Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம் பெயர் சிட்னி தமிழனே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் சிட்னி தமிழனே

புண்ணியம் தேடி அழைகிறாய்

ஆடி கலவரத்தை ஏன் மறந்தாய்

ஆடி கலவரத்தை காட்டி அவுஸ்ரேலியா வந்தாய் :x

மெழுகாய் உருகிய எம்மவருக்கு

மெழுகுவர்த்தி ஏற்ற ஏன் மறந்தாய்

அழைக்கவில்லை உன்னை ஆயுதம் ஏந்த,

ஆயுதம் ஏந்தும் எம்மவருக்கு குடைபிடிப்பதற்கும் :evil: .

சூரசம்சாரத்துக்கு விடுமுறை எடுத்து குடும்பத்துடன் செல்லுகிறாய்

தமிழ் தெய்வமான முருகனுக்கு நன்றி சொல்லுகிறாய்

அசுரர்களால் அழிக்கபட்ட

தமிழனை நினைவு கூற ஏன் மறந்தாய் :?:

உலக சமாதானம் வேண்டி யாகம் செய்கிறாய்

உன் ஊரே சுடுகாடாய் கிடக்குதே

உறவுகள் சமாதான போர்வையில் அழிக்கபடுகிறார்கள்

உலக சமாதானம் செய்யதான் முடியுமா உன்னால் :?:

புட்டபத்தி செல்கிறாய் விடுமுறையில்

புளுகுகிறாய் தரிசனம் கிடைத்ததென்று

உலக வலம் வருகிறாய்

உறவுகளை தேடி :cry:

உன் அருகில் வந்தல்லோ

கூவினார்கள் மெழுகுயேற்ற

கேட்கவில்லையா உன் காதில்

இரு மணி நேரம் கிடைக்கவில்லையா :idea:

நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ் சங்கங்கள் உள்ளன

நாலு பேர் சங்கம் சார்பாக சென்றாலும் போதுமே

தமிழ் சங்கங்கள் பதவி கதிரைகளுக்கு மட்டும் தானா

தமிழனுக்கு குரல் கொடுக்க இல்லையா :twisted:

சரிகமபதநிச கூடுகிறோம் நூற்றுக்கணக்காக

திருவிழாகாலங்களில் கூடுகிறோம் நூற்றுக்கணக்காக

திணறிய தமிழனுக்காக கூட மறுக்கிறோம் :shock:

மேடை ஏறிய கலைஞர்களை

படம் பிடித்து புலிகள் என்று

பிதற்றுகிறான் சிங்கள பத்திரிகையாளன்

பார்க்கவில்லையா நீ :?:

எனது மன குமுறலை கவி என்று நினைத்து கொண்டு வடித்துள்ளேன் கவிதை மாதிரி தெரியாது விடில் மன்னித்து கவிதை மாதிரி வாசித்து புரிந்து கொள்ளவும் :D

கவிதை நன்றாக உள்ளது புத்தன். கவிதை முன்னேற்றம் தெரிகின்றது. தொடருங்கள். :arrow:

அழைக்கவில்லை உன்னை ஆயுதம் ஏந்த,

ஆயுதம் ஏந்தும் எம்மவருக்கு குடைபிடிப்பதற்கும் .

உங்கள மனக்குமுறல் கவிதை வடிவில். ஊருக்கு நாலு பக்கத்திற்கும் நாலு சங்கங்கள் வைத்து அலையும் நமது மக்கள் இத்தகைய நிகழ்வுகளை கணக்கில் எடுக்கின்றார்கள் இல்லை. ஊரில் இருக்கும் பாசம் நாட்டில் இல்லையா இவர்களுக்கு?

கவிதைக்கு பாராட்டுக்கள்.

வணக்கம் புத்தன்,

உங்கள் மனஉணர்வுகள் எனக்குப் புரிகிறது.

எல்லாநாடுகளிலும் இதுபோல் மக்கள் இருக்கிறார்கள். உணர்வுள்ளவர்களும் இருக்கிறார்கள்.

இங்கிலாந்தில் எனக்குத் தெரிந்தவரை முதன்முறையாக 20000 பேர் கலந்து கொண்டார்கள்.

ஆக கரைக்கக் கரைக்கக் கல்லும் கரையும். தொடர்ந்து முயல்வோம்

அன்புடன்

மணிவாசகன்

(ஓவா கணங்Gaண்ட எப்பா)

புட்டபத்தி செல்கிறாய் விடுமுறையில்

புளுகுகிறாய் தரிசனம் கிடைத்ததென்று

உலக வலம் வருகிறாய்

உறவுகளை தேடி

கனடாவிலயும் இருக்கினம் இப்பிடி போட்டு வந்து புழுகிற ஆக்கள்.

கவிதை மாதிரித்தானிருக்கு புத்தன்.இன்னும் இப்பிடி நல்லாக் கேளுங்கோ.

புத்தனின் உள்ளக்குமுறல கவியாக நியாயமான குமுறல்.கவிதையில் முன்னேற்றம் தெரிகிறது வாழ்த்துக்கள்

புத்தன் உங்கள் உணர்வில் எழுந்த குமுறல்கள் கவிதை வடிவமாக வெளிப்பட்டு இருக்கின்றது....

கவிதைக்கு வாழ்த்துக்கள்

புத்தன் கவிதை அருமை

உள்ளக் குமுறல்களை கவிவடிவில் தந்துள்ளீர்கள் பாராட்டுக்கள்...தொடர்ந்து எழுதுங்கள் 8)

உங்கள் கோபத்தை உள்ளக் குமுறலை கவியாக வடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

எல்லாநாடுகளிலும் இதுபோல் சிலர் இருக்கிறார்கள்.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் சிட்னி தமிழனே! - நீ

புண்ணியம் தேடியா அலைகிறாய்?

இழுத்து வைத்து அதட்டிக்கேள் புத்தா!

இனவாதப்பேய் இன்னும் கோரமுகம் காட்டி சூறையாட திரிகிறது.

வலி சுமந்தவரே! விழிமூடிக் கிடக்கலாமோ?....

வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் உமக்கு விசரே, அவைக்கு எங்கே நேரம் கிடைக்குது?. நிகழ்ச்சி ஒழுங்கு படுத்தினவர்கள் செவ்வாய்கிழமை 2 ல் இருந்து இரவு வரை என்று அறிவித்ததினால் அவைக்கு அங்கே செல்ல எங்கே நேரம் கிடைக்குது?. போனால் சூரியத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆனந்தம், செல்வி பாக்க முடியாதில்லே. கோலங்கள் நாடகத்தில் நடித்த நடிகை இறந்ததினை நினைச்சு அழுத அவையழுக்கு யூலைக்கலவரத்தினை நினைக்க எங்க நேரம்?. தலைனகர் திருமலையில் இராணுவம் குண்டு போடுவது பற்றி அவைக்கு என்கே கவலை. அவைக்கு கற்பு புகழ் குசுப்புவின் கணவர் நடித்த தலைனகர் படம் பார்க்காத கவலை.ஜெயவர்த்தனா என்ற குள்ள நரியினால் மேற்கொள்ளப்பட்ட கறுப்பு யூலையில் இறந்தவர்களைப் பற்றி அவர்களுக்கு எங்கே கவலை?.அவைக்கு மகெல ஜெயவர்த்தன லாராவின் சாதனையினை முறியடிக்கவில்லையே என்ற கவலை. அவைக்கு வேலையில அடிக்கடி விடுமுறை எடுக்கமுடியாதாம். ஆனால் வருகிற ஒக்டோபர் மாத்தத்தில் ஜேசுதாஸின் கச்சேரி பார்க்க மட்டும் விடுமுறை எடுக்க முடியுமாம்.

அடுத்தவருசம் கருப்பு யூலைக்கு நடிகை அசினை தயவு செய்து கூப்பிடுங்கோ. மொத்தச் சிட்னி மக்களும் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் சிட்னி தமிழனே

புண்ணியம் தேடி அழைகிறாய்

ஆடி கலவரத்தை ஏன் மறந்தாய்

ஆடி கலவரத்தை காட்டி அவுஸ்ரேலியா வந்தாய் :x

மேடை ஏறிய கலைஞர்களை

படம் பிடித்து புலிகள் என்று

பிதற்றுகிறான் சிங்கள பத்திரிகையாளன்

பார்க்கவில்லையா நீ :?:

சிங்கள நெற் என்ற இணையத்தளத்தில் சென்ற 26ம் திகதி யூலைக்கலவர நிகழ்ச்சியினைப்படம் பிடித்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவன் புலிப்பயங்கரவாதிகள்[LTTE Terrorists members in Sydney demonstrated against Sri Lanka Government ] என்று இன்னிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்களினைக் குறிப்பிட்டுள்ளான்.

[COLOMBO, SinhalaNet 2006.07.26 04:46PM] The LTTE terrorist's so called “Black July” demonstration started at 5:00pm in Martin Place Sydney yesterday. There were not more than 100 people there and this is another unsuccessful demonstration of the LTTE terrorists.

Political observances said, formerly, Sydney was a major fortress for LTTE, but now the Tamil masses realizing what LTTE terrorists doing and due to various banes against the world terrorism and bans against to the LTTE in EU and Australia, majority Tamils were not attend these protests.

83ல் எமக்கு நடந்ததினை நாங்கள் உலகுக்குச் சொன்னால் குற்றமா?. சொன்னதினால் பயங்கரவாதி என எழுதுகிறான் சிங்களவன்.

சிட்னித்தமிழர்களே சிங்கள துடுப்பாட்ட அணிக்கு கொடி பிடிக்க மட்டும் தானா செல்வீர்கள், உங்கள் உறவுகள் கொலை செய்யப்படுவது, கற்பளிக்கப்படுவது உங்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?.

கவிதை அருமை. வாழ்த்துக்கள் புத்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுஜிந்தன்,ரமா,மணிவாசகன்,சிநே

எவ்வளவு எழுதினாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை.

புத்தன், அருமை!

புரிபவர்களுக்கு புரியுமா?

நாம் புரிய வைக்க வேண்டும்...

வெட்கம் இப்படிப்பட்டவர்களை பார்த்தாலே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவியாவுக்கும்,தூயாவுக்கும் நன்றிகள்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை பாராட்டுகள் புத்தன்

இது SYDENY கு மட்டுமல்ல melbourne கும் பொருந்தும்

புத்தா...இப்பொழுது நம்புகின்றேன்..உமக்கு ஞானம் வந்துவிட்டது தான் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.