Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருநெல்வேலியில் வெடி வெடிக்க கொழும்பில் பற்றி எரிய கனடாவில் போய் நின்றது தாயகக் கனவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

544626_481490591878556_1733616607_n.jpg

 

அடகு கடையில்

ஆச்சியின் காத்திருப்பு.

சொந்த மகளின்

தாலி தொடங்கி

பேத்தியின் கம்மல் வரை

ஆச்சியின் மடிப்பெட்டிக்குள்

கூப்பன் மட்டையோடு

கசங்கிக் கிடந்தன.

வட்டியில்

வயிறு வளர்க்கும்

அடகுகடை ஆறுமுகத்திடம்

சரணடையக் காத்திருந்தன.

 

ஆச்சியோ ஓரமாய்

குந்தி இருந்து..

கற்பனை வளர்க்கிறாள்.

இந்தப் போகம்

மேடை பார்த்து

நல்ல போயிலை

மண்டைதீவு போய்

வாங்கி வந்து..

கோப்பை போட்டு

உழுத நிலத்தில்

நட்டு அதை

குழந்தை போல

தொட்டுத் தடவி வளர்த்து

சொந்த வயிற்றுக்கு

பாணும் சம்பலும் தந்து..

புகையிலைக்கு

பெருத்த செலவில்

எருவும் உரமும்

நேரம் காலம் பார்த்துப் போட்டு

தீனியாக்கி..

வாடகைக்கு மிசின் பிடிச்சு

பாத்தி கட்டி

வாய்க்கால் வழி

தண்ணீர் பாய்ச்சி..

ஊற்றெடுக்கும் அந்தக் கிணறும்

பசியெடுத்த தாய் முலை போல

வற்றிப் போக

தண்ணீர் உறிஞ்சி எடுத்து..

புகையிலை செழிக்க

நிலம் சீரழிய..

நாசினிகள் நாசியை அரித்தாலும்

புகையிலையை

பூச்சிகள் அரிக்காமல்

சிறப்பான போயிலை

நான் செய்வேன்.

 

சீரான அந்தப்

போயிலைப் பாடங்களை

தோட்டத்தின் ஓரமதில்

கொட்டிலில் அடிக்கி வைச்சு

ஊரார் களவிலின்றும்

அரிக்கன் லாம்பின்

மண்ணெண்ணைப் புகை வாங்கி

கண்முழிச்சு காத்து வைச்சு

பதம் பார்த்து...

சாவகச்சேரி போய்

வாங்கி வந்த பொச்சுமட்டையில்

வாற வழியில்

கைதடியில் கட்டிக் கொண்ட

ஊமல் கொட்டையில்

போறணையில் அதை

வேக வைச்சு

தானும் வெந்து

சிற்பமாக்கி..

புங்குடுதீவு முதலாளியிடம்

குதர்க்கம் பேசி

சரிப்பட்டு வரா விலை நடுவே

திருநெல்வேலி முதலாளிக்கு

வித்து விட்டால்

புகையிலையும்

சிறப்பாய் சிற்பமாய்

கொழும்புக்குப் போகும்.

சிங்களச் சீமான்களும்

நல்ல விலைக்கு வாங்கி

அதை சுகித்திட

எனக்கோ காசு கொட்டும்

நான் அதில்..

வைத்த நகையெல்லாம்

நயமாய் எடுத்து வந்து..

வீட்டுக்கு

நல்ல வர்ணமும் அடிச்சு

வரப்போகும்

பேத்தியின் சாமத்தியச் சடங்கிற்கு

நகை நட்டென்று

நல்ல சாறியும் வாங்கி

ஊரார் அழைத்து

தற்பெருமையோடு

விழா வைப்பேன்..!

 

கற்பனையின் சிறகடிப்பில்

களித்திருந்த ஆச்சியின்

காதில் ஓர் செய்தி..!

திருநெல்வேலியில்

பொடியள் அடியாம்

கவுண்டு போச்சுதாம் றக்.

13 ஆமி செத்துப் போச்சுதாம்.

இருந்தாலும்

ஆச்சிக்கோ அதில் லயிப்பில்லை

தொடர்ந்தாள் தன் கனவு..!

இந்த நிலையில்..

ஆறுமுகமும் வந்து சேர

நகைகள் காட்டி

பேரம் பேச...

அவன் அதனை உரசி வாங்கி

காசை நீட்ட

5 சத வட்டி என்று

கணக்குப் போட்டு

ஒரு ரசீதும் கொடுத்தான்.

ஆச்சியும் அவை வாங்கி

பங்குவமாய்

மடியில் கட்டி

வசு வேறி வீடு போனால்..

வரும் செய்திகளோ

மாரடைப்பை தருவதாய் இருந்தன.

 

செய்திகளின் தாக்கத்தில்

மூலையில் முடங்கியவள்

அடகு கடையில்

கண்ட கனவுகள்

நொருங்கி வீழ்ந்த

அதிர்ச்சியோடு

சிங்களச் சீமையாம்

கொழும்பில்

புகையிலைக் கடையில்

மாரடிக்கும் மகனின்

நினைவில் மூழ்கினால்..!

 

தமிழனின் கருவாட்டில்

புரதம் எடுத்தவன்

தமிழனின் வெங்காயத்தில்

வீரியம் எடுத்தவன்

தமிழனின் புகையிலையில்

போதை எடுத்தவன்

தமிழனையே வெட்டிச் சாய்த்து

ரயர்களில் வேக வைத்து

அவனையே புகையிலையாக்கி

கொலைப் பாதம் செய்கிறானே..

அடேய் சண்டாளச்

சிங்களவனே..!

இயலாமையில்..

திட்டித் தீர்த்த

ஆச்சியோ

அம்மாள் ஆச்சி மேல

பழியை போட்டுவிட்டு

பதறி அடித்த களைப்பில்

அசந்தே தூங்கினாள்...!

 

கடைசியில்

அந்த மகன்

யூலைக் கலவரத்திலின்றும்

தப்பி வந்து

அப்புறமாய்

கனடா போய்

இப்ப ஆச்சியும் ஆனாளே

ரொரண்டோ வாசி..!

 

போன தடவை

2009 மே க்குப் பின்னால்

ஊருக்கு ஒரு

உலாப் போன ஆச்சி

செய்தாளே

ஓர் குறும்பு..!

இப்ப எல்லாம்

ஆச்சிக்கு..

ஊரில காணியும் இல்லை

வீடும் இல்லை...

புகையிலை உணத்த

ஒரு குடிலும் இல்லை.

எல்லாம் சிங்களவனுக்கே

கூறு போட்டு

நல்ல விலைக்கு வித்தாச்சு..!

ஆச்சியின் மடியில்

கனமும் இல்லை

மனதில் ஒரு

தாயகக் கனவும் இல்லை..!

கனடா அரசின்

வரிக் காசில்

வாழ்வும் வசமாய்

ஓடிக்கிட்டு இருக்குது..!

 

இந்த நிலையில்..

83 யூலையிலே

சிங்களவன் மூட்டிய

கோரத் தீயில்

சிறைச்சாலை வெட்டிச் சாய்ப்பில்

கருகிப் போனோரை

உடல் சிதைந்து

உருக்குலைந்து போனோரை

யார் நினைப்பார்

இதயம் இழகி..??!

அதுவும் கூட

கொத்துரொட்டிக்கு

கூட்டம் கூடும் நிலையில் நிற்குது..!

Edited by nedukkalapoovan

நல்லா எழுதுகிறீர்கள் அண்ணா 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிந்திக்கத் தூண்டும் வரிகள்

ஊருக்கு ஒரு உலாப் போன ஆச்சி..

இப்ப எல்லாம்

ஆச்சிக்கு..ஊரில காணியும் இல்லை வீடும் இல்லை...புகையிலை உணத்த

ஒரு குடியிலும் இல்லை.

எல்லாம் சிங்களவனுக்கு கூறு போட்டு நல்ல விலைக்கு வித்தாச்சு..!

ஆச்சியின் மடியில் கனமும் இல்லை

மனதில் ஒரு தாயகக் கனவும் இல்லை..!

கனடா அரசின் வரிக் காசில்

வாழ்வும் வசமாய் ஓடிக்கிட்டு இருக்குது..!

...

...

இந்த நிலையில்..

.........

.....

உருக்குலைந்து போனோரை

யார் நினைப்பார்

இதயம் இழகி..??!

உருக்குலைந்து போனவர்கள் அன்று இறந்தவர்கள் மாத்திரமல்ல ...

அகதியாக புலம்பெயர விரும்பாமல்......புலம்பெயர.. முடியாமல் .... இன்றும் அங்கு வாழ் பவர்களும் ( பலர் ) உருக்குலைந்துதான் இருக்கின்றார்கள்

அவர்களுக்கு புலம்பெயர்ந்து வசதியாக வாழும் நாம் என்ன செய்யலாம் ????

ஏதாவது உதவி செய்ய உண்மையில் விரும்புபவர்கள் ஒன்றுசேர முடியாதா yarl.com நேசக்கரத்துடன் ????

Edited by சிவாசி

போராட்டத்தால்தான் தாங்கள் வெளிநாட்டிற்கு வரக் கூடியதாக இருந்தது என்று கன  சனம் பெருமையாகச் சொல்லும். போராட்டத்தை  தங்களுக்கு சாதகமாகியவர்கள் தான் அதிகம். அதுகள் ஏன் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படப் போகுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், அருமை!

 

போயிலைப் போறணைக்குள்ள, இறங்கி ஏறின ஒரு 'பீலிங்! :D

 

இண்டைக்குப் புலியைப் பற்றி விமரிசிக்கிறவை, எல்லாருக்கும் வெளிநாடு காட்டிவிட்டதே புலிகள் தான்! :icon_idea:

 

இப்ப கேட்டுப்பாருங்கோ, வெளிநாடுகள் வெத்திலை வைச்சுக் கூப்பிட்டமாதிரித் தான் கதை விடுவினம்! :o

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு எங்கள் வாழ்வின் அசலை, நகலெடுத்திருக்கிறீர், ஒரு விடையம் மட்டுமே நெருடுகுது, புலம்பெயர்தேசத்திலிருந்து புலம்நோக்கிச் செல்பவர்கள் அனைவரும் சோக்குக்காகச் செல்வதில்லை. எப்போதோ தொலைந்த தங்கள் வாழ்வின் தருணங்களைத் தேடியே செல்கின்றனர், அது கிடைக்காது தோல்வியிலேயே திரும்ம்புகின்றனர். காரணம் அவர்கள் விட்டுவந்த எவையும் இப்போது இல்லை, ஆம் புலிகள் உட்பட. எனது நண்பன் சொன்னான் பகிடிக்கு அசைலம் அடிச்சம் அது வெற்றியாய் முடிஞ்சுது, அதுவே வாழ்வாய் முடிஞ்சுதென.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களும் வாழ்த்துக்களும் பகிர்ந்து கொண்ட உறவுகளுக்கு மிக்க நன்றி.

 

 

நெடுக்கு எங்கள் வாழ்வின் அசலை, நகலெடுத்திருக்கிறீர், ஒரு விடையம் மட்டுமே நெருடுகுது, புலம்பெயர்தேசத்திலிருந்து புலம்நோக்கிச் செல்பவர்கள் அனைவரும் சோக்குக்காகச் செல்வதில்லை. எப்போதோ தொலைந்த தங்கள் வாழ்வின் தருணங்களைத் தேடியே செல்கின்றனர், அது கிடைக்காது தோல்வியிலேயே திரும்ம்புகின்றனர். காரணம் அவர்கள் விட்டுவந்த எவையும் இப்போது இல்லை, ஆம் புலிகள் உட்பட. எனது நண்பன் சொன்னான் பகிடிக்கு அசைலம் அடிச்சம் அது வெற்றியாய் முடிஞ்சுது, அதுவே வாழ்வாய் முடிஞ்சுதென.

 

 

அண்மையில் ஒரு புலம்பெயர் தொலைக்காட்சியில்..

 

இரண்டு விவாதங்கள்:

 

1. யூதர்கள் போல நிலம் வாங்கியாவது தேசத்தை மீட்கனும் என்கிறார் ஒருவர்.. (அவருக்கு ஊரில தன்ர நிலம் இருக்கிறதே தெரியல்ல.. இதில வெட்டிப் பேச்சு வேற.)

 

2. அம்மா சீதனமாய் தந்தது இப்ப ஆமிட்ட இருக்குது அதை எப்படி விற்கிறது...(இவருக்கு தன்ர நிலத்தின் பெறுமதி புரியல்ல..) ஆலோசனை கேட்கிறார் இன்னுமொருவர்..

 

இவர்கள் எல்லாம்.. எமது மக்கள்..! இவர்களுக்காகத் தான் இத்தனை தியாகங்களும் இழப்புகளும்..????!

 

இதில சும்மா பகிடிக்கு அசைலம் அடிச்சம்.. கிடைச்சுது வாழ்க்கை. இது அடுத்த சுத்துமாத்து. அசைலம் கிடைச்சாப் போல.. ஊருக்காக வாழ முடியாதா என்ன..???! :rolleyes:

 

சேகுவரா ஊர் விட்டு ஊர் வந்து போராடி வீழவில்லை..???! ஏன் எங்கள் புலிப்படையில்.. மலையக வீரர்கள் நின்று போராடவில்லை..?! தமிழக வீரர்கள் போராடவில்லை..??! அதுக்கும் மேல.. அசைலம் அடித்து பிரஜா உரிமை பெற்றவன் போய் நின்று போராடியதில்லை..???! எதுக்கும்.. சாக்குப் போக்குச் சொல்ல நம்மவர்களைக் கேட்டுத்தான். நாங்கள் ஒரு எல்லைக்கு அப்பால வாழ்க்கையில்.. நகரமாட்டம் என்று அடம்பிடிச்சதால் தான் இன்று.. எல்லைகளை இழந்து நிற்கிறோம். இது என்னுடைய தெளிவான நிலைப்பாடுகளில் ஒன்று.  :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"போன தடவை

2009 மே க்குப் பின்னால்

ஊருக்கு ஒரு

உலாப் போன ஆச்சி

செய்தாளே

ஓர் குறும்பு..!

இப்ப எல்லாம்

ஆச்சிக்கு..

ஊரில காணியும் இல்லை

வீடும் இல்லை...

புகையிலை உணத்த

ஒரு குடிலும் இல்லை.

எல்லாம் சிங்களவனுக்கே

கூறு போட்டு

நல்ல விலைக்கு வித்தாச்சு"

 

 

 

நாட்டில் இருக்கும் நிலம் இல்லாத ஏழைகள் காணியில் குடியேறி இருந்தாலும் பிரச்சனையில்லை 

ஆனால் சிங்களவனுக்கு காணியை விலை பேசுவது தவறு.

 

பிள்ளைகளுக்கு சீதனம் என்ற பெயரில் எழுதப்பட்ட காணிகள் விற்கப்பட்ட நிலையில்

பெற்றோர்கள் ஊரான் வீட்டில் தங்கியிருக்கும் அவல  நிலையும் நாட்டில் இருக்கின்றது :) 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் வரலாற்றை

அவன் பூர்வீக  சொத்தை

அதன் வளங்களை

அதில் அவனது வாழ்வை

முற்றாக அறிந்து  உணர்ந்து

தமிழர் தாயகம் மீதான பற்றுடன் மீண்டும் என் தம்பி........

 

நன்றி  தொடர்க தம் பணி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தியார் மற்றும் விசுகு அண்ணா... உங்கள் கருத்துக்களுக்கு..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

544626_481490591878556_1733616607_n.jpg

 

அடகு கடையில்

ஆச்சியின் காத்திருப்பு.

சொந்த மகளின்

தாலி தொடங்கி

பேத்தியின் கம்மல் வரை

ஆச்சியின் மடிப்பெட்டிக்குள்

கூப்பன் மட்டையோடு

கசங்கிக் கிடந்தன.

வட்டியில்

வயிறு வளர்க்கும்

அடகுகடை ஆறுமுகத்திடம்

சரணடையக் காத்திருந்தன.

 

ஆச்சியோ ஓரமாய்

குந்தி இருந்து..

கற்பனை வளர்க்கிறாள்.

இந்தப் போகம்

மேடை பார்த்து

நல்ல போயிலை

மண்டைதீவு போய்

வாங்கி வந்து..

கோப்பை போட்டு

உழுத நிலத்தில்

நட்டு அதை

குழந்தை போல

தொட்டுத் தடவி வளர்த்து

சொந்த வயிற்றுக்கு

பாணும் சம்பலும் தந்து..

புகையிலைக்கு

பெருத்த செலவில்

எருவும் உரமும்

நேரம் காலம் பார்த்துப் போட்டு

தீனியாக்கி..

வாடகைக்கு மிசின் பிடிச்சு

பாத்தி கட்டி

வாய்க்கால் வழி

தண்ணீர் பாய்ச்சி..

ஊற்றெடுக்கும் அந்தக் கிணறும்

பசியெடுத்த தாய் முலை போல

வற்றிப் போக

தண்ணீர் உறிஞ்சி எடுத்து..

புகையிலை செழிக்க

நிலம் சீரழிய..

நாசினிகள் நாசியை அரித்தாலும்

புகையிலையை

பூச்சிகள் அரிக்காமல்

சிறப்பான போயிலை

நான் செய்வேன்.

 

சீரான அந்தப்

போயிலைப் பாடங்களை

தோட்டத்தின் ஓரமதில்

கொட்டிலில் அடிக்கி வைச்சு

ஊரார் களவிலின்றும்

அரிக்கன் லாம்பின்

மண்ணெண்ணைப் புகை வாங்கி

கண்முழிச்சு காத்து வைச்சு

பதம் பார்த்து...

சாவகச்சேரி போய்

வாங்கி வந்த பொச்சுமட்டையில்

வாற வழியில்

கைதடியில் கட்டிக் கொண்ட

ஊமல் கொட்டையில்

போறணையில் அதை

வேக வைச்சு

தானும் வெந்து

சிற்பமாக்கி..

புங்குடுதீவு முதலாளியிடம்

குதர்க்கம் பேசி

சரிப்பட்டு வரா விலை நடுவே

திருநெல்வேலி முதலாளிக்கு

வித்து விட்டால்

புகையிலையும்

சிறப்பாய் சிற்பமாய்

கொழும்புக்குப் போகும்.

சிங்களச் சீமான்களும்

நல்ல விலைக்கு வாங்கி

அதை சுகித்திட

எனக்கோ காசு கொட்டும்

நான் அதில்..

வைத்த நகையெல்லாம்

நயமாய் எடுத்து வந்து..

வீட்டுக்கு

நல்ல வர்ணமும் அடிச்சு

வரப்போகும்

பேத்தியின் சாமத்தியச் சடங்கிற்கு

நகை நட்டென்று

நல்ல சாறியும் வாங்கி

ஊரார் அழைத்து

தற்பெருமையோடு

விழா வைப்பேன்..!

 

கற்பனையின் சிறகடிப்பில்

களித்திருந்த ஆச்சியின்

காதில் ஓர் செய்தி..!

திருநெல்வேலியில்

பொடியள் அடியாம்

கவுண்டு போச்சுதாம் றக்.

13 ஆமி செத்துப் போச்சுதாம்.

இருந்தாலும்

ஆச்சிக்கோ அதில் லயிப்பில்லை

தொடர்ந்தாள் தன் கனவு..!

இந்த நிலையில்..

ஆறுமுகமும் வந்து சேர

நகைகள் காட்டி

பேரம் பேச...

அவன் அதனை உரசி வாங்கி

காசை நீட்ட

5 சத வட்டி என்று

கணக்குப் போட்டு

ஒரு ரசீதும் கொடுத்தான்.

ஆச்சியும் அவை வாங்கி

பங்குவமாய்

மடியில் கட்டி

வசு வேறி வீடு போனால்..

வரும் செய்திகளோ

மாரடைப்பை தருவதாய் இருந்தன.

 

செய்திகளின் தாக்கத்தில்

மூலையில் முடங்கியவள்

அடகு கடையில்

கண்ட கனவுகள்

நொருங்கி வீழ்ந்த

அதிர்ச்சியோடு

சிங்களச் சீமையாம்

கொழும்பில்

புகையிலைக் கடையில்

மாரடிக்கும் மகனின்

நினைவில் மூழ்கினால்..!

 

தமிழனின் கருவாட்டில்

புரதம் எடுத்தவன்

தமிழனின் வெங்காயத்தில்

வீரியம் எடுத்தவன்

தமிழனின் புகையிலையில்

போதை எடுத்தவன்

தமிழனையே வெட்டிச் சாய்த்து

ரயர்களில் வேக வைத்து

அவனையே புகையிலையாக்கி

கொலைப் பாதம் செய்கிறானே..

அடேய் சண்டாளச்

சிங்களவனே..!

இயலாமையில்..

திட்டித் தீர்த்த

ஆச்சியோ

அம்மாள் ஆச்சி மேல

பழியை போட்டுவிட்டு

பதறி அடித்த களைப்பில்

அசந்தே தூங்கினாள்...!

 

கடைசியில்

அந்த மகன்

யூலைக் கலவரத்திலின்றும்

தப்பி வந்து

அப்புறமாய்

கனடா போய்

இப்ப ஆச்சியும் ஆனாளே

ரொரண்டோ வாசி..!

 

போன தடவை

2009 மே க்குப் பின்னால்

ஊருக்கு ஒரு

உலாப் போன ஆச்சி

செய்தாளே

ஓர் குறும்பு..!

இப்ப எல்லாம்

ஆச்சிக்கு..

ஊரில காணியும் இல்லை

வீடும் இல்லை...

புகையிலை உணத்த

ஒரு குடிலும் இல்லை.

எல்லாம் சிங்களவனுக்கே

கூறு போட்டு

நல்ல விலைக்கு வித்தாச்சு..!

ஆச்சியின் மடியில்

கனமும் இல்லை

மனதில் ஒரு

தாயகக் கனவும் இல்லை..!

கனடா அரசின்

வரிக் காசில்

வாழ்வும் வசமாய்

ஓடிக்கிட்டு இருக்குது..!

 

இந்த நிலையில்..

83 யூலையிலே

சிங்களவன் மூட்டிய

கோரத் தீயில்

சிறைச்சாலை வெட்டிச் சாய்ப்பில்

கருகிப் போனோரை

உடல் சிதைந்து

உருக்குலைந்து போனோரை

யார் நினைப்பார்

இதயம் இழகி..??!

அதுவும் கூட

கொத்துரொட்டிக்கு

கூட்டம் கூடும் நிலையில் நிற்குது..!

 

இந்த முரண்நகை தான் ஏனென்று புரியவில்லை நெடுக்ஸ் அண்ணாவிடம் இருந்து,

புலத்தில் இது தான் யதார்த்தம் என்று தெரிந்திருந்தும் தேசியத்தின்,மாவீரர் பெயரில் இப்படியானவர்களைக் கரைசேர்க்கும் உங்கள் எழுத்துக்கள் இதில் அடிபட்டுள்ளனவே நெடுக்ஸ் அண்ணா?

 

எனிவே .. வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா கவிதைக்கு.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய சுயன் முரண்நகையோடு தான் எம் சமூகம் உள்ளது என்பதைக் காட்டுவது தானே ஆக்கத்தின் நோக்கமே. இவற்றில் சமூகம் எதை எதிர்காலத்தில்.. தவிர்க்கனும் என்றதை அது தான் சிந்திச்சு முடிவு செய்யனும்..!

 

நன்றி ஜீவா தங்கள் வரவிற்கும் கருத்திற்கும். :icon_idea::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

32801034.jpgt32809032.jpg54185155.jpg

 

1250548.jpg

 

maxresdefault.jpg

 

5381582588_b682df485c.jpg

 

91810199_CbWd812Y.jpg

1250549.jpg

 

cigar-curing.gifmapacho-indian-tobacco-nicotiana-rustica

Onions-from-Jaffna.jpg

DSC03760.JPG

Glorious-Jaffna-1.jpg

74589_10151155697187056_10061811_n.jpg

 

0_135357090534_news.jpg

 

 

Jaffna-1.jpg

z_p09-Jaffna5.jpg

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில சிங்களவனின் பங்களிப்பு...

capt.sge.tmz25.040707091650.photo00.phot

74989329.jpg

 

army-llllll.jpg

 

958899063.jpg

sla_030209_05.jpg

NPCmine.jpg

 

army.jpg

 

_6800339_orig.jpg

 

4.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின் மற்றுமொரு சிறந்த படைப்பு.

 

அன்று போலித்தனம் காட்டியவர்கள் இன்றும் அதே போலித்தனத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு மாற்றம் இன்று அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி நன்றாயிருக்கிறார்கள். ஆனால் இன்றும் அவர்களின் போலிக்கனவுகளுக்காகத் தாயகத்தில் பலிக்கடாக்களை தேடிக்கொண்டிருப்பதுதான் கவலைப்படவைக்கிறது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாலி தங்கள் கருத்துப்பகிர்விற்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நன்றாக உணர்வலைகளை கொட்டிக்காட்டியிருக்கின்றீர்கள் நெடுக்ஸ் அண்ணை, வரிக்கு வரி உங்களின் ‘உள்ளக்குமுறலின் ஒலிகளே வரிகளாக வெளிப்படுகின்றது. ‘நினைத்துப்பார்த்தால்!.............இழந்தவை மிக அதிகம்........

 

என்று தணியும்?! என்று விடியும்?! என்ற கேள்விகளே எஞ்சுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்கச்சி.

 

மீண்டும் நீண்ட ஒரு இடைவெளியின் பின் உங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.