Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதிர்காமர் மகனுக்கும் காணி தேவையாம் – சுவீகரிப்புக்கு எதிராக வழக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமர் மகனுக்கும் காணி தேவையாம் – சுவீகரிப்புக்கு எதிராக வழக்கு
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 08:47 GMT ]

 

சிறிலங்காப் படையினருக்காக வலிகாமம் வடக்கில் உள்ள தமது பாரம்பரிய காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மகனும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

லக்ஸ்மன் கதிர்காமரின் மகன் கிறிஸ்ரியன் கதிர்காமர், சமர்ப்பித்துள்ள இந்த மனுவில், சிறிலங்காவின் காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு அதிகாரி உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை பிரதேசத்தில் உள்ள மாவிட்டபுரம், ஆழ்வார் மாலையடியில் உள்ள தமது காணியை சுவீகரிப்பதற்கு எதிராகவே கிறிஸ்ரியன் கதிர்காமர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

பொதுத் தேவைக்காக காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு சிறிலங்கா படையினரின் முகாம் அமையவுள்ளதாகவும் தனக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பலாலி- காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வராத தனது பாரம்பரிய காணியை சுவீகரிப்பது சட்டத்துக்கு முரணானது என்றும், அதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் கிறிஸ்ரியன் கதிர்காமர் கோரியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20130802108787

  • கருத்துக்கள உறவுகள்

kk1(5).jpg
-எஸ்.எஸ். செல்வநாயகம்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஆணை கோரும் மனுவொன்றையே அவர் தாக்கல் செய்துள்ளார். யாழ். மாவட்டத்திலுள்ள தமது பரம்பரைச்சொத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவே அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையில் சுற்றுச்சூழல் வடிவமைப்பு ஆலோசகராக 1995 ஆம் ஆண்டு கடமையாற்றிய முறைப்பாட்டாளரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் எஸ்.ஜே. கிறிஸ்ரியன் கதிர்காமரே மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடற்படையைச்சேர்ந்த அட்மிரல் ராஜநாதன் கதிர்காமர், இலங்கை இராணுவத்தின் மேஜர் செல்வநாதன் கதிர்காமநாதர், பிரபல இராணி சட்டத்தரணி சாம் கதிர்காமர் ஆகியோர் தனது நெருங்கிய உறவினர்கள் என்றும் கூறியுள்ளார்.

தனது மூதாதையர்வழி சொத்தான இந்த காணி, ஆழ்வார் மலையடி மாவிட்டபுரத்தில் உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது நிலம் பொது தேவைக்காக தேவைப்படுவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் ஆனால், இதற்கான காரணம் பாதுகாப்பு படையணி தலைமையகம் அமைத்தல் என கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பாதுகாப்பு படை 6381 ஏக்கர் காணிகளை பிடித்து வைத்திருப்பதாகவும்  அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணியை பொறுப்பேற்கும் அறிவித்தல்கள் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் வரவில்லை என்பதையும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது முதுசமான காணியை பிரதிவாதி பொறுப்பேற்பதை தடைச்செய்யும் தடையுத்தரவை ஒன்றை நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டுமென்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

 
 
  • கருத்துக்கள உறவுகள்

அட .......,  இந்த சாத்தானுக்கு குட்டி பிசாசு இருப்பது எனக்கு இப்பதான் தெரியும்.   :icon_mrgreen:

அட .......,  இந்த சாத்தானுக்கு குட்டி பிசாசு இருப்பது எனக்கு இப்பதான் தெரியும்.   :icon_mrgreen:

 

தந்தை சபலத்தால் சிங்கள இனவாத அரசுடன் கூத்தடித்தவர்.

மகன் அப்பிடியில்லை. மிகவும் அமைதியாக பொதுமக்கள் சமூகப் பணியிலும் ஆன்மிக வாழ்விலும் உள்ளவர். ஒரு நல்லவர் என்றும் சொல்லலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழுகின்ற மக்களுக்கு..

வாழந்தவர்கள் பாடமடி..

பெற்றவர்கள் பட்ட கடன்..

பிளளைகளைச் சேருமடி..

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை சபலத்தால் சிங்கள இனவாத அரசுடன் கூத்தடித்தவர்.

மகன் அப்பிடியில்லை. மிகவும் அமைதியாக பொதுமக்கள் சமூகப் பணியிலும் ஆன்மிக வாழ்விலும் உள்ளவர். ஒரு நல்லவர் என்றும் சொல்லலாம்.

 

வாழுகின்ற மக்களுக்கு..

வாழந்தவர்கள் பாடமடி..

பெற்றவர்கள் பட்ட கடன்..

பிளளைகளைச் சேருமடி..

 

பெற்றோர் செய்த பாவம், பிள்ளைகளைச் சேரும்... என்பது எவ்வளவு உண்மையென்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

ஒட்டுக் குழுக்களின்... பிள்ளைகளும், என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கப் போகுதுகளோ...

தந்தை சபலத்தால் சிங்கள இனவாத அரசுடன் கூத்தடித்தவர்.

மகன் அப்பிடியில்லை. மிகவும் அமைதியாக பொதுமக்கள் சமூகப் பணியிலும் ஆன்மிக வாழ்விலும் உள்ளவர். ஒரு நல்லவர் என்றும் சொல்லலாம்.

 

இது செல்வா, சந்திரகாசன் கதைக்கு எதிர் வழம் போலிருக்கு. செல்வா தனக்கு இருந்த மலேசிய இரப்பர் தோடங்க்களை விற்று விற்று தமிழரசுக்கட்சியை வளர்த்தார் என்பார்கள். மகன் ரோவுன் பணத்தில் வாழ்க்கை நடத்தினார். :(

  • கருத்துக்கள உறவுகள்

முற்பகல் செய்யின் ...பிற்பகல் விளையும்...தந்தையின் விசுவாசத்திற்கு வழங்கப்பட்ட அருமையான அவார்டு....தந்தையின் செத்தவிட்டிலேயே..கனக்க கதைத்து தமிழினத்துக்கும் சேர்த்து கொள்ளிவைத்தவர்..இப்ப அந்தியேட்டி செய்யிற இடத்தில்....நிலத்துக்கு அடிபடுறார்...

இது செல்வா, சந்திரகாசன் கதைக்கு எதிர் வழம் போலிருக்கு. செல்வா தனக்கு இருந்த மலேசிய இரப்பர் தோடங்க்களை விற்று விற்று தமிழரசுக்கட்சியை வளர்த்தார் என்பார்கள். மகன் ரோவுன் பணத்தில் வாழ்க்கை நடத்தினார். :(

 

உண்மைதான் மல்லை அண்ணா!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.