Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

madras cafe போராட்ட செய்திகள் உடனுக்குடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் , பையா!

 

துளசி இல்லாததே தெரியாத மாதிரிச் செய்திகளை உடனுக்குடன் இணைப்பதற்கு மீண்டும் நன்றிகள்!

பையனுக்கும்,தமிழக மாணவர்களுக்கும், நாம் தமிழர் இயக்கத்துக்கும், மும்பை ஆதரவாளர்களுக்கும்........ நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

Vaiko%20lead.jpg

தமிழ் இனப்படுகொலை செய்த  கூட்டுக்குற்றவாளிகள் தங்கள் தரப்பை நியாயப்படுத்திக் கொள்ள சிங்கள பேரினவாத அரசின் பேருதவியுடன் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்ட “மெட்ராஸ் கஃபே” திரைப்படம் வெளியிடக்கூடாது என கொந்தளிக்கும் உணர்வுடன் விடுத்த வேண்டுகோளை ஏற்று இன்று (23.08.2013) வெளியிடுவதாக இருந்த திரைப்படம் திரையிடப்படவில்லை.

தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் இப்படத்தை திரையிட இயக்குனரும்,  தயாரிப்பாளரும் பலவகையில் முயற்சி செய்து இலாபத்தில் பங்கு தருவதாக ஆசை வார்த்தை கூறியபோதும் தமிழர்களின் உரிமைகளுக்காக சுயநலமின்றி போராடும் எங்களின் வேண்டுகோளை ஏற்று தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து “மெட்ராஸ் கஃபே” திரைப்படத்தை திரையிடாமல் ஒத்துழைப்பு நல்கியிருக்கின்ற திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையுலத்தினருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘தாயகம்’    வைகோ

சென்னை - 8    பொதுச்செயலாளர்

23.08.2013    மறுமலர்ச்சி தி.மு.க.

 

http://www.sankathi24.com/news/32481/64//d,fullart.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
u2cf.jpg
 

 

 

• வணக்கம் முகநூல் நண்பர்களே....

பிரபாகரன்மீது வெறுப்பு ஏற்படுத்தும் விதமாக மெட்ராஸ் கபே : காங்கிரஸை காப்பாற்றவா மெட்ராஸ் கபே..?

'மெட்ராஸ் கஃபே படம் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது! ஈழத் தமிழ் மக்களுக்கு அமைதியையும் சமாதானத்தையும் வழங்க நினைக்கும் ராஜீவ் காந்தி, 
வடக்குக் கிழக்கு தேர்தலை அமைதியாக நடத்தவும் ஈழ மக்களுக்கு சமாதான சகவாழ்வை பரிசளிக்கவும் இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்கிறார். அந்த ஒப்பந்தத்தை பாஸ்கரன் (பிரபாகரன்) எதிர்க்கிறார்.

எதிர்க்கும் பாஸ்கரனை சரிக்கட்ட, அல்லது தீர்த்துக்கட்ட விக்ரம் சிங் என்ற ரா உளவு அதிகாரி யாழ்ப்பாணம் செல்கிறார். அவருடன் பிரிட்டன் ஊடகவியலாளர் ஜெயாவும் (அனிதா பிரதாப்) செல்கிறார். ஜெயா, பாஸ்கரனைச் சந்தித்து நேர்காணல் எடுக்க, விக்ரமோ சிறியை (சிறி சபாரத்தினம்) வைத்து பாஸ்கரனை முடிக்கத் திட்டமிடுகிறார் அதற்காக சிங்கப்பூரிலில் இருந்து ஆயுதங்களைக் கப்பலில் தருவித்து சிறிக்கு வழங்கத் திட்டமிடுகிறார். இன்னொரு பக்கம் மல்லையாவை (மாத்தையா) ராவின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரவும் முயற்சி நடக்கிறது. 

சிறிக்கு ஆயுதங்கள் கப்பலில் வந்து இறங்கும்போது உளவு அதிகாரி ஒருவராலேயே அந்தச் செய்தி புலிகளுக்குச் சொல்லப்பட்டு புலிகள் வந்து ஆயுதங்களைக் கைப்பற்றிச் செல்கிறார்கள். இறுதியில் மல்லையாவும் சிறியும் கொல்லப்படுகிறார்கள். ராவின் திட்டங்கள் தோல்வியடைய அடுத்து ராஜீவ் காந்தி பதவி இழக்க, அடுத்து வரும் பிரதமர் இந்தியப் படைகளை இலங்கையில் இருந்து வாபஸ் பெறுகிறார்.

அடுத்த தேர்தலுக்குத் தயாராகும் ராஜீவ் காந்தி தன் தேர்தல் பிரசாரத்தில், 'மீண்டும் தான் ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பேன் என அறிவிக்க, பாஸ்கரன் ராஜீவைக் கொல்லுமாறு கட்டளையிடுகிறார். அதை இடைமறித்துக் கேட்கும் ரா அதிகாரிகள் ஸ்ரீபெரும்புதூர் வருவதற்கு முன்னால் ஹைதராபாதில் இருக்கும் ராஜீவ் காந்தியை தமிழகம் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். அதையும் மீறி வரும் ராஜீவ் காந்தி எல்.டி.எஃப். அமைப்பால் (புலிகள்) கொல்லப்படுகிறார். 

லண்டன் பத்திரிகையாளர் ஜெயா மூலம் ராஜீவ் கொலை பற்றிய செய்தியை உறுதிபடுத்திக் கொள்ளும் விக்ரம்சிங் ராஜீவ் கொல்லப்பட்ட மேடைக்கு அருகில் செல்லும்போது குண்டு வெடிப்பதோடு படம் முடிவுக்கு வருகிறது.

ஈழத்தில் இருந்து ராஜீவைக் கொல்ல பாஸ்கரன் திட்டமிடுவதும் சிங்கப்பூரில் இருக்கும் மெட்ராஸ் கஃபேயில் அதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதும் ஜெர்மனியில் இருந்து வரும் இன்ஜினீயர் ஒருவர் வெடிகுண்டை தயாரித்துக் கொடுப்பதாகவும் சொல்கிறது 'மெட்ராஸ் கஃபே.

''அப்பட்டமாக ஈழத்தமிழர் பிரச்னையை குறிப்பாக விடுதலைப் புலிகளை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் சொல்லும் சம்பவம் எதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையிலும் சொல்லப்படாத சம்பவங்களை இதில் கற்பனையாக உருவாக்கி இருக்கிறார்கள். 

ராஜீவ் காந்தி மீது அனுதாபம் ஏற்படுத்தும் வகையிலேயே திரைக்கதையும் உருவாக்கப்பட்டிருப்பது பற்றி நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால் பிரபாகரன்மீது வெறுப்பு ஏற்படுத்தும் விதமாக கதை நகர்வதுதான் பிரச்னை. ஒரு ஆயுதக் குழுக்கள் தமிழ் பேசும் பெண்களையும், குழந்தைகளையும் கொடூரமாகச் சுட்டுக் கொல்வதில் இருந்துதான் படம் துவங்குகிறது. 

ஒரு கட்டத்தில் உளவு அதிகாரியான விக்ரம் சிங்கின் இளம் மனைவியை கொச்சிக்கே வந்து கொலைசெய்கிறார்கள் புலிகள். படம் முழுக்க ஆயுதங்கள் மீது வெறி கொண்டவர்களாகவும் கொலைசெய்ய அஞ்சாதவர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். 

 

போராளிகளின் தரப்பு நியாயங்கள் துளிகூட படத்தில் இல்லை. ராஜீவ் காந்தி மரணமடைந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தப் படத்துக்கான தேவை இப்போது என்ன? என்பதுதான் எங்களது கேள்வி'' என்கிறார்கள் தமிழீழ ஆதரவாளர்கள்.

''வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுக்க காங்கிரஸ் எதிர்ப்பலை வீசும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இந்தப் படம் ஓரளவு கைகொடுக்கலாம் என்பதற்காகவே இப்படி ஒரு படம் உருவாக்கப்பட்டிருக்கிறது'' என்கிறார்கள்.

இந்திய அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வந்த ராஜீவ் காந்தியை சிங்கள ராணுவத்தைச் சேர்ந்தவர் பிடறியில் அடித்தது படத்தின் இயக்குனர் ஜான் ஆப்ரஹாமுக்கு தெரியவில்லை. படத்தின் காட்சிக்காக சிங்கள போர்விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை உற்றுக்கவனித்தால் இந்தப் படத்தின் உண்மையான தயாரிப்பாளர்கள் யார் என்பது தெரியும்!

 

fc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மெட்ராஸ் கபே" திரைப்படம் கோவை "பன் சினிமா" திரை அரங்கில் வெளி இடுவதாக செய்தி கிடைத்ததை அடுத்து திரை அரங்கத்தின் உள்ளே சென்று எச்சரித்து வந்தோம்.
காவல் துறையும், திரை அரங்க உரிமையாளரும் திரைப்படம் வெளியிடப்பட்ட வில்லை என உறுதி அளித்ததின் பேரில் நாம் தமிழர் தோழர்கள் திரை அரங்கில் இருந்து சென்றனர்.

நாம் தமிழர் செய்தி பிரிவு 
கோவை மாவட்டம்
 

 

xtz3.jpg

we84.jpg
 
fc
 
 
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உறவுகளும், புலம் பெயர் உறவுகளும் இந்தப் படத்துக்கு காட்டும் எதிர்ப்பை பார்த்து,
இனியாவது... கிந்திக்காரன் லூசுத்தனமாய், படம் தயாரிக்கக் கூடாது என்று, இதோடை திருந்த வேண்டும்.
பைத்தியக்காரங்கள்... நெடுகவும் தமிழனின் தலையில் சம்பல் அரைக்க வெளிக்கிட்டால், இது தான் நடக்கும்.
தமிழனுக்கு..உதவி செய்யாவிட்டாலும், உப‌த்திரவம் செய்யாமல் இருங்கள்... *** **** ...

 

*** **** சுயதணிக்கை செய்யப் பட்டது.

Edited by தமிழ் சிறி

இன்றுதான் பார்த்தேன் .தொடர்ந்து இணையுங்கள் பையா .என் ஆதரவு எப்போதும் இந்த விடயத்தில் இருக்கும் ...............நன்றிகள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன் .தொடர்ந்து இணையுங்கள் பையா .என் ஆதரவு எப்போதும் இந்த விடயத்தில் இருக்கும் ...............நன்றிகள் .

இந்தப் படம் பெரிய ஒரு போராட்டத்துக்குப் பிறக்கு ஓடாமல் விடப் பட்டு இருக்கு தமிழ் நாட்டில்...இந்த போராட்டத்தில் முதல் குதிச்ச ஆள் அண்ணன் சீமான்....பிறக்கு மாணவர்கள் , ஜயா வைக்கோ, டாக்க்டர் ராமதாஸ்...உங்கட நாட்டில ஓடினாலும் விடாதைங்கோ....இந்தப் படப் போராட்டம் மூலம் மாணவர்கள் தாங்கள் ஓய்ந்து போக்க வில்லை என்று மறு படியும் காட்டி இருக்கினம்......... :)  :D 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் பெரிய ஒரு போராட்டத்துக்குப் பிறக்கு ஓடாமல் விடப் பட்டு இருக்கு தமிழ் நாட்டில்...இந்த போராட்டத்தில் முதல் குதிச்ச ஆள் அண்ணன் சீமான்....பிறக்கு மாணவர்கள் , ஜயா வைக்கோ, டாக்க்டர் ராமதாஸ்...உங்கட நாட்டில ஓடினாலும் விடாதைங்கோ....இந்தப் படப் போராட்டம் மூலம் மாணவர்கள் தாங்கள் ஓய்ந்து போக்க வில்லை என்று மறு படியும் காட்டி இருக்கினம்......... :)  :D 

 

சீமானின் பெயரை, முதலில் குறிப்பிட்டால்... எனது, ஜேர்மன் யாழ்கள‌ நண்பருக்கு கோவம் வந்திடும்... பையா... :D  :lol:  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் பெயரை, முதலில் குறிப்பிட்டால்... எனது, ஜேர்மன் யாழ்கள‌ நண்பருக்கு கோவம் வந்திடும்... பையா... :D  :lol:  :icon_idea:

என்ன செய்ய அண்ணை விபரம் தெரியா சின்ன‌ பையன்.....யார் நல்லவர் யார் கெட்டவர் என்று  தெரியாமை கொக்கரிக்கிறதை பார்க்க வியப்பாய் இருக்கு...

இந்தப் படம் பெரிய ஒரு போராட்டத்துக்குப் பிறக்கு ஓடாமல் விடப் பட்டு இருக்கு தமிழ் நாட்டில்...இந்த போராட்டத்தில் முதல் குதிச்ச ஆள் அண்ணன் சீமான்....பிறக்கு மாணவர்கள் , ஜயா வைக்கோ, டாக்க்டர் ராமதாஸ்...உங்கட நாட்டில ஓடினாலும் விடாதைங்கோ....இந்தப் படப் போராட்டம் மூலம் மாணவர்கள் தாங்கள் ஓய்ந்து போக்க வில்லை என்று மறு படியும் காட்டி இருக்கினம்......... :)  :D 

நன்றி பையா ..............இங்கும் ஒரு கூட்டம் எப்போதும் என்னத்தையோ தாங்கள் சாதிப்பதாக நினைத்து சில கோமாளித்தனங்களை செய்த வண்ணமே உள்ளனர் .......அவர்களை நாம் கணக்கெடுப்பதில்லை ...........மாவீரர் தினம் அன்றே திரையில் படம்போட்டவர்கள் ..............அதற்கு கூறிய காரணம் .இது தமிழர்களுக்காக அல்ல கிந்தியர்களுக்காக .என்று ..........அப்படிப்பட்ட அறிவாளிகள் இந்தப்படத்தை கிந்தியர்களுக்காகவேணும் போடுவார்கள் ..............நட்ப்பதை பார்ப்போம் ...............சீமானுக்கு நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்
இதுக்கு மாற்று கருத்தாளர் கூட்டம் என்ன சொல்லுதுகள் ....??
 
சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று யாரும் இந்தபக்கம்...
இன்னமும் ஒரு சினிமாவையும் காட்டவில்லை??? 

 

இதுக்கு மாற்று கருத்தாளர் கூட்டம் என்ன சொல்லுதுகள் ....??
 
சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று யாரும் இந்தபக்கம்...
இன்னமும் ஒரு சினிமாவையும் காட்டவில்லை??? 

 

 

கருத்து சுதந்திரம்!! :o

 

 

அப்ப No FIre Zone??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையா இணைப்பிற்கு ..எம் வரலாற்றை .உண்மையை புதைகுழி தோண்டி புதைக்கலாம் என்ற இவர்களின் கனவு மட்டும் தெரிகிறது ...............ஆனால் இவர்கள் தமிழீழத்தில் அடக்கி ,வைத்திருக்கும் எம் உறவுகள் மட்டும்தான் தமிழர்கள் என நினைக்கிறார்கள் போல ,தாய்த்தமிழ்நாட்டையும் ,புலம்பெயர்வாழ் தமிழர்களையும் மறந்துவிட்டனர் .............நினைவு படுத்துவோம்..................

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்
-Toronto-230813-madrascafe-pro-150.jpg

நேற்றையதினம் மதியத்திலிருந்து மாலை வரை கனடியத் தமிழர்கள் டொரொண்டோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மதியத்திலிருந்து திரைப்படம் யாவும் இடை நிறுத்தப்பட்டிருந்தது. அரசின் சதியின் பின்புலத்தில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் 'மெட்ராஸ் கஃபே' என்ற திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளதோடு தமிழர் வாழும் தேசங்களில் எல்லாம் இன்று ஆகஸ்டு மாதம் 23 ம் திகதி திரையிட முயற்சிக்கப்பட்டது.

  

அந்த வகையில் தமிழகத்தில் இந்த திரைப்படம் திரையிடப்படுவதை தமிழகத்தில் உள்ள தமிழர்கள் வன்மையாகக் கண்டித்து மாபெரும் மக்கள் எழுச்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இதனை அடுத்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரைஅரங்குகளும் இப்படத்தை திரையிட மறுத்திருந்தனர். இந்தியாவின் மற்றய மானிலங்களிலும் இப்போராட்டம் விஸ்தரித்திருந்தது.

சனல்-4 மாதிரியான ஆதார பூர்வமான திரைப்படத்தை எதிர்கொள்ள முடியாத இலங்கை அரசு, இப்படியான புனை கதைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் திரைப்படத்தை மூன்று மொழிகளில் திரையிட்டு மக்களின் மனதில் இராணுவத்தை மேலாகவும், தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளையும், போராட்டத்தையும் இழிவு படுத்தவும் முயற்சிக்கின்றது.

ஈழத் தமிழர்களது நீதிக்கான நியாயமான விடுதலைப் போராட்டம் தமிழக தமிழர்களையும் உலகத் தமிழ் மக்களையும், வேற்று இனத்தவர்களையும் தன்பால் ஈர்த்து அணிசேர்த்து வலுவடைந்து வரும் நிலையில் இந்த உணர்வை சிதைத்து எம் தமிழீழ விடுதலைபோராட்டதின் பால் தமிழர்க்கு உள்ள நம்பகத்தன்மையையும் பற்றுறுதியையும் முறியடிக்கும் நோக்கோடு திட்டமிட்டு களமிறக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.

தமிழகத்தில் மட்டுமன்றி தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை பாதிக்கும் வலுவான ஊடகம் திரைத்துறை என்பதை உணர்ந்து இலங்கை அரசு அதனையே ஆயுதமாக தேர்ந்தெடுத்து இந்த சக்திவாய்ந்த ஊடகத்தினூடாக ஈழத்தமிழர்களையும், போராளிகளையும் கொச்சைப்படுத்தும் இத்திரைப்படத்தை வில்லத்தனமான சூழ்ச்சியோடு எமக்கு எதிரான ஆயுதமாகப் படைத்துள்ளது . அது மட்டுமன்றி தமிழர்களை இழிவுபடுத்தும் இத்திரைப்படத்தை உலகெங்கும் திரையிட்டு தமிழர்களின் நிதியை அபகரிப்பதோடு தமிழர்க்கெதிரான சூழ்ச்சியான இழி கருத்தையும் வஞ்சகத்தோடு விதைக்கும் வஞ்சனையோடு உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.

இந்த திரைப்படத்தை வன்மையாக கண்டித்து எமது எதிர்ப்பை பதிவு செய்யும் போராட்டத்தில் தொடர்ந்தும் அணிதிரள்வோம் !

மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை

 

-Toronto-230813-madrascafe-pro-(1).jpg

 

 

-Toronto-230813-madrascafe-pro-(2).jpg

 

 

-Toronto-230813-madrascafe-pro-(3).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=90962&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.