Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈச்சை மரத்து வேர்களே.. கப்பல் ஏற முதல்.. எங்கள் கதை கேளுங்கள்..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது இலக்கிய சந்திப்பு பற்றிய தலைப்பு இல்லை என்றாலும்.. உங்கள் கருத்திற்கு பதில் அளிக்க வேண்டின் அந்த இலக்கிய சந்திப்பு என்பது ஒட்டுக்குழுக்களின் சந்திப்பு என்பதையே இனங்காட்டி நிற்கிறது. ஒட்டுக்குழுக்கள் வரவிலக்கணப்படுத்துவதை கிருபன் அண்ணா இங்கே இலட்சிய நிர்ணயம் செய்ய முனைவது கேவலமான செயலாகவே எனக்குத் தெரிகிறது. இது யாழில் மறைமுகமாக ஒட்டுக்குழு இணையத்தள ஆக்கங்களை புகுத்தும் நோக்கத்தினைக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. கிருபன் அண்ணா பல தடவைகள் அதைச் செய்திருக்கிறார். அவர் பன்முக ஆக்கங்களை படிக்கும் ஒருவராக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரை அநாவசியங்களை படிப்பதிலும் அவசியமானதைப் படிப்பதில் நேரத்தைச் செலவு செய்வதையே விரும்புகிறேன். அதேபோல் சில அநாவசியமான ஆட்களைப் பற்றி அறிந்து கொள்வதிலும் அறியாமல் இருப்பது மேல்..! :):icon_idea:

ஈபி ஆட்களை புலிகள் பிடித்தார்கள் விட்டார்கள் என்பதை சொல்ல இந்தத் தலைப்பு மாற்றி அமைக்கப்பட்டுவது விரும்பத்தக்கதல்ல (சாட்டுச் சாட்டா போராளிகளை இழிவுபடுத்தும் தேசம் கதைகள் இங்கு இணைக்கப்படுவது போல..). இதே ஈபி இந்தியப் படைகளோடு தலையாட்டிகளாய் நின்று படுத்தியபாடு.. பள்ளிக்கு போய் வந்த எம்மைக் கூட (குட்டிப் பையன்களைக் கூட) சுடும் வெயிலில் ரெயில் பாதையில் இருக்க விட்டு தலையாட்டி முன் நடை பயில விட்ட கூட்டம். அப்படியான வக்கிர மனப்பான்மை உடைய இவர்களைத் தப்ப விட்டதே தவறு..! அவர்களே இன்று நாட்டை விட்டு ஓடிவந்து விட்டு.. வேதாந்தம் பேசுகின்றனர்.  இவர்கள் உண்மையில் மனிதப் பிறவிகளே இல்லை என்பதே எனது தனிப்பட்ட கணிப்பு. அவர்களைப் பற்றி அறியவும் விருப்பப்படவில்லை. :icon_idea:

முதலாவது வசனம் பச்சைப் பொய். இந்தக் கவிதை எழுதியதன் நோக்கம் உண்மையில் காத்தான்குடியில் ஈச்சை மரம் வளர்ப்பதைப் பற்றியல்ல. இலக்கியச் சந்திப்பில் சாத்திரி தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து இலங்கையரசோடு பேச்சுவார்த்தை செய்யவேண்டும் என்ற சொன்னதற்கான எதிர்ப்பைத்தான் நெடுக்ஸ் மண் பறிபோகின்றது என்ற அங்கலாய்த்துக் கவிதை பாடியுள்ளார்.

மேலும் ஒட்டுக் குழுவோ, ஒட்டாக் குழுவோ யார் எதைச் சொல்கின்றார்கள் என்பதைவிட, என்னத்தைச் சொல்கின்றார்கள் என்பதில் கவனம் இருந்தாலும், எமது கொள்கைகளிலும், இலட்சியங்களிலும் கவனம் இருந்தாலும் போதும். ஆனால் கருத்தியலுக்கு எதிரானவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் அப்படியே மறுதலிக்கும் பாஸிசக் குணம் இருந்தால் பார்த்துப் பாராமல் குற்றம், குறை, கோள் எல்லாம் நாவும், கையும் வலிக்காமல் தொடர்ந்தும் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

  • Replies 82
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பொய்யும் அல்ல புரளியும் அல்ல. அந்த ஆக்கத்தை எழுதியவன் என்ற வகையில்.. எனக்கு அந்தப் படமும்.. இன்றைய தெந்தமிழீழ நிலையும் தான் எண்ணத்தில் உதித்தது. அதன் விளைவே இது.

இலக்கிய சந்திப்பு பற்றி எல்லாம் எமக்கு அக்கறையில்லை. இவர்கள் 40 தடவை சந்தித்து வெட்டிக்கிழிக்காததை எனிக் கிழிக்கப் போறதும் இல்லை. உங்களுக்கு அது இலக்கிய சந்திப்பாக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரை புலம்பெயர் ஒட்டுக்குழு ஒன்றுகூடல். அது அல்ல இந்ததலைப்பின் பேசு பொருள். வீணே அதனை இதற்குள்ளும் திணித்து இலவச விளம்பரம் செய்யாதோங்கோ கிருபண்ணா.

மேலும்.. என்னைப் பொறுத்த வரை சும்மா றோட்டால போறதுகள் சொல்வதை எல்லாம் இலக்கியமாகப் படிக்கும் பழக்கம் இல்லை. குற்றம் செய்துவிட்டு சிறையில் இருந்துவிட்டு வந்தவன் சிறையைப் பற்றி அவதூறாகப் பேசுவான். தன் குற்றத்தை மறைத்திடுவான். அப்படியான பேச்சுக்களுக்கு நீங்கள் பகுத்தறிவு அங்கீகாரம் வழங்கலாம். ஆனால் எமக்கு அது தேவையில்லை. எதனை ஏற்க வேண்டும் எதனை தவிர்க்க வேண்டும் என்பது அவரவர் தேடலின் தன்மையைப் பொறுத்தது. எனது தேடலும் உங்களதும் ஒன்றல்ல. என்னைப் பொறுத்தவரை மக்களை தேசத்தை கூறு போட்டு கெடுத்துக் குட்டிச்சுவராக்கிய..  ஒட்டுக்குழு பாசையே தேவையில்லை. அதனை நிராகரிப்பது.. பாசிசம் அல்ல. எனது அடிப்படை உரிமை..!

உதாரணத்திற்கு.. இங்கிலாந்தில் எத்தனையோ பத்திரிகைகள் வருகின்றன..! சன் னுக்கும் ஒரு வாசகர் வட்டம் உண்டு. காடியனுக்கும் உண்டு. இரண்டும் பத்திரிகை தான். ஆனால் தரத்தால் ஒன்றல்ல..! (இங்கே பல்கலைக்கழகங்களில் சன்னை ஆதாரம் காட்ட முடியாது. காடியனைக் காட்டலாம்) அதுபோலத்தான் நீங்கள் சன்னுக்கு வாசகன்.. நான் கார்டியனுக்கு வாசகன். நீங்கள் வந்து என்னை சன் னும் படி என்று வற்புறுத்துவது தான் பாசிசம். நான் உங்களை சன்னைப் படிக்காதே என்று சொல்லவில்லை. எனக்கு அதனைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே சொல்கிறேன்.

இதனை நீங்கள் சரியாக உள்வாங்கிக் கொண்டு பாசிசம் என்ற பதத்தை சரியாக உள்வாங்கி பாவிக்க முற்பட வேண்டிக் கொள்கிறேன். கோபமாக அல்ல வினையமாக..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யும் அல்ல புரளியும் அல்ல. அந்த ஆக்கத்தை எழுதியவன் என்ற வகையில்.. எனக்கு அந்தப் படமும்.. இன்றைய தெந்தமிழீழ நிலையும் தான் எண்ணத்தில் உதித்தது. அதன் விளைவே இது.

இலக்கிய சந்திப்பு பற்றி எல்லாம் எமக்கு அக்கறையில்லை. இவர்கள் 40 தடவை சந்தித்து வெட்டிக்கிழிக்காததை எனிக் கிழிக்கப் போறதும் இல்லை. உங்களுக்கு அது இலக்கிய சந்திப்பாக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரை புலம்பெயர் ஒட்டுக்குழு ஒன்றுகூடல். அது அல்ல இந்ததலைப்பின் பேசு பொருள். வீணே அதனை இதற்குள்ளும் திணித்து இலவச விளம்பரம் செய்யாதோங்கோ கிருபண்ணா.

இவ்வளவு காலமும் காத்தான்குடி யாருடைய பிரதேசம் என்ற அக்கறை வராமல் இருந்தாப் பிறகு வந்ததென்ன நெடுக்ஸ்?

சும்மா இப்பத்தான் தென்தமிழீழ நிலை தெரிந்தது என்று சொல்லவேண்டாம். சரி, அக்கறையாகத்தான் எழுதினீர்கள் என்று வைத்துக்கொண்டாலும் இந்தக் கவிதை மூலம் வெறும் உணர்ச்சியைத்தான் தூண்டலாம். காத்தான்குடி இனி ஒருபோதும் தமிழர்களின் ஊராக மாறமுடியாது. அதுபோன்று அது அரபு ஊர் போன்று மாறுவதையும் தடுக்கவும் முடியாது!

இதில் இருந்து தெரிவது என்ன என்றால் நீங்கள் சன் ன்னின் வாசக வட்டம் போன்றவர். நாங்கள் எங்கள் புளாக்கில் இவை தொடர்பில் பல தடவை ஆக்கங்களைப் பதிவு செய்திருக்கிறோம். அவற்றில் சில புலம்பெயர் அச்சு ஊடகங்களிலும் பிரசுரமாகியுள்ளன. நீங்கள் அவற்றை வாசிக்கவில்லை என்பதற்காக எமக்கு அக்கறையே வரேல்ல என்பது சரியல்ல..!

தடுக்க முடியா விட்டாலும் மக்களிடம் உள்ள உணர்வை வெளிப்படுத்த முடியும். மெளனமாக இவற்றை அனுமதிப்பதிலும் மக்கள் இவற்றை இட்டு கண்காணிப்போடு எச்சரிக்கையோடு இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கும் பிற மக்களுக்கும் போய் சேரும். அதன் பின்னால் அதற்கான பலாபலன்களை கால ஓட்டத்தில் அறுவடை செய்ய வாய்ப்பு ஏற்படலாம். மெளனமாக இருப்பதிலும் மக்கள் தமது உணர்வை வெளிப்படுத்துவதில் தவறில்லை. கேடும் இல்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்து தெரிவது என்ன என்றால் நீங்கள் சன் ன்னின் வாசக வட்டம் போன்றவர்.

ஆமாம். இதில் என்ன சந்தேகம். நான் மக்களோடு மக்களாக இருக்கும் சாதரணன் :) . நீங்கள் சாதரணர்களை உயரத்தில் இருந்து பார்க்கும் elite.. அதாவது மேட்டுக்குடி!! ^_^ 

அதை உங்கள் கருத்துக்கள் மூலம் ஒத்துக்கொண்டமைக்கு நன்றி நெடுக்ஸ். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். இதில் என்ன சந்தேகம். நான் மக்களோடு மக்களாக இருக்கும் சாதரணன் :) . நீங்கள் சாதரணர்களை உயரத்தில் இருந்து பார்க்கும் elite.. அதாவது மேட்டுக்குடி!! ^_^ 

அதை உங்கள் கருத்துக்கள் மூலம் ஒத்துக்கொண்டமைக்கு நன்றி நெடுக்ஸ். :lol:

நீங்கள் விளங்கிக் கொண்டது தவறு. சாதாரண மக்கள் அறிய வேண்டியதை பலரும் அறிய வாய்ப்புள்ளது. அது எம்மை பல வழிகளிலும் வந்தடையும் தகவையும் அதிகம் கொண்டுள்ளது. ஆனால் சாதாரண மக்களால் அதிகம் அறியப்படாததை நாம் அறிந்து அதனை எளிமைப்படுத்தி அந்த மக்களுக்கு வழங்குவது தான்.. வாசிப்பின் பயனே..! அதைவிட்டு.. இதனை வாசிப்பதால்.. நீ உசத்தி.. நான் தாழ்மை என்ற பாகுபாட்டியல் நோக்கம் கொண்டு நீங்கள் உலா வருவதே உங்களின் பகுத்தறிவை சந்தேகிக்கச் செய்கிறது கிருபண்ணா. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது கல்முனையில் முஸ்லீம்கள் எவளவு காலமாக இருக்கிறார்கள் எனத் தெரியாது ஆனால் பேரிச்சை மரம் இப்ப இரண்டு வருசத்துக்கு அதிகமாக இருக்கு. நான் கடைசித் தடவை இலங்கை போன போது கல்முனைப் பகுதியால் போகும் போது கண்டு படமும் எடுத்திருந்தேன். கண்டிப்பாகத் தேடி இணைக்கிறேன். இப்படி இருக்க இப்பொது கல்முனை பற்றி திடீர்க் கரிசனை வருவது ஏன்  என்று தான் புரியவில்லை. காலி முகத்திடலில் பனை மரம் நிற்பதைப் போல பேரீச்சை மரத்தை நான் ஒரு அழகு படுத்தும் முயற்சியகத்தான் பார்த்தேனே ஒழிய அரபு ஆக்கிரமிப்பின் சின்னமாகக் கருதவில்லை. 

சில விடயங்களை நீங்கள் இன்னும் சரியாக உள்வாங்கவில்லை போல் தெரிகிறது.

1. இங்கு பேசு பொருள்.. கல்முனை அல்ல.. காத்தான்குடியில் இருந்து.. அரபு தேச மற்றும் மத அடையாளமாக பேரீச்சை என்ற வெளிநாட்டு தாவரம் புகுத்தப்படுவதுதான்.

2. காலிமுகத்திடலில் பனை நடுவது ஒன்றும் மதரீதியான அல்லது இன ரீதியான விடயம் அல்ல. பனை இலங்கையில் இல்லாத ஒன்றும் அல்ல. சிங்கள தேசத்திலும் அம்பாந்தோட்டையில் நிறையப் பனைகள் நிற்கின்றன. ஈழத்தில்.. தமிழகத்தில்.. என்று பனை தெற்காசியாவில் பரந்து நிற்கும் ஓர் தாவர இனம். நீங்கள் பனைக்கு ஏதோ அடையாளம் கொடுத்துப் பார்க்க விளைகின்றீர்கள்.. அது முற்றிலும் தவறு..!

காலிமுகத்திடலுக்கு பனை வந்த போதும் சில ஊடகங்கள் சந்திரிக்கா அரசை விமர்ச்சித்திருந்தன.. காலிமுகத் திடலில் பனையை நாட்டுவதால் மட்டும் தமிழ் மக்களைச் சாந்தப்படுத்த முடியாது என்று. ஏனெனில் உங்களைப் போலவே சந்திரிக்கா அரசிலும் சிலர் பனை பற்றி இனக் கருத்தியல் கொண்டிருந்தனர். சில பேரினவாத ஊடகங்களும் சந்தேகங்களை வெளியிட்டு கேலிச்சித்திரம் வரைந்திருந்தன. அவர்கள் முக்கியத்துவம் அளித்த அளவுக்கு.. பனை தமிழர்களை அடையாளப்படுத்துகிறதா என்பது கேள்விக்குறி. இருப்பினும்..  சந்திரிக்கா அரசின் அந்த நகர்வு குறித்து எழுந்த அந்த விமர்சனங்கள்.. அவசியமானதா இல்லையா என்பதற்கு அப்பால் அவர்களின் கருத்து. அதனை வெளியிட அவர்களுக்கு உரிமை இருந்தது.

3. காத்தான்குடிக்கு பேரீச்சை வந்து பல நூற்றாண்டுகளோ.. தசாப்தங்களோ கடக்கவில்லை. சமீப ஆண்டுகளில் தான் அது கொண்டு வரப்பட்டு அதற்கு மத முக்கியஸ்துவம் அளிக்கப்பட்டு..  அது அரபு இஸ்லாமிய அடையாளமாக போற்றப்படுவது தான் சந்தேகத்தைக் கிளப்பி உள்ளதே அன்றி.. பேரீச்சை இலங்கை எங்கும்.. தமிழீழம் உட்பட..  தாவரவியலாளர்களால் தெரிவு செய்யப்பட்டு புகுத்தப்பட்டால் மக்கள் அதனை ஏற்றுக் கொண்டால்.. அதனை மத அடையாளமாக அன்றி பொதுப் பயன் தரு தாவரமாக புகுத்தினால் மக்கள் அது குறித்து.. அச்சத்தை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இன்று நடப்பது அப்படியான ஒன்றல்ல..!

p011.jpg

p5211.jpg

(முன்னைய இரண்டு படங்களிலும் அரபு எழுத்துக்களை அழித்துவிட்டு அல்லது அழிக்கப்பட்ட நிலையில்.. படங்களை இணையத்தில் தரவேற்றி உள்ளனர். ஆனால் கீழே உள்ள படத்தில் அரபு எழுத்து உள்ளது.)

srilanka_kathan_arabic_203.jpg?w=150&h=1

முன்னைய பெயர்களில்.. சிங்களம் கலந்து விளையாடுகிறது... முதன்மை பெறுகிறது.

Edu_Min_in_KKY_8.jpg

இது ஒப்பீட்டிற்காக..

52012943.jpg

{ அண்மையில் காத்தான்குடியில் பெயர்ப் பலகைகளில் அரபு எழுத்துக்களையும் புகுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. ஊர்களிற்கு அரபுப் பெயரிடப்பட்டு வருகின்றன (தமிழர் பிரதேசங்களில் அரபு இஸ்லாம் பெருக அனுமதி அளிக்கும் சிங்களம்.. தனது நாட்டில். ஹலால் இலச்சினையையே அழிக்கிறது.) இவை அழகுணர்ச்சியின் வெளிப்பாடுகளாகவா உங்களுக்குத் தெரிகிறது. அப்போ தமிழ் கிராமங்களுக்கு சிங்களப் பெயரை சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்பாளன் வைப்பதும் அழகுணர்ச்சியா. பெளத்த கோவில்களைக் கட்டுவதும்.. அரச மரங்கள் நிற்கும் இடமெல்லாம் புனித பிரதேசம் என்பதும்.. சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதும் அழகுணர்ச்சியா..??! என்ற கேள்விகளையும் உங்கள் கருத்து இங்கு எழுப்பி நிற்கிறது.}

4. இன்றைய காலம். இன்றைய காலம்.. முள்ளிவாய்க்காலின் பின்னானது.

இந்தக் கால இடைவெளியில் சிறீலங்கா முஸ்லீகளின் செயற்பாடு என்பது குறிப்பாக முஸ்லீம் மத அடிப்படைவாத பயங்கரவாத அரசியல்வாதிகளின் செயற்பாடு என்பது அடிப்படை மனிதாபிமானத்தைக் கூட தமிழ் மக்கள் மீது வெளிக்காட்ட தயங்கி நிற்பதோடு அரபு நாடுகள் மற்றும் பிராந்திய முஸ்லீம் நாடுகளை தமிழ் மக்களுக்கு எதிராக நிலையெடுக்கச் செய்து வருகின்றதை தொடர்ந்து அவதானித்து வருகிறார்கள் மக்கள்.

அதுமட்டுமன்றி தமிழீழம் நோக்கி அரபு விரிவாக்கம் என்பது.. அரபு நாடுகளின்.. பிராந்திய முஸ்லீம் நாடுகளின் ஆதரவோடு தமிழ் மக்களின் நிலங்கள் வர்த்தகம் என்பன திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு மிக உச்ச அளவில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில்.. (முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் என்ற போர்வையில்) மற்றைய மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு இந்த மாற்றங்கள் குறித்து அச்சம் எழுவது இயல்பே..!

{ உண்மையில் 2002 இல் பிரபா- ஹக்கீம் உடன்படிக்கையின் கீழ் முஸ்லீம்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அன்றெல்லாம் அது குறித்து பெரிதும் அக்கறை காட்டாத முஸ்லீம் அடிப்படை மதவாத பயங்கரவாதிகள்.. முள்ளிவாய்க்காலின் பின் தமிழ் மக்களின் நிலங்களை அடாத்தாகப் பறித்து அங்கு முஸ்லீம்கள் முன்னர் வாழ்ந்திராத நிலங்களில் எல்லாம் அவர்களைக் குடியேற்றி வருவதோடு.. இஸ்லாமிய மத அடையாளங்களையும் அமைத்துப் பெருக்கி வருகின்றனர். வர்த்தக ஸ்தாபனங்களையும் அடாத்தாக கையில் எடுத்து வருகின்றனர். இந்த நிலையை மட்டக்களப்பு நகரில் இருந்து யாழ்ப்பாணம்.. மன்னார்.. முல்லைத்தீவு.. கிளிநொச்சி வரை பார்க்க  முடிகிறது. ஏன் இவர்கள் இதனை 2002 செய்யவில்லை..??????????! ஏன்னா.. அப்போ தமிழ் மக்கள் சார்ப்பில் இவர்களைக் கேள்வி கேட்கக் கூடிய நிலை.  அன்று... இவர்களின் அடாத்தான அநியாய அத்துமீறல்களை தடுக்கக் கூடிய நிலை இருந்தது. இன்றில்லை. இந்த நிலையில்.. இந்த அரபு விரிவாக்கம் என்பது தெந்தமிழீழம் நிலப்பரப்பாலும்.. அரசியல் ரீதியாகவும்.. தமிழ் மக்களின் கைகளில் இருந்து விலகி இருக்கும் இந்தத் தருணத்தில்.. பேரீச்சைகளின் அரபுத்துவ.. மதத்துவ முக்கியத்துவம் என்பது வெறும் அழகுணர்ச்சியாக தெரியவில்லை. இவற்றிற்குப் பின்னால் பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளின் திட்டமிடல்களும் உள்ளனவோ என்ற சந்தேகமும்  வலுவாக உள்ளது. }

தமிழ் மக்களின் பூர்வீக நிலம்.. ஒரு பக்கம் சிங்கள பெளத்த பேரின அடையாளங்களால் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளை இன்னொரு பக்கம் முஸ்லீம் மத அடிப்படைவாத அரசியல் சக்திகளாலும்.. விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. இந்த பேரீச்சைகள் பெறும் மத முக்கியத்துவம் என்பது.. அதற்கு அவர்கள் அளிக்கும் புனிதத்துவம் என்பது வெறும் அழகுணர்ச்சிக்குள் அடங்கி இருக்க மறுக்கிறது. அதனையும் தாண்டி இது பற்றிப் பேச வேண்டிய நேரமாக இது தோற்றம் பெற்றுள்ளது. நாம் ஒன்றும் தசாப்தம் கடந்து பேசவில்லை. பேரீச்சைகள் முழு வளர்ச்சி அடைந்த பின்னும் பேசவில்லை. இன்னும் அவை சிறிய மரங்களாகவே தான் உள்ளன. அந்தக் காலத்துக்குள்ளேயே பேச வெளிக்கிட்டிருக்கிறார்கள் மக்கள்.

சரி ஒருக்கா காத்தான்குடிக்கோ.. கல்முனைக்கோ போயிட்டு வந்ததற்காக பேரீச்சைகள் மீது பாசம் கொட்டும் தாங்கள்.. முள்ளியவளையில் எமது மக்களின் ஏக்கர் கணக்கான நிலங்கள் முஸ்லீம் மத அடிப்படைவாத அரசியல் வெறியர்களால்.. பறிக்கப்படுவது மற்றும் அதற்கு மக்கள் காட்டும் எதிர்ப்புக் குறித்து ஏதாவது கருத்துச் சொல்லி இருக்கிறீர்களா..??! மன்னாரின் ஆயர் அவர்கள் வெளிப்படையாகவே முஸ்லீம்கள் மேற்கொள்ளும் நில ஆக்கிரமிப்புக்கள் குறித்துக் கருத்துச் சொல்லும் நிலை தோன்றி இருந்தது. அப்போது ஏதேனும் கருத்துக்களை பதிவு செய்தீர்களா..?????!

அதுவும் வன்னியில் புலிகள்.. பிள்ளை பிடித்தார்கள் என்று சொல்லித் திருந்த நீங்கள்.. இன்று அந்த மக்கள் இருந்த நிலத்தையும் பறிகொடுப்பதைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே. புலிகள் பிள்ளை பிடிச்சது.. இந்த நிலைக்கு அந்த நிலம் போகக் கூடாது என்பதற்காகவே அன்றி.. வரதராஜப் பெருமாள்.. டக்கிளஸ் தேவனந்தா..  ஈ என் டி எல் எவ்..1989 களில் தங்களின் அரசியல் இருப்புக்காக இந்தியப் படைகளுடன் சேர்ந்து கோழி அமுக்கின கணக்கா பள்ளிச் சிறார்களை அமுக்கிக் கொண்டு போனது போன்றதல்ல அந்தச் செயற்பாடு. எமது மக்களின் பிள்ளை பிடி பற்றி நீலிக்கண்ணீர் வடித்த நீங்கள்.. இன்று அந்த மக்களின் அவல நிலை குறித்து ஏன் பேசுவதில்லை. சில இடங்களுக்கு மெளனமாக விசிட் அடிப்பதால் மட்டும் எல்லாம் சுமூகமாக உள்ளது என்ற எண்ணத்தோற்றத்தை ஏன் ஏற்படுத்த முயல்கிறீர்கள். இது உங்களின் நியாயத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது..??!

அந்த வகையில் நாம்.. எல்லாம் குறித்துப் பேச வேண்டியவர்களாக உள்ளோம். தமிழ் மக்களை நோக்கி விரியும் அனைத்து ஆபத்துக்களையும் உலகத் தமிழ் மக்களின் முன் சாட்சிகளோடு வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனை உலகின் மனச்சாட்சியின் முன்னும் நிறுத்தவும் கடமைப்பட்டுள்ளோம்.

இது அதற்கான ஒரு தேடல். எமது ஒரு சின்னஞ் சிறிய பங்களிப்பு. அவ்வளவே. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது இலக்கிய சந்திப்பு பற்றிய தலைப்பு இல்லை என்றாலும்.. உங்கள் கருத்திற்கு பதில் அளிக்க வேண்டின் அந்த இலக்கிய சந்திப்பு என்பது ஒட்டுக்குழுக்களின் சந்திப்பு என்பதையே இனங்காட்டி நிற்கிறது. ஒட்டுக்குழுக்கள் வரவிலக்கணப்படுத்துவதை கிருபன் அண்ணா இங்கே இலட்சிய நிர்ணயம் செய்ய முனைவது கேவலமான செயலாகவே எனக்குத் தெரிகிறது. இது யாழில் மறைமுகமாக ஒட்டுக்குழு இணையத்தள ஆக்கங்களை புகுத்தும் நோக்கத்தினைக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. கிருபன் அண்ணா பல தடவைகள் அதைச் செய்திருக்கிறார். அவர் பன்முக ஆக்கங்களை படிக்கும் ஒருவராக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரை அநாவசியங்களை படிப்பதிலும் அவசியமானதைப் படிப்பதில் நேரத்தைச் செலவு செய்வதையே விரும்புகிறேன். அதேபோல் சில அநாவசியமான ஆட்களைப் பற்றி அறிந்து கொள்வதிலும் அறியாமல் இருப்பது மேல்..! :):icon_idea:

ஈபி ஆட்களை புலிகள் பிடித்தார்கள் விட்டார்கள் என்பதை சொல்ல இந்தத் தலைப்பு மாற்றி அமைக்கப்பட்டுவது விரும்பத்தக்கதல்ல (சாட்டுச் சாட்டா போராளிகளை இழிவுபடுத்தும் தேசம் கதைகள் இங்கு இணைக்கப்படுவது போல..). இதே ஈபி இந்தியப் படைகளோடு தலையாட்டிகளாய் நின்று படுத்தியபாடு.. பள்ளிக்கு போய் வந்த எம்மைக் கூட (குட்டிப் பையன்களைக் கூட) சுடும் வெயிலில் ரெயில் பாதையில் இருக்க விட்டு தலையாட்டி முன் நடை பயில விட்ட கூட்டம். அப்படியான வக்கிர மனப்பான்மை உடைய இவர்களைத் தப்ப விட்டதே தவறு..! அவர்களே இன்று நாட்டை விட்டு ஓடிவந்து விட்டு.. வேதாந்தம் பேசுகின்றனர்.  இவர்கள் உண்மையில் மனிதப் பிறவிகளே இல்லை என்பதே எனது தனிப்பட்ட கணிப்பு. அவர்களைப் பற்றி அறியவும் விருப்பப்படவில்லை. :icon_idea:

நான் ஒன்றும் இலக்கிய சந்திப்பை பற்றிய அறிவூட்டலை உங்களுக்கு தருவதற்கு[அப்படித் தந்தாலும் உங்களுக்கு ஏறாது என்பது வேற விச‌யம் :D ] இதைக் கொண்டு வந்து போட‌வில்லை...நீங்கள் ராயகர‌னைத் தெரியாது என்டீர்கள்.கிருபன் இலக்கிய சந்திப்புக்கு அவர் வந்தவர் என்டார்.அதனால் அவரை இனம் காட்டும் முகமாகவே அந்த வீடியோவையும்,அவரை பற்றி தெரிந்ததையும் எழுதினேன்.
 
சன்னும்,காடியனும் தர‌த்தில் ஒன்றல்லத் தான் ஆனால் சன் ஒவ்வொரு நாளும் இப்படித் தான் வரும் என்பதை சன்னை வாசிக்காமல் சொல்லக் கூடாது...சில நேர‌ங்களில் காடியனில் வராத,எமக்குத் தெரியாத விச‌யம் சன்னில் வர‌லாம் :)
 
ராயகர‌னையோ அல்லது தேச‌த்தை படித்துப் போட்டு விமர்சித்தால் நல்லது...இன்னும் நன்றாக விமர்சிக்கலாம் அல்லது எமக்குத் தெரியாத விட‌யத்தை தெரிந்து கொள்ளலாம் அல்லது ஏன் அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்டாவது புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம் :lol:

எமக்கு எது அறிவு பூர்வமானது எது அங்கீகரிக்கப்பட வேண்டிய எழுத்துக்களை உள்ளடக்கியுள்ளது.. எது பெறுமதிமிக்க ஆய்வுரீதியான படைப்பு.. என்று இனங்காணும்.. அடிப்படை அறிவு இருக்கிற படியால்.. எமக்கு கண்டதையும் கண்ட இடத்திலும் கண்டவரிடத்திலும் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மேலும்.. ஒட்டுக்குழு படைப்புக்களின் போக்குகள் பற்றி நாங்கள் காலம் காலமாகவே அறிகிறோம். அவை ஒரே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் தன்மையையே எப்போதும் கொண்டிருக்கிறன. அவர்கள் என்றுமே அவர்களின் வறட்டுச் சித்தாந்தங்களில் இருந்து மாறப் போவதில்லை. அவர்களிடம் இருந்து மக்களுக்கோ இந்த உலகிற்கோ எந்த ஒரு உருப்படியான விடயங்களும் பிறக்கப் போவதும் இல்லை. உங்களைப் போன்ற கண்ட இடத்திலும்.. பொழுதுபோக்குபவர்களுக்கு நாலு இடத்தில் கண்ணோட்டம் விட அவை உதவலாம். ஆனால் மக்களுக்கு எமக்கு அவற்றால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அந்த வகையில் நீங்கள் நடுப்பக்கத்தில்.. நிர்வாணப்படத்துடன் வரும்.. சன்னைப் படியுங்கோ.. நாங்கள் கார்டியனை.. பிபிசியை ப் படிச்சுக் கொள்ளுறம்.

மேலும் இத்திரியில் ஒட்டுக்குழுக்களின் சுயதம்பட்ட சிலுக்கியம்..பற்றி தொடர்ந்து கதைக்கும் உத்தேசம் எமக்கு இல்லை. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

ரயாகரன் -இப்போ தமிழரங்கம் நடாத்தி வருபவர் . NLFT யின் மத்திய குழு உறுப்பினர் .யாழ் பல்கலை கழகமாணவர் ,மாணவர் அமைப்பில் இருக்கும் போது புலிகளால்(தீபன் சயிக்கிலில் லிப்ட் கேட்டு கடத்தினார் ). கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுவிட்டார் .மாணவர்கள் ரயாகரனை விடுதலை செய்ய ஆர்ப்பாட்டம் நடாத்தியபோது புலிகள் தாம் அவரை கைது செய்யவில்லை என முற்றாக மறுத்துவிட்டார்கள் .புலிகளின் ஒரு மாத தடுப்பில் இருந்து மிக சித்திரவதைகளுக்கு உள்ளான  இவர் எப்படியோ தப்பி ஓடிவிட்டார் .(நடந்ததை மிக விபரமாக தனது இணையத்தில் எழுதியுள்ளார் ).

மாத்தையா ,திலீபன்  மாணவர்கள் மத்தியில் கூட்டம் வைக்கும் போது கூட்டதிற்குள் இருந்து எழும்பியதில் இருந்து கீரோ ஆகியவர் .

கற்றன் நசனல் வங்கி கொள்ளைப்பணத்துடன் நாட்டை விட்டு ஓடிவிட்டார் என்று இவர் மீது குற்றசாட்டு இருக்கு .புலம் பெயர்ந்து இந்த இணையத்தை நடாத்திவருகின்றார் .தான் மட்டுமே முற்போக்கு வாதி என்பது போல இவரது கட்டுரைகள் இருக்கும் ,அதே இணையத்தில் வேறு பலரின் அரிய கட்டுரைகள் வந்துள்ளன ,அதே போல அளப்பரிய எங்கும் கிடைக்காத பல ஆவணங்களும் அங்கு இருக்கு .

கனடாவிற்கு வந்து செல்வியின் நினைவு கூட்டத்தில் பேசும்போது சந்தித்தேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரயாகரன் -இப்போ தமிழரங்கம் நடாத்தி வருபவர் . NLFT யின் மத்திய குழு உறுப்பினர் .யாழ் பல்கலை கழகமாணவர் ,மாணவர் அமைப்பில் இருக்கும் போது புலிகளால்(தீபன் சயிக்கிலில் லிப்ட் கேட்டு கடத்தினார் ). கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுவிட்டார் .மாணவர்கள் ரயாகரனை விடுதலை செய்ய ஆர்ப்பாட்டம் நடாத்தியபோது புலிகள் தாம் அவரை கைது செய்யவில்லை என முற்றாக மறுத்துவிட்டார்கள் .புலிகளின் ஒரு மாத தடுப்பில் இருந்து மிக சித்திரவதைகளுக்கு உள்ளான  இவர் எப்படியோ தப்பி ஓடிவிட்டார் .(நடந்ததை மிக விபரமாக தனது இணையத்தில் எழுதியுள்ளார் ).

மாத்தையா ,திலீபன்  மாணவர்கள் மத்தியில் கூட்டம் வைக்கும் போது கூட்டதிற்குள் இருந்து எழும்பியதில் இருந்து கீரோ ஆகியவர் .

கற்றன் நசனல் வங்கி கொள்ளைப்பணத்துடன் நாட்டை விட்டு ஓடிவிட்டார் என்று இவர் மீது குற்றசாட்டு இருக்கு .புலம் பெயர்ந்து இந்த இணையத்தை நடாத்திவருகின்றார் .தான் மட்டுமே முற்போக்கு வாதி என்பது போல இவரது கட்டுரைகள் இருக்கும் ,அதே இணையத்தில் வேறு பலரின் அரிய கட்டுரைகள் வந்துள்ளன ,அதே போல அளப்பரிய எங்கும் கிடைக்காத பல ஆவணங்களும் அங்கு இருக்கு . கனடாவிற்கு வந்து செல்வியின் நினைவு கூட்டத்தில் பேசும்போது சந்தித்தேன் .

ரயாகரன் ********************* ************* அதைப் பற்றி எல்லாம் இஞ்ச ஆக்கம் எழுதுப்படல்ல.

இது அவர்களை விளம்பரப்படுத்துவதற்கான தலைப்பும் அல்ல. இவர்கள் தான் உங்கட நண்பர்கள் என்றால்.. உங்களின் godfathers  என்றால் அதை உங்க கூடவே வைச்சிருங்க. அல்லது அவர்களுக்கு என்று தனித் தலைப்புத் திறந்து இந்தப் ********* ********* ********* என்று எழுதுங்கள்.

புலிகளின் தடுப்பு முகாம்கள் பற்றி எழுத முதல் உங்களின் சித்திரவதைக் கூடங்களில் அழிக்கப்பட்டவர்கள் குறித்து சிந்தியுங்கள். புலிகளாவது தப்பி ஓட விட்டார்கள். நீங்கள் கொன்று அடையாளம் தெரியாமல் சவுக்காட்டுக்குள்ளும்... வயல் வெளிகளிலும்.. புதைத்த ஆக்கள்.

எனவே அவற்றை இங்க எழுதி..

தலைப்புக்களை திசை திருப்ப வேண்டாம். மேலும் நீங்கள் எழுதும் விடயங்களை அப்படியே நம்ப நாங்கள் ஒன்றும் முட்டாள்களாக இங்கு வலம் வரவில்லை. அதற்கு வேற ஆக்களைப் பாருங்கோ..! இந்தத் தலைப்புக்குரியவன் என்ற வகையில்.. இதனை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நன்றி.

நியானி: பண்பற்ற சொல்லாடல்கள் நீக்கப்பட்டுள்ளன

Edited by நியானி

ஈச்ச மரம் வருவது இஸ்லாமிய அடிப்படைவாதம் அதுக்கு எதிர்ப்பு வருவது மையவாதத்தில் இருந்து அதுக்கும் மேல சிங்கள பொளத்த பேரினவாதம். இந்த மூன்றுக்குள் இருந்தும் மக்கள் விடுபடுவதற்கும் நிம்மதியாய் வாழ்வதற்கும் இந்த மூன்றிலிருந்தும் வெளியில் வருவதும் மனிதப்பண்புள்ளவர்களாக மாறுவதும் ஒன்றே வழி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிம்மதியான வாழ்விற்கு.. என்ன மக்களை குந்தி இருந்தி தியானம் செய்யச் சொல்லுகிறீர்கள் போலும்..! அப்பதான் ஊரைக் கொள்ளை அடிக்க வசதியா இருக்கும். :)

நிம்மதியான வாழ்விற்கு.. என்ன மக்களை குந்தி இருந்தி தியானம் செய்யச் சொல்லுகிறீர்கள் போலும்..! அப்பதான் ஊரைக் கொள்ளை அடிக்க வசதியா இருக்கும். :)

மதம் கடவுள் சம்மந்தப்படாமல் ஒவ்வொருவரும் தியானம் செய்தால் நிச்சயம் ஒருவரை ஒருவர் கொல்லமாட்டார்கள். மதவாதத்தையும் இனவாதத்தையும் பிரிக்கமுடியாது அதே நேரம் இவற்றுக்குள் இருந்து தீர்வும் கிடையாது. ஆளயாள் அடித்துச் சாகவேண்டியதுதான்.

இன்று ஈச்சை மரம் அரசமரம் நாளை இந்த மரங்களை வெட்டுபவர்களை வெட்டுவார்கள். நாம் இதற்குள் கொண்டுபோய் ஏன் தலையை கொடுக்கவேணும்?

மக்களை நோக்கி ஆபத்துக்கள் வரும் போது அதனை மக்கள் எதிர்கொள்ள வேண்டும். இந்த உலகம் ஒன்றும் 100% பாதுகாப்புள்ள வாழ்வுத் தகவோடு படைக்கப்பட்டில்லை. வாழ்க்கை என்பதே சவாலோடு தான் தொடங்குகிறது. அந்த சவால்களை சரிவர சந்திப்பது தக்கன பிழைக்கிறது. அல்லன மடிகிறது.

எங்கள் கடமை மக்களை நோக்கி வரும் ஆபத்துக்கள் குறித்து எச்சரிப்பதும் தற்காப்பு எடுத்துக் கொள்ளத் தூண்டுவதுமே. ஏனெனில். இந்த முஸ்லீம் மத அடிப்படைவாதிகளின் கொடூரங்களிற்கும் சிங்களப் பேரினத்தின் கொடூரத்திற்கும்.. ஒட்டுக்குழுக்களின் பாசிசக் கொடூரத்திற்கும் பலியானதே எமது மக்கள் தான்.

சிந்தித்துப் பாருங்கள்.. ஒரு ஒட்டுக்குழுக்களும் இன்றி.. புலிகள் மட்டுமே தோன்றி இருந்தால்.. இன்று நாம் விடுதலை அடைந்திருப்போம்..! காரணம் எம் அழிவில் பெரும்பாலும் ஒட்டுக்குழுக்களின் காட்டிக்கொடுப்பு இருந்துள்ளது. சொந்த மக்களை அவர்கள் அழிப்பதன் மூலம் தங்களின் இயலாமைக்குரிய பழியை மற்றவர்கள் மீது சுமத்த முற்பட்டனர். இதே தான் முஸ்லீம் மத அடிப்படைவாதிகளினதும் குறிக்கோள்..!

இவை எம்மை எதிர்நோக்கியுள்ள ஆபத்துக்கள். அவை குறித்து எச்சரிக்காமல் விட்டால்.. மக்கள் பாதுகாப்புத் தேடாமல் விட்டால்.. இன்னும் இன்னும் அல்லனவாக மடியப் போவது எம் மக்கள். அவர்களை தக்கனவாக வாழ வைக்கும் உயிர்பியல் தான் எமது நோக்கம்..! மையவாதம் எல்லாம் இங்கில்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கவிதை வந்ததும் நெடுக்ஸ் அண்ணன் வரவேற்றது .... எதற்கு எண்டு புரியாமல் இல்ல.

படத்தை பார்த்த உடன இலக்கிய சந்திப்பும் சாத்திரியார் .. ரயாகரனும்தான் குறி எண்டது எல்லாருக்கும் உடன விளங்கி இருக்க வேணும்.

கொஞ்ச பேர் ஒற்றுமை எண்டு  கத்துறாங்க ....

பொதுபலசேனா .... ஹலால் ... எண்டு எழுதி கிழிக்கிறதும் அதுக்கு தான்

முஸ்லீமுக்கும் சிங்களவனுக்கும் பிரச்சன எண்டு செய்தியள் எழுதுற நோக்கமும் அதுதான்.... 

அப்பிடியான எதிர் பார்ப்போட தான் ... பலரும் இங்க வாராங்க ...

ஆனா உந்த விசை பலகை  புலியளோட நோக்கம் அதுவில்ல ....

முள்ளி வாய்க்கால் தோல்விய யாரோட தலையில யாவது கட்டுறதுதான்  ....

இறுதி கட்டத்தில உலகத்துக்கு எதிரா துடங்கினது  இப்ப ....

மகிந்தா..கோத்தா .. எண்டு தொடங்கி ..... சோனியா..காங்கிரசு எண்டு தொடர்ந்து .... ஒட்டுக்குழு..முஸ்லீமில எண்டு வந்து நிக்குது.

கொஞ்ச காலத்தில..உது அமெரிக்கா..பிரிட்டின் எண்டு வந்து முடியாட்டி பாருங்கோ !!!!!!!!!!!!!

புலிகளின் தோல்வி எங்குதான் எதிரொலிக்க வில்லை .... இந்த தளமே தற்போது அந்த எதிரொலியில தான் ஓடுது...

My contribution.  Thank You.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கண்டுபிடிப்புக்கு மிக்க நன்றி மதிவதனங். உங்களைப் போல.. கண்ட கண்ட ஆக்களை எல்லாம் இலக்கியவாதின்னோ அரசியல்வாதின்னோ.. ஏற்றுக் கொள்ளுற அளவுக்கு நாங்கள் இல்லை. அது அதற்கு ஒரு பரிமானம் உண்டு.

இது சமகால தமிழர் தாயக நிகழ்வுகளோடு ஒட்டிய ஒரு ஆக்கம். அதை விளங்க முடியல்லை என்பது எங்கட பிரச்சனை அல்ல. அது உங்கட பிரச்சனை. நீங்கள் அதோடு சாகும் வரை வாழலாம்.

புலிகள் ஒரு போராட்ட சக்தி. போராட்ட சக்திகள்.. எழுச்சியும் வீழ்ச்சியும் காண்பதும் உலக வரலாற்று நியதி. ஆனால் புலிகளின் இலச்சியமும் மக்களின் இலச்சியமும் ஒன்று அதாவது போராட்ட இலக்கு ஒன்று. அந்த வகையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் புலிகளோடு ஓயப்போவதும் இல்லை.. அது ஆயுதங்களால் அடக்கி ஒடுக்கப்படக் கூடியதும் அல்ல.

அது இன்னொரு வடிவெடுக்கும். அன்று தந்தை செல்வா அகிம்சை வழியில் தொடக்கியது.. ஆயுத வழிக்கு நகர்ந்து இன்று சர்வதேச பொறிமுறைகளை நோக்கி.. தமிழகத்தின் பேராதரவோடு.. உலகத்தமிழினத்தின் ஆதரவோடு.. முன்னெடுக்கும் நிலைக்கு உயர்ந்து நிற்கிறது..! அதுவே அது வெல்லப்படும் திசை நோக்கி நகர்த்தப்பட வாய்ப்பைக் கொண்டிருக்கு என்றும் இனங்காட்டுகிறது.

நீங்கள்.. இன்னும் புலிகளைச் சுற்றி போராட்டத்தை படர வைச்சுக் கொண்டிருக்கிறீர்கள்.. காலம் பிந்தங்கி நிற்கிறீர்கள் அல்லது வாழுகிறீர்கள். அதுதான் உங்கள் கருத்திலும் மேலும் சிலரின் கருத்திலும் புலனாகிறது.

இங்கு எதிர்க்கப்படுவது.. அரபு மயமாக்கவும்.. முஸ்லீம் மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின்.. அதன் அரசியல் கூத்தாடிகளின்.. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளும்..!  தமிழர் தாயகத்தில்.. முஸ்லீம்களின் இருப்போ.. உரிமையோ அல்ல. இதனை முதலில் சரியாக நீங்களும் இங்கு சிலரும் புரிந்து கொள்ள வேண்டும். புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். இன்றேல் அதற்காக வருந்தத்தான் முடியும். உங்களுக்கு வகுப்பெடுக்கவா முடியும்..??! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உன்மையை  சொல்ல போனால் தமிழருடைய இருப்பு சுரண்டப்படுகிறது மற்றும் படி எதுவும் கூற முடியாது இப்போதும் கூட ஆரையம்பதி ,காத்தான்குடி எல்லை பிரச்சினை போய்கொண்டிருக்குகிறது தெரியுமா?  அடுத்து சதாம் ஹுசைன் வீதி  இப்படி பல நிகழ்ழ்சி நிரல் போய்கொண்டிருக்கிறது

அது மட்டுமல்லாமல் நானும்  உன்மையான விபரங்களை  சொல்வதென்றால் நெடுக்கரின் கருத்துக்கு உடன்படுகிறேன்         மற்றும் படி.......... :( :(

Edited by முனிவர் ஜீ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்மையை  சொல்ல போனால் தமிழருடைய இருப்பு சுரண்டப்படுகிறது மற்றும் படி எதுவும் கூற முடியாது இப்போதும் கூட ஆரையம்பதி ,காத்தான்குடி எல்லை பிரச்சினை போய்கொண்டிருக்குகிறது தெரியுமா?  அடுத்து சதாம் ஹுசைன் வீதி  இப்படி பல நிகழ்ழ்சி நிரல் போய்கொண்டிருக்கிறது

அது மட்டுமல்லாமல் நானும் கல்முனையாக்கும் உன்மையான விபரங்களை  சொல்வதென்றால் நெடுக்கரின் கருத்துக்கு உடன்படுகிறேன்         மற்றும் படி.......... :( :(

முனிவர் ஜீ.. நீங்கள் பிரச்சனைக்குரிய பகுதிகளில் வாழ்ந்து கொண்டு.. குரல் தரும் ஒருவர் என்று நினைக்கிறேன். உங்களின் வாய்மொழியின் வன்மை உண்மைக்கு நிகர்த்தது.

ஆனால் இப்படியான தலைப்புக்களில் கருத்தெழுதும் போது உங்கள் சொந்தப் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளுங்கள். அதன் பின்னர் தான் உங்கள் துணிவை பாராட்டலாம்.

இங்குள்ள பலர் செளகரியமாக இருந்து கொண்டு பொழுதுபோக்கிற்கு கருத்தெழுதுபவர்கள். அவர்களுக்கு விசமத்தனம் பொழுதுபோக்கு..! நீங்கள் அப்படியானவர் அல்ல..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உன்மையை  சொல்ல போனால் தமிழருடைய இருப்பு சுரண்டப்படுகிறது மற்றும் படி எதுவும் கூற முடியாது இப்போதும் கூட ஆரையம்பதி ,காத்தான்குடி எல்லை பிரச்சினை போய்கொண்டிருக்குகிறது தெரியுமா?  அடுத்து சதாம் ஹுசைன் வீதி  இப்படி பல நிகழ்ழ்சி நிரல் போய்கொண்டிருக்கிறது

அது மட்டுமல்லாமல் நானும் கல்முனையாக்கும் உன்மையான விபரங்களை  சொல்வதென்றால் நெடுக்கரின் கருத்துக்கு உடன்படுகிறேன்         மற்றும் படி.......... :( :(

முனிவர்ஜீ அவர்களே, நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எனும் இஸ்லாமிய நாட்டில் தான் தொழில் புரிகின்றீர்கள் என்று அண்மையிலும் ஒரு திரியில் குறிப்பிட்டு இருந்தீர்கள். முஸ்லிம் மக்கள் மீதுள்ள அன்பினால் தானே பிழைப்பதற்கும் ஒரு இஸ்லாமிய நாட்டுக்கு போயிருக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா உன்மைதான் நான் சில காலம் வேலை செய்தேன் ஆனால்  அரபியர்களுக்கும் இங்குள்ள முஸ்லிம்களுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது

அடுத்து உன்மையான சம்பவங்கள் கல்முனை ஆஸ்பத்திரியின் முன்பு சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் அதாவது அங்குள்ள உள்ள முஸ்லிம் வைத்தியர் வைத்திய சாலைக்கு வந்த உதவிகளை வேற அதாவது  கல்முனை அஸ்ரப் வைத்திய சாலைக்கு  மாற்றினார்  அதன் அபிவிருத்திகளை

அடுத்து கல்முனை தரவைப்பிள்ளையார் கோவில் வீதி தற்பொழுது கடற்கரைபள்ளி வீதியாக மாற்றப்பட்டுள்ளது  இதையும் தெரிந் கொள்ளுங்கள்மற்றபடி இந்த திரிக்கு இனி கருத்த எழுத விரும்பவில்லை

இந்தத் திரியில் நெடுக்கரின்  கருத்து பலரிற்கு இனவாதம் மாதிரி தெரியலாம். ஆனால் இது கசப்பான உண்மை. இதன் உண்மையான தாக்கத்தை வெளிப்படையாக உணர சில ஆண்டுகள் எடுக்கும்.

ஐயா உன்மைதான் நான் சில காலம் வேலை செய்தேன் ஆனால்  அரபியர்களுக்கும் இங்குள்ள முஸ்லிம்களுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது

அடுத்து உன்மையான சம்பவங்கள் கல்முனை ஆஸ்பத்திரியின் முன்பு சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் அதாவது அங்குள்ள உள்ள முஸ்லிம் வைத்தியர் வைத்திய சாலைக்கு வந்த உதவிகளை வேற அதாவது  கல்முனை அஸ்ரப் வைத்திய சாலைக்கு  மாற்றினார்  அதன் அபிவிருத்திகளை

அடுத்து கல்முனை தரவைப்பிள்ளையார் கோவில் வீதி தற்பொழுது கடற்கரைபள்ளி வீதியாக மாற்றப்பட்டுள்ளது  இதையும் தெரிந் கொள்ளுங்கள்மற்றபடி இந்த திரிக்கு இனி கருத்த எழுத விரும்பவில்லை

தரவைப் பிள்ளையார் கோயிலைத் தாண்டி சாய்ந்தமருது நோக்கிச் இருந்த பெரும்பகுதி முன்பே மாற்றப்பட்டு விட்டது . சிறு தகவல்  பாலிகா மகா வித்தியாலயம் முன்பு மெதடிஸ்த பாடசாலை. இங்கால சவக்காலைக்கு பக்கத்தில் இருக்கும் கொலனி 80 களில் தமிழர்களின் இடம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கண்டுபிடிப்புக்கு மிக்க நன்றி மதிவதனங். உங்களைப் போல.. கண்ட கண்ட ஆக்களை எல்லாம் இலக்கியவாதின்னோ அரசியல்வாதின்னோ.. ஏற்றுக் கொள்ளுற அளவுக்கு நாங்கள் இல்லை. அது அதற்கு ஒரு பரிமானம் உண்டு.

இது சமகால தமிழர் தாயக நிகழ்வுகளோடு ஒட்டிய ஒரு ஆக்கம். அதை விளங்க முடியல்லை என்பது எங்கட பிரச்சனை அல்ல. அது உங்கட பிரச்சனை. நீங்கள் அதோடு சாகும் வரை வாழலாம்.

புலிகள் ஒரு போராட்ட சக்தி. போராட்ட சக்திகள்.. எழுச்சியும் வீழ்ச்சியும் காண்பதும் உலக வரலாற்று நியதி. ஆனால் புலிகளின் இலச்சியமும் மக்களின் இலச்சியமும் ஒன்று அதாவது போராட்ட இலக்கு ஒன்று. அந்த வகையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் புலிகளோடு ஓயப்போவதும் இல்லை.. அது ஆயுதங்களால் அடக்கி ஒடுக்கப்படக் கூடியதும் அல்ல.

அது இன்னொரு வடிவெடுக்கும். அன்று தந்தை செல்வா அகிம்சை வழியில் தொடக்கியது.. ஆயுத வழிக்கு நகர்ந்து இன்று சர்வதேச பொறிமுறைகளை நோக்கி.. தமிழகத்தின் பேராதரவோடு.. உலகத்தமிழினத்தின் ஆதரவோடு.. முன்னெடுக்கும் நிலைக்கு உயர்ந்து நிற்கிறது..! அதுவே அது வெல்லப்படும் திசை நோக்கி நகர்த்தப்பட வாய்ப்பைக் கொண்டிருக்கு என்றும் இனங்காட்டுகிறது.

நீங்கள்.. இன்னும் புலிகளைச் சுற்றி போராட்டத்தை படர வைச்சுக் கொண்டிருக்கிறீர்கள்.. காலம் பிந்தங்கி நிற்கிறீர்கள் அல்லது வாழுகிறீர்கள். அதுதான் உங்கள் கருத்திலும் மேலும் சிலரின் கருத்திலும் புலனாகிறது.

இங்கு எதிர்க்கப்படுவது.. அரபு மயமாக்கவும்.. முஸ்லீம் மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின்.. அதன் அரசியல் கூத்தாடிகளின்.. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளும்..!  தமிழர் தாயகத்தில்.. முஸ்லீம்களின் இருப்போ.. உரிமையோ அல்ல. இதனை முதலில் சரியாக நீங்களும் இங்கு சிலரும் புரிந்து கொள்ள வேண்டும். புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். இன்றேல் அதற்காக வருந்தத்தான் முடியும். உங்களுக்கு வகுப்பெடுக்கவா முடியும்..??! :icon_idea::)

இங்கு யாரும் இலக்கியவாதியாவோ... அரசியல்வாதியாவோ... எழுதி கொண்டு வரவில்ல.....

தமிழரின் போராட்டம் பற்றியாரும் யாருக்கும் வகுப்பும் எடுக்க வில்ல..... அது இங்குள்ளஅறிவிவில்லாதவர்களுக்கு தான்...தேவை :lol:

தமிழ் நாட்டு அரசியலயோஇந்திய அரசியலயோஉலக அரசியலயோ தெரியாதவங்களுக்கு.....

தமிழ்நாட்டு சினிமா துறையில இருக்கிறவங்க எப்படி இயங்கிறவங்க எண்டு தெரியாதவங்களுக்கு…..

சமீபத்தில நடந்த நடிகர் போராட்டத்திலதிரை மறைவில நடந்ததுகள அறியாதவங்களுக்கு….

தமிழரின் போராட்டம்எப்ப புலிகளின் போராட்டமானது….

புலிகளின் போராட்டம்….மீண்டும் எப்ப தமிழரின் போராட்டமானது எண்டு தெரியாதவங்களுக்கு....

தமிழகத்தில அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவா ஆரம்பிச்ச மாணவர் போராட்டம்எப்பஎப்படி அமெரிக்காவுக்கு எதிரானஐநா வுக்கு எதிரானபோராட்டமா மாறினது எண்டது தெரியாதவங்களுக்கு.. தான் வகுப்பு தேவை. :lol::D

இனவாதம் ...மதவாதம்அடிப்படைவாதம் ...மையவாதம் ....பயங்கரவாதம் ....பாசிசவாதம் ...எண்டு எல்லா வாதத்தயும் கக்கிக் கொண்டு படிப்பிக்க வெளிக்கிட்டிடுவாங்க ........ :lol: :lol:

எலாத்துக்கும் மேலா இனவாதம்மதவாதம்பயங்கரவாதம்பாசிசவாதம் ...பற்றிஇதே திரியில நீங்கள் ஆரம்பத்தில இருந்து எழுதின ஒவ்வொரு கருத்தையும் படிச்சு போட்டு.. யார் இனவாதியார் மதவாதியார் பயங்கரவாதி.. யார் பாசிசவாதி எண்டு சிந்திச்சுவகுப்பெடுங்கஅது உங்களுக்கு நீங்கள் குடுக்கிற வகுப்பா தான் இருக்கும்.. என நான் நம்பிறன். :lol:  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.