Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்டஈடு வழங்கியது – விக்கிலீக்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்டஈடு வழங்கியது – விக்கிலீக்ஸ்
10 ஏப்ரல் 2013
விசேட மொழியாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள்
 
இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக இந்தியா இந்தப் பணத்தொகையை புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்திய அமைதி காக்கும் படையினரை அனுப்பி வைப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படக் கூடிய வரி வருமான இழப்பிற்கு, ஈடாகவே இந்தத்தொகை வழங்கப்பட்டது என அப்போதைய இலங்கைக்கான இந்திய தூதுவர் டிக்ஸித் தெரிவித்தார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த நட்டஈட்டுத் தொகை புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசிய இணக்கப்பாட்டுக்கு அமைய இந்தப் பணக்கொடுப்பனவு வழங்கப்படுவதாக புலிகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
 
வடக்கு கிழக்கு மாகாணசபையில் கூடுதல் ஆசனங்களை வழங்குதல், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு ஒரு பில்லியன் ரூபா பண உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த இரகசிய இணக்கப்பாட்டில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், இதனை வெளியிட வேண்டிய தேவையும் இருந்தால். இந்திய இராணுவத்துடன் இணைந்திருந்த புளட் போன்ற கும்பல்கள் ஏன் விடுதலைப் புலிகளை இனம்கண்டு அழிக்க இந்தியா உதவியது என்ற உண்மையையும் அறிந்து வெளியிடுதல் வேண்டும். இல்லையேல் விக்கிலீக்ஸ் இணையம் இந்தியாவால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகவே எண்ணத் தோண்றும்.

 

 

Edited by Paanch

இந்த் செய்தி விடுதலைப் புலிகளாலேயே பல முறை சொல்லப்பட்ட ஒன்றுதான்.

இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், இதனை வெளியிட வேண்டிய தேவையும் இருந்தால். இந்திய இராணுவத்துடன் இணைந்திருந்த புளட் போன்ற கும்பல்கள் ஏன் விடுதலைப் புலிகளை இனம்கண்டு அழிக்க இந்தியா உதவியது என்ற உண்மையையும் அறிந்து வெளியிடுதல் வேண்டும். இல்லையேல் விக்கிலீக்ஸ் இணையம் இந்தியாவால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகவே எண்ணத் தோண்றும்.

 

 

விக்கிலீக்ஸ் இந்தியாவினால் விலைக்கு வாங்கப்பட்டது இல்லை  அது அமெரிக்க CIA  இனால்  இயக்கப்படுகிறது...   

விக்கிலீக்ஸ் இந்தியாவினால் விலைக்கு வாங்கப்பட்டது இல்லை  அது அமெரிக்க CIA  இனால்  இயக்கப்படுகிறது...   

 

இது போன்ற  செய்திகள்  மட்டும்  வருவதற்கு  காரணம் தி ஹிந்து பத்திரிகை. 

 

தி ஹிந்து நாளிதழ் விக்கிலீக்ஸ் நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 'cable leaks' வெளியீடுகளில் இந்தியா குறித்தானத் தொகுப்புகளை வெளியிடுவதாக அறிவித்து, அதனைத் தினந்தோறும் வெளியிட்டும் வருகிறது.

 

http://www.thehindu.com/system/topicRoot/WikiLeaks/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டத்தட்ட 9 கோடிய காணேல்ல!

ருசி அப்பிடி,  கொத்தி கொண்டு போயிடுச்சு. :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாதான் அன்றைய காலகட்டத்தில் ஈழத்திற்கான  போராட்டத்தில்

இலங்கையை அடிபணிய வைக்க எல்லாமாக இருந்தது .

விடுதலைப் புலிகள் மட்டுமே அவர்களின் திட்டத்திற்கு அடிபணியவில்லை 

இப்ப டக்ளஸ் கோடி கோடியாகச் சம்பாதிப்பதற்கும் இந்தியாவே துணைபுரிகின்றது  

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசி நாள், ஒரு container புல்லா கரன்சி நோட்டு, அப் இன் ஸ்மோக்!!  

 

ஒரு பகுதி...

 

 ராஜபக்சே யிட்ட வாங்கின கிட்டத்தட்ட 9 கோடி தானே!

2005 ல ரணிலுக்கு போடாமல் பண்ண!!

 

ராஜாபக்ச வ கொண்டு வர!!

 

2010 ல தலை கீழ்!!

113, 000 வோட்டு சரத்துக்கு யாழ்பானத்தில. :lol:

 

புலிகள் இந்தியாவிற்கு இசைவாக 1987இல் நடந்திரிருந்தால் எப்படி இலங்கை இப்போது இருக்கும்?
யாரவது கூறமுடியுமா

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இந்தியாவிற்கு இசைவாக 1987இல் நடந்திரிருந்தால் எப்படி இலங்கை இப்போது இருக்கும்?

யாரவது கூறமுடியுமா

 

 

பிரபாகரன் மன்மோகன் சிங் போன்றதொருவராக தலை ஆட்டிக்கொண்டு இருந்திருப்பார்.

இந்த் செய்தி விடுதலைப் புலிகளாலேயே பல முறை சொல்லப்பட்ட ஒன்றுதான்.

 

 

 

 
ஆதாரத்தை தர முடியுமா??

கிட்டத்தட்ட 9 கோடிய காணேல்ல!

ருசி அப்பிடி,  கொத்தி கொண்டு போயிடுச்சு. :D

 

 

அண்ணை விழுந்த மாட்டுக்கு குறி சுடக்கூடிய ஒரு ஆள் நீங்கள் என்று 2009 ல் இருந்தே தெரியும் உங்களை. முதலில் மதிவதனன் ஆன நீங்கள் மதிவதனங் ஆக மறு அவதாரம் எடுத்துள்ளீர்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி விடுதலைபுலிகளின் இராணுவ ப்ரிவு கலைக்கப்படும்போது அப்போராளிகளின்(விடுதலைப்புலி போராளிகளுக்கு) புனர்வாழ்வுக்கு என 400 வழங்கபோவதாக கூறி முதற்கட்டமாக 50 கொடுத்தது இந்தியா அல்ல மறைந்த முன்னால் இந்திய பிரதமர் இராஜீவ் காந்தி அவர்கள் என்று அறிந்த ஞாபகம். இரண்டு கட்டமாக புலிகளால் ஆயுதம் ஒப்படைக்கப்பட்டது என நினைக்கிறேன் முதலாம் கட்ட ஆயுத ஒப்படைப்பின் பின்னரோ அல்லது இரண்டாம் கட்ட ஆயுத ஒப்படைப்பின் பின்னரோ அது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அது ஒரு வகை இலஞ்சம் ஆயுத ஒப்படைப்பை ஊக்குவிக்கும் நோக்காக இருக்கலாம், அதுவும் சரிவராது போக (40 % ஆயுதம் மட்டுமே புலிகள் வழங்கியதாக இந்தியா சந்தேகித்து) புலிகள் அமைப்பிலிருந்து விலகிய நிராயுதபாணிகளான போராளிகளை இந்தியாவினால் ஆயுதம் பாதுகாப்பு வழங்கி ஊக்குவிக்கப்பட்ட மாற்று குழுக்களின் உதவியுடன் வேட்டையாடி புலிகளை அவர்கள் மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களை வெளியே கொண்டுவர இந்தியா முயன்றது. இதன் உச்ச கட்டமாக புளட் தேச விரோத கும்பலை சேர்ந்த சங்கிலி என்பவரால் மட்டக்களப்பில் நோய்வாய்பட்ட படுத்த படுக்கையாக இருந்த முன்னால் புலிகளியக்க போராளி ஒருவரை அவரது வீட்டில் வைத்தே அடித்து மண்டையை பிளந்து அவரது மூளையை எடுத்து சந்தியில் காட்சிப்படுத்தப்பட்டது. புலிகள் காசுக்கோ,பதவிக்கோ எதுக்கும் மயங்கவில்லை எந்த சண்டித்தனத்திற்கும் பயப்படவில்லை, கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்கள் இறுதிவரை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.