Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உழுந்தின் பயன்கள் (Black Gram)

Featured Replies

இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும்.

இந்திய உணவில் இரண்டு வகை உண்டு.

தென்னிந்திய உணவு வகை,

வட இந்திய உணவு வகை.

தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது.

இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று. இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம்நன்கு வெண்மையாகவும் காணப்படும்.

இந்தியாவில் அனைத்து பகுதியிலும் பயிராகும் ஒருவகை செடியாகும். பணப்பயிர்களில் இதுவும் ஒன்று.கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

நன்றி : http://inruoruthagaval.com/black-gram/

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

உழுந்து நல்ல சத்துள்ளதுதான். நாங்கள்தான் நல்லதைச் சாப்பிடவே மறந்து போனமே.நன்றி அலை பகிர்வுக்கு.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

ஏன் சுமே அக்கா தோசை, வடை, இட்லி, குண்டு தோசை எல்லாமே.... வெளிநாட்டிலும் இலகுவானவையாயிற்றே.

குண்டுத்தோசையை நல்லெண்ணை விட்டுச் செய்து கொடுத்தீர்களானால் சிறு பெண்களுக்கு பத்தியத்தின் தேவை குறைந்துவிடும். நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள். 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

ஏன் சுமே அக்கா தோசை, வடை, இட்லி, குண்டு தோசை எல்லாமே.... வெளிநாட்டிலும் இலகுவானவையாயிற்றே.

குண்டு தோசையையை நல்லெண்ணை விட்டு செய்து கொடுத்தீர்களானால் சிறு பெண்களுக்கு பத்தியத்தின் தேவை குறைந்துவிடும். நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள். 

குண்டுத் தோசை வீட்டில் செய்கின்றனீர்களா மல்லை? அப்படியாயின் செய்முறையைப் போட்டுவிடுவீர்களா? நன்றி

குண்டுத் தோசைச் சட்டி இல்லையே :rolleyes: ம்.................  தமிழ் கடைகளில் கேட்டுட்டுப்பார்க்கணும்  :D

குண்டுச்சட்டி கிடைக்காவிட்டால் தேங்காய் புடிங் செய்யும் Pan ஒன்றை வலையில் தேடி வாங்குங்கள். குண்டுகளின் எண்ணிக்கை, 5,6,7 ஆகவும், ஆழமாகவும் இருந்தால் நல்லது. "Khanom Krok maker "

http://www.google.com/search?tbm=isch&sa=1&q=kanom+krok+pan&oq=Khanom+Krok+&gs_l=img.1.0.0i10i24l2j0i24j0i10i24.17793.25600.0.28385.11.7.4.0.0.0.148.412.6j1.7.0...0.0...1c.1.16.img.ltu6APLBtxM&bav=on.2,or.r_qf.&biw=1440&bih=756&ech=1&psi=u1K3Uelo1a_gA5jtgKAP.1370969700381.3&emsg=NCSR&noj=1&ei=mlW3UYG6DLGw4APzhoCADA

டானிஸ் காரன்களும் எதோ Golden Pancake என்று பண்ண இப்படி ஒன்று வைத்திருக்கிரார்கள். http://www.thekitchn.com/word-of-mouth-a-2-36833.

வார்ப்பிரும்பு சட்டிகள் எல்லாமே ஒரே மாதிரித்தான். ஆனால் ஊரின் மண் சட்டி கிடைத்தால் அது வேறு.

மா தாயரிக்கும் முறை  முழுவதும் தட்டைத் தோசையைப்போன்றதே. தோசை மாவை தயாரிக்கும் போது உழுந்து அரிசிக் கலவையை குறையவிடாமல் 1:1 என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உழுந்து கூட இருந்தால் நல்லெண்ணையில்  பொரிந்து வரும் உழுந்து சாப்பிட்டு முடிய நாவில் ஒரு தீம்சுவையைவிட்டு வைத்திருக்கும். மாவை அரைத்து முடிய தனி "உழுந்து ரவை" வாங்கி வைத்திருந்து சிறுதளவு கலந்துவிட்டீர்களானால் சாப்பிடும் போது குண்டுத்தோசையிலும், வடை மாதிரி சிறிய மொற மொறப்பும் இருக்கும். தோசை மாதிரி இழக்கமாக அடிக்காமல் இட்லி மாதிரி இறுக்கமான பசைத் தன்மையில் எடுத்து புளிக்க வைத்துவிட வேண்டும். இட்லி மாதிரியே இதற்கும் Liquidizerலும் பார்க்க தமிழ் நாட்டு Wet Grinder தான் வசதி. http://www.google.com/search?biw=1440&bih=756&noj=1&tbm=isch&sa=1&q=wet+grinder&oq=wet+grinder&gs_l=img.3..0l10.282507.294186.0.296377.34.18.4.2.2.0.1056.4518.5j3j1j1j0j2j1j1.14.0...0.0...1c.1.16.img.OxwZiwgnt68

தட்டைத் தோசைக்கு மாதிரி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் போன்றவை மறு நாள் காலையில் சேர்க்க முடியாது.  எனவே உப்பை மட்டும் சேர்த்து வெறும் batter ல்த்தான் குண்டுத்தோசை செய்யலாம்.

சட்டி காயந்த பின்னர் கால்(1/4) குண்டுக்கு எண்ணைவிட்டு எண்ணை காய்ந்த பின்னர் குண்டு மட்டம்வரையும் batterயை வார்க்கவும். குண்டுகள் காய்ந்து போகாமல் அடிக்கடி பார்த்து எண்ணை நிரப்ப வேண்டும். 5,6  நிமிடங்களுன் பின்னர் ஒரு முள்ளுக்கரண்டியை பாவித்து திருப்பிவிடலாம். அடுப்பை இடைச் சூட்டில் வைத்திருந்தால் வெளியே பொரிந்து வரும் போது உள்ளேயேயும் நன்றாக அவிந்திருக்கும்.

உருளைக்கிழங்கு கறி நன்றாக இருக்கும். சாம்பாரும் பரவாயில்லை.

("குண்டுத் தோசை வீட்டில் செய்கின்றனீர்களா மல்லை?"B.B.Q. மாதிரி வீட்டின் பின் உள்ள கொல்லைப்புறத்திலும் செய்யலாம் :D )

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
அலை வெட்கமாயில்லை ஒரு பொம்பிள்ளையாய் இருந்து கொண்டு ஒரு ஆணிடம் குண்டுத் தோசை செய்வது எப்படி என்று கேட்கிறீர்கள் :D
 
ஆமாம் குண்டுத் தோசை என்டால் என்ன :) 
 
அலை வெட்கமாயில்லை ஒரு பொம்பிள்ளையாய் இருந்து கொண்டு ஒரு ஆணிடம் குண்டுத் தோசை செய்வது எப்படி என்று கேட்கிறீர்கள் :D
 
ஆமாம் குண்டுத் தோசை என்டால் என்ன :) 

ஆண்களும் பெண்களும் சமம் என்றதை நம்புங்கோ தயவுசெய்து  :D 

  • தொடங்கியவர்

அலை வெட்கமாயில்லை ஒரு பொம்பிள்ளையாய் இருந்து கொண்டு ஒரு ஆணிடம் குண்டுத் தோசை செய்வது எப்படி என்று கேட்கிறீர்கள் :D
 
றதியக்கை யார் சொன்னது அலைமகள் பெண் என்று?  :D 
 
  • கருத்துக்கள உறவுகள்

அது இருக்கட்டும்... உளுந்து.. உழுந்து.. இதில் எது சரி..??! :lol::D

  • தொடங்கியவர்

குண்டுச்சட்டி கிடைக்காவிட்டால் தேங்காய் புடிங் செய்யும் Pan ஒன்றை வலையில் தேடி வாங்குங்கள். குண்டுகளின் எண்ணிக்கை, 5,6,7 ஆகவும், ஆழமாகவும் இருந்தால் நல்லது. "Khanom Krok maker "

http://www.google.com/search?tbm=isch&sa=1&q=kanom+krok+pan&oq=Khanom+Krok+&gs_l=img.1.0.0i10i24l2j0i24j0i10i24.17793.25600.0.28385.11.7.4.0.0.0.148.412.6j1.7.0...0.0...1c.1.16.img.ltu6APLBtxM&bav=on.2,or.r_qf.&biw=1440&bih=756&ech=1&psi=u1K3Uelo1a_gA5jtgKAP.1370969700381.3&emsg=NCSR&noj=1&ei=mlW3UYG6DLGw4APzhoCADA

டானிஸ் காரன்களும் எதோ Golden Pancake என்று பண்ண இப்படி ஒன்று வைத்திருக்கிரார்கள். http://www.thekitchn.com/word-of-mouth-a-2-36833.

வார்ப்பிரும்பு சட்டிகள் எல்லாமே ஒரே மாதிரித்தான். ஆனால் ஊரின் மண் சட்டி கிடைத்தால் அது வேறு.

மா தாயரிக்கும் முறை  முழுவதும் தட்டைத் தோசையைப்போன்றதே. தோசை மாவை தயாரிக்கும் போது உழுந்து அரிசிக் கலவையை குறையவிடாமல் 1:1 என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உழுந்து கூட இருந்தால் நல்லெண்ணையில்  பொரிந்து வரும் உழுந்து சாப்பிட்டு முடிய நாவில் ஒரு தீம்சுவையைவிட்டு வைத்திருக்கும். மாவை அரைத்து முடிய தனி "உழுந்து ரவை" வாங்கி வைத்திருந்து சிறுதளவு கலந்துவிட்டீர்களானால் சாப்பிடும் போது குண்டுத்தோசையிலும், வடை மாதிரி சிறிய மொற மொறப்பும் இருக்கும். தோசை மாதிரி இழக்கமாக அடிக்காமல் இட்லி மாதிரி இறுக்கமான பசைத் தன்மையில் எடுத்து புளிக்க வைத்துவிட வேண்டும். இட்லி மாதிரியே இதற்கும் Liquidizerலும் பார்க்க தமிழ் நாட்டு Wet Grinder தான் வசதி. http://www.google.com/search?biw=1440&bih=756&noj=1&tbm=isch&sa=1&q=wet+grinder&oq=wet+grinder&gs_l=img.3..0l10.282507.294186.0.296377.34.18.4.2.2.0.1056.4518.5j3j1j1j0j2j1j1.14.0...0.0...1c.1.16.img.OxwZiwgnt68

தட்டைத் தோசைக்கு மாதிரி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் போன்றவை மறு நாள் காலையில் சேர்க்க முடியாது.  எனவே உப்பை மட்டும் சேர்த்து வெறும் batter ல்த்தான் குண்டுத்தோசை செய்யலாம்.

சட்டி காயந்த பின்னர் கால்(1/4) குண்டுக்கு எண்ணைவிட்டு எண்ணை காய்ந்த பின்னர் குண்டு மட்டம்வரையும் batterயை வார்க்கவும். குண்டுகள் காய்ந்து போகாமல் அடிக்கடி பார்த்து எண்ணை நிரப்ப வேண்டும். 5,6  நிமிடங்களுன் பின்னர் ஒரு முள்ளுக்கரண்டியை பாவித்து திருப்பிவிடலாம். அடுப்பை இடைச் சூட்டில் வைத்திருந்தால் வெளியே பொரிந்து வரும் போது உள்ளேயேயும் நன்றாக அவிந்திருக்கும்.

உருளைக்கிழங்கு கறி நன்றாக இருக்கும். சாம்பாரும் பரவாயில்லை.

("குண்டுத் தோசை வீட்டில் செய்கின்றனீர்களா மல்லை?"B.B.Q. மாதிரி வீட்டின் பின் உள்ள கொல்லைப்புறத்திலும் செய்யலாம் :D )

மிக்க நன்றி மல்லை!

அது இருக்கட்டும்... உளுந்து.. உழுந்து.. இதில் எது சரி..??! :lol::D

உழுந்து தான் சரி. நன்றி நெடுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சுமே அக்கா தோசை, வடை, இட்லி, குண்டு தோசை எல்லாமே.... வெளிநாட்டிலும் இலகுவானவையாயிற்றே.

குண்டுத்தோசையை நல்லெண்ணை விட்டுச் செய்து கொடுத்தீர்களானால் சிறு பெண்களுக்கு பத்தியத்தின் தேவை குறைந்துவிடும். நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள். 

தோசை, இட்லி என்பவை முன்பு அடிக்கடி செய்ததுதான். இப்ப நேரம் கிடைக்குதில்லை. குண்டுத்தோசை மினைக்கெட்ட வேலை. அதனால் எப்பவாவது இருந்திட்டுச் செய்வதே ஒழிய அடிக்கடி செய்து மினைக்கெடுவதில்லை. தோசையை உடனே சுட்டுக் கொடுத்தாலன்றி ஆறியதை ஒருவரும் உண்ண மாட்டார்கள். அதனால் இப்ப இரண்டு மாதங்கள் உவை ஒன்றும் செய்யவே இல்லை.
 
Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சுமே அக்கா தோசை, வடை, இட்லி, குண்டு தோசை எல்லாமே.... வெளிநாட்டிலும் இலகுவானவையாயிற்றே.

குண்டுத்தோசையை நல்லெண்ணை விட்டுச் செய்து கொடுத்தீர்களானால் சிறு பெண்களுக்கு பத்தியத்தின் தேவை குறைந்துவிடும். நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள். 

தோசை, இட்லி என்பவை முன்பு அடிக்கடி செய்ததுதான். இப்ப நேரம் கிடைக்குதில்லை. குண்டுத்தோசை மினைக்கெட்ட வேலை. அதனால் எப்பவாவது இருந்திட்டுச் செய்வதே ஒழிய அடிக்கடி செய்து மினைக்கெடுவதில்லை. தோசையை உடனே சுட்டுக் கொடுத்தாலன்றி ஆறியதை ஒருவரும் உண்ண மாட்டார்கள். அதனால் இப்ப இரண்டு மாதங்கள் உவை ஒன்றும் செய்யவே இல்லை.

பூ..புஷ்பம்...காரை கஞ்சல் எண்டு மினைக்கடுற நேரம் சாப்பாட்டிலையும் கனக்க கவனம் வேணும் கண்டியளோ.....அதுதான் மனிசருக்கு மூலாதாரம். :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அலை!

எனக்குத் தோசை சாப்பிடுறது எண்டால், சாம்பார் ஒண்டு கட்டாயம் வேணும்!

அதுக்கு நீத்துப் பூசணிக்காய் வேணும்!

அதெல்லாம் இஞ்ச நடக்கப் போற காரியமா? :D

ஆனால், நல்ல தூரத்தில ஒரு சிவன் கோவில் இருக்கு! அந்தக் கோவிலில, மசாலா தோசை விப்பினம்! அதுக்காகவே, எத்தனையோ கிலோமீட்டர்கள் பயணம் போயிருக்கின்றேன்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுத் தோசை வீட்டில் செய்கின்றனீர்களா மல்லை? அப்படியாயின் செய்முறையைப் போட்டுவிடுவீர்களா? நன்றி

குண்டுத் தோசைச் சட்டி இல்லையே :rolleyes: ம்.................  தமிழ் கடைகளில் கேட்டுட்டுப்பார்க்கணும்  :D

ஜேர்மன் தமிழ்க் கடைகளிலேயே... குண்டு தோசைச் சட்டி விற்கிற படியால்,

கட்டாயம் கனடாவில்... இன்னும், திறமான சட்டிகள் விற்பார்கள் அலை.

ஒருக்கா... ஸ்காபுரோ பக்கம் விசாரித்துப் பாருங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அலை!

எனக்குத் தோசை சாப்பிடுறது எண்டால், சாம்பார் ஒண்டு கட்டாயம் வேணும்!

அதுக்கு நீத்துப் பூசணிக்காய் வேணும்!

அதெல்லாம் இஞ்ச நடக்கப் போற காரியமா? :D

ஆனால், நல்ல தூரத்தில ஒரு சிவன் கோவில் இருக்கு! அந்தக் கோவிலில, மசாலா தோசை விப்பினம்! அதுக்காகவே, எத்தனையோ கிலோமீட்டர்கள் பயணம் போயிருக்கின்றேன்! :icon_idea:

நீத்துப் பூசணி இல்லாமலும் சுவையான சாம்பார் வைக்கலாம் புங்கை. :D

  • தொடங்கியவர்

நன்றி அலை!

எனக்குத் தோசை சாப்பிடுறது எண்டால், சாம்பார் ஒண்டு கட்டாயம் வேணும்!

அதுக்கு நீத்துப் பூசணிக்காய் வேணும்!

அதெல்லாம் இஞ்ச நடக்கப் போற காரியமா? :D

ஆனால், நல்ல தூரத்தில ஒரு சிவன் கோவில் இருக்கு! அந்தக் கோவிலில, மசாலா தோசை விப்பினம்! அதுக்காகவே, எத்தனையோ கிலோமீட்டர்கள் பயணம் போயிருக்கின்றேன்! :icon_idea:

நன்றி! அவுஸிலை பூசனிக் கண்டுகாள் வராதா புங்கை? பூசனி சீட்ஸ் இருந்தால் போட்டுப் பாருங்கோ புங்கை. 

பூ..புஷ்பம்...காரை கஞ்சல் எண்டு மினைக்கடுற நேரம் சாப்பாட்டிலையும் கனக்க கவனம் வேணும் கண்டியளோ.....அதுதான் மனிசருக்கு மூலாதாரம். :lol:  :D

:lol:

பூ..புஷ்பம்...காரை கஞ்சல் எண்டு மினைக்கடுற நேரம் சாப்பாட்டிலையும் கனக்க கவனம் வேணும் கண்டியளோ.....அதுதான் மனிசருக்கு மூலாதாரம். :lol:  :D

:lol:

ஜேர்மன் தமிழ்க் கடைகளிலேயே... குண்டு தோசைச் சட்டி விற்கிற படியால்,

கட்டாயம் கனடாவில்... இன்னும், திறமான சட்டிகள் விற்பார்கள் அலை.

ஒருக்கா... ஸ்காபுரோ பக்கம் விசாரித்துப் பாருங்கள். :D

நந்றி தமிழ். ஆகஸ்டில் ரொறன்ரோ போகின்றேன், இருந்தால் சட்டியோடை தான் வாறது :)

ஆனால், நல்ல தூரத்தில ஒரு சிவன் கோவில் இருக்கு! அந்தக் கோவிலில, மசாலா தோசை விப்பினம்! அதுக்காகவே, எத்தனையோ கிலோமீட்டர்கள் பயணம் போயிருக்கின்றேன்! :icon_idea:

ஹெலன்ஸ்பேர்க்கில் சீஃப் குக் "பழனி" யாக்கும்.

கார் ஓடிப்போன களைப்புக்கு பழனி என்னத்த தந்தாழும் அமிர்தம்.

மின்டோவில் யார் என்று தெரியாது.

.

Edited by ஈசன்

தமிழ் நாட்டில் குண்டுத்தோசையை குழி பணியாரம் என்று சொல்வார்கள். நமது தோசை ball மாதிரி வரும். இது சட்டித்தோசைக்கும் சற்று வித்தியாசமாக இருக்கு. தாழிப்பது வெங்காயம், மிள்காய் போடுவது தட்டை தோசை மாதிரி குண்டுத்தோசையில் எடுபடுகுதில்லை.   Kuzhi Paniyaram ( Delicious Chettinad Speciality made from Dosa Batter)

April 9, 2009 by Shoba

dsc00823.jpg?w=500&h=666

Delicious Kuzhi Paniyaram.

The first time ever that I had Kuzhi Paniyaram was in this colleague`s home in Chennai. My friend`s mother had made delicious soft, fluffy paniyarams and served it ith spicy tomato chutney. I am guessing that day I lost track of the number I had at her place. Kuzhi basically means a depression” and since this is made in the tava that has little depressions, the name came to be Kuzhi Paniyaram.

dsc008181.jpg?w=500&h=375

Paniyarams cooking in the Paniyaram Maker.

dsc008191.jpg?w=500&h=375

Grand Sweets and Snacks in Adyar  also serve hot Kuzhi Paniyarams made right in front of your eyes and served with Tomato Chutney. Since they are so small and so soft, ita makes an ideal snack item for the evening. It can be fixed in a jiffy and is made from Dosa Batter so even a small portion of leftover batter makes around 20-25 paniyarams. This evening my daughter wanted a filling snack and asked for dosa. The batter was already 3 days old and I was not too keen on making dosas for her. Suddenly I realised that I could make this for her and she would instantly love it as its also bite sized. Great with a hot cuppa coffee!!!

INGREDIENTS:

1 cup of dosa batter.

1 Medium Onion or 2 small finely chopped.

3 green chillies finely chopped.

1 inch piece of ginger finely chopped.

A few slivers of coconut if needed.

Oil to cook.

Mustard, Curry Leaves and Hing to season.

PREPARATION:

  • The consistency of the batter should be just like dosa batter or else a tad loose. If it is too thick, you could thin it by adding a few spoons of coconut milk.
  • In a kadai, add a spoon of oil and when hot pop the mustard, curry leaves, green chillies, ginger, coconut slivers and hing and allow to saute for a minute.
  • Then add the chopped onions and saute well.
  • Add this to the dosa batter and mix it well. Add requisite salt and cilantro to garnish.
  • Keep the Kuzhi Paniyaram Non-Stick Plate on the stove and add one drop of oil in each depression.
  • Slowly pour the prepared paniyaram batter but take care that it contains itself inside the depression.
  • When this side is done, turn over the paniyarams to the other side using the help of a spoon or  this.
  • When the other side is also cooked, remove and place on a tissue paper on a plate.
  • Serve Hot with Chettinad Tomato Chutney.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.