Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு ஏன்? ரகசியம் வெளியிட்ட சரத்குமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து கனிமொழி காப்பாற்றப்படவேண்டும், ஊழலுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் காட்டிக்கொடுக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற சுயநலம் காரணமாகவே ஆதரவு அளிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற இருக்கும் ராஜ்ய சபைத் தேர்தலில் கனிமொழியை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆக்கியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு பெற்றிருக்கும் தி.மு.க.வின் புதிய நாடகம், அரசியல் உலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் கேலிக்கும், நகைப்பிற்கும் உள்ளாகி இருக்கிறது.

ராஜ்ய சபை உறுப்பினராவதன் மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து கனிமொழி காப்பாற்றப்படவேண்டும், அதன் மூலம் ஊழலுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் காட்டிக்கொடுக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற இரு கட்சிகளின் சுயநலத்தைத் தவிர இந்த நிகழ்வுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

 

 

 

எண்ணிக்கை அடிப்படையில் கனிமொழி ஒருவேளை வெற்றி பெற்றாலும், நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழின விரோத காங்கிரஸ் கூட்டணியை புறமுதுகிட்டு ஓடச்செய்து, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமையும் கூட்டணிக்கு புதுவையுடன் சேர்த்து வாக்காளப்பெருமக்கள் நாற்பதையும் அளித்து ஏற்றமடையச் செய்வார்கள் என்பது உறுதி என்று சரத்குமார் கூறியுள்ளார். 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=16548

 

480210_475470832540351_265737053_n.jpg


1011828_10200152320917091_1897160133_n.j

கனிமொழி வெற்றி பெற்றிருக்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்
கனிமொழி வெற்றி - தேமுதிக தோல்வி!
kanimozhi_200_200.jpg

சென்னை : இன்று காலை நடைபெற்ற 6 மாநிலங்களவை வேட்பாளர்களுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப் பட்ட முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

அதிமுகவைச் சேர்ந்த மைத்ரேயன், அர்ஜுனன், ரத்னவேல், லட்சுமணன், கம்யூனிஸ்ட் கட்சியைச் டி.ராஜா, திமுகவைச் சேர்ந்த கனிமொழி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 22 வாக்குகள் வாங்கிய தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் தோல்வியைத் தழுவினார். அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ க்கள் 7 பேரும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.

234 எம்.எல்.ஏ க்களைக் கொண்ட தமிழக சட்டசபையில் 231 வாக்குகள் பதிவாகின. பாமகவினர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் தேர்தலைப் புறக்கணித்தனர்.

 

http://www.inneram.com/news/tamilnadu/673-kanimozi-win.html

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவர் கணக்குப் பார்த்துத்தான் ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிச்சிருக்கிறார்.

 

கனிமொழி 31 வாக்குகள் தான் பெற்றவர். வெற்றி பெற்ற மற்றயவர்களைக் காட்டிலும் கனிமொழிக்கே குறைந்த வாக்குகள்.. என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவர் கணக்குப் பார்த்துத்தான் ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிச்சிருக்கிறார்.

 

கனிமொழி 31 வாக்குகள் தான் பெற்றவர். வெற்றி பெற்ற மற்றயவர்களைக் காட்டிலும் கனிமொழிக்கே குறைந்த வாக்குகள்.. என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது..! :icon_idea:

 

கனிமொழிக்கு 32 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். யாரோ ஒரு வாக்கை... செல்லாத வாக்காகப் போட்டதால் 31 தான் கிடைத்தது. :)

-----

கனிமொழிக்கு "செல்லாத" ஓட்டு போட்டது யாரு?

 

6வது எம்.பி. இடத்துக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளர் கனிமொழிக்கு மொத்தம் 31 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. திமுகவுக்கு 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். திமுகவை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்களும் புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2எம்.எல்.ஏக்களும் என 32 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால் கனிமொழிக்குக் கிடைத்திருப்பதோ 31 வாக்குகள்தான். அப்படியானால் கனிமொழிக்குக் கிடைக்க வேண்டிய ஒரு வாக்குதான் செல்லாததாக இருந்திருக்கிறது. இந்த செல்லாத வாக்கை செலுத்தியது யார் என்பதுதான் இப்போதைய பரபரப்பாகும்!

நன்றி தற்ஸ்தமிழ்.

1001668_539955242706928_316828458_n.jpg

1001671_572307392811837_110950710_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மெத்தச் சரி !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.