Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காய்கறி வாங்குவது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
 
Tamil-Daily-News-Paper_19683039189.jpg
 
1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
 
2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
 
3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல‍ முருங்கை காய்
 
4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
 
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல‍ மக்காச்சோளம்.
 
6.தக்காளி: தக்காளி நல்ல‍ சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
 
7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
 
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
 
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
 
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
 
11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்
 
12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது
 
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்
 
14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்
 
15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
 
17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்
 
18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
 
19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
 
20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்
 
21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
 
22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
 
23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
 
25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது
 
26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
 
27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்
 
28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
 
29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
 
31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமா க இருக்கும்.
  • கருத்துக்கள உறவுகள்

உபயோகமான... குறிப்புகள் சுபேஸ்.
சின்ன வெங்காயததை..... எப்படி வாங்குவது?

  • கருத்துக்கள உறவுகள்

பொழுது போகாததால் சில கேள்விகள்!!!

உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

Tamil-Daily-News-Paper_19683039189.jpg

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

வாழைத் தண்டில் என்ன கறி வைப்பது என்று தகவல் இருக்கா?

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

வெள்ளை வெங்காயம் என்றால் என்ன? நசுக்கின சாறு கண்ணில் பட்டால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லவில்லையே!

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

இது இராச வள்ளிக்கிழங்கா?

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல‍ மக்காச்சோளம்.

சாதா சோளத்திற்கும் மக்காச் சோளத்திற்கும் என்ன வித்தியாசம்?

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

இது என்ன காய்? கிளி சாப்பிடும் கோவைப்பழமா?

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

இது காய்ந்தால் குருவிக்கூடு மாதிரி இருக்கின்றதா?

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

இதுக்கும் பூசனிக்காயிற்கும் என்ன வித்தியாசம்? எப்படி கொட்டைகள் முற்றியிருக்கின்றன என்று அறியலாம்?

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

இது என்ன கிழங்கு??

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

இது நீத்துப் பூசனிக்காயா?

27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

ஆட்டுக்கிடாய் கொழுத்தால் மொச்சை மணக்கும் என்பார்கள். இது என்ன காய்!

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

இப்படி ஒரு காய்கறி கேள்விப்படவேயில்லையே!
  • கருத்துக்கள உறவுகள்

பொழுது போகாததால் சில கேள்விகள்!!!

வாழைத் தண்டில் என்ன கறி வைப்பது என்று தகவல் இருக்கா?

வெள்ளை வெங்காயம் என்றால் என்ன? நசுக்கின சாறு கண்ணில் பட்டால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லவில்லையே!

 இது இராச வள்ளிக்கிழங்கா?

 சாதா சோளத்திற்கும் மக்காச் சோளத்திற்கும் என்ன வித்தியாசம்?

 இது என்ன காய்? கிளி சாப்பிடும் கோவைப்பழமா?இது காய்ந்தால் குருவிக்கூடு மாதிரி இருக்கின்றதா?இதுக்கும் பூசனிக்காயிற்கும் என்ன வித்தியாசம்? எப்படி கொட்டைகள் முற்றியிருக்கின்றன என்று அறியலாம்?இது என்ன கிழங்கு??இது நீத்துப் பூசனிக்காயா?

 ஆட்டுக்கிடாய் கொழுத்தால் மொச்சை மணக்கும் என்பார்கள். இது என்ன காய்!இப்படி ஒரு காய்கறி கேள்விப்படவேயில்லையே!

ஹாஹஹா.....

கிருபனுக்கு, கொழுப்புக் கூடிப் போச்சுது. :rolleyes:  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹஹா.....

கிருபனுக்கு, கொழுப்புக் கூடிப் போச்சுது. :rolleyes:  :D  :lol:

கொழுப்பைக் குறைக்கத்தான் மரக்கறி சாப்பிட்டு வருகின்றேன். ஆனால் இத்தனை காய்கறிகளைக் கேள்விப்படவேயில்லை!

வெந்ததைத் தின்று சிவனே என்று இருப்பதை விட வித்தியாசமாக சமைத்துப் பார்க்கலாம்தானே :)

  • கருத்துக்கள உறவுகள்

கெதியாகக் கலியாணத்தைக் கட்டினால் இந்தப் பிரச்சனை ஒன்றும் வராது சுபேஸ்

என் வீட்டில் மனுசி தான் எல்லாத்தையும் தடவிப் பார்த்து வாங்கும் 

அதாலை எனக்குப் பிரச்சனை இல்லை :D  :lol:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசின்  அண்மைக்கால எழுத்துக்களை வாசிக்கும்போது  சுபேசின்  கழுத்தில்  மூன்று முடிச்சு  விழுந்தது போல் கனவு வருகின்றது  :)

மரக்கறிகளை கீறி, சுரண்டிப் பார்க்கக் கடைக்காரன் என்ன சொல்லுவான்?

  • கருத்துக்கள உறவுகள்

  Caucau  -- சௌசௌ

 மொச்சை கொட்டை  -- அவரை -- field beans

சேப்பங்கிழங்கு  ----  Colocasia

800px-Colocasia_esculenta_dsc07801.jpg

சுவையான சூப்..
-----------------------
தேவையான அளவு வாழைத் தண்டை சின்ன துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு நல்ல கொதிக்க விட்ட பின்பு பருப்புக் கடையிர மத்தால் கூழ் மாதிரி மசியிற வரைக்கும் வாழைத் தண்டினை கடையனும்..
பாத்திரத்தில் தண்ணி ஊத்தி கொதிக்கவச்சு ,அதுல கொஞ்சம் மிளகு, சீரகம் , இஞ்சி ,பூண்டு ,தக்காளி ,வெங்காயம் போட்டுத் தேவையான அளவு உப்பு சேர்த்து நல்ல வேகவச்சு வடிகட்டினா ,வாழைத் தண்டு சூப் ரெடி.
இதே செய்முறையில் வாழைத் தண்டுக்கு பதிலாக காய்கறிகளைச் சேர்த்தும் சூப் தயாரிக்கலாம் ..
தைக் குடிச்ச இடுப்பு வலி ,முதுகு வலி ,பித்தப்பை தொடர்பான நோய்கள் நீங்குவதோடு உடல் பருமனும் குறையும்.

https://www.facebook.com/IamLivinginthisWorld/posts/422522284445727

கோவைக்காய்

ivy-gourd-722.jpg

பீர்க்கங்காய்

ht186.jpg

பீர்க்கங்காய், கோவைக்காய்களை எப்பிடிச் சமைப்பது? 

  • கருத்துக்கள உறவுகள்

கோவைக்காயை மெல்லிய வட்டமாக வெட்டி, உப்பு, தூள் தடவி எண்ணையில் பொரித்து (வாழைக்காய் பொரியல் மாதிரி) சாப்பிடலாம். அல்லது பொரித்துக் கறி வைக்கலாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

பீர்க்கங்காய் வதக்கல்

தேவையானவை:

பீர்க்கங்காய்...............1/2 கிலோ 

சின்ன வெங்காயம்....10

மிளகாய்ப் பொடி .......1/2 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி ............1 சிட்டிகை 

கறிவேப்பிலை..........1 கொத்து

எண்ணெய் ..................2 தேக்கரண்டி 

உப்பு.............................. தேவையான அளவு 

தேங்காய்..+ சீரகம ..தேவையானால்  1 தேக்கரண்டி 

கடுகு+ சீரகம்....................1/4 தேக்கரண்டி

செய்முறை:

பீர்க்கங்காயை தோல் சீவி, கொஞ்சம் பெரிதாக நறுக்கவும். வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தேங்காய் + சீரகம் வைத்து பரபரவென்று அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு சீரகம் போட்டு, பொரிந்ததும், வெங்காயம்+உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய பீர்க்கங்காய் போட்டு வதக்கவும். அடுப்பைக் குறைத்து சீராக எரிய விடவும். பீர்க்கங்காய் வதங்கியதும், அதிலேயே மஞ்சள் பொடி + மிளகாய்ப் பொடி போட்டு வதக்கவும். காய் வதங்கியதும், தேங்காய் போட்டு கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கவும்.

இந்த பீர்க்கங்காய் வதக்கல் படு சூப்பராய் இருக்கும். எந்த உணவுக்கும் நல்ல இணை.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21838&Itemid=139

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காய்கறி வாங்குவது எப்படி?

நான் ஒரு பரம்பரைதோட்டக்காரன் எண்டமுறையிலை சொல்லுறன்......ஒரு தோட்டக்காரன் சுத்துமாத்து செய்து தன்ரை காய்கறிகளை  விற்க வெளிக்கிட்டால்  எந்தகொம்பனாலையும் நல்லதுகெட்டதை கண்டுபிடிக்கேலாது. :(
 
இஞ்சை என்னை தோட்டக்காரன் எண்டு நக்கலடிச்சவையும் கவனிக்கவும். :lol:  :icon_idea:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உபயோகமான... குறிப்புகள் சுபேஸ்.

நன்றி தலைவா...

சின்ன வெங்காயததை..... எப்படி வாங்குவது?

சின்னவெங்காயத்தை கண்ணுக்கு கிட்ட கொண்டுபோய்..நசிச்சு பாத்துவாங்கணும்ங்க.. :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொழுது போகாததால் சில கேள்விகள்!!!

வாழைத் தண்டில் என்ன கறி வைப்பது என்று தகவல் இருக்கா?

வெள்ளை வெங்காயம் என்றால் என்ன? நசுக்கின சாறு கண்ணில் பட்டால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லவில்லையே!

 இது இராச வள்ளிக்கிழங்கா?

 சாதா சோளத்திற்கும் மக்காச் சோளத்திற்கும் என்ன வித்தியாசம்?

 இது என்ன காய்? கிளி சாப்பிடும் கோவைப்பழமா?இது காய்ந்தால் குருவிக்கூடு மாதிரி இருக்கின்றதா?இதுக்கும் பூசனிக்காயிற்கும் என்ன வித்தியாசம்? எப்படி கொட்டைகள் முற்றியிருக்கின்றன என்று அறியலாம்?இது என்ன கிழங்கு??இது நீத்துப் பூசனிக்காயா?

 ஆட்டுக்கிடாய் கொழுத்தால் மொச்சை மணக்கும் என்பார்கள். இது என்ன காய்!இப்படி ஒரு காய்கறி கேள்விப்படவேயில்லையே!

ஆத்தாடி..என்ன ஒரு வில்லத்தனம்..விஞ்ஞானம் படிச்ச பயலுகள் போல.. :D 

  • கருத்துக்கள உறவுகள்

okra-on-plant-1.jpg

வெண்டக்காய்: நுனியை முறித்தால் முறியும். முத்தினது வளையும். முறிவது தான் நல்லம்.

BellPepper-B.jpg

பெப்பரிக்காய் (குடை மிளகாய் : தோல் சுருங்காமலும்.. காம்பு காயாமல்.. பச்சையாகவும் இருப்பதே நன்று.

(மக்கள் அதிகம் வாங்கும்.. தவிர்க்கப்பட்டவை என்பதால் குறிப்பிட்டுள்ளோம்.)

மிக்க நன்றி கிருபன், நுணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெதியாகக் கலியாணத்தைக் கட்டினால் இந்தப் பிரச்சனை ஒன்றும் வராது சுபேஸ்

என் வீட்டில் மனுசி தான் எல்லாத்தையும் தடவிப் பார்த்து வாங்கும் 

அதாலை எனக்குப் பிரச்சனை இல்லை :D  :lol:  :icon_mrgreen:

ம்கும்..அகப்பையில இருந்து தவறி பானைக்குள்ள விழச்சொல்லுறார் வாத்தியார் அண்ணா.. :lol: 

ம்கும்..அகப்பையில இருந்து தவறி பானைக்குள்ள விழச்சொல்லுறார் வாத்தியார் அண்ணா.. :lol: 

உப்பிடித் தான் பெடியள் சொல்லிப் போட்டுப் போய் விழுகிறவை சுபேஸ் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேசின்  அண்மைக்கால எழுத்துக்களை வாசிக்கும்போது  சுபேசின்  கழுத்தில்  மூன்று முடிச்சு  விழுந்தது போல் கனவு வருகின்றது  :)

எனக்கும்தான்....ஒவ்வொரு நாளும் விடிய எழும்பி பார்க்கும்போதுதான் தெரியுது கனவெண்டு.. :D 

மரக்கறிகளை கீறி, சுரண்டிப் பார்க்கக் கடைக்காரன் என்ன சொல்லுவான்?

ஊரில் எண்டால் நிறை அளக்க வச்சிருக்கும் படியால் தூக்கி மண்டையில் போட்டு விடுவார்கள் :D ..இங்கை வெளிநாடுகளில் அந்த பிரச்சினை இல்லை..மாதிரிக்கு சிலவற்றை வைத்திருப்பார்கள்..எடுத்துபார்க்கலாம்..கீறலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

கெதியாகக் கலியாணத்தைக் கட்டினால் இந்தப் பிரச்சனை ஒன்றும் வராது சுபேஸ்

என் வீட்டில் மனுசி தான் எல்லாத்தையும் தடவிப் பார்த்து வாங்கும் 

அதாலை எனக்குப் பிரச்சனை இல்லை :D  :lol:  :icon_mrgreen:

அது உங்கட காலம். இப்ப எல்லாம் ஒரு ரெக்ஸ்ட் வருமாம். லிஸ்ட் போட்டு. ஐயா மார் வாங்கிக்கிட்டு போகனும். இல்லை.. வீடு இரண்டாகிடும். வாங்கிக்கிட்டு போறது மட்டுமில்ல.. சமைச்சும் கொடுக்கனும்..! அவை கால்மேல கால் போட்டுக்கிட்டு ஐபாட்டோட பேஸ்புக்கில..இருப்பினம்.

இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு தான் பயபுள்ளைங்க.. விசயத்தில.. ரெம்ப உசாரா இருக்கிறாங்க. எப்பவும்.. கலியாணம் என்று வந்தா..  எஸ்கேப் தான்..! மாட்டிக்கிட்டு முழிக்கிறவங்களைப் பார்த்திட்டுமா.. போய் மாட்டிக்குவான்.. ஒருத்தன்..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  Caucau  -- சௌசௌ

 மொச்சை கொட்டை  -- அவரை -- field beans

சேப்பங்கிழங்கு  ----  Colocasia

800px-Colocasia_esculenta_dsc07801.jpg

சுவையான சூப்..

-----------------------

தேவையான அளவு வாழைத் தண்டை சின்ன துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு நல்ல கொதிக்க விட்ட பின்பு பருப்புக் கடையிர மத்தால் கூழ் மாதிரி மசியிற வரைக்கும் வாழைத் தண்டினை கடையனும்..

பாத்திரத்தில் தண்ணி ஊத்தி கொதிக்கவச்சு ,அதுல கொஞ்சம் மிளகு, சீரகம் , இஞ்சி ,பூண்டு ,தக்காளி ,வெங்காயம் போட்டுத் தேவையான அளவு உப்பு சேர்த்து நல்ல வேகவச்சு வடிகட்டினா ,வாழைத் தண்டு சூப் ரெடி.

இதே செய்முறையில் வாழைத் தண்டுக்கு பதிலாக காய்கறிகளைச் சேர்த்தும் சூப் தயாரிக்கலாம் ..

தைக் குடிச்ச இடுப்பு வலி ,முதுகு வலி ,பித்தப்பை தொடர்பான நோய்கள் நீங்குவதோடு உடல் பருமனும் குறையும்.

https://www.facebook.com/IamLivinginthisWorld/posts/422522284445727

கோவைக்காய்

ivy-gourd-722.jpg

பீர்க்கங்காய்

ht186.jpg

நன்றி நுணா அண்ணா மேலதிக தகவலுக்கும் விளக்கத்திற்கும்.. :) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு பரம்பரைதோட்டக்காரன் எண்டமுறையிலை சொல்லுறன்......ஒரு தோட்டக்காரன் சுத்துமாத்து செய்து தன்ரை காய்கறிகளை  விற்க வெளிக்கிட்டால்  எந்தகொம்பனாலையும் நல்லதுகெட்டதை கண்டுபிடிக்கேலாது. :(
 
இஞ்சை என்னை தோட்டக்காரன் எண்டு நக்கலடிச்சவையும் கவனிக்கவும். :lol:  :icon_idea:

குமாரசாமி அண்ணையை நக்கலடித்தவர் யார்...யார்..யார்? முண்டாசு கட்டிய இந்தியன் கமலை கடுப்பேத்திபோட்டாங்கள்...மண்வெட்டி பிடித்து காய்ந்த தாத்தாவின் கையால் ஒர்னு வாங்கினால்தான் திருந்துவார்கல் போல.. :wub: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

okra-on-plant-1.jpg

வெண்டக்காய்: நுனியை முறித்தால் முறியும். முத்தினது வளையும். முறிவது தான் நல்லம்.

BellPepper-B.jpg

பெப்பரிக்காய் (குடை மிளகாய் : தோல் சுருங்காமலும்.. காம்பு காயாமல்.. பச்சையாகவும் இருப்பதே நன்று.

(மக்கள் அதிகம் வாங்கும்.. தவிர்க்கப்பட்டவை என்பதால் குறிப்பிட்டுள்ளோம்.)

நன்றி நெடுக்காலபோவான் அண்ணா தகவலுக்கு...
 
குடைமிளகாய் 
குடைமிளகாய் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதை சமைக்கும் போது ஏற்ப்படும் வாசனை ஒரு சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் வாங்குவதும் இல்லை.ஆனால் இதில் எவ்வளவு சத்துக்கள் இருக்கிரது பாருங்கள்.....
 
1. தக்காளி, குடைமிளகாய், எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் 'சி' © சத்து அதிகமுள்ளது. இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது.
 
2. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில் கொழுப்புச்சத்து,கொலஸ்ட்ரால்,சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
 
3. குடமிளகாயில் உள்ள விட்டமின் ஏ,சி,ஈ,பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.
 
4. கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்ட விடாமலும் குடமிளகாய் காக்கிறது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
 
5. குடமிளகாயைச் சமைக்கும் முன் நன்கு அலம்ப வேண்டும்.
 
6. குடமிளகாயைத் துச்சமாக எண்ணாமல் அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு நல்லது.
 
7. ஊசி மிளகாய், குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன. இதே உத்தியைப் பயன்படுத்தி உடலின் பருமனைக் குறைக்க முடியும்.
 
8. காய்கறி சாலட் அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், கோஸ், வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கவும். சுவைக்கு உப்பு, மிளகு எலுமிச்சை பிழியவும். அருமையான சாலட் தயார்.
 
9. குடைமிளகாயில் நிறைந்துள்ள "வைட்டமின் சி' சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
 
10. வைட்டமின் சி 137 மி.கி., வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும்.

அது உங்கட காலம். இப்ப எல்லாம் ஒரு ரெக்ஸ்ட் வருமாம். லிஸ்ட் போட்டு. ஐயா மார் வாங்கிக்கிட்டு போகனும். இல்லை.. வீடு இரண்டாகிடும். வாங்கிக்கிட்டு போறது மட்டுமில்ல.. சமைச்சும் கொடுக்கனும்..! அவை கால்மேல கால் போட்டுக்கிட்டு ஐபாட்டோட பேஸ்புக்கில..இருப்பினம்.

இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு தான் பயபுள்ளைங்க.. விசயத்தில.. ரெம்ப உசாரா இருக்கிறாங்க. எப்பவும்.. கலியாணம் என்று வந்தா..  எஸ்கேப் தான்..! மாட்டிக்கிட்டு முழிக்கிறவங்களைப் பார்த்திட்டுமா.. போய் மாட்டிக்குவான்.. ஒருத்தன்..! :lol:

அதுதான...இப்பெல்லாம் இப்டிதான் நடக்குது கலியானம் கட்டின இடங்களில..
 
1980ல் 
******
 
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : இதோ தர்றேன் மாமா!
 
2013ல்
******
 
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : என்ன கேட்டீங்க?
*
*
*
*
*
*
*
*
*
*
கணவன் : தரட்டுமான்னு கேட்டேம்மா!
 
:lol: 

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அது உங்கட காலம். இப்ப எல்லாம் ஒரு ரெக்ஸ்ட் வருமாம். லிஸ்ட் போட்டு. ஐயா மார் வாங்கிக்கிட்டு போகனும். இல்லை.. வீடு இரண்டாகிடும். வாங்கிக்கிட்டு போறது மட்டுமில்ல.. சமைச்சும் கொடுக்கனும்..! அவை கால்மேல கால் போட்டுக்கிட்டு ஐபாட்டோட பேஸ்புக்கில..இருப்பினம்.

இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு தான் பயபுள்ளைங்க.. விசயத்தில.. ரெம்ப உசாரா இருக்கிறாங்க. எப்பவும்.. கலியாணம் என்று வந்தா..  எஸ்கேப் தான்..! மாட்டிக்கிட்டு முழிக்கிறவங்களைப் பார்த்திட்டுமா.. போய் மாட்டிக்குவான்.. ஒருத்தன்..! :lol:

இந்தப் பெடியன், கலியாணாம் என்றவுடன் பயந்து ஓடுறான்.

வாழ்க்கை என்பது. கலியாணத்தில் ஒரு அங்கம் என்பதை, நெடுக்ஸ் அறியவில்லை.

நெடுக்கிஸின்.... தாய, தகப்பன், அந்த ஒரு நள்ளிரவில்.....

உடலோடு... உடல், ஒட்டி.... உறவாடியிரிக்காவிட்டால்....

நெடுக்ஸ்ஸை..... நாம், யாழில்... கண்டிருப்போமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.