Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சூரை மீன் கிரேவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீன்களில் சால்மன் மற்றும் டூனா என்னும் சூரை மீன் மிகவும் ஆரோக்கியமானவை. இத்தகைய மீன்களில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, மிகுந்த சுவையும் உள்ளது. மேலும் இந்த மீன்களுள் சூரை மீனில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பதால், இது கண்களுக்கும், மார்பக புற்றுநோயை தடுப்பது மற்றும் பலவற்றிற்கும் பெரும் உதவியாக இருக்கும்.

இத்தகைய சூரை மீனை வைத்து கிரேவி செய்து வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் நன்கு வலுவோடும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். இப்போது இந்த சூரை மீனை வைத்து எப்படி கிரேவி செய்வதென்று பார்ப்போமா!!!

23-tunafishgravy.jpg

தேவையான பொருட்கள்:

சூரை மீன் - 2 டின்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 4-5 பல் (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
தந்தூரி மசாலா - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சூரை மீன்களை நன்கு சுத்தம் செய்து, நீரில் கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பிறகு உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், தந்தூரி மசாலா, சீரகப் பொடி சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து நறுக்கிய தக்காளியை போட்டு, 2-3 நிமிடம் தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி விட வேண்டும்.

பின் அதில் சூரை மீன்களை சேர்த்து ஒரு முறை கிளறி, தட்டு வைத்து 5-6 நிமிடம் மூடி வைத்து, பிறகு திறந்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

கிரேவியானது நன்கு கொதித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான சூரை மீன் கிரேவி ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

http://tamil.boldsky.com/recipes/non-veg/tuna-fish-gravy-recipe-003077.html

சூரைமீன் சாப்பிட்டால் கடிக்கும் சரியான கிரந்தி ஆனால் சாப்பிட நல்ல ருசியாக இருக்கும் இது புது முறையாக இருக்கு சமைத்து பார்ப்போம்

இணைப்புக்கு நன்றி தமிழரசு 

Edited by அலைஅரசி

சூரைமீன் சாப்பிட்டால் கடிக்கும் சரியான கிரந்தி ஆனால் சாப்பிட நல்ல ருசியாக இருக்கும் இது புது முறையாக இருக்கு சமைத்து பார்ப்போம்

இணைப்புக்கு நன்றி தமிழரசு 

நீங்கள் சொல்வது சூடை மீன் என்று நினைக்கிறேன், மீனைப்பற்றித் தெரிந்தவர்கள் ஒருக்காச் சொல்லுங்கோ பிளீஸ்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சூடை மீன் என்று நினைக்கிறேன், மீனைப்பற்றித் தெரிந்தவர்கள் ஒருக்காச் சொல்லுங்கோ பிளீஸ்!

31-1364695797-sar.jpg

சூடை மீன் அல்லது  சாளை மீன் என்பார்கள் இந்த மீன் சாப்பிட்டால் கடிக்காது பொரிச்சு சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும் 

a1b51a81d8eba5c6_tuna_fish_pictures_B.jp

இதுதான் சூரை மீன் இந்த மீனை சாப்பிட்டால் கடிக்கும் என்று சொல்லுவினம் எனக்கு அப்படி பிரச்சனை இல்லை   :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan style Fish Curry

Sri-Lankan-fish-curry.JPG

Sri Lanka is an Island surrounded by sea. Therefore, we receive fresh seafood daily. There are many different Sri Lankan seafood recipes.

Here is one of recipes for Sri Lankan fish curry. Most of the times, I cook fish as per this Sri Lankan Fish recipe, because we like its flavour & appearance.

Hope you enjoy preparing this Sri Lankan style fish curry.

Ingredients (2-3 servings)

250g fish (Tuna is better)

2 tblspn Red chilly powder

1 tblspn raw curry powder

1 tblspn black pepper powder

¼ tspn turmeric powder

1 inch piece of cinnamon

1 tspn fenugreek seeds (ulu hal)

1 tspn mustard seeds

1 onion sliced

1 clove garlic

1 sprig curry leaf

Piece of rampe (pandan leaf) (optional)

2 pieces of Gamboge (goraka) – (instead you can use 1 tomato) (see a photo of gamboge here)

4 cups water

Salt  to taste

2 tbspn cooking oil

½ cup thick coconut milk

Method:

Wash fish and cut into cubes/pieces
Then mix red chili powder, curry powder, black pepper, turmeric powder & fenugreek seeds with about 1 tspn water. Mix fish pieces with this spice mix & keep aside.
 
Heat oil in a pan. When it is hot add mustard seeds. Once mustard seeds splutter, add onion. Then add garlic & curry leaves.

When onions are tender, add fish into oil & allow to fry for few minutes.

Then add cinnamon stick, pandan leaf, & gamboge(goraka) into it. Add water.

Cover & cook for about 10 minutes.

Once fish is cooked, add coconut milk & adjust salt to taste.

Add coconut milk slowly keeping eye onto the appearance. This fish curry looks delicious when the colour is red/brown.

Cook for another few minutes in very low flame.

Serve hot with rice or bread.

http://foodssrilanka.blogspot.co.uk/2012/10/sri-lankan-style-fish-curry.html

  • கருத்துக்கள உறவுகள்

சூரைமீன் சாப்பிட்டால் கடிக்கும் சரியான கிரந்தி ஆனால் சாப்பிட நல்ல ருசியாக இருக்கும் இது புது முறையாக இருக்கு சமைத்து பார்ப்போம்

இணைப்புக்கு நன்றி தமிழரசு 

நாவுக்கு.... ருசியாக இருந்தால்...

கடிக்கும், என்று சாப்பிடாமல், இருக்கலாமா..... :rolleyes:

சொறிந்து விட்டு, சாப்பிட வேண்டும், அலைஅரசி. :D  :lol:

சிலருக்கு  சூரை மீன் உண்டால் நாக்கு கடிப்பது (நாக்குக்கு பல்லு இருக்கா என்று எல்லாம் கேட்ககூடாது) அல்லது சுனைப்பது போன்று இருக்கும். இது ஒருவகை ஒவ்வாமை என்று நினைக்கின்றேன். அநேகமாக சிங்கள பகுதிகளில் தான் இந்த மீனை அதிகம் வாங்கி கொறக்கா புளி போட்டு அடர்த்தியாக (Thick ஆக) குழம்பு வைப்பார்கள். சிங்களத்தில் 'கெலவல்லோ' என்று அழைப்பர்.

இந்த மீனை உப்பும், மிளகாய்த்தூளும், மஞ்சலும் சேர்ந்த கலவையினை தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பொரித்தால் நல்ல சுவையாக இருக்கும். அல்லது இவற்றுடன், முட்டைக் கலவையில் தோய்த்து கொஞ்சம் bread crumbs இனை தடவிப் பொரித்தாலும் நன்றாக இருக்கும். சின்னப் பிள்ளைகளும் விரும்பிச் சாப்பிடுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

சூரன் மீனோடு முருங்கங்காய் சேர்த்து சமைத்து விட்டு அடுத்த நாள் சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்குமாம் ஒரு கேரளக்கார பொண்ணு சொன்னது :lol: ஆனால் நான் இன்னும் செய்து பார்க்கவில்லை.சூரன் மீனும் கிரந்தி மீன் தான்

அந்த பொண்ணு கல்யாணம் கட்டீட்டுதோ எண்டு கேட்டு சொல்லட்டாம் சுண்டல்..என்னமாதிரி..? :D

நல்ல ருசியான மீன். கொறுக்காய் /இஞ்சி /கறுவா / கராம்பு போட்டு சமைக்க நன்றாக இருக்கும். இடியப்பம் / புட்டு, சம்பலுடன் சேர்த்துச் சாப்பிட அந்த மாதிரி இருக்கும்.  இது கிரந்தி மீன். சிலரிற்கு கடிக்கும். இதை போல சுவையுடைய  'தளப்பத்து' மீன் இன்னும் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

 சூரை மீன் சாப்பிட்டால் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் இருக்கலாம் 

என எங்கோ வாசித்த ஞாபகம்

இணைப்பிற்கு நன்றி தமிழரசு.

 சூரை மீன் சாப்பிட்டால் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் இருக்கலாம் 

என எங்கோ வாசித்த ஞாபகம்

தொடர்ச்சியா சொறிந்து கொண்டு இன்னும் எங்கே சொறியலாம் என்று யோசிப்பாங்களோ! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 சூரை மீன் சாப்பிட்டால் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் இருக்கலாம் 

என எங்கோ வாசித்த ஞாபகம்

இணைப்பிற்கு நன்றி தமிழரசு.

அதுவா சொன்னவர் சிறிலங்கா ****** அமைச்சர்  விமல் மோடவன்ஷா  :D

  • கருத்துக்கள உறவுகள்

புத்திக்கூர்மைக்கு விவேகத்திற்கு சூரை மீன் சாப்பிடும் அமைச்சர் விமல் வீரவன்ஸ !!!

February 13, 2013   newstbc

Vimal_CI-150x150.jpgவிவேகத்திற்கு சூரை மீனை உட்கொள்ளவும்’

ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவாக சூரை மீனை உட்கொள்வதால் அவர்கள் விவேகமுடையவர்களாக உள்ளனர் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

‘யுத்தத்தால் அழிவடைந்த பின்னர் ஜப்பானியர்கள் எவ்வாறு எழுச்சி பெற்றனர்? வியக்கத்தக்க தொழில்நுட்ப உற்பத்திகளை உற்பத்தி செய்வதற்கு எவ்வாறு அவர்களது மூளைகள் விருத்தியடைந்தன?

அவர்கள் தங்களது கல்வி முறையிலும் உட்கொள்ளும் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தினர். அவர்கள் சூரை மீனைப் பிடித்து அதனை உட்கொண்டனர். சூரை மீனைப் போன்று புத்திக்கூர்மைக்கு உதவு வகையில் வேறு எந்த மீனும் இல்லை. ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவான சூரை மீனை உட்கொள்வதினாலேயே விவேகமுடையவர்களாக உள்ளனர்’ என அவர் கூறினார்.

முல்லேரியாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சூரை மீனை கிரந்தித் தன்மையுடைய மீன் என ஒதுக்காது இலங்கையர்களும் இம்மீனை அதிகளவில் உட்கொள்ள வேண்டுமெனவும் அவர் கோரினார்.

TBCUK

வேகமாகச் செயற்படும் தமிழரசு உண்மையில் சூரை மீன் சாப்பிட்டு இருக்கின்றார் :D

31-1364695797-sar.jpg

சூடை மீன் அல்லது  சாளை மீன் என்பார்கள் இந்த மீன் சாப்பிட்டால் கடிக்காது பொரிச்சு சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும் 

a1b51a81d8eba5c6_tuna_fish_pictures_B.jp

இதுதான் சூரை மீன் இந்த மீனை சாப்பிட்டால் கடிக்கும் என்று சொல்லுவினம் எனக்கு அப்படி பிரச்சனை இல்லை   :D

ஓ............ ஓக்கே நன்றி தமிழரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்திக்கூர்மைக்கு விவேகத்திற்கு சூரை மீன் சாப்பிடும் அமைச்சர் விமல் வீரவன்ஸ !!!

February 13, 2013   newstbc

Vimal_CI-150x150.jpgவிவேகத்திற்கு சூரை மீனை உட்கொள்ளவும்’

ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவாக சூரை மீனை உட்கொள்வதால் அவர்கள் விவேகமுடையவர்களாக உள்ளனர் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

‘யுத்தத்தால் அழிவடைந்த பின்னர் ஜப்பானியர்கள் எவ்வாறு எழுச்சி பெற்றனர்? வியக்கத்தக்க தொழில்நுட்ப உற்பத்திகளை உற்பத்தி செய்வதற்கு எவ்வாறு அவர்களது மூளைகள் விருத்தியடைந்தன?

அவர்கள் தங்களது கல்வி முறையிலும் உட்கொள்ளும் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தினர். அவர்கள் சூரை மீனைப் பிடித்து அதனை உட்கொண்டனர். சூரை மீனைப் போன்று புத்திக்கூர்மைக்கு உதவு வகையில் வேறு எந்த மீனும் இல்லை. ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவான சூரை மீனை உட்கொள்வதினாலேயே விவேகமுடையவர்களாக உள்ளனர்’ என அவர் கூறினார்.

முல்லேரியாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சூரை மீனை கிரந்தித் தன்மையுடைய மீன் என ஒதுக்காது இலங்கையர்களும் இம்மீனை அதிகளவில் உட்கொள்ள வேண்டுமெனவும் அவர் கோரினார்.

TBCUK

வேகமாகச் செயற்படும் தமிழரசு உண்மையில் சூரை மீன் சாப்பிட்டு இருக்கின்றார் :D

வாத்தியார் உங்களுக்கு பச்சை விருப்பு புள்ளி குத்த வேண்டும் என்னிடம் முடிந்தமையால் நாளை வந்து குத்துவேன் 

  • கருத்துக்கள உறவுகள்

பச்சையெல்லாம் வேண்டாம் ஒரு சூரை மீனைப் பச்சையாகப் பொதியில் அனுப்பிவிடவும் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சையெல்லாம் வேண்டாம் ஒரு சூரை மீனைப் பச்சையாகப் பொதியில் அனுப்பிவிடவும் :D

சும்மா பேச்சுக்கு சொல்லவில்லை வாத்தியார் உண்மையாகத்தான் சொல்கின்றேன்  :)
 
சூரை மீன்தானே அனுப்பினால் போச்சு  :D

karaitivu_02.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பொண்ணு கல்யாணம் கட்டீட்டுதோ எண்டு கேட்டு சொல்லட்டாம் சுண்டல்..என்னமாதிரி..? :D

அந்தப் பொண்ணு பாவம் :(

சும்மா பேச்சுக்கு சொல்லவில்லை வாத்தியார் உண்மையாகத்தான் சொல்கின்றேன்  :)
 
சூரை மீன்தானே அனுப்பினால் போச்சு  :D

karaitivu_02.jpg

இந்தப் படத்தை பார்த்தால் மீன் சாப்பிட மனசே வராது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.