Jump to content

முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முடங்கியதா.. சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?

 

 

2zhgnsg.jpg

 

 

NfPzm.jpg        elevated_eps_1345254g.jpg

 

 

6431590739_828d5db2d5_z.jpg

 

6431596611_ccb048623b_z.jpg

 

TH_MADURAVOYAL_1364151f.jpg

 

20TH_PILLARS_1462034f.jpg

 

 

சென்னையின் நெடுநாளைய கனவான சென்னை - மதுரவாய்ல் இடையே ஏறத்தாழ 19 கி.மீ தூரத்திற்கு கூவம் ஆற்றின் கரையோரமாகவே ரூபாய் 1850 கோடி செலவில் திட்டமிடப்பட்ட விரைவு மேம்பால்ச் சாலை மத்திய மாநில அரசுகளின் ஈகோ போட்டியால், திட்டம் 30 சதவீதம் நிறைவேற்றப்பட்டு (ரூபாய் 500 கோடிகள்) செலவழித்த பின் பாதியில் முடங்கி நிற்கிறது.

 

இத்திட்டத்தால் சென்னைக்கு உள்ளேவரும் & வெளியேரும் துறைமுக சரக்கு வாகனங்கள் பூந்தமல்லி சாலை, கடற்கரை சாலை, மவுண்ட் ரோடு வழியே செல்லாமல் நேரடியாக சென்னை நுழைவாயிலான மதுரவாயல் மூலம் விரைவாக் சென்னை துறைமுகத்தை அடைய இயலும். இதன்மூலம் வழக்கமான 120 நிமிட சாலை பயணம், 20 நிமிடதிற்குள்ளேயே முடியும்.

 

இத்திட்டம் கடந்த திமு.க அரசினால் முன்வைக்கப்பட்டு, அனைத்து தமிழக, மத்திய அரசின் துறைகளால் ஒப்புதல் பெற்ற பின் தொடங்கப்பட்டு மடமடவென நடந்த வேலைகள் 2011ல் ஆட்சி மாறியவுடன் அதே தமிழக அரசு துறைகள் இப்பொழுது திட்ட வரைவின்படி சாலகளின் தடம் அமையவில்லை, கூவம் ஆற்றின் நடுவே இப்பாலத்தின் தூண்கள் அமைவதால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அழிவு ஏற்படும் என நொண்டிச் சாக்குகள் கூறி திட்ட நிறைவேற்றுதலை அப்பட்டமாக் நிறுத்தி வைத்துள்ளனர். இத்தடைக்குப்பின் அரசியல் காரணங்கள்/பெரும் புள்ளிகள் உள்ளதாக இதிட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட மத்திய அரசு நிறுவனமான அரசு நிறுவனமும்(NAHI), ஒப்பந்த நிறுவனமும்(SOMA) திட்டத்தை தமிழக அரசு தடங்களின்றி முடிக்கவும், திட்ட தாமதத்திற்கு நஷ்ட ஈடு கேட்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்..

 

 

இவ்வழக்கு பற்றிய தினமலரில் வந்துள்ள செய்தி:

 

http://www.dinamalar.com/district_detail.asp?id=679629

 

தமிழக அரசின் தடையால், சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை பணிகள் முடங்கி, ஓராண்டு முடிந்து விட்டது. பிரதமரின் ஆலோசகர் நேரில் பேசியும் சிக்கல் தீரவில்லை. நெரிசலுக்கு தீர்வாக அமையும் இந்த பணி, எப்போது துவங்கி முடியும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

20 சதவீதம் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்கேற்ப, சாலை வசதியை மேம்படுத்த, சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரை, 19 கி.மீ., நீளத்திற்கு மேம்பால சாலை அமைக்கும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவக்கியது. கூவம் கால்வாயை ஒட்டி, பிரமாண்ட தூண்கள் அமைக்கும் பணிகளில், 20 சதவீதம் முடிந்தன.

 

இதனிடையே, "கூவம் கரையோரம் தூண்கள் அமைக்காமல், நீரோட்டத்தை தடுக்கும் வகையில் பணிகள் நடக்கின்றன. உடனே நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்" என, கடந்தாண்டு மார்ச், 29ம் தேதி, தமிழக நீர்வள ஆதார துறை தலைமை பொறியாளர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனருக்கு, "நோட்டீஸ்' அனுப்பினார்.அன்றைய தினமே பணிகள் நிறுத்தப்பட்டன.

 

தொடர்ந்து, பல கடித போக்குவரத்துகளுக்கு பின், பிரதமரின்ஆலோசகர், டி.கே.நாயர், சென்னை வந்து தலைமை செயலரை சந்தித்தார்.பல கட்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்காததால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அது, விசாரணையில் உள்ளது.

 

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

 

மாநில அரசின் தடையால், பணிகள் முடங்கி, ஓராண்டு ஆகிவிட்டது.இதனால், ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், 668 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு உள்ளது.தமிழக அரசு, தடை நீக்காததால், வேறு வழியின்றியே கோர்ட்டுக்கு சென்றோம். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

 

ஓராண்டு கால கதை இதுதான்...!

 

29.3.2012  நீரோட்டம் பாதிப்பதாக பணிகளை தொடர தமிழக அரசு தடை

02.4.2012 விதிமீறல் இல்லை என, மத்திய நெடுஞ்சாலைத் துறை செயலர், மாநில அரசுக்கு கடிதம்

25.4.2102 மத்திய நெடுஞ்சாலைத் துறை செயலர் உபாத்தியா, தலைமைச்செயலருடன் சந்திப்பு

16.7.2012 தலைமைச் செயலருக்கு, உபாத்தியா மீண்டும் கடிதம்

09.11.2012 பிரதமர் ஆலோசகர் டி.கே.நாயர், தலைமைச் செயலருடன் சந்திப்பு

2.11.2012 தொழில்நுட்ப ஆலோசகர்கள் கூட்டம் நடத்த திட்ட இயக்குனர், மாநில அரசுக்கு கடிதம்

28.11.2012 வடிவமைப்பை மாற்ற பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், திட்ட இயக்குனருக்கு கடிதம்

14.2.2013 திட்ட இயக்குனர், பொதுப்பணித் துறைக்கு மீண்டும் கடிதம்

25.2.2013 பணிகள் முடங்கியதால், ஒப்பந்த நிறுவனம், 668 கோடி ரூபாய் இழப்பீடு கோரல்

11.3.2013 ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை தொடக்கம்

14.3.2013 விசாரணை மூன்று வாரம் தள்ளிவைப்பு.

4.jpg

 

eli_0.JPG

 

 

கடைசியாக வந்துள்ள செய்தியின்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக அரசின் முழு ஒத்துழைப்பு இல்லாத பட்சத்தில் இத்திட்டத்தை கைவிடப்போவதாகவும், இதுவரை இத்திட்டத்திற்கு செலவழித்த தொகையையும், நஷ்ட ஈட்டையும் தமிழக அரசே ஏற்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

 

Curtains down for elevated expressway, NHAI seeks closure.

 

http://articles.timesofindia.indiatimes.com/2013-08-10/chennai/41265961_1_nhai-soma-enterprises-national-highways-authority

 

ஜெ. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால், தி.மு.க அரசின் காலத்தில் தீட்டப்பட்ட அனைத்து திட்டங்களும் தற்பொழுது கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்களே பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இதில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளது...ஏனெனில் இதன் முழுஉரிமை தமிழக அரசிற்கே!

Edited by ராஜவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகக்ளுக்கு ஏற்படும் நல்ல திட்டங்களைக் கூட... மற்றைய கட்சியினர் ஆரம்பித்து வைத்த ஒரே.. காரணத்துக்காக முடக்குவது கண்டிக்கப்பட வேண்டியது. இதனால்... மக்களுக்கு, மேலும் சிரமும், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணவிரயமும் ஏற்படும். என்று தான்... இந்த அரசியல்வாதிகள் திருந்தப் போகிறார்களோ... தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

getimagejf.jpg

 

NHAI said it was the State which should bear the financial implications on account of the stoppage of work
 

The National Highways Authority of India (NHAI) has filed an additional affidavit in the Madras High Court seeking its intervention with the “arbitrary and irrational” act of the State Government in stalling the 19-km long “Chennai Port-Maduravoyal Elevated Corridor.”

 

The project was mainly for speedy evacuation of cargo from Chennai port. Work commenced in September 2010.

The NHAI had already filed a writ petition to quash the records of the Chief Engineer, PWD, Water Resource Organisation, Chennai Region, of January 28 this year and consequently direct the authorities to co-ordinate and take all steps to complete it within a planned time.

 

By the January 28 letter, the PWD had sought revised Coastal Regulation Zone clearance for the elevated corridor and also said certain remedial measures such as dredging two metre beyond the outer column and construction of the retaining wall for three to four meters in the extended portion should be carried out.

 

The NHAI said it was aggrieved by the stumbling blocks put up by the Tamil Nadu Government for the due execution of India’s first elevated project involving Rs.1800 crore.

 

In a latest additional affidavit filed a few days ago, the NHAI has said it was the State government which should bear all the consequential financial implications on account of the stoppage of work and delay in handing over the work fronts to the concessionaire.

 

‘Motivated action’

 

The NHAI could not be made responsible for the alleged losses suffered by the concessionaire as it was in no way responsible for the stoppage of the work. It was the “motivated, tainted” action of the State Government which had led to the situation of stalling of the project work.

 

Along with the affidavit, a document had also been filed of a meeting in which concessionaires of various NHDP projects in Tamil Nadu expressed their concern on the difficulties being faced by them in getting burrow area permission and stated that unless the present impasse was resolved, it would be difficult to complete the projects in hand.

 

New projects

 

They also expressed apprehension in taking up new projects in the State.

 

On the award of new projects in Tamil Nadu, the NHAI said that unless the State Government signed the State Support Agreement and extended necessary cooperation to the concessionaires, the authority may not be in a position to award new projects in the State.

 

 

Source: http://www.thehindu.com/news/national/tamil-nadu/nhai-seeks-court-intervention-in-portmaduravoyal-project/article5010537.ece

 

 

.

Edited by ராஜவன்னியன்
Link to comment
Share on other sites

அவனவன் எத்தனையோ பிரமாண்டமான ஆற்றுக்குள்ளாலும்.. ஏன்.. கடலைக் கடந்துகூட பாலங்களைக் கட்டுறான்.. கூவத்துக்குள்ளால் கட்ட இவ்வளவு பிரச்சினை..

 

ஜே அரசு இத்திட்டம் குறித்த தங்கள் கரிசனைகளைத் தீர்க்க இணைந்து செயற்பட வேண்டுமே தவிர திட்டத்தையே பாழ்படுத்தக் கூடாது.. அம்மாவுக்கு சென்னை வாக்கு வங்கியில் நம்பிக்கையே இல்லை போல..

 

சென்னை வாழ் மக்கள் அடுத்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் எத்தனையோ பிரமாண்டமான ஆற்றுக்குள்ளாலும்.. ஏன்.. கடலைக் கடந்துகூட பாலங்களைக் கட்டுறான்.. கூவத்துக்குள்ளால் கட்ட இவ்வளவு பிரச்சினை..

 

ஜே அரசு இத்திட்டம் குறித்த தங்கள் கரிசனைகளைத் தீர்க்க இணைந்து செயற்பட வேண்டுமே தவிர திட்டத்தையே பாழ்படுத்தக் கூடாது.. அம்மாவுக்கு சென்னை வாக்கு வங்கியில் நம்பிக்கையே இல்லை போல..

 

இதே தமிழக அரசு, MRTS (Madras Rapid Transit System) சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, பக்கிங்காம்  கால்வாயின் நடுவே சில இடங்களில் தூண்கள் எழுப்பபட்ட போது ஆட்சேபிக்கவில்லை!

 

சென்னை வாழ் மக்கள் அடுத்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.. :D

 

விரும்பியதெல்லாம் எங்கே நடக்கிறது? ஆனாலும், சென்னை பெரும்பாலும் தி.மு.க.வின் கோட்டைதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாலத்தைக் கட்டிவிட்டு,

பாலம் கட்டிய பல்லவ சோழா தலைவா உன்பணியே உயர்ந்தது

என கட் அவுட் அடித்து ஓட்டும் கலைமாமணிகள் இருக்கும் நாட்டில்
இதைவிட வேறு எதை எதிர்பார்க்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாலத்தைக் கட்டிவிட்டு,

பாலம் கட்டிய பல்லவ சோழா தலைவா உன்பணியே உயர்ந்தது

என கட் அவுட் அடித்து ஓட்டும் கலைமாமணிகள் இருக்கும் நாட்டில்

இதைவிட வேறு எதை எதிர்பார்க்கலாம்

 

உண்மைதான்! ஆனால் என்ன கருமாந்திரமும் இந்த அரசியல் கட்சிகள் செய்துவிட்டு போகட்டும்... ஆனால் அன்றாடம் போக்குவரத்து நெரிசலால் தினந்தோறும் அவதியுறும் சென்னை மக்களுக்கும், சென்னை நகரத்தின் தொழில் வளர்ச்சிக்கும் மிக முக்கிய உயிர் நாடி இந்த விரைவு மேம்பாலத் திட்டம். அதற்கு இந்த ஜெ அரசு போடும் முட்டுக்கட்டை ரொம்ப அநியாயம்.

 

இத்திட்டத்தை நம்பி, சென்னை துறைமுகத்தில் பல்நோக்கு வசதிகள் கொண்ட புதிய சரக்குப்பெட்டிகள் கையாளும் வளாகம்(New Container Terminal) மற்றும் திருபெரும்புதூரில் புதிய தொழிற்பேட்டை போன்ற திட்டங்கள் தொங்கி நிற்கின்றன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் பல மாற்றங்கள் இடம்பெறவேண்டும்

லஞ்சம் ஊழல் தலைவர்கள் செய்தாலும் தண்டனை வழங்க வேண்டும்
மக்கள் விழிப்படைய வேண்டும்
அரசியல்வாதிகளுக்கு முக்கியமாக திமுக அதிமுக போன்ற கட்சிகளுக்கு எனது வேண்டுகோள் பணம் உள்ளவர்களை அரசியல்வாதியாக்கும் நிலையை மாற்றுங்கள்  படித்த இளையவர்களை  உள்வாங்குங்கள். எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கில் அவர்களின் திட்டங்களை முடக்காமல் மக்கள் நலன் சார்ந்து செயற்படுங்கள் அதற்கான முடிவுகளை சட்டசபையில் இயற்றுங்கள்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தியார் மற்றும் டங்கு, தங்களின் கரிசனைக்கும், பதில்களுக்கும்.

போராட்டம் சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் பெறுவதை நீர்த்துப்போக செய்யக் கூடாதென்ற எண்ணத்தில் இந்த மாதிரி செய்திகளை இங்கே இணைப்பதற்கு முதலில் தயங்கினேன்...

 

ஆனால் இங்கே வரும் சினிமா செய்திகளைப் பார்க்கையில், தாய் தமிழகத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களின் நிலையை ஈழத்தமிழர்கள் அறிந்துகொள்ளட்டுமே என்ற வகையில் பதிந்தேன்.

 

மீண்டும் நன்றி! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

eli_0.JPG

 

போஸ்டர் ஒட்டுவதற்காகாவது பிரயோசனப்படட்டும்......திரைப்பட கதாநாயகிகளின் போஸ்டர்கள் வரவேற்கத்தக்கது. :wub:  :wub:

 

680_Masaani_tamil_Movie_Posters49e9dbe4a

Link to comment
Share on other sites

கூவம் கடுமையா நாறுமாமே!

அதன் மேலே செல்லும் வாகனச் சாரதிகள் மயங்கி விழமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

Link to comment
Share on other sites

இதே போனறதொரு திட்டம் சிங்கையிலும் செயற்படுத்தப்பட்டது.. சிங்கை துறைமுதத்தில் கொள்கலன்களை ஏற்றிக்கொள்ளும் பார ஊர்திகள் மேம்பாலம் வழியாகவே ஜூரோங் தீவுகள் வரை செல்லலாம்.. கிட்டத்தட்ட 25 கிமீ மேம்பாலம் என நினைக்கிறேன்..

ரொராண்டோவில் கார்டினர் விரைவுச்சாலை உடைந்து கொட்டுகிறது.. இதற்கு இந்த மாதிரி புதிய மேம்பால வடிவமைப்பு உதவும்.. ஆனால் கனடாவில் நவீனகால பால வடிவமைப்பு என்றாலே தலைதெறிக்க ஓடுவார்கள்..

தமிழகத்தில் இவ்வாறான வடிவமைப்புகள் வருவது சிறப்பானது.. ஆனால் அரசியல்வாதிகள் இடையில் புகுந்து கெடுப்பது துரதிர்ஷ்டவசமானது..

Edited by இசைக்கலைஞன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூவம் நதியில் 1950 ஆண்டுகள் வரை  49 வகையான மீன்களும் கடல் உயிரினங்களும் வாழ்ந்தன என்றால் ஆச்சரியப்படுவீர்கள்...

 

எழுபதுகளில் இதே கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராகவும், பின்னர் முதலமைச்சராகவும்  இருக்கும்பொழுது 22 மில்லியன் ரூபாய் செலவில் கூவம் நதி சுத்தமாக தூர்வாரப்பட்டு, புதிய நதி நீரில் படகு சேவைகளும் தொடங்கப்பட்டன. பல இடங்களின் இதற்கென படகு துறைகளும் அமைக்கப்பட்டது...

"ஆகா இன்ப நிலாவினிலே...ஓகோ ஜெகமே ஆடிடுதே... பாடிடுதே... விளையாடிடுதே...!" என கொஞ்ச நாட்கள் நாங்களும் பயணம் செய்தோம்..

 

2009020558600301.jpg    2002091900080201.jpg

 

 

பொறுப்பார்களா திருவாளர் சென்னை பொதுசனங்கள்? தத்தம் வீட்டுலுள்ள, தொழிற்சாலையிலுள்ள புண்ணிய நீரையில் கூவத்தில் கலந்தனர். அத்தோடு கூவ மங்கை நாற்ற மங்கையாகிப் போனாள்..! :rolleyes:

 

 

கூவம் கடுமையா நாறுமாமே!

அதன் மேலே செல்லும் வாகனச் சாரதிகள் மயங்கி விழமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

 

லாரிக்குள், பேருந்துகளினுள்ளே வாசனை ஊதுபத்திகளை கொளுத்திகொண்டு பயணம் செய்து பாலத்தை கடக்க வேண்டியதுதான்!

 

அப்போ வாசனை வராதில்லையா? :icon_idea:
 

Link to comment
Share on other sites

சென்னையின் தெருக்களின் அடியில் கழிவுநீர்க்குழாய்கள் அமைத்து நகருக்கு வெளியே கழிவுநீரைக் கொண்டுசென்று சுத்திகரிக்க வேண்டும்.. பின்பு படிப்படியாக கூவத்தை சுத்தப்படுத்தலாம்..!

Link to comment
Share on other sites

ஜெயலலிதா மாதிரி ஒரு கூறு கெட்டமூதேவி இந்த உலகத்தில் இருக்க முடியாது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையின் தெருக்களின் அடியில் கழிவுநீர்க்குழாய்கள் அமைத்து நகருக்கு வெளியே கழிவுநீரைக் கொண்டுசென்று சுத்திகரிக்க வேண்டும்.. பின்பு படிப்படியாக கூவத்தை சுத்தப்படுத்தலாம்..!

இந்த திட்டம் 50 வருடங்களுக்கு மேலாகவே சென்னையில் இருக்கிறது...

 

ஆனால் குறுக்கு வழியில் சுகத்தை தேடும் சென்னை தமிழர்கள், வாளாவிருப்பார்களா?

 

கையூட்டு, அலட்சியம், அரசின் மெத்தனம்...எல்லாம் சேர்ந்து கூவத்தை நாறடித்துவிட்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6tv0.jpg

 

 

நேற்றைய டெக்கான் க்ரோனிகிள்  ஊடகத்தில், மதுரவாயல்- சென்னை துறைமுகம் விரைவு மேம்பால திட்டதைப்பற்றி ஆங்கிலத்தில் வந்த செய்தி இது.
 

Link to comment
Share on other sites

இந்த திட்டம் 50 வருடங்களுக்கு மேலாகவே சென்னையில் இருக்கிறது...

ஆனால் குறுக்கு வழியில் சுகத்தை தேடும் சென்னை தமிழர்கள், வாளாவிருப்பார்களா?

கையூட்டு, அலட்சியம், அரசின் மெத்தனம்...எல்லாம் சேர்ந்து கூவத்தை நாறடித்துவிட்டன.

எடுத்து வரப்படும் கழிவுநீர் கூவத்தில் கொட்ட்படுவதாக அறிந்தேனே.. அப்படியில்லையா???:unsure:

கழிவுநீர் சுத்திகரிப்பு சம்பந்தமான பாடம் ஒன்று பல்கலையில் கற்ற ஞாபகம் உள்ளது.. :D அத்தகைய சுத்திகரிப்பு வசதி சென்னை புறநகரில் எங்குள்ளது என்று அறியத்தர முடியுமா? நானும் தேடிப்பார்க்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்து வரப்படும் கழிவுநீர் கூவத்தில் கொட்ட்படுவதாக அறிந்தேனே.. அப்படியில்லையா??? :unsure:

அத்தகைய சுத்திகரிப்பு வசதி சென்னை புறநகரில் எங்குள்ளது என்று அறியத்தர முடியுமா?

 

டங்கு,

 

கூவத்தில் கழிவுநீர் கொட்டலாம், மேசைக்கு கீழே துட்டு வெட்டணும்! :rolleyes:

 

கீழ்க்காணும் இடங்களில், "சென்னை குடிநீர் வழங்கல் & கழிவுநீர் வாரியத்திற்கு" சொந்தமான கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் உள்ளன.

 

 

கொடுங்கையூர்

வில்லிவாக்கம்

கோயம்பேடு

நெசப்பாக்கம்

பெருங்குடி

 

இந்த இணையத்தில் விவரணை இருக்கிறது.

 

http://www.chennaimetrowater.com/departments/operation/sewerage.htm

 

http://www.chennaimetrowater.com/pdf/stp.pdf

 

 

நான் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் பின்புறம் இம்மாதிரி ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை பார்த்த நினைவு.

Link to comment
Share on other sites

லாரிக்குள், பேருந்துகளினுள்ளே வாசனை ஊதுபத்திகளை கொளுத்திகொண்டு பயணம் செய்து பாலத்தை கடக்க வேண்டியதுதான்!

 

அப்போ வாசனை வராதில்லையா? :icon_idea:

 

 

உண்மையிலை நீங்கள் ஐடியா கிங் தான்.

எண்டாலும் எண்ணை, எரிவாயு பாரவூர்திகளில் ஊதுபத்திகளை கொளுத்திகொண்டு பயணம் செய்ய வேண்டாம் எண்டு சொல்லிவிடுங்கோ! பிறகு சென்னை மக்கள் பாவம்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

gallerye_013904453_785939.jpg

 

 

"சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலைத் திட்டம் என்பது, துறைமுக வளர்ச்சிக்கான திட்டம் மட்டுமல்ல, மாநகரின் நெரிசலுக்கு தீர்வு காண்பதோடு, மாநிலத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதால், மாநில அரசு, தடையை நீக்க வேண்டும்" என சுங்க முகவர்கள், வர்த்தக அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை துறைமுகம் ஆண்டுக்கு, 15 லட்சம் கன்டெய்னர்களை கையாண்டு வருகிறது. தினமும், 4,000 கன்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன. போதிய சாலை வசதி இல்லாததால், நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.இதற்கு தீர்வு காண, 1,815 கோடி ரூபாயில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரை, 19 கி.மீ., தூரத்திற்கு, மேம்பாலச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு, 2010, செப்., மாதம், பிரதமர் மன்மோகன் சிங், அடிக்கல் நாட்டினார். இதற்காக கூவம் கால்வாயையொட்டி பள்ளம் தோண்டி, பிரமாண்ட தூண்கள் அமைக்கப்பட்டன. 20 சதவீத பணிகள் மட்டுமே முடிந்த நிலையில், கூவம் நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில், பணிகள் நடப்பதாகக் கூறி, தமிழக அரசு தடை விதித்தது. இதனால், கடந்த ஆண்டு மார்ச், 30ம் தேதி முதல் பணிகள் முடங்கின.இதை தொடர்ந்து, பிரதமரின் ஆலோசகர் டி.கே.நாயர், மத்திய அரசின் செயலர் ஏ.கே.உபாத்தியாயா ஆகியோர், நேரில் வந்து, அரசுடன் பேச்சு நடத்தினர். தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எடுத்த, அடுத்தடுத்த முயற்சிகளும், தோல்வியில் முடிந்ததால், 450 நாட்களையும் கடந்து, பணி முடங்கியுள்ளது.

வேறு வழியின்றி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், 872.1 கோடி ரூபாய் இழப்பீடு

வேண்டும் என, ஒப்பந்த நிறுவனம் கோரியுள்ளது. இந்த நிலையில், திட்டம் கைவிடப்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடாமல், மாநில அரசு, தான் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என தொழில் வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

எஸ்.நடராஜன், சென்னை சுங்க இல்ல முகவர் சங்க நிர்வாகி:

 

நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கு ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் முக்கியம். 130 ஆண்டுகளைக் கடந்த சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்கேற்ப, கட்டமைப்பு வசதிகள் அவசியம். கன்டெய்னர் லாரிகளால் நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை - மதுரவாயல் மேம்பால சாலை, சிக்கலுக்கு பெரும் தீர்வாக அமையும். மாநில அரசு, உள்நோக்கத்தோடு, ஏதோ காரணத்தைச் சொல்லி முடக்கி வைப்பது, ஏற்புடையது அல்ல. இந்த திட்டம் வராவிட்டால், துறைமுகத்தை நம்பியுள்ளோருக்கு பின்னடைவு ஏற்படும். துறைமுகம், 10 ஆண்டுகள் பின்னோக்கி போய்விடும். வெளிநாட்டு வணிக நிறுவனங்கள், வரதயக்கம் காட்டும். இது துறைமுகத்திற்கு மட்டுமல்ல; மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பாதிப்பாகும். இதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

 

சோழநாச்சியார் ராஜசேகர், தமிழ் வர்த்தக சங்கத் தலைவர்:

 

சென்னை நகரின் நெரிசலுக்கு தீர்வு காண கொண்டு வரப்பட்ட திட்டத்தை, சரியான நேரத்தில் செயல்படுத்த முடியாதது கவலை அளிக்கிறது. டில்லி - மும்பை இண்டஸ்டிரியல் காரிடாரால், மும்பை அதிவேக வளர்ச்சி பெற்றது. விரைவில், பெங்களூரு - சென்னை இண்டஸ்டிரியல் காரிடார் அமைக்கப்பட உள்ளது.இதனால், தென் மாநிலங்கள் அனைத்தும், சென்னையோடு இணைக்க முடியும். சென்னை - மதுரவாயல் மேம்பால சாலை அமைவதால், காரிடாரின் பயன் தமிழகத்திற்கு முழுவதும் கிடைக்கும். தொழில் நிறுவனங்களும் அதிகரிக்கும். சென்னை துறைமுகத்துக்கான திட்டம் என, குறுகிய நோக்கில் பார்க்கக் கூடாது. எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களின் வளர்ச்சி, மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியது. மாநில அரசு தடை நீக்கி, திட்டத்துக்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

 

கஜேந்திரன், ஏற்றுமதியாளர்:

 

சென்னை துறைமுகத்தில், கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், வர்த்தகர்கள், எண்ணூர், காட்டுப்பள்ளி, கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகங்களுக்கு திரும்பிவிட்டனர். ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல், சுங்க வரி ஈட்டித்தரும் துறைமுகத்தின் எதிர்காலமே, சென்னை - மதுரவாயல் மேம்பால சாலைத் திட்டத்தில் தான் உள்ளது. இதை செயல்படுத்தாவிட்டால், நாளடைவில் நலிவடைந்து, மூடும் நிலை வரலாம்.துறைமுகம் சார்ந்த பிரச்னைமட்டுமல்ல; மாநில வளர்ச்சியும் இதில் அடங்கியுள்ளதை, தமிழக அரசு உணர வேண்டும்.

 

 

சுகுமார், தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர்:

 

நெரிசல் காரணமாக, துறைமுகத்தில் சரக்கு ஏற்றும் லாரிகள், நகரை விட்டு வெளியேற, ஐந்து நாட்கள் வரை ஆகி விடுகிறது. இதற்கு, சென்னை - மதுரவாயல் மேம்பால சாலை தான் ஒரே தீர்வு; அரை மணி நேரத்தில் சென்று விடலாம். மதுரை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டாலும், அவசர உதவிகள் தேவைப்பட்டாலும், பாலத்தில் இருந்து இறங்க வழி உள்ளதால், 20 நிமிடங்களில், சென்னை அரசு பொது மருத்துவமனையை அடையலாம்.திட்டத்துக்கான தடை நீக்கக் கோரி, 30ம் தேதி முதல் ஸ்டிரைக் நடத்த உள்ளோம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திட்ட வரைவில், தொழில்நுட்ப ரீதியாக சிக்கல்கள் இருந்தாலும், அவற்றை சரி செய்து, திட்டத்தைத் துவங்க, எல்லா நடவடிக்கைளையும், மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். மாநில அரசு தடை நீங்கி, பணிகள் விரைவில் துவங்க வேண்டும் என்பதே, சென்னை மக்களின் எதிர்பார்ப்பு.

 

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=785939

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
மதுரவாயல் 'பறக்கும் சாலை' திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

 

 

hc.jpg

 

 

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரை பறக்கும் சாலை திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

 

ஆனால், கூவம் ஆற்றின் வழியாக திட்டத்தை செயல்படுத்த தமிழக பொதுப்பணித் துறை எதிர்ப்புத் தெரிவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

இந்த உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அனுமதி அளித்தும், இதுகுறித்து பொதுப்பணித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் இன்று தீர்ப்பளித்துள்ளது.

 

 

http://www.dinamani.com/latest_news/2014/02/20/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/article2067621.ece

 

 

இரண்டு ஆண்டுகள் நீதிமன்ற வழக்கால் இழுத்தடிக்கப்பட்ட இத்திட்டம் இனியாவது சுமுகமாய் நிறைவேறினால் நன்று. :)

 

மூளியாய் நிற்கும் இத்தூண்களுக்கு விடிவு கிட்டும்!

 

elevated_corridor_1762885g.jpg

Link to comment
Share on other sites

கூவம் வழியாக மேம்பாலம் அமைப்பது அவ்வளவு உசிதமானதல்ல.. யாராவது விழுந்துவிட்டால் மீட்புப்பணி கடினமாகிவிடும்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2013 ஆவணிமாதம் தொடங்கப்பட்ட இந்தச் சின்னஞ்சிறிய பதிவே 7 மாதங்கள் இழுபடுது. அந்தப்பெரிய மேம்பாலப் பணி ஆக 4 வருடங்கள்தானே.... :D:lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூவம் வழியாக மேம்பாலம் அமைப்பது அவ்வளவு உசிதமானதல்ல.. யாராவது விழுந்துவிட்டால் மீட்புப்பணி கடினமாகிவிடும்.. :icon_idea:

 

டங்கு, 19 கி.மீ தூரத்திற்கு முதலில் சாலை அமைக்க அகலமான இடம் வேண்டுமே?

 

பூந்தமல்லி - சென்னை சாலையில், சென்னை சென்ட்ரல் முதல் அமிஞ்சிக்கரை வரை ஏறத்தாழ 12 கி.மீ தூரத்திற்கு சாலையின் நடுவே, அடியில் 15மீ - 20 மீ ஆழத்தில் சென்னை மெட்ரோ ரயில் தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மேலேயே கனரக வாகனங்கள் செல்லும் இன்னொரு மேம்பாலம் அமைக்க முடியுமா..?

 

பல நாடுகளில் நகரத்தினுள்ளே செல்லும் நதியின் கரையோரமாகவே பாலங்கள் செல்வதை கவனித்துள்ளேன்.

 

ஓட்டுநர்கள், கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டியதுதான்! :)

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
    • தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை.   இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
    • வேன்ஸ் இன் பின்புலம் மிக சுவாரசியமானது.  சிற்ரூரில் வாழ்க்கை, உழைக்கும் வர்க்க பின்புலம், இராணுவ உத்தியோகம், வெள்ளையினமல்லாத மனைவி என பல விடயங்களில் டிரம்புக்கு எதிரான வாழ்க்கை. மேலே பகிடி சொன்ன உழைக்கும், நடுத்தர மக்கள் ஏன், எப்படி வலது சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால் டிரம்ப்பை போலவே ஆளும் உளறுவாயன். டிரம்பை விட லூசுதனமாக மேடைகளில் பேசுவார். மைக் பென்ஸ் போல காலம்தாழ்த்தியாவது டிரம்பை எதிர்க்க கூட மாட்டார் என நினைக்கிறேன். டிரம்ப்பின் நாலு வருடத்தின் பின் டிரம்ப்பின் அரசியல் பிராண்டுக்கு வாரிசு இவரா இல்லை டிரம்பின் மகளா என்பதில் லடாய் ஆரம்பிக்கலாம்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.