Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெலுங்கானா செழுமையுடன் சிறக்க வாழ்த்துகள்-நாம் தமிழர் கட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

seeeee.gif

ஆந்திர மாநிலத்தில் கனிம வளமும், நீர் வளமும் அதிகமாக இருந்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாக இருந்த தெலுங்கானா பகுதியை, அப்பகுதி மக்களின் ஏகோபித்த கோரிக்கை ஏற்று தனி மாநிலமாக உருவாக்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க முடிவாகும். 

1956இல் மொழி வழி இனங்களின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்த மாநில மக்களின் மொழி, இன அடையாளங்கள், பண்பாடு ஆகியன காப்பாற்றப்பட வேண்டும், அம்மாநிலத்திற்குட்பட்ட பகுதிகள் பொருளாதார மேம்பாடு பெற தனி மாநில அமைப்பு அவசியம் என்கிற அடிப்படையில்தான் இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆந்திரத்தைப் பொறுத்தவரை, விசால ஆந்திரா என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடிய தெலுங்கானா போராட்டமே ஆந்திரா என்கிற மாநிலம் அமையக் காரணமானது. ஆனால், கனிம, நீர் வளங்கள் கொண்டிருந்த தங்களுடைய பகுதி ஆந்திர ஆட்சி, அரசு நிர்வாகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருவதால், ஆந்திரத்தின் வறுமைப் பகுதியாக தெலுங்கானா இருப்பதாக கூறியே, தெலுங்கானா தனி மாநிலப் போராட்டம் நடந்தது.

இந்தியாவிலுள்ள பொருளாதார ரீதியில் பிற்பட்ட பகுதிகளை பற்றி ஆய்வு செய்த மத்திய அரசுக் குழு, 2009-10ஆம் ஆண்டுகளில் அளித்த அறிக்கையின்படி, ஆந்திரத்தின் 13 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக இருந்தது. அதில் பத்து மாவட்டங்கள் தெலுங்கானா பகுதிக்கு உட்பட்டவையாகும். அந்த அடிப்படையில்தான் ஹைதராபாத், அடிலாபாத், மேடக், கம்மம், கரீம் நகர், மெஹபூப் நகர், நல்கொண்டா, நிசாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் ஆகிய 10 மாவட்டங்களும் சேர்ந்த தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கானா தவிர்த்த ஆந்திர மாநிலத்திற்கு புதிதாக ஒரு தலைநகர் உருவாக்கப்படும்வரை ஹைதராபாத்தை இரு மாநிலங்களுக்குமான பொதுத் தலைநகராக்க செய்யப்பட்டிருக்கும் முடிவும் வரவேற்கத்தக்கதே. தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்பது ஏற்கப்பட்டிருப்பது, ஆந்திராவின் இதர பகுதி மக்களுக்கு ஒரு ஏமாற்றமானதுதான் என்றாலும், ஹைதராபாத் தெலுங்கானாவின் மையப்பகுதியில் உள்ளதால், ஆந்திரத்திற்கென்று ஒரு தனித்த தலைநகர் உருவாக்கப்படுவதே நல்லதாகும்.

தெலுங்கானா உருவாக்கத்தை எதிர்க்கும் ஆந்திர அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை கைவிட்டு, தெலுங்கானாவுடன் சகோதர மனப்பாங்குடன் எப்போதும் போல் செயல்பட வேண்டும். தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கான நியாயம் எப்போதோ ஏற்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் பல உயிர்களைக் குடித்துவிட்டது. இதற்குமேலும் அந்த நிலை தொடர ஆந்திர, தெலுங்கானா மக்களும் அரசியல் கட்சிகளும் அனுமதிக்காமல், வெவேறு மாநிலத்தில் இருந்தாலும் ஒரே தேசிய இனம் என்ற ஒற்றுமையுடன்

வாழ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வாழ்த்தி விரும்பி கேட்டுக்கொள்கிறது.

நாம் தமிழர் கட்சிக்காக,

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தனி நாடானால் தான் செழுமையுடன் சிறக்க முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கானா செழுமையுடன் சிறக்க வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கானா கொல்டிகளுக்கு வாழ்த்துக்கள்..! :D இதர கொல்டிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..! :(

  • கருத்துக்கள உறவுகள்

எலேய், பிரிந்துதான் போறீங்க...தமிழகத்திலிருந்து புடுங்கியதை கொடுத்துவிட்டு விலகிச் செல்லுங்கள்..அப்புறம் ஒருவருக்கொருவர் கூவுங்கள், "ஹைதராபாத் மனதே"!, அதுதான் உங்களுக்கு வாய்வந்த கலையாச்சே!! :lol:

எலேய், பிரிந்துதான் போறீங்க...தமிழகத்திலிருந்து புடுங்கியதை கொடுத்துவிட்டு விலகிச் செல்லுங்கள்..அப்புறம் ஒருவருக்கொருவர் கூவுங்கள், "ஹைதராபாத் மனதே"!, அதுதான் உங்களுக்கு வாய்வந்த கலையாச்சே!! :lol:

 

சத்தம் போடாதீங்கோ  இப்ப மெட்ராசை கேட்டாலும் கேப்பார்கள்...    

 

அப்பவும் பிரச்சினை இல்லை  தமிழர் திருப்பதியை திருப்பி கேக்கலாம்...    :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எலேய், பிரிந்துதான் போறீங்க...தமிழகத்திலிருந்து புடுங்கியதை கொடுத்துவிட்டு விலகிச் செல்லுங்கள்..அப்புறம் ஒருவருக்கொருவர் கூவுங்கள், "ஹைதராபாத் மனதே"!, அதுதான் உங்களுக்கு வாய்வந்த கலையாச்சே!! :lol:

 

 

சந்தர்ப்பம்  வரும்போது  போட்டு   உடைத்து விடணும்

அப்படியே  பட்டியலையும் வெளியிடுங்கள் ராஐவன்னியன்

சித்தூர் மாவட்டம் ,பவபநேறு,கங்குந்தி,காரவேட்டி நகரம்,திருப்பதி  போன்ற பகுதிகள் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் அப்பிடி தானே ராஜவன்னியன் அண்ணா  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாய்நிலங்கள் பறிபோன வரலாற்றின் சுருக்கம்

 

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, தமிழ்நாடும், ஆந்திரமும் ஒன்றாக இணைந்த `சென்னை மாகாணம்' இருந்தது. தமிழ்நாட்டின் மேலும் சில பகுதிகள், 'திருவாங்கூர்-கொச்சி' சமஸ்தானத்தில் அடங்கியிருந்தன.

சங்க கால இலக்கியங்களில், தமிழ் நாட்டின் வட எல்லை, திருவேங்கடம் (திருப்பதி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளையர் ஆட்சியில் கூட, 1911 ஏப்ரல் வரை, திருப்பதி மலை, வட ஆற்காடு மாவட்டத்தில்தான் இருந்து வந்தது.

ஆனால், தமிழகத்திற்கும், ஆந்திரத்திற்கும் எல்லைச் சிக்கலைத் தோற்றுவிக்கும் எண்ணத்துடன், வடஆற்காடு மாவட்டத்தில் இருந்து சித்தூர், கங்குந்திக்குப்பம், திருத்தணி, புத்தூர், பல்லவனேரி, காளகத்தி, சந்திரகிரி (திருப்பதி) ஆகிய தாலுகாக்களையும், தெலுங்கு பேசப்படும் கர்நூல் மாவட்டத்தில் இருந்து மதனப்பள்ளி, வாயல்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களையும் பிரித்து சித்தூர் மாவட்டம் என்ற பெயரில் இரு மொழி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள்.

சித்தூர் மாவட்டம் அமைக்கப்பட்ட பிறகும், பல ஆண்டுக்காலம் வேலூர்தான் அதன் தலைநகரமாக இருந்தது. திருப்பதி வைணவத் திருத்தலமாக இருந்ததாலும், ஆந்திரர்களுக்கு அதுவே பிரதானக் கோவிலாக விளங்கியதாலும், மெல்ல மெல்ல ஆந்திரர்களின் ஆதிக்கத்திற்குச் சென்று விட்டது.

 

இதையெல்லாம் உணர்ந்திருந்த ம.பொ.சி., இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு மறுநாள் (16-8-1947) திருப்பதிக்குத் தொண்டர் படையுடன் சென்று, "திருப்பதி தமிழர்களுக்கே உரியது" என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். "கிராமணியே, திரும்பிப் போ" என்று ஆந்திரர்கள் எதிர்ப் போராட்டம் நடத்தினார்கள்.

 

இதைத்தொடர்ந்து, "திருப்பதி யாருக்குச் சொந்தம்? தமிழர்களுக்கா, ஆந்திரர்களுக்கா?" என்ற விவாதம் எழுந்தது. "திருப்பதி தமிழ்நாட்டுக்கே சொந்தம்" என்று ம.பொ.சி. தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்."தமிழர்களுக்கு திருப்பதி கிடைக்காது. தமிழர்களிடமிருந்து சென்னையையும் பறிப்போம்" என்றார், ஆந்திரத் தலைவர், என்.ஜி.ரங்கா. அவர் சொன்னது உண்மையாயிற்று.

 

சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவைப் பிரித்து, தனி ஆந்திர மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோது, சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும், "மதராஸ் மனதே" என்

என்று ஆந்திரர்கள் கோரினர்.இதற்கு எதிராகத் தமிழகமே பொங்கி எழுந்தது. "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கினார், ம.பொ.சி.

 

"சென்னை நகரம், தமிழ்நாட்டுக்கே சொந்தம்" என்று சென்னை மாநகராட்சியும் தீர்மானம் நிறைவேற்றியது.சென்னை நகரம் தங்களுக்குக் கிடைக்காது என்பதைத் தெரிந்து கொண்ட ஆந்திரர்கள், சில காலத்திற்கு தற்காலிகமாக சென்னையைத் தங்கள் தலைநகராக வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். அந்தக் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இந்த நிலையில், சித்தூர் மாவட்டம் முழுவதும் ஆந்திராவுக்கு போய்விடக்கூடிய நிலைமை உருவாயிற்று. அதை எதிர்த்து 1953 மே மாதத்தில் திருத்தணியில் ம.பொ.சி. மறியல் போராட்டம் நடத்தினார்.

 

மறியல் செய்தவர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். எல்லையை மீட்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்று, ம.பொ.சி. அறிவித்திருந்தார். முதல்வர் ராஜாஜி விடுத்த வேண்டு கோளின்படி, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. திடீரென்று திருத்தணியில் வாழும் தமிழ் இளைஞர்கள், ஆந்திரர்களைக் கண்டித்து வன்முறையில் இறங்கினர். ஊராட்சி மன்ற கட்டிடத்துக்குள் புகுந்து வானொலிப் பெட்டியை உடைத்தனர்.ரெயில் நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதனால் போலீசார் தடியடி நடத்தினர். வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று ம.பொ.சி. வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து அமைதி திரும்பியது.

 

வடஎல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மத்திய அரசு முன்வராததால், ஜுலை 2_ந்தேதி திருத்தணிக்கு ம.பொ.சி. சென்றார். தடை உத்தரவை மீறி, மறுநாள் மறியல் செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் அவருக்கு 6 வார ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

 

சுதந்திரப் போரில் 6 முறை சிறை சென்ற ம.பொ.சி., இப்போது 7வது முறையாக சிறை சென்றார். இதற்கிடையே, பிரதமர் நேருவுடன் அன்றைய முதல்வர் ராஜாஜி பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், "சித்தூர் மாவட்டத்தில் தமிழர் கோரும் தாலுகாக்கள் பற்றி விசாரிக்க, விரைவில் எல்லைக் கமிஷன் அமைக்கப்படும். இதற்காகப் போராட்டம் அவசியம் இல்லை" என்று நேரு அறிக்கை விடுத்தார்.

 

அதைத்தொடர்ந்து 5 நாள் சிறைவாசத்துக்குப் பின் ம.பொ.சி. விடுதலையானார். 'திருவாங்கூர் - கொச்சி' சமஸ்தானத்தில் இணைந்திருந்த தமிழ்ப் பகுதிகளை மீட்க, 1954 ஜுன் மாதத்தில் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நேசமணி தலைமையில் போராட்டம் நடந்து வந்தது. இந்தப் போராட்டத்தில் நேசமணி சிறை சென்றார். சிறையிலிருந்த நேசமணி, ம.பொ.சிக்கு தந்தி அனுப்பினார். மூணாறு விரைந்தார், ம.பொ.சி. அவர் முன்னிலையில் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்து நடந்தது.

 

ஆகஸ்ட் 11ந் தேதி, தென் திருவாங்கூரில் உள்ள கல்குளம் தாலுகாவில், நேசமணி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாபெரும் ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலத்தைக் கலைக்க மலபார் ரிசர்வ் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 தமிழர்கள் உயிரிழந்தனர். இதனால் 'திருவாங்கூர் - கொச்சி' மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து 1955 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் பட்டம் தாணுப்பிள்ளையை முதல்வராகக் கொண்ட பிரஜா சோசலிஸ்டுக் கட்சி மந்திரிசபை கவிழ்ந்தது. எல்லைகளைத் திருத்தி அமைக்க மத்திய அரசு அமைத்த 'பசல் அலி கமிஷன்' 1955 இறுதியில் தனது தீர்ப்பை மத்திய அரசிடம் வழங்கியது.

 

திருவாங்கூர்-கொச்சியில் உள்ள தமிழ் பேசும் தாலுகாக்களான செங்கோட்டை, கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய ஐந்து தாலுகாக்களை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கமிஷன் தீர்ப்புக் கூறியது.

 

75 சதவீதம் தமிழர்கள் வாழும் தேவி குளம், பீர்மேடு தாலுகாக்களை (இடுக்கி மாவட்டம்) தமிழகத்துடன் சேர்க்க கமிஷன் மறுத்துவிட்ட போதிலும், இந்தியாவின் தென் எல்லையான குமரிமுனை தமிழகத்திற்கு கிடைத்தது.

 

தமிழக, ஆந்திர எல்லைப் பிரச்சினையைச் சமரசப் பேச்சு நடத்தித் தீர்த்துக் கொள்வதாக இரு மாநில அரசுகளும் கூறிவிட்டதால், அதுபற்றிப் பசல் அலி கமிஷன் முடிவு எதையும் கூறவில்லை. தமிழக, ஆந்திர அரசுகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படா விட்டால் மீண்டும் எல்லைக் கமிஷன் அமைக்கவேண்டும் என்று நீதிபதி பசல் அலி குறிப்பிட்டிருந்தார்.

 

எல்லைப் பிரச்சினையில் தமிழக, ஆந்திர அரசுகள் இடையே உடன்பாடு ஏற்படாததால் படாஸ்கர் தலைமையில் மீண்டும் கமிஷன் அமைக்கப்பட்டது. 1-4-1960ல் படாஸ்கர் வழங்கிய தீர்ப்பின்படி, திருத்தணி தாலுகா முழுவதும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது. புத்தூர், சித்தூர் தாலுகாக்களில் இருந்து சில கிராமங்கள் மட்டுமே தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டன.

 

 

செய்தி மூலம்: மாலைமலர்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பூர்வீக நிலத்தை ஏமாளித்தனமாக கேரள மாநிலத்தாரிடம் கையளித்துவிட்டு, தமிழக 'பேக்கு' அரசியல்வியாதிகள் அதற்கு சமாதானமும் கூறியுள்ளனர் பாருங்கள்:

1950-களில், மொழிவழி மாகாணப் பிரிவினை சமயத்தில் தமிழக பகுதிகளப் பற்றி எழுந்த குரல் இது.

 

தேவிகுளமும், பீர்மேடும் தமிழகத்துடன்தான் இணைக்கப்படவேண்டும் என்று ம.பொ.சி. குரல்கொடுத்தார். ஆனால்,  "குளமாவது, மேடாவது, எல்லாம் இந்தியாவுக்குள்ளதானே இருக்குண்ணேன்" என்று பேசினார் பெருந்தலைவர் காமராஜர்.

 

'பணிக்கர் பேசினார், அங்கு மலையாளிகள்தான் அதிகம், கேரளத்தோடுதான் சேர்க்கணும்னு சொன்னார். சரின்னுட்டேன்' என்றார் பெரியார்.

  • கருத்துக்கள உறவுகள்

தெலுகானா பிரிப்பு ஈழத்தின் கிழக்கு மாகானப் பிரிப்புக்கு நிகரானது. 

 

ஆந்திர அரசில் தெலுங்கானா சுயாட்சிப் பிரதேசமாக உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். கிழக்கு ஈழத்தின் மாகாணத்துக்கும் இது பொருந்தும். மொழிவாரி மாநிலங்களைப் பிரிப்பது  மைய ஆதிக்க சக்திகளின் நெடுநாலைய விருப்பமாகும். . இந்தி பரப்புக்கு வெளியே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவது ஆபத்தான ஒரு முன்நிகழ்வு.வட தமிழகத்திலும் இத்தகைய ஒரு கோரிக்கை முக்கியமான வடதமிழக சாதி/சமூக கட்ச்சி ஒன்றால் முன்வைக்கப்பட்டது இங்கு நினைவு கூரத்தக்கது.

 

 

 

 ( மேலும் வாசிக்க யாழ் ) http://www.yarl.com/forum3/index.php?showtopic=126559

Edited by poet

அண்டை மாநிலங்களில் தமிழன் இழந்த பகுதிகளைப் பார்த்தால் இன்னொரு தமிழ் மாநிலம் அமைக்கலாம் எங்கும் பரி கொடுப்பதே தமிழன் வேலை. பக்கத்து வீட்டுக்காரன், பக்கத்து ஊர்க்காரனுடன் சரியாக எல்லை பிரிக்கும் வீரத்தமிழன் வேற இனத்தவனிடம் தனது நிலங்களை இழக்கும் போது  பெரிதாக வீரம் காட்ட மாட்டான்  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த மக்களிடம் வக்கணையா பேசத்தெரிந்த தமிழன் மற்ற இனத்தைக் கண்டு பம்முவதால் வந்த வினை.. :D

சொந்த மக்களிடம் வக்கணையா பேசத்தெரிந்த தமிழன் மற்ற இனத்தைக் கண்டு பம்முவதால் வந்த வினை.. :D

 

சாதிப்பிரச்சினைக்கு அருவாளை தூக்கிறதின் விளைவு...    சொந்த இனம் என்பது குறுகி அது சொந்த சாதியாக கிடக்கிறது... !   

 

இதிலை எங்கட ஆக்களும் விதிவிலக்கு இல்லை... 

Edited by தயா

சீமான் மிக சரியாக சொல்லிஇருக்கின்றார் .பொயட் ஒவ்வொரு நாட்டு பிரச்சனைகளும் தனித்தன்மையானவை .

அசோக மித்திரனின் "பதினெட்டாவது அட்சக்கோடு " தெலுங்கானாவை பின்னணியாக கொண்ட மிக அருமையான நாவல் .இந்தியாவின் சுதந்திர காலத்தில் அங்கு நடந்த போராட்டைதை மிக அழகாக சொல்கின்றது .நிசாம் ஆட்சியும் காங்கிரஸ் வருகையும் அதில் பதிய பட்டிருக்கு .

இந்திய அரசியல் அமைப்பின் தாற்பரியத்தை விளங்காதவர்கள் இலங்கை முஸ்லீம்களுக்கு தனி அலகு கொடுக்க கிழக்கு மாகணத்தை இதற்குள் இழுக்கிறார்கள்.

 

ஒன்று தெலுங்கானாவை வாழ்த்தும்  தலைப்பு.  பிரிந்தது, பிரியாதது இருக்க, நமது எல்லை தகாராறுகள் ஒரு பக்கம் இருக்க நமது சகோதர மொழி பேசும் தெலுங்கர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த விள்மபர தாரிகள் யாழில் அரசியல் தலைப்புகளை அதன் பொருளின் கீழ் ஆக்க பூர்வமான விவாதங்கள் தலை எடுக்காமல் சுய விளம்பரங்களை செருகி திசை திருப்புகிறார்கள். 

 

ஆந்திரா பாரிய மாநிலம். அமெரிக்காவில் ஆட்சி வசதிக்காக.  50 ஆங்கில மாநிலங்கள் பிரிந்திருக்கின்றன. கனடாவில் குபெக்கின் நிலை வேறு. எல்லா இந்தி மானிலங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரு மானிலமாக இல்லை.  எனவே பாரிய தெலுங்கு நாடு மொழிக்காக மட்டும் ஒரு மாநிலமாக இருக்க வேண்டும் என்பது விவாதம் அல்ல.  ஆந்திர மாநிலம் மொழியின் படி தன்னுள் உருதுவையும் ஏற்றுக்கொள்கிறது. எனவே உருது ஆந்திரா, தெலுங்கு ஆந்திர என்று பிரிப்பது வேண்டுமா என்றால் அது இல்லை. எனவே மொழியை தூக்கி பிடித்து தெலுங்கானா பிரிப்பை பிழையாக்க முடியாது. அரசியல் வங்குரோத்து அடைந்துபோன காங்கிரஸ் செய்யும் திருதாளங்களில் காங்கிரசின் ஈனத்தை சிலர் சுட்டிக்கட்ட கூச்சப்படுகிறார்கள். இதனால் உணர்வு பூர்வமான மொழியை கையில் எடுத்து, சிங்கள ஆதிக்க சக்திகளால் வேற்றுமை புகுத்தபட்டு பிரித்துவைக்கப்பட்டிருக்கும் கிழக்கு வடக்கையும் இதில் செருகி தொடபே இல்லாத திசைக்கு தெலுங்கானா பிரிபை தள்ளுகிறார்கள்.  இவர்கள் கிழக்கு மாகாண முஸ்லீம்களுக்கு உருகுவத்தாக நடித்தாலும் சீமான் போன்ற அரசியல் வாதிகள் மீது காழ்ப்பு. இதனால் எப்படி தமிழ் நாட்டில் சீமான் போன்ற அரசியல் வாதிகள் தெலுங்கான பிரிப்பை ஆதரிக்கிறர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஆந்திரா அரசு எதிர்த்தாலும் காங்கிரஸ் அரசு பிரித்துத்தான் வைத்திருக்கிறது. இதில் தமிழ் நாடு ஆதரித்துத்தான் ஆந்திரா பிரிக்கபட்டதா? அப்போது எத்றகு ஆந்திரா பிரிப்பை தமிழ் நாடு ஆதரிக்கின்றதே என்கிறார்கள்? 

 

காங்கிரசின் கட்சி தனது பெயரில்தான்  பிரித்துவைத்திருக்கிறது என்பது ஏதோ உண்மைதான். செய்திகள் மதிய அரசு என்று சொல்லாமல் காங்கிரஸ் மத்திய கமிட்டி என்றுதான் வெளிவந்தன். அது தேர்தலுக்காக. காங்கிரஸ் கொடுத்த காரணம் பொருளாதாரம். ஆனால் பொருளாதாரத்தில் பின் தங்கிய தெலுங்கானா, பிரிந்த பின்னர், தான் தான் அதன் பொருளாதாரத்திற்கு பொறுப்பா, அல்லது மத்தி பொருளாதாரத்தில் பினதங்கிய விசேட மாநில அந்தஸ்த்து கொடுத்து அதை முன்னேற்றுமா? அப்படி இல்லையாயின் பிரிப்பின் பொருள் என்ன? இப்படியான  நியாமன கேள்விகளை சிலர் இந்த திரியில் எழுப்பாமல், தமிழ் நாடு இதை ஆதரிக்க முடியாது என்பதும், காங்கிரசால் இணைக்கபட்ட வடக்கும் கிழக்கும் இலங்கையால் பிரிக்கபட்ட சம்பவத்தை இங்கே இழுத்துவந்து காங்கிரஸ் செய்த பிரிப்புக்குள் காட்டுவதும் சந்தேகத்துக்குரிய அரசியல் விமர்சனங்கள்.

 

தம் மீது வரும் விமர்சனங்களை மறுக்காதவர்கள் கிழக்கு மாகாண தனி அலகு கதைகளை இதற்குள் குமைக்கும் விதம் சந்தேகத்தை கிழப்புகிறது. இதில் தங்களுடன் ஒத்துழைக்காவிட்டால், ஈழத்தில் இருந்து வடக்கு-கிழக்குக்கு இடையில் கல்லுக்குத்தி பிரிவினைகளை தூண்டி வந்தது மாதிரி தமிழ் நாட்லும் ஆரம்பிக்கத்தான் தயாராக இருக்கிரார்கள் என்பதின் அறிவிப்பு மாதிரி இது இருக்கிறது. வடக்கு கிழக்கில் ப்ரிவினை இருக்கு என்று அத்தாட்சிப்படுத்துவதற்கு  முன்னால் வைக்க எதுவும் இருக்கவில்லை. எனவே பிரதேச வாதம் இருக்கிறது என்று கட்டுக்கதை பரப்பினார்கள். அதை மறுத்து தீபன் செல்வன் யாழில் ஒரு கருத்தும் எழுதியிருக்கிறார். ஆனால்  தமிழ் நாட்டில் சாதியை வைத்து சிலர் முயல்கிறார்கள். இதில் எதுவும் இலகுவில் முன்னேறத்தக்க நிலையில் இல்லை. ஆனாலும்  றொ பணம் கொடுக்கும் வரை  தமிழ் நாட்டில் இல்லாத பிரிவினையை உருவாக்கி, டிவி பேட்டிகள் கொடுத்து தமிழ் நாட்டை சிதைக்க இவர்கள் தயங்கமாட்டார்கள்.  சீமான் போன்றவர்கள் இவர்களை அடடையாளம் கண்டு சிங்கள மொட்டைகள் சுற்றுலா என்ற போர்வையில் தமிழ் நாட்டுக்குள் நுளைந்து வேவு பார்க்க முயன்ற போது செய்த மாதிரி, ராசபக்சா, அவரின் மச்சான் நடேசன் போன்றோர் பூசைகள் என்று ஏமாற்று செய்த போது, நீலகிரியில் பயிற்சிக்கு போன வெவுபடைக்கு செய்த மாதிரி தமிழ் நாடுக்குப் போகும் எல்லா ஒற்றர் படையையும் சிறி லங்காவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இதுதான் தமிழ் நாடின் ஒருமைத்துவத்திற்கு துணையாக இருக்கும்.

 

சமயக்கோட்டை வைத்து பிரதேசங்களை பிரிக்கலாம்,  ஆனால் பொருளாதாரத்தை வைத்து பிரிக்க கூடாது என்பது அரசியல் வாதமல்ல.  இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மற்ற மாநில பகுதிகள் பலவந்தமாக இணைக்கபட்டிருக்கு. என்வே மொழி வாரியாக பிரித்திருப்பதை திரும்ப பிரிக்க கூடாது என்பது அங்குள்ள அரசியல் நிலைமையை ஆராயாமையாகும். மேலும் இந்தியா 29 மாநிலமாகவும்  35 ஆட்சிப்பிரிவுகளுமாக இருக்கிறது, அதில் சில, ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலனகள் வங்காள, இந்தி மொழிகளை தமது மானில மொழிகளாக கொண்டிருக்கின்றன. மற்றய மொழிகளுக்கு ஒரு மாநிலம் மட்டும்தான் கிடைக்கிறது. தென் மாநிலங்கள் பிரதானமாக ஒரு மொழிக்கு ஒரு மாநிலம். தமிழ் நாட்டையும் கன்னடத்தையும் தவிர மற்றவையில் ஆங்கிலமும் ஆட்சி மொழி. தெலுங்கு நாட்டில் உருதுவும் ஆட்சி மொழி. ஆனால் வடமாநிலங்களில் இப்படி மொழிவாரி பிரிப்பு அவ்வளவு தெளிவாக இல்லை. உண்மையில் அவை மொழி நிலங்கள் அல்ல. அவறுட் சில, பல மொழிகளை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலயில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட ஆங்கிலமும் இந்தியும் அங்கு இருக்கும் சிறு மொழிகளை விழுங்கி வருகின்றன. இவற்றில் மொழிவாரி மாகாணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இவை வட அமெரிக்க நாடுகள்  தாங்கள் சுதந்திரம் அடந்தபின்னர் ஆங்கிலம் அந்த நாட்டு இயல்மொழிகளை விழுங்கியது மாதிரி இந்தியாலும் மற்றய பலமான மொழிகளாலும் விழுங்க படுகின்றன. தமிழில் செம்மொழி அமைப்பு இருப்பதால் பாடப்புத்தகங்களில் அந்த மொழி காப்பாற்ற படுகிறது பல இந்திய மொழிகளுக்கு இந்த அமைப்பு இல்லாததால் அவை மானில, அல்லது இந்தி மொழியால் விரவில் விழுங்கபட்டுவிடும். எனவே மாநிலங்கள் மொழிகளுத்தான் என்பது ஒரு மாயை மட்டுமே.  இந்தியாவில் இருப்பது 25 மொழிகள் அல்ல. அவை 200 க்கும் மேலானவை. (பேச்சு வழக்கல்ல. பூரண மொழிகள்).பல மொழிகள் இந்தியால், மானில ஆட்சி மொழிகளால் ஆண்டு தோரும் விழுங்கப்படுகின்றன.  மற்றும் படி இந்திய மொழிவாரி மாநில அமைப்பு என்பது, முன்னர் சொன்னது மாதிரி, வெறும் மாயையே. 

 

இந்த கிந்திய மாயைக்கும், கிழக்கு தமிழ் ஈழத்திற்கும் அரசியல் தொடர்பு இல்லை. கிழக்கில் முஸ்லீம்கள் தாங்கள் பெரும்பாண்மையாக சிங்களவர்களுடன் வாழும் இடங்களை சிறீலங்காவுடன் இணைத்து வைத்திருக்க விரும்பினால் அதற்கு நாம் பாடல்ல. ஆனால் தமிழ்மண் என்று எல்லைகோடிடபட்ட நிலங்கள் தமிழ் ஈழநாடுடன் வர வேண்டும். மே மாத தமிழீழ சாட்டரில் சொல்லப்பட்டது போல ஆட்சி மொழியகாக தமிழ் ஆங்கிலம்,  சிங்களம் வரலாம். அரசாங்கம் மதம் சாராததாக இருக்கும். ஈழத்தமிழர்   மிக சிறிய இனம் என்று யாழில் கட்டுரை வரைந்தோர் கிழ்க்கில் தனி அலகு ஆட்சி வேண்டும் என்று வாதாட முயல்வது நகைச் சுவை. 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=126559&p=920241

Edited by மல்லையூரான்

தெலுங்கானா.. 7 எம்.பிக்கள் ராஜினாமா! 4 மத்திய அமைச்சர்களும் விலகப் போவதாக மிரட்டல்! Posted by: Mathi Updated: Friday, August 2, 2013, 17:01 [iST]

 

ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் 4 மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது என்று காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்துள்ளது. ஆனால் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினரே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக தெலுங்கானா தவிர்த்த எஞ்சிய ஆந்திர பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. தொடர்ந்தும் முழு அடைப்புப் போராட்டமும் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 6 லோக்சபா, ஒரு ராஜ்யசபா எம்.பி ஆகியோர் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் மத்திய அமைச்சர்களான பல்லம் ராஜூ, புரந்தேஸ்வரி, ஜேடி சீலம் மற்றும் கில்லி குருபராணி ஆகியோரும் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்லனர். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு 33 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 19 பேர் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் மத்திய அமைச்சர்கள், எம்.பிக்களின் பதவி விலகல் அக்கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/02/india-telangana-crisis-seven-mps-quit-four-central-ministers-threaten-180415.html

Edited by மல்லையூரான்

இதைவிட தெலுங்கானா தனி நாடா பிரியலாம் அப்பிடியே இந்தியா முழுதும் பிரியலாம்  :icon_idea: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.