட்சையில் தோல்வியடைந்தோரின் வீதமும் 2011 ஆம் ஆண்டில் 4.7 இலிருந்து4.1 ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3862

  • கருத்துக்கள உறவுகள்

திறமைச்சித்திகளைப் பெற்றுக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில் யாழ் இந்து மாணவர்கள் 18ப் பேர் 9 ஏ எடுத்து முன்னணியில்.

 

வேம்படியில் 16 பேர் மட்டும் தான் 9 ஏ எடுத்துள்ளார்கள்.

 

வேம்படி பெறுபேறு..


G.C.E Ordinary Level Examination results 2012

 

The Department of Examinations of  Sri Lanka has released the results of

the G.C.E Ordinary  Level Examination held in December 2012. Sixteen
(16) students got 9A’s   while Forty two (42)  Students got 8A, Thirty
six (36)  Students got 7A and Nineteen (19)  Students got 6A.

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தியடைந்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நல்ல பெறுபேறுகள் எடுக்காதவர்களும் என் வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்..! சில பெயர்களை வாசிக்கும்போதுதான் தலை சுத்துது..

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்..! சில பெயர்களை வாசிக்கும்போதுதான் தலை சுத்துது..

 

 

கொம்பியூட்டருக்கு லேசாயிருக்குமெண்டு பெயர் வைச்சாலும் தலை சுத்துது எண்டுறாங்கள் பாவியள்....... :(
கணபதிப்பிள்ளை ராஜராஜேஸ்வரி எண்டால் கொம்பியூட்டரிலை எழுத இடமில்லையெண்டுறாங்கள்..... :(
ஸ்ரையிலாய் சுருக்கிக்கிருக்கி வைச்சாலும் வில்லங்கத்துக்கு வாறாங்கள்... :( ......... :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

கொம்பியூட்டருக்கு லேசாயிருக்குமெண்டு பெயர் வைச்சாலும் தலை சுத்துது எண்டுறாங்கள் பாவியள்....... :(

கணபதிப்பிள்ளை ராஜராஜேஸ்வரி எண்டால் கொம்பியூட்டரிலை எழுத இடமில்லையெண்டுறாங்கள்..... :(

ஸ்ரையிலாய் சுருக்கிக்கிருக்கி வைச்சாலும் வில்லங்கத்துக்கு வாறாங்கள்... :( ......... :icon_mrgreen:

குமாரசாமி அண்ணா.. தமிழிலேயே சுருக்கமாக எவ்வளவு நல்ல பெயர்கள் இருக்கு.. ? இங்கே ஒரு பிள்ளைக்கு நிலா என்றே பெயர் வைத்திருக்கினம்.. இதைவிட என்ன பெயர்ச்சிக்கனம் இருக்கப்போகுது?

எனக்கென்னவோ நாகரிகம் என நினைத்து கருத்தில்லாத பெயர்களை வைத்துவிடுகிறார்களோ என்று சந்தேகம்..

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ அழகான தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன. உ+ம் - யாழவன், நேயன், சேயோன், சீரோன், மாறன், மயூரன், சாலினி,சுரபி, சுடர், கனி, கயல்....... ஆனால் எங்கட சனம் டிலக்சன், லக்சிதா என்ற சிங்களப் பெயர்களைத்தான் சூட்டுகிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.