Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிரந்தரத் தீர்வுக்கு சரியான சந்தர்ப்பம்; ரணிலிடம் அழுத்தினார் இந்திய ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ranil.jpg

இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதற்குச் சரியான தனித்துவமான சந்தர்ப்பம் இதுவாகும் என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

 
"இலங்கையில் போர் முடிவுற்றமை அங்கு அனைத்து மக்களும் ஏற்கக் கூடிய நிலையான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அளித்துள்ளது'' எனத் தன்னைச் சந்தித்த இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்தார் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
 
"உண்மையான தேசிய நல்லிணக்கத்துக்கான இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசு முன்னேற வேண்டும்'' எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
 
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் இரவு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ராஷ்டிரபதி பவனில் சந்தித்துக் கலந்துரையாடினார். 
 
இந்தச் சந்திப்பின் போதே இந்திய ஜனாதிபதி மேற்கண்டவாறு வலியுறுத்தினார். இந்திய ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவித்ததாவது:
 
இலங்கை  இந்திய இரு தரப்பு உறவானது வரலாறு, கலாசாரம் இனங்களுக்கிடையிலான தொடர்பு என்பவற்றுடன் மக்களுக்கு இடையிலான  இரு தரப்பு நீண்டகால உறவுகளை யாவும் வரலாற்று ரீதியாகப் பகிர்ந்து கொள்வதாக அமைந்துள்ளது. 
 
இரு நாடுகளும் எப்பொழுதுமே மிக நெருக்கமாகவும் நட்பாகவுமே இருந்து வந்துள்ளன. அருகில் இருப்பதானால்  இலங்கையின் மீது இந்தியாவுக்கு இயற்கையாகவே அக்கறை உண்டு. இலங்கையில் ஏற்படும் அபிவிருத்திகளில் இந்தியா தொடர்புகள் எதுவும் இன்றி வாளாவிருந்து விட முடியாது என்றார்.
 
இந்திய ஜனாதிபதி கூறிய கருத்துக்களை தாமும் ஏற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு தெரிவித்தார் என இந்திய ஜனாதிபதி செயலகம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

ரணிலே ஒருசெட்டை கழட்டிய பாம்பு! அதை அழுத்தி, என்ன பிரயோசனம்? அழுத்த வேண்டிய, இடங்களில அழுத்த முடியாவிட்டால், நாலு மரணதண்டனைக் கருணை மனுக்களை, எடுத்துக் கையெழுத்து வைக்கிறதை விட்டிட்டு, ஏனிந்தப் பசப்பல் வார்த்தைகள்? :o ,

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின்ட என்னத்தை இவர் அழுத்தினவராம்? டமிழர் பிரச்சனையை தீர்க்க?

  • கருத்துக்கள உறவுகள்

வேறு எதையோ அழுத்தியிருப்பார் போல 

 

:icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

என்னத்தை அழுத்தினாலும் பார்த்துக்கொண்டிக்க வேண்டிய நிலை தான் எம்மவருக்கு .

வெறும் உணர்ச்சி அரசியல் எமக்கு எந்த விடிவையும் தரப்போவதில்லை .

ராஜபக்சாவின் படத்தை எரிக்கலாம் ,விளக்குமாத்தால் அடிக்கலாம் அல்லது சீமான் மாதிரி குரைக்கலாம்.

ஜெயலலிதாவிற்கு கூட தெரியும் தமிழ் நாட்டில் தான் எந்த தீர்மானத்தை நிறைவேற்றினாலும் ஆக போவது ஒன்றுமில்லை ஆனால் தனது நாற்பது சீட்டுகள் கனவுக்கு அது பெரிதும் உதவுமென்று .மாணவர் போராட்டங்கள் இதே நிலையில் தான் தொடருது IPL உம் நடக்குது ,சேட்டையும் கேடி பில்லா கில்லாடிவும் சக்கை போடு போடுது .

உலகம் இப்படியே உருண்டுகொண்டு இருக்கபோகின்றது எமக்கான தீர்வு இந்தியாவில் ஆட்சியில் இருப்பவர்களாலும் கொள்கை வகுப்பாளார்களாலும் தான் கொண்டுவரமுடியும் .

புலம் பெயர் எமது தேசிய ஊடகங்கள் இப்போதே கோடை களியாட்டங்களுக்கு தயாராகுங்கள் என்று மக்களுக்கு  அழைப்பு விட தொடங்கிவிட்டார்கள் .நாங்கள் இப்படியே தொடர்ந்தும் வெறும் கையில் முழம் போட்டுக்கொண்டிருந்தால் சாந்தியக்காவின்  இன்றைய பதிவுகள்  தான் எம்மவரின் வாழ்க்கையாக மாறிவிடும் .

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டம் ஆறுநாட்களிலேயே முடிந்துவிட்டதே.. :D

மாணவர் போராட்டம் ஆறுநாட்களிலேயே முடிந்துவிட்டதே.. :D

அப்படி நான் எழுதவில்லை ,கோல் போடப்போவது ஜே தான் என்று மிக தெளிவாக எழுதினேன் .எல்லாம் பதிவில் இருக்கு.வாசிக்காமல் பதில் எழுதி தம்பிக்கு பழகி போச்சு போல :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி நான் எழுதவில்லை ,கோல் போடப்போவது ஜே தான் என்று மிக தெளிவாக எழுதினேன் .எல்லாம் பதிவில் இருக்கு.வாசிக்காமல் பதில் எழுதி தம்பிக்கு பழகி போச்சு போல :icon_mrgreen:

 

நான் உங்களுக்கு எழுதியது என்று எப்படி எடுத்துக் கொண்டீர்கள்? ^_^ மனச்சாட்சி குத்தி கண்டமேனிக்கு எழுதி அண்ணைக்கு பழகிப்போச்சு போலை.. :icon_mrgreen: :icon_mrgreen:

போர்குற்றவாளிகள் எந்த தீர்வையும் த மாட்டார்கள் !

 

483648_10151531130754417_2045826765_n.jp

Edited by akootha

மாணவர் போராட்டம் ஆறுநாட்களிலேயே முடிந்துவிட்டதே.. :D

மார்ச் 17 எழுதப்பட்ட எதிர்வு கூறல் ஒன்று மார்ச் 31ல் முடிந்து விடும் என்பது. 

 

எதிர்வு கூறல் சொற்களில் அப்படியும் இப்படியும் வைத்துக்கொள்வதால் அதை மார்ச் 31 எழுச்சியாக மாறும் என்றும் எடுத்துக்கொண்டிருக்காலாம். ஆனால் இரண்டு கிழமைகளில் முடிந்த மார்ச் 31 எதுவும் அப்படி ஒரு பிரதான தினம் அல்ல. :D

 

ஈழ போரட்டாம் தொடர வேண்டியது. போகப் போக தமிழக மாணவர்களின் உதவி த(ப)சை உள்ளதாக வளர்ந்துவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி நான் எழுதவில்லை ,  :icon_mrgreen:

நீங்கள் ஒரு போதும் அப்படி எழுதுவதில்லை.....?

ஏன் என்பதுதான் எமது கேள்வி.
அடுத்தவருக்கு விளங்கும் படி ஒருமுறை என்றாலும் எழுத முடியாதா?
 
நீங்கள் மேல எழுதியதில் ஏதும் உருப்படியானது  ஒன்று இருக்கிறதா?
 
அடக்குமுறைக்கு உள்ளானவர்கள்தான் அதை எதிர்த்து போராடவேண்டும். இது சர்வ சாதாரணமாக உலகில் எல்லா மூலைகளிலும் நடக்கிறது. இப்போது மேல் உலகை எடுத்துகொண்டால் ஒரு இன செயற்கையாளர்களின் திருமண விடயம் பரவலான ஒரு போராட்டம். மிகவும் சிறு பான்மையானவர்களின் குரல்கள் வீதிகள் எங்கும் ஒலித்ததன் பிரதிபலனே இன்று பல நாடுகளில் அது சட்டபூர்வமாக ஏற்றுகொள்ளபட்டுகொண்டு வருகிறது.
10 வருடங்களுக்கு முன்பு உங்களுடைய கருத்து அவர்களுக்கு என்ன கதையை சொல்லியிருக்கும்?
 
ஜெயலிதா மீண்டும் ஒருமுறை 40 சீட்டை அடைவதற்கு தமிழ் ஈழம் ஒரு காரணமாக அமையும் இடத்து  அதை அடைய வேண்டிய ஒரு தருணம் ஏன் வர முடியாது. இன்று அதே 40க்கு இந்த பிரேரணையை கொண்டுவர வைத்தவர்கள் மாணவர்கள். அவர்களுடைய போராட்டம்  வெற்றிபெற்றுள்ளது ........... உங்களுடைய முதலாவது கருத்துக்கும்  இரண்டாவது கருத்தும் நேர் எதிரே முரண்பட்டு இருக்கிறது.
 
இந்தியாவில் யாரை ஆட்சியில் அமர்த்துவது என்பது அந்த நாட்டின் மக்கள் கைகளில் இருக்கிறது. இந்தியாவில் போராட்டத்தை முன்னெடுக்காமல் விடுவதே நல்லது  என்பது  எந்த பாணியை சேர்ந்தது?
கடந்த தேர்தலில் சீமான் காங்கிரசை  மண் கவ்வ வைத்தார். இந்த உண்மையை உங்களால் ஏற்க முடியாது அது கசப்பானது. அதற்கு வேறு ஏதாவது ஒரு சாயம் பூசவேண்டும். இல்லையேல் எமக்கு கண் குருடு என்பதை போல் ஒரு கருத்தை வைக்க வேண்டும். இரண்டும் உங்களுக்கு கை தேர்ந்த கலைகள். விரும்பியதை தேர்வு செய்யுங்கள். 
 
முள்ளி வாய்காலில் போர் நடந்து கொண்டிருந்த நேரத்திலும் மக்கள் சமைத்து சாப்பிட்டார்கள்.
சிலர் கடதாசி விளையாடினார்கள் 
பெண்கள் பாண்டி (பல்லாங்குழி) விளையாடினார்கள்.
சிறுவர்கள் எட்டு மிதித்து விளையாடினார்கள்.
 
கோடைகாலத்தில் விற்பனையை அதிரிக்க வியாபாரிகள் ஊடகங்களை நாடுவார்கள். அவர்கள் தயவில் இயங்கும் ஊடகங்கள்  அதை உள்வாங்குவார்கள்.
ரோட்டில் வாகனகள் போகும் வரும் 
வானத்தில் காக்கா பறக்கும் குருவிகள் பறக்கும் 
வீதியில் மனிதர்கள் நடப்பார்கள் அவசர்மானவர்கள் ஓடுவார்கள்.
 
இது எல்லா இடமும் நடக்கும் ஒன்றுதானே? 
 
ஒட்டுமொத்தமாக சுருக்கி இருவரியில் நீங்கள் சொல்ல வந்த விடயத்தை உங்களால் எழுத முடியுமா? 
அப்படி எழுதும்போது ஒரு கருத்தாடலை மற்றவர்களாலும் முன்வைக்க முடியும்.
குறைந்த பட்சம் அதை விளங்க ஆவது முடியும் அல்லவா?
 
அல்லது தலைப்பு செய்திகள் என்று மேலே  எழுதினால்.
கொஞ்சம் இலகுவாக இருக்கும் 

அரிசுன் விளம்பரங்களை பார்த்து விட்டு ஒரு கோல் போட்டு பார்த்தார். ஒரு தொகை விலை. உடனே வந்து யாழில் ஒரு வரி நக்கல்  எழுதி போபவர்களை பின் வாங்க செய்கிறார்.

 

விலையும் இறங்கும். போறவர்களும் குறையும். அவருக்கு அமைதியான பயணம் கிடைக்கும்.  

 

இந்த விளம்பரங்கள் இலங்கைக்கு மட்டும்தான் என்றால் எங்களுக்கும் ok தான். :D

  • கருத்துக்கள உறவுகள்
தொடர்ந்து இலங்கைக்கு இந்தியா உதவும்- பிரணாப் அறிவிப்பு
சனி, 6 ஏப்ரல் 2013( 13:02 IST )
 
இந்தியா இலங்கை இடையேயான வளமான நட்புறவுக்கு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பெறும் பங்கு வகித்ததாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
போர் முடிவுற்றதால் அரசியல் தீர்வு காண இலங்கைக்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்கும் வகையில் தீர்வு காண வேண்டும் இவ்வாறு குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
 
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப்பேசினார். அப்போது இருநாட்டு உறவுகள் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் கருத்து கூறினார். போர் முடிவுக்கு வந்ததால் இலங்கையில் ஒற்றுமை நிலவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்தியா-இலங்கை இடையே பல்லாண்டு காலமாக கலாசார, வரலாற்று அடிப்படையில் நெருங்கிய உறவு உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நெருங்கிய நட்புறவின் அடிப்படையில் இலங்கையில் நடைபெறும் சம்பவங்களில் இந்தியாவுக்கும் அக்கறை உண்டு.இதன் அடிப்படையில் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் உதவும் - என்று அந்த அறிக்கையில் பிரணாப் குறிப்ப்ட்டுள்ளார்.
 
தமிழ் தேசிய பிரச்சனை தொடர்பாக இலங்கையில் ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் மீதான அட்டூழியங்கள் அரங்கேறியுள்ளது. இலங்கை ராணுவம் திட்டமிட்ட தமிழ் இனப்படுகொலையை நடத்தியுள்ளதை உலக நாட்களும் ஐநா தீர்ப்பாயமும் ஒப்புக்கொண்டுள்ளது. தமிழகத்தில் இனப்படுகொலையாளி ராஜபக்சேவை எதிர்த்து மாணவர் போராட்டம் வெடித்து சற்று ஓய்ந்துள்ள இந்த தீக்காற்றில் எண்ணெயை ஊற்றார்போல் குடியரசு தலைவரின் இந்த அறிக்கை அமைந்துள்ளது தமிழர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணை 

உணர்ச்சி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை 

நான் புலத்தில் சீவிப்பவன் உம்மை விட இங்கே என்ன நடக்கிறது என்று எனக்கு நன்றாகவே தெரியும் 

இந்தியாவில் எது வேணுமென்றாலும் நடந்து விட்டு போகட்டும். 

இன்னும் நாங்கள் அழிந்து போய்விடவில்லை. இந்தியா எமக்கு அவசியமும் இல்லை 

ராஜபக்ஷ தனி தமிழீழம் தந்தாலும் இந்தியா அதை தர விடமாட்டான் என்பது எங்களுக்கு அத்துப்படி

நீங்க யாராவது இந்திய பேர்வழிகளுடன் கோல் போட்டு விளையாடுங்கோ :mellow: 

 

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கான தீர்வு இந்தியாவில் ஆட்சியில் இருப்பவர்களாலும் கொள்கை வகுப்பாளார்களாலும் தான் கொண்டுவரமுடியும் .

.

 

நிச்சமாக அவர்களால் முடியும் ஆனால் அவர்கள் தர மாட்டார்கள் என்பதும் எங்களுக்கும் உங்களுகும் தெரியும்.தமிழர்களுகு தீர்வை தந்தால் சிறிலங்காவை தனது இஸ்டத்திற்க்கு ஆட்டிப்படைக்க முடியாமல் போய்விடும் என்ற காரணத்தால்தான் தமிழர் பிரச்சனையை தனது கையில் வைத்துள்ளது.இப்பதான் இந்தியா துணை தூதரகம் யாழில் திறந்துள்ளது...... எமது உணர்ச்சி அரசியலால் இந்திய ஆளும் கட்சியினரும்,கொள்கை வகுப்பாளரும் நன்மையே அடைவார்கள்....அதாவது நாம் ஆளும்வர்க்கதினருக்கு நன்மையே செய்கிறோம்.. :D

இனி ஒரு வருசத்திற்கு காங்கிரஸ் அரசு 'Handicap" அரசு. அதாவது இறக்க முதல் செய்த பாவங்களை எண்ணி எண்ணி வருந்த  ஒதுக்க பட்ட நாட்கள்.  எதிர் கட்டிசிகள் அதை சரியாகப்பாவித்தால் இந்தியா திருந்தும். கர்நாடக சட்ட சபையில் அழகு மங்கைகளுடன் உல்லாசம் கண்டால் இந்தியா உப்பிடியேதான் போக வேண்டிய நாடு.

நிரந்தரத் தீர்வுக்கு சரியான சந்தர்ப்பம்; ரணிலிடம் அழுத்தினார் இந்திய ஜனாதிபதி

அதேன் ரணிலிட்ட அழுத்தி கூற வேண்டும் ரெலிபோனில் பட்டங்களை அழுத்தி நேரடியாக ராஜபக்சவுக்கு சொல்லவேண்டியதுதானே   :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.