Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வழக்குகள் மூலம் உலகை உலுப்புங்கள்: வடக்கு மக்களுக்கு சுமந்திரன் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2071885653DS33.jpg

வழக்குகள் மூலம் உலகை உலுப்புங்கள்: வடக்கு மக்களுக்கு சுமந்திரன் அழைப்பு

அரசாங்கம் பத்து வருடங்களாக உயர் நீதிமன்றத்தை ஏமாற்றி அதனை எவ்விதம் நடத்துகின்றது என்பது உங்களுக்கு தெரியாத விடயமல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இன்று (29) காலை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார் 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

நாம் சமாதனமான சூழ்நிலையில் போகவேண்டிய நிலையில் உள்ளோம். இன்றைக்கு நாங்கள் போராடுகின்ற முறைமைகளில் மாற்றங்கள் தேவை. இலங்கையில் உள்ள நீதிமன்றங்களை நிரப்பிய பின்னரே நாங்கள் சர்வதேச அரங்குக்கு செல்ல முடியும். 

ஆகையினாலே நீதிமன்றத்தை நம்பி நாங்கள் வழக்கு தாக்கல; செய்யவில்லை. அரசாங்கம் 10 வருடங்களாக உயர் நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளது. அவர்கள் உயர் நீதிமன்றத்தை எந்தவிதமாக நடத்துகின்றது என்பது உங்களுக்கு தெரியாத விடயமல்ல ஆனாலும் சட்டத்தின் படி செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். 

இன்னும் மீள் குடியேற்றப்பட வேண்டிய 9,900 குடும்பங்கள் இருக்கின்றன. இதில் 5 ஆயிரம் குடும்பம் ஆவது வழக்கு தாக்கல் செய்ய முன் வருவீர்களானால் எதிர்வரும் 2 ம் திகதி இலங்கையில் 5 ஆயிரம் பேர் வழக்கு தாக்கல் செய்தார்கள் என்ற ஒரு செய்தி வருமேயானால் அது உலகத்தை உலுப்புகின்ற ஒரு செய்தியாக இருக்கும். 

அதன் பின்னர் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக இருந்தாலோ தொடர் போராட்டங்களை நடாத்துவதாக இருந்தாலோ இந்த தடைகளை மீறி செல்வதாக இருந்தாலோ நாங்கள் முன்னின்று நடாத்துவோம். 

 
http://www.adaderana.lk/tamil/news.php?nid=38361

 

மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என இந்த நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நாங்கள் வழக்கு தாக்கல் செய்வோம் என தெரிவித்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தை இப்படியான செயல்கள் ஒன்றுமே உலுப்பப் போவதில்லை!

 

வீடுகளை இழந்து, கொதித்துப்போயிருக்கும் சனம், வேறு ஒன்றுமே செய்து போடக்கூடாது என்பதில், சுமந்திரன் கவனமாக இருக்கிறார்!

 

மாவை, இதை விட இன்னுமொரு படி மேலே போய்க், காணிகளையே போய்ப் பார்க்கவேணாம் என்று சொல்லுறார்!

 

தமிழனுக்கும், தனது தலைவிதியை நொந்து கொள்வதைத் தவிர, வேறு வழியேதும் இப்போதைக்கு இல்லை! :o

சுமந்திரன் சட்டத்தரணி என்ற முறையில் தனது போராட்ட வடிவத்தை கூறியுள்ளார்.அது சிறப்பான போராட்டம் என்து அவரின் கருத்து. சிலவேளை அதில் குறைகள் இருக்கலாம். ஆனால் அவரின் போராட்ட வடிவத்தில் உள்ள குறைபாடுகளை கூறி அவரின் திட்டத்தில் உங்கள் திருத்தங்களை முன்வைத்து அல்லது தகுந்த காரணங்களை கூறி அவரின் திட்டத்தை நிராகரித்து,  புதிய போராட்டம் என்ன வகையில் அமைய வேண்டும் என்று  கூறுவதே நியாயமானது. அதைவிட்டு வெறுமனே  அவரை குற்றம் சாட்டுவது நியாயமாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் மகேஸ்வரியும்.. 1995 சூரியக்கதிர் ஆக்கிரமிப்பின் பின்.. வழக்குகள் மூலம் போராட்டம் நடத்தி பொடியளை பிடிக்கிறதும்.. அப்புறம் எடுத்து விடுறதும்.. அப்புறம் பிடிக்கப் பண்ணுறதும் என்று காசு பார்த்தவா..!

 

சிறீலங்காவின் நீதித்துறை மீது சிங்களவர்களே நல்ல அபிப்பிராயம் இன்றி இருக்கிற இந்த நிலையில்.. சுமந்திரன்.. அந்தத் துறையூடாக என்னத்தை வெட்டி விழுத்தக் கேட்கிறார். ஏலவே சிறீலங்கா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்களையே நிறைவேற்றாமல்.. இராணுவ இருப்பை விஸ்தரித்து... இராணுவ நிர்வாகத்தை நிலைநாட்டி.. மீண்டும் மீண்டும் காணிகளை அபகரிக்கின்ற நிலையில்.. மீண்டும்.. வழக்குகள் மூலம் போராட்டம் என்பது எப்படி உலகை உலுப்பும்.. அல்லது தமிழ் மக்களுக்கு நன்மை ஆகும்.. (சட்டத்தரணிகளுக்கு நன்மை.. காசு பார்ப்பினம்... சிறீலங்காவிற்கு நன்மை.. தனது நீதித்துறை மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைச்சிருக்கினம் என்று உலகிற்கு காட்ட.. இன ஐக்கியம்.. ஐக்கிய இலங்கையை தமிழ் மக்கள் விரும்பினம் என்று சொல்ல நல்ல வாய்ப்பா இருக்கும்..!) என்பதை மிஸ்டர் சுமந்திரன் விளக்குவாரா..????!

 

இவையும் மகிந்தவின் தெரிவுக்குழு போலத்தான் பல்வேறு சாட்டுக்களைச் சொல்லிக்கொண்டு காலத்தைக் கடத்தினம். இந்த உலகை இரண்டு விடயங்கள் தான் உலுக்க முடியும்..

 

1. குண்டு வெடிப்புகள்...!

 

2. தீவிரவாதம்..!

 

மற்ற எந்த மொழியும் ஆட்சியாளர்களுக்கு விளங்கப் போறதில்லை..! அவற்றை விளங்கிற அளவிற்கு அவர்களும் தயாராக இல்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் பேசக்கூடிய தகைமையில் இருப்பவர் என நினைக்கிறேன்.. சிங்கள அரசைப் பற்றிய முறைப்பாடுகளில் உள்ளூர் நீதிமன்றங்களை நாடி உங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முதலில் முயற்சி செய்யுங்கள் என்று அவர்கள் சொல்லியிருப்பார்கள்..! வரலாற்றை எடுத்துச் சொல்வதற்கு இவரிடம் போதிய அளவு நிறுவத் தகுந்த ஆதாரங்கள் இருந்திருக்காமல் போயிருக்கலாம். அதனால் இப்போது மக்களிடம் வந்து சொல்கிறார் என நினைக்கிறேன்.. :rolleyes::D

ஐயா நீங்கள் கூறுவது ஒரு வகையில் சரியானதே அத்தோடு இவ்வழி மட்டுமே எமக்கு எஞ்சியிருக்கிறது ஆனால் இப்படி வழக்குத்தாக்கல் செய்வதால் எமக்கு எந்த நீதியும் கிடைத்துவிடப்போவதில்லை என்பதையும் நாம் அறிவோம்.  உயர் நீதிமன்றமே இன்று அரசாங்கத்தின் காலடியில் இதற்குமேல் என்ன செய்யமுடியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நீங்கள் கூறுவது ஒரு வகையில் சரியானதே அத்தோடு இவ்வழி மட்டுமே எமக்கு எஞ்சியிருக்கிறது ஆனால் இப்படி வழக்குத்தாக்கல் செய்வதால் எமக்கு எந்த நீதியும் கிடைத்துவிடப்போவதில்லை என்பதையும் நாம் அறிவோம்.  உயர் நீதிமன்றமே இன்று அரசாங்கத்தின் காலடியில் இதற்குமேல் என்ன செய்யமுடியும்.

 

உண்மைதான்..

 

ஆனால் சர்வதேசத்தின்.. குறிப்பாக மேற்குலகின் நிலைப்பாடு என்னவென்றால் மகிந்தர் ஆட்சியில்தான் (ஷிராணி விவகாரம்) நீதித்துறைக்கு பங்கம் ஏற்பட்டுவிட்டது என்பதாகும். இதற்கு முன்னர் நீதிமன்றங்களால் அநீதி இழைக்கப்பட்டது என்பதை நிறுவுவது ஏறக்குறைய இயலாத காரியம். அப்படி எம்மால் நிறுவக்கூடியதாக இருந்திருந்தால் இன்று இயக்கத்திற்கு உள்ள தடை என்பதே மேற்குலகில் இருந்திருக்க முடியாது. :rolleyes:

 

அதனால் இப்போது கொக்கு தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கப்போகிறோம்.. :icon_idea:

யாழ்  இணையத்தில் சிலர்   சம்பந்தர் ,சுமந்திரன் ,மாவை பற்றி 

விமர்சிப்பர்களே தவிர உருப்படியாக  ஒன்றும் செய்யமாட்டார்கள் .

 

இப்படித்தான் மகேஸ்வரியும்.. 1995 சூரியக்கதிர் ஆக்கிரமிப்பின் பின்.. வழக்குகள் மூலம் போராட்டம் நடத்தி பொடியளை பிடிக்கிறதும்.. அப்புறம் எடுத்து விடுறதும்.. அப்புறம் பிடிக்கப் பண்ணுறதும் என்று காசு பார்த்தவா..!

 

சிறீலங்காவின் நீதித்துறை மீது சிங்களவர்களே நல்ல அபிப்பிராயம் இன்றி இருக்கிற இந்த நிலையில்.. சுமந்திரன்.. அந்தத் துறையூடாக என்னத்தை வெட்டி விழுத்தக் கேட்கிறார். ஏலவே சிறீலங்கா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்களையே நிறைவேற்றாமல்.. இராணுவ இருப்பை விஸ்தரித்து... இராணுவ நிர்வாகத்தை நிலைநாட்டி.. மீண்டும் மீண்டும் காணிகளை அபகரிக்கின்ற நிலையில்.. மீண்டும்.. வழக்குகள் மூலம் போராட்டம் என்பது எப்படி உலகை உலுப்பும்.. அல்லது தமிழ் மக்களுக்கு நன்மை ஆகும்.. (சட்டத்தரணிகளுக்கு நன்மை.. காசு பார்ப்பினம்... சிறீலங்காவிற்கு நன்மை.. தனது நீதித்துறை மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைச்சிருக்கினம் என்று உலகிற்கு காட்ட.. இன ஐக்கியம்.. ஐக்கிய இலங்கையை தமிழ் மக்கள் விரும்பினம் என்று சொல்ல நல்ல வாய்ப்பா இருக்கும்..!) என்பதை மிஸ்டர் சுமந்திரன் விளக்குவாரா..????!

 

இவையும் மகிந்தவின் தெரிவுக்குழு போலத்தான் பல்வேறு சாட்டுக்களைச் சொல்லிக்கொண்டு காலத்தைக் கடத்தினம். இந்த உலகை இரண்டு விடயங்கள் தான் உலுக்க முடியும்..

 

1. குண்டு வெடிப்புகள்...!

 

2. தீவிரவாதம்..!

 

மற்ற எந்த மொழியும் ஆட்சியாளர்களுக்கு விளங்கப் போறதில்லை..! அவற்றை விளங்கிற அளவிற்கு அவர்களும் தயாராக இல்லை..! :icon_idea:

குண்டுவெடிப்புகள் ,தீவிரவாதம் முலம் nedukkalapoovan புதிய போராட்டத்தை 

ஆரம்பித்து மக்களுக்கு காணிகளை பெற்று கொடுகபோகின்றார் .
ஐயா சுமந்திரனே உங்கள் போராட்டத்தை நிறுத்துங்கள் .
  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்  இணையத்தில் சிலர்   சம்பந்தர் ,சுமந்திரன் ,மாவை பற்றி 

விமர்சிப்பர்களே தவிர உருப்படியாக  ஒன்றும் செய்யமாட்டார்கள் .

 

நீங்கள் கூறுவது சரி என்றே எடுத்துக்கொண்டாலும், சுமந்திரன், தமிழ் மக்களைப் பிரதிநிதிப் படுத்துவதாக நான் என்றுமே கருதியதில்லை! இவர் ஒரு நியமன எம்.பி.யாவார்! 

 

சில மனிதர்களின், கடந்தகாலச் செயற்பாடுகளிலிலிருந்து,அவர்களது வருங்கால நடவடிக்கைகளை எதிர்வு கூறமுடியும்!

 

நீங்கள், சிலர் என்று சுட்டுவிரல்களை, நீட்டுவதை விட்டு, அவர்களின் கருத்துக்களுக்குப் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்! :D

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

 

குண்டுவெடிப்புகள் ,தீவிரவாதம் முலம் nedukkalapoovan புதிய போராட்டத்தை 

ஆரம்பித்து மக்களுக்கு காணிகளை பெற்று கொடுகபோகின்றார் .
ஐயா சுமந்திரனே உங்கள் போராட்டத்தை நிறுத்துங்கள் .

 

 

சுமந்திரன் தாராளமாகப் போராட்டத்தை நிறுத்திட்டு பின்கதவால.. வந்த வழியில் வீட்டுக்குப் போகலாம். அவர் அங்க ஒன்றும் வெட்டி விழுத்தல்ல. மாறாக.. தெற்கிற்கும் வடக்கிற்கும் பாலம் போடுறதைத் தவிர..! உந்தப் பாலம் போடுறது எல்லாம் எனி வேர்க்கவுட் ஆகாது.

 

சிறீலங்காவின் நீதித்துறை மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து பல தசாப்தங்கள் கடந்தாயிற்று. சிறைகளில் எந்த விசாரணைகளும் இன்றி தடுப்பில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதனையுமே செய்ய வக்கற்றவர்கள்.. ஆயுதம்.. வெடிகுண்டு தரித்த இராணுவ இயந்திரத்தை ஏவி சிங்களம் தமிழர் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பதை வழக்குகளால் சர்வதேசத்தை உலுப்பி வெல்லலாம் என்பது வெறும் கோசமாக இருக்க முடியுமே தவிர.. மக்களின் தேவைகள்.. இதன் மூலம்..வெல்லப்பட முடியாது என்பதே யதார்த்தம் ஆகும்.

 

ஆம்.. குண்டுவெடிப்புக்கும்.. தீவிரவாதத்திற்கும் மதிப்பளிக்கும் அளவிற்கு இன்றைய உலக ஆட்சியாளர்கள் நீதிக்கும் மக்களின் குரலுக்கும் உரிமைக்கும் மதிப்பளிப்பதில்லை..! அந்த வகையில்.. மக்கள் மாற்றி யோசிக்க வேண்டிய நிலையிலும் இருக்கவே செய்வர்..! குறிப்பாக முன்னாள் போராளி அமைப்புக்கள்.. இப்போதாவது மக்களுக்கு நன்மை செய்ய விரும்பினால்.. (அதாவது ஒட்டுக்குழு நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட்டு) ஒன்றை வலியுறுத்தலாம்...

 

இந்திய - இலங்கை உடன்படிக்கையின் கீழ் நாங்கள் ஜனநாயக நீரோட்டத்திற்குத் திரும்பினோம். ஆனால் அது உருப்படியாக எதனையும் தமிழ் மக்களுக்கு கொண்டு  வரவோ அமுல்படுத்தவோ செய்யாத  நிலை தொடர்வதோடு அன்றிருந்த பிரச்சனைகள் இன்று.. விஸ்வரூபம் எடுப்பதனால்.. எமது ஜனநாயக நீரோட்ட இணைவு அர்த்தமற்றதாகி வருகிறது.

 

இது மீண்டும் நாம் ஆக்கிரமிப்புக்களை வன்முறை ரீதியில் எதிர்க்க வகை செய்யும் என்று ஒரு தமிழீழத்திற்கான.. முன்னாள் போராளி அமைப்புக்களுக்கான கூட்டமைப்பை உருவாக்கி அண்டை நாட்டினரோடு பேசி ஒரு அறிவிப்பை விடுவது கூட நல்லது... சுமந்திரனின் இந்தக் கூச்சலை விட அது வலுவான தாக்கத்தை உண்டு பண்ணும்.

 

ஆனால் சுமந்திரன் சொல்வது போல சிறீலங்கா நீதிமன்றங்களில்.. வழக்குகளால்.. உலகை உலுப்பலாம் என்பது எந்தளவுக்கு சாத்தியப்பாடானது என்பதை அதுவும் பாதிக்கப்பட்ட மக்கள் வழக்குகளைத் தொடர உள்ள சட்ட அணுகுமுறைகள் வழிமுறைகள் தொடர்பில் சூனியமான நிலை நிலவுகின்ற இத்தருணத்தில்.. அது எவ்வளவு வலுவான வழிமுறை என்பது உணர்ப்பட முடியாத ஒன்றாகவே உள்ளது.

 

ஏலவே வலி-வடக்கு மக்கள் தொடுத்த வழக்குகள்.. முடிவை எட்டியும் தீர்ப்புக்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இராணுவ எக்காளத்தனம் மிகுந்திருக்கும் நிலையில்.. இதனை எல்லாம் உலகம் ஏனென்றும் கேட்காத நிலையில்... எனி.. எப்படி வழக்குகளால் உலகை உலுப்பிறது..??! சும்மா சவடால் பேச்சுப் பேசக் கூடாது. கூட்டமைப்பில் குந்தி இருப்பதற்காக. யதார்த்தமாகப் பேச வேண்டும். :D:icon_idea:

 

 

Edited by nedukkalapoovan

நீங்கள் கூறுவது சரி என்றே எடுத்துக்கொண்டாலும், சுமந்திரன், தமிழ் மக்களைப் பிரதிநிதிப் படுத்துவதாக நான் என்றுமே கருதியதில்லை! இவர் ஒரு நியமன எம்.பி.யாவார்! 

 

சில மனிதர்களின், கடந்தகாலச் செயற்பாடுகளிலிலிருந்து,அவர்களது வருங்கால நடவடிக்கைகளை எதிர்வு கூறமுடியும்!

 

நீங்கள், சிலர் என்று சுட்டுவிரல்களை, நீட்டுவதை விட்டு, அவர்களின் கருத்துக்களுக்குப் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்! :D

அவர்களுடைய கருத்துக்கள் ,பதில் கருத்துக்கள் எழுதக்கூடிய நிலையில் 

இருப்பதாக தெரியவில்லை .
சிலகருத்துக்கள் காழ்ப்புனர்சியில் எழுதப்படுகின்றன .

இன்றைய சூழ்நிலையில் யதார்த்தமான செயற்பாடுதான் தேவை .எல்லாநேரமும் 

 
குற்றம் குறை காண்பதை விடுத்து ,நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் அணுகி (T N A )
ஒருமித்து இயங்க முயலுங்கள் .
 
இவ்வாறான அணுகுமுறையை புலிகளில் நான் செயற்படுத்தி வெற்றியும் 
கண்டனான் .
  • கருத்துக்கள உறவுகள்

 

இவ்வாறான அணுகுமுறையை புலிகளில் நான் செயற்படுத்தி வெற்றியும் 
கண்டனான் .

 

 

அப்ப நீங்கள் தான் தேசிய தலைவரா..???! :lol: மேலும்.. நீங்கள் அடைந்த வெற்றிகளை கொஞ்சம் பட்டியலிட முடியுமா...????! :icon_idea:

 

புலி இல்லை என்ற தற்துணிவில்.. எலிகள் எல்லாம் புலி வேசம் போட வெளிக்கிடக் கூடாது. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

சுமந்திரன் வழக்குப் போடுவதால் காணிகளை திரும்பப் பெறமுடியும் என்று கூறவில்லை. குறைந்தது 5000 வழக்குகளையாவது தாக்கல் செய்யுங்கள் என்றுதான் கேட்கிறார். இது நாம் செய்யும் மனுக்கையொப்பம் போன்றதே. அதை அவர் தெளிவாக சொல்லியிருப்பதாக செய்தியை வெளிவிட்ட ஊடகம் போட்டிருக்கு.

 

சில கேள்விகளை கேட்ப்போரின் சுய நினைவு,அறிவு நிலை சம்பந்தமாக சந்தேகமாக இருக்கிறது.

அவற்றுள் சில:

1. அவர் வழக்கு போட்டு வெண்டுவிடுவாரா?

2. அவர் போராடி பெற்றுத்தந்துவிடுவாரா?

 

 

மண் அள்ளித்திட்டினால் என்ன, தாரை வார்த்து சந்தோசமாக கொடுத்தால் என்ன போகப்போவது இது மட்டுமல்ல. 

 

சர்வாதிகாரம் பற்றிய நடை முறைகள் தெரியாதவர்கள், தாங்கள் இங்கே கருத்து எழுதும் நேரத்திற்கு, அதை பற்றி கொஞ்சம் வாசித்து அறிந்து கொள்வது நல்லது.

 

இனிமேலைய காலங்களில் இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது முடியாமல் போய்விடும். கோடீஸ்வரன் காலத்தில் கிடையாத நீதிமன்ற நியாயம் இனி கிடைக்கப்போவத்தாக யாரும் கனவு காணவில்லை.

 

கணகரத்தினம் போன்று தனியே செயலாற்றுவது போராட்டங்களை 100% திசை திருப்பும் என்று கூட்டமைப்பில் சிலர் கருதுகிரார்கள்.  இந்தக் கருத்தை தனியே விவாதிக்க வேண்டுமேயல்லாமல் மற்றவற்றுடன் சேர்த்துக் குழப்பக்கூடாது. மாவையின் கருத்து இங்கே தொடர்பில்லாதது.

 

போராளிக்கட்சிகள் கூட்டமைப்புக்கு உயிர்ப்பை கொடுப்பவர்கள். தமிழரசுக்கட்சி, உள்ளேயும் வெளியேயும்  அங்கீகாரத்தை பெற்றிருப்பது.  இது ஒரு கணவன், மனைவி உறவு போன்றது ஒன்று.  சேர்த்துப் பயன்படுத்தப்பட வேண்டியது. விவாகரத்து வேதனையில் தான் போய்முடியும். கூட்டமைப்பைப் பிரித்து பதிவாதாக இந்த இரண்டு பூனைகளும் கடிபட்டுக்கொண்டு மகிந்தா என்ற குரங்கிடம் அப்பம் பங்கிடப் போகத்துடிப்பது 3 வகுப்பு குழந்தை கூட விளங்கிக்கொள்ளத்தக்க தவறு. சிங்கள அரசிடம் பதிந்தால்தான் தமிழர் ஒற்றுமையாக இருக்கலாம் என்று எந்த மானமுள்ள தமிழன் மனத்திலும் எழக்கூடாது.

 

வடமாகணத் தேர்தலின் பின்னர் தமிழரின் கையில் ஆட்சி வந்துவிடபோவதாக நாடகம் போட்டு குட்டையை குழப்புவதில் ஏமாறப்போவது போராளிகள் கட்சிகளே. இந்த தேர்தலால் எதுவும் வராது என்பது தமிழ் மக்களுக்கு தெரியும். அப்படியென்றால் இதை பகீஸ்கரிக்கலாமா என்ற கேள்விக்கும் கக்கீமே யாழ்ப்பாணம் வந்து பதில் சொல்லிவிட்டு போயிருக்கிறார். ஜனநாயக பாதையில் வாக்கு மிக மிக அவசியமானது. வடமாகணத்தேர்தலை நடத்துவிப்பவர்கள் வெளிநாடுகள். அந்த தேர்தலை பகிஸ்கரிப்பவர்களை ஜனநாயக எதிரிகளாக அவர்கள் பார்ப்பது தவிர்க்க முடியாதது.

 

த.ம.வி.பு. , EPDP  போன்றவற்றை அரசில் வைத்திருப்பது போல பழைய போராளிக்கட்சிகளை இணைக்க அரசு தயங்காது. மேலும் இவை பதிவு செய்யப்பட்டது மகிந்தா காலத்தில் அல்ல என்பது அவரின் பக்கம் சாதகமான நிலை. கூட்டமைப்பு பதியப்பட வேண்டியிருப்பது மகிந்தாவின் காலத்தில். மகிந்தா போராளிக்கட்சி கூட்டமைப்பை அங்கீரிப்பதா இல்லையா என்றதை தனக்கேற்ற மாதிரியே செய்வார். தேவைப்பட்டால் இவர்கள்  நாட்டை துண்டாக் கேட்டவர்கள் என்று 6ம் திருத்ததை ஏவிவிடுவார். அல்லது சர்வதேசத்திற்கு தான் பொது மன்னிப்புக்கொடுப்பதாக கூறிகொண்டு SLFP யுடன் இணைத்து விடுவார்.  ஆனால் சர்வதேசம் தன்ரை நிலைப்பாட்டில் அவ்வளவு இலகுவில் மாறாது. இதுவரையில் எந்த ஒரு நாடும் புலிகள் மீதான தடையை எடுக்கத் தயாரில்லை. அந்த நாடுகளில் எதுவும் எந்தப் போராளிகள் கட்சியையும் அழைத்து ஒரு பேச்சுவார்த்தையில் இறங்கப் போவதில்லை. இந்த கசப்பான உண்மையை போராளிக்கட்சிகள் உணர்ந்தால் கூட்டமைப்புக்குள் இருந்து தொர்டந்து அதற்கு தேவையான உயிர்ப்பை கொடுக்கலாம்.

 

இரண்டு பக்கமும் இதை உணர்ந்து செயல்ப்படாவிட்டால் போராட்டம் பாரிய பின்னடைவை சந்திக்க வேண்டிவரும். வலோற்காரமாக தன்னுடன் இணைத்து பேரே இல்லாமல் போராளிக்கட்சிகளை அழிக்க மகிந்தாவுக்கு 5 வருடங்கள் ஆவது தேவைப்படும்.(கணகரத்தினம் என்ற தனி மனிதனை செய்ய 2 வருடம் தான் தேவைப்பட்டது.) அதன் பின்னர் தமிழரசுக்கட்சி திரும்ப "அ" விலிருந்து தொடங்க வேண்டியிருக்கும். மகிந்தா எந்த ஒரு போராளிகள் கட்சியையும் கணகரத்தினத்தில் நிலைக்கு மேலே போகவிடமாட்டர். சிங்கமும் 4 எருதுகளும் மாதிரி தங்களை தாங்கள் அழிக்கத்தான் இவர்கள் தனியே போக வேண்டும் என்கிறார்கள். இவர்களின் இன்றைய பங்கு தாரிகள் ஆனந்த சங்கரியும், சித்தார்த்தனும் மட்டுமே. (சாதரணமாக  ஒரு கப் தேத்தண்ணிரோடு தமிழனை வாங்க முடியுமானால், இந்த இரண்டையும் ஒரு வெற்றுக்கப்பையே காட்டி மகிந்தா வாங்கிவிடுவார். அதன் பின்னர் உதய சூரியன் சின்னத்தின் போனவர்கள் தேர்தல் சட்டங்களின் படி மகிந்தாவின் கீழ்த்தான்.) சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் தனிய நின்று 9,000 வாக்குக்கள்தான் பெற்றார்.  அவர் இருந்த கூட்டமைப்பு (தமிழரசுக்கட்சி) சொல்லி அதை விட எத்தனையோ மடங்கு பெரிய தொகையை பொன்சேக்கா பெற்றர். (கூட்டமைப்பு இப்படி ஒரு அடிமைத்தனமான அலுவல் செய்த பின்னர்தான் மேற்கு நாடுகளின் அனுதாபம் கூட்டமைப்புக்கு கிடைக்க தொடங்கியது.)

 

எனவே  இனிமேல் கூட்டமைப்பின் கூட்டங்களில் போராட்ட பாதைகளை எப்படி தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் விவாதிக்கப்படவேண்டியதாக இருக்கட்டும். அதை விடுத்து திவிநெகுமவால் சில்லறையாக்கபட்டுவிட்ட 13ம் திருத்த மாகாணசபை தேர்தலில் வென்று தமிழ் மக்களுக்கு தனிநாடு அமைத்துவிடப்போவதாக மாயை ஒன்றை ஏற்படுத்தத்தக்கதாக உள்கட்சி பதவி போட்டிகளுக்கு போராளிகள் கட்சிகள் போகக்கூடாது.

 

சுதந்திரம் கிடைக்கும் வரை பதவிகள் எதுவும் பிரயோசமானதல்ல. எனவே அவற்றுக்கு அடிபடாமல் இவர்கள் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும். சுதந்திரத்தின் பின்னர்தான்  எந்த பதவியிலும் பலன் இருக்கும் அன்று அவர்கள் தமது நியாயங்களை வைத்து பிரிந்து போகலாம். தமிழ் காங்கிரஸ் விட்ட தவறுகளைவைத்துத்தான் செல்வா பிரிந்தார். பிரிய முதல் அவருக்கு கொடுக்கப்பட்ட பிரதம நீதியரசர் பதவியை உதறித்தள்ளியிருந்தார். போராளிக்கட்சிகளிடம் நியாயம் இருக்குமானால் இன்றைய பதவிகளை உதறித்தள்ளிவிட்டு சரியான நேரத்தில் தங்கள் நியாங்களை முன் வைத்தார்களானால் அது  அவர்களுக்கு சரித்திரத்தில் செல்வா மாதிரி ஒரு இடத்தை ஒதுக்கும். இல்லையேல் வெகு விரைவில் கணகரத்தினம் மாதிரி தமிழருக்கு எதிராக செயல்ப் பட ஆரம்பிப்பார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ வீட்டுக்கு பின்னாடி இருக்கும் புளியமரத்த உலுப்பிற மாதிரில சுமந்திரனோட கதை இருக்கு......

இலங்கைய பொறுத்த வரைக்கும் வழக்கும் அவனே தீர்ப்பும் அவனே......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் ம் ம் ம் ....

வைகோவும் வாரார் .... வழக்கு பேச ....

காசு இருக்கிறவைக்கு  .... சிறப்பு நீதிமன்றமும் ஏற்படுத்தி குடுக்க படுமாம் .... :lol: :lol:

எமது நிலம் எமக்கு வேண்டும்: ஒரே நாளில் 400 பேர் வழக்குதாக்கல்
புதன்கிழமை, மே 1, 2013
DSCF0631.jpg
யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் பொது மக்களின் நிலங்களை இராணுவம் கையப்படுத்த எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக பாதிகப்பட்டுள்ளவர்களின் சார்பில் ஐயாயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே நேற்றைய தினம்  தெல்லிப்பழையில் 400 குடும்பங்கள் வழக்குத்தாக்கல் செய்ய பதிவுகளை மேற்கொண்டனர்.
.
இராணுவத்தினரால்  ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்ற வலிகாமம் பகுதிக் காணிகளை விடுவித்து மக்களை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்  என வலியுறுத்தி கடந்த 29ஆம் திகதி தெல்லிப்பழையில் போராட்டம் நடைபெற்றது.
.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  ஐயாயிரம் வழக்குகளை நீதிமன்றில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்திருந்தார்.
.
அதற்கமைய மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட விசேட கலந்துரையாடலினை அடுத்து நேற்று தெல்லிப்பழையில் 400 குடும்பங்கள்  தங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
.
எதிர்வரும் நாட்களிலும் பதிவு நடவடிக்கை இடம்பெறும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

எனவே இராணுவத்தினரின் நடவடிக்கை தொடர்பில், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யவுள்ளனர்.
.
நாட்டின் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததற்கு மாறாக இராணுவம் வலிகாமம் பகுதியில் ஆறாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது. இது ஒரு நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்றும் தெரிவித்துள்ள கூட்டமைப்பினர், அது தொடர்பிலும் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர்.
.
பொதுமக்களின் சார்பில் வலிகாமம் பகுதியில் காணிகளைக் கையகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாவை சேனாதிராஜா தாக்கல் செய்த வழக்கில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் குடியேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே  உத்தரவிட்டுள்ளது.
.
இதுமட்டுமல்ல வடக்கு கிழக்கில் தமிழ்  மக்களுடைய நிலங்களில் சிங்களக் குடும்பங்களை குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

DSCF0631.jpg

 

DSCF0525.jpg

http://www.eelanatham.net/story/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-400-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 

எமது நிலம் எமக்கு வேண்டும்: ஒரே நாளில் 400 பேர் வழக்குதாக்கல்
புதன்கிழமை, மே 1, 2013
 
யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் பொது மக்களின் நிலங்களை இராணுவம் கையப்படுத்த எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக பாதிகப்பட்டுள்ளவர்களின் சார்பில் ஐயாயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே நேற்றைய தினம்  தெல்லிப்பழையில் 400 குடும்பங்கள் வழக்குத்தாக்கல் செய்ய பதிவுகளை மேற்கொண்டனர்.

 

 

 

 

நல்ல விடயம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.