Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனவான் அரசியலுக்கு வித்திடக்கூடிய முதலமைச்சர் வேட்பாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலத்த இழுபறியின் பின்னர் ஒருவாறு வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்த இலங்கை அரசாங்கம் முன்வந்திருக்கிறது. கூடவே முதலமைச்சர் வேட்பாளரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்து விட்டது.  தமிழர் உரிமைக்காகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்து உழைத்த எத்தனையோ பேர் இருக்கையில்; நீதி நேர்மை தெரிந்த சட்ட நுணுக்கங்களை நன்கறிந்த கல்வியாளரென்ற வகையில் முன்னாள் நீதியரசர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அனுபவப்பட்ட அரசியல் தலைமைத்துவத்தைக் காட்டிலும், படித்த, உயர் பதவி வகித்த ஒருவரையே  முதலமைச்சர் வேட்பாளராக வைக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவின் சாதக பாதகங்களை இப்போது எதிர்வுகூறுவது அவ்வளவு எளிதானதல்ல.  

கல்விக்கு மதிப்பளிக்கும் நம்மவர்கள் பெரும்பாலும் எந்தவொரு நிகழ்ச்சியானாலும் விழாவானாலும் ஒரு டாக்டரை, ஒரு எஞ்சினீயரை, சட்டவல்லுனரை, கல்வியாளரை அல்லது உயர் பதவியிலிருக்கும் ஒருவரை அழைத்து அவருக்கு முன்னுரிமை கொடுக்கும்  வழக்கமுடையவர்கள்.  அதே பாணியில் தற்போது மாகாண அரசியலில் தலைமைப் பொறுப்பும் ஒரு முன்நாள் நீதிபதியிடம் வழங்கப்பட இருக்கிறது.  இது சரியா தப்பா என்பதை காலம்தான் முடிவு செய்யவேண்டும்.  ஏனெனில் முதலமைச்சராக யார் வந்தாலும் அவரது செயற்பாடுகளை மட்டும்தான் எம்மால் கணிப்பீடு செய்ய முடியுமே தவிர அவருக்குப் பதிலாக இன்னொருவர் வந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று யாரும் கூறமுடியாது.  எனவே, தற்போது முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சட்ட அறிஞருக்குப் போதிய ஆதரவையும்  ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும் கொடுத்து அவரது திறமைகளையும் அறிவையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்திக்கொள்வதே தமிழர்களின் கடமையாகிறது.

வடமாகாணசபை அமைக்கப்பட்டு அதன் தலைமைப் பொறுப்பு நல்ல ஆளுமையும் செயற்றிறனும் கொண்டவோர் கல்வியாளரிடம் கையளிக்கப்படும்போது எமது தாயக அரசியலின் போக்கிலும் பலதிருப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.  பலகாலமாக நமது அரசியலில் காணப்படும் பாசிசத்தன்மைகொண்ட அணுகுமுறை நீதியும் நேர்மையும் கொண்டவோர் சட்டவாளனின் அரசியல் தலைமையின் கீழ் மதிப்பிழந்து போக வாய்ப்பிருக்கிறது.  சிங்கள பேரினவாதிகளாயிருந்தாலும், தமிழர் தரப்பின் தீவிர தேசிய வாதிகளாயிருந்தாலும், இஸ்லாமிய அடிப்படை வாதிகளாயிருந்தாலும், கனவான் அரசியல் (ஜெண்டில் மென் பொலிடிக்ஸ்) என்று வந்துவிடும்போது அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டே தீரவேண்டும்.  ஓர் நேர்மையாளனும் கல்வியாளனுமான தலைவனின் முன் இனத்துவேசத்தை ஆயுதமாகப் பாவித்து யாரும்பெரிய அரசியல் வெற்றிகளைப் பெற்றுவிடமுடியாது.  அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தகுதியானவொருவரைச் சரியான தருணத்தில் முதலமைச்சர் வேட்பாளராக்கியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் நெடுங்காலத் தொண்டர்களாய் தமிழரின் உரிமைகளுக்காக பல்வேறு நெருக்குவாரங்களுக் மத்தியில் உழைத்த தமிழ்த் தேசிய வாதிகளின் தலைமைத்துவப் பண்புகளையும் நாம் எளிதில் குறைத்து மதிபிட  முடியாது.  அரசியலில் புத்திஜீவித்தனத்தைக் காட்டிலும் தலைமைத்துவப் பண்புகள் மிகமுக்கியமானவை.  பல வெற்றிகரமான தலைவர்கள் பெரிய படிப்பாளிகளாய் இருந்ததில்லை. தமிழ் நாட்டில் எம்ஜிஆர், கருணாநிதி, காமராஜர் போன்றவர்கள் மக்கள் தலைமையை ஏற்று முதலமைச்சர்களாகப் பதவி வகித்திருக்கிறார்கள். வெற்றிகரமாகத் தமிழகத்தை வழிநடத்தியுமிருக்கிறார்கள்.  அவர்கள் கல்லூரி வாசல்களில் கல்விக்காக ஒருபோதும் காலடி வைத்தவர்களல்ல.

'காத்திருந்தவன் பெண்டிலை நேற்று வந்தவன் கொண்டு போனானாம்' என்ற கதைபோல நாமெல்லாம்  அரசியலில் இவ்வளவு காலமும் உயிரைப் பணயம் வைத்து உழைத்தும், மக்களுடனும் அரசியலுடனும் எந்தவித தொடர்புமில்லாத  ஒருவரைக் கொண்டுவந்து முதலமைச்சர் வேட்பாளராக்கியிருக்கிறார்களே என்ற மன உழைச்சல் எமது தமிழ்த் தேசியவாதிகள் பலரிடத்தில் ஏற்படவும் கூடும். அதில் நியாயமிருக்கிறது.  இந்தப் புதிய முதலமைச்சர் வேட்பாளர் எமது தேசியப் பிரச்சனைகளை எவ்வாறு கையாளப் போகிறார், அதை எவ்வாறு முன்கொண்டு செல்லப் போகிறார் என்று தமிழ்த் தேசியவாதிகள் சிந்திக்கவே செய்வர்.  ஏனெனில் இலங்கையின் இன்றைய நிலையில் கனவான் அரசியல் உகந்ததுதானா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.  மத்தியிலேயே அடாவடி அரசியல் நடந்து கொண்டிருக்கும்போது தீவின் ஒரு மூலையில் மட்டும் கனவான் அரசியலை அதுவும் அடக்கப்பட்ட சிறுபான்மைச் சமூகம் செய்ய முற்படுவதால் என்ன பலன்? எதிலும் விட்டுக்கொடுக்காத தீவிரத்தன்மை கொண்டவோர் அரசியல் அணுகுமுறையே இன்றெமக்குத் தேவை, என்றும் சிலர் எண்ணக்கூடும்.  

நாம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒத்தழையாத அரசியலைச் செய்து அதனை ஆயத வழி வன்முறைப் போராட்டத்திற்கு நகர்த்தி அதிற் கணிசமான வெற்றியும் பெற்றோம்.  பின்னர் விழுந்து மண்கவ்வினாலும் இன்றுவரை எமது தமிழ்த் தேசியவுணர்வும் தமிழீழத்தாயகத்திற்கான தாகமும் அடங்கிவிடவில்லை.  எமது இளஞ்சந்ததி தமிழீழ தேசமென்னும் அந்த நோக்கத்திலேயே குறியாக இருக்கிறது. இந்த நிலையில் பெரும்பான்மையினருடன் ஒரே சமபந்தி போசனம் செய்துகொண்டு அரசியலை அளாவளாவும் காலம் எமக்கு இன்னும் வாய்த்துவிடவில்லை.  சுதந்திரத்திற்கு முன்னர் சேர் பொன் ராமநாதன், சேர் பொன் அருணாசலம் போன்ற தலைவர்கள் இவ்வாறு சிங்களத் தலைவர்களுடன் ஒன்றாயிருந்து நட்புடன் நாட்டின் நலனுக்காகப் பாடுபட்டார்கள். கடைசியில் தமிழர்களை எண்பது வீத பெரும்பான்மையினரிடம் கையளித்துவிட்டுப் போய்விட்டார்கள்.  அத்தகைய தவறுகள் இனி வரப்போகும் கனவான் அரசியலில் ஏற்படுவதைத் தடுக்கவேண்டியது தமிழர் தலைவர்களின் மிகமுக்கிய கடமையாகும். ஏனெனில் நட்பும், உறவும், பெருந்தன்மையும், விட்டுக்கொடுப்பும்தான் அரசியலில் மிகவும் ஆபத்தானவை.  குறிப்பாகத் தமிழர் தமக்கென எந்தவிதமான பிரதேச, அரசியல் உரிமைகளுமில்லாத சிறுபான்மையினராக வாழும் இந்தக் காலத்தில் அதைத் தமக்குச் சாதகமாக்கியபடி எமது தாயகப் பிரதேசங்களைக் கபளீகரம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  கனவான் அரசியலுக்கு மிகவும் பெரிய சவாலாயிருக்கப் போவது எமது நிலத்தைப் பறிக்கும் பெரும்பான்மையினரின் முயற்சிகள்தான்.  அத்தகைய முயற்சிகளை ஏட்டிக்குப் போட்டியாக நின்று சமாளித்துத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை வடக்கில் முதலமைச்சராகப் போகிறவருக்கு உண்டு. கனவான் அரசியலில் இது சாத்தியாமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.  ஆனால் ஒரு சிறந்த தலைமையின் கீழ் மாகாண அரசு இயங்கிக் கொண்டிருக்கும்போது வலுக்கட்டாயமான குடியேற்றங்களையும் ஏனைய அடாவடித் தனங்களையும் செய்து வாலாட்ட பெரும்பான்மை இனவாதிகள்  சற்றுத் தயங்கவும் கூடும். அப்படியும் மீறி அரச ஆசீர்வாதத்தோடும் ராணுவ பலத்தோடும் தங்களது நாட்டாண்மையைக் காட்டச் சிலர் முயலவும்கூடும்.  அத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளை எவ்வாறு  வரப்போகும் தலைமை தடுத்து நிறுத்தப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இத்தகைய தருணங்களில் அரசினரையும், குடியேற்றக்காரரiயும், இராணுவத்தினரையும் தங்கள் நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலிருந்து வாபஸ் பெறவைக்க, மக்களை ஒன்றுபடுத்தி ஆர்ப்பாட்டங்களையும், உண்ணாவிரதப் போராட்டங்களையும் அறவழியில் நடத்திச்செல்லக் கூடிய ஆற்றல் பெரும்பாலும் அரசியலில் நெடுங்காலமாக இருந்து அனுபவப்பட்டவர்களிடமே இருக்கும்.  உயர்ந்த பதவிகளிலிருந்து அரசமட்டத்தினருடன் மிக மரியாதையாகப் பழகித் தமது கடமைகளைப் பொறுப்புடன் ஆற்றிய தற்போதைய முதலமைச்சர் வேட்பாளர் போன்ற அறிஞர்களுக்கு இந்த அரசியல் போராட்டங்களை உத்வேகத்தோடு முன்னெடுக்க முடியுமா என்பதுவும் கேள்விக்குறியே.   அதனையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆக, அரசியல் தலைமையென்பது லேசுப்பட்ட காரியமல்ல.  தொழில் ரீதியாக நேர்மையாளராக இருந்து பல பொறுப்புக்களையும் சுமந்து வெற்றிகண்ட புத்திஜீவிகள், பல்வேறு நெளிவு சுழிவுகளைச் செய்து, மக்களை விழிப்பூட்டி எழுச்சியுற வைத்து,  அவர்களை எப்போதும் தம்பக்கத்தில் வைத்திருக்க வேண்டிய அரசியலில் சோடை போவது சர்வசாதாரண விடயம்.  அதற்கு அவர்களைக் குறை கூறவும் முடியாது.  நேர்மையான கனவான் அரசியலை மட்டுமே அத்தகையோரால் செய்யமுடியும்.  

முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் மேற்கூறிய பக்கமே கொஞ்சம் இடிக்கிறது. மற்றும்படி முன்னாள் நீதியரசர் ஓர் தகுதியான வேட்பாளரே என்பதை மறுக்க முடியாது.  கூட இருப்பவர்கள் அவருக்குக் கொடுக்கக்கூடிய ஆதரவையும் உத்வேகத்தையும் கொடுக்கும்போது  செயற்றிறன் மிக்க அவரைப் போன்றோர் தமிழர்களுக்கு ஒளிமயமானவோர் எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

தற்போது வடக்கில் உருவாகவிருக்கும் மாகாணசபை எந்தவித அரசியலதிகாரங்களுமற்று, ஜனாபதியின் கட்டளைகளுக்குள் இயங்கும் ஓர் இராணுவ அதிகாரியான கவர்னரின் ஆளுகைக்குள்ளேயே  இயங்கவிருக்கிறது.  சில வேளை சாதாரண நபரெருவர் கவர்னராக்கப்பட்டாலும் அவரது அதிகாரங்கள் அப்படியேதான் இருக்கும். அத்தோடு காணி, பொலீஸ் அதிகாரங்களை அரசு வழங்கினாலன்றி சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்றவோ, சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தடுக்கவோ  மாகாண அரசுக்கு எந்தவித அதிகார பலமும் இருக்கப் போவதி;லை.  இன்றைய நிலையில் செயற்றிறன் மிக்கவோர் அறிஞனைச் சும்மா கொண்டு போய் முதலமைச்சருக்குரிய நாற்காலியில் ஓர் பொம்மையாக இருத்தி வைக்கவே தமிழினத்தால் முடியும்.  அந்தப் பொம்மைதான் தனக்குத் தானே உயிரூட்டம்பெற்றுச் செயற்படவேண்டும். அது எந்தளவு சாத்தியமென்று தெரியவில்லை.  எதிர்காலத்தில் இனங்களுக்கிடையிலான கசப்புணர்வுகள் நீங்கி பரஸ்பர நல்லெண்ணமும் நம்பிக்கையும் உதயமாகும்போது மாகாண சபைகளும் உரிய அரசியல் அதிகாரங்களுடன் இயங்கத் தொடங்கக்ககூடும்.  இத்தகைய நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் தற்போதைய முதலமைச்சர் வேட்பாளர் போன்ற அறிவு ஜீவிகள் தமது தலைமைத்துவத்தின் கீழ் ஸ்தாபிப்பது சாத்தியமானால் மட்டுமே மாகாண சபைகளின் எதிர்காலம் நல்லவிதத்தில் அமையும்.

இராணுவ அடக்குமுறை, நில அபகரிப்பு என்பவற்றோடு திட்டமிடப்பட்ட கலாச்சாரச் சீரழிவுச் செயற்பாடுகளையும் எதிர்கொள்ள வேண்டிய கடமை முதலமைச்சருக்கு உள்ளது.  கல்விச் சமூகமான யாழ்ப்பாணத்தின் இன்றைய கவலைக்குரிய நிலையைச் சரிவரப் புரிந்து கொண்டு தான் எதிர் நோக்கும் சவால்களை முதலமைச்சர் வேட்பாளர் தக்கமுறையில் கையாள்வார் என்று நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அமரர் செல்வநாயகம் அவர்களும் ஜென்டில்மென் அரசியல் தான் நடாத்தியவர்.அவருக்கும் காலி முகத்திடலில் அடி விழுத்ததாக அறிந்தேன்.

1974 ம் ஆண்டு கனவான்கள் நடத்தின தமிழர் ஆராட்ச்சி மாநாட்டுக்கு என்ன நடந்தது...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஜனநாயக அரசியலுக்கு இடமில்லை என்று சிலகாலம் கழித்து சொல்லுவார்கள்.. இப்படி காலம் ஓடிக்கொண்டேயிருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இன்றைய நிலையில் கனவான் அரசியல் உகந்ததுதானா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. மத்தியிலேயே அடாவடி அரசியல் நடந்து கொண்டிருக்கும்போது

இலங்கையில் இப்ப கனவான் அரசியலும் சரிவராது.அடாவடிஅரசியலும் சரிவராது புலிஎதிர்ப்பு அரசியலும்,அபிவிருத்தி அரசியலும் கொடிகட்டி பறக்கும் :D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

கனவான் அரசியல் செய்து.. இராமநாதன்.. பொன்னம்பலம்.. அருணாச்சலம் எல்லாம் என்னத்தை வெட்டிக்கிழிச்சவை..???!

 

அப்புறம் தந்தை செல்வா வந்து.. கத்த வேண்டி இருந்தது.

 

அவருக்குப் பிறகு பிரபாகரன்.. கத்த வேண்டி இருந்தது.. உரிமை உரிமைன்னு..!

 

இப்போ.. விக்னேஸ்வரன் - சம்பந்தன் கும்பல் விடும் தவறுகள் இன்னும் எத்தனை தலைமுறைக்கு கேடு என்பதைப் பற்றி ஆராயுங்க.

 

ஏன்னா.. தமிழரின் விடுதலை என்ற ஒன்றுக்காக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் உயிர் விட்டுள்ளதை மறந்து சிலர் கனவான் அரசியல் செய்யினமாம்.

 

ஆங்கில - ரோமன் சட்டத்தின் பிரதியாக உள்ள சிறீலங்காச் சட்டம் படித்த தமிழர்களால் தமிழ் மக்களுக்கு விடிவு வந்ததில்லை. ஒரு விமோசனமும் வந்ததில்லை. சட்டம் படித்த முட்டாள்களால் எம் மக்கள் அடிமைகளானதே நடந்தது..! அதனைக் கடந்து செல்ல வேண்டிய தேவை இன்றைய இளைய சமூகத்திடமே உள்ளது..! அவங்க தான் களத்தில இறங்கனும்.

 

துனிசியா.. எகிப்து.. லிபியா.. சிரியா கணக்கில இறங்கினால் தான் விடிவுன்னா.. ஒன்றும் செய்ய முடியாது.. இறங்கினால் தான்.. மிச்சம் சொச்சம் என்றாலும் சுதந்திரமா வாழலாம். :icon_idea:

 

 

துனிசியா.. எகிப்து.. லிபியா.. சிரியா கணக்கில இறங்கினால் தான் விடிவுன்னா.. ஒன்றும் செய்ய முடியாது.. இறங்கினால் தான்.. மிச்சம் சொச்சம் என்றாலும் சுதந்திரமா வாழலாம்.  :icon_idea:

லண்டனிலையா அல்லது இலங்கையின் வட -கிழக்கிலையா இறங்க்கப்போறீங்க,  ஏன் மற்றவர்களை பார்த்து காப்பி அடிக்கிறீங்க  :D   சொந்தப்புத்தி எங்கபோயிட்டுது  :icon_idea:  :icon_idea: 

இலங்கையில் துனீசியா, எகிப்து,லிபியா, சிரியா விளையாட்டுக்கு நாம் போகப்போவத்திலை. அது நடக்கவும் மட்டாது என்பது வேறு கதை. முன்னர் மோடையா கூட்டம் இந்தியாவிடம் அகபட்டபோது இப்படித்தான் போது நாம் அவர்களை விடுவித்துவிட்டு நாம் இன்னமும் அடிமைகள். அவர்கள் இந்தியாவிடம் சுதந்திரம் வாங்கிவிட்டார்கள்.

 

நமது பாதை ராஜாதந்திர போர். நம்மை தோற்கடித்த நாடுகள் அதற்கு பொறுப்பு கூறியாக வேண்டும்.

 

கொஞ்சம் சிந்தித்து எழுதுங்கப்பா. இனியும் சிங்களவனை விடுவிக்கத்தான் துடிக்கிறீர்கள். எகிப்தில், சியாவில், லிபியாவில் எதுவும் சரிவரவில்லை. துனீசியாவில் உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாது. எகிப்தின் முதல் ஜனநாயக எழுச்சிக்கு பல சிறுபான்மை இனங்கள் எதிர்ப்பாக இருந்தார்கள். இன்றை ஜனநாயகத்தை விழுத்திய ஆமிப் புரடசிக்கு அவர்கள் அப்பட்டமாக ஆதரவு கொடுக்கிறார்கள். எப்படிப்பட்ட நாடுகளுக்கு மக்கள் எழுச்சி நல்லது என்பதை அறியாமல் அதிலா போய் விழுவார்கள்? 1960 களின் தமிழர் எழுச்சியாக நடந்த சத்தியாக்கிரகத்திற்கு என்ன நடந்தது?

 

சர்வாதிகாரியாக இறங்கப்போவதில்லாத மகிந்தவை இறக்கிவிடும் படி நெடுக்கருக்கு யரோ பணம் கொடுக்திருக்கிறார்களாக்கும். நெடுக்கர் போய் வாங்கிய பணத்துக்கு ரணிலை விடுவிக்கட்டும்.  :lol:

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.