Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்கா முக்கிய பங்காற்றியிருந்தது - கோத்தபாய!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
gotabhaya-200113-seithy-150.jpg

2006 - 2008 காலப்பகுதியில் ஆழ்கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கு அமெரிக்கா முழுமையான உதவிகளை வழங்கியது என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். "தி ஒஸ்ரேலியன்" நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "இலங்கை கடற்படையால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்க முடிந்தது போரில் ஒரு திருப்பமாக அமைந்தது. 2006க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தில் நாம் இத்தகைய 12 மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை அழித்திருந்தோம். அமெரிக்கர்கள் எமக்கு மிகமிக உதவியாக இருந்தனர். பெரும்பாலான இந்தக் கப்பல்களின் இருப்பிடம் குறித்து அமெரிக்கர்களே எமக்குத் தகவல் தந்தனர்.

விடுதலைப் புலிகள் பெரும்பாலான ஆயுதங்களை வெளிச்சந்தையில் வாங்கினார்கள். பல ஆட்டிலறிகள் வடகொரியாவில் தயாரிக்கப்பட்டவை. அவர்கள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வைத்திருந்தனர். அவர்களிடம், இலங்கை இராணுவத்திடம் இருந்தளவுக்கு சமமாக ஆட்டிலறிகளும், மோட்டார்களும் இருந்தன. இலங்கை இராணுவத்தை விடவும் அதிகமாகவும் இருந்தன. அவர்களின் ஆட்டிலறிகள் எமக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தின.

அமெரிக்க செய்மதி தொழில்நுட்பம், புலிகளின் ஆயுதக்கப்பல்கள் இருக்கும் இடத்தை கண்டறிய, இலங்கை கடற்படையால் அவற்றைத் தேடிச் சென்று தாக்க முடிந்தது. இலங்கை பெரும்பாலான ஆயுதங்களை இஸ்ரேலில் இருந்தும், பாகிஸ்தானிடம் இருந்துமே கொள்வனவு செய்தது" என்றும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=92762&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களை ஆழ் கடல் பகுதியில் வைத்து 2006 க்கும் 2008 க்கும் இடையிலான காலக்கட்டத்தில் அழித்தொழிக்க அமெரிக்க அதன் பூரண ஆதரவை வழங்கியிருந்தது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடற்புலிகளின் ஆயுத விநியோக கப்பல்களை இலங்கை கடற்படையால் மூழ்கடிக்க முடிந்த போது இந்த யுத்தத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'2006 க்கும் 2008 க்குமிடையில் புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களில் நாம் 12 ஐ அழித்தோம்' இது எவ்வாறு சாத்தியமானது?

'அமெரிக்கர்கள் மிகமிக உதவியாக இருந்தனர். ஆயுத கப்பல்கள் இருந்த இடங்களை அவர்கள் எமக்கு தந்தனர்' என பாதுகாப்பு அமைச்சர் செயலாளர் அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

' தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களில் பெரும்பாலானவை திறந்த சந்தையில் வாங்கப்பட்டவை' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பீரங்கிகளில் அநேகமானவை வடகொரியா மூலத்தை கொண்டவை. அவர்களிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் இருந்தன. இவை இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ள போதுமானவையாக இருந்தன அல்லது சில சமயம் இலங்கை இராணுவத்திட்டமிருந்ததைவிட கூடுதலானவையாகவும் இருந்தன. புலிகளிடமிருந்த பீரங்கிகள் எமக்கு ஏராளமான இழப்புகளை ஏற்படுத்தின'

புலிகளின் கப்பல்கள் இருக்கும் இடங்களை அமெரிக்க செய்மதி தொழில்நுட்பங்கள் கப்பல்களின் இடத்தை காட்டின. இதனால் இலங்கை படைகளால் அவற்றை அழிக்க முடிந்தது. 

இலங்கை போரையிட்டு அமெரிக்கர்கள் முன்னர் தடுமாறும் போக்கை கொண்டிருந்தனர். அவர்கள் புலிகளை நியாயப்படுத்தவுமில்லை, இலங்கை படைகளுக்கு ஆயுதங்களை வழங்கவுமில்லை.

இருப்பினும் அமெரிக்காவுடன் கூட்டுச்சேர்ந்த நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்தும் இலங்கையால் ஆயுதங்களை வாங்க முடிந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு ஞாபகப்படுத்தினமாம்.. ஹிஹி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை அழிக்கிறதுக்கு ஓடிப்போய் உதவினவர்கள் தமிழ்மக்களின் தீர்வுக்காக ஏன் அந்த முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை ?

எல்லாம் சர்வதேச வியாபாரம் அவரவருக்கு எதன்மூலம் இலாபம் கிடைக்குதோ அதையே செய்கின்றார்கள் இதில நியாய தர்மங்கள் கிடையாது :(   

"' தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களில் பெரும்பாலானவை திறந்த சந்தையில் வாங்கப்பட்டவை' என்றும் அவர் தெரிவித்துள்ளார்"  -- Cambodia/Thailand/Eritriea Supermarkets :)

ஆனா இந்தியா, இலங்கையை போர்க்குற்றவாளி என்று கூறுகிற தமிழ் புலம்பெயர் போராளிகள் அமெரிக்காவுக்கு எதிரா மூச்சே விடமாட்டம் :)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

பிளேர்க் தான் இதற்கு எல்லாம் முன்னோடியாக நின்றவர். திருமலையில் வைத்து இறுதிப் போருக்கான நிகழ்வையும் ஆரம்பித்து வைத்தவர். இன்று சிறீலங்காவை காப்பாற்றிக் கொண்டிருப்பதும் அவர் தான். இவை எல்லாம் முழுமையாக கண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்குது. தமிழ்நெட் போன்ற ஊடகங்களை தொடர்ந்து படித்து வந்தால் தெரியும்.. அமெரிக்காவினதும் இந்தியாவினதும் நிகழ்ச்சி நிரலுக்காகவே புலிகள் மீது இந்தப் போர் தொடுக்கப்பட்டது.

ஆனால் நிச்சயமாக எம்மை தோற்கடித்ததில் அமெரிக்காவின் வீரம் பெரிதும் இல்லை. அதில் தொழில்நுட்ப வளர்ச்சி தான் முக்கிய பங்காற்றியது. ஆனால் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா தோற்றோட.. நாம் தமிழர் உலகுக்கு அறிமுகப்படுத்திய ஒரு போர் வடிவம் முக்கிய பங்காற்றியுள்ளது. பங்காற்றி வருகிறது. அதற்காகவும் தான் அமெரிக்கா எம்மை தண்டிக்க முனைந்தது. அதற்கான விலையை அது எப்போதும் கொடுக்கும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா பிளேக்கை பயன்படுத்திட்டு.. இப்ப தன் மீதான அழுத்ததைக் குறைக்க.. காட்டிக் கொடுக்கிறார். பிளேக்கின் நிலைப்பாட்டோடு ஓடிய அன்றைய அமெரிக்க ஆசிய - பசிபிக் மையம்.. இன்று தன்னிலையை மாற்ற வேண்டிய நிலைக்கு மகிந்த கூட்டணியின் குறுக்கால் இழுப்புக்கள் சீன நட்பு அமைந்துள்ளது.

அதில் தமிழர்கள் நன்மை ஈட்ட முனைவது நன்று. எப்படி அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழர்கள் சிக்க வைக்கப்பட்டார்களோ.. அதேபோல்.. அமெரிக்காவின் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் மகிந்த கூட்டணியை சிக்க வைப்பதில் தான் தமிழர்களின் இராஜதந்திர வெற்றி உள்ளது. செய்வார்களா..???! அல்லது விடுப்புத்தானா..??!

பொறுப்புக் கூறத் தவறினால் சர்வதேச விசாரணை: அமெரிக்கா.

மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தனது குற்றத்திற்க்கான பொறுப்புக் கூறலை சரியாக செய்யாவிட்டால் இலங்கை மீது அனைத்துலக விசாரணைக்கான அழுத்தத்தினை அமெரிக்கா மேற்கொள்ளும் என அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவின் தெற்காசிய விவகார அலுவலக பொறுப்பாளரே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் நடவடிக்கையிலேயே அமெரிக்காவின் நடவடிக்கை எதிர்காலத்தில் இருக்கும். குற்றங்களிற்கான பொறுப்புக்கூறலில் இருந்து மஹிந்த அரசு தவறுமே ஆனால் அந்த நாட்டின் மீது அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்ள அமெரிக்காவினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்றார் தெற்காசிய விவகார பொறுப்பாளர்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"' தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களில் பெரும்பாலானவை திறந்த சந்தையில் வாங்கப்பட்டவை' என்றும் அவர் தெரிவித்துள்ளார்"  -- Cambodia/Thailand/Eritriea Supermarkets :)

ஆனா இந்தியா, இலங்கையை போர்க்குற்றவாளி என்று கூறுகிற தமிழ் புலம்பெயர் போராளிகள் அமெரிக்காவுக்கு எதிரா மூச்சே விடமாட்டம் :)

போர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்தது அமெரிக்கா. அதற்கு வலு சேர்க்க வாக்கு  வேட்டையாடி மேற்கு நாடுகளின் வாக்குகளை பெற்று அதனை நிரைவேற்றியதில் முழு மூச்சுடன் அமெரிக்கா தலைமை தாங்கி நடாத்தியது.
 
இந்தியா ஒரு முறை அமெரிகாவின் அழுத்தத்தால் வாக்களித்தாலும் அடுத்த முறை தனது நரித்தனத்தை செய்து சிறிலங்காவுக்கு சாதகமாக நடந்து கொண்டது.
 
இப்போ நாங்கள் எமது தலையில் மண்ணை தூவுவது புத்திசாலித்தனமானதா??

அண்ணே அமெரிக்கா தான் எங்களை அழித்தது...

இப்போ அது தான் எங்களை காப்பாற்ற போகுது என்றும் சொல்லுறீங்கள்... :) :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பீரங்கிகளில் அநேகமானவை வடகொரியா மூலத்தை கொண்டவை.

இதுவும் அமெரிக்காவுக்கு கோபத்தை குடுத்திருக்குமோ? :rolleyes:

"' தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களில் பெரும்பாலானவை திறந்த சந்தையில் வாங்கப்பட்டவை' என்றும் அவர் தெரிவித்துள்ளார்"  -- Cambodia/Thailand/Eritriea Supermarkets :)

ஆனா இந்தியா, இலங்கையை போர்க்குற்றவாளி என்று கூறுகிற தமிழ் புலம்பெயர் போராளிகள் அமெரிக்காவுக்கு எதிரா மூச்சே விடமாட்டம் :)

அமெரிக்கா எந்த நாசகார ஆயுதங்களை இலங்கை இராணுவத்துக்கு கொடுத்தது...??? 

உதாரணத்துக்கு ஒண்டை சொல்லவா....?? 

MBRL - BM 21  ஓயாத அலைகள் முடிவில் பாக்கிஸ்தான் கொடுத்த செய்திகள் வந்தது உண்மை....   ஆனால் உண்மை என்ன எண்றால் பாக்கிஸ்தான் இராணுவம் பாவிக்கும்  அதே 122mm  பல்குழல் செலுத்திகள் BM-11 வகையை சார்ந்த  வடகொரிய தயாரிப்புக்களாகும்... இரசிய தயாரிப்பான BM-21 வகை எப்போதும் பாக்கிஸ்தான் பாவித்தது கிடையாது.  இதை பாக்கிஸ்தான் Khan Research Laboratories மூலம் சொந்தமாக வும் தயாரித்து கொண்டது...  KRL-122 எனும் பெயரில்... 

அதேகாலத்தில் இந்திய இராணுவம் இரஸ்சிய தயாரிப்பான BM-21 வகை பல்குழல் பீரங்கியை இராணுவத்தில் இருந்து நீங்கி  2000ம் ஆண்டு மாசி மாதம் Pinaka வகையான தனது சொந்த தயாரிப்பான மேம்படுத்தப்பட்ட பல்குழல் பீரங்கியை உள்வாங்கியது....  

ஆதாரமாக 

http://en.wikipedia.org/wiki/Pinaka_Multi_Barrel_Rocket_Launcher

Edited by தயா

இதுவும் அமெரிக்காவுக்கு கோபத்தை குடுத்திருக்குமோ? :rolleyes:

இதில்தான் பிளேக் புலிகளுக்கு எதிராக திரும்பினார் என்றுதான் நான் நினப்பதுண்டு. ஆனால் ஏன் அதற்காக தமிழரை ஏன் பழிவாங்கினார் என்பது புரியவில்லை. புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கு இருந்த ஆதரவை கணக்கு வைத்திருந்திருக்கலாம்.

கொறியாவை அமெரிக்க இனி நேராக அடிக்க முடியாது. (மடக்கி எடுத்து ஜேர்மனி மாதிரி தென் கொறியாவுடன் பூட்டினால் யப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் பாரிய பாதுகாப்பு வெற்றி. இதை சீனாவும் ரூசியாவும் நடக்கவிடாமல் கல்லுக்குத்தும். ஆனால் இது நடந்துதீரவேண்டியதொன்று. ) இதை உணர்ந்து கிளிண்டன் வேறுபாதை எடுத்திருந்தார். ஆனால் புஸ்ஸின் தலைமை தாங்கள் ஈராக்கை வென்றபின்னர் அங்கு போக ஒரு கண்வைத்திருந்தார்கள் போலிருக்கு. இதில், விசையம் தெரியாமல்  மாலை என்று நினைத்து பாம்பை மிதித்து விட்டார்கள் புலிகள். ஆனால் அமெரிக்கா தாங்கள் ஆயுதத்தை கொடுத்திருந்திருக்கலாம். இந்தியாவின் நப்பசை போலவே சிங்களத்தை வாரி அணைத்து சீனாவை காய்வெட்ட நினைத்தார். ஆனால் முதுகில் குத்தும் சிங்கள் இராஜதந்திரம் அவருக்கு நல்ல பாடம் புகட்டியது.

அமெரிக்கா எந்த நாசகார ஆயுதங்களை இலங்கை இராணுவத்துக்கு கொடுத்தது...??? 

உதாரணத்துக்கு ஒண்டை சொல்லவா....?? 

MBRL - BM 21  ஓயாத அலைகள் முடிவில் பாக்கிஸ்தான் கொடுத்த செய்திகள் வந்தது உண்மை....   ஆனால் உண்மை என்ன எண்றால் பாக்கிஸ்தான் இராணுவம் பாவிக்கும்  அதே 122mm  பல்குழல் செலுத்திகள் BM-11 வகையை சார்ந்த  வடகொரிய தயாரிப்புக்களாகும்... இரசிய தயாரிப்பான BM-21 வகை எப்போதும் பாக்கிஸ்தான் பாவித்தது கிடையாது.  இதை பாக்கிஸ்தான் Khan Research Laboratories மூலம் சொந்தமாக வும் தயாரித்து கொண்டது...  KRL-122 எனும் பெயரில்... 

அதேகாலத்தில் இந்திய இராணுவம் இரஸ்சிய தயாரிப்பான BM-21 வகை பல்குழல் பீரங்கியை இராணுவத்தில் இருந்து நீங்கி  2000ம் ஆண்டு மாசி மாதம் Pinaka வகையான தனது சொந்த தயாரிப்பான மேம்படுத்தப்பட்ட பல்குழல் பீரங்கியை உள்வாங்கியது....  

ஆதாரமாக 

http://en.wikipedia.org/wiki/Pinaka_Multi_Barrel_Rocket_Launcher

தயா: என்ன விழுந்தும் மீசையில் மண்படவில்லையா...

புலிகள் அழிந்த முக்கிய காரணமே..ஆயுத பற்றா குறை...அதுக்கு முக்கிய காரணமே கப்பல்கள் அழிக்கப்பட்டது..அதுக்கு முக்கியகாரணமே அமெரிக்கா தான்...

தேசிய தமிழர்கள் கோபம் கொள்ளவேண்டியதே அமெரிக்கா மீது தான் :)

ஏன் பம்முறீங்கள் என்றது தான் கேள்வி...

நுனாவிலான் ஆவது சொன்னார் "தங்களது அரசியல் தந்திரம் இப்போது அமெரிக்காவை பகைக்காது இருப்பது என்று..."

நீங்கள் அமெரிக்காவுக்கே "வெள்ளை" அடிகிறீன்கள் :)

என்னை பொறுத்த மட்டும் இலங்கை மேற்கு நாடுகளுக்கு ஒரு பிரச்சனையே இல்லை...

"உம்" என்றால் அவர்களின் காலில் விழும்...

இலங்கை சீனாவோடு கூடுவது..ஒரு வேசிதனம் மாதிரி ... கிடைக்கும் மட்டும் கறக்கிறது....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா எண்டு எல்லா நாடும் தான் கோப கொள்ள வெளிக்கிட்டா எல்லார் கூடையும் தான் கோபப்படனும் பட் அது முடியுமா? சாதகமா வர்கின்றவர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டியது தான்

அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா எண்டு எல்லா நாடும் தான் கோப கொள்ள வெளிக்கிட்டா எல்லார் கூடையும் தான் கோபப்படனும் பட் அது முடியுமா? சாதகமா வர்கின்றவர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டியது தான்

சுண்டல்: அது தான் சரியான பாதை... அரசியல் என்றால் ஒரு நெளிவு சுளிவு இருக்கோனும் :)

அதை விட்டு விட்டு வெட்டு ஒன்று..துண்டு இரண்டு என்றால் எப்போதும் சரிவராது... இதை முதலில் இருந்தே செய்திருந்தால் எங்களுக்கு நிறைய (உள்/வெளி) எதிரிகள் உருவாகியிருந்திருக்க மாட்‌டார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்

தயா: என்ன விழுந்தும் மீசையில் மண்படவில்லையா...

புலிகள் அழிந்த முக்கிய காரணமே..ஆயுத பற்றா குறை...அதுக்கு முக்கிய காரணமே கப்பல்கள் அழிக்கப்பட்டது..அதுக்கு முக்கியகாரணமே அமெரிக்கா தான்...

தேசிய தமிழர்கள் கோபம் கொள்ளவேண்டியதே அமெரிக்கா மீது தான் :)

ஏன் பம்முறீங்கள் என்றது தான் கேள்வி...

நுனாவிலான் ஆவது சொன்னார் "தங்களது அரசியல் தந்திரம் இப்போது அமெரிக்காவை பகைக்காது இருப்பது என்று..."

நீங்கள் அமெரிக்காவுக்கே "வெள்ளை" அடிகிறீன்கள் :)

 அமெரிக்கா புலிகளின் இராணுவ கட்டமைப்பை அழித்ததில் மிக முக்கிய பங்காற்றியது எண்று சொல்வதில் பொய் கிடையாது....   அதுவும் இரணிலால் உருவாக்க இணைத்தலைமை நாடுகளின் தோற்றம்  அதன் தலைமை பொறுப்பை அமெரிக்கா ஏற்றதும் அமரிக்கா அதில் இருந்து தீவிரமாக புலிகளின் செயற்பாடுகளை ஒடுக்க முனைந்ததும் பலரை நேரடியாக கைது செய்ததும்,  பலரை வேறு நாடுகளின் அரசுகளூடாக கைது செய்தமையும்,  பொய்கள் கிடையாது... 

ஆனால் இலங்கையில் நடந்த போர் குற்றத்துக்கு அமெரிக்கா எந்த வகையான  நாசகார ஆயுதங்களை வளங்கியது எண்டு கேட்டால் உங்களால் ஆதாரம் வளங்க முடியாது... 

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட Fuel-Air Explosives அல்லது Thermobaric bomb , கொத்தணி குண்டுகள், வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகள், அதோடு இரசாயன ஆயுதங்கள் இவை  எவையும் அமரிக்காவால் இலங்கை படைகளுக்கு வளங்கப்படவில்லை...   இவைகளில் பெரும்பாலான ஆயுதங்கள்  இரசிய தயாரிப்புகள்,  ஆனால் நேச நாட்டு உடன்படிக்கையில் இல்லாத நாடுகளுக்கு இரசியா இவ்வகை ஆயுதங்களை கொடுக்க முன்வருவது கிடையாது...   ஆகவே இலங்கைக்கு வாங்கி கொடுத்து இருக்க கூடிய இரசியாவுக்கும் இலங்கைக்கும்  நெருக்கமான நாடு எது என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.... 

அதோடு கனகரக ஆயுதங்களான பல்குழல் எறிகணை செலுத்திகள், ஆட்லறிகள், கனோன்கள் , 40mm Gp,  50 கலிபர்கள் , GPMG, LMG , சுரிகுழல் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள்...  இவைகளில் பெரும்பாலானவை சீனாவினது மிகுதி இரசியா...    பிரேமதாசா காலங்களின் வாங்கப்பட்ட அமரிக்க இலகுரக ஆயுதங்கள் நீங்கலாக... 

இதிலை எதை வைத்து அமரிக்கா போர் குற்றம் செய்தது எண்டு நிறுவ நிக்கிறீர்கள்...   இலங்கை SF படைகளுக்கு பயிற்ச்சி வளங்கியதை வைத்தா...?? 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்: அது தான் சரியான பாதை... அரசியல் என்றால் ஒரு நெளிவு சுளிவு இருக்கோனும் :)

அதை விட்டு விட்டு வெட்டு ஒன்று..துண்டு இரண்டு என்றால் எப்போதும் சரிவராது... இதை முதலில் இருந்தே செய்திருந்தால் எங்களுக்கு நிறைய (உள்/வெளி) எதிரிகள் உருவாகியிருந்திருக்க மாட்‌டார்கள்...

இதை உலகம் தெரியாத பாப்பாக்களுக்குச் சொன்னால் நம்புவார்கள்.

எல்லாம் பூகோள நலன் சார்ந்து தீர்மானிக்கப்படும் உறவுகளாக உள்ளனவே தவிர.. நெளிஞ்சு சுழிஞ்சு என்றால் காட்டிக்கொடுத்து காலை நக்கிறதை தான் செய்ய முடியும். அதை தான் 20 வருசமா சிலர் செய்து கொண்டிருக்கினம். அவைக்கும் விடிவில்ல.. மக்களுக்கும் அவையால விடிவில்ல...!

புலிகளின் சில நிலைப்பாடுகள் சரியானவையே. புலிகள் பூகோள அரசியலை கண்காணிக்கவும் அதன்படி நடக்கவும் செய்தனர். ஆனாலும்.. சர்வதேச பலம் ஒன்றை எதிர்கொள்ளும் இராணுவ பூகோள அமைப்பை வன்னியோ தமிழீழமோ கொண்டிருக்கவில்லை. இன்றேல்.. ஆப்கானிஸ்தான் நிலை தான் ஈழத்தில் ஏற்பட்டிருக்கும்..!

புலிகளின் இராணுவத் தோல்வி என்பது புலிகளின் கொள்கை தோல்வி அல்ல. புலிகளின் இராணுவத் தோல்வி என்பது போராட்ட களம் கொண்டிருந்த சாதகமற்ற இராணுவ பூகோள அமைப்பு சார்ந்த ஒன்று. அது நவீன தொழில்நுட்பங்களின் முன்னால் மரபுப் படை நடத்த கூடிய சூழலைக் கொண்டிருக்கவில்லை. அதுவே புலிகளுக்கு பாதகமான காரணியாகியது. :icon_idea:

புலிகளின் கொள்கை தோற்கவில்லை...புலிகள் தோத்து விட்டார்கள்....

கொம்யூனிச கொள்கை தோற்கவில்லை.. கொம்யுனிஸ்ட்கள்/கொம்யூனிசம் தோத்து விட்டது...

நெடுக்கு "இதை உலகம் தெரியாத பாப்பாக்களுக்குச் சொன்னால் நம்புவார்கள்"

:)

ஆரம்பித்தததை முடிப்பவனே கெட்டிகாரன்..... :)

விழுங்கமுடியாதை கவ்வி/ போகமுடியாத ஊருக்கு வழி காட்டி பிரயோசினம் இல்லை --

தயா: நீங்கள் சொன்ன எந்த ஆயுதமும் "எதிரிகள்" மேல் பாவிக்கக்கூடாது என்று...எந்த சட்டமும் இல்லை...
இவைகளை பாவித்தற்காக இலங்கையை குறைகூறுபவர்கள் புலிகளின் தொண்டர்களே (அப்பட்டமான படுதோல்வியை ஜீரணிக்க முடியாமல்...கனவு கோட்டை தகர்ந்தவர்கள்)  மட்டுமே...

தலைவர் தான் சொன்னவர் "எதிரி தான் ஆயுதத்தை தீர்மானிக்கிறான்"

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தோற்றுவிட்டதாக நீங்கள் காட்டுகிறீர்களே தவிர புலிகள் தோற்கவில்லை. புலிகள் இராணுவ ரீதியில் தோற்றார்கள் அதுவும் சர்வதேச படைப்பல முன்னிலையில் தமிழீழக் களத்தில் தோற்றார்கள். ஆனால் புலிகளின் இராணுவ தந்திரங்கள் அதே சர்வதேசத்தை பிற களங்களில் திணறடிப்பதை நாம் பார்க்கிறோம். சர்வதேசம் நினைத்ததை சாதிக்க முடியாமல் பின்வாங்குவதை காண்கிறோம்.

அந்த வகையில் புலிகள் இன்றை உலக இராணுவத் தொழில்நுட்பங்களுக்கு சாதகமற்ற ஒரு களத்தில் இராணுவ ரீதியில் தோற்றார்களே ஒழிய.. புலிகள் தோற்கவில்லை. புலிகள் அந்தக் களத்திற்குரிய இன்னொரு போராட்ட விடிவத்தில் போராடிக் கொண்டுதான் உள்ளார்கள்.

தொடங்கியதை முடிப்பது என்பதில் அல்ல வெற்றி உள்ளது. தொடங்கப்பட்ட இலட்சியத்தை அடைவதில் தான் வெற்றி உள்ளது.

தொடங்கிய இலட்சியத்தை விட்டு பலர் பல இடங்களில் முடிவுகளோடு உள்ளனர். அதனால் அவர்களுக்கு சுய இலாபம் கிடைத்திருக்கலாம். மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை..!

உலகத்தை உற்றுணர்ந்து பார்த்தால்.. தெரியும் முள்ளிவாய்க்கால் கள மாற்றமே தவிர.. தோல்வி அல்ல என்பது..! ஆனால் அந்த மாற்றத்துக்கு கொடுத்த விலை தான் மிக அதிகம்..! :icon_idea:

நெடுக்ஸ்:

புலிகளது இலட்சியம் என்ன?

அது எப்போ வெற்றியடையும்? 1..10...100...1000000000000000 வருடங்கள்??? :)

இல்லை Mars இல்? :unsure::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்:

புலிகளது இலட்சியம் என்ன?

அது எப்போ வெற்றியடையும்? 1..10...100...1000000000000000 வருடங்கள்??? :)

இல்லை Mars இல்? :unsure::icon_idea:

இவற்றை தெரிந்து கொள்ளாமல் தான் நீங்கள் கருத்தெழுதி வருகிறீர்கள் போலும். :lol:

ஒருவேளை செவ்வாய்க்கிரகத்தில் தமிழீழக் கொடி ஏலவே பறந்து கொண்டிருக்கலாம். எதுக்கும் தாடி கார அண்ணாச்சியை ரெடியா இருக்கச் சொல்லுங்க. அங்கும் காட்டிக்கொடுத்துப் பிழைக்க (அதுதான் உங்க பாசையில் நெளிவு சுழிவு வைச்சு அரசியல் செய்யுறது) மார்க்கம் இருக்கலாம்..! :lol::D

புலிகளின் வளர்ச்சியே அமெரிக்காவுக்கு அவர்கள் மேல் காழ்ப்பு உணர்வுவர காரணம் 
  • கருத்துக்கள உறவுகள்

தயா: நீங்கள் சொன்ன எந்த ஆயுதமும் "எதிரிகள்" மேல் பாவிக்கக்கூடாது என்று...எந்த சட்டமும் இல்லை...

"

தயா குறிப்பிட்ட இரசாயன ஆயுத பாவனையால்தான் சிரியாவுக்கு இன்று இவ்வளவு பிரச்சினைகள்.

தயா: நீங்கள் சொன்ன எந்த ஆயுதமும் "எதிரிகள்" மேல் பாவிக்கக்கூடாது என்று...எந்த சட்டமும் இல்லை...

இவைகளை பாவித்தற்காக இலங்கையை குறைகூறுபவர்கள் புலிகளின் தொண்டர்களே (அப்பட்டமான படுதோல்வியை ஜீரணிக்க முடியாமல்...கனவு கோட்டை தகர்ந்தவர்கள்)  மட்டுமே...

தலைவர் தான் சொன்னவர் "எதிரி தான் ஆயுதத்தை தீர்மானிக்கிறான்"

தடைக்கு ஆதாரமான சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவிப்பு...  ஒரு லிங்

http://www.icrc.org/eng/war-and-law/weapons/index.jsp

தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு மீது துல்லியமாக தாக்கும் ஆயுதம் கூட எதிரியை துடிக்கவைத்து  சாவடைய வைக்குமானவை அனைத்தும் தடை செய்யப்பட்ட வகையை சேரும்... 

இலக்கை துல்லியமாக தாக்காதவை , பொதுப்படையாக இருக்கும் அனைவரையும் கொல்லும் அனைத்து ஆயுதங்களும் கூட  தடை செய்யப்பட்டவகைக்குள் வரும்... 

அதோடு :-தலைவர் தான் சொன்னவர் "எதிரி தான் ஆயுதத்தை தீர்மானிக்கிறான்" எனும் தங்களின் கூற்றில் சொல்லப்பட்டதின் உண்மை யாதெனில் சொன்னவர் மாவோசேதுங்...  தலைவர் கிடையாது... 

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.