Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசின் போக்கு ஆத்திரமடையச் செய்துள்ளது! அமைச்சர் ஹக்கீம்

Featured Replies

rauf-hakeem.jpg

புனித ரமழான் மாதத்தில் மஹியங்கனையில் பள்ளிவாசலுக்குள் பன்றியின் உடற்பாகங்களை வீசிய கேவலமான செயல் அரங்கேறியுள்ளது. இந்தச் செயலைக் கண்டிக்க அரசாங்கம் தயங்குகிறது. குறைந்த பட்சம் கண்டிப்பதாக அறிக்கையேனும் விடவில்லை. இது முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்துள்ளது என்று நீதியமைச்சரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 

மேலும் வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=26411

வெள்ளிகிழமை அவர்கள் அணிந்தது அந்த தொப்பி.

 

ஞாயிற்றுக்கிழமை இது.

 

01(832).jpg

 

 

02(664).jpg

 

கக்கீம் கோபம் வந்தாலும் சிரித்துக் கதைப்பார். 

 

வள்ளுவனின் இன்னா வந்தால் நகுக.

 

இந்த ஆள் நன்னாத்தான் கறடி விட பழகியிருக்காரு. (இவரின் மந்திரி பதவி ஆபத்தில் இருப்பத்தாகவும் கேள்வி)

Edited by மல்லையூரான்

நாட்டில் பிறிதொரு அழிவு ஏற்படுவதற்காக காத்திருக்கிறோமா? - சிறிலங்கா அரசிடம் முஸ்லீம் மக்கள் கேள்வி [ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 11:26 GMT ] [ நித்தியபாரதி ]

MUSLIM.jpg

இலங்கைத் தீவின் சனத்தொகையில் 10 சதவீதத்தைக் கொண்ட முஸ்லீம் சமூகமானது, தம் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த தீவிரவாதத் தாக்குதல்களானது சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடனே மேற்கொள்ளப்படுகிறது என நம்புகின்றது. 

இவ்வாறு Arab News என்னும் ஊடகத்தில் ABU AHMED எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

சிறிலங்காவில் வாழும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்கள் கடந்த இரு ஆண்டுகளாகத் தொடரப்படுகின்ற போதிலும், சிறிலங்கா அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. தம் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமான எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என முஸ்லீம் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் இவர்கள் தமது பிரச்சினைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். 

உலகெங்கும் வாழும் முஸ்லீம்கள், இலங்கைத் தீவில் நடைபெற்று வரும் இவ்வாறான சம்பவங்களை கண்காணிக்கும் அதேவேளையில், இதனால் இலங்கைத் தீவானது பிறிதொரு மியான்மாராக மாறலாம் எனவும் அச்சம் கொள்கின்றனர். தம்மீதான தாக்குதல்கள் தனித்தனியாக மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், இத்தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் தமக்கிடையே தொடர்பைக் கொண்டுள்ளதுடன், நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகவும் செயற்படுகிறார்கள் என்கின்ற செய்தியானது முஸ்லீம் மக்களின் உணர்வுகளை மேலும் பாதித்துள்ளது. 

எவ்வாறெனினும், 30 ஆண்டுகாலப் போரிலிருந்து மீண்டுள்ள இலங்கைத் தீவானது மீண்டும் நாட்டில் பிறிதொரு அழிவு ஏற்படும் போது அதனை முகங்கொடுக்க முடியாத நிலை ஏற்படும். சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, சிங்களக் காடையர்கள் மிக நன்றாகத் திட்டமிடப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக தம் மீது தாக்குதலை மேற்கொள்வதுடன், படுகொலைகளைப் புரிவதாக முஸ்லீம்கள் சந்தேகிக்கின்றனர். 

"நாங்கள் எதற்காகப் பொறுத்திருக்கிறோம்? நாட்டில் பிறிதொரு அழிவு ஏற்படுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோமா? நாட்டில் பிறிதொரு அழிவு ஏற்படுவதற்கு வழிசமைக்கும் பௌத்த தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நேரம் வரவில்லையா?" என முன்னாள் தகவற்துறை அமைச்சர் இம்ரியாஸ் பக்கீர் மார்க்கர் சிறிலங்கா அரசாங்கத்திடம் வினவியுள்ளார். 

முஸ்லீம் மக்களாலும் சிங்கள மக்களாலும் பெரிதும் மதிக்கப்படுகின்ற, நேசிக்கப்படுகின்ற அரசியல்வாதியான மார்க்கர் அண்மையில் சிங்கள வாரப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், முஸ்லீம் மக்கள் மீது தொடரப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும், இது தவறினால் நாட்டில் பெரும் அழிவு ஒன்று ஏற்படுவது தவிர்க்க முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கைத் தீவின் சனத்தொகையில் 10 சதவீதத்தைக் கொண்ட முஸ்லீம் சமூகமானது, தம் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த தீவிரவாதத் தாக்குதல்களானது சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடனே மேற்கொள்ளப்படுகிறது என நம்புகின்றது. 

இதுவரையில் இத்தாக்குதல்களை நிறுத்துமாறு முஸ்லீம் மற்றும் சிங்கள சமூகங்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற நிலையே காணப்படுகிறது. முஸ்லீம் அரசியல்வாதிகள் பொதுவாக தமது சொந்த நலன்களை அடைந்து கொள்வதிலும் தமது பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதிலுமே குறியாக உள்ளனர். இதனால் இவர்கள் தமது சமூகத்தவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்யாது அவர்களது ஆசைகளைக் குழிதோண்டிப் புதைக்கிறார்கள். இவர்கள் அரசாங்கத்தின் நலன்களை முதன்மைப்படுத்தி மிகக் கெட்டித்தனமாக தமக்கான வாக்குகளைப் பெற்று பதவி வகிக்கிறார்கள். இதனாலேயே முஸ்லீம் அரசியல்வாதிகளை சிறிலங்கா அரசாங்கமும் முஸ்லீம் சமூகமும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முஸ்லீம் சமூகத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தைக் குற்றம் சாட்ட முன்வருகின்றார் என்றால், இந்த விடயத்தில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த, முஸ்லீம்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் அரசியல்வாதிகள் ஏன் தொடர்ந்தும் அமைதிகாக்கின்றனர் என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 

முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலுக்கு சிறிலங்கா அரசாங்கமே துணைபோவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சாட்டிய போது, இத்தாக்குதல்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பில்லை எனவும் 'பொது பால சேனவே இதற்குப் பொறுப்பு' எனவும் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினரான பய்சார் முஸ்தப்பா அறிவித்து சிறிலங்கா அரசாங்கத்தைப் பாதுகாத்ததானது மிகவும் வெட்கக்கேடான விடயமாகும். 

"சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி நாட்டில் நிலவும் சட்ட வரையறைகளை மீறி மிகவும் வெளிப்படையாக பொது பால சேன இவ்வாறான தாக்குதல்களையும், வன்முறைகளையும் எவ்வாறு மேற்கொள்ள முடியும்" என முஸ்லீம்கள் கருதுகின்றனர். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்கா காவற்துறையின் கண்காணிப்பு இருந்தபோதும் அநுராதபுரத்திலுள்ள முஸ்லீம் புனித பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்திலிருந்து இன்று வரை பல்வேறு மீறல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மிருகப்பலியைத் தடைசெய்யுமாறு கோரும் மனுவை சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பதற்காக கடந்த மாதம் தலதாமாளிகையிலிருந்து பௌத்த தீவிரவாதக் குழுவொன்று பேரணி ஒன்றை நடாத்தியது. முஸ்லீம் எதிர்ப்பைத் தூண்டும் விதமாக இவ்வாறு பேரணி ஒன்றை நடாத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதா? 

இப்பேரணி இடம்பெற்று சில நாட்களின் பின்னர் அதாவது யூன் 30 நள்ளிரவன்று, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அசார் வித்தியாலய மைதானத்தில் மிக இரகசியமாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. அசார் வித்தியாலயம் மற்றும் சாதுலிய வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளுக்கும் பொதுவான மைதானமாக இது காணப்படுகிறது. யூன் 25, 2013 அன்று இந்த விளையாட்டு மைதானம் பாடசாலைக்குச் சொந்தமானது என நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வாழைச்சேனை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மிக இரகசியமாக இந்த மைதானத்தில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. இதுவரையில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட எவரும் கைதுசெய்யப்படவில்லை. 

யூலை 11,2013 அன்று, மகியங்கனவில் உள்ள அரபா பள்ளிவாசல் மீது காடையர்கள் தாக்குதலை நடாத்தினர். 2500 ஆண்டுகால பௌத்தவாதம், பௌத்த கலாசாரம், புராதன குடியேற்றம் என்பன மேற்கொள்ளப்பட்ட நன்கறியப்பட்ட தம்மதீப என்கின்ற இடத்திலேயே இவ்வாறான காடைத்தனமான வன்முறை இடம்பெற்றது. சிறிலங்காவின் ஆதிகால மனிதர்களான வேடுவர்கள் கூட இவ்வாறான காடைத்தனமான தாக்குதல்களை மேற்கொள்வதில்லை. இவ்வாறான தாக்குதல்களால் உலகில் சிங்கள பௌத்தர்களின் பெயர் எவ்வாறு களங்கப்படுத்தப்படும் என்பதை காடையர்கள் உணர்ந்து கொள்வார்களா? 

"மகியங்களை பள்ளிவாசலானது ஒரு வாரத்திற்கு மேல் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டது. பல மாதங்களாக தீவிர பௌத்தவாதிகள் முஸ்லீம்கள் மீது இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். றம்ழான் புனித காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவமானது நாட்டில் வாழும் முஸ்லீம்களின் உணர்வுகளையும் ஏனைய சமூகத்தவர்களின் உணர்வுகளையும் அவமதிப்பதாக உள்ளது. முன்னர் பள்ளிவாசல்கள் பல அழிக்கப்பட்ட போதும் கூட, இதனைத் தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறுவதானது நாட்டில் மதசார் வன்முறைகளுக்கு வழிவகுக்கும்" என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20130804108800

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் முஸ்லீம்கள் மாட்டிறைச்சிக் கழிவுகளை தமிழர் பகுதிகளில் வீசியதாக இங்கே யாரோ குறிப்பிட்டிருந்தார்கள்.. பதிலுக்கு இப்போது பன்றி இறைச்சிக்கழிவு கிடைத்துக் கொண்டுள்ளது..!

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் நீதி அமைச்சர் ஹக்கீம் என்பவர் அதுவும் முஸ்லிமாக இருக்கும் போது இவ்வளவு தாக்குதலும் நடைபெற்றுள்ளதால் ஹக்கீம் தான் இவற்றிற்கு பொறுப்பேற்க வேண்டும். பொதுபலசேன இத்தாக்குதலை செய்தது எனில் அதற்கு பின்னால் இருந்து இயக்குபவர் கோத்தபாய என்பது உலகம் அறியும் போது ஹக்கீம் அவரை கண்டிக்காமல் தெரியாதது போல் நடிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரமழான் நோன்பு இருக்கும் நேரத்திலை... மஹியங்கனை பள்ளிவாசலுக்குள், சிங்களவர்... பண்டி இறைச்சியை வீசியதை...
ஹக்கீம் போன்றவர்கள் இனியும் பார்த்துக் கொண்டிருப்பது, சுத்த கோழைத்தனம்.
ரோசமுள்ள முஸ்லீம் என்றால்.... சிங்களவனுக்கு எதிராக போராட்டம் எப்பவோ... நடத்தியிருக்க வேண்டும்.
உலக முஸ்லீம்களுக்கே... இந்த ஸ்ரீலங்கா முஸ்லீம்கள் அவமானத்தை தேடித்தந்து விட்டார்கள்.

ரமழான் நோன்பு இருக்கும் நேரத்திலை... மஹியங்கனை பள்ளிவாசலுக்குள், சிங்களவர்... பண்டி இறைச்சியை வீசியதை...

ஹக்கீம் போன்றவர்கள் இனியும் பார்த்துக் கொண்டிருப்பது, சுத்த கோழைத்தனம்.

ரோசமுள்ள முஸ்லீம் என்றால்.... சிங்களவனுக்கு எதிராக போராட்டம் எப்பவோ... நடத்தியிருக்க வேண்டும்.

உலக முஸ்லீம்களுக்கே... இந்த ஸ்ரீலங்கா முஸ்லீம்கள் அவமானத்தை தேடித்தந்து விட்டார்கள்.

 

ஈழத்தின் கிழக்கில் மட்டுமல்ல, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் மாட்டிறச்சியையும், எலும்புக் கழிவுகளையும் கோவில்களுக்குள் வீசுவது முஸ்லிம்களின் வழக்கம். இப்ப சிங்களவன் திருப்பி வீசும் போது பேந்தப் பேந்த முழிக்கிறார்கள்!

http://en.wikipedia.org/wiki/2013_Bangladesh_Anti-Hindu_violence

http://www.youtube.com/watch?v=JW0jCHeNX0Y

 

அரசின் கொள்கையை ஏற்காவிடின் கூட்டணியிலிருந்து வெளியேறலாம் - முஸ்லிம் காங்கிரஸுக்கு அரசு அறிவுரை!!

d0e4aa80-8aee-4745-815b-65dff8fe6d811.jp

சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் கொள்கைளை ஏற்று இணைந்து செயற்பட முடியாத பட்சத்தில் வெளியேறி விடுவதே சாலச் சிறந்ததென சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அரசாங்க உயர்மட்டத்தில் இருந்து கடும் அறிவுரையொன்று வழங்கப்பட்டுள்ளது என நம்பகரமாக அறியமுடிகின்றது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும், சிறிலங்கா அரச உயர்மட்டப் பிரமுகர் ஒருவருக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற முக்கிய சத்திப்பொன்றின்போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகின்றது.

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்றது. இந்த முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுமாறு சிறிலங்கா அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸுக்கு பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தது.

குறிப்பாக, வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவக்கூடும் என்பதால், வடக்கில் மாத்திரமாவது இணைந்து போட்டியிடுமாறு முஸ்லிம் காங்கிரஸுக்கு சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

 

ஆனால், சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைகளை நிராகரித்த முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்து வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்துவிட்டது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப்பிரமுகர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை அழைத்து மேற்கண்டவாறு காட்டமாகக் கூறியுள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்துக் கொண்டு அரசாங்கத்துக்கு சங்கடம் ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் அண்மைக்காலமாக செயற்பட்டு வருகின்றது. இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடல்ல என்று சுட்டிக்காட்டிய குறித்த உயர்மட்ட புள்ளி, அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்று இருப்பதென்றால் இருங்கள், இல்லையேல் நீங்கள் நாளையே அரசாங்கத்தை விட்டு வெளியேறி விடுங்கள். அதனால் எந்தப் பிரச்சினையும் எமக்குக் கிடையாது. அரசாங்கம் ஒரு போதும் ஆட்டமும் காணாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடமாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் தான் வெற்றி பெறும். நேர்மையான, நீதியான வெற்றியை நாங்கள் அங்கு ஈட்டுவோம் என்றும் அந்த உயர்மட்ட முக்கிய புள்ளி, முஸ்லிம் காங்கிரஸின் தலைவரிடம் மிக அழுத்தமாகக் கூறியுள்ளதாக அறியமுடிகின்றது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=d0e4aa80-8aee-4745-815b-65dff8fe6d81

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீம் ஒரு சுயநலவாதி.அரசை விட்டு  வெளியேற மாட்டார்.பதவி தான் அவரின் குறிக்கோள்.இனமல்ல.ஐ.தே.க வில் அமைச்சர்.பின்பு மகிந்தவின் கட்சியில் அமைச்சர். பிரபாகரன் உச்சத்தில் இருந்த போது அங்கும் பேச்சுவார்த்தை. பின்னர் அதே ஹக்கீம் ஜெனிவாவில் தமிழருக்கு எதிராக  செயற்பட்டது என்று ஒரு அரசியல் சுத்துமாத்து. பல வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணின் கொலை மீது குற்றம் சாட்டப்பட்டு அப்போதைய அரசால் காப்பாற்றப்பட்டவர்.

ஏப்பா  பேசிப் பேசி  காலத்தை விரயமாக்காமல் கெதியாய் வெளியெருங்கொ திரு.கக்கீம் . ஏன் தாமதம்? இன்னும் பேரம் முடியலையா ? :blink: 

ஏப்பா  பேசிப் பேசி  காலத்தை விரயமாக்காமல் கெதியாய் வெளியெருங்கொ திரு.கக்கீம் . ஏன் தாமதம்? இன்னும் பேரம் முடியலையா ? :blink: 

 

அவர் ஆத்திரம் வந்தால் ----------- போவாரே ஒழிய , வெளியேற மாட்டார்  :D 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஆத்திரம் வந்தால் ----------- போவாரே ஒழிய , வெளியேற மாட்டார்  :D 

 

 

அதுவும்

மகிந்த  வீட்டில்தான்  போகணும்  என்று   அடம்  பிடிப்பார்

அவ்வளவு விசுவாசம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.