Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நம்ம ஏர்போர்ட்டா இது..!'- அதிசயிக்க வைக்கும் சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையம் அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அப்போது இதனைப் பயன்படுத்திய பயணிகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டினர்.

சென்னை விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்கள் சர்வதேச தரத்தில், அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

 

16-chennai-airport-600-jpg.jpg

 

இந்த முனையங்களை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி திறந்து வைத்தார். உள்நாட்டு முனையத்தில் கடந்த 3 மாதங்களாக வருகை மற்றும் புறப்பாடு பகுதிகள் முழுமையாக செயல்படத் தொடங்கினாலும், பன்னாட்டு முனையம் மட்டும் முழுமையாக செயல்படாமல் இருந்தது.

இப்போது பணிகள் மற்றும் பணியாளர் நியமனம் போன்ற முழுமையாக முடிந்த நிலையில், புதிய பன்னாட்டு முனையத்தில் நேற்று சோதனை ஓட்டம் நடந்தது.

காலையில், சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளின் பயன்பாட்டுக்கு விமான நிலையம் திறந்து விடப்பட்டது.

16-chennai-airport-8-600-jpg.jpg

அவர்களில் பெரும்பாலானோர் இது நம்ம சென்னை விமான நிலையம்தானா என அதிசயிக்கும் அளவுக்கு மாறிப் போயிருந்தது பன்னாட்டு முனைமம்.

16-chennai-airport98-600-jpg.jpg

சர்வதேச அளவிற்கு அதிநவீன வசதிகளுடன் இந்தப் புதிய முனையம் உள்ளதாக பலரும் பாராட்டினர். குறிப்பாக குடியுரிமை மற்றும் சுங்க சோதனைகள் விரைவாக முடிந்தது பாராட்டும்படி இருந்தது என்றனர்.

விரைவில் முழுமையான பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையம்!

16-chennai-airport11-600-jpg.jpg

 
  • கருத்துக்கள உறவுகள்

நம்ப முடியவில்லை. சர்வதேச தரத்தில்... அழகாக கட்டியுள்ளார்கள்.
தொடர்ந்தும்... இதே தரத்தில் வைத்திருக்க பயணிகளின் ஒத்துழைப்பும் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாகவும் நவீனமயமாகவும்  உள்ளது.

 

தமிழன் மீட்சி  பெறணும் என்றால் முதலில் தமிழகம் உயரணும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பவன் என்றரீதியில் பெருமையாக  இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சிறப்பாக உள்ளது.. பராமரிப்புச் செலவுக்கு விமான நிலைய வரி என்று விமானச்சீட்டு வாங்கும்போது வாங்கிக்கொள்கிறார்கள்தானே.. அதைச்சரியாக உபயோகித்தால் போதும்.. பயணிகளும் பொறுப்புடன் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.. தமிழினம் எழுச்சி காண்பதுபோல் ஒரு எண்ணம் வருகிறது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சிறப்பாக உள்ளது.. பராமரிப்புச் செலவுக்கு விமான நிலைய வரி என்று விமானச்சீட்டு வாங்கும்போது வாங்கிக்கொள்கிறார்கள்தானே.. அதைச்சரியாக உபயோகித்தால் போதும்.. பயணிகளும் பொறுப்புடன் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.. தமிழினம் எழுச்சி காண்பதுபோல் ஒரு எண்ணம் வருகிறது.. :D

 

ஊழல்,கீழல் செய்யாமல்... விமான நிலைய உயர் அதிகாரிகளிலிருந்து, கீழ் நிலைய ஊழியர் வரை...

தமது தமிழ் நாட்டு சர்வதேச நிலையம் என்று, உலகத் தமிழர்களும் போற்றும் படியாக...

இதனைக் கொண்டு  நடத்த வேண்டும்.

எதற்கும்.... அடுத்த‌ ஆறு மாதத்தின் பின், இதே... இடத்தில் எடுத்த படங்களை யாராவது, இணைத்து விடுங்கள்.

எப்படி அதன் நிலைமை என்று, பார்க்க... ஆசையாக உள்ளது. :rolleyes:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாக இருக்கின்றது , தொடர்ந்தும் இப்படியே இருக்க வேண்டும் ! கூடுமானவரை தமிழர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் , இல்லையென்றால் நம்ம வளவில் நிண்டு நம்ம தண்ணீரும் உரமும் பெற்று  தென்னை வளைந்து போய்  பக்கத்து வீட்டில பலன் முழுக்க கொட்டுறமாதிரி ஆயிடும் !! 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாக இருக்கின்றது , தொடர்ந்தும் இப்படியே இருக்க வேண்டும் ! கூடுமானவரை தமிழர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் , இல்லையென்றால் நம்ம வளவில் நிண்டு நம்ம தண்ணீரும் உரமும் பெற்று  தென்னை வளைந்து போய்  பக்கத்து வீட்டில பலன் முழுக்க கொட்டுறமாதிரி ஆயிடும் !! 

 

இப்படித்தான்... கல்பாக்கம் அணு உலையும் இயங்க இருப்பதாக வாசித்தேன் சுவி.

அதில் உற்பத்தியாகும் மின்சாரம் 50% வீதத்துக்கும் குறைவாகத்தான் தமிழ்நாட்டுக்கு கிடைக்குமாம்.

மிச்சம் எல்லாம்... தண்ணி தராத கர்நாடகத்துக்கும், கேரளாவுக்கும் போனாலும் ஆச்சரியமில்லை.

ஆனால்... அதில் விபத்து, ஏற்பட்டால், முதலில் சாவது தமிழன் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் பாலம்.. மாடிக்கட்டிடங்கள் இடியுற மாதிரி இடிஞ்சு விழாதே..???! இந்தியாவின் உற்பத்தி.. கட்டுமானம்.. மற்றும் சேவைகளின் தரம் பற்றிச் சொல்லி வேலை இல்ல..! அதுதான்..! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்பாரவைக்கு அழகாக இருந்தாலும், பயணிகளின் சரக்குகளை கையாளும் தளங்கள் வடிவைப்பைபில் மிகப் பெரிய குளறுபடிகளும், குறைகளும் உள்ளதாக பல செய்திகள் வெளியாகியுள்ளன.

 

'பசுமை விமான நிலையம்'(Green Airport) என சிறப்புத் தகுதி பெறுவதற்காக அனைத்து சரக்கு வாகனங்களும் பேட்டரியால் இயக்கப்படுகின்றன.. இந்த பேட்டரி வாகனங்களை இயக்க ஒப்பந்தம் பெற்றுள்ள பத்ரா(Bhatra) நிறுவனம், பல்வேறு சோதனை ஓட்டத்தின்போது சரக்குகளை ஏற்றி முதல்தளத்திற்கு கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ள சாய்தள வழி குறுகலாகவும், மிக அதிகமான சாய்விலும்(Ramp Slope) அமைத்துள்ளதால் வாகனங்கள் கடைசிவரை ஏற முடியவில்லை..வடிவமைப்பு பொறியாளர்கள் மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்..சென்றமாதம் சென்னையில் பெய்த கடும் மழையிலும், சூறைக் காற்றிலும், அழகிற்காக பொருத்தப்பட்ட பல ஜிப்சம் மேற்கூரை(False Ceiling) தகடுகள் கீழே விழுந்து மழைத் தண்ணீர் ஒழுகி தளங்கள் நாசமாகிவிட்டது தனிக்கதை.

இதனால் பன்னாட்டு முனையம் இன்னமும் மக்கள் பாவனைக்கு திறக்கமுடியாமல் உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்

Accidents show airport ramp still a worry

Chennai: Two accidents in quick succession after operations were moved to the new domestic terminal at the Chennai airport revealed chinks in safety arrangements at the facility and showed that the baggage ramp continues to be a worry.
    Arrivals were moved to the new terminal on April 10 and there have been 89 departures from the new facility since it started handling outgoing flights on April 11.
    But two accidents on consecutive days on the steep ramp leading into the basement baggage handling area have airport officials worried.
    An airport official said a trolley separated from a baggage towing tug and hit a work
er standing nearby on Wednesday. The injured worker was admitted to a city hospital.
    In the second accident, on Thursday, a tug lost its brakes and rammed a railing separating the ramp and a work area. An airport official said it could have been a serious accident if workers were at the spot where the vehicle smashed into.
    Chennai airport director H S Suresh confirmed that the accidents had taken place at the ramp and said the Airports Authority of India has ordered an inquiry.
    “The driver of the vehicle did not apply brakes properly,” he said of the second accident. “The vehicle rolled down and hit the railings.”
    “In the other accident, a trolley uncoupled from a tug and hit and injured a loader,” Suresh
said. “The accidents took occurred due to human negligence.”
    He said employees of airport ground handling agency Bhadra had been trained in the
use of the tugs and trolleys. “We have directed the ground handler to increase training and take adequate steps to avoid further accidents,” he said.
    TOI had reported that AAI
did not assess safety of the ramp even after three safety trials ended in failure. The Director General of Civil Aviation (DGCA) conducted a safety assessment of the new ramp on March 14.
    A senior airport official said features of the ramp that may have led to the accidents were questioned during the trial runs.
    “There were questions such as what measures were in place to deal with an accident in which trolleys delink from a tug on the ramp, what would be done if a fully-loaded tug got stuck on the ramp and how would staff react in the event of a tug developing engine failure,” he said. “The airports authority failed to address these issues.”

 

http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2013/04/15&PageLabel=5&EntityId=Ar00500&ViewMode=HTML

சென்னை போய் வந்த பலர் இந்த புதிய முனையங்கள் - மிக மிக கேவலாமாக உள்ளதாக கூறுகின்றனர்.

உலகின் மிகவும் மட்டரகமான விமான நிலையமாக சென்னை புதிய விமான நிலையத்தை தெரிவு செய்யலாம் எனச் சொல்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாகவும் நவீனமயமாகவும்  உள்ளது !

நானும் தமிழன் என்பதனால் பெருமை கொள்கின்றேன் !!

தொடர்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வெளியே நின்று விமான நிலையத்தின் அழகை ரசித்துக் கொண்டிருக்க

அவர்கள் உள்ளே இருந்து பயணிகளிடம் கறந்து கொண்டேயிருப்பார்கள்.

முதலில் லஞ்சத்தை தமிழ் நாடு முழுவதும் அழிக்கவேண்டும்  

இந்த எயர்போட்டில் வேலைக்கு அமர்ந்தப்பட்டிருக்கும் பெரும்பாலானவர்கள் பிற மாநிலத்தவர்கள் என்பது வேதனைக்குரியது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.