Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவு எங்கள் கோட்டை. “இதற்குள் எவனடா வந்தவன்” ஈபிடீபி கொலை வெறியாட்டம்

Featured Replies

 

நெடுந்தீவு எங்கள் கோட்டை. “இதற்குள் எவனடா வந்தவன்” ஈபிடீபி கொலை வெறியாட்டம்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தீவகத்திற்கான ஒரேயொரு வேட்பாளராக 12ம் இலக்கத்தில் போட்டியிடும் யாழ் மாநகரசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அவர்களை ஆதரித்து நெடுந்தீவில் அவரது ஆதரவாளர்கள் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தபோது..

... நெடுந்தீவு மேற்கு ஒற்றைப் பனையடி என்றவிடத்தில் நேற்று மதியம் EPDP ஐச் சேர்ந்த சுதன் மோகனதாஸ் என்பவர்கள் துண்டுப் பிரசுரங்களைப் பறித்துக் கிழித்திருக்கிறார்கள்.

பின்னர் இரவு நேரம் நெடுந்தீவுப் பிரதேச சபையின் சிவப்பு நிற .NP. 253-5112 என்ற இலக்கம் கொண்ட பிக்கப் வாகனத்தில் வந்த பிரதேச சபைத் தலைவர் ரஜீப், ஈபிடீபி சுதன், மோகனதாஸ் , எட்வேட் ராஜா, ரஞ்சன், நெடுந்தீவு CTP பஸ் சாரதி அப்பன் உட்பட பலர் இரவுவேளை இரும்புக்கம்பி பொல்லுகள் சகிதம் சைமன் ஜேசுதாசன் ஜேசுதாசன் அன்ரனிற்றா ஆகியோரை அடித்து உதைத்து தாக்கியுள்ளனர்.

இவர்களுடன் இருந்த வவுனியாவைச் சேர்ந்த ரணசிங்க ஆரியசேனா என்பவரையும் தாக்கியுள்ளனர்.

இவர்கள் தற்போது ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

நெடுந்தீவு எங்கள் கோட்டை. “இதற்குள் எவனடா வந்தவன்” என்று கேட்டு நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரஜீப் தாக்கியுள்ளார் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளார்கள்.

தீவகம், குறிப்பாக நெடுந்தீவு, இலங்கை இராணுவ ஒட்டுக்குழுவான EPDP யின் பயங்கரவாதப் பிடிக்குள் உள்ள பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

(மேலதிக இணைப்பு) நெடுந்தீவில் கூட்டமைப்பினரின் வீடுகளுக்குள்ளே ஈ.பி.டி.பி குண்டர்கள் புகுந்து அட்டகாசம்: பெண் உட்பட மூவர் படுகாயம்

நெடுந்தீவில் வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி.பி குண்டர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவமானது நேற்றிரவு 9 மணியளவில் நெடுந்தீவு மேற்கிலுள்ள ஒற்றைப்பனையடியில் இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவில் மிக அண்மையில் கூட்டமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாகாண சபை பிரசாரப் பணிகளை கூட்டமைப்பினர் மேற்கொண்டு வந்தனர்.

ஈ.பி.டி.பி யின் பிரதேச சபை தவிசாளர் ரஜீப் தலைமையில் பிரதேச சபை வாகனத்தில் ஈ.பி.டி.பி உறுப்பினர்களான சுதன், மோகனதாஸ், எட்வேட்ராஜா ரஞ்சன், வாகனச் சாரதி அப்பன் ஆகியோரும் பிரதேச சபைக்கு சொந்தமான மேலும் பல வாகனங்களில் மேலும் பல குண்டர்களும் சென்று இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

வீடொன்றிற்குள்ளாக சென்ற இவர்கள் வீட்டினை உடைத்து இரும்புக் கம்பிகளாலும் கொட்டன்களாலும் தாக்கியதோடு, வீட்டிலிருந்த பெண்ணொருவரையும் முற்றத்தில் இழுத்துப் போட்டு அடித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் நெடுந்தீவில் திருமணம் செய்து வசித்து வரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரும் கூட்டமைப்பின் ஆதரவாளருமான ரணசிங்க ஆரியசேன (வயது 40), சைமன் யேசுதாஸன், யேசுதாஸன் அன்ரனிற்றா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர மேலும் சில காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கூட்டமைப்பின் வேட்பாளர்களது துண்டுப் பிரசுரங்களையும் இவர்கள் மலக் குழிகளுக்குள்ளாக போட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நெடுந்தீவில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது

Thankx Facebook ஈழத்தில் இருந்து ஒரு குரல்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைப் பாசிசவாதிகள் என்று சொல்லிச் சொல்லியே இந்தப் பாசிச வெறியர்கள் தாம் தம்மை வலுப்படுத்திக் கொண்டது தான் மிச்சம்..! அராஜகம்.. பாசிசம்.. இவர்களோடு கூடப் பிறந்தவை. டக்கிளஸ் தேவானந்தா ஈ பி ஆர் எல் எவ் காலத்தில் இருந்து இதைத் தான் செய்து வருகிறார். சுடுகாடு போகும் வரை இதைத்தான் செய்வார். இதுதான் அவரின் சன நாய் அக அரசியல்..! :icon_idea::o

  • தொடங்கியவர்

உண்மைதான் நெடுக்ஸ் இந்த கள்ளக் காடையங்கள் எப்ப எம் மண்ணை விட்டு அழியுரான்களோ அப்பவே எம் இனம் வாழும் 

  • கருத்துக்கள உறவுகள்
டக்லஸ்சின் கோட்டை என்று தெரிஞ்சும் பிரச்சாராத்திற்குப் போன கூட்டமைப்பினரை பாராட்டத் தான் வேண்டும்
 
  • தொடங்கியவர்

 

டக்லஸ்சின் கோட்டை என்று தெரிஞ்சும் பிரச்சாராத்திற்குப் போன கூட்டமைப்பினரை பாராட்டத் தான் வேண்டும்

 

நீங்க இப்பிடி உசுப் பேத்துங்கோ அந்த பிள்ளை :icon_idea: அடி வாங்கி சாகட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பி.டீ.பீ.க்கு கோட்டை என்றால்... என்னவென்றே... தெரியாத, பொறுக்கித்தின்னியள்.
இதுகளும்... என்ன, இழவுக்கு, இந்த உலக‌த்திலை இருக்குதுகளோ... தெரியாது.
தமிழ் இனத்துக்குப், பிடித்த பீடைகள்.....
 

என்ன செய்வது அன்று(2002 பாரளுமன்ற தேர்தல் பிரச்சார வேளையில் ) நாரந்தனையிலும் இரண்டு உயிர்களை பறித்தனரே. கமல்,மற்றும் ஐயா ஏரம்பு. மக்கள் விரோதிகள் யார் என்று இன்னும் எங்கள் சனம் கண்டு கொள்ளவில்லை.இப்பவும் சிறிதர் வாசலில் பாருங்கள் கூட்டத்தை..............  :(

 

பாலகியை வன்புணர்வு செய்து கிணற்றுக்குள் போட்டவனும் 

கல்லெறிய ஆக்களை திரட்டி கொண்டு யாழ்ப்பாணம் வந்தவர்களும் 

இன்னும் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் வரை ......................

 

யாரை நோவது ????????????

 

கோட்டை பற்றிய விபரங்களை முறையா சேகரித்து ஆஸ்பத்திரியில் இருப்பவர்களை, உறவினர்களை, நண்பர்களை நவனீதம் பிள்ளையை சந்திக்க வைக்க வேண்டும். அவவின் உலங்கு வானூர்த்தியை கோட்டைக்கு அழைத்து சென்று அங்குள்ள அரச கொடுமைகளை அவவுக்கு காட்ட வேண்டும். முட்டாள்த்தனமாக ஈ.பி. ஈ.பி என்று குழறிக்கொண்டிருக்காமால் அரச அடாவடித்தனங்கள் அரசின் பேரில் பதிவாக வைக்கவேண்டும். அரசு தேவாந்தாவை வைத்தல்ல, கனகரத்தினம், K.P. யைக்கூட வைத்து இவற்றை செய்யும் ஆற்றல் உள்ளது. எனவே தமிழர்களுக்குள் ஒரு சணடை நடந்தால் அதற்கு அரசு பொறுப்பு. அதை அரசுசெய்விக்கும் தொழில்துறை முறைகள் ஐ.நா வரையும் பதிவாக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே டக்ளசுக்குக்காக வாதாடுபவர்கள், புலிகளை பாசிசவாதிகள் என்போம் ஏன் இப்போ பம்முகிறீர்கள்??

டக்ளசுக்கு துணிவு இருந்தால் கூட்டமைப்பை பிரச்சாரத்துக்கு தீவுப்பகுதிக்கு உள்ளே விட்டு விட்டு மக்களை வாக்களிக்க செய்து வெல்ல செய்ய முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

பொறுக்கித் தின்னிகள், புலியைப் பற்றி வசை பாட மட்டும்தான் தெரியும்.
 

ஈ.பி.டி.பி. காடையர் கும்பலின் கைகளை வெட்டிவிட்டு வாழவிடனும்! :wub:

மக்கள் EPDP க்கு வாக்களிக்கணும் என்று காட்டாயம் இல்லையே...

வாக்கு போட போக வேண்டியது இல்லை தானே இந்த Election ஏ பிடிக்க வில்லை என்றால்

EPDP யை யாராவது நல்லவர்கள் என்றார்களா?

 

LTTE யும் EPDP யும் மக்களை ஒடுக்குவதில் ஒன்றுதான்....

 

என்ன EPDP கூடுதலாக திருடர்களும்/அயோக்கியர்களுமாக இருக்கிறார்கள்....

LTTE யும் EPDP யும் மக்களை ஒடுக்குவதில் ஒன்றுதான்....

 

இரண்டுபேரும் ஒண்டு தாங்களா...???   

 

கசிப்பு காச்சி விக்கிறதும்  கசிப்பு காச்ச கூடாது எண்டு தடுக்கிறதையும் ஒண்டு எண்டுதானோ...?? 

 

ஒங்கட பொது அறிவை கண்டு வியக்கேன்... !!!!   :icon_idea:  :icon_idea:  :icon_idea:

 EPDP திருடர்களும்/அயோக்கியர்களுமாக இருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுபேரும் ஒண்டு தாங்களா...???   

 

கசிப்பு காச்சி விக்கிறதும்  கசிப்பு காச்ச கூடாது எண்டு தடுக்கிறதையும் ஒண்டு எண்டுதானோ...?? 

 

ஒங்கட பொது அறிவை கண்டு வியக்கேன்... !!!!   :icon_idea:  :icon_idea:  :icon_idea:

 

:D  :D  :lol:

 EPDP திருடர்களும்/அயோக்கியர்களுமாக இருக்கிறார்கள்

 

EPDPஇல் திருடர்களும் அயோக்கியர்களும் மட்டுமே இருக்கிறார்கள்

  • தொடங்கியவர்

இரண்டுபேரும் ஒண்டு தாங்களா...???   

 

கசிப்பு காச்சி விக்கிறதும்  கசிப்பு காச்ச கூடாது எண்டு தடுக்கிறதையும் ஒண்டு எண்டுதானோ...?? 

 

ஒங்கட பொது அறிவை கண்டு வியக்கேன்... !!!!   :icon_idea:  :icon_idea:  :icon_idea:

சரியான வார்த்தைகள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.