Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விருதுநகர் ம.தி.மு.க மாநாட்டில் "தமிழீழமே ஒரே தீர்வு" தீர்மானம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விருதுநகர் மதிமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்!

விருதுநகரில் நடைபெற்ற ம.தி.மு.க. மாநில மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 14 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதன் விவரம் :

* காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 9½ ஆண்டுகளாக வரலாறு காணாத ஊழல்களில் ஊறி திளைத்து வருகிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், ஆதர்ஸ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஊழல், ராணுவ ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என அடுக்கடுக்கான ஊழல் புகார்களுக்கு ஆளான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பதவியில் இருந்து அகற்றுவதுதான் நாட்டின் எதிர்கால நலனை விரும்புகின்ற ஒவ்வொருவரின் கடமையாகும்.
 
எனவே வருகிற 2014 நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவது என்றும், மத்திய ஆட்சி பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்றுவதை இலக்காக கொண்டு புதிய வியூகம் வகுப்பது என்றும் இந்த மாநாடு பிரகடணம் செய்கிறது.
 
* மத்திய காங்கிரஸ் அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் பெரும் அபாயகரமான கட்டத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்திய நாட்டின் பொருளாதார இறையான்மையை மீட்டெடுக்கவும், தற்சார்பு பொருளாதார கொள்கைகளை செயல்படுத்தவும், மத்தியில் மாற்று அரசு அமைப்பதுதான் ஒரே தீர்வு என்று ம.தி.மு.க. கருதுவதுடன், அதற்காக நாடாளுமன்ற தேர்தல் களத்தில் மக்களை தயார் படுத்தும் பணியில் முழு வீச்சில் இறங்குவது என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது.
 
* இலங்கையில் தமிழ் ஈழமே தீர்வு என்ற கருத்து உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் இனக்கொலை புரிந்த ராஜபக்சே கூட்டத்தை சர்வதேச நீதிமன்ற குற்றக்கூண்டில் நிறுத்தி தண்டிப்பதையும், பொது வாக்கெடுப்பு மூலம் சுதந்திர தமிழ் ஈழத்தை அமைப்பதையும் ஒரே இலக்காக கொண்டு ம.தி.மு.க. பாடுபடும்.

தமிழகத்திலும் உலகம் முழுவதும் இதற்கான ஆதரவை திரட்டுகின்ற பணியில் ம.தி.மு.க. தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.
 
* இலங்கையில் தமிழின கொலை நடத்திய கொடியவன் ராஜபக்சே தலைமையில் நவம்பர் 17, 18 தேதிகளில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த இந்திய அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கொலை குற்றவாளியான ராஜபக்சே 2 ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்புகளுக்கு தலைவராகிவிடுவார். இது ராஜபக்சேவை கொலை குற்றத்தில் இருந்து தப்பிக்க வைக்க இந்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியாகும். இதை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
 
எனவே இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்றும், ஈழத்தமிழர் படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கி வைக்க வேண்டும் என்றும், காமன்வெல்த் அமைப்பை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

* தமிழகத்தில் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்க முழுமுதற் காரணம் தமிழக அரசு நடத்தி வரும் மதுக்கடைகள் தான். எனவே தமிழக அரசு மதுக்கடைகளை உடனே மூட வேண்டும் என்றும், முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்த மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
 
* மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாது காப்புச் சட்டம் முரண்பாடாக உள்ளது. குறைபாடுகள் நிறைந்த உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு ம.தி.மு.க. கண்டனம் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டிற்கு மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும் 36.78 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ரூ.3 விலையிலேயே தொடர்ந்து வழங்க வேண்டும் என மாநாட்டின் மூலம் வலியுறுத்துவது.
 
* தமிழகத்தில் ஆங்கில மொழி வழிப்பயிற்சியை கைவிட்டு தாய்மொழி கல்வி வளர்ச்சிக்கு ஆக்கம் தர வேண்டும்.
 
* மத்திய அரசின் தமிழர் விரோத போக்கை வன்மையாக கண்டிப்பதுடன், இலங்கையில் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்துவது.
 
* நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுஉலையை அகற்ற வேண்டும். மேலும் இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்டுள்ள 2 லட்சத்திற்கும் மேலான பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாக நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும்.
 
* காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பெறும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்கு முறை குழுவை மத்திய அரசு உடனடியாக அமைத்திட வேண்டும்.
 
* தமிழகத்தின் முக்கிய ஆறுகளான தாமிரபரணி, வைகை, காவிரி, பாலாறு உள்ளிட்ட 33 ஆற்றுப் படுகைகளில் மணல் கொள்ளை நடக்கிறது. மேலும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளில் தாது மணல் கொள்ளை நடைபெறுகிறது. இந்த சட்டவிரோத மணல் கொள்ளைகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநாட்டின் மூலம் வலியுறுத்துவது.
 
* வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து விவசாயிகள் மற்றும் பொது மக்களை பாதுகாக்க நதிகள் அனைத்தையும் தேசிய மயமாக்கிட வேண்டும் என்றும், முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைத்திட வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை மாநாட்டின் மூலம் வலியுறுத்துவது.
 
* தமிழகம் முழுவதும் புதிய ரெயில்வே திட்டங்களை கொண்டுவர வேண்டும். மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னை– கன்னியாகுமரி, சென்னை– செங்கோட்டை, சென்னை– தூத்துக்குடி ஆகிய வழித் தடங்களில் கூடுதலாக சரக்கு ரெயில்களை இயக் கிட முன்வர வேண்டும். சென்னை–கன்னியாகுமரி இடையே இரட்டை வழிப் பாதையை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது.
 
* தென் மாவட்ட மக்கள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணியில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து அரசு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சர்வதேச விமான சேவை அளிக்க வேண்டும் என மத்திய அரசை மாநாட்டின் மூலம் வலியுறுத்துவது.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=107595

1235339_643624012344178_1620728958_n.jpg

1233361_526504190761008_881195687_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களும் தலையிட்டுவிட்டார்களே.. cool-unhappy-071.gif

:D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜயா....உங்கட போராட்டத்தையும் கொச்சைப் படுத்த ஒரு கூட்டம் ஓடி வரும் விரைவில்...

  • கருத்துக்கள உறவுகள்

போச்சுடா இவரும் இப்போ மாட்டுப்பட்டு போனாரா?

பாவம் வைகோ... !

இனி யாழிலிருந்து ஏவு கணைகள் அனல் பறக்க பாயும்!

"நீ எப்படி எங்கள் உள்வீட்டு விவகாரங்களில் தலையிடலாம்?"

"உன் வேலையைப் பார்...!"

"பொத்திக்கொண்டு போம்..!".

இன்ன பிற...!

Start Music!!

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..மிக முக்கியமான ஏவுகணை,  "ஈழத் தமிழர்களுக்கு இதுவரை என்னத்தை சாதித்து கிழித்தீர்கள்?"

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..மிக முக்கியமான ஏவுகணை,  "ஈழத் தமிழர்களுக்கு இதுவரை என்னத்தை சாதித்து கிழித்தீர்கள்?"

ஏன் ஜயா அப்படி கேட்டதில் என்னய்யா தப்பு...அங்கு அப்பாவிகள் சிலர் எமக்காக தீக்குளித்து இறந்ததை விட அங்குள்ள தமிழக் அரசியல்வாதிகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? இருக்கிறார்கள்?
 
பதவியில் இருந்தால் தானா நியாயம் கேட்க முடியும, போராட முடியும்?...தொப்புள் கொடி உறவு என்று சொல்லிக் கொண்டு ஒரு இனமே அழிவதை வேடிக்கை பார்க்க,அதுவும் அவர்களது இனம் தமிழினம் அழிவதை வேடிக்கை பார்க்க தமிழக அரசியல்வாதிகளால் தான் முடியும்.அது தெரிந்து தான் இந்தியா மத்திய அரசு,இலங்கையோடு சேர்த்து அழித்தது :(
 
குறைந்தது அந்த நேரத்திலாவது ஈழத் தமிழருக்கு ஏதாவது நல்லது செய்வதற்காக தூங்கும் தமிழகத்தை தட்டி எழுப்பி விட்டு இருக்கலாம்.கலைஞர் விடவில்லை,ஜெயா விடவில்லை என்பதெல்லாம் நொண்டிகள் சொல்லும் சாட்டு.தமிழ்நாட்டு மக்கள் விழிப்பாகத் தான் இருந்தவை/இருக்கினம்.ஆனால் அவர்களை தூக்கத்தில் இருந்து முழிக்க விடாமல் செய்ததில் பெரும் பங்கு தமிழக அரசியல்வாதிகளுக்கு உண்டு[தனிய கலைஞம்,ஜெயா அந்த அரசியல்வாதிகள் அல்ல]. தமிழக அரசியல்வாதிகள் எப்படி ஒவ்வொரு செயலையும் அரசியலாக்கி பிழைப்பு செய்கிறார்கள் என்பதற்கு முத்துக்குமாரின் மரண வீடே சாட்சி
 
ஏதோ தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எமக்காக போராடி எதையோ பெற்றுத் தந்த மாதிரியும் நாங்கள் ஏதோ விசுவாசம் இல்லாத மாதிரி இருக்கின்ற மாதிரியும் தான் இருக்குது உங்கள் கதை.தங்கட சொந்த மீனவர்கள் சாவதைக் கூட அவர்களால் தடுக்க முடியவில்லை
 
தமிழீழம் தான் என்ட உயிர் மூச்சு என்று யாழில் வந்து நானும் எழுதிட்டு போகலாம்.அது பெரிய வேலையேயில்லை.ஆனால் சொன்னால் மட்டும் காணுமா அதற்காக போராட வேண்டாமா?
 
தமிழிழத்திற்கு போராடுறது இருக்கட்டும்.முதலில் தமிழக மீனவர்கள் இலங்கை  அரசால் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த சொல்லுங்கள் அடுத்தது உங்கள் தமிழகத்தில் முகாம்களில் உள்ள மக்களுக்கு நிம்மதியான வாழ்வு அமைச்சு கொடுக்க சொல்லுங்கோ.அதற்கு பிறகு தமிழிழத்திற்காக போராடலாம்.தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கே ஒன்றும் அவர்களால் செய்ய முடியவில்லை.இந்த லட்சணத்தில் ஈழமாம்.ஆனால் ஒன்று சீமானையும் பார்க்க வைகோ எவ்வளவு திறம்.வயதும்,அனுபவமும் பக்குவப்படுத்தி இருக்குது
 
ராஜவன்னியன் ஜயா நக்கல்கள்,நளினங்கள் விடுவதில் தப்பு இல்லை ஆனால் அதிலும் உண்மை இருக்க வேண்டும்

ம்ம்..மிக முக்கியமான ஏவுகணை,  "ஈழத் தமிழர்களுக்கு இதுவரை என்னத்தை சாதித்து கிழித்தீர்கள்?"

அண்ணா உங்கள் ஆதங்கம் புரிகிறது .உண்மையில் தற்போது உள்ள நிலையில் அடக்கப்பட்டு ,ஒடுக்கப்பட்டு.அநாதரவாக்கப்பட்டு ,எதுவுமே இல்லாத நிலையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கான ஒரே ஒரு உதவும் சக்தியாக எம் தொப்பிழ் கொடிஉறவுகளாகிய  தமிழ் நாட்டு மக்களே பெரும் சக்தியாக இருக்கிறார்கள் .இந்த உண்மையை எம்மை ஒதுக்கி விட்டு மேலும் ஒட்டுண்ணி ஆக்கப்பார்க்கும் அனைவர்க்கும் தெரியும் .அதன் நிமித்தம் இந்த உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தும் முகமாக இவர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு உளவியல் யுத்தமாகவே இதை கருதமுடியும் .ராஜீவ் காந்தி கொலையை பயன்படுத்தி எப்படி எம்மை பிரித்தார்கள் என்ற அனுபவமும் எம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கும் .
 
ஆகவே பன்முகப்பட்ட சூழ்ச்சி நடவடிக்கைகள் மூலம் எம்மை வெற்றி கொண்டவனுக்கு தமிழ் நாடும் ,எமது போராட்டத்திற்கு ஆதரவாக குரல்கொடுப்போரும் ,செயல்படுபவர்களும் பெரும் சவாலாக இருப்பதையும் காண முடியும் ...............அதற்கான ,அந்த நடவடிக்கைகளை தடுக்கு முகமாக எம் மக்கள் மூலமாகவே தனது வெற்றியை நோக்கி நகர முயல்கின்றான் எதிரி .இந்த சூழலை முறியடித்து மேல் நோக்கி நகர்வதிலேயே எம் வெற்றி தங்கியிருக்கிறது ...உங்கள் மனதை நோகடித்தவர்களை ஈழத்தமிழனாய் அவர்களுக்காக மன்னிப்பு  கேட்கிறேன் ,நன்றி அண்ணா .
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போச்சுடா இவரும் இப்போ மாட்டுப்பட்டு போனாரா?

பாவம் வைகோ... !

இனி யாழிலிருந்து ஏவு கணைகள் அனல் பறக்க பாயும்!

"நீ எப்படி எங்கள் உள்வீட்டு விவகாரங்களில் தலையிடலாம்?"

"உன் வேலையைப் பார்...!"

"பொத்திக்கொண்டு போம்..!".

இன்ன பிற...!

Start Music!!

ராஜவன்னியன் அண்ணா.. யாழில் உள்ள ஒரு சில ஊரறிவற்றவர்களின் கருத்துக்களின் அடிப்படையில்.. வை.கோ அவரிகளின் ஈழப்போராட்டப் பங்களிப்பை எல்லா ஈழத்தமிழ் மக்களும் இப்படித்தான் பார்க்கிறார்கள் என்று கருதக் கூடாது.

1988 இல் இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் ஈழத்தில் இருந்த போது.. இதே வை.கோவின் உணர்ச்சி உரையை ரகசியமாக போட்டுக் கேட்டதும் அல்லாமல்.. அவற்றை ஒலி நாடாக்களில் பதிந்து ஊர்கள் பூராவும்.. பரவச் செய்தார்கள் எங்கள் மக்கள்.

அதே தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்த ஒட்டுக்குழுக்கள்.. அவற்றில் சில பத்தை.. பறித்து எரித்தன. ஏன்.. இந்தியப் படைகளுக்கு காட்டிக்கொடுத்து.. பிடித்து சித்திரவதை முகாம்களுக்குள் அடைத்து சித்திரவதையும் செய்தனர். செய்த குற்றம் வை.கோவின் பேச்சை கேட்டது.

அந்தக் கூட்டத்தில் கொஞ்சம் யாழிலும் உள்ளது. அதுவே இப்படியான விவேகமற்ற ஆத்திரமூட்டும் வேலைகளையும் செய்கின்றது. அவர்களின் தொழிலே எஜமானர்களிடம் எலும்பு பொறுக்க எதையாவது வாந்தி எடுத்துக்கிட்டே இருப்பது.

அவர்களின் கருத்துக்களை மையப்படுத்தி ஒட்டுமொத்த.. ஈழத்தமிழ் மக்களின் கருத்தும் அதுவே என்று எண்ணக் கூடாது. மனம் தளரவும் கூடாது..!

எமக்கென்று (தமிழ் மக்கள் எல்லோருக்குமாக) தேசம் விடிந்தால் தெரியும்... அப்ப தான்.. இந்த வாந்திக் கூட்டம் கொஞ்சம் என்றாலும் ஓயும். அதுவரை கட்டப்பொம்மனுக்கு போட்டியா எட்டப்பனும் கூட வரவே செய்வான்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜயா....உங்கட போராட்டத்தையும் கொச்சைப் படுத்த ஒரு கூட்டம் ஓடி வரும் விரைவில்...

இப்போது யாழில் அந்தமாதிரி மாற்று கருத்து எழுபவர்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது  :(

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..மிக முக்கியமான ஏவுகணை,  "ஈழத் தமிழர்களுக்கு இதுவரை என்னத்தை சாதித்து கிழித்தீர்கள்?"

அப்படி சொல்லாதீர்கள் ராஜவன்னியன்,

 வைகோ அண்ணா பற்றி புரிந்தவர்களுக்கு வைகோ என்ன செய்தார் என்பது தெரியும். 

 அவர் அப்படி கேட்பவர்களை விட அதிகம் செய்திருக்கின்றார் அதில் சொல்லக்கூடியதும் உள்ளது வெளியில் சொல்ல முடியாததும் உள்ளது .... விமர்சனம் வைப்பவர்கள் எப்போதும் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள் அதனை பெரிதாக எடுக்க முடியாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது யாழில் அந்தமாதிரி மாற்று கருத்து எழுபவர்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது  :(

தேர்தல் காலங்களில் குளோனிங் கொப்பிகள் அதிகம். மேலும் தேர்தலற்ற நேரத்தில் உறக்கத்தில் இருப்பவர்களும் தேர்தல் என்றவுடன் களம் இறங்குகின்றனர். அவர்களுக்கு இதன் மூலம்.. ஒரு கோழிப் புரியாணி கிடைச்சால் அது.. பெரிசு தானே..! எவன் செத்தால் என்ன.. நாடு எப்படிப் போனால் என்ன..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தொப்புள் கொடி உறவு என்று சொல்லிக் கொண்டு ஒரு இனமே அழிவதை வேடிக்கை பார்க்க,அதுவும் அவர்களது இனம் தமிழினம் அழிவதை வேடிக்கை பார்க்க தமிழக அரசியல்வாதிகளால் தான் முடியும்.அது தெரிந்து தான் இந்தியா மத்திய அரசு,இலங்கையோடு சேர்த்து அழித்தது :(
 
குறைந்தது அந்த நேரத்திலாவது ஈழத் தமிழருக்கு ஏதாவது நல்லது செய்வதற்காக தூங்கும் தமிழகத்தை தட்டி எழுப்பி விட்டு இருக்கலாம்.கலைஞர் விடவில்லை,ஜெயா விடவில்லை என்பதெல்லாம் நொண்டிகள் சொல்லும் சாட்டு.தமிழ்நாட்டு மக்கள் விழிப்பாகத் தான் இருந்தவை/இருக்கினம்.ஆனால் அவர்களை தூக்கத்தில் இருந்து முழிக்க விடாமல் செய்ததில் பெரும் பங்கு தமிழக அரசியல்வாதிகளுக்கு உண்டு[தனிய கலைஞம்,ஜெயா அந்த அரசியல்வாதிகள் அல்ல]. தமிழக அரசியல்வாதிகள் எப்படி ஒவ்வொரு செயலையும் அரசியலாக்கி பிழைப்பு செய்கிறார்கள் என்பதற்கு முத்துக்குமாரின் மரண வீடே சாட்சி
 
ஏதோ தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எமக்காக போராடி எதையோ பெற்றுத் தந்த மாதிரியும் நாங்கள் ஏதோ விசுவாசம் இல்லாத மாதிரி இருக்கின்ற மாதிரியும் தான் இருக்குது உங்கள் கதை.தங்கட சொந்த மீனவர்கள் சாவதைக் கூட அவர்களால் தடுக்க முடியவில்லை
 
தமிழீழம் தான் என்ட உயிர் மூச்சு என்று யாழில் வந்து நானும் எழுதிட்டு போகலாம்.அது பெரிய வேலையேயில்லை.ஆனால் சொன்னால் மட்டும் காணுமா அதற்காக போராட வேண்டாமா?
 
தமிழிழத்திற்கு போராடுறது இருக்கட்டும்.முதலில் தமிழக மீனவர்கள் இலங்கை  அரசால் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த சொல்லுங்கள் அடுத்தது உங்கள் தமிழகத்தில் முகாம்களில் உள்ள மக்களுக்கு நிம்மதியான வாழ்வு அமைச்சு கொடுக்க சொல்லுங்கோ.அதற்கு பிறகு தமிழிழத்திற்காக போராடலாம்.தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கே ஒன்றும் அவர்களால் செய்ய முடியவில்லை.இந்த லட்சணத்தில் ஈழமாம்.ஆனால் ஒன்று சீமானையும் பார்க்க வைகோ எவ்வளவு திறம்.வயதும்,அனுபவமும் பக்குவப்படுத்தி இருக்குது
 
ராஜவன்னியன் ஜயா நக்கல்கள்,நளினங்கள் விடுவதில் தப்பு இல்லை ஆனால் அதிலும் உண்மை இருக்க வேண்டும்

சரி நாங்கள் தான் (தமிழக தலைவர்கள்) செய்யவில்லை, ஈழத்தில் என்ன வாழ்ந்தது? ஈழத் தலைவர்கள் அனைவரும் ஒரு அணியில் போராடினார்களா? ஒருதரை ஒருத்தர் குழிபறித்து சோரம் போகவில்லையா? இவ்வளவு துயரம், வலி கண்ட பின்னும் பொது இலக்கை நோக்கி உங்களுக்குள் இணக்கப்பாடோ ஒற்றுமையோ ஏன் இன்னமும் வரவில்லை? உங்கள் சக்தியையும் மீறி ஒவ்வொருத்தரின் ஈகோவால் சிங்களத்திடம் சரணடைந்து, போராட்டத்தை மட்டுப்படுத்த யார் காரணம்? துயரை, வலியை நாங்கள் உணராததால்,இங்கிருக்கும் கெடுபிடிக்குள் எம்மை நோக்கி சுட்டி அதிகம் பயனில்லை, முதலில் உங்கள் தலைமைகளை ஒருங்கிணையுங்கள், ஏனெனில் வலியை தினமும் அனுபவிப்பவர்கள் நீங்களே!

தமிழீமே எங்களின் உயிர்மூச்சு என இங்கே யார் சொன்னது? தமிழ் ஈழம் அமைந்து நீங்கள் நிம்மதியா இருந்தால் நலம் என்ற ஒரு ஆதங்கமும், விருப்பமும் அதற்கான தார்மீக ஆதரவுமே இங்கேயுள்ள உறவுகளால் கொடுக்க இயலும்.

இவ்வளவு பேசும் நீங்கள், 1991 ம் ஆண்டு வரை தமிழகத்தின் அனைத்து மக்களும், தலைவர்களும் ஈழத்தமிழர்களுக்கு எவ்வாறு இங்கே களமமைத்து இயக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை  வசதியாக மறந்துவிட்டு பேசுகிறீர்கள்! ஈழத்தமிழர்கள்/இயக்கங்கள் சிலரின் சட்டவிரோத நடவடிக்கைகளால் பலருக்கும் சங்கடங்கள் விளைந்ததையும் அதையும் மீறி உங்கள் போராட்டங்களுக்கு தமிழகம் ஒத்துழைப்பு கொடுத்ததை உலகறியும்.

தமிழகத்தின் / தலைவர்களின் பரிபூரண ஆதரவும், ஒத்துழைப்பும் இருந்தபடியால் தான் ஈழ இயக்கங்கள் இந்தளவிற்கு வீரிய வளர்ச்சி கண்டது என்பதை மறுக்க முடியுமா? தமிழகத்தின் அனைத்து கடற்கரையும் முற்றாக தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அன்றைய இயக்கங்களின் கதியென்ன? சிங்களவன் அப்பொழுதே உங்களை நசுக்கி இருப்பான். முள்ளிவாய்க்காலை 70களிலேயே கண்டிருப்பீர்கள் அம்மணி.

இன்னமும் அகதி முகாம்களை அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பவது சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்காகவே, ஏனெனில் அவர்களின் முன்னைய அனுபவம் அப்படி. ஆனால் இது கண்டிக்கபட வேண்டியதே.

உங்களைப்போலவே எங்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை, அதன் விளைவே இந்த தமிழக மீனவர் மரணங்கள்.

நாங்கள் யாரும் ஈழத்திற்கு போராட வரவில்லையம்மணி, அது உங்களின் அடிப்படை உரிமை, விருப்பம், ஒரே இனம் என்ற அடிப்படையில் அதற்கு உதவுவது மற்றும் தார்மீக ஆதரவளிப்பதே எங்களின் கடமை.

சேய் நன்றாக இருத்தால், தாய்க்கு கிடைக்கும் நிம்மதியும், சந்தோசமுமே எங்களுக்கு!.

நன்றி.

சிறிலங்கா அரசாங்கம் என்னத்தை விரும்புகின்றதோ அதனை நாம் செய்கின்றோம். எமக்குள் விரோதம் வேண்டாம் எங்களுக்குள் மோதலை உருவாக்கி தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கப் பார்க்கின்றனர் சிலர் அத்தகைய எண்ணங்களுக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது இந்தமாதியான நேரங்களில் நாம் என்னும் உறுதியாக நிற்கவேண்டும் என்று அன்பாக கேட்டுக்கொள்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது யாழில் அந்தமாதிரி மாற்று கருத்து எழுபவர்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது  :(

கூட பூனைப் பெயரில் வந்து எழுதும் கூட்டம் ...அவர்களின் கொள்கை இது தான்..ஒன்றும் தெரியா அப்பாவி தமிழ் மக்களுக்கு முன்னால் நின்று தமிழ் ஈழம் தமிழ் ஈழம் எங்கள் மக்கள் எங்கள் மக்கள் என்று வாய் கிழிய கத்திப் போட்டு அங்காலை போய் மகிந்தாட கோமனத்தை சுத்தம் செய்து அவன் போடுற எலும்புதுன்டை நக்கி வயித்தை கழுவுவது தான் அவர்களின் கொள்கை.....யாழிழ் மக்களை பற்றி கவலைப் படும் கூட்டம் எல்லாம் பெருமையாய் சொல்லுங்கள் கருணா எனும் இனத் துரோகியை அண்ணன் என்று....கருணாவால் கொல்லப் பட்ட மக்கள் போராளிகளை பற்றி இவர்கள் கதைப்பார்கலா...வெக்கம் மானம் ரொசம் சூடு சுரணை என்றால் என்ன என்று தெரியாத கூட்டம் தான் கூட கொக்கரிக்கிதுகள்....

  • கருத்துக்கள உறவுகள்

பூனை போல அவையள் பதுங்கி வாறதால் புனைப்பெயரை பூனைப்பெயர் என்றும் அழைக்கலாம் பையா.. :D

போச்சுடா இவரும் இப்போ மாட்டுப்பட்டு போனாரா?

பாவம் வைகோ... !

இனி யாழிலிருந்து ஏவு கணைகள் அனல் பறக்க பாயும்!

"நீ எப்படி எங்கள் உள்வீட்டு விவகாரங்களில் தலையிடலாம்?"

"உன் வேலையைப் பார்...!"

"பொத்திக்கொண்டு போம்..!".

இன்ன பிற...!

Start Music!!

வம்பை வாலண்டியராக வாங்கிற அளவுக்கு நீங்களுமா...??

பாராட்ட வார்த்தைகள் இல்லை... குத்த பச்சையும் இல்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கூட பூனைப் பெயரில் வந்து எழுதும் கூட்டம் ...அவர்களின் கொள்கை இது தான்..ஒன்றும் தெரியா அப்பாவி தமிழ் மக்களுக்கு முன்னால் நின்று தமிழ் ஈழம் தமிழ் ஈழம் எங்கள் மக்கள் எங்கள் மக்கள் என்று வாய் கிழிய கத்திப் போட்டு அங்காலை போய் மகிந்தாட கோமனத்தை சுத்தம் செய்து அவன் போடுற எலும்புதுன்டை நக்கி வயித்தை கழுவுவது தான் அவர்களின் கொள்கை.....யாழிழ் மக்களை பற்றி கவலைப் படும் கூட்டம் எல்லாம் பெருமையாய் சொல்லுங்கள் கருணா எனும் இனத் துரோகியை அண்ணன் என்று....கருணாவால் கொல்லப் பட்ட மக்கள் போராளிகளை பற்றி இவர்கள் கதைப்பார்கலா...வெக்கம் மானம் ரொசம் சூடு சுரணை என்றால் என்ன என்று தெரியாத கூட்டம் தான் கூட கொக்கரிக்கிதுகள்....

மாகாணசபைத் தேர்தல் முடியுமட்டும்... அரசாங்கத்திடம் வாங்கிய காசுக்கு, இந்த ஒட்டுக் குழுக்கள் தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கும்cat-eating.gif

பிறகு.... இதுகளை, எவனும்... திரும்பியும் பார்க்க மாட்டாங்கள். அதுகளும்... வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்துடுங்கள்.....dog-7.gif பையா. :D

Edited by தமிழ் சிறி

வைகோ மீது பல ஈழத்தமிழர்களுக்கு நல்ல மதிப்பு உண்டு. அவருடைய ஈழ உணர்வு அப்பழுக்கற்றது. வைகோ தமிழ்நாட்டு அரசியலில் நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்பது எங்களின் விருப்பம் (வருவதற்கு சந்தர்ப்பம் குறைவு என்பது வேறு விடயம்)

சீமானின் வரம்பற்ற பேச்சுக்களாலும் செயற்பாடுகளும் நாம் செய்கின்ற எதிர்வினைகளை பொதுமைப்படுத்த வேண்டியது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ மீது பல ஈழத்தமிழர்களுக்கு நல்ல மதிப்பு உண்டு. அவருடைய ஈழ உணர்வு அப்பழுக்கற்றது. வைகோ தமிழ்நாட்டு அரசியலில் நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்பது எங்களின் விருப்பம.

எங்கள் விருப்பமும் அதுவே.

ஆனால் விரும்பியதெல்லாம் எங்கே நடக்கிறது? :)

சீமானின் வரம்பற்ற பேச்சுக்களாலும் செயற்பாடுகளும் நாம் செய்கின்ற எதிர்வினைகளை பொதுமைப்படுத்த வேண்டியது இல்லை.

உண்மையை பேசினால் யாருக்குதான் பிடிக்கிறது...??

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் என்பதற்குப் பதிலாக நாம் திராவிடர் என்று ஆரம்பித்திருந்தார் என்றால் சீமான் சபேசனின் ஆதரவை வென்றிருப்பார்.. :(:D

நாம் தமிழர் என்பதற்குப் பதிலாக நாம் திராவிடர் என்று ஆரம்பித்திருந்தார் என்றால் சீமான் சபேசனின் ஆதரவை வென்றிருப்பார்.. :(:D

போராட்டம் எங்கை கர்நாடகத்திலை தண்ணீர் கேட்டா...?? :D

  • கருத்துக்கள உறவுகள்

சரி நாங்கள் தான் (தமிழக தலைவர்கள்) செய்யவில்லை, ஈழத்தில் என்ன வாழ்ந்தது? ஈழத் தலைவர்கள் அனைவரும் ஒரு அணியில் போராடினார்களா? ஒருதரை ஒருத்தர் குழிபறித்து சோரம் போகவில்லையா? இவ்வளவு துயரம், வலி கண்ட பின்னும் பொது இலக்கை நோக்கி உங்களுக்குள் இணக்கப்பாடோ ஒற்றுமையோ ஏன் இன்னமும் வரவில்லை? உங்கள் சக்தியையும் மீறி ஒவ்வொருத்தரின் ஈகோவால் சிங்களத்திடம் சரணடைந்து, போராட்டத்தை மட்டுப்படுத்த யார் காரணம்? துயரை, வலியை நாங்கள் உணராததால்,இங்கிருக்கும் கெடுபிடிக்குள் எம்மை நோக்கி சுட்டி அதிகம் பயனில்லை, முதலில் உங்கள் தலைமைகளை ஒருங்கிணையுங்கள், ஏனெனில் வலியை தினமும் அனுபவிப்பவர்கள் நீங்களே!

தமிழீமே எங்களின் உயிர்மூச்சு என இங்கே யார் சொன்னது? தமிழ் ஈழம் அமைந்து நீங்கள் நிம்மதியா இருந்தால் நலம் என்ற ஒரு ஆதங்கமும், விருப்பமும் அதற்கான தார்மீக ஆதரவுமே இங்கேயுள்ள உறவுகளால் கொடுக்க இயலும்.

இவ்வளவு பேசும் நீங்கள், 1991 ம் ஆண்டு வரை தமிழகத்தின் அனைத்து மக்களும், தலைவர்களும் ஈழத்தமிழர்களுக்கு எவ்வாறு இங்கே களமமைத்து இயக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை  வசதியாக மறந்துவிட்டு பேசுகிறீர்கள்! ஈழத்தமிழர்கள்/இயக்கங்கள் சிலரின் சட்டவிரோத நடவடிக்கைகளால் பலருக்கும் சங்கடங்கள் விளைந்ததையும் அதையும் மீறி உங்கள் போராட்டங்களுக்கு தமிழகம் ஒத்துழைப்பு கொடுத்ததை உலகறியும்.

தமிழகத்தின் / தலைவர்களின் பரிபூரண ஆதரவும், ஒத்துழைப்பும் இருந்தபடியால் தான் ஈழ இயக்கங்கள் இந்தளவிற்கு வீரிய வளர்ச்சி கண்டது என்பதை மறுக்க முடியுமா? தமிழகத்தின் அனைத்து கடற்கரையும் முற்றாக தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அன்றைய இயக்கங்களின் கதியென்ன? சிங்களவன் அப்பொழுதே உங்களை நசுக்கி இருப்பான். முள்ளிவாய்க்காலை 70களிலேயே கண்டிருப்பீர்கள் அம்மணி.

இன்னமும் அகதி முகாம்களை அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பவது சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்காகவே, ஏனெனில் அவர்களின் முன்னைய அனுபவம் அப்படி. ஆனால் இது கண்டிக்கபட வேண்டியதே.

உங்களைப்போலவே எங்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை, அதன் விளைவே இந்த தமிழக மீனவர் மரணங்கள்.

நாங்கள் யாரும் ஈழத்திற்கு போராட வரவில்லையம்மணி, அது உங்களின் அடிப்படை உரிமை, விருப்பம், ஒரே இனம் என்ற அடிப்படையில் அதற்கு உதவுவது மற்றும் தார்மீக ஆதரவளிப்பதே எங்களின் கடமை.

சேய் நன்றாக இருத்தால், தாய்க்கு கிடைக்கும் நிம்மதியும், சந்தோசமுமே எங்களுக்கு!.

நன்றி.

பல இயக்கங்கள் தோன்றவும் அந்த இயக்கங்களுக்குள் பிரிவினையை தோற்றுவிக்கவும் யார் காரணம்? எம்ஜிஆர் ஒரு இயக்கத்தை ஆதரித்தால் அதற்குப் போட்டியாக கலைஞர் இன்னொரு இயக்கத்தை ஆதரித்தார்.யாருமே இயக்க ஒற்றுமையை வலியுறுத்தவில்லை.ஆரம்பத்திலேயே எடுத்து சொல்லி இருந்தால் இயக்கங்களுக்குள் இவ்வளவு பிரிவினை வந்திருக்காது.எம் போராட்டமும் இப்படி முடிந்திருக்காது.
 
நீங்கள் சொன்ன மாதிரி ஆரம்பத்தில் இயக்கங்கள் காலுன்ற தமிழகம் எவ்வளவு உதவி செய்ததோ அதேயளவு இயக்கங்களுக்குள் பிரிவினையையும் ஊக்குவித்தது.
 
சட்ட ஒழுங்கு பிரச்சனையால் தான் ஈழ அகதிகளை முகாமில் வைத்திருக்கிறார்கள் என்டால் அந்த மக்கள் என்ன குற்றவாளிகளா அல்லது தினமும் குற்றங்கள் செய்து கொண்டு திரிகிறார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.