Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புல்மோட்டைக் கடற்பரப்பில் உக்கிர மோதல்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புல்மோட்டைக் கடற்பரப்பில் உக்கிர மோதல்:

கடற்படையின் கலன்கள் விடுதலைப் புலிகளால் முற்றுகை.

திருமலை புல்மோட்டைக் கடற்பரபில் விடுதலைப் புலிகளின் கடற்படையினருக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கும் இடையில் உக்கிர மோதல் இடம்பெறுகின்றது.

இன்று மாலை 6.30 மணிக்கு இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் நடைபெறுவதாக திருமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

புல்மோட்டைக் கடற்பரப்பில் நகர்ந்து கொண்டிருக்கும் சிறீலங்கா கடற்படையினரின் கடற்கப்பலை சுற்றிவளைத்த கடற்புலிகள் கப்பலை சுற்றி வளைத்து தாக்குதலை நடத்துகின்றனர்.

கடற்படையினரின் கப்பலை மீட்கும் முயற்சியில் 6 சிறீலங்கா டோரா அதிவேக பீரங்கிக் கடற்கலன்கள் தாக்குதலைத் தொடுத்து வண்ணம் உள்ளன.

எனினும் விடுதலைப் புலிகளின் கடற்படையினர் கடற்படையினர் உக்கிரமா தாக்குதலைத் தொடுத்துள்ள நிலையில் சிறீலங்காப் படையினர் திணறுகின்றனர்.

கடற்படையினரின் டோரா பீரங்கிப் கலன்களுக்கு ஆதரவாக சிறீலங்கா கிபீர் விமானங்கள் புல்மோட்டை, கொக்குளாய், நாயாறு பகுதிகளில் குண்டுகளை வீசுகின்றன.

கடற்படையினரின் முற்றுகை வியூகத்தினுள் சிக்குண்டு கடற்படையினர் திணறுவதாக திருமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன

புல்மோட்டைக் கடற்பரப்பில் உக்கிர மோதல்: கடற்கலன்கள் கடற் புலிகளால் முற்றுகை.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

நான் உதை நம்பமாட்டன் பிபிசி இன்னும் இதைப் பற்றிச்சொல்ல இல்லை, உந்த பதிவு,புதினம்,சங்கதி, தமிழ் நெற் எல்லாம் பொய் தானே எழுதிறது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த கப்பலை சுற்றி வலைத்தவர்கள் என்று உங்களுக்கு தெறியுமா வினித்?

நான் உதை நம்பமாட்டன் பிபிசி இன்னும் இதைப் பற்றிச்சொல்ல இல்லை, உந்த பதிவு,புதினம்,சங்கதி, தமிழ் நெற் எல்லாம் பொய் தானே எழுதிறது?

பூச்சி புழுகு வதந்திகளிலை வந்தால் நம்புவியள்போலை :)

நான் உதை நம்பமாட்டன் பிபிசி இன்னும் இதைப் பற்றிச்சொல்ல இல்லை, உந்த பதிவு,புதினம்,சங்கதி, தமிழ் நெற் எல்லாம் பொய் தானே எழுதிறது?

:evil: :evil:

ம் இவ்வளவு நாளும் ஒழின்ச்சிருந்து போட்டு இப்ப வந்து முகக்குறி போடுங்கோ? :twisted: :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்கேப்பிற்கு சரியான வழிகாட்டி வசி அண்ணா தான்! யாழ்களத்தில் சண்டை நடந்தால் எங்கும் போய் ஒழித்திருந்து விட்டுத் தான் வருவார்! இல்லையா வசியண்ணா! :wink: :wink: :wink:

தூங்கிட்டு இருக்கிற புலிகுட்டியை தட்டி எழுப்புறீங்கள்..

சொல்லிட்டேன்....... :x :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வசி அது எழும்பினா திருப்ப பால் குடிச்சிட்டு போய் படுத்திடுமா..?????

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள்! சாத்திரி! :P :):D:D

ஏன் வசி அது எழும்பினா திருப்ப பால் குடிச்சிட்டு போய் படுத்திடுமா..?????

இது plain tea தான் குடிக்கும்.. :P

பாவம் பிள்ளை புதினம் அறிவம் எண்டுபோட்டு மெல்லமா எழும்பி வந்திருக்குது. ஏன் எல்லாரும் சண்டைக்குப் போறீங்கள். நீ ஒண்டுக்கும் யோசிக்காதை தம்பி. உவங்கள் உப்பிடித்தான் தனகுவாங்கள்.

புல்மோட்டை கடற்பரப்பில் உக்கிர சமர்!!! - திருமலையிலிருந்து 850 படையினருடன் தப்பிய கப்பல் முற்றுகையில்

திருகோணமலை துறைமுகதிலிருந்து 850 படையினருடன் தப்பியோடிய கப்பல் புல்மோட்டைக் கடற்பரப்பில் முற்றுகைக்குள் உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து இன்று மாலை 6.30 மணிமுதல் இரு தரப்பினருக்குமிடையே கடுமையான கடற்சமர் இடம்பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடற்படையினருக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா வான்படையின் கிபிர் வானூர்திகள் குண்டு வீச்சுக்களை மேற்கொண்டுவருதாக தெரியவருகிறது.

வான்படையின் குண்டு வீச்சுக்கள் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் புல்மோட்டை கரையோப் பகுதிகள் மீதும் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இதுகுறித்த மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை.

சங்கதி

SLN ship under siege off Pulmoddai coast

[TamilNet, August 01, 2006 15:13 GMT]

The Jetliner ship, which escaped Trincomalee attack Tuesday afternoon with 854 Sri Lanka Army (SLA) soldiers on board, has come under attack again in the Pulmoddai sea, bound for north from 6:00 p.m. Tuesday, military sources in Colombo said. Pulmoddai is located 49 km northwest of Trincomalee and 41 km southwest of Mullaithivu.

Kfir jets took off from Colombo towards Pulmoddai in support of the ship under siege.

Villagers of Kokilai, Pulmoddai and other areas close to the Pulmoddai Sea are fleeing from their houses.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19014

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கப்பலுக்கு என்ன நடக்கும் என்று நினைக்கிறீங்க?

கப்பலுக்கு என்ன நடக்கும் என்று நினைக்கிறீங்க?

என்ன ப்பா கேட்கிறிங்கள் பக்கத்தில தானே சுடு சுரனை இல்லாமல் ஒரு நாடு இருக்கு கூப்பிட்டதும் உதவிக்கு வ்ர :idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா பட்டது காணாதா அவைக்கு....

கப்பல் முற்றுகையில் இருந்தா அவை வாறத்துக்குள்ள தரையை தட்டிவிடும். அதுதான் கடலின் அடித்தளத்தை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி போடுங்கோ

படையினரை ஏற்றிச் சென்ற ஜெற் லைனர் கப்பல் முற்றுகையில்?

[செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 23:02 ஈழம்] [தாயக செய்தியாளர்]

இன்று பிற்பகல் திருமலைக் கடற்படைத் தளம் மீது இடம்பெற்ற ஆட்லறித் தாக்குதலையடுத்து சர்வதேசக் கடற்பரப்பிற்குத் தப்பிச் சென்ற கப்பல் மீண்டும் முற்றுகைக்குள்ளாக்கபட்டுள்

  • கருத்துக்கள உறவுகள்

கடற்சமர்களில் 2 கடற்கரும்புலிகள் உள்ளிட்ட 7 பேர் வீரச்சாவு

தமிழீழக் கடற்பரப்பில் ஆக்கிரமிப்பு இராணுவமான சிங்கள கடற்படையுடன் நடந்த மோதலில் இரு கடற்கரும்புலிகள் உட்பட மொத்தம் 7 கடற்புலிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர்.

இது குறித்து விடுதலைப் புலிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கை:

திருகோணமலைக்கு படையினரை ஏற்றிக்கொண்டு இன்று பிற்பகல் 2.25 மணியளவில் வந்த சிறிலங்கா கடற்படையினரின் தொடரணிக்கும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கும் இடையில் கடற்சமர் ஒன்று திருமலை உட்துறைமுக பகுதியில் நடைபெற்றது. மாலை 5.00 மணி வரை நடைபெற்ற இச்சமரின் போது சிறிலங்கா கடற்படையினருக்கு ஆதரவாக சிறிலங்கா விமானப்படையும் பீரங்கிப் படையணியும் தாக்குதல்களை நடத்தின.

இத்தாக்குதலின் போது சிறிலங்கா கடற்படையினரது டோறாப் படகு மூழ்கடிக்கப்பட்டது. மேலும் இரு டோறாப்படகுகள் சேதத்துக்குள்ளாகின. திருகோணமலையில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படையின் பிராந்திய தலைமையகமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இச்சமரில் இரண்டு கடற்கரும்புலிகள் உட்பட ஆறு கடற்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

இதன் பின்னர் மாலை 6.00 மணியளவில் சிறிலங்கா கடற்படையினரின் டோறா அணி ஒன்றுக்கும் கடற்புலிகளுக்குமிடையில் கொக்குளாய், கொக்குத்தொடுவாய் புல்மோட்டை கடற்பரப்பில் சமர் ஒன்று நடந்துள்ளது. இரவு 9.00 மணிவரை நடைபெற்ற இம்மோதலின் போது சிறிலங்கா கடற்படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் பற்றி தெரியவரவில்லை.

இம்மோதலின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். இக்கடற்சமர்களில் கடற்புலிகளுக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணி தாக்குதல்களில் ஈடுபட்டது என்று விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அந்த கப்பலுக்கு என்ன நடந்தது?

இப்ப அந்த கப்பலுக்கு என்ன நடந்தது?

அது எல்லா நேவியையும் கடல்ல இறக்கி விட்டு விட்டு கோவிச்சு கொண்டு நடுக்கடலில் நிக்குதாம் :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.