Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் சாப்பிடும் இலை, குழை, கீரை வகைகளும் அவற்றின் சத்துக்களும்

Featured Replies

எனக்கும் ஆட்டுக்கும் யார் அதிகம் இலை குழை சாப்பிடுவது என்று போட்டி வைத்தால் ஒரு ஆட்டை வெல்லக் கூடியளவுக்கு நான் பச்சை இலைகளை சாப்பிட்டுக் காட்டுவன். அந்தளவுக்கு நான் பச்சை இலைகளை வார நாட்களில் உண்பதுண்டு.

வார இறுதி நாட்களை முற்றிலும் அசைவ உணவுகளுக்கு என்று ஒதுக்கி வைத்து இருப்பதால் வார நாட்களில் ஆகக் குறைந்தது 2 நாட்களாவது தனியே மரக்கறி, இலை வகைகளாலான சலாட்டினையும் சாப்பிடுவதும், மிச்ச வார நாட்களில் இரண்டு இலை / கீரை வகை உணவை சேர்ப்பதும் வழக்கம். 

சரி, இவ்வாறு பச்சை இலைகளை தெரிவு செய்யும் போது  அவற்றில் என்னென்ன சக்தி இருக்கு என்று பார்த்து தெரிவு செய்வது வழக்கம். ஒவ்வொன்றிலும் என்னென்ன சக்தி இருக்கு என்று மேலோட்டமாகவேனும் தெரிந்து வைத்திருப்பது எம் உணவு முறையை Balance பண்ண உதவும் என்று நம்புகின்றேன். அதன் படி பல தளங்களில் இருந்து பெற்ற தகவல்கள் இவை.

நான் குறிப்பிடும் பச்சை இலை வகைகள் அனைத்தும் கனடாவில், Toronto வில் இலகுவாக பெறக் கூடியன. மற்ற நாடுகளில் என்ன மாதிரி என்று தெரியவில்லை.

ஊரில் இருந்து கனக்க மருந்தடித்து வரும் ஆரோக்கியமற்ற மரக்கறிகளை விட நாங்கள் வாழும் இந்த நாடுகளில் வளரும் மரக்கறிகள், இலை வகைகள் நல்லது என நம்புகின்றேன்.  இங்குள்ள அநேக நாடுகள் எந்தளவுக்கு பூச்சிக் கொல்லி, இரசாயன பசளை வகைகளை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற அளவினை தீர்மானித்து கடுமையாக அமுல்படுத்தி வருகின்றனர் என்பதால் ஓரளவுக்கேனும் ஆரோக்கியமாக இவை இருக்கும்.

Edited by நிழலி
சில விடயங்களைச் சேர்க்க...

  • தொடங்கியவர்

1. Kale இலை (கேல்): இதனை Borecole என்றும் அழைப்பர்.

கி.மு 600 ஆம் ஆண்டளவில் ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு பின் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் தென் அமெரிக்க நாடுகளுக்கு ஐரோப்பிய குடிப்பெயர்வின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கடும் பச்சை நிற இலையைக் கொண்ட உணவு இது.

இலையின் படம்:

img_145821.jpg

முக்கிய சத்துகள்:

1. வைட்டமின் K.

2. வைட்டமின் A

3. வைட்டமின் C

4. Fibre

5. Iron

6. Vitamin B1 & B2

7. ஒமேகா 3

பலன்கள்:

நீண்ட ஆராச்சிகளின் பின் இது ஒரு மிகச் சிறந்த Antioxidant  ஆகவும், அதே போன்று சிறந்த ஒரு anti-inflammatory ஆகவும் உள்ள இலை வகை என்று கண்டு பிடித்துள்ளனர். இவற்றின் மூலம் பல புற்றுநோய்களை வரவிடாமல் தடுக்க கூடிய சக்தியை உடலுக்கு வழங்குகின்றது.  இதனை விட உணவை சமிபாடடையச் செய்யும் செயல்பாட்டினை அதிகரிப்பது, எலும்புகளுக்கு சக்தி கொடுப்பது, கொழுப்பை குறைப்பது, கட்டராக்ட் (cataracts) வராமல் தடுப்பது போன்றவற்றையும் செய்கின்றது.

மேலும் வாசிக்க: http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=38#healthbenefits

Toronto வில் Nofrills போன்ற அநேகமான உணவுப் பொருட்களை விற்கும் வணிக நிலையங்களிலும், 'இரா' போன்ற தமிழ் உணவுப் பொருள் அங்காடிகளிலும் வாங்க முடியும்.

  • தொடங்கியவர்

2. Lettuce (லெட்டூஸ்)

அநேகமான இலைவகை சலாட்டில் காணப்படும், இலகுவாகப் வாங்கக் கூடிய Lettuce இல் இரண்டு முக்கிய வகைகள் இருக்கின்றன.

1. Romaine lettuce

2. Iceberg lettuce

இதில் நான் அதிகம் வாங்குவது முதலாவது வகையான Romaine lettuce இனைத்தான். iceberg lettuce இனை விட  குறைவான சீனியும் (sugar), இரண்டு மடங்கு புரதமும், மூன்று மடங்கு விற்றமின் K யும், எட்டு மடங்கு விற்றமின் C யும் காணப்படும் இந்த வகையானது மற்றதை விட கொஞ்சம் விலை கூடினது.

சத்துகள்:

இதிலும் கேல் (Kale) இல் இருப்பது போன்று ஏழு முக்கிய சத்துகளும் இருக்கின்றன.

1. வைட்டமின் A.

2. வைட்டமின் K

3. வைட்டமின் C

4. Fibre

5. Iron

6. Vitamin B1, B2 மற்றும் B6

7. ஒமேகா 3

பலன்கள்:

உடலில் இருக்கும் அதிக கொழுப்பு oxidized ஆவதால் தான் அது ஒட்டும் தன்மையாக மாறி எம் இதயத்துக்கு குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் படிந்து குருதியை அடைத்த மாரடைப்பினையும் பக்கவாதத்தினையும் (stroke) தருகின்றது.  லெட்டூஸ் இல் காணப்படும் சத்துகளால் (Vittamin C மற்றும் பீற்றா கரோட்டின்) இவ்வாறு இரத்தம் oxidized ஆவது தடுக்கப்பட்டு (அதாவது antioxidant ஆக தொழிற்பட்டு) மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதுடன் பல இருதய நோய்களை அண்ட விடாமல் தடுக்கவும் தன் பங்களிப்பை வழங்குகின்றது.  அத்துடன், இதில் காணப்படும் மற்ற சத்துகள், முக்கியமாக Pottassium ஆனது இரத்த உயர் அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது.

மேலும்: http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=61

மிக நல்ல விடயம் நிழலி.

கீரை/ இலை மரக்கறி வகைகளை அதிகம் உணவில் சேர்ப்பது மிக நல்லது. கடும் பச்சை நிறம் உடைய இலை வகைகள் அதிக சத்தானவை, குறிப்பாக, இரும்பு, antioxidant என்பவை அதிகம்.  

நீங்கள் இணைத்தது பொரித்த kale இலையின் படம் போல் உள்ளது :) .

கேல் கட்டின்/பிடி படம் 

Kale.jpg

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்

மிக நல்ல விடயம் நிழலி.

நீங்கள் இணைத்தது பொரித்த kale இலையின் படம் போல் உள்ளது :) .

கேல் கட்டின்/பிடி படம் 

Kale.jpg

ஹிஹி... நான் இணைத்தது கொஞ்சம் வாடி விட்டது என்று நினைக்கின்றேன். இந்த இலையை கொஞ்சம் ஒலிவ் ஒயில் விட்டு மெல்லிய சூட்டில் ஒரு 4 நிமிடம் வதக்கினால் நன்றாக வரும். இதில் வறையும் செய்து சிலர் உண்பர். ஆனால் அதிக சூடு என்றால் அதன் விற்றமின்கள் இறந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயன்தரும் திரி.
நல்ல காலம் வார இறுதியில் அசைவம் என்பதால் நிறையத் தண்ணி குடிச்சிட்டு வேலிவளிய இருக்கிற இலைகளைப் பிடுங்காமல் வேலி தப்பிச்சுது.

ஆரோக்கியமான உணவு. நான் வார நாட்களில் மதியம் தனியே இலை குலை மாத்திரந்தான் சாப்பிடுவது. இரவுகளிலும் உணவில் 'சலட்' சேர்த்துக் கொள்வேன். வார விடுமுறையில் மரக்கறிகளுடன் கட்டாயம் ஒரு இலைச் சுண்டலும், சேர்த்துக் கடிக்க சின்ன வெங்காயமும் வேண்டும்.

பச்சை மரக்கறிகளை உண்ணும் பொழுது உடலிலும் மனத்திலும் ஒருவித உற்சாகம் பிறக்கும். அதிலும் கோடை காலத்தில் தோட்டத்தில் விளையும் மருந்தடிக்காத மரக்கறிகளை பறித்து உண்பது எனது சுகமான பொழுது போக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்ல விடயம் நிழலி.

கீரை/ இலை மரக்கறி வகைகளை அதிகம் உணவில் சேர்ப்பது மிக நல்லது. கடும் பச்சை நிறம் உடைய இலை வகைகள் அதிக சத்தானவை, குறிப்பாக, இரும்பு, antioxidant என்பவை அதிகம்.  

நீங்கள் இணைத்தது பொரித்த kale இலையின் படம் போல் உள்ளது :) .

கேல் கட்டின்/பிடி படம் 

Kale.jpg

gruenkohl-schinken_zps83bdbf79.jpg

இதனை குறூண்கோல்(Grünkohl) என ஜேர்மனியில் அழைப்பர்.முக்கியமாக குளிர்காலங்களுக்கு உகந்த உணவு.எமது உணவுமுறையில் பார்த்தால் மீன்கலந்து வறை செய்தால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

------

இதனை குறூண்கோல்(Grünkohl) என ஜேர்மனியில் அழைப்பர்.முக்கியமாக குளிர்காலங்களுக்கு உகந்த உணவு.எமது உணவுமுறையில் பார்த்தால் மீன்கலந்து வறை செய்தால் நன்றாக இருக்கும்.

ஓம்... குமாரசாமி அண்ணா,

முன்பு, இந்த குறூன் கோல்... குளிர்காலத்தின் பின், "லிடில்" கடையில்... வாங்கி, மாசிக் கருவாடு போட்டு சமைத்துள்ளோம். அதன் சுவைக்கு, வேறு எந்த இலையும்.... நிகரில்லை.

ஆனால்... கடந்த இரண்டு வருடங்களாக அந்தக் கடையில் காணவில்லை.

இதனை.... வேறு எங்கு வாங்கலாம்? என்று... சொல்லுங்களேன்.

Edited by தமிழ் சிறி

அண்ணா,

கேல் இலகுவாக வளர்க்க முடியும். இலைகளை ஒடிக்க ஒடிக்க வளரும்.

இன்று கால் ஏக்கருக்கு சுவிஸ் சார்ட் (Swiss Chard) நட்டோம். உக்கிய இயற்கை சாணத்தை தவிர வேறொன்றும் நாம் பாவிப்பதில்லை.

கேலிலும் பார்க்க மெதுவானது. பருப்போடு அல்லது சலாட்டிலும் சேர்க்கலாம்.

உங்கள் மரக்கறித் தோட்டத்தை வந்து பார்க்க முடியுமா??

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மரக்கறித் தோட்டத்தை வந்து பார்க்க முடியுமா??

தோட்ட‌த்தை பார்க்க‌ வ‌ரும் போது, வெறுங்காலுட‌ன்... அரை கிலோ மீட்ட‌ர் முள்ளும், க‌ல்லும் குத்த‌ ந‌ட‌க்க‌, நீங்க‌ ரெடியா... அலை. :)

விவசாயி விக்,
 
பயிர்களுக்கு நோய் வந்தால் என்ன செய்வீர்கள். மருந்தடிப்பதில்லையா ?

நல்ல பதிவு தொடருங்கள்

பிகு: குழையென்றால் என்ன? குழை என்பது பணிவது என்றுதான் கேள்விப்பட்டேன். ஊரில் குழைகள் வெட்டுவது என்று பெரிய மரங்களில் இருக்கும் கிளைகளைதான் சொல்கின்றவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு தொடருங்கள்

பிகு: குழையென்றால் என்ன? குழை என்பது பணிவது என்றுதான் கேள்விப்பட்டேன். ஊரில் குழைகள் வெட்டுவது என்று பெரிய மரங்களில் இருக்கும் கிளைகளைதான் சொல்கின்றவர்கள்.

பிற்குறிப்புக்கு,பிற்குறிப்பு:

இலை, தளைகளை குழை என்பார்கள்.

குழக்காடு என்று... சாவகச்சேரி, மட்டுவில், நுணாவில் பகுதிகளைச் சொல்வார்கள்.

அவ்வளவு... இலை, தளை மரங்களுடன் குளிர்ச்சியாக‌ இருந்த இடம்.

இன்று.. எப்ப‌டியோ... தெரியாது.

விவசாயி விக்,
 
அறிந்து கொள்ளும் ஆவலில் தான் கேட்டேன். பிழையாக நினைக்க வேண்டாம்.   :D
 
எங்கள் சந்ததியினர் விவசாயம் தான் செய்து வந்தார்கள். அவர்களின் பிரச்சனைகளை நன்கு அறிவேன். சில நோய்கள் குறிப்பாக வைரஸ் நோய்கள் ஏற்பட்டால் அந்தல் மண்ணில் மீண்டும் அதே பயிரை பல்லாண்டுகள் பயிரிடவே முடியாது. இப்படிப் பல வில்லங்கங்கள். இதை எப்படி இயற்கை முறை மூலம் நீங்கள் சமாளிக்கின்றீர்கள் என்று அறிந்து கொள்ளும் ஆவல்.
 
உரப்பாவனையை விட கிருமிநாசினிகளே பெருமளவில் மனிதருக்கு பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நான் இங்கு கீரை வகைகளை வாங்குவதில்லை. இதற்கு முக்கிய காரணம் கீரை வகைகளிற்குத் தான் கிருமிநாசினிகளின் பெரும்பகுதி போய்ச் சேரும். (இலைகளே தாவரத்தின் பெரும்பகுதி என்பதால்.) கீரைகளால் கிடைக்கும் நன்மையைவிட தீமைகளே கூடுதலாக வந்து சேருமோ என்ற எண்ணம் காரணம்.
 
.

Edited by ஈசன்

நன்றி சிறி

கிருமிகளிடமிருந்தும் பூச்சிகளிடமிருந்தும் பயிர்களைப் பாதுகாப்பதற்கு கீழே குறிப்பிட்டுள்ள பயிரிடும் முறைகள் நல்ல பலன் அளிக்கின்றன.

 'நட்பு தாவரப் பயிர்ச் செய்கை'  (Companion planting),

http://en.wikipedia.org/wiki/List_of_companion_plants

'சுழற்சி முறைப் பயிர்ச் செய்கை'

http://www.gardenorganic.org.uk/schools_organic_network/leaflets/CropRotation.pdf

எங்கள் ஊரும் தோட்டம்தான் முழுவதும். இந்தியன் ஆமி வந்தபோதில் பயிர் நிலங்களை அழிக்கவென பல சில வைரசுக்களை  விளை  நிலங்களில் விதைத்ததாகக் கேள்வி.

தோட்ட‌த்தை பார்க்க‌ வ‌ரும் போது, வெறுங்காலுட‌ன்... அரை கிலோ மீட்ட‌ர் முள்ளும், க‌ல்லும் குத்த‌ ந‌ட‌க்க‌, நீங்க‌ ரெடியா... அலை. :)

ம் ...................... முயற்சிக்கின்றேன் தமிழ்  :lol:

அலைமகள்,

 ஆனி முடிவில் வந்தால் தோட்டமும் அழகாக இருக்கும்

தாராளமாக குடும்பத்துடன் வாருங்கள்.

மிக்க நன்றி விவசாயி,  இப்ப வரமாட்டோம். மகளுக்கு ஸ்கூல், சமர் லீவுக்கை வர முயற்சிக்கின்றோம். வாறதென்றால் மெயில் அனுப்புவேன்.

கிருமிகளிடமிருந்தும் பூச்சிகளிடமிருந்தும் பயிர்களைப் பாதுகாப்பதற்கு கீழே குறிப்பிட்டுள்ள பயிரிடும் முறைகள் நல்ல பலன் அளிக்கின்றன.

 'நட்பு தாவரப் பயிர்ச் செய்கை'  (Companion planting),

http://en.wikipedia.org/wiki/List_of_companion_plants

'சுழற்சி முறைப் பயிர்ச் செய்கை'

http://www.gardenorganic.org.uk/schools_organic_network/leaflets/CropRotation.pdf

தகவல்களுக்கு நன்றி தப்பிலி.
 
ஆனால் வைரஸ் கெட்ட சாமான்.  :huh:
 
அது உயிரிக்கும் உயிர் அற்றதுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை. பளிங்கு (Crystal) ஆக்கப்படாலும் பலகாலாம் அப்படியே இருந்து மீண்டும் உயிர்ப்படையும்.
 
மிளகாய்ச் செடியில் இலைச் சுருட்டி நோய் ஒன்றை ஏற்படுத்தும். சொல்லி வேலையில்லை.

எங்கள் ஊரும் தோட்டம்தான் முழுவதும். இந்தியன் ஆமி வந்தபோதில் பயிர் நிலங்களை அழிக்கவென பல சில வைரசுக்களை  விளை  நிலங்களில் விதைத்ததாகக் கேள்வி.

இந்திய இராணுவம் வரும் போது இந்தியாவில் இருந்து சில நோய்கள் அவர்களின் கால் நடைகளோடு வந்தன. உதாரணம் கோமரி நோய். இந்த கோமரி என்னும் அந்திராக்ஸ் மேற்கு நாடுகளில் படு பயங்கரவாதமாக எண்ணப் படுகின்றது. ஆனால் இந்தியாவில் ஒரளவு சாதரண நோய்.  :)
  • கருத்துக்கள உறவுகள்

பயன் தரும் தலைப்பு. நன்றிகள்.

  • தொடங்கியவர்

1. Spinach (ஸ்பினாச்) கீரை:

0904_spinach.jpg

கடும் பச்சை இலைகளில் எனக்கு மிகவும் பிடித்த கீரை இது. ஊரில் அடிக்கடி உண்கின்ற முழைக்கீரையை ஒத்த சுவையுடையதாக எனக்கு தோன்றுவதும் இதுதான்.

முக்கிய சத்துகள்:

180 கிராம் ஸ்பினாச் இல் இருக்கும் சத்துகள்.

vitamin K1110.6%

vitamin A377.3%
manganese84%
folate65.7%
vitamin C29.4%

vitamin B224.7%

calcium24.4%

potassium23.9%

vitamin B622%

vitamin E18.7%

fiber17.2%

vitamin B111.3%

(இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சதவீதமானது, ஒரு நாளைக்கு நாங்கள் எடுக்க வேண்டிய ஒவ்வொரு வகை சத்துகளின் அளவுடன் ஒப்பிட்டு இதில் இருக்கும் அளவை கணித்த சதவீதமாகும். உதாரணமாக இந்தக் கீரையின் 180 கிராமை உட்கொள்ளும் போது எமக்கு நாளொன்றுக்கு கிடைக்க வேண்டி விற்றமின் K இல் 1110.6% வீதம் கிடைக்கின்றது. அதாவது 11 மடங்கு அதிகமாக கிடைக்கின்றது, அதே போன்று நாளொன்றுக்கு கிடைக்க வேண்டிய விற்றமின் A இன் அளவுடன் ஒப்பிடுகையில் இதனை 180 கிராம் உண்ணும் போது 377%  கிடைக்கின்றது. அதாவது 3.5 மடங்கினை விட அதிகமாக கிடைக்கின்றது)

பலன்கள்:

மேலே குறிப்பிட்டுள்ள கேல், லெட்டுஸ் ஆகிய கீரை வகைகளைப் போன்று ஸ்பினாச் சும் புற்றுநோய்க்கு எதிரான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பதார்த்தங்களைக் கொண்டுள்ளது, முக்கியமாக ஆண்களின் விதைப் பையின் அருகில் உருவாகும் புற்றுநோயான

Prostate cancer  , தோல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்றவற்றுக்கு எதிரான மிகவும் காத்திரமான சக்தியை வழங்குகின்றது.

புற்றுநோய் தவிர்ந்து வேறு என்ன பயன்கள் எனப் பார்த்தால், விற்றமின் K அதிகம் இருப்பதால் எலும்புகளை உறுதியாக வைத்திருத்தல் , விற்றமின் C, B, beta-carotine, மக்னீசியம் என்பனவற்றாலும் இதன் anti-oxidant திறனாலும் இதயத்துக்கு குருதியை கொண்டு செல்லும் ஆர்ட்டரி பலகீனமாவதை தடுத்தல், இரத்த உயரழுத்ததினை கட்டுப்படுத்துதல் போன்ற உயிர்வாழ்தலுக்கு மிகவும் அவசியமான செயற்பாடுகளையும் ஊக்குவிக்கின்றது.

மேலும் வாசிக்க:

1.  http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=43

2. http://www.healthdiaries.com/eatthis/11-health-benefits-of-spinach.html

  • தொடங்கியவர்

4. Broccoli (புறக்கோலி)

brocoli.jpg

எனக்கு கடைகளில் இதனைக் கண்டவுடனேயே எடுத்து கறிச்சு முறிச்சு என்று கடித்து சாப்பிடட்டா என்று நினைக்க தோன்றுமளவுக்கு விருப்பமான ஒரு இலை (இது இலையா மரக்கறியா என்ற ஒரு சந்தேகம் அன்றிலிருந்து இன்றுவரைக்கும் இருக்கு). ஒவ்வொரு வாரமும் தவறாமல் வாங்கும் இலை இது. அண்மையில் இதனை எப்படி சூப் வைப்பது என்று அறிந்தபின் ஒவ்வொரு வாரமும் ஒரு நாளாவது செய்து அருந்தி வருகின்றேன்.

சத்துகள்:

vitamin C135.2%

vitamin K115.5%
vitamin A11.3%
manganese9.5%
fiber9.4%
potassium8.2%
vitamin B68%
vitamin B26.4%
phosphorus6%
vitamin B55.2%

protein5.1%

magnesium4.7%

calcium4.2%

vitamin B14%
iron3.6%
vitamin E3.5%

பலன்கள்:

இதன் பலங்கள் எவை என்று அனைத்தையும் எழுத வெளிக்கிட்டால் நாள் முழுதும் எழுதிக் கொண்டு இருக்கலாம் என நினைக்கின்றேன். அந்தளவுக்கு மிகவும் அதிகமான பலங்களைக் கொடுக்கவல்லது. இதனை மிகச் சுருக்கமாக கீழே எழுத முயல்கின்றேன்:

1. புற்றுநோய் எதிர்ப்பு: இதற்கு முதல் எழுதப்பட்ட  இலை வகைகளைப் போன்றே புறக்கோலியும் அதிகளவு புற்றுநோய் எதிர்ப்பினக் கொண்டுள்ளது.  முக்கியமாக Prostate cancer (ஆண்களின் விதைப்பை மற்றும் விந்து உற்பத்தி சுரப்பிகளில் உருவாகும் புற்றுநோய்), தோல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையச் சுரப்பிகளில் உருவாகும் புற்றுநோய், ovarian cancer ஆகிய புற்றுநோய்களை எதிர்க்கும் வலிமை வாய்ந்த திறனைக் கொண்டுள்ளது.

2. இரத்தத்தில் அதிக சீனி சேர்வதைக் கட்டுப்படுத்தல்

3. கொலஸ்ரோலைக் கட்டுப்படுத்துதலும் இதன் மூலமும் 2 இல் குறிப்பிட்ட சீனியைக்

கட்டுப்படுத்துதல் மூலமும் மாரடைப்பு, ஸ்ரோக் என்பனவற்றைக் கட்டுப்படுத்துதல்.

4. ஏனைய பல இருதய நோய்களைக் கட்டுப்படுத்தும் பதார்த்தங்களைக் கொண்டு இருத்தல்

5. விழியில் ஏற்படும் நோய்களை, பார்வைக் குறைபாடுகளை தடுத்தல்

6. தோலை பாதுகாத்தல்- முக்கியமாக விற்றமின் D கிடைக்காத, மற்றும் அதிக சூரிய ஒளியால் சேதமாகும் தோலை பாதுகாத்தல்

மேலும்: http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=9#nutritionalprofile

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி.

Quote:"(இது இலையா மரக்கறியா என்ற ஒரு சந்தேகம் அன்றிலிருந்து இன்றுவரைக்கும் இருக்கு)"

இது பூக்கள்

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.