Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் ஒவ்வொரு பிடி மண்ணிலும் தனது மூச்சை வைத்திருப்பவரே, முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் ஒவ்வொரு பிடி மண்ணிலும் தனது மூச்சை வைத்திருப்பவரே, முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும்...

[saturday, 2013-07-13 20:14:47]

...தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையிடம் மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர் வலியுறுத்தல்.

அறிவிக்கப்பட்டுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் கூட்டமைப்புக்குள் பலத்த வாதப்பிரதிவாதங்கள் காணப்படுவதோடு, கால அட்டவணையில் சந்திப்புகளும் தொடர்கின்றன. இந்நிலையில் முதலமைச்சராக நிறுத்தப்பட வேண்டியவரின் தகுதிகள் பற்றி பலரும் பலவித கோணங்களில் பேசுகின்றனர். அறிக்கைகள் விடுகின்றனர். குறிப்பாக சட்ட ஆளுமை பற்றியும், ஆங்கில மொழிப்புலமை பற்றியும் முன்னிறுத்தி பேசுகின்றனர். சட்ட நுணுக்கங்கள் தெரிந்த ஒருவரே தேவையெனவும் வலியுறுத்துகின்றனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பை சட்டரீதியாக வழி நடத்துவதற்கு தமிழ் உணர்வுமிக்க சட்டத்தரணிகளை உள்ளடக்கிய சட்டப்பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.

இப்படி உருவாக்கும் போது, சட்ட அறிவை வெளியிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை தோன்றாது. இதேவேளை இலங்கையில் ஆங்கில மொழிப்புலமையையும், சட்ட அறிவையும் தேவைக்கு அதிகமாகவே தன்னகத்தே வைத்திருந்த லக்ஸ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் போன்றோரின் மொழிப்புலமையும், சட்ட அறிவும் யாருக்கு பயன்பட்டது? அவர்களது மொழிப்புலமையும் சட்ட அறிவும் தமிழ் இனத்தை வாழ வைத்ததா? அவர்கள் நின்று இயங்கிய தளம் தான் எது?

கடந்த 60 வருடங்களுக்கும் மேலான தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான சாத்வீக மற்றும் ஆயுத போராட்டங்கள் முடக்கப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு இருக்கக்கூடிய ஒரே வழி சாத்வீக போராட்டங்களை விரிவுபடுத்துவது தான். எனவே இத்தகைய சாத்வீக போராட்டங்களை நடத்துவதற்கு இன்றிருக்கக்கூடிய அரசியல் தலைமைகளை ஒருங்கிணைத்து செல்வதற்கு தமிழ் தேசிய செயல்பாட்டில் நீண்டகால அரசியல் வரலாற்று பாரம்பரியத்தைக்கொண்ட ஒருவரே, வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுதல் வேண்டும். இதுவே இங்குள்ள ஒவ்வொரு தமிழர்களதும் பேரவாவாகும். கூட்டமைப்பின் தலைமையானது, ஜனநாயக ஆயுத போராட்டங்களின் வழி வந்தவர்களை ஒருங்கிணைத்து அரவணைத்து ஜனநாயக களத்தில் சமராடக்கூடிய ஒருவரையே வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் ஆணை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மொழிப்புலமை மற்றும் சட்ட அறிவை விடவும், வாழ்வுரிமை போராட்டங்கள் நடக்கும் போது வானதிர கர்ஜ்ஜிக்கும் ஒருவரே வடக்குக்கு அவசியத்தேவையாகும். இப்படியான கொள்கையை, ஓர்மத்தை ஒருங்கே கைவரப்பெற்ற ஒருவருக்கு ஒரு சட்டவாக்க குழுவையும், நிர்வாக முகாமைத்துவத்துக்காக ஒரு சிந்தனை குழாமையும் ஏற்படுத்திக்கொடுத்தாலே போதும். தமிழர்கள் இன்னும் பலம் பெற்று எழுச்சி பெற்று விடுவார்கள். சட்டம் மற்றும் மொழியை யார் வேண்டுமானாலும், யாருக்கும் கற்றுக்கொடுத்து விட்டுப்போகலாம். ஆனால் தேசிய உணர்வை கற்றுக்கொடுக்க முடியாது. அது இயல்பாகவே இரத்தத்தில் கலந்திருக்க வேண்டும்.

எனவே பிறப்பிலேயே தமிழ் உணர்வும், இனப்பற்றும் சிந்தனையில் இரண்டறக்கலந்து புரையோடிக்கிடக்கும் ஒருவரே வடக்கின் முதலமைச்சராக வருவதே சாலச்சிறந்ததாகும். கூட்டமைப்பின் வடக்கு தேர்தல் வெற்றியானது அபிவிருத்தி என்பதற்கு அப்பால் வடகிழக்கு இணைப்புக்கான அங்கீகாரமாக கருதப்பட்டு, ஜனநாயக போராட்டங்களை விரைவுபடுத்துவதற்கான களம் திறப்பதற்கு ஏதுவாக அமையும். அரசியல், ஜனநாயகம், போராட்டம், சர்வதேசம் என்று அனைத்து இயங்குதளத்திலும் நின்று பணி செய்யக்கூடிய பன்முக ஆளுமை கொண்ட ஒருவரே இதற்கு பொருத்தமானவராவார். புரட்சியை யாரும் ஏற்றுமதி இறக்குமதி செய்ய முடியாது. அது எங்கு தேவையோ அந்தந்த தளங்களிலிருந்து பிறப்பெடுக்க வேண்டும்.

வடக்கின் ஒவ்வொரு பிடி மண்ணிலும் தனது மூச்சை வைத்திருப்பவரே, எமது மண் ஒரு அங்குலம் அளவு தானும் ஆக்கிரமிக்கப்பட்டால் தனது மூச்சை அக்னி மூச்சாக்கி சுட்டெரிப்பார். வடகிழக்கு இணைப்புக்கான போராட்ட களங்களை திறக்கும் ஒருவரையே தமிழ் மக்கள் முதலமைச்சராக முடி சு+ட்டி அழகு பார்க்க விரும்புகின்றனர். ஐயோ என்று அபயக்குரலெழுப்பும் போது, மறுகணமே சத்தம் வந்த திசையை நோக்கி ஓடிவந்து துயர் களையும் இந்த மக்களதும் மண்ணினதும் வாழ்வியலோடு கலந்த ஒருவரே வடக்கின் முதலமைச்சராவது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகும். இதற்கு அப்பால்பட்டவர்களால் வலிகாமம், கொக்கிளாய், முறிகண்டி, முள்ளிக்குளம், பாரதிபுரம், மக்களின் வலியை அறிய முடியுமே தவிர, அதனை உணர முடியாது. இந்த அடிப்படை ஜதார்த்தத்தை புரிந்து கொண்டாலே போதும் வடக்கு முதலமைச்சர் தெரிவு பற்றி தெளிவு ஏற்பட்டுவிடும்.

ஜனநாயகத்தன்மை மிக்க முடிவென்பது பெரும்பான்மையானவர்களின் கருத்துகள் ஆலோசனைகளை உள்ளடக்கி பகுப்பாய்வு செய்து நீண்ட காலத்திலும், குறுங்காலத்திலும்; நேரடியாகவும், மறைமுகமாகவும் தரக்கூடிய நேரெதிரான பெறுபேறுகளை முற்கணிப்பு செய்து எடுக்கப்படும் முடிவுகளே, கூட்டுத்தீர்மானத்தில் ஜனநாயக வலிமை கொண்டதாக அமையும் என தொழில்முறை வல்லுநர்கள் விளக்கம் கூறுகின்றனர். இங்கோ ஒரு இனத்தினுடைய வாழ்வுரிமையில் பெரும் கரிசனையும், அக்கறையும் கொண்டுள்ள பெருமளவிலானோரின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டு தனிநபர்களின் ஒருதலைப்பட்ச விருப்புகள் மேலோங்கும் போது, கூட்டணி தர்மம் மீறப்படுகின்றது. சர்வாதிகார போக்குக்கான வடிகாலாகவும் இதுவே அமைகின்றது. விவாதித்து விட்டு முடிவெடுத்தல் என்பதற்கு மாறாக, தாம் ஏற்கனவே தனித்து எடுத்த முடிவை ஏனையவர்கள் மீது வலிந்து திணிக்க முயல்வது ஜனநாயக பண்புகளை பிரதிபலிக்கும் ஒரு தலைவருக்கு அழகாகாது.

எனவே கைவசம் இருக்கின்ற காலத்தை கவனத்தில் கொண்டு, இதுநாள் வரை கூறப்பட்டுவரும் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளினதும், தலைவர்களினதும், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களதும், ஊடக நண்பர்களதும், பெரும்பான்மையான மக்களதும் கருத்துகளை விரைந்து உள்ளீர்த்து இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் தொடர்பில் இறுதி முடிவை எடுத்து மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றி, வாக்கு பலத்தை அதிகரிக்கச்செய்து தமிழர்களின் இலக்குகளை அடைவதற்கான ஒரு தொடக்கப்புள்ளியாக கருதி வடமாகாணசபை தேர்தலை எதிர்கொண்டு, இமாலய வெற்றியை காணுமாறு சண் மாஸ்டர் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி - செய்தியிணையம்

http://seithy.com/breifNews.php?newsID=87455&category=TamilNews&language=tamil

அப்படியாயின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே சரியான தகுதியா ஆள்.

  • கருத்துக்கள உறவுகள்

kajenthirans_mp_out.jpg

 

 

எனக்கென்றால் இவர் தான் சரியான தெரிவு என்று படுகிறது.

 

இளையவர். இளையவர்களின் ஆதரவு பெற்றவர். தாயகம் பற்றி நல்ல அக்கறை உள்ளவர். புலம்பெயர் மக்களோடு நல்ல உறவைப் பேணி வருபவர். பல்கலைக்கழக மட்டத்தில் உறவுகளைப் பேணி வருபவர். மக்கள் மதிப்புப் பெற்ற இளைஞன்..!


மன்னார் ஆயர் மற்றும் அறிவுஜீவிகள்.. மக்கள் இவரை கூட்டமைப்பு முதன்மை வேட்பாளராக நியமிக்க சம்பந்தனுக்கு அழுத்தம் தர வேண்டும். புலம்பெயர் மக்களுக்கும் அமைப்புக்களுக்கும் இதில் பங்கு அமைவது சிறப்பு. :icon_idea:


இதனை சாத்தியப்படுத்தும் பொருட்டு.. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் வடக்குப் பொது அமைப்புக்களின் கூட்டமைப்பின் மத்தியஸ்தத்தோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொள்வது வரவேற்கப்படும். யார் யார் காலில போய் விழுகிற நேரம்.. .எம் முன்னே உள்ள செயல்திறன் உள்ளவர்களை நாம் கவனத்தில் கொண்டு செயற்பட கற்றுக் கொள்ள வேண்டும். :icon_idea:

Edited by nedukkalapoovan

இருவருக்கும் கட்டு காசே கிடைக்காது .

ஒருவருக்கு வட மாகாணம் எங்கு இருக்கென்றே வடிவா தெரியாது ,மற்றவருக்கு கதைக்க தெரியாது கனைக்க தான் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டுமானால் வெளிநாடுகளில் உள்ள்வர்களின் தேவைகளை நிறைவேற்ற கஜேந்திரன் சரியான ஆள். மற்றும்படி தகுதியெல்லாம் கிடையாது. மிஞ்சிப்போனால் விடுதலைப் புலிகளுக்கு வால்பிடித்ததை ஒரு தகுதியாகக் கொள்ளலாம்.

 

கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் வடக்குப் பற்றி சிறிதளவும் அறிவில்லாதவர். குடும்ப பாரம்பரியம் மற்றும் தந்தையாரின் மாமனிதர் விருது என்பனா மட்டும் தகுதியாகிவிடாது.

 

தமிழர்களை வழிநடத்த அனுபவமும் ஆளுமையும் தகைமையும் கொண்ட பலர் இன்னும் வடக்கில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒன்றில் அவர்கள் தாமாக ஒதுங்கிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது அவர்கள் அணுகப்படாமல் இருக்கிறார்கள். தற்போது எமக்குத் தேவை நிதானமான அரசியல் மட்டும்தான். காலம் தன்பணியைச் செவ்வனே செய்துமுடிக்கும். இல்லாது போனால் மீண்டும் அரோகரா தான்!

  • கருத்துக்கள உறவுகள்

வாலி இதனை வெளிநாட்டில் உள்ள நீங்கள் சொல்வது எப்படி ஏற்புடையதாகும்.

 

செல்வராசா கஜேந்திரன்.. யாழ் பல்கலையில் கல்வி கற்கிற காலத்தில் இருந்து தமிழ் மக்களின் விருப்பறிந்து செயற்படும் ஒரு இளைஞர். மேலும் அவர் புலி வால் பிடிப்பதாக நீங்கள் சொல்வது தவறு. அவர் தமிழ் மக்களின் விருப்பறிந்து அந்த மக்களோடு நெருங்கி வாழ்ந்து கொண்டு அதனைப் பிரதிபலிக்கிறார்.

 

மேலும்.. அவர் மக்களால் சிறீலங்கா பாராளுமன்றத்துக்கு தெரிவாகிப் போன ஒருவர். அந்தளவுக்கு அவர் செல்வாக்குள்ள இளைஞன்.

 

இந்த மாகாண சபைகளுனூடாக றோட்டுப் போடுற அதிகாரம் கூட எமக்குக் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும்.. இவை தமிழ் மக்கள் விரும்பாத அரசியல் அலகுகள் என்பதை அந்தப் பதவியில் இருந்து கொண்டு சொல்லக் கூடிய ஒருவர் என்றால் அது செல்வராசா கஜேந்திரன் போன்ற இளைஞர்கள் தான்.

 

இதே இடத்தில் மாவையோ... வேறு பெரியவர்களோ வந்து குந்தினால்.. நல்லா தாளம் போட்டுக் கொண்டு தலையாட்டிக் கொண்டு இருப்பார்களே தவிர.. மக்களின் விருப்பு இது அல்ல என்று சொல்லமாட்டார்கள்.

 

இன்றைய தேவை மக்களின் உள்ளக் கிடக்கையை வெளிக்கொணரும் துணிச்சல் உள்ள இளைஞர்களின் தலைமையே தவிர.. சரிந்து கொண்டுண்டு கொண்டிருக்கும்.. தள்ளு வண்டில் ஓட்ட ஒரு குடு குடு கிழவரல்ல..!

 

ஒன்றுமே கற்காத ஒரு சந்திரகாந்தனால் கிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சராக இருக்க முடியுமுன்னா.. ஏன் அது வடக்கில் இந்த இளைஞரால் முடியாது. இங்கு தான் யாழ்ப்பாணப் பெருங்குடிகளின் வரட்டுக் கெளரவம் சிங்கள விசுவாசம்.. தலைவிரித்தாடுது..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் வெளிநாட்டில் இருப்பது ஓராண்டுக்கும் குறைவான காலம் மட்டுமேதான். அதுவும் நிரந்தரமானதல்ல. வடக்குடனான எனது தொடர்புகள் இன்னும் அதிகமாகவே இருக்கு. நான் கூட்டமைப்பின் ஆதரவாளனும் அல்ல. அண்மைக் காலத்தில் யாழ்மாநகர உறுப்பினர் ஒருவரின் பல்டி என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

 

நீங்கள் குறிப்பிட்ட ஒருவரின் பல்கலைக்கழக லீலைகள் யாழ்மண் அறியாததொன்றல்ல. அவரின் பாராளுமன்றப் பிரவேசம் விருப்புவாக்குகள் எப்படி பெற்றார் என்பதனையும் மக்கள் அறிவார்கள். நீங்கள் சொல்லுவதன்படி பார்த்தாலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் அவர். வடக்கின் தேர்தலால் எமக்கு ஒருதுளி நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பது திண்ணம். இதைச் சொல்லுவதற்ற்கு மாகாணசபை முதல்வராக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இலங்கைப் பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றியதைவிட இவர் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்ற நிகழ்வுகளே அதிகம்.

 

இங்கு மாவையையோ வேறு எவரையோ நான் பரிந்துரை செய்யவில்லை.

 

வடமாகாண தேர்தலினூடாகா எதாவது செய்யமுடியுமாக இருந்தால் அது நிச்சயமாக இவர்களால் முடியாது.

 

வடக்கில் மக்களால் விரும்பப்படும் கல்விசார், சமூக அக்கறைசார், மேலாக பன்னாட்டுச் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் தெரிவுசெய்யப்படவேண்டும். அது இளையவர்களானால் என்ன முதியவர்களானால் என்ன யாராகவும் இருக்கலாம்.

Edited by யாழ்வாலி

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் மக்களால் விரும்பப்படும் கல்விசார், சமூக அக்கறைசார், மேலாக பன்னாட்டுச் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் தெரிவுசெய்யப்படவேண்டும். அது இளையவர்களானால் என்ன முதியவர்களானால் என்ன யாராகவும் இருக்கலாம்.

 

 

வடக்கின் தேர்தலால் எமக்கு ஒருதுளி நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பது திண்ணம். இதைச் சொல்லுவதற்ற்கு மாகாணசபை முதல்வராக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

 

 

மேற்படி இரு கருத்துக்களும் ஒன்றிற்கு ஒன்று முரணானவை.

 

ஒரு பிரயோசனமும் அற்ற தேர்தலில்.. புத்திசீவிகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை நிறுத்தி என்னத்தை சாதிக்கப் போகிறீர்கள்..???! அவரும் எதையும் சாதிக்கப் போவதில்லைத் தானே..!

 

இவர் எப்படி முன்னைய தேர்தலில் வென்றார். டக்கிளஸ் போல கள்ள வோட்டுப் போட்டா..??! இல்லையே..??!

 

கடந்த தேர்தலில்.. அவர்கள் தனிக் கட்சி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட போதும் மக்களிடம் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றார்கள். கூட்டமைப்பில் உள்ளவர்கள் மட்டும் மக்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்யப்படுகிறார்களா..??! கூட்டமைப்புக்கு இன்று வரை விடுதலைப்புலிகள் வழங்கிய ஆதரவின் அடிப்படையில் தான் மக்கள் வாக்களித்து வருகின்றனர். அதுதான் தொடரவும் போகிறது..!

 

நீங்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலோ.. புலிகள் தான்.. எப்போதும் தேர்தலை தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பார்கள். விரும்பினால் கூட்டமைப்பு.. டக்கிளஸ் பாணியில் அரசியல் செய்து கொண்டு மக்கள் முன்னாள் வரட்டும் பார்க்கலாம். அப்புறம் இராணுவத்தை நம்பித்தான் அரசியல் செய்ய வேண்டி ஏற்படும். அதுவும் ஒரு இடத்தை தக்க வைக்கவே..!

 

இந்த உண்மைகளுக்கு வெளியில் நின்று கொண்டும் எதையும் சாதிக்க முடியாது..! :icon_idea::)

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் மக்களால் விரும்பப்படும் கல்விசார், சமூக அக்கறைசார், மேலாக பன்னாட்டுச் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் தெரிவுசெய்யப்படவேண்டும். அது இளையவர்களானால் என்ன முதியவர்களானால் என்ன யாராகவும் இருக்கலாம்.

 

 

வடக்கின் தேர்தலால் எமக்கு ஒருதுளி நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பது திண்ணம். இதைச் சொல்லுவதற்ற்கு மாகாணசபை முதல்வராக வேண்டும் என்ற அவசியம் இல்லை

 

 

மேற்படி இரு கருத்துக்களும் ஒன்றிற்கு ஒன்று முரணானவை.

 

 

 

 

 

 

நான் வெளிநாட்டில் இருப்பது ஓராண்டுக்கும் குறைவான காலம் மட்டுமேதான். அதுவும் நிரந்தரமானதல்ல. வடக்குடனான எனது தொடர்புகள் இன்னும் அதிகமாகவே இருக்கு. நான் கூட்டமைப்பின் ஆதரவாளனும் அல்ல. அண்மைக் காலத்தில் யாழ்மாநகர உறுப்பினர் ஒருவரின் பல்டி என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

 

நீங்கள் குறிப்பிட்ட ஒருவரின் பல்கலைக்கழக லீலைகள் யாழ்மண் அறியாததொன்றல்ல. அவரின் பாராளுமன்றப் பிரவேசம் விருப்புவாக்குகள் எப்படி பெற்றார் என்பதனையும் மக்கள் அறிவார்கள். நீங்கள் சொல்லுவதன்படி பார்த்தாலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் அவர். வடக்கின் தேர்தலால் எமக்கு ஒருதுளி நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பது திண்ணம். இதைச் சொல்லுவதற்ற்கு மாகாணசபை முதல்வராக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இலங்கைப் பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றியதைவிட இவர் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்ற நிகழ்வுகளே அதிகம்.

 

இங்கு மாவையையோ வேறு எவரையோ நான் பரிந்துரை செய்யவில்லை.

 

வடமாகாண தேர்தலினூடாகா எதாவது செய்யமுடியுமாக இருந்தால் அது நிச்சயமாக இவர்களால் முடியாது.

 

வடக்கில் மக்களால் விரும்பப்படும் கல்விசார், சமூக அக்கறைசார், மேலாக பன்னாட்டுச் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் தெரிவுசெய்யப்படவேண்டும். அது இளையவர்களானால் என்ன முதியவர்களானால் என்ன யாராகவும் இருக்கலாம்.

 

நான் முன்னுக்குப் பின் முரணாக எதையும் எழுதவில்லை. "வடமாகாண தேர்தலினூடாகா எதாவது செய்யமுடியுமாக இருந்தால்" எனத் தெளிவாகவும் உறுதியாகவும் எழுதியிருக்கிறன். :)

  • கருத்துக்கள உறவுகள்

முடியாத ஒன்றுக்குள் முடியுமானால் எப்படி வரும்....??!

 

செத்தவனை பிழைக்க வைக்க முடியாது. அப்படி பிழைக்க வைக்க முடியுமானால்... என்பது போல எல்லோ இது இருக்குது.

 

இந்த மாகாண சபைத் தேர்தலை.. எம்மீது திணிக்கப்படும் எந்த உருப்படியான அதிகாரங்களும் அற்ற இந்த மாகாண சபைகளை இல்லாமல் ஒழித்து.. தமிழ் மக்கள் வேண்டும் தீர்வை வாங்கித் தர பாவிக்கக் கூடியவர்களே முதலமைச்சராகனும். இல்லைன்னா மற்றவர்கள்.. இதில் காசுக்கு குந்தி இருந்து காலத்தை ஓட்டுவர். அதுதான் நிகழும்.. நிகழப் போகிறது..! இவற்றைத் தடுக்கனுன்னா.. தேசப்பற்றுள்ள கஜேந்திரன் போன்ற இளைஞர்கள்.. குறிப்பிட்ட பதவிக்கு வரணும். :icon_idea::)

ஒரு பொது வேட்பாளரைத்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு நிறுத்த முன் வர வேண்டும்.

 

மாவை ஏற்கனவே பாராளுமன்றத்தில் இருக்கிறார்.

 

மற்றைய கட்சிகளும் சேர்ந்து வெற்றிக்காக உழைக்க  கூடிய வகையில் ஒரு வேட்பாளர் வருவதே நல்லது

 

தமிழ்தேசியமக்கள் முன்னனி பொது வேட்பாளரை நிறுத்தினால்  ஆதரவுதர  ஆயுத்த மாக இருப்பதாகவே தெரிகிறது.

 

 

 

 

சில நிலைகளை கவனிக்க வேண்டும்.

1. இழந்து கொண்டு போவதை தணிப்பது.

2. இழப்பதை தடுத்து நிறுத்துவது

3. தருவதை பெற்றுக்கொள்வது. 

4.கேட்டு வாங்குவது

5.போராடி நமது பங்கை நிர்ணயம் செய்துகொள்வது.

 

பலரும் பலதையும் சேர்த்துக் குழம்புவத்தால் எதிரிகள் ஆப்பிறுக்க சரியான இடமாக இருக்கிறது இந்த குழப்பம்.

 

வடமாகாணத் தேர்தலில் போட்டியிடுவது முதலாவது நிலைப்பாட்டில் வந்து அமைவது. இதை நிலை ஐந்துடன் தொடர்புபடுத்தக் கூடாது. இதை வைத்து தமிழ்மக்களுக்கு விடுதலை வரும் என்ற நினைவுகளை மக்களிடம் பரப்புவது, தேர்தல் பலன் ஒன்றும் தராத போது ஒருவரை ஒருவர் சாட்டமட்டும்தான் காணும்.

 

தேர்தலில் போட்டியிடாவிட்டால் தேவானந்தா முதலமைச்சராவார்.

 

வடமாகாணதேர்தலின் பின்னர் முதல் அமைச்சர் வடக்கில் நடக்கும் அடக்கு முறைகளை வெளிக்கொண்டுவரும் பிரச்சார பொறுப்பை முன்னெடுக்கத்தக்கவராக இருக்க வேண்டும். தமிழ் கூட்டமைப்பு தேர்தலில் வென்றவுடன் திரும்ப முட்டையும், மருந்தும், உரமும் யாழ்ப்பாணம் போவது தடுத்து நிறுத்தப்பட்டும். இதானல் பதவியில் வருபவர் பொருளாதார சீர் கேட்டுக்கு மறுமொழி சொல்ல வேண்டும்.  இவர் ஆற்றத்தக்க பங்கு பிரசாரியாக இருந்து எப்பாடி சிங்களம் தொடர்ந்து தமிழ் மக்களை கழுத்தறுக்கிறது என்பதை உலகுக்கு காட்டி வைப்பதே.  இனிமேலைய ராஜதந்தர போரில் அவரை வெளிநாட்டு அமைப்புகள் பலதடவைகள் சந்திக்க முயலும். அவர் அப்படியான அமைப்புக்களுடன் சரியான தொடர்பாடலை கையாள வேண்டும். மேற்கு யேர்மன் ராஜா தந்திரிகள் கிழக்கை தம்முடன் இணைத்தது போல கிழக்கை இணைக்க மக்களுக்கு உந்து சக்கதியாக இருக்க வேண்டும். 

 

துவக்கை கண்டு அஞ்சாமல் போராட்டத்தை  முன்னெடுப்பவராக இருக்க வேண்டும். கூட்டமைப்பில் இல்லாதவர் ஒருவர் போட்டியிடுவதால், கூட்டமைப்பு புலி பயங்கர வாதிகள் என்ற பிரச்சாரவாதாட்டம் தனது பலத்தை இழக்கும். இது வெளிநாடு ராஜதந்திரிகள் முன் வந்து சந்திக்க முதல்ப் படியாக இருக்கும். வெளிநாடுகளில் புலிசார் அமைப்புக்கள் போராடுவதை இலங்கையில் சேர்த்து குழப்பிவிடக்கூடாது. இலங்கையில் நிபந்தனை இல்லாத ராஜதந்திரப் போர் இருக்க வேண்டும்.

 

மற்றும் படி அறைக்கதவை பூட்டிப்போட்டு "தனிநாடு வா" என்றால் யாரும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மாட்டார்கள்.

Edited by மல்லையூரான்

நில  அளவையாளருக்கு  தான் ஒவ்வொரு அங்குல வடக்கு நிலமும் தெரியும் யாராவது இருந்தா சொல்லுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தத் தேர்தலை முற்றாக நிராகரித்துள்ள நிலையிலும்

சிங்கள கட்சிகளுடன் சேர்ந்து எந்த உதவாத கட்சிகளும் ஆட்சிக்கு வரக் கூடாது

என்பதற்காக ஒரு பொதுவான வேட்பாளருக்கு தங்கள் ஆதரவைத் தருவதாகக் கூறியுள்ள நிலையில் 

அவர்கள் தங்கள் கட்சி சார்பாக வேட்பாளரை நிலை  நிறுத்த முயற்சிக்கமாட்டார்கள்.

கூட்டமைப்பு ஒரு பொதுவான, கட்சி சாராத, ஈழத்தின்பால்

மிகுந்த கரிசனம் கொண்ட ஒரு வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பு குழப்பத்தில் உள்ளது. மூன்று நாள்களாக நடத்தப்பட்ட கட்சிக் கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை.
 
இந்த நிலையில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ்மக்களிடம் கருத்துக் கேட்டோம்.
 
அவர்களது வெளிப்பாடு இப்படி இருக்கிறது.
 
வவுனியாவிலிருந்து மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர் கருத்து தெரிவிக்கையில்,
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரைநிறுத்துவது என்பதுதொடர்பில் கூட்டமைப்புக்குள் பலத்த வாதப்பிரதிவாதங்கள் காணப்படுகிறது.காலஅட்டவணையில் சந்திப்புகளும் தொடர்கின்றன. இந்த நிலையில் முதலமைச்சராக நிறுத்தப்படவேண்டியவரின் தகுதிகள்பற்றி பலரும் பலவித கோணங்களில் பேசுகின்றனர். அறிக்கைகள் விடுகின்றனர். 
 
குறிப்பாக சட்டஆளுமைபற்றியும்,ஆங்கிலமொழிப் புலமைபற்றியும் முன்னிறுத்தி பேசுகின்றனர். சட்டநுணுக்கங்கள் தெரிந்த ஒருவரே தேவையெனவும் வலியுறுத்துகின்றனர். 
 
இலங்கையில்ஆங்கிலமொழிப்புலமையையும்,சட்ட அறிவையும் தன்னகத்தேவைத்திருந்த லக்ஸ்மன் கதிர்காமர்,நீலன் திருச்செல்வம் போன்றோரின் மொழிப்புலமையும்,சட்டஅறிவும் யாருக்குபயன்பட்டது?
 
 
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதபோராட்டங்கள் முடக்கப்பட்டதன் பின்னர்,தமிழ் மக்களின் உரிமையைவென்றெடுப்பதற்கு இருக்கக்கூடியஒரே வழி சாத்வீக போராட்டங்களை விரிவுபடுத்துவதுதான்.
 
 எனவே இத்தகையசாத்வீக போராட்டங்களை நடத்துவதற்கு இன்றிருக்கக்கூடிய அரசியல் தலைமைகளை ஒருங்கிணைத்து செல்வதற்கு தமிழ் தேசிய செயல்பாட்டில் நீண்டகால அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டஒருவரே,வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுதல் வேண்டும். 
 
இதுவே இங்குள்ளஒவ்வொருதமிழர்களதும் பேரவாவாகும். 
 
 சட்டம் மற்றும் மொழியை யார் வேண்டுமானாலும்,யாருக்கும் கற்றுக்கொடுத்துவிட்டுப்போகலாம். ஆனால் தேசிய உணர்வை கற்றுக்கொடுக்கமுடியாது. அது இயல்பாகவே இரத்தத்தில் கலந்திருக்கவேண்டும். 
 
எனவே பிறப்பிலேயேதமிழ் உணர்வும்,இனப் பற்றும் சிந்தனையில் இரண்டறக் கலந்து புரையோடிக்கிடக்கும் ஒருவரேவடக்கின் முதலமைச்சராக வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
முல்லைத்தீவிலிருந்து பெயர் குறிப்பிடவிரும்பாத ஒருவர்,
 
முல்லைத்தீவு மக்களைப் பொறுத்தவரை இரண்டு பேருக்குமே ஆதரவு தெரிவிக்கின்றனர். 
 
குறிப்பாக விக்னேஸ்வரன் வெளியில் இருந்து வருபவர். மாவை ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர். அவர் அந்த நிலையில் இருந்தும் மக்களுக்குப் பணியாற்றலாம். விக்னேஸ்வரனை நிறுத்துவத கூட்டமைப்பு,எனவே கூட்டமைப்பின் விருப்பப்படியே அவர் செயற்படவேண்டும். அப்படி அவர் நடந்துகொள்ளவில்லை என்றால் பதவியிலிருந்து விலக்கிவிடும் அதிகாரம் கூட்டமைப்புக்கு இருக்கிறது.
 
இதை விட விக்னேஸ்வரன் குறித்தும் அவரது நிலைப்பாடு குறித்தும் போதுமான செய்தி எங்களிடம் இல்லை. அவரை ஒரு நீதிபதியாக அறிந்திருக்கிறோம். அது மட்டுமே.
 
மாவை சேனாதிராஜா எம்மோடு வாழ்ந்தவர். அவர் ஈழப்போராட்டம் பற்றியும் தமிழ் மக்களது துயரங்கள் பற்றியும் சரியான புரிதலுடன் உள்ளவர். 
 
முல்லைத்தீவில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் போதாதுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் ஏனோ தானோ என்றே வேட்பாளர்களைத் தெரிவு செய்தார்கள். இந்த நிலை வடமாகாண சபைத் தேர்தலிலும் ஏற்படக்கூடாது. சரியானவர்களைத் தெரிவுசெய்தால் கூட்டமைப்புடன் கட்டாயம் நாம் நிற்போம்- என்றார்.
 
மன்னாரில் இருந்து கருத்து தெரிவித்த மக்கள் பிரதிநிதி ஒருவர்,
 
மாவைதான் முதலமைச்சர். யார் சொன்னது விக்னேஸ்வரன் என்று? நாங்கள் மாவையை முதலமைச்சராக்கவே விரும்புகின்றோம்.
 
அவர் எல்லோராலும் அறியப்பட்டவர். அவரது தமிழின உணர்வே எமது எதிர்கால முன்னேற்றத்துக்கு பொருத்தமானது.
 
சட்ட வல்லுநர்கள் முதலமைச்சராகவேண்டிய கட்டாயம் இப்போது தமிழ்மக்களுக்கு இல்லை. தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட சட்ட நுணுக்கம் தேவைப்பட்டால் அதை வெளியில் இருந்து தர,ஆதரவளிக்க எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
 
தேவையற்ற ஒரு விடயத்துக்காக கூட்டமைப்பு தமக்குள் முரண்படக்கூடாது. இயல்பான விடயங்களையும்,சாத்தியமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவேண்டும்- என்றார்.
 
யாழ்ப்பாணத்தில் புத்திஜீவி ஒருவர் இப்படிக் கூறுகிறார்,
 
விக்னேஸ்வரன் கொழும்பிலேயே அதிக காலம் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை அவரால் சரிவர புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் அடிமட்டப்பிரச்சினைகளை ஆராயவோ தீர்த்துவைக்கவோ விரும்பமாட்டார்கள். மாவை மக்களோடு மக்களாக வாழ்ந்தவர். 
 
வடக்கு கிழக்கு மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அதையே நாம் விரும்புகிறோம். கூட்டமைப்பு சரியான முடிவு எடுக்கும். அதன்படி தமிழ் மக்கள் வடக்குக்கு யார் முதலமைச்சர் என்பதைத் தீர்மானிப்பார்கள் -என்றார்.
ஆன்லைன் உதயன்

தமிழர்களின் உரிமையை வென்றெடுக்க சட்ட நுணுக்கங்கள், பேச்சுத்திறமை, ஆங்கில உளறல் போன்றவற்றில் சிறந்தவர்களாக வேடம்போடும் சட்டத்தரணிகளால் முடியவே முடியாது.

இது கடந்த 65 வருடங்களில் தெளிவாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

சரி நீங்கள் ஏன் புடுங்குபடுகிண்றீர்கள் ,முதலமைச்சர் வேட்பாளர் நீதித்துறையுடன் சம்பந்தப்பட்ட ஒருவர்தான் .நாளை அறிவிப்பு வெளியாகும் .

  • 1 year later...

பழையபதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.