Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீட்ரூட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பீட்ரூட்

பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை தணிக்கவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.ஒரு தேநீர் கோப்பை அளவு, அதாவது சுமார் 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைவதாக லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால் இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். பீட்ரூட் மலச்சிக்கலைப் போக்கும்.* பித்தத்தைக் குறைக்கும் அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும். 100 கிராம் பீட்ரூட்டில் Carbohydrates 9.96 g, Sugars 7.96 g, Dietary fiber 2.0 g,Fat .18 g, Protein 1.68 g, Vitamin A 2 μg, Thiamine (vit. B1) .031 mg ,Riboflavin (vit. B2) .027 mg, Niacin (vit. B3) .331 mg , Pantothenic acid (B5) .145 mg , Vitamin B6 .067 mg, Folate (vit. B9) 80 μg,,Vitamin C 3.6 mg, Calcium 16 mg , Iron .79 mg, Magnesium 23 mg , Phosphorus 38 mg , Potassium 305 mg, Sodium 77 mg, Zinc.35 mg,பீட்ரூட்டில் இருக்கிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்தது. பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்தமருந்து. பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும். தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும். பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

பீட்ரூட் அல்வா

பீட்ரூட் - அரை கிலோ, 

வாழைப்பழம் - 10, 

தேங்காய் - 1, 

வெல்லம் - கால் கிலோ, 

ஏலக்காய் - 5 கிராம், 

முந்திரி - 25 கிராம், 

திராட்சை - 50 கிராம், 

பாதாம் - 10.

பீட்ரூட்டை தோல் நீக்கித் துருவிக் கொள்ளவும். தேங்காயை பல் பல்லாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தைக் கட்டிகள் இல்லாமல் பொடித்துக் கொள்ளவும். வாழைப்பழத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீட்ரூட் துருவல், வாழைப்பழம், வெல்லத்தூள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் நன்றாகக் கலந்து கொள்ளவும். அத்துடன் பொடித்த முந்திரி, பாதாம், திராட்சை கலந்து, ஏலக்காய் தூள் சேர்த்துக் குளிர வைக்கவும். 

பீட்ரூட் சட்னி

பீட்ரூட் - 2

வெங்காயம் - 100 கிராம்

காய்ந்த மிளகாய் - 4

சீரகம் - ஒரு மேசைக்கரண்டி

தனியா - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

எண்ணெய்

பீட்ரூட்டை தோல் நீக்கி சீவிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, போட்டு தாளித்து, சீரகம், தனியா, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் பீட்ரூட்டைச் சேர்த்து வதக்கவும்பின்பு உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக விடவும். வெந்ததும் ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

 

 

295337_183864141768164_1034888822_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த மரக்கறிகளில்... பீற்றூட்டும் ஒன்று.
இணைப்புக்கும், தகவலுக்கும் நன்றி நுணா.

 

எனக்குப் பிடித்த மரக்கறிகளில்... பீற்றூட்டும் ஒன்று.

இணைப்புக்கும், தகவலுக்கும் நன்றி நுணா.

 

இது எனக்குப் பிடிக்காத ஒன்று இந்தியன் ஆமி வந்தபின், எத்தனை நாள் பீற்றுட்டை மட்டும் சாப்பிட்டிருப்போம். பீற்றுட்டை பார்க்கும் போதெல்லாம், அந்த கழிசடைகளின் மணம்தான் மனதில் வந்து போகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இது எனக்குப் பிடிக்காத ஒன்று இந்தியன் ஆமி வந்தபின், எத்தனை நாள் பீற்றுட்டை மட்டும் சாப்பிட்டிருப்போம். பீற்றுட்டை பார்க்கும் போதெல்லாம், அந்த கழிசடைகளின் மணம்தான் மனதில் வந்து போகின்றது

 

இந்த முறையில்... சமைத்துப் பாருங்கள் வந்தி, நல்லாயிருக்கும். :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79489

இந்த முறையில்... சமைத்துப் பாருங்கள் வந்தி, நல்லாயிருக்கும். :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79489

 

நன்றி சிறி செய்து பார்க்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் குறைஞ்சது கிழமையிலை ஒருநாளைக்காவது பீற்றூட்,கரட் கறியோ சலாட்டோ எதெண்டாலும் சாப்பிடுவன் :) .......நன்றி நுணாவில்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அவுசில், மக் டொனால்ட்ஸ் உணவகங்களில், பேர்கரில் வைத்து விற்பார்கள்.  அருமை!

 

KiwiBurger02.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பீட்ரூட் கண்ணால காட்டக் கூடாது

 

  • கருத்துக்கள உறவுகள்

பீற்ரூட்டில் அரைக்கரண்டி தூள் போட்டு பாலும் விட்டு பால்கறி போல் வைக்க பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடுவார். எனக்கு விருப்பமானதும் கூட.

 

  • கருத்துக்கள உறவுகள்

பீட்ரூட் கறி ஏன் சிவப்பாய் இருக்கிறது..? :unsure:

 

இதில் sugar அதிகம் இருக்கா? இருக்கு என்ற சந்தேகத்தில் மனிசி சமைக்க மாட்டன் என்று சொல்லுவா. எம்மில் ஒருவருக்கும் sugar இல்லை என்றாலும் வந்து விடும் என்ற பயம் அவருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பீட்ரூட் கறி ஏன் சிவப்பாய் இருக்கிறது..? :unsure:

 

நீங்கள் அதுக்கு, கனக்க... மிளகாய்த்தூள் போட்டால்.... சிவப்பாக இருக்கும்.

கனக்க... மஞ்சள் தூள் போட்டால்... பீற்றூட்கறி மஞ்சளாக வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பீட்ரூட் கறி ஏன் சிவப்பாய் இருக்கிறது..? :unsure:

 

 

betalain pigments  தான் சிவப்புக்கு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அதுக்கு, கனக்க... மிளகாய்த்தூள் போட்டால்.... சிவப்பாக இருக்கும்.

கனக்க... மஞ்சள் தூள் போட்டால்... பீற்றூட்கறி மஞ்சளாக வரும்.

ம்ம்..விஞ்ஞான விளக்கம்.. :lol:

betalain pigments  தான் சிவப்புக்கு காரணம்.

ஓ..நன்றி அண்ணா பகிர்விற்கு..இதைப்பற்றி மேலதிகமாக இணையத்தில் தேடிய பொழுது..

 

 

Betalains are a class of red and yellow indole-derived pigments found in plants of the Caryophyllales, where they replace anthocyaninpigments. Betalains also occur in some higher order fungi.[1] They are most often noticeable in the petals of flowers, but may color the fruits, leaves, stems, and roots of plants that contain them. They include powerful antioxidant pigments such as those found in beets.

 

 

It was once thought that betalains were related to anthocyanins, the reddish pigments found in most plants. Both betalains and anthocyanins are water soluble pigments found in the vacuoles of plant cells. However, betalains are structurally and chemically unlike anthocyanins and the two have never been found in the same plant together.[5] For example, betalains contain nitrogen whereas anthocyanins do not.[2]

It is now known that betalains are aromatic indole derivatives synthesized from tyrosine. They are not related chemically to the anthocyanins and are not even flavonoids.[6] Each betalain is a glycoside, and consists of a sugar and a colored portion. Their synthesis is promoted by light.[3]

The most heavily studied betalain is betanin, also called beetroot red after the fact that it may be extracted from red beet roots. Betanin is a glucoside, and hydrolyzes into the sugar glucose and betanidin.[2] It is used as a food coloring agent, and the color is sensitive to pH. Other betalains known to occur in beets are isobetanin, probetanin, and neobetanin.

 

http://en.wikipedia.org/wiki/Betalain

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.