Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்சீம் கோர்க்கியின் "தாய்" நாவலிலிருந்து...

(முதலாம் பாகம் அத்தியாயம் 24)

"இது எனக்குப் புரியவே மாட்டேனென்கிறது!"

"எது?" என்று கேட்டான் ஹஹோல்.

" நாம் உணவுக்காகக் கால்நடைகளைக் கொல்கிறோம். அதுவே மோசம். காட்டு மிருகங்களால் ஆபத்து வருமென்று தெரிந்தால் அவற்றையும் நாம் கொன்று தீர்கிறோம். அது சரிதான். அது எனக்குப் புரிகிறது. ஒரு மனிதன் தன்னுடைய சகமனிதர்கள் மீது காட்டு மிருகத்தைப்போல் பாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால், அவனை நாம் மிருகத்தைக் கொல்வதுபோல் கொன்று தீர்க்கத்தான் செய்வேன். ஆனால் இவனை மாதிரி அனுதாபத்திற்குரிய ஒரு ஜந்துவைத் தீர்த்துக் கட்டுவெதென்றால்? இவனை எப்படித்தான் ஒருவன் தாக்க நினைப்பான்?"

ஹஹோல் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

"இவனும் காட்டு மிருகத்தைப் போல மோசமானவாந்தான்" என்றான் ஹஹோல். " நாம் கொசுவை எதற்காகக் கொல்கிறோம்? நம்முடைய உடம்பிலிருந்து அது ஒரு துளி ரத்தத்தை உறிஞ்சிவிட்டது என்பதற்குத்தானே!"

"அது உண்மைதான். நான் அதைச் சொல்லவில்லை. அது எவ்வளவு அருவருப்புத் தரும் விஷயம் என்பதைத்தான் குறிப்பிட்டேன்.".

"வேறு வழியில்லை" என்று அந்திரேய் மீண்டும் தன் தோளைக் குலுக்கிவிட்டுச் சொன்னான்.

"அந்த மாதிரி ஜந்துவை நீ கொல்லுவாயா?" என்று சிறிது நேரம் கழித்துக் கேட்டான் பாவெல்.

ஹஹோல் தனது அகன்ற கண்களால் பாவெலையே வெறித்துப் பார்த்தான். பிறகு தாயின் பக்கம் திடீரெனத் தன் பார்வையைத் திருப்பினான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நம்முடைய கொள்கையின் நலத்துக்காகவும், என்னுடைய தோழர்களின் நலத்துக்காகவும் நான் எதையுமே செய்வேன்" என்று துக்கமும் உறுதியும் தோய்ந்த குரலில் சொன்னான் அந்திரேய்; "அதற்காக, நான் என் சொந்த மகனைக்கூடக் கொல்லுவேன்!"

"ஆ! அந்திரியூஷா!" என்று திகத்துப்போய் வாய்க்குள் முணுமுணுத்தாள் தாய்.

"வேறு வழியில்லை, அம்மா" என்று கூறி அவன் புன்னகை புரிந்தான்; "நமது வாழ்க்கை அப்படிப்பட்டது!"

"நீ சொல்வது சரி. வாழ்க்கை அப்படிப்பட்டதுதான்!" என்றான் பாவெல்.

இதயத்துக்குள்ளே ஏதோ ஒன்று தட்டியெழுப்பியமாதிரித் திடீரென உத்வேக ஆவேசத்தோடு துள்ளியெழுந்தான் ஹஹோல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்று கைகளை ஆட்டிக்கொண்டே சத்தமிட்டன் ஹஹோல். "மக்கள் இனத்தை நாம் அனைவரும் மன்ப்பூர்வமாக ஒருவருக்கொருவர் நேசிக்கப்போகும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்காக, நாம் சிலரைப் பகைத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. நம்முடைய முன்னேற்றப் பாதையில் முட்டுக்கட்டை போடுபவர்களை நாம் துடைத்துத் தீர்த்து விடத்தான் வேண்டும். தனக்குச் சுகவாழ்வும் பெயரும் கிட்டவேண்டும் என்பதற்காக, எவனொருவன் பணத்தை வாங்கிக்கொண்டு, மக்களை விலைக்குக் காட்டிக் கொடுகிறானோ, அவனை நாம் அழித்துத்தான் தீர வேண்டும். நேர்மையான மனிதர்களின் மார்க்கத்தை எவனாவது ஒரு யூதாஸ்* வழிமறித்தால், அவர்களைக் காட்டிக் கொடுப்பதாகச் சந்தர்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தால், அவனை ஒழித்துக்கட்டத்தான் நான் முனைவேன்! அவனை ஒழித்துக் கட்டாவிட்டால், நானும் ஒரு யூதாஸ் மாதிரியே ஆகிவிடுவேன்! அப்படிச் செய்ய எனக்கு உரிமை கிடையாது என்கிறாயா? ஆனால் நம்மை அடக்கியாளுகிறார்களே, நமது முதலாளிகள், - அவர்களுக்கு மட்டும் உரிமை இருக்கிறதா? படை பலத்டையும் கொலையாளிகளையும் வைத்திருக்க, சிறைக்கூடங்களையும், விபசார விடுதிகளையும், நாடு கடத்தும் இடங்களையும் வைத்திருக்க, தங்களது சுக போகத்தையும் பாதுகாப்பையும் அரணிட்டுப் பாதுகாக்கும் சகல விதமான கொலைச் சாதனங்களையும் வைத்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது? சில சமயங்களில் அவர்களது ஆயுதத்தையே பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தச் சங்கடத்திற்கு நான் ஆளானேன் என்றால் அது என்னுடைய தவறா? என்னுடய குற்றமா? இல்லை. நானும் அதை உபயோகிப்பேன். அவர்கள் நம்மை நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தால் நானும் சும்மாயிருக்க மாட்டேன். நானும் என் கையை ஓங்குவேன். அந்த உரிமை எனக்கு உண்டு... அவர்களில் ஒருவரையேனும் நான் ஒரே போடாய்ப் போட்டுக் கொல்லுவேன். எனக்குச் சமீபமாக வரும் பகைவனின் தலையை நான் நொறுக்கத்தான் செய்வேன். மற்றவர்களை விட, எனது வாழ்க்கை லட்சியத்திற்கு அதிக தீங்கிழைக்க முனையும் அந்தப் பகைவனை நான் அறையத்தான் செய்வேன். வாழ்க்கை அப்படி அமைந்து கிடக்கிறது. ஆனால் அந்த மாதிரி வாழ்க்கையை நான் விரோதிக்கத்தான் செய்கிறேன்; அந்த மாதிரி இருப்பதற்கு நான் விரும்பவும்தான் இல்லை. அவர்களது ரத்தத்தால் எந்த விதப் பயனும் விளைந்துவிடப் போவதில்லை; அது வெறும் விருதா ரத்தம், விளைவற்ற ரத்தம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நமது ரத்தம் மட்டும் பூமியில் மழை மாதிரி பொழிந்து கொட்டுமேயானால், நாம் சிந்திய ரத்தத்திலிருந்து உண்மை பிறக்கு; சத்தியம் அவதாரம் செய்யும்! ஆனால் அவர்களது நாற்றம் பிடித்த ரத்தமோ எந்த வித மச்ச அடையாள மருக்கள் ஏதுமின்றி மண்ணோடு மண்ணாய் மறைந்து மக்கிப் போய்விடும்! எனக்கு அது தெரியும். இருந்தாலும் இந்தப் பாபத்தை நான் என் தலையில் ஏற்றுக் கொள்கிறேன். கொலை செய்துதான் ஆக வேண்டுமென்றிருந்தால், நான் கொல்லத்தான் செய்வேன். ஞாபகம் இருக்கட்டும்! நான் எனக்காகத்தான் பேசிக்கொள்கிறேன். எனது பாபம் என்னுடனேயே சாகும். அந்தப் பாபம் எதிர்காலத்தில் கறைபடியச் செய்யாமல் தொலையும்! அந்தப் பாபம் என்னைத் தவிர, வேறு எவரையும், வேறு எந்த ஆத்மாவையும் கறைபடுத்தாது மறைந்து மாயும்!"

* யூதாஸ் - ஏசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்தவன், அவரோடு கூட இருந்து துரோகம் செய்தவன்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நானும் அந்த நாவல் படித்திருக்கிறென் அருமையான ஒரு நாவல் இரஸ்ய புரட்சியின் ஆரம்ப கால கட்டங்களை நன்றாக விபரிக்கும் ஒரு நாவல் ஆனால் 600 பக்கம் கொண்ட நாவலை இங்கு எப்பிடி எழுதி முடிக்க பொறீர் எண்டது தான் என்ரை கவலை நல்ல ஒரு முயற்சி பாராட்டுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முழுப் புத்தகத்தையும் எழுதும் நோக்கம் இல்லை (2 பக்கம் தட்டச்சு செய்யவே அதிக நேரம் எடுக்கிறது, இதில் 600 பக்கமா :shock: ). பிடித்த பகுதிகளை மாத்திரம் பகிர்ந்து கொண்டேன்/கொள்வேன்.

நன்றிகள் கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றியண்ணா.....நல்ல விசயங்கள போடுறிங்க.......

முழுப் புத்தகத்தையும் எழுதும் நோக்கம் இல்லை (2 பக்கம் தட்டச்சு செய்யவே அதிக நேரம் எடுக்கிறது, இதில் 600 பக்கமா :shock: ). பிடித்த பகுதிகளை மாத்திரம் பகிர்ந்து கொண்டேன்/கொள்வேன்.

சரி சரி உங்களுக்கு பிடிச்சதை பொட்டுட்டு நேரம் இருந்தால் மிச்சத்தையும் போடுங்கோவன் ;)

நன்றி இணைப்புக்கு :lol:

காலத்திற்கு ஏற்ற பதிவு.இன்று கொலைகள் பற்றி சிலர் புனிதர்களாகக் கூக்குரல் இடும் நேரம் ஏன் எதற்கு என்பதை நாவலின் அந்தப் பகுதிகள் சொல்கின்றன.

இது நான் பத்தாம் வகுப்பில படிக்கேக்க வாசிச்ச நாவல்.

உந்த ரசிய நாவல்கள் கனக்க வாசிச்சனான் அப்ப ,

சண்டையும் சமாதானமும், பிறகு இன்னொண்டு பேர் மறந்து போச்சுது தந்தையரும் தனயருமா?

உதில வாற சைபிரிய ஸ்டெப்பி வெளிகளின் பசுமை இன்னும் நாபகத்தில இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி உங்களுக்கு பிடிச்சதை பொட்டுட்டு நேரம் இருந்தால் மிச்சத்தையும் போடுங்கோவன் ;)

நன்றி இணைப்புக்கு :lol:

சின்னனில படித்தாப் பிறகு திரும்பவும் படிக்கிறேன் (சொந்தமாக வாங்கித்தான்). பல விடயங்கள் இப்போது மிகவும் தெளிவாக விளங்குகின்றன. நீங்களும் கட்டாயம் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். :)

சின்னனில படித்தாப் பிறகு திரும்பவும் படிக்கிறேன் (சொந்தமாக வாங்கித்தான்). பல விடயங்கள் இப்போது மிகவும் தெளிவாக விளங்குகின்றன. நீங்களும் கட்டாயம் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். :)

ஆஆகா சொந்தமாக வேண்டிப் படிக்கிறீங்களா?? :shock:

நான் பாடப் புத்தகமே சொந்தமாக வேண்டிப் படிக்கிறது இல்லை. :oops: சரி சரி அது எல்லாம் என்னத்துக்கு இப்ப வாசிகசாலைல தேடிப்பார்ப்பம் இல்லாட்டி வேண்டுவம் ;) :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய் நாவல் பற்றிய எனது கண்ணோட்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச இலக்கிய கர்த்தாக்களுள் சோவியத் ஒன்றிய படைப்பாளி மாக்சீம் கோர்க்கியின் அனைத்து படைப்புகளும் பிரசித்தமானவை அதிலும் தாய் நாவல் உலகத்தின் பல மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு பல வாசகர்களை உள்வாங்கிக் கொண்டுள்ளது, புரட்சிகரப் போராட்டத்துக்கு உந்துகோலாக அமைந்த வர்க்கப் போராட்ட நாவலிது, ஒரு பெண் போராளியை முதலில் அறிமுகப்படுத்திய பெருமை இதனைச் சார்ந்ததாகும். முதன்முதலில் ப.இராமசாமி தமிழில் தாயை மொழி பெயர்த்து வெளியிட்டார், இதன்பின் தொ.மு.சி.ரகுநாதன்... என வரிசை தொடர்ந்தது, தற்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கவிதை நடையில் தாய் நாவலை பதிவு செய்திருந்தார், தமிழில் இருநூறாயிரம் பிரதிகளை தாய் கொண்டுள்ளது என்றால் அதில்மிகை இல்லை. 1930ம் ஆண்டிலேயே தமிழில் தாக்கத்தை ஏற்படுத்திய இந் நூலானது வாசிக்க வாசிக்க விறுவிறுப்பை ஏற்படுத்தும், ஈழ விடுதலைப் போராட்டத்தில் கால் நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இளைஞர்களிடமிருந்த சிவப்பு அட்டைப் புத்தகங்களுள் தாய் நாவலும் இடம் பிடித்திருந்ததென்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் தமிழீழத்தின் பரப்பில் புனர்வாழ்வு பெற்று தாய் வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மார்க்சீம் கோர்க்கியின் "தாய்" நாவலிலிருந்து...

(முதலாம் பாகம் அத்தியாயம் 20)

"இது இருக்கிறதே, இது ஒரு குழந்தை நோய் மாதிரி; மணல்வாரி நோய் மாதிரி. நம் எல்லோருக்குமே இந்த நோய் என்றாவது ஒருநாள் வந்துதான் தீரும். பலமுள்ளவனை அது அவ்வளவாகப் பாதிக்காது; பலமில்லாதவனை மோசமாகவும் பாதிக்கக்கூடும். இந்த நோய் எப்போது பற்றும் தெரியுமா? நம்மை நாமே உணர்ந்துகொள்ள முனையும் சமயம் பார்த்து, எனினும் வாழ்க்கையைப் பரிபூரணமாக உணர்ந்து கொள்ளாமல், அதில் நமக்குரிய இடத்தை உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்ற குறைப்பக்குவ சமயம் பார்த்து, நம்மை வந்து பற்றிக்கொண்டுவிடும். நீதான் உலகத்திலேயே உயர்ந்த ரகச் சரக்கு என்றும், எனவே ஒவ்வொருவரும் உன்னைக் கடித்துத் தின்னவே பார்க்கிறார்கள் என்றும் உனக்குத் தோன்றும். ஆனால் கொஞ்ச காலம் போனால், எல்லோருடைய இதயங்களும் உன் இதயத்தைப் போலவேதான் இருக்கின்றன என்ற உண்மையை நீ உணர்ந்து கொள்வாய். உணர்ந்தபின் உன் மனம் ஓரளவு சமாதானம் அடையும்.

கூப்பிடு தூரத்துக்குக்கூட ஒலிக்காத உனது சின்னஞ் சிறு மணியைக் கோபுரத்தின் உச்சியிலே கொண்டுகட்டி ஊரெல்லாம் ஒலிக்கச் செய்ய விரும்பிய உனது அறியாமையைக் கண்டு நீயே நாணம் அடைவாய். உனது மணியைப் போன்ற பல்வேறு சிறு மணிகளின் சம்மேளனத்தோடுதான் உனது மணியோசையும் ஒன்றுபட்டு ஒலிக்க முடியும் என்பதை நீ உணர்வாய். நீ மட்டும் தன்னந் தனியே ஒலி செய்ய விரும்பினால், கோபுரத்தின் கண்டாமணியின் ஒலி உன் மணியோசையை மூழ்கடித்து விழுங்கிவிடும். எண்ணெய்ச் சட்டியில் வீழ்ந்த ஈயைப்போல் உனது குரல் கிறுகிறுத்து வெளிக்குத் தெரியாமல் தனக்குத்தானே ஒலித்துக் கொண்டிருக்கும். நான் சொல்வது உனக்குப் புரிகிறதா?"

என்ன கிருபன் உது வாசித்துக் கொண்டு போகும் போது வந்ததா இல்லை தேடி எடுத்ததா?, அப்படியே அச்சொட்டாகப் பொருந்துகிறதே?

கிருபன் விமர்சனத்திற்கு நன்றிகள்.

தேடி வாசிக்க வேண்டும் போல் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கிருபன் உது வாசித்துக் கொண்டு போகும் போது வந்ததா இல்லை தேடி எடுத்ததா?, அப்படியே அச்சொட்டாகப் பொருந்துகிறதே?

வாசித்தபோது அடையாளமிட்டு வைத்திருந்தேன். தற்போது உதவியது.. :lol:

  • 6 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவன் தாயின் கரத்தை எடுத்து இறுகப் பிடித்து அழுத்தினான்.

 

அவன் அன்போடு 'அம்மா' என்று அழைத்த சொல்லாலும், அவளது கரத்தை இதுவரை இல்லாத இனிய வாஞ்சையோடு அழுத்திப் பிடித்ததால் ஏற்பட்ட சுக உணர்ச்சியாலும் அவள் மெய்மறந்து போய்விட்டாள்.

 

"சரி, நான் இதில் தலையிடவில்லை" என்று தட்டுத் தடுமாறிச் சொன்னாள் அவள். "நீ மட்டும் உன்னை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளப்பா, ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்". தனது மகனுக்கு எந்தவிதமான ஆபத்துக் காத்து நிற்கிறது என்பதை அறியமுடியாமல், மீண்டும் அவள் வருத்தத்தோடு சொன்னாள்: " நீ நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வருகிறாய்!"

 

அவனது நெடிய பலம்பொருந்திய உருவத்தை அவள் அன்போடு ஏற இறங்கப் பார்த்துக்கொண்டாள்.

 

"உன் இஷ்டப்படியே நீ வாழப்பா. அதெல்லாம் நான் தலையிடக் கூடிய விவகாரம் இல்ல்லை. நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். நீ மற்ற மனிதர்களோடு பேசும்போது இவ்வளவு தீவிரமாகப் பேசாதே. மனிதர்களைப் பற்றிய பயம் எப்போதும் இருக்கவேண்டும்; அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள்; பேராசையிலும் பொறாமையாலுமே வாழ்கிறார்கள். அடுத்தவனைத் துன்புறுத்துவதில் ஆனந்தம் கொள்கிறார்கள். நீ அதை எடுத்துக்காட்டி, அவர்களைக் குறை கூறத் தொடங்கினால், உடனே அவர்கள் உன்னையும் பகைப்பார்கள். உன்னை அழித்தே விடுவார்கள்".

 

அவளது சோகமயமான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு அவளது மகன் வாசல்படியருகே நின்றான். அவள் பேசி முடித்ததும் அவன் லேசாக நகைத்தான்.

 

"நீ சொல்வது சரிதான்; மனிதர்கள் கெட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்" என்றான் அவன். "ஆனால் உலகத்தில் நியாயம் என்று ஒன்று இருப்பதாக நான் அறிந்து கொண்டேனே, அதைப் பார்க்கும்போது இந்த மனிதர்கள் எவ்வளவோ தேவலை!" மீண்டும் அவன் நகைத்தான்; பிறகு சொன்னான்: "இதெல்லாம் எப்படி ஏற்பட்டது என்று எனக்கே தெரியாது. சிறு பிள்ளையாயிருக்கும்போது நான் யாரைக் கண்டாலும் பயப்படுவேன். பெரியவனான பிறகு, எவரைக் கண்டாலும் வெறுக்கவே செய்தேன். சிலரை அவர்களைது படுமோசத்தனத்தைக் கண்டு வெறுத்தேன். ஆனால் மற்றவர்களை? அது ஏன் என்று எனக்கே தெரியாது; என்னவோ வெறுக்க வேண்டும் என்பதற்காக வெறுத்தேன். ஆனால் இப்போதோ எல்லாம் எனக்கு வேறுபட்டுத் தோன்றுகிறது. இது நான் மனிதர்களுக்காக அனுதாபப்படுவதால் ஏற்பட்டிருக்கக்கூடும். எப்படியானாலும், மனிதர்கள் மோசமாக நடந்து கொள்வதற்கு எல்லா மனிதர்களும் காரணம் அல்ல என்பதை நான் உணர்ந்து கொண்டதால், என் இதயம் நெகிழ்ச்சியுற்று விட்டது....".

 

அவன் பேசுவதை நிறுத்திவிட்டு, தன் இதயத்துக்குள் கேட்கும் ஏதோ ஒரு குரலைக் கேட்பதுபோல நின்றான். பிறகு அமைதியும்  சிந்தனையும் நிறைந்தவாறு அவன் சொன்னான்:

"எனவே,  - உனக்கு நான் சொல்ல விரும்பிய உண்மை இதுதான்!"

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாசித்தேன் கிருபன். எனக்கு இன்னும் மனதில் நிற்கும் நாவல்களில் ஒன்று அது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.