Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சு. கட்டாரில் பேச்சாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் உள்ள தலிபான்களுடன் அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு வெளியில் கட்டாரில் பேச்சுக்களை நடத்த இருப்பதாகத் தெரிய வருகிறது.

ஆப்கானிஸ்தான் அரசைக் கேட்டுக் கொள்ளாமலே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாம்.

போர்க்கைதிகள் பரிமாற்றம்.. மற்றும் ஆப்கானிஸ்தானில் நல்லிணக்கம்.. ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைப்புப் பற்றி பேச இருக்கிறார்களாம்.

_68247299_018356839.jpg

கட்டாரில் உள்ள தலிபான் தூதரகம்.

ஐநா,ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளால் பயங்கரவாத அமைப்பு என்று சொல்லப்படும் தலிபான்களுக்கு கட்டார் தூதரகம் அமைக்க வசதி செய்து கொடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் இந்த பேச்சு அறிவிப்பு வந்து ஒரு நாள் ஆவதற்கு இடையில் தலிபான்கள் அமெரிக்கப் படைத்தளம் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் 4 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனராம். இருந்தாலும் திட்டமிட்டபடி தலிபான்களுடனான பேச்சு தொடருமாம். (ம்ம்.. அமெரிக்காவுக்கு எதிராக.. ஒன்றுமே செய்யாத புலிகளுக்கு நியோர்க் சென்று பேச இடமளிக்காத அமெரிக்கா.. பயங்கரவாதப் பட்டியலில் வைச்சுக் கொண்டும்.. தலிபான்களுக்கு விழுந்து விழுந்து சேவகம் செய்யத் துடிக்கிறது..! ஆக.. தடை எல்லாம் சும்மா வேடிக்கை... அமெரிக்காவுக்கு அவசியமுன்னா எல்லாம் தன்பாட்டில்.. தளரும்.)

இதற்கிடையே நேற்றைய (18-06-2013) தினம்.. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை அதன் இராணுவத்திடம் அமெரிக்க நேட்டோ கையளித்துள்ளது. இருந்தாலும் நேட்டோ படைகள் 2014 இறுதி வரை ஆப்கானிஸ்தானில் நிற்குமாம்.

http://www.bbc.co.uk/news/world-asia-22963576

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் அர்யூன் அவர்கள்

தற்பொழுது இந்த உறவுக்கான பெயரை ஒபாமாவிடமிருந்து பெற்று தருவார்..

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை பயங்கரவாதியாக்கிய படியால் தான் அவர்களை அழித்தார்கள் என்று ஒரு சமன்பாடு போட்டார் ஒரு வல்லவர். இப்போ தலபானும் பயங்கரவாதிகள் பட்டியலில் தான் உள்ளது.அவர்கள் அழிக்கப்படவும் இல்லை. பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். எங்கோ சமன்பாடு உதைக்கிறதே???

ஆய்வாளர்கள் வந்து தலிபான் எண்ணை,இரத்தினம் ,மது,மாது எல்லாம் ஒபாமாவிற்கு கொடுத்திட்டுது  என்று தொடங்க போகின்றார்கள் .

புலிகளுக்கும் கோட்டு சூட்டை போட்டு கெலியில பிளேனில ஏத்திக்கொண்டு போய் கதைத்து பார்த்தார்கள் (.நோர்வே கதைத்தாலும் அமெரிக்கா  கதைத்த மாதிரித்தான் ).புலிகளுக்கு எந்த பாஷையும் விளங்காது (குறிப்பாக தலைவருக்கு )என்று முடிவெடுத்து அவர் பசையிலேயே பாடம் எடுத்துவிட்டார்கள் .

தலிபானுக்கும் அதுதான் நடக்குது .

அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு விளங்காத அரசியல் இங்கே கொஞ்ச பேருக்கு விளங்குகிறது எனும் போது புல்லரிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு விளங்காத அரசியல் இங்கே கொஞ்ச பேருக்கு விளங்குகிறது எனும் போது புல்லரிக்குது.

இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும்..! யாழ்களத்துக்கு நன்றி.. :D

அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு விளங்காத அரசியல் இங்கே கொஞ்ச பேருக்கு விளங்குகிறது எனும் போது புல்லரிக்குது.

நான் அடைப்புகுறிக்குள் போட்டதை நுணா பார்க்கவில்லையா ?

பாலசிங்கத்தின் பருப்பும் கடைசியில் வேகவில்லை .கடைசியில் அவருக்கும் அதே கதிதான் .

அதன் பிறகு ஸ்காண்டிநேவியன் நாடுகளின் பேச்சுவார்த்தையில் சமஷ்டி முறைத் தீர்வுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஆஸ்லோவில் (நார்வேயின் தலைநகரம்) வைத்து ஒரு உடன்பாடும் கையெழுத்தானது. அந்தப் பேச்சுவார்த்தைக் குழுவில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். ஒரு மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையை முறியடித்து, ‘ஓயாத அலைகள்’ போர் நடவடிக்கை மூலம் புலிகள் ஒரு பெரிய வெற்றியைப் பெற்ற நேரத்தில், அந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதனால், அப்போது பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்க அந்தப் பேச்சுவார்த்தையில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

Karuna23.jpgமேற்கத்திய நாடுகளின் வெவ்வேறு நகரங்களில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. சமஷ்டி முறை தீர்வுக்கு இலங்கை அரசு ஒத்துக் கொண்டது. அந்த முறையை எப்படி அமல் செய்வது என்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று முடிவானது. ஆஸ்லோவில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் ஆன்டன் பாலசிங்கமும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரும் கையெழுத்திட்டனர்.

ஆனால், பிரபாகரன் இதை ஏற்கவில்லை. ‘யாரைக் கேட்டுக் கையெழுத்துப் போட்டீர்கள்’ என்று எங்களைக் கடிந்து கொண்டார். அங்குதான் எனக்கும், பிரபாகரனுக்கும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த கருத்து வேறுபாடு பெரிதாக வெடித்தது.

துக்ளக் இதழுக்கு கருணா கொடுத்த பேட்டி .(அதிரடியில் இருந்து எடுத்தேன் )

Edited by arjun

மேற்கத்திய நாடுகளின் வெவ்வேறு நகரங்களில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. சமஷ்டி முறை தீர்வுக்கு இலங்கை அரசு ஒத்துக் கொண்டது. அந்த முறையை எப்படி அமல் செய்வது என்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று முடிவானது. ஆஸ்லோவில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் ஆன்டன் பாலசிங்கமும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரும் கையெழுத்திட்டனர்.

ஆனால், பிரபாகரன் இதை ஏற்கவில்லை. ‘யாரைக் கேட்டுக் கையெழுத்துப் போட்டீர்கள்’ என்று எங்களைக் கடிந்து கொண்டார். அங்குதான் எனக்கும், பிரபாகரனுக்கும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த கருத்து வேறுபாடு பெரிதாக வெடித்தது.

துக்ளக் இதழுக்கு கருணா கொடுத்த பேட்டி .(அதிரடியில் இருந்து எடுத்தேன் )

களவெடுத்து  பிடிபட்டவன்  சொல்வதெல்லாம்  இப்ப  வரலாறாகுது... :(  :(  :(

உந்த விடயம்  அன்டன் பாலசிங்கமே நண்பர்களிடம் கூறியதுதான்.

எங்களுக்கு அப்பவே தெரியுமே.

ஆய்வாளர்கள் வந்து தலிபான் எண்ணை,இரத்தினம் ,மது,மாது எல்லாம் ஒபாமாவிற்கு கொடுத்திட்டுது  என்று தொடங்க போகின்றார்கள் .

புலிகளுக்கும் கோட்டு சூட்டை போட்டு கெலியில பிளேனில ஏத்திக்கொண்டு போய் கதைத்து பார்த்தார்கள் (.நோர்வே கதைத்தாலும் அமெரிக்கா  கதைத்த மாதிரித்தான் ).புலிகளுக்கு எந்த பாஷையும் விளங்காது (குறிப்பாக தலைவருக்கு )என்று முடிவெடுத்து அவர் பசையிலேயே பாடம் எடுத்துவிட்டார்கள் .

தலிபானுக்கும் அதுதான் நடக்குது .

யாருக்கு என்ன விளங்குகிறதோ அதில் எதுவும் உங்களுக்கு மட்டும் தோதே வராதா?

"தலிபானுக்கும் அதே நடக்கும்" போது தலைவருடன் பேசிய மொழியையும், தலிபானுடன் பேசும் மொழியையும் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா? :unsure:

நான் அடைப்புகுறிக்குள் போட்டதை நுணா பார்க்கவில்லையா ?

பாலசிங்கத்தின் பருப்பும் கடைசியில் வேகவில்லை .கடைசியில் அவருக்கும் அதே கதிதான் .

அதன் பிறகு ஸ்காண்டிநேவியன் நாடுகளின் பேச்சுவார்த்தையில் சமஷ்டி முறைத் தீர்வுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஆஸ்லோவில் (நார்வேயின் தலைநகரம்) வைத்து ஒரு உடன்பாடும் கையெழுத்தானது. அந்தப் பேச்சுவார்த்தைக் குழுவில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். ஒரு மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையை முறியடித்து, ‘ஓயாத அலைகள்’ போர் நடவடிக்கை மூலம் புலிகள் ஒரு பெரிய வெற்றியைப் பெற்ற நேரத்தில், அந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதனால், அப்போது பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்க அந்தப் பேச்சுவார்த்தையில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

Karuna23.jpgமேற்கத்திய நாடுகளின் வெவ்வேறு நகரங்களில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. சமஷ்டி முறை தீர்வுக்கு இலங்கை அரசு ஒத்துக் கொண்டது. அந்த முறையை எப்படி அமல் செய்வது என்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று முடிவானது. ஆஸ்லோவில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் ஆன்டன் பாலசிங்கமும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரும் கையெழுத்திட்டனர்.

ஆனால், பிரபாகரன் இதை ஏற்கவில்லை. ‘யாரைக் கேட்டுக் கையெழுத்துப் போட்டீர்கள்’ என்று எங்களைக் கடிந்து கொண்டார். அங்குதான் எனக்கும், பிரபாகரனுக்கும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த கருத்து வேறுபாடு பெரிதாக வெடித்தது.

துக்ளக் இதழுக்கு கருணா கொடுத்த பேட்டி .(அதிரடியில் இருந்து எடுத்தேன் )

விக்கி பீடியாவிலும் பார்க்க இது நிச்சயமாக நல்ல மூலம். சபாஷ்தான். உங்களின் கை பட சோவின் எழுத்துக்கள் கொடுத்துவைத்தவைதான்

"அதன் பிறகு ஸ்காண்டிநேவியன் நாடுகளின் பேச்சுவார்த்தையில் சமஷ்டி முறைத் தீர்வுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது."

தமிழருக்கு கிடைத்த உடன்படிக்கைத் தீர்வுகளில் மூன்றை மட்டும்தான் எல்லோருக்கும் தெரியும்.

1. பண்டா-செல்வா ஒப்பந்தம்

2. டட்லி-செல்வா ஒப்பந்தம்

3. இந்திய-இலங்கை ஒப்பந்தம்.

மிகவும் பிரதானமான நாலாவது.

4. அர்சுன்-கருணா ஒப்பந்தம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவிற்கு நோபல் பரிசைக் கொடுத்துப் பல்லுப்பிடுங்கிய பாம்பாக்கிவிட்டார்கள்

எடுத்தவுடன் படையெடுத்து அடிக்க முடியாத நிலை.

அதனால் கூப்பிட்டு வைத்து நாட்களைக் கடத்துகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடைப்புகுறிக்குள் போட்டதை நுணா பார்க்கவில்லையா ?

பாலசிங்கத்தின் பருப்பும் கடைசியில் வேகவில்லை .கடைசியில் அவருக்கும் அதே கதிதான் .

அதன் பிறகு ஸ்காண்டிநேவியன் நாடுகளின் பேச்சுவார்த்தையில் சமஷ்டி முறைத் தீர்வுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஆஸ்லோவில் (நார்வேயின் தலைநகரம்) வைத்து ஒரு உடன்பாடும் கையெழுத்தானது. அந்தப் பேச்சுவார்த்தைக் குழுவில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். ஒரு மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையை முறியடித்து, ‘ஓயாத அலைகள்’ போர் நடவடிக்கை மூலம் புலிகள் ஒரு பெரிய வெற்றியைப் பெற்ற நேரத்தில், அந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதனால், அப்போது பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்க அந்தப் பேச்சுவார்த்தையில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

Karuna23.jpgமேற்கத்திய நாடுகளின் வெவ்வேறு நகரங்களில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. சமஷ்டி முறை தீர்வுக்கு இலங்கை அரசு ஒத்துக் கொண்டது. அந்த முறையை எப்படி அமல் செய்வது என்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று முடிவானது. ஆஸ்லோவில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் ஆன்டன் பாலசிங்கமும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரும் கையெழுத்திட்டனர்.

ஆனால், பிரபாகரன் இதை ஏற்கவில்லை. ‘யாரைக் கேட்டுக் கையெழுத்துப் போட்டீர்கள்’ என்று எங்களைக் கடிந்து கொண்டார். அங்குதான் எனக்கும், பிரபாகரனுக்கும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த கருத்து வேறுபாடு பெரிதாக வெடித்தது.

துக்ளக் இதழுக்கு கருணா கொடுத்த பேட்டி .(அதிரடியில் இருந்து எடுத்தேன் )

உங்களின் ஆதாரங்கள் அதிரடி, துக்ளக், தேனி போன்றவர்களினுடையது தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.இதுகளை வாசித்து விட்டு தான் இங்கு வந்து கருத்து எழுதுகிறீர்கள் என்பதும் தெரியும். உருப்படியாக ஏதாவது யோசித்த்து எழுதவும். புளட்டில் அரசியல் பிரிவில் இருத்ததாக கூறினீர்கள். அரசியல் தெரிந்து எழுதுவது போல் உங்கள் எழுத்து இல்லை.

பேட்டி கருணாவினது.அது எதில் வந்தாலென்ன ?

உதே பேட்டி தமிழ் நெட்டில் வந்தால் அதன் அர்த்தம் மாறிவிடுமா?

இதற்குள் என்னை அளவீடு வேறு ,உங்களை சந்தோஷபடுத்த எல்லாம் எழுதிக்கொண்டிருக்க முடியாது .

அதற்குத்தானே இங்கு பலர் லைனில நிற்கின்றார்கள் .(காற்று புகாத இடத்தில எல்லாம் பூந்திடுவார்கள் என்று மெய் குளிர வைப்பார்கள் ) .

பேட்டி கருணாவினது.அது எதில் வந்தாலென்ன ?

அதுதானே, அப்போ யாழிலும் ஒரு தடவை வந்து விட்டு போகட்டுமே என்பதற்காகத்தானாகும் இங்கே பதிந்தீர்கள்.

உதே பேட்டி தமிழ் நெட்டில் வந்தால் அதன் அர்த்தம் மாறிவிடுமா?

இப்படி அருமையானதொன்று தமிழ் நெட்டிலும் வந்திருக்கலாமே என்று ஆதங்கப்படுகிறிர்களா அல்லது  அல்லது கழுதை அறியுமா கருணாவின் பேட்டியை என்று யாழில் செய்தி வாசிப்பவர்கள் மீது குறைப்படுகிறீர்களா? புரியும் படி சொன்னால் நல்லது

இதற்குள் என்னை அளவீடு வேறு ,உங்களை சந்தோஷபடுத்த எல்லாம் எழுதிக்கொண்டிருக்க முடியாது .

உங்களை அளவிட என்று வெளியே விரித்து வைக்கிறீர்களா அல்லது ஒழித்து மூடிவிடுகிறிர்களா தெரியாது. ஆனால் உங்கள் எழுத்தில் ஒன்று மட்டும் துல்லியமாகத்  தெரிகிறது,  ஒன்று, யாழ் வாசகர்கள் புண்பட்டாலும் போகுது சத்தியத்தை மட்டும் வெளிக்கொண்டுவந்துவிட வேண்டும் என்று தேடாத அழுக்கடையில் இல்லாமல் பார்த்துக்கொள்கிறீர்கள் அல்லது யாழை குஷிப்படுத்த என்று நகைசுவைகளை மட்டும்தான் கொண்டுவந்து பதிகிறீர்கள்.

அதற்குத்தானே இங்கு பலர் லைனில நிற்கின்றார்கள் .(காற்று புகாத இடத்தில எல்லாம் பூந்திடுவார்கள் என்று மெய் குளிர வைப்பார்கள் ) .

இன்றுதான் கவனித்திருக்கிறிர்கள் யாழில் என்ன போகிறது என்பதை.  அதுதான் கிறிக்கட்டில் எல்லா நாட்டுலுமே, என்றுமே 10 பேர் பீல்ட்மன் ஆச்சே. எப்படி சமாளிப்பீர்களோ? ஒருவரை மட்டும் பார்த்தாலே சந்தோசமாக இருக்குமா?  பட் பண்ணி பழக்கமில்லையா?

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் பண்ணல்ல.. புடுங்கல்ல.. என்று இன்றும் பேட்டி கொடுக்கிறார்களே தவிர.. பிரபாகரன் பண்ணாததைப் புடுங்காததை தாங்கள் பண்ணுறது..??! ஏன் அதற்கு யோசிக்கினம்...???! அதுதான் எனக்குப் புரியுதில்ல. புலிகளுக்கு வகுப்பெடுக்கிறவை ஏன் தாங்கள் செய்யினம் இல்லை..???! ஏன்னா அவையாள முடியாது. முடிஞ்சதெல்லாம்.. குரைக்கவும் காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்கவும் மட்டுமே..! இவங்களை எல்லாம்.. உதாரணம்.. ஆக்குது கொஞ்சக் கூட்டம்.

தலிபான்களோடு கமீர் காசாயை விஞ்சி அமெரிக்கா பேச உள்ளது. அதுவும் மிக மோசமான தற்கொலைத்தாக்குதல்களையும் இதர தாக்குதலையும் மேற்கொள்ளும் தலிபான்களுடன் பேச உள்ளது.

தலிபான்கள் அமெரிக்காவையும் நேட்டோவையும் கடந்த 10 ஆண்டுகளாக சந்தித்து வருகிறார்கள். பாகிஸ்தானையும் சந்தித்து வருகிறார்கள்.

புலிகள் பின்னடைவை கண்டதற்குக் காரணம்.. தமிழீழத்தின் பூகோள அமைவிடம். நாங்கள் கடல் வழி வழங்களில் தங்கி இருந்ததால்.. அதனை தடுத்து எதிரியின் பலத்தை அதிகரித்து புலிகளோடு இலகுவாக ஒரு வெற்றிக் கொடி நாட்டிவிட்டார்கள் மேற்குலகத்தினர். அது தலிபான்கள் விடயத்தில் நடக்க வாய்ப்பில்லை. காரணம்.. ஆப்கானிஸ்தானின் பூகோள அமைவிடம் தமிழீழம் போன்று இலகுவாக கண்காணிக்கப்படக் கூடியதல்ல..! அந்தப் பூகோள அமைவிடம் சோவியத்தையும் தோற்கடித்து இன்று நேட்டோவையும் தோற்கடித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா தோல்வி என்ற ஒன்றை சுமக்காமல்.. வெளியேறவே தலிபான்களை தாஜா பண்ணுகிறது. ஆனால் தலிபான்கள் எந்தளவுக்கு இறங்கிப் போவார்கள் என்பது அமெரிக்காவின் பேரத்தில் தான் தங்கியுள்ளது.

ஆக தற்கொலைத் தாக்குதலோ.. பயங்கரவாதமோ.. அல்ல பிரச்சனை. அமெரிக்காவின் நலன் தான் முக்கியம்..! அமெரிக்காவின் நலனிற்கு தமிழர்களின் அழிவை பயன்படுத்த இலகு தெரிவு இருந்ததால் அமெரிக்கா அதனைப் பாவித்துக் கொண்டது. இன்று தமிழீழம் ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு பூகோள மையத்தில் இருப்பின்.. சிங்களம் இப்போதும் அமெரிக்காவின் உதவிக்காக ஓடித்திரியும் நிலையே இருந்திருக்கும்.

எதுஎப்படியோ.. சிங்களம் தலிபான்களைத் தடை செய்துள்ள இந்த நிலையில்.. தமிழீழம் தலிபான்களோடு ஏற்படுத்தக் கூடிய நல்லுறவு பற்றியும் யோசிப்பது நல்லது. அமெரிக்காவே உறவுகளைப் பேணும் போது..???! நாங்கள் ஏன் முடியாது..??! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே பயங்கரவாதிகள் என அதி உச்சக் கண்காணிப்பில் இருக்கும் தலிபான்களுக்கே  கட்டாரில் தூதரகம் இருக்கும்போது  ஒரு இனத்தின்  விடுதலையை வேண்டிப்  போராடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு எந்த நாட்டிலாவது உத்தியோகபூர்வமாக ஒரு அலுவலகம் இருக்கின்றதா ?

அந்த நோக்கில் நாங்கள் சிந்தித்தால் எங்கள் விடுதலையை  இலகுவாக்கலாம்  

அதிலும் வேடிக்கை என்னவென்றால்.. தலிபான்களிடம் அடிவாங்கும் பாகிஸ்தானே (புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சொல்லிக் கொண்டு சிங்களவனுக்கு கப்பல் கப்பலாக ஆயுதம் அனுப்பியவர்கள் மற்றும் நேரடி வழிகாட்டல்கள் வழங்கியவர்கள்) தான் இந்த தூதரக அமைப்பில் முன்னணியில் நின்று செயற்பட்டிருக்கிறது..!

பெனாசிர் பூட்டோவைக் கொன்ற தலிபான்களுக்கு (தலிபான்களின் உதவியோடு அக்கொலை செய்யப்பட்டதாகவே பாகிஸ்தான் மக்கள் கருதுகின்றனர்) இதுவரை பாகிஸ்தான் தடை விதிக்கவில்லை. ஆனால்.. நம்ம பக்கத்து நாடு. செய்தவர்கள் யாரென்று தெரிய முன்னமே புலி மேல பழியும்.. தடையும். அந்தத் தடையை சாட்டு வைச்சு பெரும் இன அழிப்பையே செய்து முடித்திருக்கிறார்கள். இதுதான் முஸ்லீம்களுக்கும் நாங்கள் வாழும் இடத்தில் எங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும்....உள்ள வேறுபாடு.

ஏன்.. எமது முஸ்லீம்கள் கூட தலிபான்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்லமாட்டார்கள். எத்தனையோ மசூதிகளில்  எல்லாம் குண்டு வைத்து மக்களைக் கொன்றுள்ளார்கள். ஆனால்.. புலிகளை பயங்கரவாதின்னு சொல்ல நம்மாக்களே அடி எடுத்தும் கொடுக்கிறார்கள்..! :rolleyes::icon_idea:

Kerry calls Karzai to defuse tension over Taliban

_68261611_68261606.jpg

US Secretary of State John Kerry has spoken by phone to Afghan President Hamid Karzai to try to defuse tensions, an Afghan spokesman has told the

Washington and Kabul had disagreed over a new Taliban office in Qatar.

But the BBC has learned that Mr Karzai may now be willing to continue security talks with the US, which he had suspended in protest over the office.

Mr Karzai said the opening of the building contradicted earlier US security guarantees to his government.

The Taliban premises in Qatar opened on Tuesday, on the same day that Nato handed over security for the whole of Afghanistan to the Afghan government for the first time since the Taliban were ousted in 2001.

Mr Karzai said in a statement on Wednesday that the office was "totally contradictory to the guarantees that were made by the USA to Afghanistan".

_68262032_018356839.jpg
 
The row centres on a Taliban office which opened in Doha on Tuesday

His officials said he objected to a Taliban flag flying from the building, and also the name given to the building - the Islamic Emirate of Afghanistan.

http://www.bbc.co.uk/news/world-asia-22980002

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
விடுதலைப்புலிகளின் அபார வளர்ச்சியினை கண்டு சர்வதேச உலகம் ஒருகணம் மிரண்டு விட்டது.
தற்போதைக்கு இன்னொரு இஸ்ரேல் அவர்களுக்கு பெரிய பாரம்.
ஒரு நாடும் அங்கீகரிக்காமலே தனியரசு நடத்தியவர்கள்.
அதன் திறமையும் கட்டுக்கோப்பும் வெளிநாடுகளிலும் எதிரொலித்தது.
இதுவரை சர்வதேச ரீதியில் எந்தவித பயங்கரவாத செயலும் இல்லை.
இப்படிப்பட்ட தமிழினத்திற்கு சர்வதேசம் அங்கீகரித்தால் நிலைமையே வேறு... அரசியல் ரீதியில் சர்வதேசத்திற்கு தலையிடியாக வரக்கூடியவர்கள்  இவர்கள் என எண்ணிவிட்டார்கள்.
 
 யசீர் அரபாத் பல பயங்கரவாத செயல்கள் மூலம் உலகத்துக்கே கண்ணில் விரலைவைத்து ஆட்டியவர்.அவருக்கு நோபல்பரிசு கொடுத்த உலகம்........மிச்சம்மீதிகளை நீங்களே கணக்குப்போட்டு பார்க்கலாம். 
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே பாரிய வேறுபாடு இருக்கிறது. அதாவது தலிபான்களை இன்றுவரை இயக்குவதும், முண்டுகொடுப்பதும் பாக்கிஸ்த்தானிய உளவு அமைப்பான ஐ. எஸ். ஐ எனும் அமைப்புத்தான். இது அமெரிக்கர்களுக்கு தெரிந்தது முதன் முதலில் ஆப்கானிஸ்த்தானில் தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா யுத்தம் செய்யத் தொடங்கிய முதலிரு நாட்களில். அதாவது அதுவரை அப்கானஸ்த்தானில் நிலை கொண்டு தலிபான்களுக்கு உதவிவந்த பெருமளவு ஐ. எஸ். ஐ அதிகாரிகளுடன் ஆயிரக்கணக்கான தலிபான் தளபதிகள் மற்றும் முக்கியஸ்த்தர்களை, எமது சிவிலியன்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துகிறோம் என்கிற போர்வையில்  பாக்கிஸ்த்தான் இரவோடு இரவாக விமானமேற்றி பாக்கிஸ்த்தானுக்குள் கொண்டுவந்து சேர்த்தது. அன்றிலிருந்து அது தலிபான்களைப் பாதுகாத்து வருகிறது. இது அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். பாக்கிஸ்த்தான் இருக்கும்வரை தலிபான்களை ஒன்றும் செய்ய முடியாது. 

அமெரிக்கப் படைகள் முன்னேறும்போது பாக்கிஸ்த்தனுக்குள் சென்று ஒளிந்துகொள்ளும் தலிபான்கள், அமெரிக்கர்கள் சென்றவுடம் மீண்டும் அதே இடத்திற்கு வந்துவிடுகிறார்கள். இது அமெரிக்காவுக்குத் தெரியும், இதனால்த்தான் அவ்வப்போது பாக்கிஸ்த்தான் நாட்டிற்குள் அதுமீறிப் பிரவேசித்து தலிபான் மற்றும் அல்கொயிடா அமைப்பினர் மீது ஏவுகணைத் தாக்குதலோ, அதிரடித் தாக்குதலோ நடத்துகிறார்கள். ஆனால் தொடர்ந்தும் இதேபோல செய்வதற்கு பாக்கிஸ்த்தான் இடம் கொடுக்காது.

ஆகவேதான் அமெரிக்கா தான் செய்ய வந்த வேலையை பாதியில் அவசர அவசரமாக முடித்துக்கொண்டு தனது படைகளை மீளப்பெற முயற்சிக்கிறது. அதற்குத்தேவை அப்கானிஸ்த்தானில் தற்காலிகமாகவேனும் ஒரு ஸ்த்திரமான ஆட்சி என்பது. அதனால்த்தான் தலிபான்களுக்குத் தூது விடுகிறார்கள். "நாங்கள் போகும்வரையாவது சும்மாயிருங்கள் " எனும் கெஞ்சல் அது.

புலிகளின் கதையோ அப்படியல்ல. அவர்களுக்கு அடிவிழும்போது பாதுகாப்பாக ஓடி ஒளிவதற்கு இடமோ அல்லது தொடர்ந்தும் உதவுவதற்கு நண்பர்களோ இருக்கவில்லை. அது சிங்களவர்களுக்கும்னவர்களுக்கு உதவிய அமெரிக்கா இந்தியா உற்பட்ட பல நாடுகளுக்கும் மிகவும் வாய்ப்பாகப் போனது. ஆகவேதான் இசகு பிசகாமல் அடித்து முடித்தார்கள். புலிகளுடன் சமரசம் செய்ய வேண்டிய தேவை அன்று யாருக்கும் இருக்கவில்லை. புலிகள் சமரசத்துக்கு வருகிறோம் என்று சொன்னால்க்கூட யாரும் அதைச் சட்டை செய்யும் மனப்பாங்கில் இருக்கவில்லை. புலிகளை முற்றாக அழிக்கக் கூடிய சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருக்கிறது என்கிற வகையில்த்தான் அன்று எலோரும் நடந்து கொண்டார்கள். இதற்கு புலிகளும் ஒரு முறையில்க் காரணம் என்றுதான் நான் நினைக்கிறேன். எதற்கும் விட்டுக்கொடுக்காத இலட்சிய வெறியே புலிகளின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது. அத்துடன் எமது இனத்துக்கே உரிய இலகுவில்  விலைபோகும் குணாம்சமும், துரோகத்தனங்களும் புலிகளின் சவப்பெட்டி மேல் இறுதி ஆணியை அடித்து முடித்தன. எந்த துரோகத்தனங்களைக் காட்டி மற்றைய இயக்கங்கள் முடக்கப்பட்டனவோ அதைக் காட்டிலும் பாரிய துரோகத்தனங்களால் புலிகளியக்கம் இறுதியில் அழிக்கப்பட்டது.

Edited by ragunathan

தமிழரை பயங்கரவாதிகளாக காட்ட முயலும் மாத்துக்கருத்துகள் யாரவது சிங்கள அரசியல்வாதி ஒருவர் பெண் ஆசிரியை முட்டுக்காலில் நிற்க வைத்தது பற்றி ஏதாவது எழுதினார்களா?

தமிழரின் பிக்குகள் இந்து கோவில்களை உடைப்பத்தாக காட்ட முயல்கிறார்கள். தமிழர் தமிழ் பேசவில்லையாம் அவர்களின், 10,000 ஆண்டுகால சரித்திரத்தில் 200 ஆண்டுகள் தொடர்பில் இருந்த ஆரிய சமணர்களும், புத்தர்களும்தான் பேசினார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடைப்புகுறிக்குள் போட்டதை நுணா பார்க்கவில்லையா ?

பாலசிங்கத்தின் பருப்பும் கடைசியில் வேகவில்லை .கடைசியில் அவருக்கும் அதே கதிதான் .

அதன் பிறகு ஸ்காண்டிநேவியன் நாடுகளின் பேச்சுவார்த்தையில் சமஷ்டி முறைத் தீர்வுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஆஸ்லோவில் (நார்வேயின் தலைநகரம்) வைத்து ஒரு உடன்பாடும் கையெழுத்தானது. அந்தப் பேச்சுவார்த்தைக் குழுவில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். ஒரு மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையை முறியடித்து, ‘ஓயாத அலைகள்’ போர் நடவடிக்கை மூலம் புலிகள் ஒரு பெரிய வெற்றியைப் பெற்ற நேரத்தில், அந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதனால், அப்போது பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்க அந்தப் பேச்சுவார்த்தையில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

Karuna23.jpgமேற்கத்திய நாடுகளின் வெவ்வேறு நகரங்களில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. சமஷ்டி முறை தீர்வுக்கு இலங்கை அரசு ஒத்துக் கொண்டது. அந்த முறையை எப்படி அமல் செய்வது என்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று முடிவானது. ஆஸ்லோவில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் ஆன்டன் பாலசிங்கமும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரும் கையெழுத்திட்டனர்.

ஆனால், பிரபாகரன் இதை ஏற்கவில்லை. ‘யாரைக் கேட்டுக் கையெழுத்துப் போட்டீர்கள்’ என்று எங்களைக் கடிந்து கொண்டார். அங்குதான் எனக்கும், பிரபாகரனுக்கும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த கருத்து வேறுபாடு பெரிதாக வெடித்தது.

துக்ளக் இதழுக்கு கருணா கொடுத்த பேட்டி .(அதிரடியில் இருந்து எடுத்தேன் )

ஆ ஆ எவளவு ஒரு வரலாற்று பொக்கிஷம்.
அரிசந்திரனின் காலத்தில் நாங்கள் பிறக்கவில்லை என்ற கவலை இவர் மூலம்தான் இல்லாமல் போனது.
இதை ஏன் இவளவு நாளும் இங்கே போடவில்லை???
 
நான் பிரபாகரன்தான் பெரிய தலைவர் என்று இவளவு நாளும் நினைத்து கொண்டிருந்தேன்.
 
1987இல்  இந்திய அரசும் 
1990இல்  சிங்கள அரசும் 
தமிழ் ஈழத்தையே தாம்பாள தட்டில் வைத்து கொண்டு நின்றார்களாம்.
எனக்கு சண்டைதான் வேணும் என்று பிரபாகரன் தட்டை தட்டி விட்டாரம். என்று நான் நேரு நேர் அடியில் வாசித்தேன்.......
நீங்கள் வாசிக்க வில்லையா ????
  • கருத்துக்கள உறவுகள்

ஆய்வாளர்கள் வந்து தலிபான் எண்ணை,இரத்தினம் ,மது,மாது எல்லாம் ஒபாமாவிற்கு கொடுத்திட்டுது  என்று தொடங்க போகின்றார்கள் .

புலிகளுக்கும் கோட்டு சூட்டை போட்டு கெலியில பிளேனில ஏத்திக்கொண்டு போய் கதைத்து பார்த்தார்கள் (.நோர்வே கதைத்தாலும் அமெரிக்கா  கதைத்த மாதிரித்தான் ).புலிகளுக்கு எந்த பாஷையும் விளங்காது (குறிப்பாக தலைவருக்கு )என்று முடிவெடுத்து அவர் பசையிலேயே பாடம் எடுத்துவிட்டார்கள் .

தலிபானுக்கும் அதுதான் நடக்குது .

பொறுக்கி தனம் செய்பவர்களுக்கும் ....
அவர்களது பாசைதான் புரியும்.
மாறி மாறி பேசியது  (செம்மறிகளுக்கு  ) தெரியும் பேசிய விடயம் ஏதாவது தெரியுமா?
2002 இல் தாய்லாந்தில் பேசி குறித்த விடயங்களை நிறை வேற்றுவதாக பீரிஸ் உறுதி கொடுத்தார்.
2007 ஆம் ஆண்டும் அதே சிடிதான் கொண்டு வந்து போட்டார்கள்.
ஐந்து மாத காலத்திற்குள் நிறைவேற்றுவோம் என்று சொன்னவை ஐந்து வருடம் ஆகியும் முடியாது இருந்தது.
அரசியலை ............... அது சார்ந்தவர்களுடந்தான் பேச முடியும்.
அன்டன் பாலசிங்கம் போனடிச்சவர். தம்பி தந்தி அடிச்சவர் போன்ற செம்மறி கதைகளுக்கு அதே பாசைதான் பேச முடியும்.
இந்த பூலுடா விடும் வேலையை உங்களின் பட்டிக்குள்ளேயே வைத்திருங்கள்.
எங்களுக்கு வேலிகள் இல்லை............ பட்டிட்குள் நின்று அடை பட்டுக்கொள்ள நாம் ஆடு மாடும் இல்லை.
"தலைவர்" அந்த மனிதனை பற்றி எழுத (செம்மறி) கூட்டத்திற்கு அருகதை இல்லை.
புலிகள் செம்மறிகளுக்கு போராடவில்லை ..... தமிழர்களுக்கு போராடியவர்கள்.
புலிகளுடைய பிழைகள் .... தமிழருடையவை. அது எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள தகராறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.