Jump to content

"மனிதம் தொலைத்த மனங்கள்"…….


Recommended Posts

 "மனிதம் தொலைத்த மனங்கள்"…….

 

87ot.jpg

 

அந்தக்கிராமத்தில் அதிகாலைவேளையிலும் சூரியன் உக்கிரமூர்த்தியாக இருந்தான் .அருகே இருந்த கோவில் மணி ஓசை காலை ஆறு மணி என்பதை ஆறுமுகம் வாத்தியருக்கு உணர்த்தியது . அருகே படுத்திருந்த மனோரஞ்சிததை சிறிதுநேரம் உற்றுப்பார்த்தபொழுது அவரை அறியாது அவர்கண்ணில் எட்டிப்பார்த்த கண்ணீரை , உள்ளே செல் என்று அவரால் சொல்ல முடியாது இருந்தது . ஏனெனில் சிறிது நேரத்திற்கு முதலே தனது ஏக்கப்பார்வையுடன் ஆறுமுக வாத்தியாரின் மடியில் அவளது மூச்சு அடங்கியிருந்தது. அவளது இழப்பால் ஒருகணம் தடுமாறிப் பெருங்குரலெடுத்துக் குளறினார் ஆறுமுகவாத்தியார் . உள்ளே படுத்திருந்த சுகுணா கலவரத்துடன் ஓடிவந்தாள் .

 

ஆறுமுகம் வாத்தியார் தன்னுடன் படிப்பித்த மனோரஞ்சித்தை பலத்த எதிர்ப்பகளுக்கு மத்தியிலேயே காதலித்து கலியாணம் செய்திருந்தார் . அவர்கள் இருவருமே , வாத்தியார்கள் என்றால் என்ன எனபதற்கு எடுத்துக்காட்டாகவே அந்த கிராமத்துக் கல்லூரியில் படிப்பித்தார்கள் . அவர்களிடையே கனித்த காதலின் விளைச்சலாக சுகுணாவும் , ரமணனும் , குணம் என்ற குட்டியும் அந்த வீட்டிலே தவழ்ந்து விளையாடினார்கள் .

 

அப்பொழுது அந்தவீடு அமைதியாக இருந்தது ஒரு சிலமணி நேரங்களே . ரமணனும் குட்டியும் செய்கின்ற கூத்துகளால் வீடே இரண்டுபட்டது . சுகுணா அமைதியானவள் ஆனாலும் தம்பிகளுடன் ஒத்துப்போதலையே அவளது தாய் மனோரஞ்சிதம் சுகுணாவிற்கு ஊட்டி வளர்த்தாள் . அதனால் தம்பிகளுக்கு அக்காவின்மேல் பயம் இல்லாது போய் , தாங்கள் என்ன செய்தாலும்  அக்கா ஒன்றும் சொல்லமாட்டா என்ற நிலமைக்குக் கொண்டு வந்தது மனோரஞ்சிதத்தின் வளர்ப்பு  . ஆனாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு விடயத்தில் கஞ்சத்தனத்தைக் காட்டவில்லை .

ஆறுமுகம் வாத்தியார் தனது மனைவி மனோரஞ்சிதத்தை அவளுடன் பிறந்தவர்களுடன் பழக அனுமதித்ததில்லை . அவழும் அதை விரும்பியதில்லை . இவர்களது மனம்போலவே அவர்கள் அந்தக் கிராமத்தில் முக்கியபுள்ளிகள் ஒரு சிலர்களில் ஒருவர்களாகி விட்டார்கள் . பிள்ளைகள் மூவருமே படிப்பில் சிகரத்தை தொட்டார்கள் . ரமணன் அதிசிறந்த பெறுபேறுகளுடன் பேராதனை பல்கலைக்களகத்தில் மருத்துவபீடத்திற்குத் தெரிவானான் . சுகுணா ஏ லெவலை முடித்து விட்டு வீட்டில் இருந்தாள் . குட்டி உயர்தரம் படித்துக்கொண்டிருந்த வேளையிலேயே ,  இலங்கை என்ற நாட்டை இரண்டு சனிகள் பிடித்து ஆட்டியது . தெற்கில் பல அனாகரீக தர்மபாலக்கள் பௌத்தசிங்களம் என்ற சனியை வளர்க்க , வடக்குகிழக்கிலே யாழ்ப்பாணியம் , சுதந்திரத்மிழீழம் என்ற சனியை 35 பிரிவுகளாகப் பிரித்து வளர்த்தெடுத்தது . இந்த அலையிலே அள்ளுப்பட்ட இளைஞர்களை அடக்குவதே தனது முழுநேரத்தொழிலாக மாற்றிக்கொண்டது இலங்கை . இந்தச்சனிகளை ஓட்டுவதற்கு பல சாத்திரப்பூசாரிகளையும் இலங்கை  வாடகைக்கு எடுத்துக்கொண்டது .

 

சாத்திரப்பூசரிகளும் , பௌத்தசிங்களமும் செய்த குளறுபடிகளால் தமிழர்தாயகம் ரத்தக்களறியானது . இதனால் மேலும் ஆவேசமான இளைஞர்களை சுதந்திரத்தமிழீழம் என்ற கோட்பாடு  சுலபமாகவே தனது பிடியினுள்  கொண்டுவந்தது . இதில் ரமணனும் குட்டியும் அள்ளுப்பட்டதை ஆறுமுகம் வாத்தியாருக்கு நம்பகமானவர்கள் உறுதிப்படுத்தினார்கள் . தங்களுக்கு எது வந்தாலும் பறவாயில்லை தனது வாரிசுகள் அழிந்துவிடக்கூடாது என்று ரமணனையும் குட்டியையும் தனது சொத்துப் பத்துக்களை ஈடு வைத்து வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டார் ஆறுமுகம் வாத்தியார் . ரமணன் லண்டனுக்கும் குட்டி பிரான்சுக்கும் பயணமானார்கள் . மறுதலையாக சுதந்திரதமிழீழம் என்ற கோட்பாட்டில் இரண்டு தலைகள் வெளிநாட்டிற்குப் பிய்த்தெறியப்பட்டன . இதற்கான விளைச்சலை அறியாது சுதந்திரத்தமிழீழமும் தன்பாட்டிற்கு வீறுகொண்டெழுந்தது .

 

மகன்களை அனுப்பிய கையுடனேயே ‘ பிள்ளைகள் வெளியில் ‘ என்ற தகுதியுடன் மனோரஞ்சிதத்தின் அண்ணை தனது மகனுக்கு சுகுணாவை பெண்கேட்டு ஆறுமுகம் வாத்தியாரின் வீட்டில் படியேறினார் . அன்றைய போர் சூழ்நிலையில் ஒருவரையொருவர் தங்கியிருக்கவேண்டிய சூழ்நிலை இருந்ததாலும் ஆறுமுகம் வாத்தியார் தனது பிடிவாதத்தை தளர்த்தினார் . சுகுணாவும் தனது மச்சானைக் கலியாணம் செய்வதில் பூரணசம்மதத்துடனே இருந்தாள் . ஆனால் சுகுணாவின் கலியாணவீட்டிலோ விதி வேறுவிதமாக விளையாடியது . அவளது கலியாணவீடு முடிந்து அருகே இருந்த பிள்ளையாரிடம் ஆசீர்வாதம் வாங்க ஊர்வலமாகச் சென்றபொழுது , மேலே எழுந்த புக்காரா என்ற அரையண்டம் பிடித்த பறவை தனது முட்டையைத் துப்பிவிட சுகுணாவின் மச்சான் இரத்தக்குழம்பானான் . சுகுணாவும் மயிரிழையில் காயங்களுடன் தப்பினாள் . மனோரஞ்சிதமோ இடுப்பிற்கு கீழே இயங்கமுடியாத அளவு முட்டைச்சிதறலினால் பாதிக்கப்பட்டாள் . ஒருநாள் மணக்கோலத்தைக் கண்ட சுகுணா அதன்பின் யாருடனுமே பேசவில்லை . இவைகளையெல்லாம் தனது இருபிள்ளைகளுக்கு ஆறுமுகவாத்தியார் கண்ணீருடன் எழுத , குட்டியே தனது பெயருக்கு ஏற்றவாறு அவர்களை அரவணைத்தான் . ரமணனோ தனக்கு இதில் சம்பந்தம் இல்லாமல் போல இருந்தது ஆறுமுகவாத்தியாருக்கு மிகவும் வேதனையாவே இருந்தது .

 

தொடரும்

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா 

 

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் கே கரன் :) :) .

 

 

Link to comment
Share on other sites

வணக்கம் கோமகன் அண்ணை, 

முதலில் வாழ்த்துக்கள் ஒரு தொடர்கதையை எழுத முன்வந்தமைக்கு. 

காத்திரமான கருத்துக்களுடன் உங்கள் தொடர்கதை நகர வேண்டும் என்ற மிகுந்த ஆசை எனக்கு உள்ளது. 

அதனால் சில இடங்களில் எழும் ஐயங்களை உங்களிடம் தெளிவு பெற விரும்புகிறேன்.

 

*எப்போதும் அதிகாலையில் அதுவும் ஆறு மணிக்கு சூரியன் உக்கிர மூர்த்தியாக இருந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை. அதுவும் மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட நிலத்தில் .................

*நாட்டை இரண்டு சனிகள் பிடித்து ஆட்டியது . தெற்கில் பல அனாகரீக தர்மபாலக்கள் //////// உங்களது வார்த்தைகளில் கூறுவது என்றாலும், முதலில் பேரினவாத இனமையமே அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதன் மூலம் தமிழர் தரப்பை அகிம்சை முறையிலும் பின்னர் ஆயுத வழியிலும் போராட தூண்டியது. நீங்கள் இரண்டு சனிகள் பிடித்து ஆட்டியது என்று மொட்டையாக கூறுவதன் மூலம் எதோ சமகாலத்தில் சும்மா இருக்க மாட்டாமல் போராட்டங்கள்  எழுந்திருந்ததாக காட்ட முனைகிறீர்கள். அநாகரீகதர்மபலவின் செயல்கள் இலங்கையில் இருந்த சிறுபான்மை இனங்களை தாக்குவதாகவே இருந்தது. அவரின் ஒரு கூற்று தமிழர்களை கடலில் பிடித்து தள்ளவேண்டும் என்பது. உங்களின் தொடர்கதையில் சம்பவங்களையாவது சரிவர பதியுங்கள். ஆரம்பகால விரோதங்களை குறியிடவே தர்மபால பற்றி எழுதினேன். 

*முதலில் ஹெலி பின்னர்  சீ பிளேன் அதன்பின் அவ்ரோ ,பொம்மர் , புக்காரா ,சுப்பர்சொனிக் இந்த ஒழுங்கில் தான் விமானப்படை வளர்ந்திருந்தது, நீங்கள் சடுதியாக புக்காரவை கொண்டு தாக்கி இருக்கிறிங்கள். இது கால நீட்சியை தருகிறது என நினைக்கிறேன்.

 
Link to comment
Share on other sites

கோ... முதலில் தொடர்கதையொன்றை எழுத முனைந்தமைக்கு என் வாழ்த்துக்கள்.

அத்துடன்.... ஒரு காலகட்டத்தின் ஒரு சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் வகையில் எழுதும்போது அதை சரியான முறையில் "உண்மையை உண்மையாய்" பிரதிபலிக்குமாறு எழுதவேண்டியது ஒவ்வொரு படைப்பாளியினதும் தலையாய கடமை. எழுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு தமது "சுய சித்தாந்தங்களைத்" திணிக்கும் எழுத்துக்கள் அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில் உங்களது எழுத்துக்களும் அவ்வாறு அமையாமல் நிதர்சனமாக இருக்க வேண்டுமென்பது என் விருப்பு.

அதனை மனதில் நிறுத்தி கதையினைத் தொடருங்கள்....கோ!

மீண்டும்  வருகிறேன்! :)

Link to comment
Share on other sites

எடுத்த எடுப்பிலேயே கடுகதி வேகத்தில் செல்கிறது தொடர்கதை.. வாசிக்கும் ஆர்வத்தை எழுத்துப் பிழைகள் சிதைக்கின்றன. வாசிக்கும் ஆர்வத்தை சிதைக்காமல் தூண்டிக் கொண்டிருப்பதே கதையின் முக்கிய வெற்றியாக அமையும். எனவே எழுத்துப் பிழைகளுடன் பதிவதைத் தவிருங்கள். வாழ்த்துகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தை வித்துவான்களின்  கருத்துக்கு  ஒப்பிட்டு கருத்து எழுத இவர் தவிர்ப்பதால்

தம்பிகள் தொற்கொழுதாசன்

கவிதை

மற்றும் சோழியான்  ஆகியோர் எழுதியுள்ளவற்றை ஆமோதிக்கின்றேன்

Link to comment
Share on other sites

எனது கருத்தை வித்துவான்களின்  கருத்துக்கு  ஒப்பிட்டு கருத்து எழுத இவர் தவிர்ப்பதால்

தம்பிகள் தொற்கொழுதாசன்

கவிதை

மற்றும் சோழியான்  ஆகியோர் எழுதியுள்ளவற்றை ஆமோதிக்கின்றேன்

 

 

" நிலாவரை கிணத்திலை தேசிக்காயைப் போட்டால் கீரிமலைக் கேணியிலை மிதக்குமாம் " கருத்துக்களத்தில் என்று ஒழியும் இந்த கேடுகெட்ட செயல் ??? மேலும் என்சார்பான நியாயமான   உங்கள் கருத்துக்களுக்கு நான் என்றுமே பதில் தருவதற்க்குப் பின்னிற்பதில்லை , நன்றி . 

Link to comment
Share on other sites

ஆரம்பம் நல்லா இருக்கண்ணை...   ஆனால் பாருங்கோ...................!!!!!

 

கதை புத்தகம் வாசிச்சால் கூட முடிவு தெரியாட்டி தலையை பிய்க்க வேணும் போல கிடக்கும்...  இதுக்கை தொடரும் போட்டு இரண்டு நாளா விட்டிருக்கிறீங்களே நீங்கள் உண்மையிலை நல்லவரா...?? 

 

 

Link to comment
Share on other sites

2009_SriLanka_BoatPeople.jpg

 

இரவு வேலை முடிந்து நடுநிசியில் வீடு வந்த குட்டிக்கு  , அன்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பு அவனது  தூக்கத்திற்கு உலை வந்தது  .

 

« குட்டி நான் ஐயா பேசிறன் « .

 

«  என்ன ஐயா இந்த நேரத்திலை ?? »

 

« எடே மோனை ………. உங்கடை கொம்மா எல்லாரையும் விட்டிட்டு போயிட்டா . இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல்தான் என்ரைமடியிலை உயிர் போனது . கொண்ணையோடை கதைச்சு ரெண்டுபேரும் கொள்ளி வைக்க வாங்கோ « .

 

என்று சொல்லி ஆறுமுகம் வாத்தியாரின் தொடர்பு அறுந்தது . குட்டிக்கு அவனது அம்மாவின் இறப்புச்செய்தி அவனை வெகுவாகவே உலுப்பியிருந்தது .  தனது அம்மாவிற்கு கொள்ளி வைக்கவேண்டிய தான்  பிரான்சில் இருந்த தனது சூழ்நிலைக் கைதி நிலையினை எண்ணிக் குட்டியின்  மனம் குத்திக் கிளறி வடியும் ரத்ததை ருசி பார்த்தது . அவனது கண்களில் கண்ணீர் பெருகியது . குட்டியினருகே அவனது மனைவி மைதிலியும் பிள்ளைகளும் செய்தி தெரியாது நின்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார்கள் . குட்டி மெதுவாக அறையில் இருந்து வெளிவந்து தனது கணணியினை உயிர்ப்பித்து தனது வங்கிக் கணக்கினுள் நுழைந்தான் . அவனது வங்கிக்கணக்கு என்றுமே சைபருக்கு கூடி இருந்ததில்லை . அவனது சேமிப்புக்கணக்கில் இருந்த 2000 யூறோக்களை நடைமுறைக்கணக்குக்கு மாற்றி விட்டு வெஸ்ரேர்ன் யூனியன் ஊடாக  காசு போகவேண்டிய வழிமுறைகளை  தெரிவித்தான் . ஐயாவுக்கும் காசு அனுப்பிய விபரத்தை போன் மூலம் தெரிவித்தபொழுது அதிகாலை 3 மணியாகியிருந்தது .

 

அவனது கண்கள் நித்திரையின்மையால்  செவ்வரியோடியிருந்தன .

மனைவியையும் பிள்ளைகளினது நித்திரையைக் குழப்பாது லைற்றுக்களை அணைத்துவிட்டு கையில் றெமிமாட்டின் கிளாசுடனும் , சிகரட் பெட்டியுடனும் வீட்டின் பல்க்கணிக்கு வந்தான்  . பல்க்கணியின் முன்னே உள்ள பூங்காவில் உள்ள ஃபைன் மரத்து இலைகள் மெல்லிதாக வீசிய தென்றலுக்கு சலசலத்தன . பூரணை நிலவு மேலே எழும்பி அவனைக் குளிர முயன்றது . றெமிமாட்டின் அவனது தொண்டையினுள் எரிச்சலுடன் இறங்கியது , அவன் மனதைப்போலவே . அவன் சிகறட்டைப் பற்ற வைத்து அதன் புகையை ஆழ இழுத்து வெளியே ஊதினான் . அவனது அம்மா அவன் மனதில் மின்னி மின்னி மறைந்தா . போனகிழமை தன்னுடன் அன்பொழுகக் கதைத்த அம்மா இன்று இல்லை என்பதை அவனது மனம் ஏற்றுக்கொள்ள மறுத்து அடம்பிடித்தது . அவனால் வந்த கேவலை அடக்கமுடியவில்லை .

 

i01r.jpg

 

வீட்டிலே ரமணன் , அண்ணைக்கும் சுகுணா அக்காவிற்கும் கடைக்குட்டியாகப் பிறந்தவனுக்கு அன்பிலே குறைச்சல்கள் எதுவுமே இல்லையெண்டாலும் முன்னுரிமை விடயத்தில் அவனது அண்ணைக்கும் அக்காவுக்குமே முதலிடம் கொடுக்கப்பட்டது . இந்தப் பாகுபாடு அவன் வளர்ந்தபின்பு அவனை மிகவும் பாதித்தது என்னவோ உண்மைதான் . அவனுடன் பிறந்தவர்கள் அவனை ஓர் சிறுபிள்ளையாகவே அவனைப்பார்த்தனர் . அவர்களது பார்வையானது அவன் மைதிலியை திருமணம் செய்து இருபிள்ளைகளுக்குத் தந்தையானபோதும் தொடர்ந்தது . ஆனால் வீட்டைப் பார்க்கின்ற விடயத்தில் மட்டும் அவனையே ஏனையோர் முன்னுக்கு விட்டிருந்தனர் . அவனது கண்களால் கண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது . வெறுமையாக இருந்த றெமிமாட்டின் கிளாஸ் மீண்டும் தன்னை சுவை என்று அவனைப்பார்த்து சிரித்தது . அவனது விரல்களில் புகைந்த சிகரெட் அணைவதற்குத் தயாராக இருந்தது .

 

தொடரும்

Link to comment
Share on other sites

கதையின் முதலாவது பகுதிக்கும் 2வது பகுதிக்கும் நிறையவே வித்தியாசம்.. எழுத்துப் பிழை இல்லாதது மட்டுமல்ல.. கதை நிதானமாக வாசகரை களத்துக்கு வரவழைப்பதாக உள்ளது. பாராட்டுகள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை முடியட்டும்  அதன் பின்னர் கருத்துக்கள் நிறைய வரும்
தற்சமயம் இரண்டாவது பகுதி நன்றாக இருக்கின்றது
முதற்பகுதி எழுதும்போது  சனி உங்க்கள் பக்கம் இருந்திருக்கின்றது . தொடருங்கள் கோமகன்  :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அண்ணை நீங்கள் உங்கள் நிலையில் இருந்து என்றுமே தளர மாட்டிங்கள். தொடருங்கள் 

Link to comment
Share on other sites

ஆறுமுகம் வாத்தியார் முன் விறாந்தையில் பித்துப்பிடித்தவர் போல இருந்தார் . உள்ளே அழுதுகொண்டிருந்த சுகுணாவை ஆறுதல்படுத்த அவருக்கு வழிவகைகள் தெரியவில்லை . விடையம் அறிந்து அயலவர்கள் உறவினர்கள் அங்கே திரளத் தொடங்கிவிட்டார்கள் . மனோரஞ்சிதத்தின் அண்ணையே எல்லா அலுவலுகளையும் செய்து கொண்டிருந்தார் . அப்பொழுது யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்த வொயிற்ஹவுஸ் காறர்கள் மனோரஞ்சிதத்தை எம்பாம் செய்ய வந்திருந்தனர் . ஆறுமுகவாத்தியாரின் மனதில் பலவிதமான யோசனைகள் தொடர் ஓட்டமாக ஓடிக்கொண்டிருந்தன . குட்டி அனுப்பிய காசை சிறிது நேரத்திற்கு முதலே எடுத்துக்கொண்டு வந்திருந்தார் . ஆனால் தனது பிள்ளைகள் செத்தவீட்டிற்கு வருவார்களா என்பதே அவரது சிந்தனையோட்டமாக இருந்தது . துக்கம் விசாரிக்க வந்தவர்கள் கொஞ்சம் விடுப்பு அறிவதிலும் ஆர்வம் காட்டினார்கள் .  ஆறுமுகம் வாத்தியாரோ இருவரில் ஒருவராவது கட்டாயம் வருவார்கள் என்றே நம்பிக்கொண்டிருந்தார் . தன்னுடன் படிப்பித்த ஆசிரிய நண்பர்களுக்கு பிள்ளைகள் கட்டாயம் வருவார்கள் என்றே சொல்லி இருந்தார் . வீடு துக்கம் விசாரிக்க வந்தவர்களால் நிரம்பி வழிந்தது . பறை அடிப்பவர்கள் வந்து அந்த சுற்றாடலின் சோகநிலையை கூட்டிக்கொண்டிருந்தார்கள் . பட்டியில் கட்டி இருந்த நந்தினியும் வெள்ளைச்சியும் கண்ணில் கண்ணீர் வடிய நின்று கொண்டிருந்தன . சுகுணாவின் செல்லமான விக்ரறோ சாப்பிடாது ஆறுமுகவாத்தியாருக்கு அருகில் கண்ணீருடன் வாலைச் சுறுட்டியவாறு படுத்துக்கிடந்தது . விக்ரர் இடைக்கிடை தொலைபேசியைப் பார்ப்பதும் விடுவதுமாக இருந்தது ஆறுமுவாத்தியாரின் மனதை பிழிய வைத்தது .

 

தொடரும்

 

Link to comment
Share on other sites

ஒரு பந்தி டையறி குறிப்புபோல எழுதி இருக்கிறீங்க.. அது உங்க வேலைப் பளுவால் என்றாலும்... ஆறுதலாக உங்களுக்கான நேரத்தில் காத்திரமானதாகப் பதியுங்கள்.

மற்றும் ஒரு சம்பிரதாயக் குறைபாடு.. காலத்தின் தேவை கருதி சுட்டிக் காட்ட வேண்டியது எனது கடமை..  'பறை அடிப்பவர்கள் வந்து அந்த சுற்றாடலின் சோகநிலையை கூட்டிக்கொண்டிருந்தார்கள்.'  இந்த வசனம் தேவையற்றது. பறை அடித்தால் அன்றைய தினமே சடலமானது அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் சம்பிரதாயம்.

பதிவுக்கும் இதற்கான தங்களது நேரத்துக்கும் நன்றிகள்! :)

Link to comment
Share on other sites

வணக்கம் கோமகன் அண்ணை, 

முதலில் வாழ்த்துக்கள் ஒரு தொடர்கதையை எழுத முன்வந்தமைக்கு. 

காத்திரமான கருத்துக்களுடன் உங்கள் தொடர்கதை நகர வேண்டும் என்ற மிகுந்த ஆசை எனக்கு உள்ளது. 

அதனால் சில இடங்களில் எழும் ஐயங்களை உங்களிடம் தெளிவு பெற விரும்புகிறேன்.

 

*எப்போதும் அதிகாலையில் அதுவும் ஆறு மணிக்கு சூரியன் உக்கிர மூர்த்தியாக இருந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை. அதுவும் மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட நிலத்தில் .................

*நாட்டை இரண்டு சனிகள் பிடித்து ஆட்டியது . தெற்கில் பல அனாகரீக தர்மபாலக்கள் //////// உங்களது வார்த்தைகளில் கூறுவது என்றாலும், முதலில் பேரினவாத இனமையமே அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதன் மூலம் தமிழர் தரப்பை அகிம்சை முறையிலும் பின்னர் ஆயுத வழியிலும் போராட தூண்டியது. நீங்கள் இரண்டு சனிகள் பிடித்து ஆட்டியது என்று மொட்டையாக கூறுவதன் மூலம் எதோ சமகாலத்தில் சும்மா இருக்க மாட்டாமல் போராட்டங்கள்  எழுந்திருந்ததாக காட்ட முனைகிறீர்கள். அநாகரீகதர்மபலவின் செயல்கள் இலங்கையில் இருந்த சிறுபான்மை இனங்களை தாக்குவதாகவே இருந்தது. அவரின் ஒரு கூற்று தமிழர்களை கடலில் பிடித்து தள்ளவேண்டும் என்பது. உங்களின் தொடர்கதையில் சம்பவங்களையாவது சரிவர பதியுங்கள். ஆரம்பகால விரோதங்களை குறியிடவே தர்மபால பற்றி எழுதினேன். 

*முதலில் ஹெலி பின்னர்  சீ பிளேன் அதன்பின் அவ்ரோ ,பொம்மர் , புக்காரா ,சுப்பர்சொனிக் இந்த ஒழுங்கில் தான் விமானப்படை வளர்ந்திருந்தது, நீங்கள் சடுதியாக புக்காரவை கொண்டு தாக்கி இருக்கிறிங்கள். இது கால நீட்சியை தருகிறது என நினைக்கிறேன்.

 

முதலில் உங்கள் விமர்சனதிற்கு மிக்க நன்றி நேற் கொழுவன் .  நான் எழுதிய " உக்கிர மூர்த்தி "  என்ற சொல்லாடல் , அதி காலை வேளையிலும் சூரியன் உதித்துக் கொண்டிருந்தாலும் அதனால் வெளியே வந்த அனல் வெக்கையைக் குறிக்கவே . இதை நான் அண்மையில் ஊரில் நின்ற பொழுது உணர்ந்து இருக்கின்றேன் . மேலும் நான் அடிப்படையில் சரித்திர ஆசிரியரோ அல்லது இராணுவ ஆய்வாளாரோ கிடையாது .  இந்தக் கதையின் தேவை கருதி ஒருவரின் புலப் பெயர்வுக்கான சரியான பின்னணியைச் சொல்வதற்கே நீங்கள் கூறிய பகுதியை இணைத்தேன் . அதே வேளையில் எவ்வாறு சிங்களம் எம்மீது அடக்குமுறைகளை கையாண்டதோ அதற்க்குச் சற்றும்  குறைவானது அல்ல தமிழர் தமிழரை அடக்கியாண்டதும் . நீங்கள் தொடருடன் தொடர்ந்து இருங்கள் அப்பொழுது இந்தக் கதை சொல்லும் செய்தியை உணர்வீர்கள் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் :) :) .

 

பி கு :

ஒரு சிறிய திருத்தம் நேற் கொழுவன் அநாகரீக தர்மபாலா அதனைச் சொல்லவில்லை . காலிமுகத்திடலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர்  சத்தியாகிரகம் செய்த பொழுது சிறில் மத்தியூவே அவ்வாறு கூறினார் . இங்கு அனாகரீக தர்மபாலக்கள்  என்பது ஒரு குறிச் சொல்லே :) :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின் உங்கள் தொடர்கதை எப்பிடிப் போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். முதலாவதில் இருந்த அவசரம் இன்றி மற்றவை நிதானத்துடன் செல்கின்றன. தொடருங்கள் கோமகன்.

Link to comment
Share on other sites

கோ... முதலில் தொடர்கதையொன்றை எழுத முனைந்தமைக்கு என் வாழ்த்துக்கள்.

அத்துடன்.... ஒரு காலகட்டத்தின் ஒரு சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் வகையில் எழுதும்போது அதை சரியான முறையில் "உண்மையை உண்மையாய்" பிரதிபலிக்குமாறு எழுதவேண்டியது ஒவ்வொரு படைப்பாளியினதும் தலையாய கடமை. எழுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு தமது "சுய சித்தாந்தங்களைத்" திணிக்கும் எழுத்துக்கள் அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில் உங்களது எழுத்துக்களும் அவ்வாறு அமையாமல் நிதர்சனமாக இருக்க வேண்டுமென்பது என் விருப்பு.

அதனை மனதில் நிறுத்தி கதையினைத் தொடருங்கள்....கோ!

மீண்டும்  வருகிறேன்! :)

 

உங்கள் ஆழமான விமர்சனத்திற்கு மிக்க நன்றி கவிதை . நான் ஏலவே நேற்கொழுவனுக்குக் கொடுத்த பதிலே உங்களுக்கும் ஆகின்றது . தொடருடன் தொடர்ந்து இருங்கள் :) :) .

 

Link to comment
Share on other sites

எடுத்த எடுப்பிலேயே கடுகதி வேகத்தில் செல்கிறது தொடர்கதை.. வாசிக்கும் ஆர்வத்தை எழுத்துப் பிழைகள் சிதைக்கின்றன. வாசிக்கும் ஆர்வத்தை சிதைக்காமல் தூண்டிக் கொண்டிருப்பதே கதையின் முக்கிய வெற்றியாக அமையும். எனவே எழுத்துப் பிழைகளுடன் பதிவதைத் தவிருங்கள். வாழ்த்துகள்!!

 

உங்கள் பழைய பதிவுகளை நான் கரைத்துக் குடித்ததில் , திறமையான பழைய கள உறவுகளிடம் இருந்து நல்ல சொல்லு எடுப்பது கல்லில் நார் உரிப்பது போல  :D  . அனால் என்னை மனமாரப் பாராட்டி இருகின்றீர்கள் . உங்கள் உண்மையான விமர்சனதைக் கவனத்தில் எடுத்து என்னால் இயன்றவரையில் எழுத்துப் பிழைகளைத் தவிர்த்து வருங்காலங்களில் எழுதுகின்றேன் . உங்கள் வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சோழியன் :) :) .

 

Link to comment
Share on other sites

7176f2ab61501fce_morning_in_paris.jpg

 

அவன் வீட்டுக்கடிகாரம் காலை 4 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது . அது கோடை காலமாகையால் விடிவதற்கான ஆயுத்தங்கள் அப்பொழுதே இருந்து ஆயத்தமாகிவிட்டன . தூரத்தே வானத்தில் செம்மை கோடுகிழிக்க ஆரம்பித்தது . இருளுக்கும் வெளிச்சத்திற்கும் கலவை விகிதத்தில் குளப்பங்கள் தொடங்கத் தொடங்கின . இவைகளினூடே குருவிகளும் தங்கள் தங்கள் வேலையில்  கண்ணுங்கருத்துமாக இருந்தன . குட்டியால் அந்த நாளின் கருக்கட்டலுக்கான இனிமையான வேளையை ரசிக்கமுடியவில்லை . மைதிலி வேலைக்குச் செல்ல எழுந்துவிட்டிருந்தாள் . பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் விடுவதற்கு தயார் படுத்தவேண்டிய மைதிலிக்கு குட்டி சொன்ன அம்மாவின் இறப்பு செய்தி அவளை நிலைகுலையவைத்தது .

 

» இப்ப காசுக்கு என்ன செய்யிறது « ??

 

என்று அழுகையுடன் கேட்ட மைதிலிக்கு அவன் தான் செய்தவைகளைச் சொன்னான் .

 

« லண்டன் ரமணன் அண்ணைக்கு சொன்னியளோ  ?? «

 

என்று கேட்ட மைதிலிக்கு குட்டியினது நம்பிக்கையீனச் சிரிப்பே பதிலாகியது .

லண்டனுக்குப் போயிருந்த அவனது  அண்ணை ரமணன் , படித்து முடித்து டொக்ரராகி  அவனுடன் படித்த ஓர் ஐரிஷ் பெண்ணை கலியாஞ் செய்தது , இறந்த அம்மா உட்பட யாருக்குமே தெரியாத விடையம் . ரமணனும் தனது விடையங்களை யாருக்குமே தெரியாது தந்திரமாக நகர்த்தி வீட்டாருடன் ஓர் தனித்தீவாகவே இருந்துகொண்டான் . தனது திருமணத்திற்கு பாரிசில் இருக்கும் இந்த தம்பியை அழைத்திருந்தான் . அத்துடன் ரமணனது தொடர்புகள் படிப்படியாக குட்டியுடன் குறைந்து கொண்டே போனது . ஆனாலும் விட்டகுறை தொட்டகுறையாக அவ்வப்பொழுது அவனது ஐரிஷ் அண்ணி மெயில் போடுவாள் .

 

தாங்கள் இருவரும் ஒரே வயிற்றில் ஒருவயது இடைவெளியில் பிறந்திருந்தாலும் , இருவரின் குணாம்சங்களும் இயற்கையின் பார்வையில் மேற்கும் கிழக்காகவும் இருந்ததை அவனால் ஜீரணிக்க முடியவில்லை . அவன் , தனக்கும் ரமணனுக்குமான சிறுபிள்ளைக் காலங்களை நினைத்து அடிக்கடி மனதை ஆறுதல்படுத்த முனைந்தாலும் , காலம் என்ற பக்கச்சார்பற்ர சுற்றுப்பாதை அவனைப்பார்த்து இனம்புரியாத சிரிப்பொன்றைச் செய்யவே செய்தது  .இது அவனது மனவலியைக் கூட்டியதே தவிரக் குறைக்கவில்லை .இதைத்தான் காலங் கொடியது என்று சொல்லி வைத்தார்களோ ???

 

மைதிலியின் வற்புறுத்தலுக்காக ரமணனின் தொலைபேசி இலக்கத்தை ஒற்றினான் அவன் . ரமணன் ஒருசில நிமிட  இடைவெளியில் கிடைத்தான் .

 

« என்னடாப்பா எப்பிடி இருக்கிறாய் ?? மைதிலி பிள்ளையள் எப்பிடி சுகமாய் இருக்கினமே ?? «

 

என்ற ரமணனை இடைவெட்டி ,

 

 « உனக்கு விசையம் தெரியுமே ?? எங்கடை அம்மா எங்களை விட்டு போட்டா . »

என்று விசும்பலுடன் சொல்லிமுடித்தான் அவன் .

 

« என்னது…… எப்ப நடந்தது ?? »

 

« இண்டைக்கு விடிய ஐயா போன் பண்ணினவர் . எங்கள் ரெண்டுபேரிலை ஒராளையாவது வரட்டாம் . உன்னோடை கதைச்சு போட்டு தனக்கு போன்பண்ணச் சொன்னவர் «

 

«  என்னாலை எடுத்த உடனை போகேலாதடாப்பா . இண்டையிலை இருந்து மூண்டு நாளைக்கு பத்து முக்கியமான ஒப்பிரேசனுகள் செய்யவேணும் . நாலைஞ்சு மாசத்துக்கு முதலே இதுகளுக்கு நான் திகதி குடுத்தது மாத்தேலாது . உன்ரை விசாவோடை நீயும் அங்கை போகேலாது . நான் ஐயாவோடை கதைக்கிறன் . அவரையே எல்லாத்தையும் செய்ய சொல்லிவிடு «

 

என்று சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தான் ரமணன் . ரமணனின் பதில் ஓரளவுக்கு அவன் எதிர்பாத்திருந்தாலும் , அம்மாவின் சாவில் இதைக் கொஞ்சங்கூட அவன் எதிர்பார்க்கவில்லை .  ரமணனினுடைய மாற்றத்தை குட்டியால் தாங்கமுடியவில்லை . ஒருவேளை ரமணனின் டொக்ரர் தொழிலில் மரணங்கள் சர்வசாதாரணமானவையோ ??? என்று அவன் மனம் பலவாறாக எண்ணி அவனது மனச்சாட்சியுடன் மல்யுத்தம் செய்தது.

 

குட்டி இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக ஐயாவுக்கு போன் பண்ணினான்,

 

« சொல்லு தம்பி «

 

«  ஐயா நான் அண்ணையோடை கதைச்சனான் . தன்னாலை இப்ப வர ஏலாதாம் . என்ரை நிலமையை எப்பிடி ஐயா சொல்லிறது ??  நான் அகதியாய் போனன் . என்னப்பெத்த அம்மாவுக்கு கொள்ளி வைக்கேலாமல் கிடக்கு «

 

என்று பெரும் அழுகையுடன் சொல்லி முடித்த குட்டிக்கு , ஆறுமுகம் வாத்தியார் ரெலிபோனை அடித்துவைக்கும் ஒலியே அவனக்கு நாரசமாய் ஒலித்தது . அப்பாவின் செய்கையை அவனால் தாங்கமுடியவில்லை . அவன் பிள்ளைகளுக்கு முன்னால் அழுவதை தவிர்த்து ரொயிலெற்றினுள் போய் இருந்து அழுதான் . மைதிலி அழுகையினாடாக  பிள்ளைகளை பள்ளிக்கூடம் செல்லத் தயார்படுத்திக்கொண்டிருந்தாள் . அவனுக்கும் ஒர் இடமாற்றம் தேவைப்பட்டதால் தான் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் விடுவதாக மைதிலியிடம் சொல்லி விட்டு பிள்ளைகளுடன் வீட்டைவிட்டு இறங்கினான் .

 

black-tea-cup-2.jpg

 

குட்டி வெளியில் வந்தபொழுது அவனுடைய றெமிமார்ட்டின் தலையிடிக்கு குளிர்ந்த காற்று இதமாகவே இருந்தது . அவனது கைகளில் பிள்ளைகளின் பிஞ்சுக் கைகள் நுளைந்திருந்தன . அவனது மனமோ தனது பிள்ளைகளை மனிதர்களாக வளர்கவேண்டும் என எண்ணிக்கொண்டது . அவன் பிள்ளைகளை விட்டு வீடு திரும்பிய பொழுது மைதிலி தனது வேலைக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்தாள் . தனக்கு ஒன்று என்றால் துடிக்கும்  அவளைப்பார்க்க அவனது அம்மாவின் நினைவுகளே முட்டி மோதின . அவன் குளித்து விட்டு வந்து கொத்தமல்லித் தேநிர் தயாரிக்கும் பொழுது , எங்கிருந்தோ ராசா………………… என்று அம்மா அழைப்பது போல் உணர்ந்தான் குட்டி . அவன் சிறுவயதில் பலமுறை காய்சலாக விழுகின்ற நேரமெல்லாம் அவனை கொத்தமல்லி தேத்தண்ணியாலேயே குணப்படுத்துவாள் மனோரஞ்சிதம் . கொத்தமல்லி தேத்தண்ணியின் கசப்பை தனது இனிமையான கதைகளால் அவனுக்குப் போக்கியவள் அவனது அம்மா . குட்டியின் மனம் வெடித்துவிடும் போல இருந்தது . சிந்தனை ஓட்டங்களால் அல்லாடிய குட்டியை மைதிலியின் குரல் கலைத்தது ,

 

« இண்டைக்கு வேலைக்கு போகவேண்டாம் . வீட்டிலை நில்லுங்கோ . நான் வேலைக்கு போறன் « .

 

 என்று சொன்னவளை இடை நிறுத்தினான்  குட்டி ,

 

P9300140.JPG

 

« இல்லை நான் போகவேணும் . இங்கை என்னாலை தனிய இருக்கேலாது  அம்மாவின்ரை ஞாபகம்தான் வரும் . அதோடை வன்னியிலை  அந்த சரட்டியாலை நாங்கள் பொறுப்பெடுத்த பிள்ளையள் மூண்டுக்கும் வாறமாசம் காசு அனுப்பவேணும் . அதுகளும் பாவங்கள் தானே ?? நீங்கள்தானே இந்த சரட்டியைபத்தி சொல்லி அந்தப்பிள்ளையளை பொறுப்பெடுத்தம் . அந்தப்பிள்ளையள் பட்ட வேதனையோடை ஒப்பிடேக்கை எனக்கு வந்தது கால்தூசிக்கு பெறுமானம் . எங்கடை பிள்ளையளுக்கு நாங்கள் இருக்கிறம் . அதுகளுக்கு ஆர் இருக்கினம் ?? என்னை குளப்பாதையுங்கோ மைதிலி , பின்னேரம் ஆறுதலாய் கதைப்பம் «  என்றான் அந்த ஈரமனிதன் . மைதிலி அவனைப் பேசவிட்டு அவனது மனப்பாரத்தை குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் .

 

தொடரும்

Link to comment
Share on other sites

ஆரம்பம் நல்லா இருக்கண்ணை...   ஆனால் பாருங்கோ...................!!!!!

 

கதை புத்தகம் வாசிச்சால் கூட முடிவு தெரியாட்டி தலையை பிய்க்க வேணும் போல கிடக்கும்...  இதுக்கை தொடரும் போட்டு இரண்டு நாளா விட்டிருக்கிறீங்களே நீங்கள் உண்மையிலை நல்லவரா...?? 

 

உங்களைப் போலை ஆக்களை எல்லாம் இந்தக் கதை ஆட்டுது எண்டால் இதிலை எதோ விசயம் இருக்கு . உங்களுக்காகவே கதையை கெதீலை முடிக்கிறன் தயா . வரவுக்கு கருத்துக்கும் மிக்க நன்றி :) :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

P9300140.JPG

 

 

 

கதை இன்னும் வாசிக்கேல்ல.. படம் பாத்தன்.. நல்லாருக்கு... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிட்சுகோ டோட்டோரி கட்டுரை தகவல் எழுதியவர், மரிகோ ஓய் பதவி, வணிகச் செய்தியாளர் 33 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸின் (JAL) புதிய தலைவராக மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori) நியமிக்கப்படார். அவரது நியமனம், அந்நாட்டின் பெருநிறுவனத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டோட்டோரியின் வாழ்க்கைப் பயணம் உத்வேகமானது. ஆரம்பத்தில் ஒரு சிறிய அளவிலான விமான நிறுவனத்தில் கேபின் குழு உறுப்பினராக (விமானப் பணிப்பெண்ணாக) அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது ஜப்பான் ஊடகங்கள் டோட்டோரியின் நியமனம் பற்றி வெளியிட்டுள்ள தலைப்புச் செய்திகளில் 'முதல் பெண் தலைவர்' மற்றும் 'முதல் முன்னாள் விமானப் பணிப்பெண்' , 'அசாதாரண நியமனம்' என்று பலவாறு குறிப்பிட்டு வருகின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மிகச் சிறிய விமான நிறுவனமான ஜப்பான் ஏர் சிஸ்டம் (JAS) என்னும் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக டோட்டோரி பணிபுரிந்தார். அதைக் குறிப்பிட்டு, 'இவரெல்லாம் ஒரு விமான நிறுவனத்தின் தலைவரா?' எனும் தொனியில் விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ள ஒரு வலைதளம் அவரை 'ஒரு அந்நிய மூலக்கூறு' என்றும் 'ஒரு விகாரம்' என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. டோக்கியோவில் இருந்து பிபிசியிடம் உரையாடிய டோட்டோரி, "அந்நிய விவகாரம்’ பற்றியெல்லாம் தனக்குத் தெரியாது," என்று கூறி சிரிக்கிறார்.   இவ்வளவு விமர்சனங்கள் ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் விமான நிறுவனங்கள் வழக்கமாக உயர்மட்ட பதவிகளுக்கு வசதியான மேல்தட்டு பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும். டோட்டோரி இந்த ‘எலைட் (மேல்தட்டு)’ வரையறைக்குள் இல்லை. இதற்கு முன் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர்களாகப் பதவி வகித்த 10 பேரில் ஏழு பேர் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள். ஆனால், டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். ஜப்பானை பொறுத்தவரையில், 1%-க்கும் குறைவான முன்னணி நிறுவனங்களில்தான் பெண்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். டோட்டோரியின் நியமனத்தைத் தொடர்ந்து, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த 1% நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. மேலும் பேசிய டோட்டோரி, "நான் என்னை முதல் பெண் தலைவர் என்றோ தலைவரான முதல் விமான பணிப்பெண் என்றோ முன்னிறுத்த விரும்பவில்லை. நான் ஒரு தனிநபராகப் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் என் மீது இவ்வளவு பேர் இந்த அளவு கவனம் செலுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்கிறார். "மேலும், பெருநிறுவன பிரமுகர்கள் என்னை எப்படி நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், பொதுமக்களும் சக ஊழியர்களும் என்னை அப்படிப் பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்," என்றும் கூறுகிறார்.   ஜப்பான் மக்களின் அன்பைப் பெற்ற விமானப் பணிப்பெண்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விபத்து அண்மையில், ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று தரையிறங்கும்போது கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. விமானத்தில் இருந்து பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியதற்காக ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு டோட்டோரியின் நியமனம் அறிவிக்கப்பட்டது. டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516, ஓடுபாதையில் காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும் கேப்டன் படுகாயமடைந்தார். இருப்பினும், விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில், ஏர்பஸ் A350-900 விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர். விமானப் பணிப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தீவிரமான பயிற்சிதான் இந்த விபத்தில் இருந்து பயணிகள் காப்பாற்றப்படக் காரணம் என மக்கள் பாராட்டினர். முன்னாள் விமானப் பணிப்பெண்ணான, டோட்டோரி விமானப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர். ஆரம்பக் காலகட்டத்தில் அவர் பணியில் இணைந்ததும் முதலில் கற்றுக் கொண்டது விமானப் பாதுகாப்பு பற்றித்தான். கடந்த 1985ஆம் ஆண்டில், அவர் விமான பணிப்பெண்ணாகப் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான வரலாற்றின் மிக மோசமான விமான விபத்தில் சிக்கியது. ஒசுடாகா மலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 520 பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் பணியாற்றிய ஒவ்வொரு ஊழியருக்கும் ஒசுடாகா மலைக்குச் செல்லவும் அங்கு விபத்து நடந்ததை நேரில் பார்த்த மக்களிடம் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டது." "நாங்கள் எங்கள் பாதுகாப்பு மேம்பாட்டு மையத்தில் விபத்துப் பகுதியில் கிடந்த விமானப் பாகங்களையும் காட்சிப்படுத்தினோம், ஒரு பெரிய விபத்தைப் பற்றி ஒரு புத்தகத்தில் படிப்பதற்குப் பதிலாக எங்கள் சொந்தக் கண்களால் பார்த்தோம். விமான விபத்தின் நேரடிக் காட்சிகள், இழப்பு அனைத்தையும் எங்களால் அன்றைய தினத்தில் உணர முடிந்தது," என்று டோட்டோரி கூறினார்.   மாறிவரும் ஜப்பான் ஏர்லைன்ஸ்-இன் முகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2010ஆம் ஆண்டு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலாகும் நிலைமையில் இருந்தது. உயர் பதவியில் அவர் நியமனம் செய்யப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், 2010இல் ஜப்பான் ஏர்லைன்ஸ் திவாலானதில் இருந்து அதன் நிலைமை வேகமாக மாறி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பெருநிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், அரசாங்கம் கொடுத்த நிதி ஆதரவின் காரணமாக விமான நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டது. ஒரு புதிய செயற்குழு மற்றும் நிர்வாகத்துடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் பெரிய மறுசீரமைப்புக்கு உட்பட்டது. மேலும், அந்நிறுவனத்தின் அப்போதைய 77 வயதான ஓய்வு பெற்ற அதிகாரியும் புத்த துறவியுமான கசுவோ இனாமோரியின் (Kazuo Inamori) நடவடிக்கைகளால்தான் ஜப்பான் ஏர்லைன்ஸ் புத்தாக்கம் பெற்றது. நிறுவன ஊழியர்கள் அவரை ஒரு மீட்பராகப் பார்த்தனர். அவர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவரது புரட்சிகரமான நிர்வாகம் இல்லாமல் டோட்டோரி போன்ற ஒருவர் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவராகி இருக்க வாய்ப்பில்லை.   'இது பெண்களுக்கான நம்பிக்கை' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜப்பான் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவரான கசுவோ இனாமோரி கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது இனாமோரியிடம் நான் பேசினேன், மனதில் பட்டதைப் பேசினார். அவர் தன் வார்த்தைகளைத் துளியும் பொருட்படுத்தவில்லை. ஜப்பான் ஏர்லைன்ஸ் `தனது வாடிக்கையாளர்களைப் பற்றிக் கவலைப்படாத ஒரு திமிர்பிடித்த நிறுவனம்` என்று கூறினார். இனாமோரியின் தலைமையின் கீழ், நிறுவனம் அதிகாரத்துவ பதவிகளில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், விமானிகள், பொறியாளர்கள் போன்ற முன்னணி நடவடிக்கைகளில் இருக்கும் ஊழியர்களை உயர்த்தியது. "இந்த நிறுவனம் ஒரு தனியார் நிறுவனம் போன்று உணர்வை ஏற்படுத்தவில்லை. இதனால், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். முன்னாள் அரசு அதிகாரிகள் பலர் சுலபமான அதிகார பலத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தில் உயர் பதவிகளில் அமர்ந்திருந்தனர்," என்று 2022இல் இனாமோரி என்னிடம் குறிப்பிட்டார். அதன்பிறகு ஜப்பான் ஏர்லைன்ஸ் நீண்ட தூரத்தைக் கடந்து வந்திருக்கிறது. தற்போது அதற்கு முதல் பெண் தலைவரும் கிடைத்துவிட்டார். நாட்டில் பெண் தலைமை நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டளவில் நிர்ணயித்த இலக்கை அடையத் தவறிய பின்னர், எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் முக்கிய வணிகங்களில் மூன்றில் ஒரு பங்கு தலைமைப் பதவிகள் பெண்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவித்துள்ளது. "இது கார்ப்பரேட் தலைமை நிர்வாகிகளின் மனநிலையைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு மேலாளராக ஆவதற்கு பெண்களுக்கு நம்பிக்கை இருப்பதும் முக்கியம். யார் என்ன நினைத்தால் நமக்கென்ன?" என்கிறார் டோட்டோரி. "எனது நியமனம், மற்ற பெண்கள் முன்பு முயற்சி செய்யப் பயந்த விஷயங்களை முயல ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்கிறார் டோட்டோரி நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/cq5ner5wr8wo
    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.