Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளம் சமூகத்திற்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையாய கடமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிச்சயம் இடம் ஒதுக்கப்படல் வேண்டும்.அவர்களுக்கு இடம் குடுத்தால் கடந்த காலத்தில் நடந்தைதைப் போல் தலைமை வேட்பாளரை விட கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்று மக்கள் செல்வாக்கு பெற்று விடுவார்கள் என்று அச்சப்படுகிறார்.தமிழ்த்தேசியத்துக்கு குரல் கொடுப்பவர்களை வெளியேற்றி விட்டு கடந்தகாலங்களில் தமிழத்தேசியத்துக்கு எதிரானவர்களைக் கட்சிக்குள் உள்ளிழுப்பதுதான் சம்பந்தரின் இராஜதந்திரம்.அவர் சேரத்த ஆட்களில் அம்பறையில் ஒரு சிங்களவரும் யாழ்ப்பாணத்தில் றெமீடியசும் அரசாங்கத்துடன் சேர்ந்ததுதான் மிச்சம்.சுரேசிலிருந்து சித்ததாhர்தன் சங்கரிவரை எல்லோரும் தமிழ்த்தேசியத்துக்கு எதிராக வேலை செய்தவர்கள்தான்.மாவை எப்போதும் அடக்கி வாசிப்பவர். தமிழ்த்தேசியத்துடன் நிற்பவர். ஆனால் ஆளுமை குறைந்தவர்.

நீங்கள் சொல்வது சரிதான் கிரி, தீபசெல்வன் பல்வேறு பரிமானங்களைக் கொண்டவர் துணிச்சலான தமிழகம் உலகம் அறிந்த  ஈழ தேசியவாதி.  மானவர் தலைவனும் கலைஞனுமான தீபச் செல்வனை வேட்ப்பாலர் ஆக்குவது தொடர்பாக தொடர்பாக சம்பந்தர், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமசந்திரன் , அடைக்கலநாதன் போன்றவர்களிடம் யாழ்பல்கலைக் களக மானவர் பேரவை பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென்று பணிவுடன் வேண்டுகிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன்

 

தீபச்செல்வன் கடந்த பாராளுமண்ற தேர்தலில்  கூட்டமைப்பில் போட்டி இடுவதாக இருந்து பின்னர் கூட்டமைப்பால் அவருக்கே கூட காரணம் சொல்லாமல் களட்டி விடப்பட்டது ஞாபகம் இல்லையா தலிவரே...? 

அட போங்கப்பா...   2010 ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளாக கூட்டமைப்பு நிறைய சொன்னது...  இதிலை எவ்வளவை செய்தது எண்டு யாராவது சொல்லுங்கப்பா... 

 

கொஞ்சுண்டு ஒரு பேட்டியிலை  மாவை புழுகினது இது...

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/38082/language/ta-IN/------------.aspx

சம்மந்தன் கும்பலின் ஓட்டு வங்கியே இன்னும் திண்ணையில் இருந்தும் டீ கடையில் இருந்தும் அரசியல் பேசும் அந்தர் பழசுகள்..... இன்னும் 5 வருஷம் போனால் அந்த தலைமுறையே போய்டும்..... அப்போ பாக்கலாம் இந்த சம்மந்தன் கும்பல் என்ன செய்ய போகுது என்று....

புலி இருந்த போதும்,இப்பொழுதும் [/size] நாங்கள் தான் தீர்மானிக்கும் சக்தி , எங்களால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் அதுதான் 1989இல் நடைபெற்ற் தேர்தலில் சம்பந்தரை தோற்கடித்த னாங்கள் 5வருடமில்லை ,10வருடத்திற்கு பிறகு மீளாய்வு செய்து பார்ப்போம் .

குரைக்கிற --   கடிக்காது .

இது போராட்ட காலம். வழமையான ஜனநாயக தேர்தல் காலம் அல்ல. வழமையான தேர்தல் காலமாயின், மாவை வெளியே போனதற்கு நியாயமும் இல்லை. நீதியரசர் உள்ளே வந்ததற்கு நியாயமும் இல்லை. அந்த நிலையில் அரச கண்காணிப்பின் கீழ் இருக்கும் யாழ்ப்பலைக்கழக மாணவர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுப்பது சிந்தித்து செயலாற்றப்பட வேண்டியது. இதில் ஏற்கனவே சம்பந்தபட்ட இளைஞனின் பெயர் நீக்கபட்ட காரணம் வெளியே தெரிய வராத போது நிபந்தனை இல்லாமல்  மாணவருக்கு தெரிவு என்பது பொருத்தமானது அல்ல. 

 

எதற்காக நாய் மாதிரி காலை மட்டும்தான் யாழில் தூக்க முடிகிறது? 5 கட்சிகள். ஆசன பங்கீடு முடிந்து விட்டது. பொழுது போக்கு அரசியலுக்காக  சம்பந்தனையும் தமிழரசுக்கட்சியையும் திட்டாமல் மற்றவர்களையும் இடையிடை திட்டினால் என்ன?

 

தமிழரசுக்கட்சி பாரிய விட்டுக்கொடுப்புகளை நடத்தி சில தெரிவுகளை நிஜமாக்கியிருக்கிறது. மற்றக் கட்சிகள் முன்னால் வந்து இன்னும் சில தெரிவுகளை சேர்த்துகொள்ளவதும் நல்லது.  சுரேசின் தம்பிக்கோ அல்லது ஆனந்த சங்கரிக்கோ விட்டுக்கொடுக்கும் மனம் இருந்தால் நிச்சயம் அந்த இடம் தீபன் செல்வனுக்கு போகவேண்டும்.

 

தீபன் செல்வனை தெரிவது மாணவர் தெரிவாக இருக்க வேண்டும். அழகியாகியா வீட்டில் வளைய வருகிறாள்; இனி மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம் என்பதற்காக பாட்டனார் போய் பேத்தியின் கையை இழுத்து காதல் பண்ணியதாக இருக்க கூடாது.  மாணவர் பக்கம் ஊக்குவிக்க படவேண்டும். ஊக்குவிக்க பட்ட மாணவர் தெரிவு கட்சி தலைமைகளால் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். யாழின் 70கள் 80கள் மாணவர்களின் மீது எதையாவது திணித்துவிட்டுவிட்டு மாணவர் தெரிவு என்று பிரச்சாரம் நடத்தக் கூடாது. 

 

Gari  இடம் நான் கேட்பது, கூட்டமைப்பு ஏன் பரிசீலனையில் இருந்த மாணவ பிரதிநிதியின் பெயரை தள்ளிவைத்தது என்பது வெளிவிடத்தக்க காரணமாக இருந்தால் அதை அவர்களை வெளிவிட வைக்க வேண்டும். அதை நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள இங்கேயும் பதிந்தும் விடலாம்.

 

கூட்டமைப்பும், தாயக மாணவர் சமுதாயமும் இது மாணவர் பிரதிநிதிக்கான காலமென்றும், குழம்பிய குட்டை மேலும் குழம்பாமலிருக்கத்தக்கதாக ஒரு கட்சி தனக்கு பங்கிடப் பட்ட ஆசனத்தில் அவரை நிற்கவிடவும் முன்வந்தால், நான் எனது எழுதுக்களில் அவரை ஆதரித்து எழுதுவேன். அறிந்தவர்களை தாயகத்தில் அவருக்கு வாக்களிக்கும் படி கேட்பேன்.

 

பேருக்கு அலைபவர்கள் தமது பெயருக்காக பிரேரிக்கும் பெயர்களுக்கு பின்னால் அலைய நான் மாணவப் பருவ இளைஞன் அல்ல. உண்மை முகம் இல்லாமல் யாழில் அலையும் கூழுக்கும் பாடி, கஞ்சிக்கும் பாடி நான் அல்ல. கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நிர்வாகத்தை மிரட்டி என்னை வெளியே தள்ள பார்த்தவர்கள் ஆடிக்கறக்க முடியாமல் போய்விட்ட மாட்டை பாடிக்கறக்கலாம் என்று நினைத்தால் நான் வெறும் மாடு என்று நினைத்துக் கொள்வது அவர்களின் மோட்டுத்தனம்.  தங்களில் மாற்றம் வராமால் என்னை மாற்றிவிடாலாம் என்பது நப்பாசை. சமாதனம் என்ற பெயரில் சம்பந்தருடன் சமாதானம் ஆக முடியாமல் மகிந்தாவுடன் சமாதானம் ஆகலாம் என்ற நடிப்பில் ஏமாற எனக்கு எந்த அவசியமும் இல்லை. 

 

தங்களில் உண்மை மாற்றத்தை காட்ட முடியாதவர்கள் தீர்ப்பின் கல்லெறியை தப்பிப்பதை அவர்கள் முடிந்தால் பார்த்துக்கொள்ளட்டும். 

 

தீபன் செல்வன் முழுநேர அரசியலில் குத்திப்பது அவரின் விருப்பம். இன்றைய நிலையில் அவர் நான் ஆதரிக்க தக்க ஒரு வேட்பாளர்.

 

Edited by மல்லையூரான்

மக்கள் விரும்பாத அரசியலை யார் முன்னெடுத்தாலும் காலம் அவர்களை கிக் அவுட் பண்ணும் போது தெரியும்.. தாங்கள் செய்த தவறுகள். 

நீங்கள் சொல்வது உண்மை தலைவரே அது தான் சம்பந்தர் ,மாவை போன்றோருக்கு எதிராக மிகப்பெரும் பட்டாளத்துடன் களமிறங்கிய கொள்கைத்துன்பங்கள் மக்கள் கிக் அவுட் பண்ணினார்கள் .

ஜனநாயகத் தலைவர்கள் என்போர் ஏதேச்சதிகாரமாகச் செயற்பட முடியாது. மக்கள் விருப்பறிந்து செயற்படுபவர்களே ஜனநாயகத் தலைவர்கள்..!

மிகப்பெரிய உண்மை  :D

இதனை இப்போது முன்னெடுக்கக் கூடியவர்கள் கூட்டமைப்பில் இல்லை. மேலும் இளைய தலைமுறையால் தான் அதனை முன்னெடுக்கவும் முடியும் சாதித்துக்காட்டவும் முடியும்..!  :icon_idea:

இதைத்தானே திரும்பத்திரும்ப சொல்கின்றோம் .செயலில்லை காட்டுங்களன் .  :icon_idea:

Edited by இணையவன்

Gari  இடம் நான் கேட்பது, கூட்டமைப்பு ஏன் பரிசீலனையில் இருந்த மாணவ பிரதிநிதியின் பெயரை தள்ளிவைத்தது என்பது வெளிவிடத்தக்க காரண்மாக இருந்தால் அதை அவர்களை வெளிவிட வைக்க வேண்டும். இங்கேயும் பதிந்தும் விடாலாம் நாம் எல்லோரும் அதை தெரிந்து கொள்ள.

யாழ் பல்கலைக்கழக மாணவர் சமுகம் திட்டமிட்டு யாழ்லில் உள்ள கட்சிகளுடன் சந்திப்பொன்றை நடாத்தி தங்கள் கோரிக்கையை சொல்லியிருக்கலாம் .இன்றைக்கு தமிழர்களிடம் உள்ள மிகப்பெரும் குறைபாடு .திட்டமிடுதல் இல்லாமை .

 

தனிமடல் போட்டுள்ளேன் .பாருங்கள் .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

பொய‌ற்றின் க‌ருத்தை, நான் வ‌ழி மொழிகின்றேன்.

தீபச்செல்வன் இதற்கு சம்மதித்தால்... எமக்கும் மகிழ்ச்சி.  :)

 

நாடு கடந்த அரசு மாதிரி ,யாழும் ஒரு மாகாணசபை அமைச்சால் போச்சு . :icon_mrgreen: .

அவனன் நாட்டில நின்று இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த அராஜக அரசிற்கும் இராணுவதிற்கும் இடையில் நின்று அரசியல் செய்ய   சாப்பிட்ட சாப்பாடு சேமிக்காமல் இங்கிருந்து கொண்டு புத்திமதி சொல்லினம் .ஏன் புலிகள் இருக்கும் போது வாயை திறந்திக்ருகலாமே ?

எங்களுக்கும் ஜனநாயகத்திற்கும் வெகுதூரம். 

ஒரு கவிஞரை அரசியலுக்கு கொண்டுவந்து அமிர்தலிங்கம் பட்ட பாடு போதும் ,அந்த ஆள் இப்பவும் தலைவரோட தொலைபேசியில் நிற்கின்றார் ,

மற்றவர் நல்ல கவிஞர் தான் ஆனால் அரசியலில் அருவரி.அவரின் பேட்டிகளை படித்தாலே புரியும் .அவரின் இளமை அவரை சூடாக்கி பொங்க வைக்குது இன்னம் சில வருடங்கள் செல்ல அமைதியாக ஆர்பட்டமில்லாமல் அரசியலுக்கு வரலாம் .

தமிழ் தேசிய கூட்டமைப்பில் பல விமர்சனங்கள் இருக்கு ஆனால் எதிரியுடன் மோதும் போது இப்போது அவர்களை நாம் பலப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை .

தேர்தல் முடிய நிச்சயம் எமது அரசியலில் பெரும் மாற்றங்கள் வரும் .

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிதான் நீங்கள் மகிழ்ச்சி அடைய வேணும்...  

 

ஜனாதிபதி தேர்தல் எண்டியள்,   பாராளுமண்ற தேர்தல் எண்டியள்,  கிழக்குமாகான தேர்தல் எண்டியள் , இப்ப வடக்கு தேர்தல் எண்டுறீயள் ...    அதோடை மகிழ்சியும் எண்டுறீயள்...

 

கேப்பாபுலவிலை ஏக்கர்கணக்கிலை காணியை வைச்சு கொண்டு சொந்த வீட்டுக்கு போக ஏலாமல் சொந்தக்காறர் விட்டிலை இருக்கு தெரிஞ்ச குடும்பம்...   

 

உண்மையை சொன்னால்  உங்களை மகிழ்ச்சிப்படுத்துற  ஆக்களை விட மகிந்த தமிழ் மக்களுக்காக அதிகம் செய்யுறான்...  

 

 

ஏன்  ராசா

அடிபாட்டுக்கு  நடுவில  வந்ததுக்கு  ...........

எண்ணிப்பாவிப்பதில்லையா  ரவைகளை???? :D

ஏன்  ராசா

அடிபாட்டுக்கு  நடுவில  வந்ததுக்கு  ...........

எண்ணிப்பாவிப்பதில்லையா  ரவைகளை???? :D

 

வன்னியிலை இருக்கும் சனத்துக்கு பிரச்சினை எண்டால் கேக்கிறதுக்கு சனம் கிளிநொச்சி போய்  ஶ்ரீ வாதியை பாக்க வேண்டி இருக்கு இல்லை வவுனியா போய்  ஆனந்தனை பாக்க வேணும்..   இல்லை எண்டால் யார் ஊருக்க நிக்கினம்...?? 

 

இடைக்கிடை மாவையர் காட்சி தாறார்...  தலிவர் கடைசியா இரணிலோடை வந்து சிங்க கொடி தூக்கினதுக்கு பிறகு சனம் கண்டது கூட இல்லை...    வடக்கு கிழக்குக்கு போறதை விட அதிகமாய் இந்தியா போறார்...   

 

இராஜதந்திரம் எண்ட பேரிலை இந்தியாவின் நலன்களுக்காக பாடுபட்டதை விட வேறை என்ன பலன் கிடைச்சுது ...??  சனல் 4  ஐநாவிலை பாடு பட்ட போது  இராஜதந்திரமாக வராமல் நிண்டவை தானே ...?? 

 

இதுவரை கிடைச்ச எதை பயன்படுத்தினவை இனிமேல் பயன் படுத்த...? 

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியிலை இருக்கும் சனத்துக்கு பிரச்சினை எண்டால் கேக்கிறதுக்கு சனம் கிளிநொச்சி போய்  ஶ்ரீ வாதியை பாக்க வேண்டி இருக்கு இல்லை வவுனியா போய்  ஆனந்தனை பாக்க வேணும்..   இல்லை எண்டால் யார் ஊருக்க நிக்கினம்...?? 

 

இடைக்கிடை மாவையர் காட்சி தாறார்...  தலிவர் கடைசியா இரணிலோடை வந்து சிங்க கொடி தூக்கினதுக்கு பிறகு சனம் கண்டது கூட இல்லை...    வடக்கு கிழக்குக்கு போறதை விட அதிகமாய் இந்தியா போறார்...   

 

இராஜதந்திரம் எண்ட பேரிலை இந்தியாவின் நலன்களுக்காக பாடுபட்டதை விட வேறை என்ன பலன் கிடைச்சுது ...??  சனல் 4  ஐநாவிலை பாடு பட்ட போது  இராஜதந்திரமாக வராமல் நிண்டவை தானே ...?? 

 

இதுவரை கிடைச்ச எதை பயன்படுத்தினவை இனிமேல் பயன் படுத்த...? 

 

 

யாருக்கும்  அறிவுரை  சொல்லவரல

 

ஆனால் இப்ப 

நாம  ஒன்றை  விரும்புறம்

உலகம் இன்னொன்றில் விடாப்பிடியா  நிற்குது

 

நம்ம வழியால  செய்யாத  தியாகமா?

கொடுக்காத  விலையா?

 

இப்ப

தாங்கள் ஏதாவது செய்யினம் என்று மக்களிடம் வருகினம்

பார்ப்பமே???

 

சந்தோசம்  என்று  நான் எழுதியது

நம்மவழியில  இன்னும் நிற்கிற

தம்பி  தீபச்செல்வன் சம்மதித்தால் சந்தோசம் என்று தான்.

நமக்கு இன்னும் அதே வழியில் மட்டும்தான்  நம்பிக்கை

சிங்களம  அதை மட்டம் தான் சிந்திக்க விடுகுது

  • கருத்துக்கள உறவுகள்

இளையவர்களை அரசியல் நீரோட்டத்தில் அனுமதிப்பது நிச்சயமாக நல்ல விடயம்தான் ஆனால் அந்த இளைஞர் தமிழ்மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியவராக இருக்கவேண்டும் அவர் படித்தவரா படியாதவரா என்பது பிரச்சனை அல்ல தமிழர்களுக்கு என்ன உண்மையில் தேவை என்பதை புரிந்த ஒரு இளைஞனாக இருக்கவேண்டும் அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சென்று மக்களுக்கு பனி செய்பவராக இருக்கவேண்டும் மொத்தத்தில் அற்பணிப்புள்ள இளைஞன்தான் அரசியலுக்கு கொண்டுவரவேண்டும்.

தீபச்செல்வன் 2010 இல் கூட்டமைப்பு நிராகரித்த பின், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையிலிருந்து அனைத்து விதமான உரிமைகளையும் நிராகரிக்கும் ஜேவிபி யின் பட்டியலில் இடம்பெற்றவர் அல்லவா?  என் ஞாபக மண்டலத்தில் இருந்து இப்படித்தான் நினைவு எழுகின்றது.

தீபச்செல்வன் 2010 இல் கூட்டமைப்பு நிராகரித்த பின், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையிலிருந்து அனைத்து விதமான உரிமைகளையும் நிராகரிக்கும் ஜேவிபி யின் பட்டியலில் இடம்பெற்றவர் அல்லவா?  என் ஞாபக மண்டலத்தில் இருந்து இப்படித்தான் நினைவு எழுகின்றது.

 

 

ஞாபகத்தில் இடி விழ....   :D

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69493&p=571018

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகத்தில் இடி விழ....   :D

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69493&p=571018

 

அதானே.. பொய்யட் ஐயாதான் கேட்டிருக்கிறார் ஜேவிபியில் நிற்கச்சொல்லி.. :D

 

  • தொடங்கியவர்

தீபச்செல்வன் 2010 இல் கூட்டமைப்பு நிராகரித்த பின், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையிலிருந்து அனைத்து விதமான உரிமைகளையும் நிராகரிக்கும் ஜேவிபி யின் பட்டியலில் இடம்பெற்றவர் அல்லவா?  என் ஞாபக மண்டலத்தில் இருந்து இப்படித்தான் நினைவு எழுகின்றது.

கொள்கைகளில் உறுதி இல்லாதவர்கள் தமிழ் இனத்திற்கு தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்
கிழட்டு நரிகள் கூட்டமைப்பு சார்பாக தமிழரின் அரசியலில் இருந்து ஊளையிட்டதுபோதும்.. இந்த நரிகள் எமக்கு செய்யாத துரோகமா... ஏதும் செய்யாது என்று தெரிந்தாலும் இந்த நரிகள் இருக்கும் கதிரைகளைகாட்டித்தானே எமது போராட்டத்தை கைவிட்டு தமிழர்களின் பிரதிநிதிகளாம்(???) அந்த நரிக்கூட்டத்தின் மூலம் அரசியலில் கலந்து உரிமைகளைப் பெறுங்கள் என்று சர்வதேசம் கூவிக்கொண்டு திரிந்தது,திரிகிறது...
 
பொயட் அவர்கள் ஏன் தீபச்செல்வனை வேட்பாளராக நிறுத்தக்கூடாது கூட்டமைப்பு என்று ஒருமுன்மொழிவை கொடுத்திருக்கிறார்..மிக நல்ல ஒருவிடயம் கிழட்டு நரிக்கூட்டத்தை அப்புறப்படுத்துவதற்கு இப்படி துடிப்புள்ள இளைஞர்கள் சந்தர்ப்பங்களை பயன்படுத்து நுழைந்துகொள்ளவேண்டும்... நாங்கள் அவர்களை நுழைய வைக்கவேண்டும்..இல்லாவிட்டால் நரிகள் சத்தமில்லாமல் நம்மை அழித்துவிடும்..
  • கருத்துக்கள உறவுகள்

 

கிழட்டு நரிகள் கூட்டமைப்பு சார்பாக தமிழரின் அரசியலில் இருந்து ஊளையிட்டதுபோதும்.. இந்த நரிகள் எமக்கு செய்யாத துரோகமா... ஏதும் செய்யாது என்று தெரிந்தாலும் இந்த நரிகள் இருக்கும் கதிரைகளைகாட்டித்தானே எமது போராட்டத்தை கைவிட்டு தமிழர்களின் பிரதிநிதிகளாம்(???) அந்த நரிக்கூட்டத்தின் மூலம் அரசியலில் கலந்து உரிமைகளைப் பெறுங்கள் என்று சர்வதேசம் கூவிக்கொண்டு திரிந்தது,திரிகிறது...
 
பொயட் அவர்கள் ஏன் தீபச்செல்வனை வேட்பாளராக நிறுத்தக்கூடாது கூட்டமைப்பு என்று ஒருமுன்மொழிவை கொடுத்திருக்கிறார்..மிக நல்ல ஒருவிடயம் கிழட்டு நரிக்கூட்டத்தை அப்புறப்படுத்துவதற்கு இப்படி துடிப்புள்ள இளைஞர்கள் சந்தர்ப்பங்களை பயன்படுத்து நுழைந்துகொள்ளவேண்டும்... நாங்கள் அவர்களை நுழைய வைக்கவேண்டும்..இல்லாவிட்டால் நரிகள் சத்தமில்லாமல் நம்மை அழித்துவிடும்..

 

 

அதன்படி

இளையவர்  தாங்களும் இங்கு கவனம் செலுத்தணும் :icon_idea:

அதன்படி

இளையவர்  தாங்களும் இங்கு கவனம் செலுத்தணும் :icon_idea:

 

ஏன் இந்த கொலை வெறி...???  

 

லலித், குகன் எண்டும் இன்னும்கொஞ்சப்பேரை காணவில்லை...  தீபச்செல்வன் ஓடிப்போய் இந்தியாவிலை நிக்கிறார்... ஊருக்கு வாறதில்லை... !   சிறீ வாத்திக்கு  4 மாடியிலை வாடகைக்கு ரூம் குடுத்து இருக்கிறாங்கள்....    மக்களோடை  நிக்கும்கொஞ்சம் ஆழுமையான பிரச்சினைகளுக்கு முன் நிக்கும் முன்னாள் போராளிகள்  காரணமே இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்... 

 

இதுக்கை இன்னும் ஆக்களா...??  

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த கொலை வெறி...???  

 

லலித், குகன் எண்டும் இன்னும்கொஞ்சப்பேரை காணவில்லை...  தீபச்செல்வன் ஓடிப்போய் இந்தியாவிலை நிக்கிறார்... ஊருக்கு வாறதில்லை... !   சிறீ வாத்திக்கு  4 மாடியிலை வாடகைக்கு ரூம் குடுத்து இருக்கிறாங்கள்....    மக்களோடை  நிக்கும்கொஞ்சம் ஆழுமையான பிரச்சினைகளுக்கு முன் நிக்கும் முன்னாள் போராளிகள்  காரணமே இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்... 

 

இதுக்கை இன்னும் ஆக்களா...??  

 

 

பழகிப்போச்சு  ராசா

முன்னுக்கு போறதுக்கு முன்பு ஒராள் இருந்தார்

அப்படியே  பழகிப்போச்சா

இப்ப ஒருத்தரும் வாறாங்கள் இல்லை

எல்லோரும் சுழியன்களாக இருக்கிறார்கள்

அது தான்  வாய்விட்டுக்கேட்டுப்பார்த்தன் :D

பழகிப்போச்சு  ராசா

முன்னுக்கு போறதுக்கு முன்பு ஒராள் இருந்தார்

அப்படியே  பழகிப்போச்சா

இப்ப ஒருத்தரும் வாறாங்கள் இல்லை

எல்லோரும் சுழியன்களாக இருக்கிறார்கள்

அது தான்  வாய்விட்டுக்கேட்டுப்பார்த்தன் :D

 

விடுங்கோ...  ! சிங்கள அரசாங்கம் அனுமதிக்கும் ஆக்கள் மட்டும் இலங்கை  தமிழர் அரசியலுக்கை வந்தால் போதும்...  

 

நாங்கள் ஏன் மற்றவைக்கு பிரச்சினை குடுப்பான்...  எங்களுக்கு பிடிச்சவை அரசியலுக்கு வந்தால் திட்டுறதுக்கு கஸ்ரமா இருக்காதா...??  :D  :D  :D

Edited by தயா

யாழ் பல்கலைக்கழக மாணவர் சமுகம் திட்டமிட்டு யாழ்லில் உள்ள கட்சிகளுடன் சந்திப்பொன்றை நடாத்தி தங்கள் கோரிக்கையை சொல்லியிருக்கலாம் .இன்றைக்கு தமிழர்களிடம் உள்ள மிகப்பெரும் குறைபாடு .திட்டமிடுதல் இல்லாமை .

 

தனிமடல் போட்டுள்ளேன் .பாருங்கள் .

 

நன்றி விபரங்களுக்கு. தனிமடல் போடுகிறேன்.  நிறைய உண்மைகள் உணரப்படகூடியவை. அவைகளை கூட்டமைப்பு போன்ற இக்கட்டில் இருக்கும் கட்சி மேடை மேடையாக பேச முடியாது. அது முடியுமாயின் நாம் ஆயுதாங்கி போராட்டாமல் செல்வா அகிம்சை யுத்ததை தொடர்ந்திருப்பார். யாழில் பலர் தம்மை அறிவாளிகளாக காட்ட, தமது தனி எதிரிகளுக்கு பாடம் படிப்பிக்க, வெளிப்படையாக காட்டு யானையை பிடிக்க வந்துலாவும் வீட்டு யானையை தொடர்கிறார்கள். தெரியாமல் செய்கிறார்களாயின் சறுக்கிய உடன் பொறிக்கிடங்குக்குள் விழப்போவதை உணர்ந்து காலை இழுப்பார்கள்.  இல்லையேல் இங்கே சபேசன் போன்றோர் செய்த வியூக அரசியல் ஆராச்சிகளாக அவர்களின் தேசியம் முடிவடையும்.

 

அதானே.. பொய்யட் ஐயாதான் கேட்டிருக்கிறார் ஜேவிபியில் நிற்கச்சொல்லி.. :D

 

 

இந்த நிர்வாகம் மீது எனக்கு நன்றியே குறைந்து போய்விட்டது. ஆனால் இணையவன் அந்த இணைப்பை கொடுத்திருந்த போது அதில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. உண்மையை தெளிவைத்த இணையவனுக்கு நன்றி. தீபன் சிறுபையனாக இருந்தாலும் பொய்யடுக்கு சரியான பதிலை கொடுத்திருந்தார்.

 

மவையை இந்த தேர்தலில் தள்ள பலர் முயன்றார்கள். பலவகைகள் அவர்கள்.

1).மாவையுடன் இழுபட்டவர்கள்; அவரை முதலமைச்சராக்கி பார்க்க விரும்பியவர்கள்; இன்றும் மாவை தகுதியான, திறமான ஒரு வேட்பாளரே.

2).கூட்டமைப்பை பலவீனப்படுத்த, உடைக்க நல்ல சந்தர்ப்பம் தேடியவர்கள். கூட்டமைப்பின்  உள்ளே புகுந்துள்ள எதிரிகள்.

3). டியு குணசேகரா வரைக்கும் மகிந்தா கஸ்டங்களுக்குள்  மாட்டலாம் என்று கவலைப்படுபவர்கள்.

4). நிரந்தரமாக, நீதியரசர் விக்கினேஸ்வரனால் தமது கனவு பலிக்காமல் போகப்பொகிறது என்ற பயந்த தேவானந்த கூட்டத்தவர்கள், கூட்டமைப்புக்குள் புலி நாமத்துடன் ஒரு குழப்பம் விளைவிக்க இடம் கிடையாமல் போகிறதே என்று கவலைப்பட்டவர்கள்.

5).அருசுனன் பலதடவைகள் கனவில் கண்டு திடுக்கிட்டு எழும் மொக்கு கூட்டங்கள்.

..............

..............

 

இதனால் மாவை மீது, தமிழ் மக்கள் மீது, தமிழ் தேசியம் மீது பாசமாக காட்ட மாவையின் பெயரை முன்னால் தள்ள பலர் முயன்றார்கள்.  இறுதியில் மாவை தனது பெயரை வைத்து கட்சியை பிரிக்க வேண்டாம் என்று கூறினார்.  அத பின்னர் Poster கள் அடித்தும் வன்னி எங்கும் ஒட்டினார்கள். இது மாவை மீது காட்டிய, தேசியம் மீது காட்டிய, தமிழ் மக்களின் நலங்கள் மீது காட்டிய தீராத பாச நாடகம்.

 

இப்போது தீபன்செல்வனை கொண்டுவருகிறார்கள்.

 

இவர்கள் எழுதிய கருத்துக்கள்

 

"என்னிடம் தொலைபேசியில் பொருத்தமான வேட்பாளர்களை அறிமுகப் படுத்தும்படி கோரி பேசிய ஜெ.வி.பி தலைவர்கள் நீ அவர்களது வேட்பாளனாக நிற்பதையே பெரிதும் விரும்பினார்கள். அவர்கள் உனக்கு தேசிய பட்டியலில்கூட இடம்தர கூடும். இதுபற்றி நீயும் அறிவாய். எல்லாவற்றையும் தோற்றுவிட்டோமடா. எதிரி முக்கால் நாம் கால் என போட்டி போட்டுக்கொண்டு தமிழர்களது நம்பிக்கைகள் வாய்ப்புகள் வழிகள் எல்லாவற்றையும் அழித்துவிட்டோமடா. நிலத்தில் சைபர் மட்டத்தில் கிடக்கிறது எங்கள் தாயகம். அதுவும் வடக்கு கிழக்கென பிழவுபட்டுபோய் சீரழிகிறது."

........

நம்முள் மறைந்து கிடக்கும் யாழ்மையவாத பிசாசு அடுத்த தெல்லாவற்றையும் துரோகிகளாக்கும் என்பதை அறிவாய். தீபச் செல்வா. இந்த ஆசனங்கள் போகும் வரும்."

 

 

இதுதான் கக்கப்பட்ட நஞ்சு. தேர்தலில் நிற்பதானால்  கூட்டமைப்பில்தான் தான் நிற்பேன் என்று எழுதிய இளைஞன் தீபனுக்கு அளித்த பதில் இது. 

 

இந்த தருணத்தில் வடகிழக்கு இணைப்பையும் முஸ்லிம்களோடு இணக்கப் பாட்டையும் முன்னிலைப் படுத்தி சம்பந்தரது தலைமையில் கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்லும் எமது இனத்தின் உயிர்த்தெழும் முயற்ச்சியை ஆதரிக்க வேண்டுகிறேன்.

 

இதை தீபன் செல்வனுக்கு அறிவுரையாக எழுதியவர்களே கிழக்கு பிரிந்தாதால் வடக்குக்கு அதை அடைக்கியாள முடியாமல் போய்விட்டதாகவும், கிழக்கு வடக்கிலிருந்து சுதந்திர அடைந்துவிட்டது போலவும் பொருள் பட எழுதியவர்கள்.

 

ஆனால் இத்தனைக்கும் "உன்னை JVP அழைக்கிறது என்பது உனக்கும் தெரியும். ஆனால் நீ என் உண்மையான உறவு என்ற முறையில் சொல்ல இந்த உரிமையை எடுத்துகொள்கிறேன். உனக்கு கூட்டமைப்பு  தரவேண்டியதை தரவில்லை என்பதற்காக  போட்டியில் இறங்கி விடாதே. சேராத இடமாக JVP யில் சேர்ந்து விடாதே" என்று ஒரு சொல்லு அந்த திரியில் போட்டு வைக்கவில்லை.  ஆனால் அதற்குப்பதிலாக போட்டுவைத்த அறிவுரை:

 

உலக அரசியலிலும் பிரட்தேச அரசியலிலும் நமக்குள்ள வாய்ப்புக்களை தேடும் பணியை நாம் மீண்டும் ஆரம்பிக்கவேண்டும்.

 

பொது நலம் பற்றி எழுதுவது போல இரட்டைக் கருத்தில் சுய நல "வாய்ப்புக்கள்" தேடும் போதனை வைக்கப்படுகிறது.

 

ஆனால் தெளிவாக  தீபன் பதில் இறுத்திருந்தார்.  அதாவது யாழில் மையாவதம், வடக்கு கிழக்கி பிரிவு என்பதெல்லாம் வாழைப்பழத்தில் சிலர் எனக்கு ஏற்ற வரும் ஊசியே என்பதுதான் அவர் சொன்ன பதில். "வடக்கு கிழக்கு பிரிவினை என்று சில தீய சக்திகள் காட்ட முயல்வது ஆக்கிரமிப்பால் தமிழ் மக்கள் இந்த பட்டுக்கொண்டிருக்கும் சொல்லவொன்னாத துன்பங்களை மறைக்கவே. இதுதான் நான் கிழக்கில் நேரில் சென்று பார்த்த அனுபவம்"

 

 

அன்பு ஜெயபாலன்

அண்மையில் நான் மட்டக்களப்பு கிரானுக்கு சென்றேன். (கருணாவின் ஊர்) அங்கு பல மக்களுடன் பேசினேன். வீடு வீடாக சென்றோம். அனைத்து மக்களும் மனந்திறந்து பேசினார்கள். பிளவு படாத தமிழ் தேசியக் கூட்டமைப்பைதான் வலியுறுத்தினார்கள். வடக்கும் கிழக்கும் மனதால் நிலத்தால் பிரிவுபடாத பூர்வீக தாயகம் என்பதை கண்டேன். அவர்கள் சொன்னார்கள். ஆக்கிரப்பால் அவர்கள் எதர்கொள்ளும் நெருக்கடிகள் மிகுந்த கொடுமையானவை.

 

இனி விடுதலைக்கான கருத்து அரசியல் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கப்போகும் தேர்தல் குறித்து பெரும் அதிருப்தியும் பதற்றமும் காணப்படுகிறது. எமது மக்கள் நல்ல பாடங்களையும் இந்த தேர்தலில் புகட்டக்கூடும். அதற்கு நாமும் ஊடகங்களும் சரியான வழிகளை காட்ட வேண்டும்.

 

 

 

 

 

இதுதான் தீபன் செல்வனை திரும்ப முன்னால் கொண்டுவர முயலும் சதிகளின் அடிப்படை. அப்பட்டமாக மாவையில் தோற்ற்வர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி தீபனை கொண்டுவருகிறார்கள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.