Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி அரசுடமையாக்கம்

Featured Replies

தமிழர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதியினை அரசுடமையாக்க அரசாங்கம் முடிவு.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உரியவர்களால் பராமரிக்கப்படாமலிருக்கும் வங்கிக் கணக்குகளை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகளை இலங்கை வங்கி ஆரம்பித்துள்ளது.

யாழ்.குடாநாட்டில் இந்த நடவடிக்கையை இலங்கை வங்கி ஆரம்பித்திருப்பதன் மூலம் குடா நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் பல்லாயிரக் கணக்கானோரின் பல கோடி ரூபா வைப்பு அரசுடைமையாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டில் இதன் முதற்கட்டமாக அதி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மயிலிட்டி காசநோய் ஆஸ்பத்திரி வளவிலுள்ள கோயிலின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு அரசுடைமையாக்கப் போவதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் பராமரிக்கப்படாதிருக்கும் வங்கிக் கணக்குகளையும் பாதுகாப்பு பெட்டகங்களிலிருக்கும் பணம் மற்றும் நகைகளையும் அரசுடைமையாக்கப் போவதாக மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இதன் முதற்கட்டமாகவே மயிலிட்டி கோயில் கணக்குகளை முடக்கப் போவதாக இலங்கை வங்கி அறிவித்துள்ளது.

பதிவு.கொம்

  • Replies 118
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஜெனீவா

15.07.06

அன்பார்ந்த புலம்பெயர் தமிழீழ மக்களே,

சிறீலங்கா வங்கிகளிலுள்ள உங்கள் சொத்துக்களை மீளப்பெறுங்கள்!

புலம்பெயர்ந்தும் - இடம்பெயர்ந்தும் வாழும் தமிழீழ மக்கள் சிறீலங்கா வர்த்தக வங்கிகளில் பாதுகாப்பதற்கென கையளித்த சொத்துக்களை அபகரிக்க சிறிலங்கா புதிய முயற்சிகளினை மேற்கொள்கிறது. 1995-2005 வரை செயற்படாதிருந்த வங்கிக் கணக்குகளின் மீதிகளையும், பாதுகாப்புப் பெட்டகங்களிலுள்ள சொத்துக்களையுமே இவ்வாறு சிறிலங்கா மத்திய வங்கி பறிமுதல் செய்யவுள்ளது..

இதற்காக மத்திய வங்கியின், வங்கிச்சட்ட 72,73ம் பிரிவின் கீழ் 1995-2005 வரை நடைமுறைப்படுத்தப்படாத வங்கிக்கணக்கு, பாதுகாப்புப் பெட்டகச் சொத்துக்களின் விபரங்களை ஒப்படைக்கும்படி வர்த்தக வங்கிகள் அனைத்தையும் மத்தியவங்கி கேட்டுள்ளது.

இவ்வாறு மேற்படி கணக்கு மீதிகளும், பாதுகாப்புப் பெட்டகங்களும் சிறிலங்காவின் அரசுடமையாக்கப்பட்டால், அதிலே மிகப்பெருமளவுக்குத் தமிழ் மக்களின் பணமும் சொத்துக்களுமே இழக்கப்படவுள்ளன. தொடர்யுத்தம், இடப்பெயர்வு, புலம்பெயர்வு காரணமாகத் நாம் சிறுகச் சிறுகச் சேமித்து வைப்பிலிட்ட வங்கிக் கணக்குகளையும் பாதுகாப்புப் பெட்டகங்களையும் நடைமுறைப்படுத்தும் வாய்ப்பினைப் பெருமளவு தமிழ் மக்கள் இழந்திருந்தனர்.

சிறிலங்கா அரசிற்கு தமிழர்களின் மீதான வன்முறையை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சுமையை ஈடுசெய்வதற்கு இவ்வாறான ஒரு கைங்கரியத்தினை செய்ய அரசு முனைந்துள்ளது. இவ்வாறு அரசுடமையாக்கப்படும் தமிழ் மக்களினது பணமும் சொத்துக்களும் நிதியாதாரம் தேடியலையும் சிறிலங்காவின் போர் இயந்திரத்துக்கான தீனியாகவே போய்ச் சேரவுள்ளன. தமிழர்களின் நிதித்தேட்டத்தை வைத்தே தமிழர்களை அழிக்கும் இந்தப் புதிய நாசகாரத்திட்டத்தை மகிந்த ராஐபக்ச அரசு புதிய தந்திரோபாயமாக கைகொள்ளுகின்றது.

எனவே, இந்தப் பேரபாயத்தைத் தவிர்ப்பதற்காக இடம்பெயர்ந்தும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ்மக்கள் அனைவரும், சிறிலங்காவின் வங்கிகளில் தங்களுக்கு உள்ள கணக்கு மீதிகளையும் பாதுகாப்புப் பெட்டகங்களில் உள்ள சொத்துக்களையும் மீளப் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்துலகத் தமிழர் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கின்றது.

நன்றி

ம்.. இரகசிய வங்கிக்கணக்கு எங்கை வைச்சிருக்கலாம்.. எழுதுங்கே.. அங்கையாவது போடட்டும்.. :P

ம்.. இரகசிய வங்கிக்கணக்கு எங்கை வைச்சிருக்கலாம்.. எழுதுங்கே.. அங்கையாவது போடட்டும்.. :P

வைப்பகம் இருக்கையில் ஏன் கவலை. :P

ம்.. இரகசிய வங்கிக்கணக்கு எங்கை வைச்சிருக்கலாம்.. எழுதுங்கே.. அங்கையாவது போடட்டும்.. :P

அண்ணா உங்கள் கேளிவி சுப்பெர் :P :?: :!:

Bank of Ceylon, Central Bank போன்றவை நல்ல நம்பிக்கையான வங்கிகள். அங்கு பிரச்சனையில்லாமல் உங்கள் சேமிப்புகளிற்கு அதி உயர் வட்டி பெற்றுக் கொள்ளலாம். அரச கூட்டுத்தாபனம் என்றரீதியில் மேலதிக பாதுகாப்பும் இருக்கும் எப்பவும்.

குறுக்ஸ் சின்ன திருத்தம் மேல் 2 வங்கியையும் விட National Saving Bank (NSB) யில் தான் வைப்புக்கு அதிக வட்டி தாறாங்கள் 10.25% (ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னன்)

குறுக்ஸ் சின்ன திருத்தம் மேல் 2 வங்கியையும் விட National Saving Bank (NSB) யில் தான் வைப்புக்கு அதிக வட்டி தாறாங்கள் 10.25% (ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னன்)

முகம்ஸ் வட்டி தார்ங்கள் சரி ஆனா முதலை கேட்ட திருப்பி தருவர்களா? :P :P

10.25% ஆ :shock: . நல்ல வட்டி கிடைக்குமே. முகத்தார் NSB இல் NRFC கணக்கு வைத்திருக்க முடியுமா? :roll:

முதல் நிச்சையமா தருவங்கள் அரச வங்களில் எந்த ஆபத்தும் இல்லை. அப்படி ஏதாவது சிக்கல் வந்தாலும் நீங்கள் இருக்கிற வெளிநாடுகள் ஊடக தகுந்த ஆவணங்களோடு வழக்கு பதிவு செய்யலாம். பயப்பிடாமல் உங்கடை சேமிப்புகளை அங்கை போடுங்கோ நல்ல வட்டி கிடைக்கும்.

வேறு ஒரு மேற்கத்தேய நாடுகளிலும் இந்த அளவு வட்டி கிடையாது. சிறீலங்காவில் வட்டி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகள் போல் வருமான வரிப்பிரச்சனைகளும் இல்லை.

முதல் நிச்சையமா தருவங்கள் அரச வங்களில் எந்த ஆபத்தும் இல்லை.

இப்ப சுருட்டுறதே அரசவங்கி தானே?

வங்கிகளில் நீண்டகாலம் கிடப்பில் உள்ள கணக்குகளை முடக்க முடிவு

சிறிலங்காவின் வங்கிகளில் நீண்டகாலம் கிடப்பில் உள்ள வங்கிக் கணக்குகளை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

கைவிடப்பட்ட சொத்துகள் குறித்த வங்கிகள் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் இந்நடவடிக்கையை மேற்கொள்வர் என்று சிறிலங்கா வங்கிகள் சங்கத்தின் செயலாளர் உபாலி டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பான அறிவிக்கை நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகளை ஓகஸ்ட் மாத இறுதிக்குள் மீள செயற்படுத்த வேண்டும் அல்லது அக்கணக்குகள் மத்திய வங்கிக்கு மாற்றப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

முடங்கிக் கிடக்கும் வங்கிக் கணக்குகளின் மதிப்பு 30 மில்லியன் டொலர் அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேட்பாரற்ற சொத்துக்களும் பொருட்களும் உரிமை கோரலுக்காக காத்திருப்பதாகவும் உபாலி டி சில்வா கூறினார்.

]http://www.eelampage.com/?cn=27505[

இறைமையுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் சுருட்டுது என்று ஒரு நாளும் சொல்ல கூடாது. :oops: நீங்கள் வழக்கு போட்டு அந்த சொத்துக்களை பெற்றுக் கொள்ளலாம்.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=asc&highlight=

ம்.. இரகசிய வங்கிக்கணக்கு எங்கை வைச்சிருக்கலாம்.. எழுதுங்கே.. அங்கையாவது போடட்டும்.. :P

தமிழீழ வைப்பகத்தில போடுங்கோ பாதுகாப்பாய் இருக்கும்... வட்டியும் அதிகம்...!

இறைமையுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் சுருட்டுது என்று ஒரு நாளும் சொல்ல கூடாது.

அப்ப மேல உள்ள செய்தி பொய்யா?

முகம்ஸ் வட்டி தார்ங்கள் சரி ஆனா முதலை கேட்ட திருப்பி தருவர்களா? :P :P

அவ்ளோ வீத வட்டி தருவாங்கன்னா - முதல் என்ன முதல் - ........

வட்டியே - முதலைபோல பலமடங்கில - வருமே - நிலையான வைப்பிலிட்டால்! 8)

குறுக்ஸ் சின்ன திருத்தம் மேல் 2 வங்கியையும் விட National Saving Bank (NSB) யில் தான் வைப்புக்கு அதிக வட்டி தாறாங்கள் 10.25% (ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னன்)

Hatton National Bank கூட என்று கேள்விப்பட்டன்.. குறைச்சூட்டாங்களோ? :P

Hatton National Bank கூட என்று கேள்விப்பட்டன்.. குறைச்சூட்டாங்களோ? :P

ஓமாம் வட்டி அதிகம் தருவாங்களாம்... ஆனா முதலைத்தான் திருப்பி தரமாட்டாங்களாம்....! :wink: :P :P

nrfc account போன்றவைக்கும் சில கட்டுபாடுகள் வைத்து பாதுகாப்பு நிதிக்கு ஆதாரம் தேடுற நிலமையை முன்பு யோசிச்சவை பிறகு கை விட்டவை...திரும்பவும் அதிலையும் கை வைக்கிற யோசனை இருக்காம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மேல உள்ள செய்தி பொய்யா?

குறுக்ஸ், தனது பாணியில் எழுத எல்லோரும் குழம்பிப் போட்டாங்கள் போல! :wink: :P :P

இறமை உள்ள சிரிலங்கா அரசாங்க்கம் சுருட்டினா வாயப்பொத்திக் கொண்டிருப்பினம்.

தமிழ் ஈழ அரசாங்கம் சொந்த மக்களின் பாதுகாப்புக்கு நிதி திரட்டினா ஆயிரம் விண்ணாணம் கதைப்பினம்.

அடிமை மன நிலை இருக்கும் வரைக்கும் சிலதுகளுக்கு புத்தி தெளியாது.

கடனடிப்படையில் வங்கியில் இருக்கும் சொத்துக்களை கொடுத்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது, தமிழீழ அரசுக்கு கொடுத்தால் வட்டியுடன் கிடைக்கும், இலங்கை அரசிடம் விட்டால் முதலுக்கும் மோசம், கொடுத்தவர்கள் பிழைத்துக்கொண்டார்கள், இன்னமும் முழுமையாக உங்கள் சொத்துகள் மூழ்கிவிடவில்லை, வங்கிகளில் சொத்து வைத்திருப்போரே சிந்திப்பீர். :wink:

குறுக்ஸ், தனது பாணியில் எழுத எல்லோரும் குழம்பிப் போட்டாங்கள் போல! :wink: :P :P

உண்மைதான் :P

யாராவது வெளிநாடுகளில் இருந்தபடியே தமிழீழ வங்கிகளில் கணக்கை திறந்து மாதாமாதம் பணத்தை வைப்பிலிட முடியுமா?விபரம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்.நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்ளோ வீத வட்டி தருவாங்கன்னா - முதல் என்ன முதல் - ........

வட்டியே - முதலைபோல பலமடங்கில - வருமே - நிலையான வைப்பிலிட்டால்! 8)

நீண்டகால வைப்பிற்குத்தான் இவ்வளவு வட்டி தருகிறார்கள். இலங்கையில் சேமிப்பிற்கு வட்டிவீதம் கூடியது தேசிய சேமிப்பு வங்கி :wink:

:arrow: தேசிய சேமிப்பு வங்கியிலும் வதியாதோர் வெளிநாட்டு நாணயச் சேமிப்புத் திட்டம் உண்டு :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது வெளிநாடுகளில் இருந்தபடியே தமிழீழ வங்கிகளில் கணக்கை திறந்து மாதாமாதம் பணத்தை வைப்பிலிட முடியுமா?விபரம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்.நன்றி

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...%AE%95%E0%AE%BF

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.