Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேசக்கரம் பற்றிய கேள்விகள் பதில்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் இருந்து தாயக விடுதலைக்கு பங்களிப்பு செய்தவர்களை சிலரை ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவிரர் பிடித்து சிறையில் வைத்து இருக்கிறார்கள் அதில் சமீபத்தில் ஒருவர் சிறைக்குள் கொல்லவும் பட்டுள்ளார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் 

நீங்கள் இங்கு குறிப்பிட்டிருப்பது அண்மையில் மகசீன் சிறையில் இறந்த கோபிதாஸ் பற்றியென நினைக்கிறேன். கோபிதாஸ் 2007இல் அதாவது யுத்தம் நடந்து கொண்டிருந்த போது இலங்கை சென்றிருந்தார். அப்போது கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளானவர். 2012இல் வழக்கு முடிவுக்கு வந்து அச்சு பெற்றிருந்தார்.  கோபிதாஸ் எந்த உதவி அமைப்பின் பிரதிநிதியாக பிடிபடவில்லை.

கோபிதாஸ் மீதான வழக்கை நடாத்திய சட்டத்தரணிகளுடன் அவரது வழக்கு பற்றி பேசியிருக்கிறேன். அண்மையில் பேசிய போது தான் விரைவில் லண்டன் வந்துவிடுவதாக நம்பிக்கையோடு இருந்தார். கோபிதாஸ் பற்றி ஒரு பதிவை விரைவில் எழுதுவுள்ளேன். கோபிதாஸ் பற்றி அவரது மரணத்தின் பின்னர் எழுதுவது கூட உங்கள் தேசியசிந்தனையில் பாதகமான விளைவாகக்கூட இருக்கலாம். 

  • Replies 85
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா இதில எங்கைப்பா கோவம் உங்களில ? உண்மையைச் சொல்லியிருக்கிறேன். நான் உங்களைப்போல கதிரையிலிருந்து தண்டச்சோறு சாப்பிடேல்ல. 2வேலை உடலை வருத்தி உழைக்கிறேன். அதேநேரம் என்னால் முடிந்தவரை 8மாணவர்களை எனது தனித்த உழைப்பில் கல்வி கற்க உதவுகிறேன். இதுமட்டுமில்லை எனது சக்திக்கு அப்பாற்பட்டு உங்கள் போன்ற தேசியவாதிகளால் கைவிடப்பட்ட போராளிகளுக்கு சோறுபோடுகிறேன்.அவர்களே இதனை நீ யாருக்கும் முன்னால் துணிந்து சொல்லு என அனுமதி தந்துள்ளார்கள். இதெல்லாம் சொன்னால் உங்களுக்கு பிடிக்காது நீங்கள் சொல்லாமல்  செய்கிறேன் என்று சொல்லுவீங்கள். 

என்னைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? நான் தண்டசோறு சாப்பிடுவதற்கு மக்களிடம் நிதி திரட்டி பெரும்பகுதியை நிர்வாக தேவைக்கு என்று எடுத்துக்கொண்டு அந்த நிதியில தண்டசோறு சாப்பிடுகின்றேன் என்று நினைக்கின்றீர்களா ? நானும் உழைத்துத்தான் சாப்பிடுகின்றேன் குறிப்பாக உங்களைப்போல் இல்லாமல் உழைத்து சாப்பிடுகின்றேன். 

நான் தேசியவாதி என்று எப்போது உங்களுக்கு சொன்னேன் நான் ஒருபோதும் அப்படி சொன்னதும் இல்லை அப்படி சொல்லி மக்களை ஏமாற்றும் தேவையும் எனக்கு இல்லை என்பதினை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன்.

நேசக்கரம் நிர்வாகச் செலவுகள் முழுவதும் எனது தனிப்பட்ட உழைப்பு இது இங்கு அனைவரும் அறிவார்கள். மற்றும் உதவி செய்கிற யாவரும் இதை அறிவார்கள். இதிலிருந்து புரிகிறது நேசக்கரம் பற்றி எதையும் வாசிக்கவோ அறியவோ இல்லையென்பது. இத்தகைய எவ்வித அறிதலும் இல்லாத ஒருவரோடு இவ்வளவு நேரத்தை வீணாக்கிவிட்டேன். 
 
இக்கேள்விபதில் பகுதிகளில் 1,2 பக்கங்களிலேயே நேசக்கரம் நிர்வாகம் அதன் செலவுகள் எப்படி செய்யப்படுகிறது என்ற விளக்கம் யாவும் கொடுத்துள்ளேன். கணக்கு வங்கி அறிக்கை யாவும் யேர்மனியி வரித்திணைக்கழத்திற்கு வருடாவருடம் கொடுக்க வேண்டும். இது நீங்கள் வாழும் ஆங்கியே நாடல்ல சுத்துமாத்து செய்ய ஒவ்வொரு சதத்திற்கான சகல ஆததாரமும் பெற்று வருடாவருடம் லைசென்ஸ் புதுப்பித்து தருவார்கள். 
 
உங்களுக்கு நேரம் மினக்கெட்டு பதில் எழுதுவது உங்களுக்காக அல்ல புதிதாக இதனை வாசிக்கிறவர்கள் அறிந்து கொள்வதற்காகவே. அடிப்படை விளக்கமே இல்லாமல் வெட்டி ஒட்டுவதே பெரும்பணியென்ற உங்களுக்கு ஒரு அமைப்பை அல்லது ஒருவரை விமர்சிக்க முன்னம் அவைபற்றி ஆராய்ந்துவிட்டு வாருங்கள். 
 
மிக்க நன்றிகள் உங்கள் அறிவார்ந்த கண்டுபிடிப்புக்கும் கருத்துக்கும். உங்கள் கருத்து ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல நஞ்சுதானே தவிர நல்லெண்ணத்தினாலான எண்ணம் எதுவும் இல்லை. இதையும் ஒருநாள் காலம் புரிய வைக்கும்.

வணக்கம் சாந்தி,

உங்கள் பிரச்சனைகளுக்குள் நான் / நிர்வாகம் தலையிட விரும்பவில்லை. விதி மீறல்கள் இடம்பெற்றாம் மட்டும் எம் தலையீடு இருக்கும்.

ஆனால், நாளாந்தம் தன் வேலைகளுக்கும் இடையில் செய்திகளை பல்வேறு தளங்களில் இருந்து கிரமமாக பதிந்து வரும் தமிழரசின் செயற்பாடுகளை பார்த்து வெறுமனே 'வெட்டி ஒட்டி' வேலை செய்கின்றவர் என்று மட்டம் தட்டுவதை நாம் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

பல ஆயிரம் தளங்களும் புளக்களும் (Blogs) புதிது புதிதாக முளைத்துக் கொண்டு இருக்கும் நிலையில் இன்றும் யாழ் பலரையும்  சென்றடைந்து  கொண்டு இருப்பதற்கு செய்திகளும் மிக முக்கியமானதாக அமைகின்றது. இங்குள்ள அநேக உறுப்பினர்கள், வாசகர்கள் முதன் முதலில் யாழை வந்தடைந்தும் செய்திகளாலும் அதற்கு இடப்படும் பின்னூட்டங்களாலும் தான். அப்படி வந்தவர்கள் தான் பின்னர் ஆக்கங்களை சொந்தமாக எழுதவும், மற்றவர்களை ஊக்குவிக்கவும். நேசக்கரம் போன்ற உதவி அமைப்புகளை அறிந்து தம் பங்களிப்புகளை நல்கவும் செய்கின்றனர். ஒரு இரண்டு மாதங்கள் எவரும் செய்திகள், அரசியல் கட்டுரைகள், புதினங்கள் ஒட்டவில்லை என்றால் யாழின் வாசகர்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியுறும் என்பதும் எல்லாருக்கும் தெரிந்த விடயம். எனவே செய்திகளை ஒட்டுகின்றவர்களைப் பார்த்து 'வெறும் வெட்டி ஒட்டுகின்றவர்கள்' என்று மட்டமாக எழுதுவது தவறு.

எல்லாரும் தங்கள் கடும் வேலை பளுக்கள், குடும்ப சுமைகள், படிப்பு என்பனவற்றிற்காக செலவழிக்கும் நேரங்களுக்கிடையில் தான் யாழிற்கு என்றும் மினக்கெடுகின்றனர். ஒவ்வொருவரின் செயலும் மற்றவரின் செயலை விட எள்ளளவும் குறைந்ததும் இல்லை, கூடினதும் இல்லை.

மீண்டும், உங்கள் நேசக்கரம் தொடர்பான கேள்வி பதில்களிலோ விவாதங்களிலோ நானோ நிர்வாகமோ தலையிடுவதற்காக இதனை எழுதவில்லை என்பதை மீண்டும் அழுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். விதி மீறல்கள் இடம்பெற்றால் மட்டும் எம் தலையீடு இருக்கும்.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி  மன்னிக்கவும்.

இங்கு தமிழரசு அல்லது பூச்சிக்கு எதுவும் பதில் எழுதவோ கருத்தாடவோ எனது நேரத்தை செலவளிப்பதில்லையென்ற முடிவையெடுத்தேன். ஆனால் இவர்கள் இருவரும் வேண்டுமென்றே குற்றம் சுமத்துவரையும் பழிசுமத்துவதையும் நீங்களும் பார்த்தீர்கள் தானே.

யாழில் வளர்ச்சியில் தமிழரசின் பங்கு எவ்வளவோ அதன்சம அளவு நேசக்கரத்தின் வளர்ச்சியிலும் யாழின் பங்கு உண்டு. இதனை எந்த ஊடகங்கள் செவ்வியென அழைக்கிறபோதும் இந்த நன்றியை நான் என்றும் மறந்துவிடாமல் குறிப்பிட்டே வருகிறேன். அதேநேரம் யாழ் இணையத்தில் பலரை இணைந்து கொள்ளுமாறும் வேண்டுகிறேன். பலரை யாழில் இணைத்தும் இருக்கிறேன். 

தன்னைப்போன்று மற்றவரின் செயலும் குறைந்ததில்லை என்ற எண்ணம் தமிழரசு என்ற செய்திகளை யாழில் இணைக்கும் நபருக்கு இருந்திருந்தால் இப்படி பொய்யான தனது கருத்துக்களை இங்கே கொண்டு வந்திருக்கமாட்டார். 
 
நீங்கள் கூட நேசக்கரம் மூலம் பெற்றோரை இழந்த பிள்ளைகளை 3வருடங்களாக எடுத்து உதவி வருகிறீர்கள். உங்களுக்கும் தெரியும் எனது சிரமங்கள் தொல்லைகள். இதுபோல இங்கு ஏற்கனவே இடையிடை சிலரால் வேண்டுமென்றே நேசக்கரம் மீது செய்யப்படும் தாக்குதல்கள் கூட அவர்களால் இதனை அழிக்க வேண்டுமென்ற நோக்கமேயன்றி பெரும் கருணையான சிந்தனையென்று ஏற்க முடியவில்லை. தொடர்ந்து தமிழரசு வைத்துள்ள குற்றச்சாட்டுகளை வாசித்தால் புரியும். 
 
நேற்று மாவீரர் அருணனின் நினைவுநாளில் நான் போட்ட அவரது கடிதத்தில் இவர்கள் இருவரினதும் சீண்டல் ஆரம்பித்தது. மாவீரர் அருணனின் கடிதங்கள் நிகழ்ச்சிகளை இங்கு தினமும் ஒவ்வொன்றாக பதிவிடும் நோக்கிலேயே ஆரம்பித்தேன். அதற்குள் வந்து பிரச்சனையை தந்தது நானில்லை. அவரவர்க்கும் தங்கள் தங்கள் பணிகளே பெரிதுதான் அதற்காக மற்றவர்கள் மீது சேறடிக்கும் போது கருணை காருண்யம் நியாயமெல்லாம் அன்னியமாகிவிடுகிறது.
 
இங்கு இந்த இரு நபர்களுக்கும் எவ்வித கருத்தையும் எழுதமாட்டேன் என ஏற்கனவே நேசக்கரத்தோடு இணைந்திருக்கும் தம்பியொருவரின் வேண்டுதலுக்கு சற்று முன்னர்தான் வாக்குறுதியளித்தேன். அதையும் மீறி உங்களுக்கு எழுத வேண்டி வந்தது உங்கள் கருத்துக்கு மதிப்பளித்தே.
 
விதி மீறல்களை இவ்விருவரும் பல முறை செய்திருக்கிறார்கள் அவை கண்டு கொள்ளப்படவில்லை. 
இங்கு தமிழரசு , பூச்சி இருவருக்கும் இங்கு எதுவும் எழுதமாட்டேன். 
 
தங்கள் கற்பனைகளை நேசக்கரம் மீதான குற்றச்சாட்டாக கேள்விகளாக கேள்வி கேட்போருக்கும் பதிலளிப்பதில்லையென இன்றிலிருந்து முடிவெடுத்துள்ளேன். 
 
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு கேள்வி??

எந்தக்காரணமாகவும் இருக்கட்டும்

சோறு போடுபவரை  தட்டிவிடலாமா???

யாழில் வளர்ச்சியில் தமிழரசின் பங்கு எவ்வளவோ அதன்சம அளவு நேசக்கரத்தின் வளர்ச்சியிலும் யாழின் பங்கு உண்டு. இதனை எந்த ஊடகங்கள் செவ்வியென அழைக்கிறபோதும் இந்த நன்றியை நான் என்றும் மறந்துவிடாமல் குறிப்பிட்டே வருகிறேன். அதேநேரம் யாழ் இணையத்தில் பலரை இணைந்து கொள்ளுமாறும் வேண்டுகிறேன். பலரை யாழில் இணைத்தும் இருக்கிறேன். 

தன்னைப்போன்று மற்றவரின் செயலும் குறைந்ததில்லை என்ற எண்ணம் தமிழரசு என்ற செய்திகளை யாழில் இணைக்கும் நபருக்கு இருந்திருந்தால் இப்படி பொய்யான தனது கருத்துக்களை இங்கே கொண்டு வந்திருக்கமாட்டார். 
 
நேசக்கரத்தின் 5 ஆண்டு காலம் பற்றி நீங்கள் எழுதியதில் யாழ் பற்றி ஒரு சொல் தானும் எழுதவில்லை என்பதையும் நாம் அவதானித்து உள்ளோம் என்பதை இந்த இடத்தில் தானும் சொல்ல விரும்புகின்றோம்.

அதற்கான அரசியலையும் நாம் புரிந்து கொண்டு இருக்கின்றோம்.

உங்கள் திரி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=134569&p=989581

நன்றி வணக்கம்.

வணக்கம் நிழலி,
 
நேசக்கரத்தின் ஐந்தாண்டு நிறைவு குறித்த திரியில் யாழுக்கு நன்றி சொல்லவில்லை என்ற உங்கள் கருத்து பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நேசக்கரத்தின் செயற்பாட்டில் யாழ்கள உறுப்பினர்களின் பங்கு அளப்பரியது என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும். கருத்துக்கள பொறுப்பாளராக தமிழரசு- சாந்தி குறித்த உங்கள் முன்னைய பின்னூட்டத்தில் எனக்கு எள்ளவும் மாற்றுக்கருத்தில்லை.

"நேசக்கரத்தின் மூலம் செய்யப்படும் செயற்பாடுகள் யாழுக்கான பெருமை என்பது என் தாழ்மையான கருத்து.''

இப்படிக்கு,
யாழ் ஊடாக நேசக்கரத்துக்கு பங்களிக்கும் சாதாரணன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தின் 5 ஆண்டு காலம் பற்றி நீங்கள் எழுதியதில் யாழ் பற்றி ஒரு சொல் தானும் எழுதவில்லை என்பதையும் நாம் அவதானித்து உள்ளோம் என்பதை இந்த இடத்தில் தானும் சொல்ல விரும்புகின்றோம்.

அதற்கான அரசியலையும் நாம் புரிந்து கொண்டு இருக்கின்றோம்.

நன்றிகள் நிழலி யாழுக்கு நன்றி சொல்லப்படாததை சுட்டிக்காட்டியமைக்கு. 09.01.2014அன்று இச்செய்தி இங்கும் முகநூல், நேசக்கரம் இணையத்திலும் செய்தியை பகிர்ந்திருந்தேன். இதவரையில் இச்செய்தியில் இத்தகையதொரு நன்றி மறக்கப்பட்டிருக்கு என்பதனை ஏனோ இதுவரை சுட்டிக்காட்ட உங்களுக்கு மறந்து போனதோ தெரியேல்ல. 
 
நீங்கள் இதை சொல்லும் வரை இவ்விடயம் பற்றி நான் இதுவொரு பெரும் குறையாக உங்களை உறுத்திக் கொண்டிருந்ததை நினைத்திருக்கவேயில்லை. எனினும் நன்றிகள். தவறுகள் திருத்தப்பட வேண்டியவை. தண்டனைக்குரியவையில்லை. இல்லை ஏதும் தண்டனை உங்களால் தரப்படுமானாலும் அதனையும் தாருங்கள் நன்றியோடு ஏற்றுக் கொள்வேன்.
 
நன்றி மறப்பது மட்டும் நன்றல்ல. தவறுகளை உரிய நேரத்தில் சுட்டிக்காட்டுவது கூட அந்த நன்றி மறவாமையின் நன்றி தான். 
 
இச்செய்தியில் பலதடவைகள் திருத்தங்கள் செய்யப்பட்டது. இந்த அமைப்பில் தங்கள் முகங்களை மறைத்து ஆதரவு தருகிறவர்கள் சொல்லி பல விடயங்கள் திருத்தியிருக்கிறேன். இன்று உங்கள் இக்கருத்தை பார்த்துவிட்டு செய்தியை பலமுறை திருத்தங்கள் சொன்னவரும் தனது வருத்தத்தினை உங்களுக்குத் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார். அவர் இக்களத்தின் வாசகர் மட்டுமே. ஆக கருத்தில் நிழலியிடம் மன்னிப்பு கோரமுடியாமையால் அவரது வருத்தத்தையும் இங்கு தெரிவிக்கிறேன்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதற்கான அரசியலையும் நாம் புரிந்து கொண்டு இருக்கின்றோம்.

உங்கள் திரி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=134569&p=989581

நன்றி வணக்கம்.

நீங்கள் ஏதாவது அரசியலை உருவாக்கியிருக்கிறீங்களோ தெரியாது நிழலி. நேசக்கரம் எந்த அரசியலையும் கொண்டு இயங்கவில்லை. அவரவர் புரிதல் தானே இப்போதைய அரசியல். அரசியல் ஊதுகுழலாக நேசக்கரம் மாறக்கூடாது என்பதனால் தான் அரசியல் தவிர்த்து தனியாக இயங்குகிறது. தனித்த ஓட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாது. 

முடிந்தவரை சவால்களைத் தாண்டி செல்ல வேண்டியது முடியாத போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒதுங்குவோம். அப்போதும் வெறும் நேசக்கரம் என்ற பெயரை மட்டுமே மிச்சமாகக் கொண்டிருப்போம்.

நன்றி வணக்கம்.

இப்போ என்ன முடிவு? சந்தியும் துரோகியா?

அவர் செய்வதில் அரசியல் இருந்தாலும் என்ன பிழை?

இங்கு அவரை "சந்தேகிப்பவர்கள்" என்ன சொல்ல வருகிறீர்கள்? அவர் ஊரில் உள்ளவர்களை சாட்டி காசு அடிக்கிறார் என்றா?

கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்....

என்னை பொறுத்தவரை அவர் "அரசியல்" (என்ன இழவோ) நோக்கோடு செய்தாலும் பிழையில்லை...அவரின் செயல் பாட்டில் மக்கள் நலம் அடைவதாகவே தெரிகிறது.....எங்களால் செய்ய முடியாத...செய்ய விரும்பாத...சேவையை அவர் செய்கின்றார் என்றே கருதுகின்றேன்....

நன்றி சாந்தி

இங்குள்ள தேசியவாதிகளின் தொல்லை தாங்கள்ள.....

சாந்தி அக்காவிற்கு இரு கேள்விகள்,

1) நேசக்கர திட்ட பயனாளிகள் யாரவது நீங்கள் உறுதியளித்த பொருளாதார உதவிகள் கிடைக்கவில்லையென்று கடந்த ஐந்து வருடங்களில் முறையிட்டுள்ளார்களா?

2) நேசக்கரதிற்கு காசு தந்து உதவுவோர் யாராவது தமது காசு தவறாக பாவிக்கபட்டதாக முறையிட்டுள்ளார்களா?

என்னை பொறுத்தவரை எனது உதவிகள் சென்று பயனாளிகளை அடைந்ததற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. அதனால் தான் நான் தொடர்ந்து உதவுகிறேன்.

சாந்தி அக்காவிற்கு இரு கேள்விகள்,

1) நேசக்கர திட்ட பயனாளிகள் யாரவது நீங்கள் உறுதியளித்த பொருளாதார உதவிகள் கிடைக்கவில்லையென்று கடந்த ஐந்து வருடங்களில் முறையிட்டுள்ளார்களா? - இதற்கு சாந்தி பொறுப்பாக மாட்டார்கள்..அவர் என்ன பணத்தை பயிரிட்டா கொடுக்க முடியும்?

2) நேசக்கரதிற்கு காசு தந்து உதவுவோர் யாராவது தமது காசு தவறாக பாவிக்கபட்டதாக முறையிட்டுள்ளார்களா?  -- இத்தனை வருடத்தில் இந்த விடயத்தில் யாரும் குறை கூறவில்லை..ஆகவே அந்த பிழை நடக்க வில்லை என்றே நினைக்கிறன்...ஆகவே தான் அரசியலில் பிழை பிடிகிறார்கள்

என்னை பொறுத்தவரை எனது உதவிகள் சென்று பயனாளிகளை அடைந்ததற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. அதனால் தான் நான் தொடர்ந்து உதவுகிறேன்...இங்கு அவதானித்ததில் அது தான் நடக்கிறது....ஒரு நல்ல விடயம் நடப்பதிலும் நாலு குறை

கேள்விகேட்டவனை சுட்டால் தான் அடங்குவார்கள்...பின் வாழ்க சொல்லுவார்கள் போலுள்ளது :) :)

கேள்விகேட்டவனை சுட்டால் தான் அடங்குவார்கள்...பின் வாழ்க சொல்லுவார்கள் போலுள்ளது :) :)

சாந்தியக்காவிற்கான கேள்விகள் என்றாலும் பதில்களுக்கு நன்றி. நான்தான்.

எனக்கு தெரிந்து பயனாளிகளோ, கொடையாளிகளோ முறைப்பட்டதாக தெரியவில்லை.

பயனாளி,கொடையாளி, அல்லது தொண்டர்கள் குறை கூறினால் அது பிரச்சினை.

நானும் இங்கு சில அமைப்புகளில் இருந்து இப்படி கேள்வி கேட்டு துளைத்தே கொன்றுவிட்டார்கள்.

இவ்வளவிற்கும் எல்லாம் முறிந்து வேலை செய்தவர்கள் போட்ட காசு. எதோ பெரிய திரை மறைவு விடயங்கள் நடப்பது போல் கண்டவன்(ள்) வந்து குழப்புவார்கள். கேட்டால் ஐந்து வருடத்திற்கு முன் தொண்டரா இருந்து இரண்டு பாவித்த கணணியை கொடையா கொடுத்த வள்ளல் என்று பில்டப் வேறு.

2006 இல் இருந்து நான் எனது நண்பர்கள் உறவினருடன் சேர்ந்து உதவுகிறேன்.

வருடத்திற்கு கனடாவிலும், ஊரிலும் சேர்த்து $20,000 மேல் கொடுக்கிறேன்.

என்னாலும் சிறப்பாக செயல்பட முடிகிறது.

இரு வருடங்களுக்கு முன் எப்படியோ நான் உதவுவதை மணந்து பிடித்த ஒருவர் என்னிடம் செல்பேசியில் கணக்கு கேட்டார்.

நான் தோட்டத்தில் கொத்திக்கொண்டு இருக்கிறேன். நேரா வந்து கேள்வி கேட்க முடியுமா என்றேன். ஆள் கப்சிப். இப்போது நிகழ்வுகளில் கண்டாலும் எட்ட நிற்பார். :)

உதவுவோரை ஊக்கபடுத்தும் கலாச்சாரம்.

தமிழர் நல்லா இருக்கிறார் என்றால் ஊக்கபடுத்தி அவரை இன்னும் மேலேற்றிவிடும் கலாச்சாரம்.

ஒருவரின் திறமையை கண்டறிந்து அவருக்கு உதவி முன்னேற்றும் கலாச்சாரம் எங்களில் குறைவு.

நானும் எனது சக கனடிய உறவுகளிடம் இதை கற்று தேர்ந்தேன்.

கடந்த 14 வருடத்தில் 200 மேற்பட்ட தமிழ் இளையோருக்கு நல்ல நிறுவன வேலைகள் எடுத்து கொடுத்து உதவுகிறேன். இதுவரை வியாபார முன்னோடியாக இருந்து 10 மேற்பட்ட இளையோர் வியாபாரம் தொடங்க உதவியுள்ளேன்.

இப்போதும் 70 ஆயிரம் உழைத்து நொந்த 6 இளையோருக்கு 100 ஆயிரத்திற்கு மேல் உழைக்க பயிற்சி,பட்டம்,மற்றும் தொடர்புகளை கொடுத்து வருகிறேன்.

பல விவசாயிகளையும் உருவாக்கி வருகிறேன். நிறைய நேரம் குடும்பத்திற்கோ, குழந்தைகளுக்கோ கிடைப்பதில்லை.

ஆனால் இந்த தொண்டுகளை பற்றி யாராவது குதர்க்க கேள்வி கேட்டால் காருக்கு மண்வெட்டி எடுக்க போயிடுவன். (பாத்தி கட்டதான் :D)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கடைசி வரி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. :)

வாழ்க வளமுடன்.

மிக நல்ல செயல்கள்....உங்களது தோட்டம் எங்கே உள்ளது?

பெரும்பான்மையினர் எதையும் குழப்புவது கிடையாது.....

மற்றவர்களுக்கு படம் காட்ட வெளிகிடுபவர்களே இப்படி எல்லாத்திலும் அதிமேதாவித்தனமாக கேள்விகேட்டு குழப்பங்களை உண்டாக்குவது....

உங்கள் பிள்ளைகளையும் உங்களோடு சேர்த்து எல்லா வேலையையும் செய்தால்..அவர்களுக்கு நேரம் ஒதுக்குவது இல்லை என்று நீங்களோ அவர்களோ உணர மாட்டீர்கள்....

Edited by naanthaan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ என்ன முடிவு? சந்தியும் துரோகியா?

அவர் செய்வதில் அரசியல் இருந்தாலும் என்ன பிழை?

இங்கு அவரை "சந்தேகிப்பவர்கள்" என்ன சொல்ல வருகிறீர்கள்? அவர் ஊரில் உள்ளவர்களை சாட்டி காசு அடிக்கிறார் என்றா?

Naanthaan எனக்கு அரசியல் செய்ய எந்த காரணமும் இல்லை. அப்படியொரு எண்ணத்தில் நேசக்கரமும் இல்லை.

ஒவ்வொரு கேள்விகளின் பின்னாலும் பல கதைகள் இருக்கிறது.

2002இல் சில போராளிகளால் அரசியல் அல்லாத ஒரு தொண்டு அமைப்பை நிறுவ வேண்டுமென்ற விருப்பம் சொல்லப்பட்டது. 2004இல் செயற்படுத்த முடிவெடுத்து அதற்கான வேலைகள் ஆரம்பித்த போது 06.10.2004 அன்று யேர்மனிய குற்றத்தடுப்பு புலானய்வுத்துறையால் நானும் எனது குடும்பமும் புலிகளுக்கான சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டு எம்மீது நடவடிக்கை எடுத்தது. அதன்  தாக்கம் அதன் இழப்புகள் இப்போது நினைவுபடுத்தினால் அது கூட என்மீதான தங்கள்  இரக்கத்தை வேண்டும் அல்லது வேறொரு வகையில் தாக்கமாக வந்து சேரும்.

எம்மீதான வழக்கு 2006வரை நீடித்து வழக்கு முடிந்த போது எங்களுக்கு சாதகமான தீர்வே கிடைத்தது. இத்தீர்வு கிடைத்த பின்னர் 2006இல் மட்டு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் தயாமோகண்ணா மற்றும் அருணாண்ணா உள்ளிட்டவர்களின் ஆலோசனையோடு நேசக்கரம் கிழக்கில் ஆரம்பித்து இயங்கத் தொடங்கியது. இதில் தயாமோகண்ணா கிழக்கில் இருந்து நிறைந்த ஆதரவைத் தந்தார். 
 
நேசக்கரம் உருவாக்கத்தில் பங்காற்றியோர் சிலரை இங்கு குறித்தாக வேண்டும். நேசக்கரம் தோற்றமும் தொடரும் என ஒரு கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன். யாழில் நேசக்கரம் என்ற பெயர் எப்படி வந்தது போன்ற விபரங்கள் பல உண்மைகள் இக்கட்டுரையில் வரும். கொஞ்சம் பொறுத்திருங்கள்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவிற்கு இரு கேள்விகள்,

1) நேசக்கர திட்ட பயனாளிகள் யாரவது நீங்கள் உறுதியளித்த பொருளாதார உதவிகள் கிடைக்கவில்லையென்று கடந்த ஐந்து வருடங்களில் முறையிட்டுள்ளார்களா?

2) நேசக்கரதிற்கு காசு தந்து உதவுவோர் யாராவது தமது காசு தவறாக பாவிக்கபட்டதாக முறையிட்டுள்ளார்களா?

என்னை பொறுத்தவரை எனது உதவிகள் சென்று பயனாளிகளை அடைந்ததற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. அதனால் தான் நான் தொடர்ந்து உதவுகிறேன்.

கேள்வி 1இற்கான பதில் :- இது வரையில் இப்படியொரு குற்றச்சாட்டு இல்லை. ஆனால் எமக்கு வந்த விண்ணப்பங்களில் எம்மால் செய்ய முடியாத உதவிகளை எம்மால் முடியாதென்று உரியவர்களுக்கு அறிவித்துள்ளோம். அதுவும் ஏற்கனவே உதவி பெற்றுக் கொண்டு எம்மிடம் விண்ணப்பித்தவர்களையே இவ்வாறு நிராகரிக்க வேண்டி வந்தது.

கேள்வி 2இற்கான பதில் :-  இதுவரையில் யாரும் இப்படியொரு குற்றச்சாட்டு வைக்கவில்லை. பெரும்பாலுமான ஆரம்ப கட்ட உதவிகள் நேரடியாவே உதவியோருக்கும் பயனாளிக்கும் தொடர்புகள் வழங்கப்பட்டு உதவியிருந்தார்கள். இங்கு பணமும் எம்மிடம் வராமல் நேரடியாகவே அனுப்பப்பட்டதால் இப்பிரச்சனை இருக்கவில்லை. 

மற்றும் எமது வங்கிக்கு வந்து போகும் பணத்துக்கான பயனாளி மற்றும் பொதுத்திட்டங்களான பாடசாலை உதவி மாணவர்களுக்கா சிறப்பான கற்பித்தல் போன்றவற்றிற்கான ஆதாரங்கள் யாவும் உதவியவர்களுக்கு கிடைக்கும் வகையில் அனுப்பப்பட்டும் மற்றும் செய்திகளிலஇ வெளிப்படுத்தப்பட்டும் வருகிறது. அத்தோடு மாதாந்த கணக்கறிக்கையில் அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டு இத்தகைய பிரச்சனையும் தவிர்க்கப்பட்டு வருகிறது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
விவசாயி விக்,
இங்கு பல விடயங்களில் நீங்கள் முன்னோடியாக இருப்பது மட்டுமன்றி எல்லோரையும் பாரபட்சமின்றி ஊக்குவித்து ஆதரவு தருவது உங்கள் நல்லெண்ணத்தை மற்றவர்களுக்கும் உதாரணமாக முன்கொண்டு வருகிறது. இதுவரையில் உங்களை நான் சந்தித்ததில்லை பேசியது கூட இல்லை. ஆனால் நேசக்கரம் செல்லும் வழியில் சிறந்த புரிதலோடு உங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறீர்கள். எப்போதும் போல உங்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்போம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிறைய நேரம் குடும்பத்திற்கோ, குழந்தைகளுக்கோ கிடைப்பதில்லை.

இதே நிலமைதான் இங்கும். ஆனால் எல்லாவற்றையும் சமாளித்து அவ்வப்போது இதெல்லாம் தேவையா என சலிக்கும் வவுனியனும்,அம்மா இன்னும் செய்ய வேணும் என ஆதரித்து அம்மாவுக்கு வழிகாட்டிகளாய்  இருக்கும் மகன் பார்த்திபன், மகள் வவுனீத்தா இருவரும் எல்லாத் தடைகளையும் தாண்டு என்கிற மன பலத்தைத் தந்து கொண்டிருக்கும் கடவுள்கள்.  

ஆனால் இந்த தொண்டுகளை பற்றி யாராவது குதர்க்க கேள்வி கேட்டால் காருக்கு மண்வெட்டி எடுக்க போயிடுவன். (பாத்தி கட்டதான் :D)

நான் நினைச்சன் மண்வெட்டியாலை குதர்க்கவாதிகளை கேள்வி கேட்டிருப்பீங்களெண்டு.  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2010 ஒரு மின்னஞ்சல் பரப்பப்பட்டது. கள உறவு மீராபாரதி அவர்கள் இவ்விடயத்தை எனக்கு முகநூலில் அனுப்பியிருந்தார். குறித்த சித்திரா சேரன் என்றவர் யெர்மனியில் இருந்து குறித்திருக்கும் நேசக்கரம் வங்கிக்கணக்கு இலக்கம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த மின்னஞ்சல் தகவல் கீழ்வருமாறு :-

Meera Bharathy

is it true?

From: Chithra Cheran <chithra@gmx.de> To: tamil_araichchi@yahoogroups.com Sent: Wed, March 10, 2010 3:25:27 AM Subject: [Tamil_Araichchi] Fwd: HELPING HAND

Dear Friends,

Somebody has sent me this link. I can't justify , whether it is a genuine case or fraud. But, I understand , the account number from Germany, which is given here is linked with frauds. As we know, now a days the traitors are collecting money from tamils on behalf of Sri Lankan Government; But saying to help the refugees in Vanni. So, I request to all, please verify it and protect our peaple.

Thank you !

------------ - Chithra

-------- Original-Nachricht --------

Datum: Sun, 7 Mar 2010 09:30:00 +0000 Von: Ithaya Chandran <ithayachandran@ hotmail.co. uk> An: Abarna TGTE <abarna@hotmail. com> Betreff: HELPING HAND

http://www.nesakkar am.org/

இந்த மின்னஞ்சலை குறூப் செய்திகள் மூலம் நானறிய 5ஆயிரம் மின்னஞ்சல் வரையில் தொடர்ந்து அனுப்பியிருந்தார்கள். 
 
சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நேசக்கரத்துக்கான லைசென்ஸ் கிடைத்தது 2010 மார்ச்மாதம். குற்றச்சாட்டை வைத்தவர்கள் நேரடியாக யேர்மனி குற்றத்தடுப்பு புலனாய்வுத்துறைக்கு தங்கள் முறைப்பாடுகளை அனுப்பியிருக்க முடியும். இதுவரையில் நேசக்கரம் தவறான வழியில் பணத்தை சேர்க்கிறது என்றோ அல்லது இலங்கையரசின் ஆதரவாக இயங்குகிறதோ என்று கூட யாரும் முறைப்பாடு செய்யவில்லை. சட்டத்திடம் தங்கள் பணிகள் எடுபடாது. உதவுகிறவர்களை குழப்பிவிட்டால் உதவிகள் செல்லாது போகும் தங்கள் எண்ணம் நிறைவேறும் என்பதிலேயே கவனமாக இருந்தார்கள். 
 
ஒரு உதவியமைப்புக்கான வங்கிக்கணக்கை பல நிபந்தனைகள் ஒப்புதல்கள் சட்டப்படியான பதிவுகள் இல்லாமல் யேர்மனியில் தரமாட்டார்கள் என்பதைக்கூட அறியாது பலரால் பலவகையான பரப்புரைகளும் மெயில் பரப்புதல்களும் நடந்தது.

பதிவு அனுமதி கிடைத்த நாளிலிருந்து நேசக்கரத்தின் வங்கிக்கணக்கு இதுதான்.

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் அமைப்பை யாழ் கள உறவுகளின்  உதவியோடு நிறுவத் தொடங்கியவன்  அன்று அதற்கு மோகனும்  இணையவனும் பெரும் உதவி  செய்தார்கள்.  அதனை  தொடங்கிய  பலரில் நானும் ஒருவன் என்கிற முறையில் அதன் ஆரம்பம் அதன் பின்னால் நின்ற யாழ் கள உறவுகள்.அதற்கு உதவிய உறவுகள் இன்று பலர் யாழ்களத்தோடு இணைத்திருக்கவில்லை அவர்களின் அளப்பரிய  உதவிகளோடு யாழ் களத்தில் உருவாக்கம் பெற்ற நேசக்கரம் அமைப்பு பற்றி நானும் சில விடயங்களை எழுதத் தொடங்கியிருக்கிறேன். காரணம்  2002 ல் தான்  உதவி அமைப்பை தொடங்கியதாகவும் பின்னர்  அருணா முன்னர் பிரான்சில் இருந்தவர் தற்போது உயிருடன் இல்லை..தயா மோகன்  சுவிசில் உள்ளார் இவர்கள் கேட்டதால்  தான் நேசக்கரம்  என்கிற அமைப்பை  2006ல் கிழக்கில் தொடங்கியதாக சொல்லும்  சாந்திக்காகவும் அதனை  பார்த்த பின்னர்  யாழில் தான்  நேசக்கரம்  தொடங்கப் பட்டது என்று தெரிந்தும்  பேசாமல் இருப்பவர்களிற்காகவும். அதுவும் நானும் டண்ணும் இதே யாழ் இணையத்தில்  என்ன பெயர் வைக்கலாம் என்று  பகிரங்கமாக  மற்றையவர்களுடன் கலந்தாலோசித்து  வைத்த நேசக்கரம்  என்கிற பெயரை அதற்கான முதலாவது லோகோவை  வலைஞன் வடிவமைத்து தந்திருந்தார்  ஆனால் இதனை   எப்படி  தான் வைத்தாக  கூறப்போகிறாராம்.  நேசக்கரம் என்பதன்  தோற்றத்தையும் அதன் வளர்ச்சி பற்றியும் மற்றையவர்கள் தெரிந்து கொள்வதற்காக  எழுதத் தொடங்குகிறேன்.வேறு எங்கும் அல்ல யாழிலேயேதான் .

 யாழ் நேசக்கரம் இதுதான் அதன் உண்மையான பெயர்  அது பின்னர் நேசக்கரமாக  மாறிவிட்டது இந்த  அமைப்பின் முதலாவது உதவித் திட்டம் இங்கு யாழிலேயே ..இணைப்பு  அங்கு சாந்தி என்கிற பெயரை  யாராவது  கண்டால் அறியத் தரவும். நன்றி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30377

அப்போ வரட்டா....வருவம்.....

Edited by nunavilan

மிக நல்ல செயல்கள்....உங்களது தோட்டம் எங்கே உள்ளது?

பெரும்பான்மையினர் எதையும் குழப்புவது கிடையாது.....

மற்றவர்களுக்கு படம் காட்ட வெளிகிடுபவர்களே இப்படி எல்லாத்திலும் அதிமேதாவித்தனமாக கேள்விகேட்டு குழப்பங்களை உண்டாக்குவது....

உங்கள் பிள்ளைகளையும் உங்களோடு சேர்த்து எல்லா வேலையையும் செய்தால்..அவர்களுக்கு நேரம் ஒதுக்குவது இல்லை என்று நீங்களோ அவர்களோ உணர மாட்டீர்கள்....

உண்மை. நான் தான். எப்போதும் ஓரிருவர் தான் குழப்புவது.

தம்மால் செய்யமுடியாததை மற்றவர் செய்தால் பொறுக்காது.

வால்மீகி விமானத்தை பற்றி எழுதிவிட்டார் என்பதற்காக ரைட்ஸ் சகோதரர்களை சந்தேகபடுவது போல்.

எங்களுக்கு தோட்டம் ஜோர்ஜ் டவுன், பெல்வில், கிங்க்ஸ்டன் பக்கம் உள்ளது.

குழந்தைகளை தோட்டத்திற்கு கூட்டி செல்வேன். ஆனால் எனது முழு நேர வேலை, வேறு வியாபாரங்களும் இருப்பதால் சிரமம்.

இந்த கோடை எங்கள் ஜோர்ஜ் டவுன் தோட்டத்தில் யாழ்கள உறவுகளுக்காக ஒரு சிறு ஒன்று கூடலை நடத்த உத்தேசம். கட்டாயம் குடும்பத்துடன் வாருங்கள்.

கேள்வி 1இற்கான பதில் :- இது வரையில் இப்படியொரு குற்றச்சாட்டு இல்லை. ஆனால் எமக்கு வந்த விண்ணப்பங்களில் எம்மால் செய்ய முடியாத உதவிகளை எம்மால் முடியாதென்று உரியவர்களுக்கு அறிவித்துள்ளோம். அதுவும் ஏற்கனவே உதவி பெற்றுக் கொண்டு எம்மிடம் விண்ணப்பித்தவர்களையே இவ்வாறு நிராகரிக்க வேண்டி வந்தது.

கேள்வி 2இற்கான பதில் :- இதுவரையில் யாரும் இப்படியொரு குற்றச்சாட்டு வைக்கவில்லை. பெரும்பாலுமான ஆரம்ப கட்ட உதவிகள் நேரடியாவே உதவியோருக்கும் பயனாளிக்கும் தொடர்புகள் வழங்கப்பட்டு உதவியிருந்தார்கள். இங்கு பணமும் எம்மிடம் வராமல் நேரடியாகவே அனுப்பப்பட்டதால் இப்பிரச்சனை இருக்கவில்லை.

மற்றும் எமது வங்கிக்கு வந்து போகும் பணத்துக்கான பயனாளி மற்றும் பொதுத்திட்டங்களான பாடசாலை உதவி மாணவர்களுக்கா சிறப்பான கற்பித்தல் போன்றவற்றிற்கான ஆதாரங்கள் யாவும் உதவியவர்களுக்கு கிடைக்கும் வகையில் அனுப்பப்பட்டும் மற்றும் செய்திகளிலஇ வெளிப்படுத்தப்பட்டும் வருகிறது. அத்தோடு மாதாந்த கணக்கறிக்கையில் அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டு இத்தகைய பிரச்சனையும் தவிர்க்கப்பட்டு வருகிறது.

பதில்களுக்கு நன்றி.

இதே நிலமைதான் இங்கும். ஆனால் எல்லாவற்றையும் சமாளித்து அவ்வப்போது இதெல்லாம் தேவையா என சலிக்கும் வவுனியனும்,அம்மா இன்னும் செய்ய வேணும் என ஆதரித்து அம்மாவுக்கு வழிகாட்டிகளாய் இருக்கும் மகன் பார்த்திபன், மகள் வவுனீத்தா இருவரும் எல்லாத் தடைகளையும் தாண்டு என்கிற மன பலத்தைத் தந்து கொண்டிருக்கும் கடவுள்கள்.

நான் நினைச்சன் மண்வெட்டியாலை குதர்க்கவாதிகளை கேள்வி கேட்டிருப்பீங்களெண்டு. :lol:

எனக்கு தெய்வம் வரமா ஒரு இரும்பு மனுசியை தந்திருக்கிறது.

எனது ஒரு குழந்தை மாற்று திறனாளி. துணைவி முகம் சுழிக்காமல் அவர்களை பார்ப்பதால் தான் முடிகிறது.

எனது மாற்று திறனாளி குழந்தை என்னிலும் ஒரு படி மேலே. நண்பனுக்கு பிறந்தநாள் என்றால் வீட்டில் கப் கேக் செய்துகொண்டு போவார். இப்போதும் தனது ஆசிரியைக்கு புற்று நோய் என்று பதறிவிட்டார். பள்ளியில் காசு சேர்த்ததில் குட்டிபுலி முதலிடம்.

அவரை பார்க்கும்போது எல்லா களைப்பும், தளர்ச்சியும் பறந்துவிடும்.

நான் ஒரு சபிக்கப்பட்டவன். தோற்று களைத்து இனி இழக்க ஒன்றும் இல்லை என்று வெறியோடு உழைக்கிறேன்.

அக்கா, எனது கடைசி கருத்தை எழுதிவருகிறேன். அதில் எப்படி சபிக்கப்பட்டேன் என்று விளக்குகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.