Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்ட சுதந்திரபுரப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவுநாள்!

Featured Replies

சுதந்திரபுரப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவுநாள்!

 

inappadukolaiputhukkudiyiruppu.jpg10.06.1998 அன்று வன்னியில் முல்லைத்தீவு கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டு அப்பாவி பொதுமக்களை கொத்துக்கொத்தாக அழித்தது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லையென்றுதான் நினைக்கிறேன். யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம்.

அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு படையினர் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.ஒரு குடும்பத்தில் கைக்குழந்தையொன்றைத் தவிர மிகுதி ஐவரும் கொல்லப்பட்டதாக ஞாபகம். அதற்கு ஒரு கிழமைக்கு முன்புதான் கிளிநொச்சியிலிருந்து பெருமெடுப்பில் திருவையாறு வழியாக முன்னேறிய படையினரை முறியடித்தனர் புலிகள். அதில் சிங்கள அரசின் சிறப்புப் படைப்பிரிவொன்று நிர்மூலமாக்கப்பட்டது. மொத்தமாக நூற்றுக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

இப்படுகொலை நடத்தப்பட்ட நாளுக்கு சரியாக ஒருவருடம் முன்பு 'ஜெயசிக்குறு' என்ற பேரில் நடவடிக்கை தொடங்கி வன்னியை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தினர் மீது புலிகள் அதிரடித்தாக்குதலொன்றை நடத்தி படைத்தரப்புக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்தியிருந்தனர். அன்றைய சுதந்திரபுரப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு எம் அஞ்சலிகள்.

அன்றைய காலகட்டங்களிலும் அதற்கு பிற்நதிய காலகட்டங்களிலும் களமுனைகளில் இழப்புக்களை தாங்கி கொள்ளமுடியாத சிறீலங்கா படையினர் மக்கள் மீது எறிகணை தாக்கதல்களையும் விமானதாக்குதல்களையும் நடத்தி மக்களை கொத்துக்கொத்தாக கொன்றொழித்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=21410:--15---&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

 

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்துறந்தவர்களின் ஆன்மாக்கள் அமைதி பெறட்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரபுரம் கிராமத்தில், சிங்கள  வான்படையால்... கொல்லப்பட்ட, அப்பாவித் தமிழருக்கு... நினைவு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

1998ஆம் ஆண்டே புலிகள் விமானம் மூலம் குண்டு போடும் பயிட்சிகளை செய்ய தொடக்கி இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொடிய எதிரியின் அந்நியக் குண்டுகளுக்கு பலியான எம்மின அப்பாவி மக்களுக்கு வீழ்ந்த நாள் நினைவஞ்சலி..!

 

 

1998ஆம் ஆண்டே புலிகள் விமானம் மூலம் குண்டு போடும் பயிட்சிகளை செய்ய தொடக்கி இருந்தார்கள்.

 

ச்சா.. இப்படி புலிகள் அமைப்பைப் பற்றி கற்பனை கட்டக் கூடாது. அது படிக்காதவையை சர்வதேசம் பயங்கரவாதிகளுன்னு.. தண்டித்ததன் ஒரு பாகம். இப்படித் தண்டிச்சிருக்காட்டால் நாங்கள் படிச்ச தமிழர் அசைலம் அடிச்சிருக்கவும் முடியாது.. மொத்த தமிழினமும் இப்ப அழிஞ்சிருக்கும். அதோட.. படிச்சவை நாங்கள் தான் போராட்டமுன்னு சைட்டா இயங்கிட்டு... ஓடி வந்து.. அசைலம் அடிச்சு தப்பிட்டமில்ல..! :D

 

 

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவஞ்சலிகள்.

சுதந்திரபுரம் படுகொலைகள் நினைவாக…..

சுதந்திரபுரம் படுகொலைகள் நினைவாக…..

பௌத்த சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைகளில் பெரிய அளவுக்கு அனைத்துலக கவனத்துக்கு வராத படுகொலைகளில் வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் ஒன்றாகும்.

 
 
1998 ஆண்டு யூன் மாதம் 10 ம் திகதி…
 
 
அதாவது 9 வருடங்களுக்கு முந்திய இதே நாள்….
 
காலை 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் என்று நினைக்கிறேன்….
 
ஒரு சின்னஞ்சிறிய கிடுகுக் கொட்டில்…..
 
அதில் ஒரு ஏழைத்தாய் தனது நான்கு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்புவதற்காக பழைய சோற்றை தண்னிர் விட்டுப் பிசைந்து ஊட்டிவிடுகிறார்….
 
தீராத நோயில் விழுந்து படத்த படுக்கையாக உள்ள கணவனையும் தனது 4 பிள்ளைகளையும் அந்தத் தாய் அக்கம்பக்கத்திலுள்ள வசதிபடைத்தவர்களின் தென்னந்தோப்புகளில் கிடுகு பின்னிக் கொடுத்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் காப்பாற்றி வருகிறார்.
 
 
அவரது மூத்த இரண்டு பிள்ளைகளும் கடந்த ஒரு மாதமாக பள்ளிக் கூடம் போவதற்கு கொப்பி வாங்க வேண்டும் என்று கேட்டு வந்தார்கள்.வறுமையிலும் கூட தனது பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று விரும்பிய அந்தத்தாய் பணம் கிடைத்ததும் வாங்கித் தரலாம் என்று அவர்களுக்கு சமாதானம் சொல்லி வந்தார்.
 
அன்று ‘எப்படியும் கொப்பியுடன் பாடசாலைக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் வரக்கூhது’ என்று வாத்தியார் கண்டிப்பாக சொல்லிவிட்டதாக பிள்ளைகள் இருவரும் கூறிவிட்டார்கள். ‘பிள்ளைகளை பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திவிடுவார்களே’ என்ற பயந்து போன அந்தத் தாய் தான் கிடுகு பின்னும் வசதிபடைத்த ஒருவரின் வீட்டுக்கு சென்று காரணத்தைச் சொல்லி தனக்கு 10 ரூபா பணம் தரும்படி இரந்து கேட்கிறார்…
 
அவரது அவசரத்தை புரியாத அவர்கள் மரத்தில் இருந்து விழுந்த தென்னோலைகளை எடுத்து துரவுக்குள் (குளமும் அல்லாத கிணறும் அல்லாத ஒரு சிறு நீர் நிலை) ஊறப் போட்டுவிட்டு வருமாறு கூறுகிறார்கள்..எப்படியும் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்தத்தாய் ஓடி ஓடி தென்னோலைகளை இழுத்து இழுத்து அந்த விட்டு தென்னந்தேப்பின் மூலையில் இருந்த துரவுக்குள் போட்டுக் கொண்டிருந்த போது…..
 
சிங்கள வான்படையின் இரண்டு கிபீர் விமானங்கள் பேரிரைச்சலுடன் வந்து அந்தப் பகுதியில் குண்டுகளை போட்டுவிட்டுச் செல்கின்றன….பேரிரைச்சல்…..இடி முழக்கம் போன்ற பாரிய வெடியோசை… அதைத் தொடர்ந்து… “ஐயோ என்ரை பிள்ளைகள்… என்ரை அம்மா…என்ரை அப்பா …”என்கின்ற அவலப் பேரொலிகள் காற்றைச் கிழித்துவர… அந்தத்தாயும் “ஐயோ என்ரை பிள்ளைகள்” என்று கத்திக் கொண்டு வீதிக்கு ஓடி வருகிறார்…..
 
 
அதன் பின் என்ன நடத்தது என்பதை அந்தத் தாய் சொன்னதை அப்படியே சொல்கிறேன்….(2003 ம் அண்டு நான் வன்னிப் பெருநிலப்பரப்புக்கு சென்றிருந்த பொது அந்தத் தாயை சந்தித்த போது அவரது வாழ்வில் பேரிடியாக விழுந்த அந்த அவலத்தை அவர் கண்ணீருடன் விபரித்தார்….)
 
 
நான் அவையின்ரை வீட்டை விட்டு வெளியே ஓடி வாறன்… ஓரே புழுதி மண்டலம்.. எல்லாரும் கத்திக் கதறிக் கொண்டிருக்கினம்…என்ரை பிள்ளையளுக்கு என்னாச்சோ என்று என்ரை நெஞ்சு பதறுது…அழ முடியாமல் எனக்கு தொண்டை அடைக்குது….குண்டு விழுந்த இடத்துக்கு கிட்டப் போய் பாக்கிறன்.... இரத்மும் சதையுமா உடம்புகள் சிதறிக்கிடக்குது..அங்காலை பாத்தால் என்ரை இரண்டு பிள்ளைகள் ஒருவருக்க பக்கத்தில ஒருதர் உடல்சிதறி செத்துப் போய் கிடக்குதுகள்…அங்கால மற்ற இரண்டு பிள்ளைகள் காயம் பட்டு குற்றுயிரும் குலையிருமாக கிடந்து துடிக்குதுகள்…. என்ரை ஐயோ(கதறி அழுகிறார்) நான் என்ன செய்வேன்…செத்துப் போன பிள்ளைகளை பாப்பனா காயப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற பிள்ளைகளை ஆசுப்பத்திரிக்கு கொண்டுபோகப் பாப்பனா… எந்தத் தாய்க்கும் இப்பிடி ஒரு கொடுமை நடக்கக் கூடாது ராசா…(மீண்டும் கதறி அழுகிறார்) பிறகு காயமடைஞ்சவையை பொடியள் ஒரு ரைக்ரறிலை (உளவு இயந்திரம்) ஏத்தி புதுக்குடியிருப்பு ஆசுப் பத்திரிக்கு கொண்டு போச்சினம். நான்னும் சொத்துப் போன என்ரை இரண்டு பிள்ளைகளையும் தெருவில விட்டுட்டு மற்றப்பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு ரைக்ரறில போனன் .அந்த ரைக்ரர் ஆசுப்பத்திரிக்கு போகக்கு முன்னம் என்ரை இன்னொரு பிள்ளையும் என்ரை மடியிலேயே செத்துப் போச்சு..(மீண்டும் கதறி அழுகிறார்) இப்ப கடைசியா எனக்கு இருக்கிறது இவன்தான்”; என்று அந்த தாக்குதலில் காயமடைந்து வலுவிழுந்த நிலையில் உயர் வாழும் அந்த மகனை காட்டுகிறார்….
 
சிங்கள வான் படையினர் நடத்திய இந்தக் கொலைத் தாக்குதலில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.
 
இந்தத் ஏழைத் தாயக்கு நேர்ந்த கொடுமையைப் போல் இன்னும் எத்தனை கொடுமைகளை எத்தனை அவலங்களை எங்கள் இனம் சந்திக்கிறது.எங்கள் மண்ணை எங்கள் தாயகத்தை மீட்பதற்கு நாங்கள் என்ன செய்தோம்? ஏன்பதை ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்ப்போம்
ஞாயிறு, 10 ஜூன், 2007ல் எழுதியது

 

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்துறந்தவர்களின் ஆன்மாக்கள் அமைதி பெறட்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள் அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.