Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தியாகிகளுக்கு தியாக வணக்கம்......இவர்களுக்காவது சிறிலங்காவில் இந்த அமைப்பினரால் ஒரு நினைவுத் தூபி அமைக்க முடியுமா?அப்படி அமைத்து தியாகிகள் தினம் அனுஸ்டிக்க முடியுமா?

  • Replies 192
  • Views 16.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு கனடாவில் நடைபெறும் நினைவு நாளில் ஒரு சில வார்த்தைகள் பேசலாம் என யோசிக்கின்றேன்.

அதற்கு இங்கு பலர் குறிப்புகள் தந்ததற்கு நன்றி .

சுயமா சிந்தித்து எழுத தெரியாதா? எல்லாம் பெறுக்கி எழுதி பழகிவிட்டது. ஒட்டப் போனவர்கள் ஓடி வந்திபின் என்னத்தை முழுமையாக தெரிந்து கதைக்க முடியும். 

யாழ் களத்திலும் நிறைய பி எச் டிக்கள் உள்ளனர். புத்தி ஜீவிகளும் நிறைய பேர் உள்ளார்கள்.

ஈ அ கொ தான் இருக்கின்றார்கள்  :D

இது ஒரு மனிதனின் உண்மை வரலாறு ,எனக்கு தெரியாத ஒரு விடயத்தை அதை தெரிந்த இன்னொருவரிடத்தில் இருந்து பெறுவதில் ஏதும் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை .

சுயமாக சிந்தித்து கற்பனையாக எழுத இது தானை தளபதியின் வாழ்க்கை வரலாறு இல்லை .எல்லாளன் நினைவு தூபியில் கருவுற்றார் தொடக்கம் முள்ளிவாய்காலில் நீர்முழ்கி கப்பலை ஓட்டிசென்றார் என்று எழுத .

உண்மை எங்களது வாழ்க்கை கற்பனை உங்களது.

தியாகிகளுக்கு தியாக வணக்கம்......இவர்களுக்காவது சிறிலங்காவில் இந்த அமைப்பினரால் ஒரு நினைவுத் தூபி அமைக்க முடியுமா?அப்படி அமைத்து தியாகிகள் தினம் அனுஸ்டிக்க முடியுமா?

970730_328763577255102_739899044_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நாற்சந்தியில் ஒரு திரியில் இசை ஆரம்பத்தில் எழுதியதை இன்னொருவர் தன்ட கருத்து மாதிரி திரும்பி எழுதி இருந்தார்.எங்கட கருத்து என்ன என்டால் எங்களுக்கு வேண்ட பட்டவன் எதுவும் செய்யலாம் தட்டி கேட்க மாட்டோம் ஆனால் வேண்டாதவன் எதாவது செய்தால் அதை பெரிதாக்குவோம்.நக்கலடிப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

970730_328763577255102_739899044_n.jpg

யாழ் இந்துக்கல்லூரிக்குள் புகுந்து ஆசிரியர்களை மாணவர்களைப் படுகொலை செய்தவன் பெயரில் எல்லாம் கண்தானம். ஒரு காரணமும் இன்றி.. சொந்த இன மாணவர்களை ஆசிரியர்களை கொன்ற.. இந்தப் படுகொலை வெறியனுக்கு யாழ் இணையத்தில் மறைமுகத் தியாகிப்பட்டம்..! நல்ல முன்னேற்றம்..! யாழ் என்ன ஒட்டுக்குழு கூடாரமா..??! :icon_idea::rolleyes:

ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தை விட குரூரமாக ஈபிஆர் எல் எப் இந்திய இராணுவத்தோடு சேர்ந்து அழிப்பு நடத்தியது. சந்திக்கு சந்தி சோதனைச் சாவடிகளைப் போட்டு மக்களை சந்தேகமனர்வர்களைப் பிடித்து சித்திரவதை செய்து கொன்றது. யாழ்ப்பாணம், சுன்னாக, மல்லாகம், வல்லைச் சந்தி, சிறுப்பிட்டி, மருதனாமடம், திருனெல்வேலி ஆகிய இடங்கள் சாதாரண மக்கள் அருகே கூட செல்ல முடியாத மரணக் கோட்டைகளாகத் திகழ்ந்தன.
நாபா இடதுசாரியாக இருந்து இதற்குப் போராடமுடியவில்லை என்றால் அதற்காக தற்கொலை செய்து செத்திருக்கலாம். இன்று நாபாவை இடதுசாரி என்றால் இடதுசாரிகள் தற்கொலை செய்துகொள்ளலாம்.

பத்மநாபா வின் அனுமதியுடனே எல்லாம் நடந்தது. இன்று இவரை தியாகியாக ஏற்கும் அர்சுண் விடுதலைப் புலிகளைப் பற்றி எதுவும் கதைக்க முடியாது.

யார் இல்லை என்று சொன்னது ,அனைத்து தலைவர்களின் அனுசரணையுடன் தான் கொலைகள் கொள்ளைகள் நிறைவேறியது .முழு இயக்கமும் இரத்த கறை படிந்தது .

பத்மநாபா ஒரு விதி விலக்கு அவர் இயக்கத்தில் உட்கொலை நடக்கவில்லை ,அதுவரை அவரை மெச்சத்தான் வேணும் .முடிந்தால் ஒரு பெயர் சொல்லுங்கள் .

பொது மக்களையே மட்டுமட்டாகதான் சுட தெரியும்........ அதுவும் மறைந்திருந்து.
ஆயுத போர் செய்து விடுதலை பெற்று தருகிறோம்.
என்று சொல்பவனுக்கு முதலில். ஆயுதத்தால் சுட ஆவது தெரிந்திருக்க வேண்டும்.
 
ஈரோஸை..... ஈப்பி என்று இரண்டாக பிரித்தது.
ஒரு இயக்கத்தில் இருந்த அனைவரையும் சாகடித்ததட்கு சமன் ஆனது.
  • கருத்துக்கள உறவுகள்

970730_328763577255102_739899044_n.jpg

ஈ.பி. யில் எத்தனை அணிகள்?...எல்லாரும் ஒன்றாக இருந்து தங்களது தலைவனுக்கு அஞ்சலி செய்ய முடியாதா? ஈ.பி.....வரதர் அணி........சுரேஸ் அணி.......டக்கிளஸ் அணி...பத்மநாபா அணி....

Edited by putthan

தமிழனை தமிழன் கொன்றான் இதில் இன்னும் அதற்குள் நியாயப்படுத்தல்கள்.

//செய்த துப்பாக்கிகளின் பின்னணியிலும் இந்திய உளவுத்துறையே மறைந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் பலரால் தெரிவிக்கப்படுகின்றன.//

இப்படி ஒரு கேணத்தனமான பிட்டை வேறு போடுகின்றார்.

இந்தியாவின் புவிசார் பாதுகொள்கை அரசியல் வாதிகளை காலால் ஒரு உதை உதைத்துவிட்டு முன்னேறுகிறார் போலிருக்கு சண்ட மாருதன். இந்தியா இலங்கையில் தலையிட்டதெல்லாமே, இலங்கைக்கு காந்தியம் தெரியாது ஒருதடவை போய் சொல்லிக்கொடுத்துவிட்டு வருவம் என்று வந்தார்கள் எங்கிறார். ஆனால் பின்னாளில் ஏன் இரசாயனக் குண்டுகள் கொடண்டுவந்தார்கள் என்றால் அதில் கூட அவர்களின் காந்தியம்தான்.

அப்பட்டமாக தமிழ் இளைஞர்களை பதியுதின் பள்ளிகளால் உதைத்து தள்ளிவிட, வக்கற்று போயிருந்த இளைஞர்களை வைத்து தனக்கு நாடு பிடிக்க முயன்ற இந்தியவை காப்பாற்றுவது தேவானந்தாவுக்கு கூட இன்று ஒத்துவராத அரசியல் முயற்சி. தேவானந்தா இந்தியாவுக்கு எதிராகப் படகு விடும் போது இவர்கள் இந்தியாவை காப்பற்றுவது தங்களுக்குள் தன்னும் ஒட்டுக்குழுகள் ஒற்றுமை என்பதையா காட்டுகிறது. தேவானந்தா இந்தியா செய்வது சரி என்றால் சென்னைக்கு போய் வழக்கை சந்தித்தால் என்ன? எதிரியின் எதிரியாக இந்தியாவை சரியாக காட்டும் போது யார்தான் நம்புவான்?

தமிழ் மக்களை தமிழ் மக்கள் கொன்றார்கள் என்பது ஒன்றும் புதிதல்ல. மாறுக்கருத்துகளுக்கு சிங்கள அரசும் இந்திய ஆமியும் செய்த இலட்சக்கணக்கான  கொலைகள் தலையின் ஒரு சின்ன ஞாபக அணுவிலும் கூட பதிவில் நிற்க முடியாமல் தடுமாறுவது ஒரு உயிரியல் ஆச்சரியம். அவற்றை எந்த நிலையிலும் கண்டிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அதிலும் கவனிக்க தக்மாச்சரியம் என்ன என்றால் கொலைகளை புலிகளை தாக்கத்தான் பாவிக்கிறார்களே அல்லாமல் அந்த மாற்று இயகங்கள் செய்தது சரி என்று எங்கும் முழுமையாக கூறியதில்லை. ஏன் எனில் தேவானந்தா பாட்டி ஒன்றை தவிர எல்ல இயக்கங்களும், தாங்கள் அரசுடன் போராடுகிறோம் என்று நினைத்து, தம்முள் போராடிகொண்டிருந்த இந்தியா இலங்கை அரசின் சதிகளில் ஒருப்பகம் சாய முடிவெடுத்து எந்த பக்கம் சாய்வது என்பது தெரியாமல் நடந்துகொண்டு தடுமாறியதால் வந்த அழிவே. அதாவது இந்த மாற்று இயக்கங்களை சண்டமாருதனால் காப்பற்ற முடியாது; ஆனால் பெயர் சொல்லி அவரால் காப்பாற்றப்படகூடியர்வகள் கருணாவும் தேவானந்தவும் மட்டுமே.

அரசும், ரோவும் தங்களை ஆயுதங்களை பாவிக்காமல், தங்கள் ஆமியை பாவிக்காமல் தமிழ் மக்களை பாவித்து தமிழ் மக்களை கொல்லும் அரசியல் சூழ்நிலை டி.எஸ் ஆரம்பித்து மற்றவர்களால் நன்றாக வளர்க்கப்பட்டிருந்தது. இதையேதான் போதுக்கீசர் சிங்கள கூலிப்படைகளை வைத்து தமிழரை கொன்ற போதும், இந்திய கூலிப்படைகளை வைத்து பிருத்தானியர் இந்தியாவை ஆண்ட போதும் செய்தது. ஆட்சியாளர் இதை செய்ய முடியும் என்பதை வடிவாகத்தெரிந்த சண்டமாருதன் அன்று எப்படி மாற்று இயக்கங்கள் அரசின், ரோவின் கைகளைல் இருந்து நரவலித்தார்களோ, அதே மாதிரி தான் இன்று அரச குடும்பத்தின் கையிலிருந்து நரவலிப்பது போல் எழுதுகிறார்.

இன்று மாற்றுக் கருத்துக்கள் எப்படி தங்களை உணர மறுத்து தம் இனத்தை வார்த்தைக்கு வார்த்தை தூற்றுகிறார்களோ, அப்படி தமிழ் மக்கள் மீது வன்மம் வைத்திருந்தர்களை பாவிப்பதில் ரோவும், இலங்கை அரசும்  ஈட்டியிருந்த வெற்றியின் முடிவுதான் மாற்று இயக்கங்கள் புலிகளால் தண்டிக்கப்பட்டமை. ஆயுதப் போராட்ட காலத்தில் இயங்கங்களுக்குள் இருக்கும் முரண்கள் காதலில் வரும் ஊடல் அல்ல. அது ஒரு செல்லமா கிஸ்சால் மாறிவிடகூடிய உடல் அல்ல. இதில் மட்டும் தான் போய்முடிய முடியும் என்று தெரிந்துதான் ரோவும், அரசும் பிரிவினையை ஏற்படுத்தியது.

.

அனைத்து இயக்கங்களும் உடைந்து பிரிவுகள் ஆக இயங்குகின்றன ,இதற்கு ஈ பி யும் விதிவிலக்கல்ல .இதில் படு கேவலம் புலிகள் தான் .அதுவும் தயா மாஸ்டரின் இப்போதையை அறிக்கைகளை பார்க்கும் போது சொல்லி வேலையில்லை .

நேற்றைய நினைவுநாள் குறிப்பிட்டளவு சனத்துடன் சில தெளிவான உரைகளுடன் இனிதே நடந்துமுடிந்தது .

இந்திய இராணுவத்துடன் சேர்ந்து ஈ பி செய்த அட்டூழியங்களை ஒருவர் பட்டியலிட்டார்.கூட்டதிற்கு தலைமை வகித்தவர் தமது அமைப்பு  ஏற்கனவே அதற்கு மன்னிப்பு  கேட்டுவிட்டதாகவும் திரும்பவும் மன்னிப்பு கேட்பதாகவும் சொன்னார் .மன்னிப்பால் நிவர்த்திசெய்ய முடியாத அராஜகங்கள் அவை என்பதையும் ஒப்புக்கொண்டார்கள் .(ஓரளவு விளக்கமானவர்கள் தானே ).

நான் எனது சிறு குறிப்பில்,

83 இன கலவரத்துடன் நாட்டுக்காக என போராட என இணைந்தவர்களை இதில் இந்தியாவின் பங்கை அறியாத அரசியல் முதிர்ச்சி அற்ற தலைமைகள் பிழையாக வழிநடத்திவிட்டன என்று குறிப்பிட்டேன் .இந்தியா எங்களை பாவிக்கின்றது என்பதை உணராமல் நாங்கள் இந்தியாவை பாவிப்போம் என்று சிறுபிள்ளைத்தனமாக சிந்தித்தான் விளைவுதான் நாம் இன்று அனுபவிக்கும் துயரம் .

இன்றும் கூட சர்வதேசத்தில் குறிப்பாக கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் அரசியல் முக்கியத்துவம் புரியாமலே நாம் அரசியல் செய்கின்றோம் ,அவனன்றி எமக்கு ஒரு அணுவும அசையாது என்பதை புரியாமல் இருக்கின்றோம் .அது சிங்கள அரசுகளுக்கு தெட்ட தெளிவாக தெரியும் .அதனால் தான் அவர்கள் தொடர்ந்தும் தமது அரசியல் நகர்வுகளை மிக  சாதுர்யமாக நகர்த்தி வெற்றியும் பெறுகின்றார்கள் .இதற்கு பெயர் சரணாகதி அல்ல சாணக்கியம் .

Edited by arjun

நாற்சந்தியில் ஒரு திரியில் இசை ஆரம்பத்தில் எழுதியதை இன்னொருவர் தன்ட கருத்து மாதிரி திரும்பி எழுதி இருந்தார்.எங்கட கருத்து என்ன என்டால் எங்களுக்கு வேண்ட பட்டவன் எதுவும் செய்யலாம் தட்டி கேட்க மாட்டோம் ஆனால் வேண்டாதவன் எதாவது செய்தால் அதை பெரிதாக்குவோம்.நக்கலடிப்போம்

இசைக்கு வராதா கவலை வக்கீலுக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல.

மேடை ஏற முதல் சிந்தனையை, அறிவை வளர்க்க முடியாத மாற்றுக்கருத்து மாணிகங்கள் சந்தையில் கீரை வாங்கி விற்பதாக நினைத்து அறிவுரைகள் வழங்கி வருவது வேடிக்கை.

இந்த அரிச்சுன் அண்மையில் தான் யாரிடமோ புதிதாக வாங்கியிருக்கும்  பத்பநாப கீரையை  சில நாட்களுக்கு முன்னர் இந்த யாழில் விற்க முயன்று, உறவிகளிடம், பிரதானமாக நெடுக்கிடமும் நூனாவிடமும் சங்ககடப்பட்டு திரிக்கு வராமல், தொடராமல், நிறுத்தியவர்.

இன்றுதான் படிக்கும் பாடத்தை வைத்து அன்று பத்தமநாப EPRLF தான் சரியான இயக்கமாக இருந்தது என்பது வாழத்தெரிந்த மாற்றுகருத்துகளுக்கு ஒரு நல்ல உபதேசம். ஒரு புத்திசாலியான தன்னை PhDயாக காட்ட முயலும் மாற்றுக்கருத்து ஆடு ஒன்றின் கதை இப்படிப்போகிறது. " தெரு ஒன்றில் ஒரு பள்ளம், ஒன்பது ஆடுகள், எட்டும் கடக்க முயன்று பள்ளதில். அவற்றின் மீது நடந்து சென்று அசூர் அடித்த கடைசி ஆடு ""மொக்கு கூட்டத்திற்கு பதையில் இருந்த பள்ளம் தெரியவில்லையா என்று கேட்டுவிட்டு சென்றது""

இந்தியாவின் புவிசார் பாதுகொள்கை அரசியல் வாதிகளை காலால் ஒரு உதை உதைத்துவிட்டு முன்னேறுகிறார் போலிருக்கு சண்ட மாருதன். இந்தியா இலங்கையில் தலையிட்டதெல்லாமே, இலங்கைக்கு காந்தியம் தெரியாது ஒருதடவை போய் சொல்லிக்கொடுத்துவிட்டு வருவம் என்று வந்தார்கள் எங்கிறார். ஆனால் பின்னாளில் ஏன் இரசாயனக் குண்டுகள் கொடண்டுவந்தார்கள் என்றால் அதில் கூட அவர்களின் காந்தியம்தான்.

அப்பட்டமாக தமிழ் இளைஞர்களை பதியுதின் பள்ளிகளால் உதைத்து தள்ளிவிட, வக்கற்று போயிருந்த இளைஞர்களை வைத்து தனக்கு நாடு பிடிக்க முயன்ற இந்தியவை காப்பாற்றுவது தேவானந்தாவுக்கு கூட இன்று ஒத்துவராத அரசியல் முயற்சி. தேவானந்தா இந்தியாவுக்கு எதிராகப் படகு விடும் போது இவர்கள் இந்தியாவை காப்பற்றுவது தங்களுக்குள் தன்னும் ஒட்டுக்குழுகள் ஒற்றுமை என்பதையா காட்டுகிறது. தேவானந்தா இந்தியா செய்வது சரி என்றால் சென்னைக்கு போய் வழக்கை சந்தித்தால் என்ன? எதிரியின் எதிரியாக இந்தியாவை சரியாக காட்டும் போது யார்தான் நம்புவான்?

தமிழ் மக்களை தமிழ் மக்கள் கொன்றார்கள் என்பது ஒன்றும் புதிதல்ல. மாறுக்கருத்துகளுக்கு சிங்கள அரசும் இந்திய ஆமியும் செய்த இலட்சக்கணக்கான  கொலைகள் தலையின் ஒரு சின்ன ஞாபக அணுவிலும் கூட பதிவில் நிற்க முடியாமல் தடுமாறுவது ஒரு உயிரியல் ஆச்சரியம். அவற்றை எந்த நிலையிலும் கண்டிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அதிலும் கவனிக்க தக்மாச்சரியம் என்ன என்றால் கொலைகளை புலிகளை தாக்கத்தான் பாவிக்கிறார்களே அல்லாமல் அந்த மாற்று இயகங்கள் செய்தது சரி என்று எங்கும் முழுமையாக கூறியதில்லை. ஏன் எனில் தேவானந்தா பாட்டி ஒன்றை தவிர எல்ல இயக்கங்களும், தாங்கள் அரசுடன் போராடுகிறோம் என்று நினைத்து, தம்முள் போராடிகொண்டிருந்த இந்தியா இலங்கை அரசின் சதிகளில் ஒருப்பகம் சாய முடிவெடுத்து எந்த பக்கம் சாய்வது என்பது தெரியாமல் நடந்துகொண்டு தடுமாறியதால் வந்த அழிவே. அதாவது இந்த மாற்று இயக்கங்களை சண்டமாருதனால் காப்பற்ற முடியாது; ஆனால் பெயர் சொல்லி அவரால் காப்பாற்றப்படகூடியர்வகள் கருணாவும் தேவானந்தவும் மட்டுமே.

அரசும், ரோவும் தங்களை ஆயுதங்களை பாவிக்காமல், தங்கள் ஆமியை பாவிக்காமல் தமிழ் மக்களை பாவித்து தமிழ் மக்களை கொல்லும் அரசியல் சூழ்நிலை டி.எஸ் ஆரம்பித்து மற்றவர்களால் நன்றாக வளர்க்கப்பட்டிருந்தது. இதையேதான் போதுக்கீசர் சிங்கள கூலிப்படைகளை வைத்து தமிழரை கொன்ற போதும், இந்திய கூலிப்படைகளை வைத்து பிருத்தானியர் இந்தியாவை ஆண்ட போதும் செய்தது. ஆட்சியாளர் இதை செய்ய முடியும் என்பதை வடிவாகத்தெரிந்த சண்டமாருதன் அன்று எப்படி மாற்று இயக்கங்கள் அரசின், ரோவின் கைகளைல் இருந்து நரவலித்தார்களோ, அதே மாதிரி தான் இன்று அரச குடும்பத்தின் கையிலிருந்து நரவலிப்பது போல் எழுதுகிறார்.

இன்று மாற்றுக் கருத்துக்கள் எப்படி தங்களை உணர மறுத்து தம் இனத்தை வார்த்தைக்கு வார்த்தை தூற்றுகிறார்களோ, அப்படி தமிழ் மக்கள் மீது வன்மம் வைத்திருந்தர்களை பாவிப்பதில் ரோவும், இலங்கை அரசும்  ஈட்டியிருந்த வெற்றியின் முடிவுதான் மாற்று இயக்கங்கள் புலிகளால் தண்டிக்கப்பட்டமை. ஆயுதப் போராட்ட காலத்தில் இயங்கங்களுக்குள் இருக்கும் முரண்கள் காதலில் வரும் ஊடல் அல்ல. அது ஒரு செல்லமா கிஸ்சால் மாறிவிடகூடிய உடல் அல்ல. இதில் மட்டும் தான் போய்முடிய முடியும் என்று தெரிந்துதான் ரோவும், அரசும் பிரிவினையை ஏற்படுத்தியது.

.

//இந்தியா இலங்கையில் தலையிட்டதெல்லாமே, இலங்கைக்கு காந்தியம் தெரியாது ஒருதடவை போய் சொல்லிக்கொடுத்துவிட்டு வருவம் என்று வந்தார்கள் எங்கிறார்.//

இப்படி எங்கே சொல்லியுள்ளேன்?

பல இடங்களில் நான் அவதானித்துள்ளேன் உங்கள் கற்பனைகளை நான் சொன்ன கருத்துக்களாக நுழைப்பதை. இதன் மூலம் உங்களுக்கு என்ன ஆதாயம் என்று புரியவில்லை.

மேலே அர்சுன் சொன்னதைப்போல

//இன்றும் கூட சர்வதேசத்தில் குறிப்பாக கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் அரசியல் முக்கியத்துவம் புரியாமலே நாம் அரசியல் செய்கின்றோம் ,அவனன்றி எமக்கு ஒரு அணுவும அசையாது என்பதை புரியாமல் இருக்கின்றோம் .அது சிங்கள அரசுகளுக்கு தெட்ட தெளிவாக தெரியும் .அதனால் தான் அவர்கள் தொடர்ந்தும் தமது அரசியல் நகர்வுகளை மிக சாதுர்யமாக நகர்த்தி வெற்றியும் பெறுகின்றார்கள் .இதற்கு பெயர் சரணாகதி அல்ல சாணக்கியம் .// - அர்சுன்

இதேதான் அடிப்படை. இந்தியாவை பகைத்து ஈழத்தமிழர் நலன் என்பது நடமுறைக்கு சாத்தியமற்றது. இதை புலிகள் இறுதிக்காலத்தில் நன்கு உணர்ந்திருந்தனர். இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு முடிந்தவரை முயற்ச்சி செய்தனர். இந்தியாவின் விருப்புக்கு மாறாக ஐரோப்பிய நாடுகளோ இல்லை அமரிக்காவோ கூட தமிழர் நலனில் அக்கறைப்படாது.

பல இயக்கங்கள் இதை நன்கு உணர்ந்திருந்தனர். இந்தியா யோக்கியம் என்பதோ ஒரு ஜனநாயகத் தன்மை கொண்டதோ இல்லை என்பது நன்கு வெளிப்படையாகக் தெரிந்தவிடயம் அதே நேரம் இந்தியாவை பகைத்து எதுவும் சாத்தியமில்லை என்பதும் புரிதலுக்கு உட்பட்டதே.

இத்தனை இயக்கங்களை உருவாக்கியதும் ஆயுதப்பயிற்சி கொடுத்ததும் ஆயுதப்போராட்டத்தை ஊக்குவித்ததும் ஒவ்வொரு சிங்கள சிப்பாயின் சாவிலும் இந்தியாவின் பங்கு அடிப்படையில் உள்ளது என்பதையும் சிங்களவர்கள் அறியாதவர்களா? இருந்தும் எப்போதாவது இன்றுவரை இந்தியாவை அவர்கள் பகைத்ததுண்டா? அவர்களுக்கு நன்கு தெரியும் இந்தியாவை பகைத்தால் என்ன நடக்கும் என்று. அவர்கள் முட்டாள்கள் இல்லை.

பத்மநாபா இந்தியாவை பகைத்து பலனில்லை என்பதை உணர்ந்திருந்த ஒரு தலைவன்.

அங்க கொன்றான் இங்க கொன்றான் இபி கொன்றது புளட் கொன்றது ரெலோ கொன்றது என்று மாறி மாறி பினாத்துகின்றீர்கள். கொன்றொழித்ததில் புலிகள் மலையளவு இவர்கள் மடுவளவு. இந்த உண்மையை நீங்கள் எப்படி உருண்டு பிரண்டு குத்திமுறிந்தாலும் நியாயப்படுத்தமுடியாது. எத்தனை காரணங்களை விளக்கங்களை சொன்னாலும் இந்த உலகம் ஏற்கவே ஏற்காது. வேணுமானால் இங்கே வந்து தொண்டைகிழியக் கத்தலாம். அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை.

முள்ளிவாய்க்கால் முடிவில் இருந்து ஆகக் குறைந்தது ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் புலிகள் தொடுத்த அரசியல் படுகொலைகள் மாற்றியக்க அழிப்புகள் இஸ்லாமியத்தமிழர்களை அகதிகளாக்கியது படுகொலைகள் ராஜீவ் படுகொலை போன்றவை எக்காலத்திலும் உலகமுற்றத்தில் நியாயப்படுத்தமுடியாதவை. அவ் நியாயங்கள் சபைக்கேறாது. இவை நடந்து முடிந்துவிட்டது. உலகம் பயங்கரவாதமாக்கி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அதுதான் முள்ளிவாய்க்கால் முடிவு. இதற்குமேல் யாருக்காக எதற்காக இவைகளை நியாயப்படுத்த முற்படுகின்றீர்கள்? கண்கெட்டபிறகு எதற்கு சூரிய வணக்கம்?

பத்மநாபாவும் தமிழன் பிரபாகரனும் தமிழன் கருணாவும் தமிழன். டக்ளஸ்சும் தமிழன் இப்பட்டியல் நீளும். இதில் யார் நல்லவர் யார் கெட்டவர் யார் யோக்கியர் யார் அயோக்கியர் என்று பட்டிமன்றம் வைத்து சல்லிக் காசுக்குப் பிரயோசனமில்லை.

புலிகள் கொன்றது குறைவு என்று நான் எங்கும் எழுதவில்லை. என்னிடம் அப்படி ஒரு கணக்கும் இல்லை. ஆனால் இலங்கை இந்திய அரசுகள் கொன்றவற்றைதான் சொல்லியிருந்தேன்.  என்ன எழுதிருக்கிறேன் என்றதை விளங்க முயன்றிருந்தால் தாங்கள் எழுதியதின் பொருள் என்ன என்பதும்  தங்களுக்கு விளங்கியிருக்கும். (தங்களிடம், வெறும் நடிப்பை தவிர, புலிகளும் மற்றய இயக்கங்களும் சகோதரச் சணடைகளில் கொன்ற கணக்கு இருஸ்காயின் அதை ஒப்பிட்டு வைத்து உங்கள் விவாத்தை தொடர்ந்தீர்களானால் அதற்கு இயகத்தில் இருந்தவர்கள் பதில் அளிப்பார்கள். அதை விடுத்து தெற்கில் அரச குடும்பம் வைக்கும் பிரச்சாரம் போல "புலிகள் பயங்கரவாதிகள்' என்ர பிரச்சாரம் வைப்பது எனது கருத்துக்கு தக்க பதில்கள் அல்ல என்பது உங்களுக்கு விளங்கும்)

இந்தியாவின் புவிசார் பாதுகொள்கை அரசியல் வாதிகளை காலால் ஒரு உதை உதைத்துவிட்டு முன்னேறுகிறார் போலிருக்கு சண்ட மாருதன். இந்தியா இலங்கையில் தலையிட்டதெல்லாமே, இலங்கைக்கு காந்தியம் தெரியாது ஒருதடவை போய் சொல்லிக்கொடுத்துவிட்டு வருவம் என்று வந்தார்கள் எங்கிறார். ஆனால் பின்னாளில் ஏன் இரசாயனக் குண்டுகள் கொடண்டுவந்தார்கள் என்றால் அதில் கூட அவர்களின் காந்தியம்தான்.

உங்கள் கருத்தை படித்தவர்கள் இந்த பந்தியை வந்து படிக்கும் போது நீங்கள் எழுதியவற்றின் பொருள் இதுதான் என்பதை விளங்கிக்கொள்வார்கள். அவர்கள் தங்களை மாதிரி தான் எழுதியதின் பொருள் விளங்காமல் விதண்டவாதம் வைக்கமாட்டர்கள்.

அது போக இதில் நான் எங்கும் தாங்கள் எழுதியதை திருப்பி எழுதுவதாக அபிப்பிரயம் எழ வைக்கவில்லை. (மாற்றுக்கருத்துக்கள் சில தடவைகளைல் பொருள் மயக்கம் தரத்தக்க இரட்டை கருத்தில் அரசியல் விவாதங்கள் வைப்பது புது அல்ல. அந்த அவர்கள் வெட்டும் பொறிக்கிடங்கில் அவர்கலை அழைத்துக்கொண்டு போய் நான் விழுத்த முயல்வது ஒன்றும் கொடுமையும் அல்ல. உங்கள் கருத்த்தை அடுத முறை இன்னொரு விளக்கத்துக்கு இடமில்லமல் எழுதுவதை நான் தடுக்க மாட்டேன்)

நிறையத்தான் இந்தியாவின் பெருமை பற்றி பீத்தியிருக்கிறிர்கள். இந்தியாவை கண்டு மேற்கு நாடுகள் வெருண்டு விடவில்லை. முட்டாள்தனமாக சீனா முத்துமாலை வியூகம் போட்ட பின்னர் அது எனக்கில்லை என்று வாதாடிகொண்டிருந்த இந்தியாவை தம் பக்கம் திருப்பி சீனாவுக்கு எதிரான ஒரு சக்க்தியை இந்துசமுத்திரத்தில் நிறுவலாமா என்பது புஸ்கால எதிர்பார்ப்பு. இதனால் இந்தியாவுடன் ஒத்துப்போன்னர்கள். ஆனல் இன்றைய முயற்சிகள் வேறு. கஸ்மீரன், பாலூயிஸ்தான் போன்ற முஸ்லீம் நாடுகளை தனியத் தனிய பிரித்துவிட்டால் சீனாவுக்கு தேவையான  தலை இடியை ஆக்கியதாகும் என்று நினைக்கிறார்கள். மாலை தீவில் ஒருதளம் போடப் போனார்கள். தமிழ் நாட்டுக்கு கிளிண்டன் போன. இவற்றின் பின்னர் இந்தியாவை பார்க்காமல் ஐ.நாவில் பிரேரணை கொண்டுவந்தார்கள். அவ்வளவுதான் இந்தியா போய் அவர்களின் காலடியில் விழுந்து தன்னைக்காப்பாற்ற சூவன்ன சாமியை அனுப்பியது. கடைசியாக இந்தியா மேற்குநாடுகளின் பாதைக்கு வருகிறது. இல்லையேல் ஒதுக்கப்படும். (மேற்குநாடுகள் என்றால், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்க, ரஸ்சியவைத்தவிர்ந்த ஐரோப்பா) தேவைப்பட்டால் ஸ்பையின், போச்சுக்கல் நாடுகளுக்காக பெரிய தென் அமேரிக்க நாடுகளான பிரேசில், ஆயன்ரீனாவும் போரில் இணைவார்கள். இந்த அமைப்பை இந்தியா வெருட்டிவிட்டதாக காண்பது கனவு.(சீனாவை எதிர்க்கும் போது அதில் கொரியாவும், யப்பானும் கூட இணையும்)

இந்தியாவிடம் நாம் போய் சரணாகதி அடைந்து இலங்கையிடம் சுதந்திரம் வாங்குவதற்கும் அதே சரணாகதியை இலங்கையில் செய்து இலங்கையிடம் வாங்குவதிலிலும் நிறையப் பேதங்கள் இருக்கா?. அப்படியாவின் எப்படி கஸ்மீரம் இந்தியாவின் கைக்குள் வந்தது? இலங்கையை விட கேடு கெட்ட ஏமாற்றுக்களை, பொய்களை ராஜதந்திரமாக பீற்றிகொள்வத்தில்லையா இந்தியா? அதற்காக இந்தியா நமக்கு? இன்று இந்தியா அழைத்தா கூட்டமைப்பு டெல்கி போனது?, அல்லது கூட்டமைப்பு கேட்டா டெல்கி போனது? மேற்கு நாடுகளை தன் காலடியில் விழவைக்கும் இந்தியா ஒரு வெறும் பீத்தல் அரசியல் கட்சியை ஏன் அழைக்கிறது என்றதை விளங்கப்படுத்தினால் நாம் மற்றவை பற்றி விவாதிக்கலாம்.

//இன்றும் கூட சர்வதேசத்தில் குறிப்பாக கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் அரசியல் முக்கியத்துவம் புரியாமலே நாம் அரசியல் செய்கின்றோம் ,அவனன்றி எமக்கு ஒரு அணுவும அசையாது என்பதை புரியாமல் இருக்கின்றோம் .அது சிங்கள அரசுகளுக்கு தெட்ட தெளிவாக தெரியும் .அதனால் தான் அவர்கள் தொடர்ந்தும் தமது அரசியல் நகர்வுகளை மிக சாதுர்யமாக நகர்த்தி வெற்றியும் பெறுகின்றார்கள் .இதற்கு பெயர் சரணாகதி அல்ல சாணக்கியம் .// - அர்சுன்

"இலங்கையின் அரசியல் இந்தியாவால் வெற்றி பெறுகிறது என்பது அரிச்சுனின் திரிப்பு.. இந்தியாவுக்கு சீனாவைக்காட்டி இலங்கை ஆழுகிறதென்பது யதார்த்த உணமை. மன்மோகன் சிங் ஐ.நா பிரேரணை முடிய மன்னிப்புகடிதம் எழுதினார். இதிலிருப்பது இலங்கையின் இராஜ தந்திரமா, சீனாவின் ஆயுதப்பலமா என்பதைப் புரிந்துகொள்ள அரசியல் தெரிய வேண்டும். , இலங்கை சீனா பக்கம் போக கூடாது என்பதற்காக இலங்கைக்கு தான் உதவுவதாக கூறுகிறது இந்தியா. அதை இந்தியா தனது ராஜதந்திரமாக நினைக்கிறது.  அதாவது இந்த்தியா தனக்கு தான் நன்மையாக நடந்துகொள்கிறது என்கிறது. அரிசுன் மற்றய "வளம்தான் உண்மை. அது இலங்கையின் இராஜதந்திரம்" என்கிறார். ஏன் இலங்கை சீனாப்பக்கம் போனால் இந்தியாவுக்கு என்ன பிரச்சனை என்றதை கூற முடியுமா. இ  இந்தியாவை கண்டு யாரும் பயப்படவில்லை, குட்டி இங்கையை கூடக் கண்டு இந்தியாதான் பயப்படுகிறது. சுதர்சன நாச்சியப்பன் இலங்கைக்குதாம் பாகிஸ்தான் அளவு பயப்படுவத்தாக இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் கூறவில்லையா. அப்படி என்ன பயம் வரும் இராஜதந்திர பேச்சுகளின் போது?  இங்கே இலங்கையை ஆள்வது சீனா என்று எதிர்க்கட்சிகள் திருப்ப திரும்ப கூறுகின்றன. இதில் எந்த பக்கம் இலங்கையின் இராஜதந்திரம் வேலை செய்கிறது? இலங்கையின் நிலை சில ஒட்டுக்குழுக்களின் நிலை. ஒட்டுக்குழுகள் அரசுடன் சேர்ந்ததால் அரசுக்கு பயந்து தமிழரை அழிக்கின்றன. இதையே சீனாவுடன் சேர்ந்த இலங்கை அரசு இந்தியாவுக்கு எதிராக செய்கிறது. சீனாவிடம் மாட்டிகொண்டதையா இராஜதந்திரம் என்று சொல்வது? ஒட்டுக்குழுக்களிடம் இருப்பது ஒன்றும் ராஜதந்திரம் இல்லை.  துரோகம். அதுவேதான் இலங்கையிடமும். ராஜதந்திரம் இல்லை. பொய்களும் ஏமாற்றுக்களும். "

இதேதான் அடிப்படை. இந்தியாவை பகைத்து ஈழத்தமிழர் நலன் என்பது நடமுறைக்கு சாத்தியமற்றது. இதை புலிகள் இறுதிக்காலத்தில் நன்கு உணர்ந்திருந்தனர். இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு முடிந்தவரை முயற்ச்சி செய்தனர். இந்தியாவின் விருப்புக்கு மாறாக ஐரோப்பிய நாடுகளோ இல்லை அமரிக்காவோ கூட தமிழர் நலனில் அக்கறைப்படாது.

புலிகள் இந்தியாவோடு பேசினார்கள். ஆரம்பத்திலும் பேசினார்கள், இறுதியிலும் பேசினாரகள்.  ஆரம்பத்தில் பேசியதிலிருந்துதான் 13ம் திருத்தமே வந்தது.  அதன் பின்னர் போரும் வந்தது . தமிழரும் சிங்களுவருடன் பேசினார்கள் இதிலும் பல ஒப்பந்தகள் வந்தது. அம்னீசியா கார்களுக்கு சரித்திரம் மூளையில் தங்க மாட்டேங்கிறது. இது ஒரு உயிரியல் ஆச்சரியம். தீர்வு வரும் வரை பேச்சு வார்த்தைகளும், போராட்டமும் தொடரும். (மேலும் புலிகள் கடைசியில் இந்தியவை உணர்ந்து பேசினார்கள் என்பது வெறும் போடி போக்குக்கதை. அவர்கள் யாருடன் என்ன பேசினார்கள் அதில் புதைதிருந்தது என்ன என்பது சண்டமாருதன் ஒருவருக்குமட்டும்தான் மறை பொருள். இதையேதான் சொல்கெயும் சுட்டிக் காட்டியிருந்தார். அதாவது  இந்தியா பேச்சுவார்த்தைகள் என்று ஏமாற்றும், அவர்களின் கப்பலில் தலைமைகள் நம்பி கால்வைக்க கூடாது என்றதை அவர் சொல்லியிருந்தார். இதுவும் புலிகளுக்கு புதியதல்ல. பிராபாகரனை பேச்சு வார்த்தை என்று அழைத்து என்ன செய்ய சொல்லி ரஜீவ்  டிக்சித்திடம் சொன்னால், புலிகளின் தாம் என்ன செய்ய வேண்டும் என்ற ராஜதந்திரம் சண்மாருதன் மட்டும் மறந்து போகும் புலிகளின்ய ராஜ தந்திரம்")

பல இயக்கங்கள் இதை நன்கு உணர்ந்திருந்தனர். இந்தியா யோக்கியம் என்பதோ ஒரு ஜனநாயகத் தன்மை கொண்டதோ இல்லை என்பது நன்கு வெளிப்படையாகக் தெரிந்தவிடயம் அதே நேரம் இந்தியாவை பகைத்து எதுவும் சாத்தியமில்லை என்பதும் புரிதலுக்கு உட்பட்டதே.

பல இயகங்கள் இந்தியாவைக்கண்டு பயந்தார்கள் துரோகிகளானர்கள். இது வீரபாண்டியன் கதை. பயந்து அடங்கிப்போனதில் இராஜதந்திரத்தை கண்டு பிடிப்பது சண்டமாருதனின் PhD. முடிவு அந்த பயந்த இக்கங்களும் அழிந்து, இந்தியாவும் பின் வாங்கியது.  அந்த இயங்கள்  பயத்தால் துரோகிகளாக மாறி என்ன வெற்றிகளை குவித்தார்கள். இது அரிசுன் சொலவதற்கு எதிர் இல்லையா. அதாவது "இலங்கை அரசு வெற்றிகளை குவிக்கிறது அதுதான் சாணகியம் என்கிறார்." அவர் நெப்போலியன் சரித்திரம் படிக்க வில்லை அவன் மொஸ்கோ போகும் வரைத்தான் வெற்றிக்களை குவித்தான். தமிழருக்கு தேவை Not winning the battle. Winning the war.

இத்தனை இயக்கங்களை உருவாக்கியதும் ஆயுதப்பயிற்சி கொடுத்ததும் ஆயுதப்போராட்டத்தை ஊக்குவித்ததும் ஒவ்வொரு சிங்கள சிப்பாயின் சாவிலும் இந்தியாவின் பங்கு அடிப்படையில் உள்ளது என்பதையும் சிங்களவர்கள் அறியாதவர்களா? இருந்தும் எப்போதாவது இன்றுவரை இந்தியாவை அவர்கள் பகைத்ததுண்டா? அவர்களுக்கு நன்கு தெரியும் இந்தியாவை பகைத்தால் என்ன நடக்கும் என்று. அவர்கள் முட்டாள்கள் இல்லை.

செய்திகளை படிக்கவும். இலங்கை எத்தனை தடவை தன்  இராணுவத்தை, நேவியைப்  பயன் படுத்தி இந்தியாவை அடித்தாலும் இந்தியா பதிலே சொல்லவிட்டால் இலங்கை பகைக்கவில்லையா. இந்திய IPKF ஏன் திரும்பி போனது? இலங்கை வாரி அணைத்தா? இதனாலா பயப்படாமல்  சீனா பக்கம் சரிகிறது. இதனாலா செய்த அரசியல் வர்த்தக உடன்படிக்கைகள் பல இரத்துச் செய்யப்பட்டன. அடிக்க அடிக்க காலில் விழும் இந்தியாவை செய்திகள் படிக்காதவர்களுச் சொன்னால் இலங்கை பகைக்காமல் அரவணைகிறது என்று நம்புவார்கள்.

பத்மநாபா இந்தியாவை பகைத்து பலனில்லை என்பதை உணர்ந்திருந்த ஒரு தலைவன்.

அங்க கொன்றான் இங்க கொன்றான் இபி கொன்றது புளட் கொன்றது ரெலோ கொன்றது என்று மாறி மாறி பினாத்துகின்றீர்கள். கொன்றொழித்ததில் புலிகள் மலையளவு இவர்கள் மடுவளவு. இந்த உண்மையை நீங்கள் எப்படி உருண்டு பிரண்டு குத்திமுறிந்தாலும் நியாயப்படுத்தமுடியாது. எத்தனை காரணங்களை விளக்கங்களை சொன்னாலும் இந்த உலகம் ஏற்கவே ஏற்காது. வேணுமானால் இங்கே வந்து தொண்டைகிழியக் கத்தலாம். அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை.

முள்ளிவாய்க்கால் முடிவில் இருந்து ஆகக் குறைந்தது ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் புலிகள் தொடுத்த அரசியல் படுகொலைகள் மாற்றியக்க அழிப்புகள் இஸ்லாமியத்தமிழர்களை அகதிகளாக்கியது படுகொலைகள் ராஜீவ் படுகொலை போன்றவை எக்காலத்திலும் உலகமுற்றத்தில் நியாயப்படுத்தமுடியாதவை. அவ் நியாயங்கள் சபைக்கேறாது. இவை நடந்து முடிந்துவிட்டது. உலகம் பயங்கரவாதமாக்கி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அதுதான் முள்ளிவாய்க்கால் முடிவு. இதற்குமேல் யாருக்காக எதற்காக இவைகளை நியாயப்படுத்த முற்படுகின்றீர்கள்? கண்கெட்டபிறகு எதற்கு சூரிய வணக்கம்?

நான் நீங்கள் இங்கே வரும் கருத்தை தெளிவாக அறிந்தவன். எனவே திரும்ப திரும்ப நீங்கள் முஸ்லீம் தமிழருக்கும் மற்றய தமிழருக்கும் இடையில் ஆப்பிறுக்கும் முயற்சியாக சில கருத்துக்குகளை கூறும் போது அதை மட்டும் தான் செய்கிறீர்கள் எனபதை தவிர வேறு கருத்து எழுத முன் வரவில்லை. உங்களுக்கு இருக்கும் தேவைக்கு எற்ப தமிழர்களுக்கு இடையில் ஆபிறுக்குகிறீர்கள் அல்லாமல் முஸ்ளிம்கள் பற்றி நீங்கள் அக்கறை காட்டவில்லை. உங்களை போன்ற  பிரிவினையாளர்களால்  அவர்களையும் தமிழரையும் இணையவிடாமல் செய்த பிரிவினைகள  இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழர் வலிந்து கொடுத்த முதல் அமைச்சர் பதவியை ஏற்காமல்  கழித்துவைத்துவிட்டு அரசுடன் சேர்ந்ததால் மு.க மாகாண சபை கூட்டங்களுக்கு கூட போக முடியாதநிலை. கூட்டமைப்பிடம் திரும்பி வந்து முதல் அமைச்சர் பதவி கேடக முடியாத நிலை. அவை எதையும் மூடி மறைக்கும் நீங்கள்  இதில்  எழுதுவது இனவாதம் மட்டுமே.  உங்களை இந்த பிரிவினைகளை எழுத கூடாது என்று ஒரு முஸ்லீம் தலைவர் தடுக்காததால் இன்று மாகாண சபை கலைக்கப்பட போகிறது.  சரியாக, இந்த பிரிவினைவாதிகளின் ராஜதந்திரம் மு.கவை திரிசங்குவாக ஆக்கிவிட்டது.

பத்மநாபாவும் தமிழன் பிரபாகரனும் தமிழன் கருணாவும் தமிழன். டக்ளஸ்சும் தமிழன் இப்பட்டியல் நீளும். இதில் யார் நல்லவர் யார் கெட்டவர் யார் யோக்கியர் யார் அயோக்கியர் என்று பட்டிமன்றம் வைத்து சல்லிக் காசுக்குப் பிரயோசனமில்லை.

அதாவது செயலில் இறங்காமல், கடந்தகால  அரசியல் ஆராச்சி என்று மட்டும் நேரத்தை போக்குபவர்கள் செய்வது பிராக்காட்டு வேலை என்றதை நீங்களேதான் சொல்கிறீர்கள். ஒருதடவை உங்களை நோக்கி கையை நீட்டினீர்களானால் பலவற்றைக்கு பதில் வருவதை உணர்வீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு வராதா கவலை வக்கீலுக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல.

மேடை ஏற முதல் சிந்தனையை, அறிவை வளர்க்க முடியாத மாற்றுக்கருத்து மாணிகங்கள் சந்தையில் கீரை வாங்கி விற்பதாக நினைத்து அறிவுரைகள் வழங்கி வருவது வேடிக்கை.

இந்த அரிச்சுன் அண்மையில் தான் யாரிடமோ புதிதாக வாங்கியிருக்கும்  பத்பநாப கீரையை  சில நாட்களுக்கு முன்னர் இந்த யாழில் விற்க முயன்று, உறவிகளிடம், பிரதானமாக நெடுக்கிடமும் நூனாவிடமும் சங்ககடப்பட்டு திரிக்கு வராமல், தொடராமல், நிறுத்தியவர்.

இன்றுதான் படிக்கும் பாடத்தை வைத்து அன்று பத்தமநாப EPRLF தான் சரியான இயக்கமாக இருந்தது என்பது வாழத்தெரிந்த மாற்றுகருத்துகளுக்கு ஒரு நல்ல உபதேசம். ஒரு புத்திசாலியான தன்னை PhDயாக காட்ட முயலும் மாற்றுக்கருத்து ஆடு ஒன்றின் கதை இப்படிப்போகிறது. " தெரு ஒன்றில் ஒரு பள்ளம், ஒன்பது ஆடுகள், எட்டும் கடக்க முயன்று பள்ளதில். அவற்றின் மீது நடந்து சென்று அசூர் அடித்த கடைசி ஆடு ""மொக்கு கூட்டத்திற்கு பதையில் இருந்த பள்ளம் தெரியவில்லையா என்று கேட்டுவிட்டு சென்றது""

நான் என்ன எழுதியிருக்கன் அதற்கு நீங்கள் என்ன பதில் எழுதியிருக்கிறீங்கள்...விளங்காதர்வர்கள் என்டால் சொல்லிப் புரிய வைக்கலாம் ஆனால் விளங்காத மாதிரி நடிக்கிறவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

நான் என்ன எழுதியிருக்கன் அதற்கு நீங்கள் என்ன பதில் எழுதியிருக்கிறீங்கள்...விளங்காதர்வர்கள் என்டால் சொல்லிப் புரிய வைக்கலாம் ஆனால் விளங்காத மாதிரி நடிக்கிறவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

இதில் விளங்கிக்கொள்ள பெரிய PhD இருக்கிறதா.

அரிசுன் தான் யாழுக்கு வருவது கேட்டுப்படிக்க என்கிறார். அதை பிழையாக யாழ் உறவுகள் பிழையாக விளங்குவதால் அவரை PhD என்கிறார்கள் என்று நீங்கள் சொல்ல வருகிறிர்கள். அர்சுன் மொக்குகூட்டத்திடம் தான் கேட்டு படிக்க வருகிறார் என்பது உங்களுக்குத்தான் விளங்குகிறது போலிருக்கு.

ஆனால் நான் விளங்கிக்கொண்டது அது வல்ல.  அரிசிசுனுக்கும், பொய்யட்டும் ஒரு இயல்பில் ஒற்றுமை; அதாவது பேர், விலாசம்  எழுப்ப வேண்டும். பொய்யட்டுக்கு வழமையில் புத்தக விளம்பரம். பொய்யட் அதை பணமாக்கிவிடுவார். அடுத்த முறை பேர் எழுப்ப தேவை இல்லாதவரையும் யாழுக்கு வரமாட்டார். ஆனால் அர்சுன் திரும்ப யாழுக்கு வருவவார். தான் எழுப்பிய பெயரை தேவையில்லாமல் பழுதாக்குவார். 

இதுதான் சிலநாளாக அர்சுன் பத்மநாபா புராணம் பாடி நேற்று கூடத்திற்கு போய்வந்து செய்தது. இந்த பத்தநாப புகழ் பாடும் வீடியோவில் இருக்கும் அரசியல்வாதிகள் காங்கிரசுக்காரகளாக இருக்கிறார்கள். ஒரு சொல்லு ஏன் பத்மநாபாவிக்கு தியாகிகள் தினம் கொண்டாட வேண்டும் என்று சொல்லவில்லை. பேசி முடித்து போனார்கள். இந்த காங்கிரஸ்காரகளுடன் கூட்டம் போடவா ஜெயலைத்தாவை, கருணாந்தியை புகழும் அரிசுன் அங்கு போனார்?

கனடா தியாக்கியகுள் தின புகைப்படம் 

IMG_0677.jpg

நான் அர்ஜீன் அண்ணா இதில் உள்ள கருத்துக்களை எடுத்து கொண்டு போய்க் கூட்டத்தில கதைச்சதை பற்றி என்ட அந்த கருத்தில சொல்ல வரேல்ல.அவர் செய்தது சரியா,பிழையா என்று என்னைக் கேட்டால் அதில் பிழை இருக்கிற மாதிரி எனக்குத் தெரியவில்லை.எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டா பிறக்கிறோம்? அவர் தனக்குத் தெரியாததை யாழில் தெரிந்து கொண்டு அதை வெளிப்படையாக சொல்லிப் போட்டு தான் அந்த கூட்டத்திற்கு கதைக்கப் போனவர்?...உதில் என்ன ஏளனம் வேண்டிக் கிடக்குது?...தங்கட கருத்தை அடிப்படையாக வைத்து அவர் உரையாற்றினால் அந்த கருத்தை யாழில் எழுதியவர்களுக்கு பெருமை தானே! அதை விடுத்து என்ன நக்கல் வேண்டிக் கிடக்குது.
 
நான் சொல்ல வந்தது இது தான்;
இசை ஒரு திரியில் எழுதினதை அதே திரியில் எழுதின ஒருவர் தான் சொல்வது மாதிரி அந்தக் கருத்தை திரும்பவும் அதே திரியில் எழுதியிருந்தார்.அர்ஜீன் அண்ணா செய்தது பிழை என்று இந்த திரியில் நக்கலடித்தவர்கள் அவரைக் கண்டுக் கொள்ளேல்ல.
 
தங்களுக்கு ஒருவரை பிடிக்கா விட்டால் அவர் என்ன செய்தாலும் நக்கல்கள்,கேலிகள் செய்வோம் ஆனால் பிடித்து விடித்து விட்டால் அவர் என்ன செய்தாலும் கண்டு கொள்ள மாட்டோம்.இதைத் தான் என்ட முதலாவது கருத்தில் சொன்னேன்
 
அதே மாதிரி இன்னொரு உதாரணம் சமூகத்திற்கு பயனுள்ள ஆக்கங்களை மட்டும் எழுதுவது பற்றி ஒருவர் எழுதி இருந்தார்.சொன்னவர் யாழில் வேறு நகைச்சுவை பதிவுகளுக்கோ,பொழுது போக்கு பதிவுகளுக்கோ போவதில்லை.அவர் அதைச் சொன்னதில் பிழையுமில்லை.
 
அதை இன்னொருவர் அந்த திரியில் குவேட் பண்ணி அவரும் என்னவோ சமூகத்திற்கு பிரயோசமான பதிவுகளை மட்டும் எழுதுவதாக காட்டி இருந்தார்.ஆனால் அவர் அதிகம் எழுதுவது நடிகைகளை பற்றியும்,அவன் பொண்டாட்டி இவனோட ஒட்டம் போன்ற திரிகளில் தான்.அவர் செய்கின்றது பிழை என்று நான் சொல்லேல்ல.
 
ஒவ்வொருவரும் யாழுக்கு வாறது தங்கட பொழுதை இனிமையாக கதைத்து மகிழ்ச்சியாக இருக்கத் தான்.[நான் யாழுக்கு வாறது அதுக்குத் தான் அதோட தெரியாததை தெரிந்து கொள்வதற்கும்.நான் யாழில் கற்றுக் கொண்ட பாடம் மிக அதிகம்.]அப்படி இருக்கும் போது இவரால் எப்படி முதலாமர் எழுதின கருத்தை குவேட் பண்ணி தானும் அப்படித் தான் என்ட மாதிரி எழுத முடிந்தது.இதுவும் எனது ஆதங்கம்
நான் அர்ஜீன் அண்ணா இதில் உள்ள கருத்துக்களை எடுத்து கொண்டு போய்க் கூட்டத்தில கதைச்சதை பற்றி என்ட அந்த கருத்தில சொல்ல வரேல்ல.அவர் செய்தது சரியா,பிழையா என்று என்னைக் கேட்டால் அதில் பிழை இருக்கிற மாதிரி எனக்குத் தெரியவில்லை. 

இப்படி முன்னுக்குபின் முரண்பட்டு எழுதுவதை நினைக்க தலை சுற்றுகிறது. 

ஏன் சிலரால் இப்படி குப்பபை மட்டும் கொட்டுட மட்டும்தான் முடிகிறது . இனித தன்னும் நான் எங்கே என்ன சொன்னேன் என்றதை திருப்பிக் கூறமுடியுமா?  

பாவம் நீங்கள் அவர் கருத்தை இன்றுதான் படித்தீர்கள் போலிருக்கு அவர் வெளிப்படையாக சொன்னதைகேட்க. அவர் திருகுதாளம் பண்ணி சிலநாட்களுக்கு முதல் பத்தநாபா பற்றி கருத்துகள் போட்டு கருத்துக்கள் வாங்கிக் கொண்டிருந்த  நடத்தையை அறியாத அப்பவி மாதிரி நடித்து யார் நம்ப போகிறார்கள். . நான் மனச்சாட்சியாக கேட்கிறேன் அரிசுன்னுக்கு என்றுதான் கூட்டத்திற்கு பேச என்று அழைக்கப்பட்டர் என்பது உங்களுத்தெரியுமா அவரின் வெளிப்படையை பற்றி நீங்கள் பேச.? 

மிகுதியில் நான் தொடர்பில்லை கருத்துக்கூற.

Edited by மல்லையூரான்

அர்சுண் இனி நீங்கள் குறிப்பிடுகிற புலிகளின் உட்கொலைகள் மட்டுமே கதைக்க முடியும்.

தாயா வாத்தி இலங்கையரசின் கைதி அவரின் அறிக்கையை கணக்கில் எடுக்கின்ற மொக்கு கூட்டமாய் இருக்கிறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி முன்னுக்குபின் முரண்பட்டு எழுதுவதை நினைக்க தலை சுற்றுகிறது. 

நான் எங்கே முண்ணுக்கு முரணாக எழுதினேன்?...நான் என்னத்தை சொல்ல வந்தனான் என்று கிளிப் பிள்ளைக்கு சொன்ன மாதிரியும் விளங்காத மாதிரி எழுதுகிறீர்கள்? எங்கே முரண்பட்டு எழுதி இருக்கேன் என காட்டுங்கள் பார்ப்போம்?

ஏன் சிலரால் இப்படி குப்பபை மட்டும் கொட்டுட மட்டும்தான் முடிகிறது . இனித தன்னும் நான் எங்கே என்ன சொன்னேன் என்றதை திருப்பிக் கூறமுடியுமா?  

பாவம் நீங்கள் அவர் கருத்தை இன்றுதான் படித்தீர்கள் போலிருக்கு அவர் வெளிப்படையாக சொன்னதைகேட்க. அவர் திருகுதாளம் பண்ணி சிலநாட்களுக்கு முதல் பத்தநாபா பற்றி கருத்துகள் போட்டு கருத்துக்கள் வாங்கிக் கொண்டிருந்த  நடத்தையை அறியாத அப்பவி மாதிரி நடித்து யார் நம்ப போகிறார்கள். . நான் மனச்சாட்சியாக கேட்கிறேன் அரிசுன்னுக்கு என்றுதான் கூட்டத்திற்கு பேச என்று அழைக்கப்பட்டர் என்பது உங்களுத்தெரியுமா அவரின் வெளிப்படையை பற்றி நீங்கள் பேச.? 

அவருக்கு கூட்டத்திற்கு போவதற்கான அழைப்பு எப்பவோ வந்திருக்கலாம்.விபரங்களை அறிவதற்காக,தனக்கு தெரியாததை தெரிந்து கொள்வதற்காக போட்டும் வாங்கி இருக்கலாம்ஆனால் அதில் என்ன தப்பு என்று தான் எனக்கு விளங்கவில்லை

மிகுதியில் நான் தொடர்பில்லை கருத்துக்கூற.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.