Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள உறவுகளின், அசத்தல் கருத்துகள்.

Featured Replies

வந்தியத்தேவன்: பதிவு இலக்கம் - 12

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122372&hl=

 

"எந்த சாத்திரியார் சொன்னாலும் சாத்திரம் என்பது ஒருவெங்காயம். உரிக்க போனால் ஒன்றும் மிஞ்சாது.   மிச்சத்தை துருவி துருவி கேளாமல் விட்டுங்க" என எழுதியது மல்லை  அண்ணா. இதில் இறுதியாக எழுதப்பட்டிருப்பதை பாருங்கள். :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122372&p=896060

 

அதற்கு "இன்றைய அசத்தல் கருத்து" என பதில் போட்டது தான் வந்தி அண்ணா. "Quote" என இருப்பதை கவனிக்காமல் வந்தி அண்ணாவின் பெயரை போட்டிருக்கிறீர்கள். மல்லை அண்ணாவின் பெயரை மாற்றி விடுங்கள். :)

Edited by துளசி

  • Replies 131
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
இப்ப கொஞ்சநாளாய் இரண்டுபேர் இஞ்சை கவிதை கதையெண்டு என்னத்தையோ சொல்லாமல் சொல்ல வரீனம்.ஆருக்கும் விளங்குதோ????
ஆழமறியா ஆழ்கடலில் ஆவாரம்பாடி ஆட்சிசெய்ய வாழ்த்துக்கள்.  :lol:   :icon_idea:
 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122349&view=getnewpost&hl=

 

இந்தத் திரியில் குசா அண்ணாவின் கருத்து நெத்தியடி :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"எந்த சாத்திரியார் சொன்னாலும் சாத்திரம் என்பது ஒருவெங்காயம். உரிக்க போனால் ஒன்றும் மிஞ்சாது.   மிச்சத்தை துருவி துருவி கேளாமல் விட்டுங்க" என எழுதியது மல்லை  அண்ணா. இதில் இறுதியாக எழுதப்பட்டிருப்பதை பாருங்கள். :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122372&p=896060

 

அதற்கு "இன்றைய அசத்தல் கருத்து" என பதில் போட்டது தான் வந்தி அண்ணா. "Quote" என இருப்பதை கவனிக்காமல் வந்தி அண்ணாவின் பெயரை போட்டிருக்கிறீர்கள். மல்லை அண்ணாவின் பெயரை மாற்றி விடுங்கள். :)

 

தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி துளசி. மாற்றியுள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவை இலங்கைக்கு குடுத்தமாதிரி லடாக்கை சீனாவிடம் கொடுக்கலாம்.. :unsure::D

 

தலைப்பை இணைத்தவர்: கிருபன்.

இசைக்கலைஞன்: பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122480&hl=

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றயவர்களை மொக்கு கூட்டம் என கூறுபவர்கள் தங்களின் மாணவர் அறிக்கையையும் (report card) திறந்து பார்க்க வேண்டும். :icon_mrgreen:

 

தலைப்பை இணைத்தவர்: நுணாவிலான்.

நுணாவிலான்: பதிவு இலக்கம் - 5

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122438&hl=

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

------

சும்மா படுத்திருக்கின்ற சிங்கத்தை நீங்கள் என் தட்டி எழுப்பிறீங்கள் 

 

தலைப்பை இணைத்தவர்: மல்லையூரான்.

வாத்தியார்: பதிவு இலக்கம் - 13

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122431&hl=

கதை எழுதி முடியும் வரை நிம்மதியாய் இருக்க விடமாட்டோம் :D . ஆசாமி பயணம் தொடங்கிவிட்டார் போலை. பயணம் இனிதாக அமைய இறைவன் அருள்புரிவாராக! :)

 

தலைப்பை இணைத்தவர்: ஆசாமி.

அலைமகள்: பதிவு இலக்கம் - 125

http://www.yarl.com/forum3/index.php?showtopic=118717&page=7

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் எதிர் அறிக்கைகளையும் வெளியிட்டதன் மூலம், உலகத்தைப் புரியாமல் பிரபாகரன் படை போர்புரியவில்லை என்பதை இந்தப் பதிவானது எல்லோருக்கும் எடுத்துக் காட்டியுள்ளது. உலகத்தின் போக்கை அறியாதவன் பிரபாகரன் என்பவர்கள் எல்லோரும் இங்கு தோற்றுப்போனார்கள்.

 

அப்புறம் பிரபாகரன் படை ஏன் தோற்றது என்ற கேள்விக்குப் பலகாரணங்களை அவரவர் சிந்தனைகளுக்கும், அனுபவங்களுக்கும் ஏற்பக் கூறமுடிந்தாலும்? சில காரணங்களிலுள்ள உண்மைகளை உணர்வதற்கும் முயலவேண்டும்!.

 

பிரபாகரன் காலத்திற்கு முந்தியவர்கள், தமிழையும் தமிழினத்தின் பெருமையையும் உலகிற்கு உணர்த்தவே பெரிதும் முயன்றனர். சுய பாதுகாப்பை உணர்த்த எவருமே முற்படவில்லை. தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்திடல் வேண்டும் என்று பாரதியும் பாடினானே தவிர தங்களுக்குத் தாங்களே பாதுகாப்பை தேடிக்கொள்ள வேண்டும் என்பதை ஆழமாக உணரவோ, உணர்த்தவோ முயலவில்லை. முயற்சி மேற்கொள்ளப் பட்டிருந்தால் இன்று தமிழ்நாடும் தமிழர் நிர்வாகத்தின் கீழ் இயங்கியிருக்கும். ஈழத்தமிழர் போராட்டமும் தோல்வியின்றி வெற்றியை அடையும் வாய்ப்பைப் பெற்றிருக்கும்.

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

பஞ்ச்: பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121794&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நாம் சிங்களவனுடன் கை குலுக்குகிறோம்  என்று தெரிந்தே குலுக்குகிறோம்........

 
அவர்கள் தெரியாமல் குலுக்கியவர்கள்.
 
சமாதான பேச்சுவார்த்தை என்று............ இவளவு நாளும் இந்திய சிங்கள அரசுகள் புலிகளுக்கு வைத்த பொறி வெடிகளை எல்லோரும் அறிய வாய்ப்பில்லை. (உங்களுக்கு அது தெரியும் என்பது எனக்கும் தெரியும். எல்லோருக்கும் தெரியாது). எப்படி தந்திரமாக புலிகள் அதன் மேல்  ஏறி இறங்கினார்கள் என்பது இனி போக போகத்தான் சிலருக்கு புரியும்.
 
உட்கார்ந்து சர்வதேச அரசியல் எழுதுவது கிட்டதட்ட ஒரு சிற்றின்பம் மாதிரி.........
அதற்குள் இறங்கி நின்றால்தான் புரியும். ஜெனநாயகம் என்றால் என்ன என்று.

 

 

தலைப்பை இணைத்தவர்: மல்லையூரான்.

மருதங்கேணி: பதிவு இலக்கம் - 8

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122308&hl=

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் இனப்பற்றுக்கு முன்னாலை நிறைய தமிழர் நிண்டு பிச்சை வாங்க வேணும்...   

 

இண்டைக்கும் புலியிலை மயிர் புடுங்க நிக்கிறவையை பார்க்கும் போது இதுதான் தோன்றுது... 

 

தலைப்பை இணைத்தவர்: தமிழரசு.

தயா: பதிவு இலக்கம் - 5

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122308&hl=

 

தலைப்பு:

விமல் வீரவங்சவுக்கு பிரிவினைவாதம் என்ன என்பது தெரியாது

கிணற்று தவளைகளின் பேச்சுக்களை கவனிக்கத் தேவையில்லை

 

தலைப்பை இணைத்தவர்: நுணாவிலான்

 

அசத்தல் கருத்து:

 

அதிகமாக சூரை மீன் (டுன) சப்பிட்டதனலாக்கும்   :D

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122525#entry896876

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி ஜீவா. வாங்க வந்து சும்மா ஜோரா எழுதுங்க. விசயமா எழுத வெளிக்கிட்டால் தானே வீண் பிரச்சனை..! :)

 

தலைப்பை இணைத்தவர்: சின்னப்பு.

நெடுக்காலபோவான்: பதிவு இலக்கம் - 3559

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120719&page=178

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமரிக்காவின் அடாவடித்தனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது! உண்மைதான். இருந்தாலும் கரிச்சட்டி புறச்சட்டியைப் பார்த்து கறுப்பு என்று சொல்லக்கூடாது.

தலைப்பை இணைத்தவர்: தமிழரசு.

பன்ஞ்: பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122530&hl=

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சிறி  திரிக்கு.........

 

எப்பொழுதுமே யாழின் வளர்ச்சியில் துணை  நிற்பவர் தாங்கள்

தொடரட்டும் தங்கள் பணி..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வரலாற்றில் வன்னி பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பிரதேசம். பண்டார வன்னியன் காலத்திற்கு முன்பிருந்தே அது தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த ஒரு நிலப்பரப்பு. அது இந்த நூற்றாண்டிலும் தமிழர்களின் வரலாற்றில் அழியாத பல தடங்களைப் பதித்துள்ள இவ்வேளையில் தமிழீழத்தின் நிலப்பரப்பு ஒன்றுக்கான பெயர் வெளிநாடு ஒன்றில் வீதிக்கு வைக்கப்படுவது உண்மையில்.. தமிழீழத்திற்கு வன்னிக்கு சிறப்பு மட்டுமல்ல.. தமிழ் மக்களுக்கும் தமிழ் உச்சரிப்பில் அது அமைவது தமிழிற்கும்.. தனிச் சிறப்பாகும்..!

 

பொதுவாக நாடுகளின் தலைநகரங்கள் அல்லது சிறப்பு நகரங்களின் பெயர்கள்.. தமது நாட்டுக்காக உழைத்தவர்களில் தமக்கு வேண்டியவர்களின் பெயர்களைத் தான் மேற்கு நாடுகளில் வீதிகளுக்கு வைப்பார்கள். ஆனால் வன்னி இது எதிலும் அடங்காமல்.. தமிழர் வரலாற்றோடு அடங்கி அங்கு இடம்பெறுவது தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு சிறப்பாகும்..!

 

பாடுபட்ட உறவுகளுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் கனேடிய அரசுக்கும் நன்றி. :icon_idea:

தலைப்பை இணைத்தவர்: தமிழரசு.

அசத்தல் கருத்து, நெடுக்காலபோவான்: பதிவு இலக்கம் - 13

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122512&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு தவறான பார்வை இது.

 

உங்கள் பார்வை முழுக்க முழுக்க பாலுறவு சம்பந்தமானதாக மட்டுமே இருக்கு. ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் முடிப்பதற்கு வெறுமனே பாலுறவு மட்டுமே காரணம் என்று சொல்வது எவ்வளவு தவறோ அதேப் போன்றுதான் இதுவும். உடலுறவுக்கு அப்பாலும் அன்பும், காதலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடத்தலும் போன்றன உள்ளன.

 

ஓரினச் சேர்க்கையும் வெறுமனே பாலுறவு சார்ந்த ஒன்று மட்டுமல்ல. ஒருவரின் தேடல் தொடர்பானது.  எதிர்பால் கிடைக்காமையால், தனக்கு உருவான காமத்தினை திருப்தி படுத்த அதே பாலிடம் செல்வது வேறு, தன் பாலினத்தின்மைச் சேர்ந்த ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்வது வேறு. இரண்டாவதில் காமம் மட்டுமே காரணம் அல்ல.

 

தான் அவ்வாறு இல்லை என்பதற்காகவும், சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கின்றார்கள் என்பற்காகவும் ஒரு விடயத்தினை எப்படி சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கு தீங்கானது என்று தீர்மானிக்கின்றீர்கள்?

 

இந்த பரந்த விரிந்த உலகில் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காத, தமக்கு விரும்பிய  அனைத்து செயல்களுக்கும் பெறுமதி உண்டு. அந்த செயல்களைச் செய்வதற்கான உரிமையும், வசதியும் கண்டிப்பாக கொடுக்கப்படல் வேண்டும்.

 

தனிப்பட்ட ரீதியில் நான் ஓரினச்சேர்க்கையாளன் இல்லை. இருபாலின சேர்க்கையாளனும் இல்லை. ஆனால் என் பிள்ளைகளில் ஒருவர் அப்படி ஆனாலும் அதற்காக கவலைப்படப் போவதில்லை.

 

தலைப்பை இணைத்தவர்: வந்தியத்தேவன்.

அசத்தல் கருத்து, நிழலி: பதிவு இலக்கம் - 13

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122445&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கிழக்கில் ஒரு கிராமத்தில் 15 மாவீரர் ,முன்னால் போராளிகள் குடும்பங்களுக்கு 

 
தலா ஒரு லட்சம் வீதம் தொழில் உருவாக்கி கொடுத்தோம் .இதைப் பார்வை யிட 
சென்ற நண்பரிடம் முன்னால் பெண் போராளி கேட்டார் ,கனடாவில் 3லட்சம் 
தமிழர்கள் வசிக்கின்றீர்கள் ,நீங்கள் எல்லோரும் ஒருமித்து உதவி செய்தால் முன்னாள் 
போராளிகள் ,மாவீரர் குடும்பங்கள் ,பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோருடைய தேவைகளை 
தீர்க்கலாம் தானே ?இதற்க்கு அவரால் பதில் சொல்லமுடியவில்லை .
 
 
இது யார் குற்றம் ,சிங்கள அரசா ?புலம்பெயர் அமைப்புகளா ?புலம்பெயர் தமிழர்களா ?

 

தலைப்பை இணைத்தவர்: மல்லையூரான்.

அசத்தல் கருத்து, (G)காரி: பதிவு இலக்கம் - 6

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121845&hl=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ருதி அழகாகத்தான் இருக்கின்றார். லண்டனில் இருக்கும் இளம் தமிழ் பெண்கள் பார்ட்டிகளில் எப்படி உடையணிகின்றார்கள் என்று பலருக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. அத்தோடு நடன விடுதிகளுக்குப் போய் அனுபவம் இல்லாதவர்களுக்கு எல்லாம் புதினமாகத்தான் தெரியும்!

கோயில் குளத்திற்கு ஒரு உடை, திருமணத்திற்கு ஒரு உடை, களியாட்டங்களுக்கு இன்னொரு உடை, நடனவிடுதிகளுக்கு ஒரு உடை, கடற்கரைக்கு இன்னொரு உடை என்று அணியாமல் எல்லா இடத்திற்கும் ஒரே மாதிரி உடுப்புப் போட்டுச் சென்றால் குழப்பங்கள் வருவது இயற்கையே!

 

தலைப்பை இணைத்தவர்: சின்னவன்.

அசத்தல் கருத்து, கிருபன்: பதிவு இலக்கம் - 35

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122388&page=2

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புஃல் மப்படிச்சுப்போட்டு கோட்டை ஸ்ரேசன்லை  ஏறிப்படுத்தவனுக்கு பளை கொடிகாமம் சாவகச்சேரி வரத்தான் வெறி துப்பரவாய் முறியும்......நிலமும் வெளிச்சிடும்.....வவுனியாவுக்கு அங்காலை நடக்கிற கோதாரியளை காணுறதுக்கு இப்பிடியான ஆக்களை ஆராலையும் தட்டியெழுப்பேலாது..

தலைப்பை இணைத்தவர்: மல்லையூரான்.

அசத்தல் கருத்து, குமாரசாமி: பதிவு இலக்கம் - 7

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122533&hl=

 

Edited by தமிழ் சிறி

தமிழ்சிறி அண்ணா, கு.சா தாத்தாவின் கருத்துக்கு நீங்கள் மாறி இந்த திரியின் இணைப்பை கொடுத்து விட்டீர்கள். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணா, கு.சா தாத்தாவின் கருத்துக்கு நீங்கள் மாறி இந்த திரியின் இணைப்பை கொடுத்து விட்டீர்கள். :D

 

தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு, நன்றி துளசி. :)

பிழை திருத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு, நன்றி துளசி. :)

பிழை திருத்தப்பட்டுள்ளது.

 

சட்டவாளர் துளசியின் கண்களில் இருந்து தப்புவது கடினம்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதை என் கண்ணில் பட்டது விதியா?

இல்லை யாரும் செய்த சதியா? :lol:

 

நல்ல ஒரு கருங்கல்லுத் தான் நெடுக்குக்கு மேல வந்து மோதி இருக்கு.. :rolleyes: சேதாரம் ஒண்டும் இல்லைத் தானே நெடுக்ஸ்? :D

 

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் :)

 

தலைப்பை இணைத்தவர்: நெடுக்காலபோவான்.

அசத்தல் கருத்து, குட்டி: பதிவு இலக்கம் - 37

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122349&page=2#entry896661

 

சட்டவாளர் துளசியின் கண்களில் இருந்து தப்புவது கடினம்.. :D

 

யாழ்களத்தின்.... ஜூனியர் பொம்பிளை லோயர் தான் துளசி. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சிறி....

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தமிழ்சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தமிழ்சிறி  :) 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.