Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது- விக்னேஸ்வரனுக்கு நாம் தமிழர் கட்சி பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சீமானை அடுத்த தேசியத்தலைவர் என்று இங்கு (யாழ்களத்தில்) யாரும் எழுதவில்லை. அவரும் அதை சொல்லவில்லை. தமிழகத்திற்கு 2020 இல் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரும் என்பதுதான் அவர்கள் சொல்லிவருவது. இல்லாததும், பொல்லாததுமான ஒன்றைச் சொல்லி விவாதத்தை வளர்க்காதிங்கப்பா.. :huh:

  • Replies 66
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தழிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி உறவு போன்றவர்கள் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை.ஹிந்து பத்திரிகை எனது செவ்வியை திரிவுபடுத்தியே பிரசுரித்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டத்தில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் நான் த ஹிந்து பத்திரிகைக்கு செவ்வி ஒன்று வழங்கியிருந்தேன். அந்த செவ்வியின் சில விடயங்கள் குறித்து தற்போது காரசாரமாக பேசப்பட்டு வருகின்றது.

எனினும் த ஹிந்து பத்திரிகையின் செய்தியாளர் என்னிடம் 10 மேற்பட்ட கேள்விகளைக் கேட்டிருந்தார். அத்தனை கேள்விகளுக்கும் கொடுத்த பதில்களில் ஒன்றாவது வரவில்லை.

ஆனால் இந்த ஒரு கேள்விக்கான பதில் மட்டும் திரிவு படுத்தப்பட்டு வந்துள்ளதுடன் நான் கூறிய முக்கியமான சில விடயங்களையும் அவர் குறிப்பிடாது விட்டுள்ளார் என்றார்.

அதேவேளை ஹிந்து பத்திரிகை தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு வழங்கிய பதில்கள் பற்றிய தகவல் வெளியிட்ட விக்னேஸ்வரன்,

தென்னியந்திய இளைஞர் யுவதிகள் நடாத்திய போராட்டமும் அவர்கள் தமது உணர்வுகளைத் தெரிவித்த விதமும் எமக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் அதனால் எமக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன என்று கூறியிந்தேன்.

மேலும் அரசியல் கட்சிகள் எமது பிரச்சினைகளை தமது சுயநலனுக்காக பாவிக்ககூடாது என்றும் அப்படி பாவிப்பது ரெனிஸ் பந்தை அடிப்பது போல் இருக்கும்.

அத்துடன் பிரிவினையை ஒரு தீர்வாக வெளிநாட்டில் இருப்பவர்கள் கூறுவது ஒரு கணவன் மனைவி சம்பந்தப்பட்ட விடயத்தில் மூன்றாவது நபர் ஒருவர் குறுக்கே வந்து நீங்கள் திருமண நீக்கத்திற்குச் செல்லுங்கள் என்று கூறுவது போல் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தேன்.

இதில் கணவன் மனைவி என்று தமிழரையும் சிங்களவரையும் நான் குறிப்பிடவில்லை. அந்த மூன்றாம் நபர் உட்புகுந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தான் அவ்வாறு குறிப்பிட்டேன்.

அதன்படி மூன்றாம் நபர்கள் உட்புகுந்து நீங்கள் பிரிந்து விடுங்கள் என்று கூறுவது கணவன்- மனைவிக்கு எவ்வாறு இருக்குமோ அதுபோல தான் பிரிவினை ஒன்றே தீர்வு என்று தென்னிலங்கையில் உள்ள கட்சிகள் கூறுவதும் எமது நாட்டு அரசுடன் பேசும் போது பிரச்சினையை ஏற்படுத்துகின்றது என்று கூறினேன்.

எனினும் தென்னிந்திய மக்களுக்கும் எனக்கு எதுவித பிரச்சினையும் இல்லை அங்குள்ளவர்களில் பலர் எனது நண்பர்கள் இருக்கின்றனர்.

அவர்களது அனுசனையும் உதவிகளும் எமக்கு வருங்காலத்தில் வடமாகாண சபையிலோ அல்லது எந்தவொரு சந்தர்ப்பத்திலோ தேவையானது. எனவே அவற்றை மறந்து அவர்களை நான் கொச்சைப்படுத்தியதாக குறித்த பத்திரிகை பிரசுரித்துள்ளமை எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான இணைப்பையும் கொடுத்துவிடுங்கள் onmai.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மை என்றால்... "இந்து" போன்ற ஹிந்திய வல்லாதிக்கத்தை நிலைநாட்ட பாடுபடும்.. ஜனநாயக விரோத ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதை தமிழின விடுதலையை.. விடிவை  விரும்பும்.. தமிழீழ அரசியல் சக்திகளும்.. தமிழகத் தலைவர்களும்.. புலம்பெயர் மக்களும் முற்றாக புறக்கணிக்க வேண்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகப்புத்தகத்தில் நிலைத்தகவல் போடும் தேசியத்தூண் ஒருவரின் கருத்துக்கும், சீமானின் கருத்துக்கும் எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியவில்லை அந்தளவிற்கு இருக்கிறது சீமானின் கருத்துக்கள். கொழும்பில் இருந்தவர் அரசியல் செய்யக்கூடாது என்பவர் தான் எங்கிருந்து எம் பிரச்சனைக்குக் கருத்துக்கூறுகிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

விக்கினேஸ்வரன் கூறிய கருத்துக்களில் முரண்பாடுகள் இருந்தாலும், ஈழத்தமிழருக்கான தீர்வு அவர்களிடமிருந்தே வரவேண்டும் என்பதே அசைக்க முடியாத நிலைப்பாடு. இன்ன தீர்வு என்பதை முடிவெடுக்க வேண்டியது ஈழத்தமிழினமே தவிர, தமிழகத் தலைவர்களோ அல்லது உலக அரசியல் தலைவர்களோ அல்ல. தமிழருக்கான தீர்வு தமிழீழமாக இருந்தாலும் அது சாத்தியப் படும் வரைக்கும் மாற்றுத்தீர்வை யோசிக்க வேண்டிய நிலையிலேயே உள்ளார்கள் இல்லையெனில் ஒட்டுமொத்த இருப்பே கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தமிழீழம் தான் தீர்வு என்று தொங்கிக்கொண்டிருக்க முடியாது. அப்படி ஒரு நிலை இருக்குமெனில் புலிகள்  பலமாக இருந்த காலத்தில் பேச்சுவார்த்தைக்குப் போயிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. பேச்சு வார்த்தை மேடையிலும் புலிகள் தமிழீழத்தைக் கேட்கவில்லை. இடைக்காலத்தன்னாட்சி உரிமையைத் தான் கேட்டார்கள். சீமான் போன்றவர்கள் சொல்லுவது வளர்த்தால் குடுமி வழிச்சால் மொட்டை என்ற அரசியல் சித்தாந்தம் இப்போதிருக்கும் நிலையில் ஈழத்தமிழனுக்குப் பொருந்தாது.

யாரும் எமக்கு தங்கத்தட்டில் வைத்து தமிழீழம் தரப்போவதும் இல்லை, சீமான் போன்ற தமிழகத்தலைவர்களும் ஒரு மயிரையும் பிடுங்கப்போவதில்லை தமிழீழம் என்று பேசி தம் நலன்களை மட்டுமே தான் பெருக்கிக்கொள்ள முடியும். சீமான் 2016,2020 இல்லை அதற்கு முன்னரும்,பின்னரும் தமிழகத்தில் முதல்வராகவோ இல்லை எப்படியும் வரட்டும் அதுகுறித்து எமக்கு எந்த அக்கறையும் இல்லை. அதேவேளை ஈழத்தமிழனுக்கு இன்னதான் தீர்வு என்று சொல்லும் அதிகாரம் அவருக்கு இல்லை. அந்த வரம்பை அறிந்து அதற்குள் நிற்பது தான் ஈழத்தமிழருக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித் திரித்துள்ளான் ஹிந்து ராம். மகிந்த கொடுக்கும் எலும்புதுண்டுக்கும் சிங்க-ரத்னா விருதுக்கும் இதையும் செய்யாவிடின் எப்படி?

இப்போது தெரிகிறதா விக்னேஸ்வரனை கண்டு மகிந்த கும்பல் எப்படி பயப்படுகிறது என்பது.

விக்னேஸ்வரனும் இந்து போன்றவர்களை இனம்கண்டு ஒதுக்க அல்லது லாவகமாக கையாளப் பழகவேண்டும்.

சீமான் இந்துவை நம்பி விக்னேஸ்வரன் மீது பாய்ந்திருக்க தேவையில்லை.

குறைந்த பட்சம் கூட்டமைப்பை தொடர்புகொண்டு இதுபற்றி விளக்கம் கேட்டு, அது கிடைக்காதவிடத்து அறிக்கை விட்டிருக்கலாம்.

நாம் அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆவதை மகிந்த துளியும் விரும்பவில்லை. யாழ்பாணத்தில் ஜனாதிபதி அண்மையில் பேசியதும் இதையே குறிக்கிறது.

ஏன்?

அவர் காணி/ பொலீஸ் அதிகாரங்களை கோருவார். பயப்படாமல் இராணுவத்தை, கதுருசிங்கவை எதிர்ப்பார். தமிழ் மக்களை பெடெரல் தீர்வு நோக்கி முன்நகர்த்துவார். இவரை பார்த்து சாதாரண தமிழர்களும் பயம் நீங்கி தமது ஜனநாயக உரிமையை கோருவர்.

இவர்கள் இப்போது வடக்கில் நடத்தும் அராஜக ஆட்சிக்கு இவை பெரும் சவாலாக அமையும். ஆக எதை சொல்லியாவது எந்த்ஹ சதியை பொய்பிரட்டை கூறியாவது விக்னேஸ்வரனை தோற்கடிக்க முயலுகிறனர்.

அவர்கள் தெளிவாயுள்ளனர், நாம்தான் குழம்புகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகத்தில் நிலைத்தகவல் போடும் தேசியத்தூண் ஒருவரின் கருத்துக்கும், சீமானின் கருத்துக்கும் எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியவில்லை அந்தளவிற்கு இருக்கிறது சீமானின் கருத்துக்கள். கொழும்பில் இருந்தவர் அரசியல் செய்யக்கூடாது என்பவர் தான் எங்கிருந்து எம் பிரச்சனைக்குக் கருத்துக்கூறுகிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

விக்கினேஸ்வரன் கூறிய கருத்துக்களில் முரண்பாடுகள் இருந்தாலும், ஈழத்தமிழருக்கான தீர்வு அவர்களிடமிருந்தே வரவேண்டும் என்பதே அசைக்க முடியாத நிலைப்பாடு. இன்ன தீர்வு என்பதை முடிவெடுக்க வேண்டியது ஈழத்தமிழினமே தவிர, தமிழகத் தலைவர்களோ அல்லது உலக அரசியல் தலைவர்களோ அல்ல. தமிழருக்கான தீர்வு தமிழீழமாக இருந்தாலும் அது சாத்தியப் படும் வரைக்கும் மாற்றுத்தீர்வை யோசிக்க வேண்டிய நிலையிலேயே உள்ளார்கள் இல்லையெனில் ஒட்டுமொத்த இருப்பே கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தமிழீழம் தான் தீர்வு என்று தொங்கிக்கொண்டிருக்க முடியாது. அப்படி ஒரு நிலை இருக்குமெனில் புலிகள் பலமாக இருந்த காலத்தில் பேச்சுவார்த்தைக்குப் போயிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. பேச்சு வார்த்தை மேடையிலும் புலிகள் தமிழீழத்தைக் கேட்கவில்லை. இடைக்காலத்தன்னாட்சி உரிமையைத் தான் கேட்டார்கள். சீமான் போன்றவர்கள் சொல்லுவது வளர்த்தால் குடுமி வழிச்சால் மொட்டை என்ற அரசியல் சித்தாந்தம் இப்போதிருக்கும் நிலையில் ஈழத்தமிழனுக்குப் பொருந்தாது.

யாரும் எமக்கு தங்கத்தட்டில் வைத்து தமிழீழம் தரப்போவதும் இல்லை, சீமான் போன்ற தமிழகத்தலைவர்களும் ஒரு மயிரையும் பிடுங்கப்போவதில்லை தமிழீழம் என்று பேசி தம் நலன்களை மட்டுமே தான் பெருக்கிக்கொள்ள முடியும். சீமான் 2016,2020 இல்லை அதற்கு முன்னரும்,பின்னரும் தமிழகத்தில் முதல்வராகவோ இல்லை எப்படியும் வரட்டும் அதுகுறித்து எமக்கு எந்த அக்கறையும் இல்லை. அதேவேளை ஈழத்தமிழனுக்கு இன்னதான் தீர்வு என்று சொல்லும் அதிகாரம் அவருக்கு இல்லை. அந்த வரம்பை அறிந்து அதற்குள் நிற்பது தான் ஈழத்தமிழருக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.

மிகச் சரியான கருத்து ஜீவா.. சீமானோ.. தமிழகத்தின் ஏனைய அரசியல்வாதிகளோ தலையிடக்கூடாது.. அவ்வளவு ஏன்.. பிற நாடுகள்கூட தலையிடக்கூடாது..

ஆனால் ஈழமக்கள் தேர்ந்தெடுத்த கட்சியின் தலைவர் தந்தை செல்வாவே தனி ஈழமே தீர்வு என்று சொல்லிவிட்டார். அதைத்தான் தலைவர் முன்னெடுத்துச் சென்றார். சீமான் இந்த ஈழமக்களின் சொந்தத் தீர்வை சும்மா ஆதரிக்கிறார்.. அவ்வளவுதான்.. :D

ஆனால் இந்தியா என்கிற அயல்நாடு திணித்த தீர்வுதான் மாகாணசபை. இது ஈழமக்களின் கோரிக்கையா? இல்லையே.. இறுதியில் "மக்களால் தேர்ந்தெடுககப்பட்ட" வடமாகாண முதல்வர் கூட தமிழீழப் பிரகடனத்தைச் செய்துவிட்டு இந்தியாவுக்குப் போய்விட்டார்.

இப்போது சொல்லுங்கள் ஜீவா.. தந்தை செல்வாவுக்கு உங்கள் ஆதரவா.. அல்லது இந்தியாவுக்கா..? :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் கருத்து வேறுபாடுகள், அதிருப்திகளுக்கு மத்தியிலும் ஈழத்தில் தமிழ்மக்கள் கூட்டமைப்போடு நிற்கின்றார்கள். அதுவும் விக்னேஸ்வரன் வந்ததன் பின்பு ஒதுங்கி நின்ற பலரும் முன்வந்து வேலை செய்கிறார்கள்.

"தமிழின விடுதலை" என்னும் பாதையில் விக்னேஸ்வரன் எங்களை ஒரு குறிப்பிட்ட தூரம் முன்னோக்கி அழைத்துச் செல்கின்ற ஒரு தலைவராக விளங்குகின்றார்.

நம்பினால் நம்புங்கள்! விக்னேஸ்வரனை நாம் தேர்வு செய்ததன் பிற்பாடு எமது சோர்வு நீக்கி நாம் சற்றுத் தலைநிமிர்ந்திருக்கிறோம். முள்ளிவாய்க்கால் தோல்விக்கு பின்பு மெதுவாகத் எழத் தொடங்கியிருக்கிறோம். சிங்களம் சினந்து போய் கையை பிசைகின்ற நிலையை உருவாக்கியருக்கிறோம்.

வெளித்தோற்றத்திற்கு ஒரு அரசியல் வலுச்சமநிலையை உருவாக்கும் நிலையை அண்மித்துக் கொண்டிருக்கிறோம்.

இதை எல்லாம் குழப்புவதற்கு சில தீயசக்திகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. விக்னேஸ்வரனின் மதிப்பை கெடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றன. இதற்கு நாம் இடம் கொடுக்க முடியாது.

திருமா, வைகோ போன்றவர்கள் அமைதியாக இருக்க சீமானுக்கு என்ன வந்தது? எங்களின் முதலமைச்சரை "பூனை" என்றும் "காக்காய்" என்றும் சொல்ல நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

ஒன்றுமே தெரியாவிடின் மூடிக் கொண்டு இருக்க வேண்டும் சபேசன்.உங்களின் கருத்துக்கள் பல தடவை கத்துக்குட்டி என்று எண்ண வைக்கின்றது... சரவணபவன் மட்டுமல்ல, நிறையப் பேர் ஒதுங்கிக் கொண்டு்ளளார்கள். பலர் கூட்டமைப்பில் பிரச்சனை ஏற்படுத்துவது சிங்கள அரசுக்கு ஆதரவாகப் போய்விடும் என்பதால் தான் அமைதியாக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சரியான கருத்து ஜீவா.. சீமானோ.. தமிழகத்தின் ஏனைய அரசியல்வாதிகளோ தலையிடக்கூடாது.. அவ்வளவு ஏன்.. பிற நாடுகள்கூட தலையிடக்கூடாது..

ஆனால் ஈழமக்கள் தேர்ந்தெடுத்த கட்சியின் தலைவர் தந்தை செல்வாவே தனி ஈழமே தீர்வு என்று சொல்லிவிட்டார். அதைத்தான் தலைவர் முன்னெடுத்துச் சென்றார். சீமான் இந்த ஈழமக்களின் சொந்தத் தீர்வை சும்மா ஆதரிக்கிறார்.. அவ்வளவுதான்.. :D

ஆனால் இந்தியா என்கிற அயல்நாடு திணித்த தீர்வுதான் மாகாணசபை. இது ஈழமக்களின் கோரிக்கையா? இல்லையே.. இறுதியில் "மக்களால் தேர்ந்தெடுககப்பட்ட" வடமாகாண முதல்வர் கூட தமிழீழப் பிரகடனத்தைச் செய்துவிட்டு இந்தியாவுக்குப் போய்விட்டார்.

இப்போது சொல்லுங்கள் ஜீவா.. தந்தை செல்வாவுக்கு உங்கள் ஆதரவா.. அல்லது இந்தியாவுக்கா..? :D

அருமை டங்கு :D

தந்தை செல்வா சொன்ன காலத்தில் ஈழம் தான் தீர்வு என்பது சாத்தியமாய் இருந்திருக்கலாம், ஆனால் இன்று அப்படியா என்பதை ஏன் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தி தெரிந்து கொள்ளக் கூடாது?

ஈழம் கிடைக்கும் என்று தெரிந்தால் ஏன் புலிகள் பேச்சு வார்த்தைக்குப் போனார்கள்?

மாகாண சபையை நான் ஆதரிக்கிறேன்  என்று இதில்  எங்கும் பதிவிடவில்லையே மாம்ஸ்..!! மாகாண சபையைதமிழ்க் கூட்டமைப்பு வெல்வதன் மூலம் எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதை நான் முன்னரும் சில திரிகளில் எழுதியுள்ளேன் அது எனக்கும், உங்களுக்கும் மட்டுமல்ல அரிவரிப் பிள்ளைக்கும் தெரியும் ஆனால் அதன் மூலம் அடுத்த கட்டத்திற்கான அரசியலை முன்னெடுக்க ஒரு ஆக்கபூர்வமான வழியாக இருக்கும் என்று மட்டுமே நம்புகிறேன். சர்வதேசத்துடன் பேரம் பேசும் வலுவை மாத்திரமே கொடுக்கும் மற்றும் படி அங்குள்ளவர்களின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதையும் நன்கு அறிவேன். ஆனால் சுயநிர்ணய உரிமையுடன் வாழும் தீர்விற்கான முதலடியாகவே அதைப் பார்க்கிறேன். மற்றும் படிக்கு செல்வாவுக்கும், இந்தியாவிற்கும் நிச்சயமாக எனது ஆதரவு இல்லை.

ஈழம் தான் தீர்வு என்று சொன்ன தந்தை செல்வா தான் தமிழ்மக்களை அந்தக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் சொன்னார். நாம் எமது வசதிக்குத் தக்கவாறு ஏதோ ஒன்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான் வித்தியாசம்... :D:icon_idea:

மேற்குலகம் பின்பற்றும் ஜனநாயக அரசியலில் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே அடிநாதம். அந்த வகையிலேயே வட்டுக்கோட்டை தீர்மானமும் அதையொட்டிய தேர்தல் விஞ்ஞாபனமும் அதற்கான மக்கள் ஆணையும் முன்னிலை பெறுகின்றன. அதை நீங்களோ நானோ தட்டிக்கழிக்க முடியாது. தனி ஈழமே தீர்வு என்பது மக்கள் வழங்கிய ஆணை..!

இன்று மறுபடி ஒரு தேர்தல் வரப்போகிறது. நாளை விகனேஸ்வரன் முதலமைச்சர் ஆகப்போவது ஏறக்குறைய முடிவான ஒன்று. இன்றைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதே நாளைய கோட்பாடாக இருக்கப்போகிறது. இதில் எவ்வளவு பெரிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உள்ளது என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

மற்றது, புலிகள் பேச்சுவார்த்தைக்குச் சென்ற விடயம் குறித்துப் பேசியிருந்தீர்கள்.. பேச்சுவார்த்தைக்குப் போவதால் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டதாக அர்த்தம் கிடையாது. ஒரு உதாரணத்துக்கு இங்கே குபெக்கைதனி நாடாகப் பிரிக்கவேண்டும் எனக் கோரும் குபெக்வா கட்சி மாநிலத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது. அதற்காக அதன் தனி குபெக் கொள்கையைக் கைவிட்டது என்று அர்த்தம் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வா சொன்ன காலத்தில் ஈழம் தான் தீர்வு என்பது சாத்தியமாய் இருந்திருக்கலாம், ஆனால் இன்று அப்படியா என்பதை ஏன் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தி தெரிந்து கொள்ளக் கூடாது?

ஈழம் கிடைக்கும் என்று தெரிந்தால் ஏன் புலிகள் பேச்சு வார்த்தைக்குப் போனார்கள்?

மாகாண சபையை நான் ஆதரிக்கிறேன்  என்று இதில்  எங்கும் பதிவிடவில்லையே மாம்ஸ்..!! மாகாண சபையைதமிழ்க் கூட்டமைப்பு வெல்வதன் மூலம் எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதை நான் முன்னரும் சில திரிகளில் எழுதியுள்ளேன் அது எனக்கும், உங்களுக்கும் மட்டுமல்ல அரிவரிப் பிள்ளைக்கும் தெரியும் ஆனால் அதன் மூலம் அடுத்த கட்டத்திற்கான அரசியலை முன்னெடுக்க ஒரு ஆக்கபூர்வமான வழியாக இருக்கும் என்று மட்டுமே நம்புகிறேன். சர்வதேசத்துடன் பேரம் பேசும் வலுவை மாத்திரமே கொடுக்கும் மற்றும் படி அங்குள்ளவர்களின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதையும் நன்கு அறிவேன். ஆனால் சுயநிர்ணய உரிமையுடன் வாழும் தீர்விற்கான முதலடியாகவே அதைப் பார்க்கிறேன். மற்றும் படிக்கு செல்வாவுக்கும், இந்தியாவிற்கும் நிச்சயமாக எனது ஆதரவு இல்லை.

ஈழம் தான் தீர்வு என்று சொன்ன தந்தை செல்வா தான் தமிழ்மக்களை அந்தக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் சொன்னார். நாம் எமது வசதிக்குத் தக்கவாறு ஏதோ ஒன்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான் வித்தியாசம்... :D:icon_idea:

தந்தை செல்வா காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன..???!

தந்தை செல்வா காலத்திலும் புலிகள் இருக்கவில்லை. ஆனால் பிரிவினை நிலைப்பாடுகளை நோக்கி தமிழ் மக்கள் சிந்திக்கக் கூடிய சிங்கள பேரினவாத அரசியல் களம் இருந்தது. தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை சிங்கள அரசுகள் தீர்க்கவில்லை என்ற நிலைப்பாடு இருந்தது. இன்றும் அதே.. உள்ளது.

விடுதலைப்புலிகளை அழிப்பதன் மூலமே தமிழ் மக்களுக்கு சிங்கள அரசுகளை தீர்வை முன்வைக்கச் செய்யலாம் என்றவர்கள் எல்லாம் இன்று விடுதலைப்புலிகளின் வழியில் தமிழ் தேசிய உச்சரிப்பில் அரசியல் செய்யும் நிலை வந்துள்ளது.

ஆனால் நீங்களோ.. செல்வாவும் தப்பு.. புலிகளும் தப்பு.. சீமானும் தப்பு.. டக்கிளசும்.. விக்னேஸ்வரனும் தான் சரி என்றாப் போல எழுதி வருகிறீர்கள்.

ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்.செல்வா... பிரபாகரன் இனத்திற்காக சாதிக்காததை விக்னேஸ்வரனோ.. எவருமோ சாதிக்க முடியாது. இதனை சவாலாகவே உங்களுக்குச் சொல்லி வைக்கிறோம்..!

சர்வதேசம் விக்னேஸ்வரனின் அரசியலைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவதில்லை. சிங்களவனும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. ஒருவேளை புலம்பெயர் தமிழர்களும்.. தமிழகத்தமிழர்களும்.. தனித் தமிழீழத்தை கைவிடுவார்களாக இருந்தால்.. விக்னேஸ்வரன்.. சர்வதேசத்தின் முன் செல்லாக்காசு...! அவரின் அனுபவம் சர்வதேசத்தின் முன் பூச்சியமாகும். சிங்களவனின் முன் தூசு. 

விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு சர்வதேசம் மதிப்பளிக்கிறது என்றால்.. அதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான். ஒன்று.. தமிழக.. புலம்பெயர் மக்களிடம் இன்றும் தணியாதுள்ள தமிழீழம். இன்னொன்று சிங்கள அரசின் பூகோள அரசியல் நகர்வுகள்..!

புலிகள் இருந்த போது இவை இரண்டிலும் அவர்கள் செல்வாக்குச் செய்தார்கள். அவர்களைத் தாண்டி தெற்காசியாவுக்குள்... குறிப்பாக இந்துசமுத்திரத்துக்குள் சிறீலங்காவை மையப்படுத்தி.. அவ்வளவு இலகுவாக நகர்வுகளை செய்ய அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசத்திற்கு வசதி இருக்கவில்லை. ஆனால் இன்று அது ஒரு பிரச்சனையே அல்ல. விக்னேஸ்வரன் வாயால என்ன வருகுதென்று நாங்கள் பார்க்கலாம்.. ஆனால் சர்வதேசத்திற்கு அது பிரச்சனை அல்ல.

போர் ஓய்ந்தும்.. இன்னும் புலிகள் மீதான தடையை எவரும் நீக்கவில்லை. அதற்குக் காரணம்.. சிறீலங்கா அரசு அல்ல. புலிகள் மீண்டும் எழுந்துவிடுவார்களோ என்ற அமெரிக்க உறவு நாடுகளின் அச்சம்..! மீண்டும் தங்கள் பூகோள நலன் சார்ந்த காய் நகர்த்தல்களுக்கு புலிகள் இடையூறாவர்களோ என்ற பயம். இந்தப் பயத்தை வைச்சுக் கொண்டு.. தமிழ் மக்கள் நகர்ந்தால் அன்றி.. மற்றும்படி.. சர்வதேசத்திடம் இருந்தோ.. இந்தியாவிடம் இருந்தோ.. சிறீலங்காவிடம் இருந்தோ.. ஒரு துரும்பையும் தமிழர்களால் பெற முடியாது..! இருக்கிற உள்ளூராட்சி சபைகளுக்கும் ஆப்படிக்கும் நாள் தான் நெருங்கும்..! 

மீண்டும்.. சொல்கிறோம்.. சீமானின் குரலுக்குள்ள பயம்... விக்னேஸ்வரனின் குரலுக்கு சர்வதேசத்தில் இல்லை. சீமான் கனடாவில் போய் மக்களிடம் பேச முடியாத அளவிற்கு தடை இருக்கென்றால்.. காரணம்.. அவரின் கருத்து மக்களின் எண்ண ஓட்டத்தை வலுப்படுத்தும் என்ற பயமே அன்றி.. சீமான் என்ற தனிமனிதனுக்கு கனடா பயந்தல்ல..! அதற்கும் புலிகள் தான் காரணமாக உள்ளனர்..! இந்தப் பயம் தான் எமக்கான சாதக சூழலை உருவாக்குமே தவிர வேறு எதுவும் அல்ல..!  :icon_idea:  :)

இந்த உலக மனித அரசியலே..  ஒருவர் மற்றவர் மீது வைத்துள்ள பயத்தின் ஒழுங்கில் தான் இயங்கிக் கொண்டுள்ளது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் ஒருவிதமான அரசியில் செல்வாக்கும் இல்லாத ஒரு சினிமா கூத்தடிக்கு இவ்வளவு ஆதரவு ஈழ தமிழர் நாம் கொடுப்பது கண்டு வியக்கிறேன் என்ன அவர் அப்படி பெரிதா செய்து விட்டார் என்றுதான் விளங்க வில்லை என் சீமானை விட ரஜனிகாந்த்துகு ரசிகர் கூட அவரை ரைபன்னிங்க ஈழம் பிடிக்க சீமானை விட நீயா நானா கோபிநாத் நல்ல கதைப்பார் அவரை கேட்டு பாருங்க அல்லது நித்தியானத்தக்கு பவர் இருக்கு உலகம் பூரா கிளை இருக்கு அவரையும் சேருங்கோ எண்ணி ஒருகிழமையில் நமக்கு ஈழம் கிடைக்கும் என்ன அறிவாளித்தனம் உங்களுக்கு எல்லாம் ஒரு விதமான அரசியல் பின்னணி அரசியல் செல்வாக்கு அற்ற மனிதன் இன்னும் ஒரு தேர்தலையும் சந்திக்காத மனிதனை ஒரு லட்சியத்துக்கு போராடிய தலைவர் இடத்தி வைத்து நோகாமல் வாய் வீரம் பேசியவனை பார்க்குரியல் .

ஆகவே பிரபாகரன் ஒரு ஈழ துரோகி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி அதுக்கு ஈழமக்களின் ஆதரவு இருக்க வேணும் என யில் தமிழர்களுக்கு விட்டு போனது பிரபாகரன் என்னும் தலைவன் செய்த பெரும் வரலாற்று துரோகம் கண்டவன் நிண்டவன் எல்லாம் ஈழ தலைமைகளை கேள்வி கேட்க அதுக்கு நாங்களும் சேர்த்து ஜால்ரா ஆகவே வாழ்க தேசிய தலைவர் சீமான் கூட்டமைப்பை உருவாக்கிய பிரபாகரன் துரோகி ஒழிக்க என நீங்கள் எல்லாம் கோஷம் போடும் நாள் வெகு தொலைவில் இல்லை

என்னாமோ இப்படியே அழிச்சு போங்க சினிமாகாரனுக்கு பால் ஊற்றுபவன் சூடம் காட்டுபவன் நிச்சயம் எமக்கு நாடு பிடிச்சு தருவான்

எங்கள் தலைவர் சீமான் வாழ்க தேசிய தலைவர் சீமான் வாழ்க களம் பல கண்ட தனித்தலைவன் சீமான் வாழ்க உலக தமிழரின் பெரும் தலைவன் சீமான் வாழ்க .

தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய புலிகள் ஒழிக்க

அதுக்கு சம்மந்தனை தலைவரா போட்ட பிரபாகரன் ஒழிக்க

விக்கியை ஏற்றுகொண்ட ஈழமக்கள் ஒழிக்க

தமிழரின் தாகம் சீமானின் தாயகம் .

ஆயிரம் கருத்து வேறுபாடுகள், அதிருப்திகளுக்கு மத்தியிலும் ஈழத்தில் தமிழ்மக்கள் கூட்டமைப்போடு நிற்கின்றார்கள். அதுவும் விக்னேஸ்வரன் வந்ததன் பின்பு ஒதுங்கி நின்ற பலரும் முன்வந்து வேலை செய்கிறார்கள்.

"தமிழின விடுதலை" என்னும் பாதையில் விக்னேஸ்வரன் எங்களை ஒரு குறிப்பிட்ட தூரம் முன்னோக்கி அழைத்துச் செல்கின்ற ஒரு தலைவராக விளங்குகின்றார்.

நம்பினால் நம்புங்கள்! விக்னேஸ்வரனை நாம் தேர்வு செய்ததன் பிற்பாடு எமது சோர்வு நீக்கி நாம் சற்றுத் தலைநிமிர்ந்திருக்கிறோம். முள்ளிவாய்க்கால் தோல்விக்கு பின்பு மெதுவாகத் எழத் தொடங்கியிருக்கிறோம். சிங்களம் சினந்து போய் கையை பிசைகின்ற நிலையை உருவாக்கியருக்கிறோம்.

வெளித்தோற்றத்திற்கு ஒரு அரசியல் வலுச்சமநிலையை உருவாக்கும் நிலையை அண்மித்துக் கொண்டிருக்கிறோம்.

இதை எல்லாம் குழப்புவதற்கு சில தீயசக்திகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. விக்னேஸ்வரனின் மதிப்பை கெடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றன. இதற்கு நாம் இடம் கொடுக்க முடியாது.

திருமா, வைகோ போன்றவர்கள் அமைதியாக இருக்க சீமானுக்கு என்ன வந்தது? எங்களின் முதலமைச்சரை "பூனை" என்றும் "காக்காய்" என்றும் சொல்ல நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்ச

சபேசன், விக்கினேசுவர்ன் இப்படியான பேட்டியை ஏன் இத் தருணத்தில் கொடுக்க வேண்டும்? அவரின் மறுப்பு அறிக்கையையும் பார்க்கவும்.இதில் ஹிந்து செய்யும் விளையாட்டு என்ன என்பது தமிழ் நாட்டு அரசியல் தெரிந்ததாகக் கூறிக் கொள்ளும் உங்களுக்கு விளங்கவில்லை என்றால் உங்களுக்கு என்ன தெரியும் எனும் கேள்வி எழுகிறது. பிரச்சினையை விக்கினேசுவர்ன்  தான் உருவாக்கி இருக்கிறார்.வேறு யாரும் அல்ல. யார் எதிரி யார் நண்பன் என்று தெரியாமால் தான் புலிகளின் போராட்டம் அழிந்தது.அதனையே விக்கினேசுவரனும் செய்வாராகில் , மீண்டும் தோல்வியே. இது பற்றி கூட்டமைப்பின் மற்றைய தலைவர்கள் சிந்திப்பது அவசியம்.இது முன்னரும் ஆனந்தவிகடனும் செய்தது, இப்போது கிந்துவும் செய்கிறது. இவர்கள் தெரிந்தே பேட்டி கொடுக்கிறார்களா இல்லாது தமிழ் நாட்டின் அரசியல் தெரியாமல் செய்கிறார்களா என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் என்னதான் குத்தி முறிந்தாலும், அண்ணன் சீமானின் முக்கியத்துவத்தை குறைத்துவிட முடியாது. இன்று விக்கினேஸ்வரனைவிட, சம்பந்தரை விட, அண்ணன் சீமானுக்குதான் செல்வாக்கு. அவரை தேசிய தலைவர் என்று சொல்வதில் தவறு ஏதுமில்லை.

நீங்கள் கொஞ்சப் பேர்.. யாழில பதிஞ்சு என்ன புடுங்கிறீங்க என்னா.. இப்படியே தேசிய தலைவர் என்ற அந்த உச்சரிப்புக்கு.. பயந்தபடி வாழ்ந்து தொலைக்கிறது என்ற முடிவோட இருக்கிறதை வெளிக்காட்டுகிறீர்கள். அப்படி என்றால் நல்லா ஒட்டுக்குழு அரசியல் செய்து பழகியதால்.. அரைச்ச மாவையை அரைச்சுக் கொண்டிருக்கிறீர்கள்.

சீமான் உங்கள் எல்லோரை விடவும் தெளிவாக இருக்கிறார். அவர் விரும்புவது தேசிய தலைமையோ அல்லது பிரபாகரனின் இடமோ அல்ல. தமிழினத்தின் விருப்பை.. தனது எண்ணமாக...பிரபாகரன் கையில் எடுத்துப் போராடினாரோ அந்த இலட்சியத்தை வெல்வதே. அதற்கு தேசிய தலைவர்.. என்று அழைத்துக் கொள்வது.. விடுவது அல்ல பிரச்சனை. வேணும் என்றால் டக்கிளஸ் தேவானந்த போல் சர்வ பல... சதா கால.. செயலாளர் நாயகமாக நாம் தமிழர் கட்சிக்கு சீமான் இருந்து ஜனநாயகம் செய்யலாம் தானே. அது உங்களுக்கு பிரச்சனையாக இருக்காது என்று நம்புகிறோம்.  :)  :lol:

தேசியத் தலைவர் என்னும் பட்டத்தை சீமான் ஒருபோதும் எடுக்க இல்லை. அது மக்களால் வழங்கப்படும் உன்னதமான தகுதி, தயவு செய்து அதனைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

சீமானின் கோவமும், தர்க்கமும் நியாயமானது. விக்கினேசுவரனின் பேட்டி அவரின் இரண்டாவது மறுப்பு அறிக்கைகளும் கோமாளித் தனமாக இருக்கின்றன. இந்திய எசமானர்களைத் திருப்திப் படுத்த பேட்டி கொடுக்கப் போய் அது முதலுக்கே ஆப்பு வைக்கும் அளவுக்கு வந்துவிட்ட பின் மறுப்பு அறிக்கை.இவ்வாறுதான் இவர் செயற்படுவார் எனில் இவரை தேர்தலின் பின் கூட்டம்மைப்பில் உள்ளவர்கள் கழட்டி விட வேண்டும் அல்லது மக்கள் கூட்டமைப்புக்கு பாடம் படிப்பிக்க வேண்டி இருக்கும்.

தமிழ்நாட்டின் தீவிரவாதம் பேசும் சக்திகளில் இருந்து நாம் தள்ளி நிற்கின்றோம் என்பதை காட்ட வேண்டிய தேவை விக்னேஸ்வரனுக்கு இருக்கிறது. அதைத்தான் அவர் செய்கிறார்.

ஆழ்ந்த அரசியல் அனுபவம் மிக்க வைகோ, திருமா, வீரமணி, கொளத்தூர்மணி போன்றவர்கள் இதை புரிந்ததனால் அவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள். விக்னேஸ்வரன் இப்படி சொல்லி விட்டாரே என்று இவர்கள் யாரும் தமது ஆதரவை எமக்குத் தரமால் விடப் போவதில்லை.

எங்களுக்கு ஏற்ற தீர்வை நாம் அடைவதற்கான ஆதரவை இத்தகைய தலைவர்களும் மக்களும் எமக்கு வழங்குவார்கள்.

ஆனால் சிதைவு அரசியல் செய்து கொண்டிருக்கின்ற சீமான் இதுதான் சந்தர்ப்பம் என்று துள்ளுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

வை.கோ இன்று விருதுநகரில்.. தனித் தமிழீழமே ஒரு தீர்வு என்று தீர்மானம் போட்டுள்ளார்.

அம்மையார் ஜெயலலிதா சட்ட மன்றத்தில் அதனை போட்டுள்ளார்.

மிஸ்டர் கருணாநிதி மட்டும்.. டெசோவில் அதைப் போடல்ல. காரணம்... சொக்கத்தங்கம் சோனியா. மிஸ்டர் கருணாநிதியின் உழுத்துப் போன திராவிட பாசறையில் உள்ள வீரமணி தலைவருக்கு ஏற்ப அடக்கி வாசிப்பதில் வல்லவர்.கொளத்தூர் மணியும் அதே தான்.

ஆனால் அண்ணன் சீமான் சொல்லும் செயலும் ஒன்ரென்று உள்ள ஒரு தலைவர். அந்த வகையில் அவர் விரைந்து பதில் அளிக்கிறார். மக்களுக்கு தெளிவுபடுத்துகிறார். அவரின் இந்த நீதியான நேர்மையான அரசியல் தான் இன்று எமக்குத் தேவை.

கருணாநிதி போல.. அமுக்கி வைச்சிட்டு.. தேர்தல் காலத்தில் டெசோவைக் கூட்டி.. இந்திய இறையாண்மைக்குள் ஈழத்தமிழர்களுக்கு தீர்வுன்னு தீர்மானம் போட வீரமணி கூட இருந்து கைதட்டுவார். இவர்கள் எல்லாம் ஈழ ஆதரவாளர்களா இல்லை அப்படிக் காட்டிக் கொள்பவர்களா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.  :icon_idea:

சீமான் போலித் திராவிடத்தை வீழ்த்தி நாம் தமிழர் என்ற தமிழ் தேசிய உணர்வை முன்னிலைப்படுத்துவதே இங்கு சிலருக்கு அவர் மீது கடுப்படிக்கக் காரணமாகும். தாங்கள் வழமையாகப் போற்றும் தலைவர்கள் இதனால் மக்கள் முன் மதிப்பிழப்பதையும் அவர்களோடு கூட நின்று எடுத்த சில படங்கள் போட முடியாமல் வீணாவதுமே இவர்களுக்குள்ள பிரச்சனை.

சீமானின் லிஸ்டில் இன்னும்.. ஐயா நெடுமாறனை சேர்க்கவில்லை..போலும். கூட எடுத்த படங்கள் போட்டு முடிய அவர் மீதும் பாய்வார்கள்..! :lol:  :icon_idea:

விக்கினேசுவரன் ஏன் மறுப்பு அறிக்கை விட வேண்டும் என்பதை எப்படி விளக்குவீர்கள் சபேசன்? அதுவும் இது இரண்டாவது முறை?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் தீவிரவாதம் பேசும் சக்திகளில் இருந்து நாம் தள்ளி நிற்கின்றோம் என்பதை காட்ட வேண்டிய தேவை விக்னேஸ்வரனுக்கு இருக்கிறது. அதைத்தான் அவர் செய்கிறார்.

ஆழ்ந்த அரசியல் அனுபவம் மிக்க வைகோ, திருமா, வீரமணி, கொளத்தூர்மணி போன்றவர்கள் இதை புரிந்ததனால் அவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள். விக்னேஸ்வரன் இப்படி சொல்லி விட்டாரே என்று இவர்கள் யாரும் தமது ஆதரவை எமக்குத் தரமால் விடப் போவதில்லை.

எங்களுக்கு ஏற்ற தீர்வை நாம் அடைவதற்கான ஆதரவை இத்தகைய தலைவர்களும் மக்களும் எமக்கு வழங்குவார்கள்.

ஆனால் சிதைவு அரசியல் செய்து கொண்டிருக்கின்ற சீமான் இதுதான் சந்தர்ப்பம் என்று துள்ளுகிறார்.

அந்த நாளில் இருந்து அலட்டி புலம்பி எழுதின கை சும்மா இருக்குமா...எழுத முதல் நாட்டு நடப்பை நன்ங்கு அறிந்துட்டு எழுதினால் உங்களுக்கும் நல்லம் சமுதாயத்துக்கும் நல்லம்.....

சீமானின் அரசியல் நேர்மையானது. நெடுநாள் நோக்கில் அதுவே நிலைத்து நிற்கக் கூடியது. விக்கியின் அரசியல் வெகு விரைவில் முடிந்து விடும்.

விக்னேஸ்வரன் அவர்கள் விட்ட தவறு இதற்கு மறுப்பு வெளியிட்டதுதான். ஆயினும் சொல்லவேயில்லை என்று அவர் சொல்லவில்லை. கணவன் மனைவியை உதாரணத்திற்கு எடுத்ததை அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

நானும் சொல்கிறேன். கணவன் மனைவிக்குள்தான் பிரச்சனை. விஜயனிற்கும் குவேனிக்கும்தான் பிரச்சனை. அல்லது விஜயனுக்கும் பாண்டிநாட்டு தமிழ் இளவரசிக்கும்தான் பிரச்சனை.

தமிழ்நாட்டு அண்ணன் தங்கைக்காக ஓடிவரத்தான் வேண்டும். அது அவன் கடமை. ஆனால் முடிவை குவேனி எடுக்கட்டும்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

கௌத்துார் மணியா? பெரியார் 95 வீதம், ஈழம் 5 வீதம் என்று சமீபத்தில் தான் சொன்னார். அதனால் அவர் எதிரானவர் என்றல்ல. அவரது ஆதரவு குறைத்து மதிப்பிட முடியாதது. ஆனால் 5 வீதம் தான் ஈழம் என்பதால் அவர் 100 வீதம் தமிழீழம் என்ற நாம் தமிழருக்கு இணையாகப் போவதில்லை.

வீரமணி அமைதியாகத் தான் இருப்பார். கருணாநிதி சொறிந்து விட்டால் தான் அவர் குரல் கொடுப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு அண்ணன் தங்கைக்காக ஓடிவரத்தான் வேண்டும். அது அவன் கடமை. ஆனால் முடிவை குவேனி எடுக்கட்டும்.

குவேனி கையறு நிலையில் 'மென்டலாக' விஜயனால் சிதைக்கப்பட்டிருந்தால் எப்படி சுயமாக முடிவெடுப்பாள்? :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.