Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ ஆயுதப் போராட்டத்திற்கு பிரபாகரன் தலைமை! தமிழீழ அரசியல் போராட்டத்திற்கு விக்னேஸ்வரனே தலைமை! விமல்

Featured Replies

wimal-weerawansa2.jpg

தமிழீழத்தை அடைவதற்கான ஆயுதப் போராட்டத்தை வேலுப்பிள்ளைப் பிரபாகரனே முன்னெடுத்தார் எனவும், தற்போது தமிழீழ அரசியல் போராட்டத்தை முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் முன்னெடுத்த தயாராவதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

 

மேலும், http://tamilworldtoday.com/?p=23521

  • கருத்துக்கள உறவுகள்

நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு ரொம்பத்தான் விமல் பயப்படுகிறார்கள் போல இருக்கு....கொட்டியா இருந்திருந்தால் ஒரு பிரச்சனையும் இருந்திருக்காது என மகிந்தா இப்ப நினைக்கூடும்...

  • கருத்துக்கள உறவுகள்

நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு ரொம்பத்தான் விமல் பயப்படுகிறார்கள் போல இருக்கு....கொட்டியா இருந்திருந்தால் ஒரு பிரச்சனையும் இருந்திருக்காது என மகிந்தா இப்ப நினைக்கூடும்...

 

 

இவரையும்  பயன்படுத்தாமல் தமிழினம்  பின்னர்  

புலம்பாதிருக்கக்கடவது................. :(

சிங்கள சீமான் .

எனக்கு என்னவோ குடுத்த காசுக்கு மேலாலை விமல் கூவுற மாதிரித்தான் கிடக்கு... :D இப்படி தமிழரை பப்பாவிலை ஏத்திவிட்டு கவிள்க்க கூடிய பாவ நிலையிலை தான் தமிழர் இப்பவும் இருக்கினம் எண்டதிலை எனக்கும் பெருமைதான்...

முதலமைச்சராய் அந்தாள் என்ன செய்யும் செய்ய போகுது எண்டதை பார்க்க ஆவலாய்தான் நானும் இருக்கிறன்... அதுக்காக தலைவருக்கு நிகராய் பீடிகை தான் உறுத்துகிறது... தலைவருக்கு நிகரான அறிவோடை தமிழருக்கை ஒருத்தர் தான் இருக்கிறார் அது எங்கள் சிங்கம் அர்ச்சுண் அண்ணா மட்டும் தான் என்பதை தாள்மையோடு அறிவித்து கொள்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

....தலைவருக்கு நிகரான அறிவோடை தமிழருக்கை ஒருத்தர் தான் இருக்கிறார் அது எங்கள் சிங்கம் அர்ச்சுண் அண்ணா மட்டும் தான் என்பதை தாள்மையோடு அறிவித்து கொள்கிறேன்...

 

:o:icon_idea::)

 

தலிவர் மாதிரி இத்தனை பேரை போட்டு தள்ளுவதென்றால் அதுக்கு புறிம்பாக பள்ளிகூட பக்கம்  போகாமல் இருந்திருக்க வேண்டும் :icon_mrgreen:

தலிவர் மாதிரி இத்தனை பேரை போட்டு தள்ளுவதென்றால் அதுக்கு புறிம்பாக பள்ளிகூட பக்கம்  போகாமல் இருந்திருக்க வேண்டும் :icon_mrgreen:

உங்கடதலைவர் உங்கட இயக்கத்தில இருந்த பெரும் தொகையான பெடியளை ஒரத்த நாட்டிலும் நாட்டிலும் செய்த கொலைகளையும் விடவா ?

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்: தமிழீழ ஆயுதப் போராட்டத்திற்கு பிரபாகரன் தலைமை! தமிழீழ அரசியல் போராட்டத்திற்கு விக்னேஸ்வரனே தலைமை!விமல்

தமிழினத்தின் அழிக்க முடியாத சக்தி பிரபாகரன் என்பதனை அடிக்கடி நினைவுபடுத்தும் விமல் க்கு நன்றிகள்.....

தலிவர் மாதிரி இத்தனை பேரை போட்டு தள்ளுவதென்றால் அதுக்கு புறிம்பாக பள்ளிகூட பக்கம்  போகாமல் இருந்திருக்க வேண்டும் :icon_mrgreen:

போட்டு தள்ளினதிலை PLOTE யை அடிக்க யாரும் கிடையாது... அண்ணை அதன் அப்போதைய சமகால உறுப்பினர் என்பதை மறந்து போனியள் போல... வயசானாலே மறதி வாறது வழமை தான்...

நம்பி வந்த உறுப்பினர்களை போடுறதை ஒரு வேளை கணக்கே எடுக்கிறதில்லையோ என்னவோ...

எண்டாலும் உங்கட அறிவு தமிழன் யாருக்கும் வராதண்ணா..

உங்கடதலைவர் உங்கட இயக்கத்தில இருந்த பெரும் தொகையான பெடியளை ஒரத்த நாட்டிலும் நாட்டிலும் செய்த கொலைகளையும் விடவா ?

பச்சை படகு வைச்சு கடலிலை வைச்சு போட்டு தள்ளினதுகளை விட்டுட்டியளே... சுடுகிறது கூட பறவாய் இல்லை தலையை வெளியிணைப்பு இயந்திர விசிறி (Propeller) ஆலை வெட்டிக்கொண்ற கொடூரம் பற்றி யார் கேப்பார்... ???

சிங்கள சீமான் .

விமலோ சீமானோ தங்கள் இனத்திட்க்காக குரல் கொடுப்பவர்கள். ஈனப்பிறவிகளாக வாழவில்லை அவர்கள் 

விமலோ சீமானோ தங்கள் இனத்திட்க்காக குரல் கொடுப்பவர்கள். ஈனப்பிறவிகளாக வாழவில்லை அவர்கள் 

அய்யய்யோ ஈனப்பிறவி என்னும் சொல்லுக்கு அவருக்கு அர்த்தம் தெரியாது ............அதனால்தானே அவர் அப்படி வாழ்கிறார் . :lol: 

விமலோ சீமானோ தங்கள் இனத்திட்க்காக குரல் கொடுப்பவர்கள். ஈனப்பிறவிகளாக வாழவில்லை அவர்கள் [/size]

சூ.. அப்படி எல்லாம் சொல்லப்படாது... சீமான், விமல் , மகிந்த எல்லாம் தங்கட சொந்த இனத்துக்கு குரல் கொடுக்கும் இனவாதிகள்... ஆனால் அர்ச்சுண் அண்ணா ... அமெரிக்கா மாதிரி உலக மக்களுக்காக குரல் கொடுப்பவர்...

இப்பிடி எல்லாம் பேசப்படாது...

சூ.. அப்படி எல்லாம் சொல்லப்படாது... சீமான், விமல் , மகிந்த எல்லாம் தங்கட சொந்த இனத்துக்கு குரல் கொடுக்கும் இனவாதிகள்... ஆனால் அர்ச்சுண் அண்ணா ... அமெரிக்கா மாதிரி உலக மக்களுக்காக குரல் கொடுப்பவர்...

இப்பிடி எல்லாம் பேசப்படாது...

ஆனாலும் உது கொஞ்சம் ஓவர் ............... :D  :D  :D 

"டேமொகிறேசி"  என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லானாலும் நவீனகால ஜனநாயகம் பிருத்தானியாவில்தான் பிறந்து. பிரபுத்துவத்தை ஒழித்து பொதுமக்கள் புரட்சி செய்த இடம் பிரான்சு. தன்னிகரில்லா குடியரசு அரசியல் அமைப்பை வகுத்து முன்னேறிய நாடு அமெரிக்கா. உழைப்பவனுக்கும் உணவும், உடுப்பும், உறங்க ஒரு உறைவிடம் வேண்டும் என்ற தத்துவம் பிறந்த இடம் ஜேர்மனி.  தொழிலாளிக்கு அரசில் சம இடம் வேண்டும் என்று புரடசி தோன்றிய இடம் ரூசியா. அகிம்சையால் சுதந்திரம் அடைந்த நாடு இந்தியா. எது இருந்தாலும் இந்த பெரிய பெரிய நாடுகள் ஒவ்வொரு சாதனைக்குத்தான் பெயர் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இன்னமும் நாடாக உருவாகி வராத தமிழ் ஈழம் இது வரையில் நான்கை தட்டிக்கொண்டுவிட்டது.

1.) ஜனநாய நாடொன்றின் அரசியல் கட்சி ஒன்று எப்படி இருக்க வேண்டும் என்ற வரைவிலக்கணத்தை உருவாக்கிய கட்சி தமிழரசுக்கட்சி. 5 நிமிடம் மேடைஒன்றில் பொய்யும் புழுகும் கலந்து அரசியல் பேசாமல் 40 ஆண்டுகளாக கட்சியை நடத்திய தலைவன் செல்வா.

2.) முப்படையும் வைத்து தமிழ் பூமி ஆண்டவன் இயக்கதின் தலைவன் பிரபா.  

3.) உலமெங்கனமும் தனக்கென ஒரு பிடி மண் இல்லாததால் நாடு கடந்த அரசு என்ற தத்துவத்தை அகில உலகிற்கும் முதல் முதல் எடுத்துக் காட்டியிருக்கிறது நா.க.த. அரசு  

4.)இந்த வரிசையில் இன்னுமொரு ஒரு சாதனை தான்,  பள்ளிப்பெடியனாக அமிர்தலிங்கம் போன்ற அரசியல் தலைக்கடா அரசியல் வாதிகள் பின்னால் திரிந்து அரசியல் பயின்று, சம்பந்தர் போன்ற பழுத்த பழுங்களுடன் சேர்ந்து கடமையாற்றி, வடமாகாணத்தின் மூலை முடுக்கெங்கும் பெயர் அடிபடும் மாவையை  வடமாகாண முதல் அமைச்சர் வேட்ப்பாளராக தெரியாமல், அரசியல் என்றுமே பேசியிருக்காத ஒரு அரச ஊழியரை, யாழ்ப்பாணம் சரியாக புரிந்து கொண்டிருக்காத கொழும்புத் தமிழனை, கூட்டமைப்பு முதல் அமைச்சர் வேட்பாளனாக நிறுத்தியிருப்பதும். ஆபத்தானதாக இருக்காலாம், ஆனால் தைரியமான முடிவு. சந்தர்ப்ப சூழ்நிலையை ஐன்ஸ்டீன், நீயூட்டன் அளவில் நின்று விளங்கிக்கொண்டதால் எடுத்த முடிவு.

 

(மாவையை பற்றி எத்தனையோ அரசியல் சார்பான நொட்டைக்கதைகள் அவிழ்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அப்பழுகில்லாத அரசியல்வாதியாகத்தான் மாவை இதுவரை இருந்து வருகிறார். அவர் தானாக விட்டுக்கொடுத்துத்தான் இந்த சாதனையை நிஜமாக்கியிருக்கிறார். இதை தட்டுத்தடுமாறி, வக்கில்லாத கிந்தியக் காங்கிரஸ் அரசியல்வாதிகள் சோனியாவை தலைவராக்கி பதவி பிடிக்கும் பேதமையுடன் ஒப்பிட்டுவிடக்கூடாது. மாவை நூற்றுக்கு நூறுவீத தமிழ் வாக்குகளையும் கவரத்தக்க வேட்ப்பாளர்தான்.) 

 

முடிவு எங்கே போகும் என்பது தெரியாது. எந்த எந்த இடங்களில் பதில் நடவடிக்கைகள் ஏற்கனவே தயாராகிவிட்டதென்பது இன்னமும் அறியப்படவில்லை. ஆனால் இது கொழும்பில் உள்ள எல்லா தூதுவராலயங்களிலும் இரண்டு மூன்று தின மதிய சாப்பாட்டு நேர்த்தையும் அலங்கரிக்க தவறியிருந்திருக்காது என்பது எல்லோரும் உணர்ந்த ஒன்று.  இதற்கு விமல் கூட ஒன்றும் தவறுபிடியல்ல.

 

எதோ கல்லூரி ஒன்று சென்று PhD செய்யாத ஆள்த்தான் விமல். ஆனால் சிங்களச்சனத்து ஏற்ற அரசியல் வாதியாகத்தான் விமல் இருக்கிறார். பலதடவைகளில் மகிந்தாவுக்கு அடுத்து சிங்கள பதவி கிடைக்ககூடியவர் என கூறப்படுவர். அதனால் அச்சொட்டாக சிங்கள மனங்களில், தமிழர்கள், தொழில் துறை அரசியல்வாதியாக இல்லாத ஒரு புத்தியீவியை பதவியில் அமர்த்தினால் அதை பற்றி  என்ன நினைவு வரும் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு இப்படி பேயிருக்கிறார். 

 

என்ன தான் இந்த சிங்கள மகாஜனகள் நினைக்கிறார்கள் என்பது ஒன்றும் பரம இரகசியம் அல்ல. கொழும்பில் இருந்து படைஎடுத்துக்கொண்டுவந்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றி போத்துக்கீசருக்கு கையளித்துவிட்டு திரும்பிய இந்த சிங்கள மகாஜனங்களை "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என்ற தமிழ் மறைக்கேற்பவொழுகி, பிருத்தானிய சென்று காப்பாற்றிய சேர் பொன் இராமநாதன் தொடக்கம், செல்வா, அமிர்தலிங்கம், சம்பந்தர் வரை  எல்லோருமே ஆயுதம் தாங்கிய போராளி பிரபாகரன்தான் என்பதுதான் இந்த சிங்கள மகாஜனங்கள் நினப்பது. தமிழர்கள் மட்டுமென்ன, சிங்கள அரசை  எதிர்த்து அரசியல் பேசும் சிங்கள மங்கள போன்றவர்களே பிரபாகரன்கள்தான் இந்த சிங்கள மகாஜனங்களுக்கு. 

 

இந்த சிங்கள மகாஜனங்களுக்கு அடுத்த ஜனாதிபதியாகத்தாக எல்லாத் தகமைகள் படைத்திருக்கும் விமல் இந்த மகாஜனங்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார். தமிழர், இதுவரையில் தேங்கிப்போய் இருக்கும் தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க, புரட்சிகரமாக ஒரு புத்தியீவை நியமித்தால் அதற்கு பொருள் என்னவாக இருக்கும் என்பதையும் இந்த சிங்கள மகாஜனங்களின் துவேச மனங்கள்  என்ற இருட்டுக்குகைகளில் தேடிசென்று  ஊகிக்க தெரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் தன்னைத்தான் படிக்காத மேதையாகக்காட்டிக்கொள்ள முயலும் இந்த சப்பிப் பதர் இப்படி சிந்திக்கிறர்.

 

"தமிழீழத்தின் ஆயுதப் போராட்டத்திற்கு வேலுப்பிள்ளைப் பிரபாகரனே பொறுத்தமானவர் என்றால், அரசியலமைப்பின் ஊடாக தமிழீழப் போராட்டத்தை முன்னெடுக்க விக்னேஸ்வரனினால் மாத்திரமே முடியும் என அந்தத் தூதரகம் நம்புகிறது. அரசியலமைப்பில், துளைகளைப் போட்டு, துளைகளுக்கூடாக புகுந்து அதிகாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரசியலமைப்பின் ஊடாகவே தமிழீழப் போராட்டத்தை முன்னெடுக்க முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனினால் மாத்திரமே முடியும் என்பதாலேயே தூதரகம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது."

 
 

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.