Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கினில் வித்தியாதரன் -தர்சானந் தலைமையில் மூன்றாவது அணி; உதயன் பத்திரிகை ஆதரவை வழங்க முடிவு!

Featured Replies

வடக்கு மாகாணசபை தேர்தலின் முக்கிய திருப்பு முனைதர்சானந் யாக  பலம் வாய்ந்த மூன்றாவது அணியொன்று சுயேட்சையாக களமிறங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரனை முன்னிறுத்தி கூட்டமைப்பினில் நிராகரிக்கப்பட்ட தரப்புக்கள் ஒன்றிணைந்து இத்தேர்;தலில் சுயேட்சையாக களமிறங்கவே முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு தொடர்பினில் அதிருப்தி அடைந்திருக்கும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் உதயன்  பத்திரிகை குறித்த சுயேட்சைக்குழுவிற்கு முழுமையான ஆதரவை வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையினில் வித்தியாதரன அவசர அவசரமாக சந்திப்புக்களை நடத்த கொழும்பு சென்றுள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்துமாறு வித்தியாதரன் கோரியிருந்தார்.எனினும் இறுதியினில் அவருக்கு வேட்பாளராகப்போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் கூட கிட்டியிருக்கவில்லை.அவ்வாறு கூட்டமைப்பினில் போட்டியிட விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பலரையும் உள்ளடக்கி சுயேட்சைக்குழுவாகப்போட்டியிட முயற்சிகள் தொடர்வதாக கூறப்படுகின்றது.இதனிடையே மாகாண சபை தேர்தலை பகிஸ்கரிக்கும் முடிவினில் இருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவைப்பெற்றுக்கொள்ள இத்தரப்புக்கள் பேச்சுக்களை நடத்திவருவதாகவும் மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.

http://goldtamil.com/?p=3505

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாதரனுக்கு இந்தப் பதவி மேல் நீண்ட காலமாக ஒரு கண்.மாவையை முன்னிறுத்தி அதனைச் செய்யப் பார்த்தார்.சம்பந்தர் சமத்திரனின் சர்வாதிகாரம் அதனைத்தடுத்தது. உண்மையில் தமிழ்மக்களின் நலன் குறித்துச் சிந்திப்பவராக இருந்தால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை முதல்வர் வேட்பாளராக்கி அந்த அணியில் இணைந்து போட்டியிட யோசிக்கலாம்.ஆனால் அந்த அணி இந்தத் தேர்தலில் இருந்து ஒதுங்குவதாக முன்னரே அறிவித்துவிட்டது. வாக்குகள்' பிளவுபடாமல் கூட்டமைப்புக்குச் சேர வேண்டும் என்ற ஒரு காரணமும் (கூட்டமைப்பின் வெற்றி உறுதியான நிலையில்) இந்தத் தேர்தலால் தமிழ்மக்களுக்கு உதுவும் கிடைக்கப் போவதில்லை என்ற மற்றொரு காரணமும் இருக்கின்றது.வித்தியாதரன் செய்ய வேண்டிய வேலை சம்பந்தர் சுமத்திரன் மேல் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து அவர்களை நீக்கி விட்டு தமிழத்தேசிய மக்கள் முன்னணியை அதனுடன் இணைத்து ஒரே கூட்டமைப்பாக போட்டியிட வைப்பதே அதை முதலில் செய்து விட்டு தேர்தலைப் பற்றிச் சிந்திப்பது.உசிதம்.முன்னைய பாரளுமன்றத்தேர்தலில் கஜேந்திரகுமார் அணியை ஒதுக்கி விட்டு தனது அதுவரை அரசியில் இல்லாத மைத்துனரை எம்பியாக்கும் வரை வேடிக்கைப் பார்த்து விட்டு இப்போது கொடுக்குக் கட்டுவது உசிதமாகப் படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்தனமான  முடிவு

தமிழரின் கோபத்துக்கு  ஆளாகப்போகிறார்

கூர்  பார்க்கும்   தருணம்  இதுவல்ல............ :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துத் தளங்களிலும் ஒன்றுபட வேண்டிய காலம் இது. கூர்பார்க்கும் காலமல்ல என்பதை மிகப்பெரும் ஜம்பவான்களோடு பல்வேறு உரையாடல்களை நடாத்திய பட்டறிவைப் பெற்ற வித்தியவர்களுக்குக் கூறியா புரியவைக்க வேண்டும். தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் முடிவுகூடத் தமிழரது நலன் சார்ந்த முடிவேயாகும். எனவே புதிதாக முளைக்கும் தமிழணிகள் சிந்திக்க வேண்டும். மாகாணசபை தீர்வல்ல. ஆனால் அனைத்துலகுக்கு ஒரு தீர்க்கமான பதிலைச் சொல்லும் களம் மட்டுமே. களத்தில் எமது ஒற்றுமையைக் காட்டுவதே இன்றைய தேவை.

வித்தியவர்கள் சிந்திப்பாராக!

இது உதயன் எல்லோரையும் விட முன்னால் ஓடியதால் நடந்தது. முந்னால் ஓடி புரட்சி செய்வது பெரிய வீரவேசம் ஆகாது. இலங்கையில் அது கடைசியில் அது துரோகியாக மாற்றுகிறது. தேசிய முன்னணி இதை உணர்ந்த்து நிபந்தனை இல்லாமல் கூட்டமைப்புடன் சேரவேண்டும். உதயனின் ஆதரவை தேசிய முன்னணி பெற்றுதாயின் அது ஒரு நாளில் அவர்களை தயா மாஸ்டரின் கீழ் கொண்டுவரும்.

இப்படியான அரச அராஜரீகங்கள் வெளிநாடுகளுக்கு வெளிக்காட்டப்பட வேண்டும். சந்திர சிறியின் பொய்வழக்குடன் கட்சி மாறிய உதயன் இது வரை வடித்தது நீலிக் கண்ணீராகப் போகிறது.

ஆனால் அசாத் சலி அளவு துணிச்சலும், ஆதரவும் சரவணபவனுக்கு இல்லாதது வருந்தத் தக்கது. நிச்சயம் முகில் கூட்டம் வெளிக்கும் போது அசாத் சாலி இலங்கை அரசின் வன்முறைகளை வென்ற கதை சரித்திரத்தில் பொறிக்கப்படும். இது வரையில் தமிழ், சிங்கள, முஸ்லீம் அரசியல்வாதிகளில் அரசால் இலக்கு வைக்கபட்ட பின்னர் வெற்றி பெற்றவர் அவர் ஒருவரே. சிறீதரன் கூட இலகுவாக அரசால் அடக்கப்பட்டுவிட்டர்.  உள்ளே போக முதல் தனது பணம் போகிறதே என்று தலயில் கை வைக்கிறார் சரவணபவன். ஆனால் கனகரத்திணம் எவ்வளவற்றையோ தாங்கியவர். 

சுயாதீனமாக  உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தி...!   

யாழிலை இருக்கிற ஆக்களாவது பொறுமை காக்கலாம்....   :D  :D  :D

சுயாதீனமாக  உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தி...!   

யாழிலை இருக்கிற ஆக்களாவது பொறுமை காக்கலாம்....   :D  :D  :D

வித்தியாதரனின் தேர்தல் முன்னெடுப்புக்கள் தான் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை. அவர் தேர்தலில் நின்றாலும் என்ன நடக்கும் என்பதில் மாற்றமில்லை.  எனவே அதை பற்றி நாம் அதிகம் கவலைப்படவில்லை. சரவணபவன் மிகப்பெரிய துரோகியாக இடம் இருக்கு.  இதை உழைத்தது உதயன்.

ஆனால் போராட்டத்தில் ஒற்றுமையாக எல்லோரும் ஒரே நேரத்தில் போக வேண்டும். இது பஞ்சதந்திர கதைகளில் தலைமைப் புறா கதாபாத்திரத்தால் இரண்டாம், மூன்றாம் வகுப்புக்களில் சொல்லி வைக்கப்படும் தத்துவம். 

சும்மா பதிவுக்காற விட்ட கரடியை நம்பி செய்தி வெளியிட்ட வேறை ஊடகங்களின் நிலைதான் உங்களுக்கும்... 

உதயன் கூட்டமைப்புக்கு எதிராக எந்த செய்தியையும் வெளிவிடவில்லை...   அதுக்கு ஆதாரமும் இல்லை... 

தவிர கொழும்பில் இருந்து  வடக்கு கிழக்கு தமிழருக்கு அரசியல் செய்யும் கூட்டமைப்பை விட  வடக்கில் இருந்து  தமிழ் மக்களின் நாடியை உதயன் நண்றாக அறிந்து வைத்து இருக்கின்றது...  

இது 1980 களில் இருந்து  இந்திய இராணுவம், அவர்களின் ஒட்டுக்குழுக்கள், புலிகள், இலங்கை இராணுவம் , அவர்களின் ஒட்டுக்குழுக்கள் எல்லாரையும் சமாளித்து  திடமாக கருத்து சொல்லும் ஒரு ஊடகம்...

அதைத்தான் தொடர்ந்து எதிர் பார்க்கிறோம்.

உதயன் ஒரு பத்திரிகை. தன்னைபற்றி ஒருமாதமாக வெளிவரும் அவதூறுகளை கடுமையாக எதிர்க்க வேண்டும். யாழில் ஆறு மதங்களுக்கு முன்னர் "மாடு மேய்க்கவா வன்னி" என்ற கவிதை விடையத்தின் உதயன் தன் பெயரைக் கப்பாற்றியது. அதை இதிலும் செய்ய வேண்டும்.

இண்டைக்கு மட்டும் இல்லை ... நீண்டகால வருடங்களாக பலருக்கு உதயம் மீதிருப்பது காள்ப்புணர்ச்சி... காரணம் இவ்வளவு இக்கட்டிலும் தமிழ் மக்களுடன் தடை இல்லாமல் செயற்பட்டு உண்மை நிலையை மக்களுக்கு கொண்டு செல்வது...

அண்மையிலையும் உதயன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது... கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாது அவதூறுகள் செய்தவர்கள் தோற்றதனால் வந்த கோவத்தில் உச்ச கட்டம் அது...

இங்கைஅர்சுண் முதல் நீங்கள் வரை  உண்மையை அறிய முயலாது  புரளிகளை நம்புவது ஆச்சரியம்... 

யார் எதை சொன்னாலும் ஏன் எதற்காக சொல்கிறார்கள் என்பதை அறிவதுதானே பகுத்தரிவு.... ??? 

சுயேச்சை குழுவாக போட்டியிடும் எண்ணம் எனக்கு கிடையாது- ஊடகவியலாளர் வித்தியாதரன்

Published on July 31, 2013-8:46 am   ·   No Comments

vithy-150x150.jpgவடமாகாணசபை தேர்தலில் சுயேச்சைக்குழுவாக போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது என்றும் நான் சுயேச்சைக்குழுவாக போட்டியிடுவதற்கு முயற்சி செய்வதாக வெளிவந்த செய்திகளில் எந்த வித உண்மையும் கிடையாது என ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் தினக்கதிருக்கு தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்காததால் வித்தியாதரன் சுயேச்சை குழுவாக போட்டியிட உள்ளார் என சில அநாமதேய இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.   இது தொடர்பான உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக வித்தியாதரனுடன் நாம் நேரடியாக தொடர்பு கொண்ட போது அவ்வாறான செய்திகளை வித்தியாதரன் அடியோடு மறுத்தார்.

நான் பதவி ஆசை பிடித்தவன் அல்ல, பதவி ஆசைக்காக தமிழ் மக்களுக்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன் என்றும் வித்தியாதரன் தெரிவித்தார்.  சுயேச்சையாக போட்டியிடுவதற்கோ அல்லது தமிழரசுக்கட்சி தவிர்ந்த வேறு அரசியல் கட்சி ஒன்றில் போட்டியிடுவதற்கோ ஒரு போதும் முயற்சிக்கவில்லை. அவ்வாறு வெளிவந்த செய்திகள் அனைத்தும் பொய் என வித்தியாதரன் தெரிவித்தார்.

அதேபோன்று யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் செயலாளர் ப.தர்சானந் சுயேச்சைக்குழுவில் போட்டியிடப்போவதாக வெளிவந்த செய்திகளில் எந்த வித உண்மையும் இல்லை என தர்சானந் தெரிவித்துள்ளார்.   நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட இளைஞரணித்தலைவர் பா.கஜதீபனின் தனிப்பட்ட வெற்றிக்காகவும் உழைக்கப்போவதாகவும் தர்சானந் தெரிவித்துள்ளார்.

பதவி மோகம் கொண்டு சுயேச்சையாக போட்டியிடப்போவதாக சில தீய சக்திகள் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் தர்சானந் தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.thinakkathir.com/?p=51505#sthash.OrBOPhq6.dpuf

முட்டாள்தனமான  முடிவு

தமிழரின் கோபத்துக்கு  ஆளாகப்போகிறார்

கூர்  பார்க்கும்   தருணம்  இதுவல்ல............ :(  :(  :(

ஆச்சரியம்....... !!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தலைவிதியை இனி கடவுள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று அன்று தந்தை செல்வநாயகம் சொன்ன கருத்து இப்போதைய அரசியல் சூழலுக்கே பொருத்தம்.  :(

இண்டைக்கு மட்டும் இல்லை ... நீண்டகால வருடங்களாக பலருக்கு உதயம் மீதிருப்பது காள்ப்புணர்ச்சி... காரணம் இவ்வளவு இக்கட்டிலும் தமிழ் மக்களுடன் தடை இல்லாமல் செயற்பட்டு உண்மை நிலையை மக்களுக்கு கொண்டு செல்வது...

அண்மையிலையும் உதயன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது... கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாது அவதூறுகள் செய்தவர்கள் தோற்றதனால் வந்த கோவத்தில் உச்ச கட்டம் அது...

இங்கைஅர்சுண் முதல் நீங்கள் வரை  உண்மையை அறிய முயலாது  புரளிகளை நம்புவது ஆச்சரியம்... 

யார் எதை சொன்னாலும் ஏன் எதற்காக சொல்கிறார்கள் என்பதை அறிவதுதானே பகுத்தரிவு.... ??? 

அருமையான பகுதறிவு. ஆனால் நீங்கள் எழுதியதை வாசிக்கவில்லை. 

உதயன் தன மீது வந்த வசைகளை முன்னர் எதிர்த்தது மாதிரி இனியும் எதிர்க்க வேண்டும். தேர்தலில் கூட்டமைப்புக்கு முழுமனதுடன் செயலாற்ற வேண்டும்.

Edited by மல்லையூரான்

அருமையான பகுதறிவு. ஆனால் நீங்கள் எழுதியதை வாசிக்கவில்லை. 

உதயன் தன மீது வந்த வசைகளை முன்னர் எதிர்த்தது மாதிரி இனியும் எதிர்க்க வேண்டும். தேர்தலில் கூட்டமைப்புக்கு முழுமனதுடன் செயலாற்ற வேண்டும்.

நல்ல விளக்கம் கொண்டவர்... 

எல்லாமே பேய் எனும் போது  அதில் கொஞ்சம் நல்ல பேய் எது அது தான் தமிழ் மக்களின் பிரச்சினை... உதயன் சொல்ல வருவதும் அதுவே....!  

கூட்டமைப்பு  தமிழ் மக்களின் விடிவுக்காக பாடும் எண்று  நம்புபவர்கள் பாடுபடட்டும்...  உங்களை போண்ற்வர் போல....  

எனது நேரம் எப்போதும் விரையம் ஆக்க பட மாட்டாது...  

கட்டுகதைகளை கூட ஆராய முடியாத உங்களால் நிச்சயம் தமிழர்களின் விடிவுக்கு பாடு பட முடியும் எண்று நம்புகிறேன்...  :icon_mrgreen:

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.