Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பழகிய யாழ் உறவுகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கோ

நன்றி உறவே  :D

ம்ம்ம்ம்.... எல்லாரைப் பற்றியும் மிக நன்றாக புரிந்துவைத்து எழுதுகின்றீர்கள். இதில் நீங்கள் சுப்பண்ணை பற்றி எழுதியிருந்தீர்கள். என்னை யாழுக்குள் இழுத்து வந்ததே  சுப்பண்ணைதான். ஆனால் "கவிதை"  என்ற பெயரில் இல்லை.... வேறொரு பெயரில்...! :rolleyes:  சுப்பண்ணை என் நெருங்கிய நண்பனும் கூட! :)

தொடருங்கள்... பையன்! :)

அப்படியா அண்ணா
நன்றி உங்களின் கருத்துக்கும் வருகைக்கும்
 
சுகம் கேட்டதாய் சொல்லி விடுங்கோ...முடிந்தால் யாழ் வர சொல்லுங்கோ...

தொடருங்கள்!

நன்றி

யாழை அலங்கரித்த பழையவர்களைப் பற்றி அறிய உதவும் பதிவு. தொடரட்டும் உங்கள் படைப்பு :)

நன்றி

  • Replies 108
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைவூட்டலுக்கு நண்றி பையன்...   என் பங்குக்கும் சிலதை சொல்ல ஆசைப்படுகிறேன்.... 

 

உண்மையாக சொன்னால் உமையை போல ஊரில் உள்ள மக்களுக்காக  புலம்பெயர்ந்த நாட்டிலை அப்படி வேலை செய்தவர்கள் மிக குறைவு...  அப்படி இருந்தாலும் அதில் முக்கியமான ஆக்களில் உமையும் ஒருவர்...  அவருடன் நான் தொட்ர்பில் இல்லை எண்டாலும் மதிப்புக்கு குறைவில்லை... 

 

வணங்காமண் கப்பல் பொருட்கள் சேகரிக்கும் காலத்தில் தான் நான் உமையை பார்த்தேன்...(   என் வீட்டிலை என்னை தவிர எல்லாருக்கும் சின்னம்மை போட்டிருந்ததால் அவர்களோடை இணைய என்னால் அப்போது முடியவில்லை...நானாக கழண்டு கொண்டேன்)

 

ஆளை போலவே பெயரும் மிக சின்னது...  ஆனால் வேகம் குறையாமல் எல்லா வேலையையும் ஓடி ஓடி செய்து கொண்டு இருந்தார்...  கவியோடை சேர்ந்து  தாயகத்தில் நடக்கும் அனைத்து செய்திகளும் கோர்வை ஆக்கி சர்வதேச ஊடகங்களுக்கு குடுக்கிற பணியையும் சேர்த்து செய்து கொண்டு இருந்தார்...  கையறு நிலையிலையும் விடாமுயற்சியை கைவிடாமல் இருந்தார்கள்... 

 

பின்னரான காலங்களில் கவிராஜ் நாடுகடந்த அரசில் வேட்ப்பாளராக போட்டி போட்டார் அதே குழுவில் உமையின் சொந்த பெயரை கண்டு மகிழ்வாக இருந்தது...  அது தான் இல்லை எண்று பின்னை எழுதி இருந்தார் ...  அதை நான் இரசிக்கவில்லை...  

 

பிறகும் ஈழநாதம் இணையப்பக்கத்தை கொண்டு வந்து யாழில் இணைப்பார்...  பின்னராக காலங்களில் அதுவும் நிண்டு போனது... 

நன்றி தயா அண்ணா
அண்ணா அவர கண்டால் குட்டிப்பையன் சுகம் கேட்டதாய் சொல்லி விடுங்கோ....ஓம் அண்ணா அமைதியாய் இருந்து அவர் எங்கட போராட்டத்துக்கும் மக்களுக்கு செய்தவை சொல்லில் அடங்காது...யாழில் மனம் விட்டு பழகிய உறவுகளில் உமை அண்ணாவும் ஒரு ஆள்.....ஒரு சில ஈழப் பாடல்களை நான் தான் அவருக்கு அனுப்பி வைப்பேன்..அதே பாடல்களை கேக்கையில் உமை அண்ணாவின் ஞாவகமும் வரும்.....

பையன் உங்கள் வாஞ்சையான பதிவுகளுக்கு நன்றிகள்

நல்ல பையன் கோபம் வந்தால் கட்டுப்படுத்துவது நல்லது.

 

அரசியல் என்றால் எதிர் விமர்சனங்கள் அதிகம் எதிர்பார்க்க வேண்டும்.

எந்தக் கருத்திலிருந்தும்  நாங்களும்  ஏதாவது கற்றுக் கொள்ளலாம்.

 

நன்றி வாத்தி
தெரியும் தானே இள ரத்தம் கொஞ்சம் துடி துடிப்பு அதிகம்...
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

 

சகோ, உங்களின் பாணியே தனி ....... !
 எதனைச் செய்தாலும்  அதில் ஒரு வித்தியாசம் இருக்கும் ......!!
 பழக மிக இனிமையானவர் தேசியத்தின்மீது அதி தீவிர அக்கறை கொண்டவர் இப்படி சகோவைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் ........
 
தொடர்ந்து எழுதுங்கள் ........ வாழ்த்துக்கள் சகோ ..!  :)

 

நன்றி சகோ....சகோ உங்களிடம் ஒன்று கேக்கனும்
2007ம் ஆண்டு நீங்கள் hi5 வைத்து இருந்திங்களா....

நன்றாக இருக்குது பையா தொடருங்கள்.பையனுக்கு பிடிக்காத கருத்தளார்களில் முதலாவது ஆளாக நான் இருப்பேன் :lol:

வருகைக்கு நன்றி அக்கா 

மிக்க நன்றிபையா . நல்ல முயற்சி .வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். 

அக்கா நலமா
உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அக்கா நேரம் இருக்கும் போது யாழ் பக்கம் வாங்கோ...

அருமையான பதிவு பையா..

பையனிடம் எனக்குப் பிடித்த பண்பு வெ ளிப்படையான தேசப்பற்று. பலர் (நான் உட்பட) சில கருத்துக்களை மறைமுகமாக அல்லது தவிர்த்தே எழுதுவோம். பையன் அப்படியல்ல.. மனதில் பட்டதை அப்படியே எழுதுவார். சீமானைப் போல.

வாழ்த்துக்கள் பையா..!

நன்றி மச்சி  :)

இப்படியான பதிவு, கடந்த நான்கைந்து வருடங்களாக களத்தில் பதியப்படாத குறையை நீக்கிய பையனுக்கு நன்றி. :) 

அதுகும் ஒரே நாளில்.... 28 உறவுகளைப் பற்றி, பையன் எழுதியது ஆச்சரியப் பட வைத்தது.

 

பையன் யாழில் நிற்கிறான் என்றால்.... கிரிக்கெட், உதைபந்தாட்டம் சம்பந்தமான உரையாடலாக‌ இருக்கும்.

அல்லது... ஒட்டுக்குழுக்களுக்கு சம்பல் பேச்சு விழுந்து கொண்டிருக்குது என்று அர்த்தம். :D 

பல தடவை அவன் நித்திரை முழித்து தனக்கே.. உரிய பாணியில், ஒட்டுக்குழுக்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்ததை நானறிவேன்.

 

அவனின் மழலைத் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். முன்பு இருந்ததை விட... இப்போ நன்றாக எழுதுகின்றார்.

வாத்தியாரின் தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்கு வந்தால்... அவர் தமிழில் இன்னும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என நினைக்கின்றேன். :lol: 

காலத்திற்குத் தேவையான பதிவை இட்ட பையனுக்கு, மீண்டும் நன்றியும் வாழ்த்துக்களும். :wub:

 

வணக்கம் குரு நலமா
 
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல :D

நன்றி பையா எனக்கு தெரியாத பலரை அறிமுகப்படுத்தியதற்கு 

நன்றி அண்ணா

நன்றாக இருக்குது பையா தொடருங்கள்

நன்றி அண்ணா

நல்ல திரி பையன்

நன்றி அண்ணா

நன்றாக இருக்குது பையா தொடருங்கள்

நன்றி உடையார் அண்ணா

நன்றி பையா.நன்றாக உள்ளது தொடருங்கள்

நன்றி அண்ணா

புத்தன்

 

நன்றிகள் பையன்......நான் தொடர்ந்து யாழில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்....மன்னிக்கவும் கிறுக்கிகொண்டிருக்கிறேன்....

 

வணக்கம் அண்ணா நலமா..
ஜமுனாவை முடிந்தால் யாழ் வர சொல்லுங்கோ... :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குட்டிப்பையா, உன் பட்டியலில் என்னையும் சேர்த்ததற்கு..

அண்மையில் நாங்கள் தொடர்புகொண்டது குறைவு ஆனால் முதலில் அடிக்கடி சட் பண்ணி இருக்கிறம், என்னை டென்மார்க்குக்கு வாடா 2பேருமா சேர்ந்து புதிதாகத் தொழில் எல்லாம் ஆரம்பிக்கலாம் என்றவன். என்னை ஒன்லைன் பெட்டிங்கில் சேர்த்து விட்டவன். எனக்கு விளையாட்டில் பெரிதாக ஆர்வமில்லை என்றாலும் இடைக்கிடை இவனட்டை ஐடியா கேட்டு பெட்டிங் பண்ணி இருக்கிறேன்.

பையனா மாறினாலும் கூட இவன் எனக்கு குட்டிப்பையன் தான். இப்போது இவன் அடிக்கடி தீவிர அரசியல்(சீமான் அரசியல்) பேசும் போது சிரிப்பு வந்தாலும், ஒருநாள் கூட அவன் மேலை கோவப்பட்டதே இல்லை. ஒழிச்சுப் பிடிச்சு விளையாட்டு விளையாடுறதை விட எதையும் முகத்துக்கு நேரே பேசிவிடுவான். பக்குவம் வர அவனே உணருவான். அதனாலை குட்டிபையன் எப்பவும் "என் நண்பேன் டா" .. :)

வணக்கம் மச்சி
ஆரம்பத்தில் அதிகம் கதைப்போம்..பிறக்கு பெரிதாய்க் கதைப்பது இல்லை..விஸ்னெஸ்ச பற்றி கதைத்தது ஞாவகம் இல்லை...ஆனால்  bet365 அறிமுகம் செய்து வைச்சது ஞாவகம் இருக்கு...நான் ஒன்றையும் மனசில் வைத்து இருப்பது இல்லைடா...அதை அந்த அந்த இடத்திலையே விட்டு விடுவேன்...கருத்துகளத்தில் முரன்பட்டாலும் அடுத்த கனம் மச்சி போட்டு கதைக்கிறோமே  அங்கை தான் நானும் நீயும் நண்பன் என்று காட்டுது...
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் மச்சி முட்டை அடிக்காமல் விடுறதில்ல மச்சி அவளுக்கு :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இம்முட்டு விசயத்தை வைச்சிருந்திருக்கிறிங்கள்  அண்ணா.
வாழ்த்துக்கள்       

 

நன்றி உறவே

நன்றி  தம்பி  என்னையும்  பதிவு செய்தமைக்கு...

 

எழுதிக்கொண்டிருக்கும் போது

உங்கள் போன்றோரைக்கண்டால்

நான் எனது   வேலைகளைப்பார்க்கப்போய்  விடுவேன்.

அந்தளவுக்கு எல்லா விடயங்களிலும் ஒற்றுமைப்படும்  உறவு  தாங்கள்.

தம்பிமார்   நீங்கள்  இருப்பதால்

ஓய்வு எடுக்கும்  தைரியத்தில்     இருக்கின்றேன்

 

நானும்  அத்தாரின்  மறைவையொட்டி  வந்திருந்ததால்

உங்களை  வந்து  சந்திப்பதற்காக

அதிகம்  கவனம் செலுத்தமுடியாது போயிருந்தது.

ஆனாலும் குரலைக்கேட்டது சந்தோசம்.

ஆனால் அங்குள்ளவர்களுக்கு உங்களைத்தெரிந்திருந்தது.

(நீங்கள்   தந்த  தகவலுடன்)

அது தான்  டென்மார்க்கின்  பெருமை.

தமிழர்கள் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும்.

 

நன்றி அண்ணா..உங்களை பார்க்கா ஆர்வமாய் தான் இருந்தேன் அண்ணா..கலியாண வீட்டால் வர முடியாமல் போச்சு....அடுத்த முறை ஒரு கிழமைக்கு முதல் சொல்லுங்கோ அண்ணா டென்மார்க் வர முதல்.....

களத்தில் பழகிய அனைவரையும் நினைவில் வைத்து அது குறித்துப் பதிவிடுவது என்பது இலகுவான காரியமல்ல. அந்த வகையில் பையனின் முயற்சி பாராட்டுக்குரியது. 

 

பையனின் இந்தப் பதிவைப் பார்த்த போது மாப்பிள்ளையின் ஞாபகம் தான் வந்தது...

 

நன்றி அண்ணா

அடேங்கப்பா... அமைதியாக இருக்கும் பையனுக்குள் இவ்வளவு ஞாபகசக்தியா.. எல்லாரையும் பிரிச்சு மேய்கிறியள்... தொடருங்கள் பையா... 

 

நன்றி சகோ...

பையனைப்பற்றி நான் முன்பு எழுதியிருந்தேன். முன்பு பையனைப்பற்றி எழுதிய பழையதை தற்போது கிளறுவது வில்லங்கத்தில் போய் முடியுமோ தெரியாது. என்றாலும், பையன் சமாளிப்பான் என்பதனால் பழைய மேற்கோளை இணைக்கின்றேன்.

 

 

மேலதிகமாக சொல்வதென்றால்.. பையன் நல்ல திடகாத்திரமான சுறுசுறுப்பான இளைஞன். தமிழ்தங்கையுடன் முன்பு கதைத்தபோது தனது அவதாரை தானாகவே முன்வந்து பையனே செய்து தந்ததாகவும், அக்கா இதை போட்டால் நல்லாய் இருக்கும் என்று சொல்லி அந்த படத்தை தனக்கு தனிமடலில் அனுப்பியதாகவும் பின்னர் அதை தனது சுயவிபரக்கோவைக்குரிய படமாக்கியதாகவும் சொன்னார். பின்னர் இந்தப்படம் தமிழ்தங்கையினை யாழில் நினைவுபடுத்தும் சின்னமாகிவிட்டது. 

 

av-3570.gif

 

 

பையன் ஆரம்பத்தில் எழுத்துக்கூட்டி யாழ் கருத்துக்களத்தில் எழுதிப்பழகி, இப்போது சுயமாகவே சரளமாக நீண்ட பந்திகளாக எழுதுவது நல்ல முன்னேற்றத்தை காட்டுகின்றது. இவ்வாறே வாழ்வின் எல்லா அம்சங்களிலும் பையன் நன்றாக முன்னேறவும், நல்ல ஒளிமயமான எதிர்காலம் பையனுக்கு அமைய எனது உளம் கனிந்த வாழ்த்துகள்!

 

நீங்கள் எழுதுங்கோ மச்சான்..எது வந்தாலும் நான் சமாளிக்கிறேன்....... உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மச்சான்....

நன்றி பையன் என்னையும் நினைவு கூர்ந்ததுக்கு. எல்லோரயும் பற்றி நன்றாக நினைவு வைத்து பதிவு செய்கின்றீர்கள். தொடருங்கள் வாழ்த்துக்கள் ! ! :D  :D

 

நன்றி அண்ணா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்....

முதலில் இந்த சிறு வயதில் இப்படியொரு பரந்துபட்ட சிந்தனை உள்ளம் கொண்ட ஓர் வாலிபனை முதல் முதல் இந்த களத்தில் கண்டதையிட்டு பெருமையடைகிறேன் 
 
தமிழுக்கும் ,இனத்திற்கும்எதிராக  கருத்துரைப்போரை புலியாக பாய்ந்து எதிர்க்கருத்திட்டு யதார்த்தமான ,உண்மையான துணிவான கருத்தை வைக்கும் ஓர் உறவு .பல முறை தனி மடலிலும் முகப்புத்தகத்திலும் பேசியுள்ளேன் ....எப்பவுமே அவரது பேச்சுக்கள் தமிழீழம் சார்ந்தவையாகவே அமையும் ..
 
நாம் இந்த அவதாரில் பார்க்கும் பையனை  நினைத்துகொண்டு அவரை சாதாரணமான ஒருவராய் கணிப்பிடக்கூடாது என்னில் அவரது உருவத்தை புகைப்படம் மூலம் பார்த்தவன் என்ற வகையில் .............கூறுகிறேன் ................அழகான ,கட்டுடல் கொண்ட ஒரு வாலிபன் .
தென்னிந்திய நடிகர்கள் கூட இவனது அழகைப்பார்த்து நாணுவார்கள் ..................... :)
 
அருமையான பதிவு தொடருங்கள் பையா /////////////

 

ஹா ஹா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...சசி அண்ணா கூட கதைத்த பிறக்கு மறக்காமல் சொல்லுங்கோ....

நன்றி பையா என்னையும் நினைவு கூர்ந்ததற்கு.... தொடர்ந்திருங்கள்.

 

நன்றி அக்கா.........

நன்றி பையா என்னையும் நினைவு கூர்ந்ததற்கு.... தொடர்ந்திருங்கள்.

 

நன்றி அக்கா.........

ஆனால் மச்சி முட்டை அடிக்காமல் விடுறதில்ல மச்சி அவளுக்கு :D

 

ஆடி போன ஆவனி..அவள் போனால் இன்னொருத்தி மச்சி...... உன்ற நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல மாதிரி நடக்கும்.. டொ ன் வெறி விறதர்

(64)

 

அலைமகள்

 

அலைமகள் அக்கா..இவங்ள கூட திண்ணையில் கானலாம்...இந்த அக்காவும் சீமான் அண்ணாவுக்கு எதிரான அக்கா தான்.....கருத்துக்களத்தில் அப்ப அப்ப எதிர் கருத்து வைப்ப்போம் அம்மட்டு தான்...இணைந்து இருங்கள் யாழுடன் அக்கா 

 

 

ஆகா............

:lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பையன் இப்படி எல்லாவற்றையும் நினைவில் வைத்து எழுதியதற்கு பாராட்டுக்கள். ஆரம்பத்தில் தமிழில் எழுத சிரமப்பட்டு இப்போ நன்றாக எழுதுவதையிட்டு சந்தோசமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையன் இப்படி எல்லாவற்றையும் நினைவில் வைத்து எழுதியதற்கு பாராட்டுக்கள். ஆரம்பத்தில் தமிழில் எழுத சிரமப்பட்டு இப்போ நன்றாக எழுதுவதையிட்டு சந்தோசமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

பிடிக்காத உறவாக நான் இருந்தாலும் ,என்னையும் நினைவு கூர்ந்ததிற்கு நன்றி பையா :lol:

பிடிக்காத உறவாக நான் இருந்தாலும் ,என்னையும் நினைவு கூர்ந்ததிற்கு நன்றி பையா :lol:

 

அப்படி பார்த்தால் அர்ஜுன் பற்றியும் பையன் குறிப்பிட்டு இருக்க வேண்டுமே? நிச்சயம் 60பேரை விட இன்னும் பலருடன் பையனுக்கு கருத்துக்களத்தில் பரீட்சயம் காணப்படும். அவசரத்தில் அல்லது நேரம் போதாமை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் மற்றவர்கள் விடுபட்டுள்ளார்கள்.

 ஆரம்பத்தில் தமிழில் எழுத சிரமப்பட்டு இப்போ நன்றாக எழுதுவதையிட்டு சந்தோசமாக உள்ளது. 

 

 

பையன் வெளி நாட்டில் பிறந்து வழந்தவரா(அலை மாதிரி :lol:  :lol: ) அல்லது மிகச் சிறுவயதில் வெளி நாடு வந்தவரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையன் வெளி நாட்டில் பிறந்து வழந்தவரா(அலை மாதிரி :lol:  :lol: ) அல்லது மிகச் சிறுவயதில் வெளி நாடு வந்தவரா?

ம்ம்ம்ம்ம்ம்ம்
ஏன் இப்படி எல்லாம் கேக்கிறீங்க ^_^ ..நான் ஊர விட்டு வந்தது 1996 அப்ப சின்ன வயது தான்...வெளி நாடு வந்து இங்கத்தை வெள்ளைகள் கூட தான் இருந்து வளந்தேன் வேற்று மொழி படித்தேன்..அதில் தான் தமிழ் எழுத கொஞ்சம் பிரச்சனை..மற்றம் படி எல்லாம் ஓக்கே....யாழ் வந்த படியால் தான் இப்படியாவது எழுதுறேன்..இல்லை என்றால் அம்மட்டு தான்......நீங்கள் வெளி நாட்டில் பிறந்து இப்படி எழுதுவது என்றால் உங்களின் பெற்றோர் உங்களுக்கு நல்லா தமிழ் சொல்லி தந்து இருப்பினம் போல....
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிடிக்காத உறவாக நான் இருந்தாலும் ,என்னையும் நினைவு கூர்ந்ததிற்கு நன்றி பையா :lol:

அப்படி இல்லையே..யார் சொன்னது நீங்கள் பிடிக்காத உறவு என்று.. :D

அப்படி பார்த்தால் அர்ஜுன் பற்றியும் பையன் குறிப்பிட்டு இருக்க வேண்டுமே? நிச்சயம் 60பேரை விட இன்னும் பலருடன் பையனுக்கு கருத்துக்களத்தில் பரீட்சயம் காணப்படும். அவசரத்தில் அல்லது நேரம் போதாமை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் மற்றவர்கள் விடுபட்டுள்ளார்கள்.

யாழில் என்னை நல்லா புரிந்து  கொண்ட ஆள் நீங்கள் தான் மச்சான்...
நன்றி மச்சான்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பற்றியும் பதிவிட்டமைக்கு நன்றி பையா. என்னுடன் பெரிதான பழக்கம் இல்லை. எழுத மாட்டீர்கள் என எண்ணினேன். என்றாலும் இப்படித் திடுதிப்பென்று முடித்துவிட்டீர்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பையா!

உங்கள் பதிவில் என்னையும் நினைவில் நிறுத்தியதற்கு நன்றி. அடுத்தமுறை Nakskov வரும்போது உங்களிடம் வருவேன்.  :)

நன்றி பையா என்னையும் நினைவு கூர்ந்ததிற்கு..தமிழ் எழுத சிரமப்பட்டு இப்படி வளர்ந்து நிற்கிறத பார்த்தால் பெருமையாக இருக்கு. வாழ்த்துக்கள் பையா..

ஞாபகப் பகிர்வில் என்னையும் இணைத்ததற்காய் நன்றி பையா. 

எல்லோரையும் ஞாபகம் வைத்துக் கொண்டு  இவ்வளவு விரைவாக எழுதியது பெருமை தருகிறது. அதே நேரம் நீங்கள் எழுதிய பலர் களத்திற்கு வராமல் இருப்பது வருத்தமான விடயம்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பற்றியும் பதிவிட்டமைக்கு நன்றி பையா. என்னுடன் பெரிதான பழக்கம் இல்லை. எழுத மாட்டீர்கள் என எண்ணினேன். என்றாலும் இப்படித் திடுதிப்பென்று முடித்துவிட்டீர்களே.

உண்மை தான் பெரிதா பழகினது இல்லை யாழில்.. செய்ய வேண்டிய அலுவல்கள் நிறைய இருக்கு அக்க்கா.. நேர பற்றாக்குறையால் முடித்து விட்டடேன்....உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா...

வணக்கம் பையா!

உங்கள் பதிவில் என்னையும் நினைவில் நிறுத்தியதற்கு நன்றி. அடுத்தமுறை Nakskov வரும்போது உங்களிடம் வருவேன்.  :)

நன்றி தாத்தா....கண்டிப்பாய் வாங்கோ உங்களை வர வேற்க‌  நான் தயார் நிலையில் 

நீங்கள் வெளி நாட்டில் பிறந்து இப்படி எழுதுவது என்றால் உங்களின் பெற்றோர் உங்களுக்கு நல்லா தமிழ் சொல்லி தந்து இருப்பினம் போல....

 

 

 

:lol: பையன் சின்னப் பையன் தான்,  நான் பகிடிக்குச் சொன்னதை நம்பீட்டார்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையா என்னையும் நினைவு கூர்ந்ததிற்கு..தமிழ் எழுத சிரமப்பட்டு இப்படி வளர்ந்து நிற்கிறத பார்த்தால் பெருமையாக இருக்கு. வாழ்த்துக்கள் பையா..

நன்றி உறவே...

ஞாபகப் பகிர்வில் என்னையும் இணைத்ததற்காய் நன்றி பையா. 

எல்லோரையும் ஞாபகம் வைத்துக் கொண்டு  இவ்வளவு விரைவாக எழுதியது பெருமை தருகிறது. அதே நேரம் நீங்கள் எழுதிய பலர் களத்திற்கு வராமல் இருப்பது வருத்தமான விடயம்.  

உண்மை தான் அண்ணா..நான் எழுதின ஆட்கள் சிலர் இப்ப யாழ் வருவது இல்லை...வேர பெயரில் வருவினமோ தெரியாது...உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.....

நன்றி பையன் அண்ணா, என்னையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டமைக்கு. :) :) :)

முன்னர் உங்களை விளையாட்டு திரியில் அடிக்கடி காண்பேன். பின்னர் அரசியல் திரிகளில் அடிக்கடி காண்பேன். நீங்கள் ஈழத்தில் மிகுந்த பற்று வைத்துள்ளீர்கள் என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. :) மாணவர் போராட்ட செய்திகள் அல்லது ஈழம் சார்ந்த உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ள செய்திகளை யாழில் இணைப்பவர்களில் நீங்களும் ஒருவர். :)

நீங்கள் என்னை வேணுமென்றே அக்கா என்று அழைப்பது எனக்கு தெரியும். :D:) நான் தங்கை என்பதற்கு தமிழ்சூரியன் அண்ணா (அங்கிள் :lol:) தான் சாட்சி சொல்ல வேணும். :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி

 

யாயினி அக்கா..கனடாவில் வசிக்கும் உறவு.. ஆரம்பத்தில் இந்த அக்காவை யாழில் அதிகம் காணலாம்...இப்ப வருவது குறைவு..ஒரு சில திரிகளில் இந்த அக்கா கூட கருத்தாடல் பன்னி இருக்கிறேன்....இணைந்து இருங்கள் அக்கா யாழில்

 

 

 

பகிர்வுக்கு மிக்க நன்றி பையன்....நீங்கள் என்னைப் பற்றி எழுதி இருக்காது விட்டாலும் நான் ஒன்றும் சொல்ல மாட்டன்..
இன்னும் நிறையப் பேர்,எழுதக் கூடியவர்கள் இருக்கிறார்கள் அவர்களையும் கவனத்தில் எடுத்தால் நன்று பையா...ஆரம்பித்து வைத்தவரே மெதுவா யோசிச்சு,யோசிச்சு எழுதுங்கோ.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையன் அண்ணா, என்னையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டமைக்கு. :) :) :)

முன்னர் உங்களை விளையாட்டு திரியில் அடிக்கடி காண்பேன். பின்னர் அரசியல் திரிகளில் அடிக்கடி காண்பேன். நீங்கள் ஈழத்தில் மிகுந்த பற்று வைத்துள்ளீர்கள் என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. :) மாணவர் போராட்ட செய்திகள் அல்லது ஈழம் சார்ந்த உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ள செய்திகளை யாழில் இணைப்பவர்களில் நீங்களும் ஒருவர். :)

நீங்கள் என்னை வேணுமென்றே அக்கா என்று அழைப்பது எனக்கு தெரியும். :D:) நான் தங்கை என்பதற்கு தமிழ்சூரியன் அண்ணா (அங்கிள் :lol:) தான் சாட்சி சொல்ல வேணும். :rolleyes::)

 வருகைக்கும் கருத்துகும் நன்றி சகோதரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி

 

யாயினி அக்கா..கனடாவில் வசிக்கும் உறவு.. ஆரம்பத்தில் இந்த அக்காவை யாழில் அதிகம் காணலாம்...இப்ப வருவது குறைவு..ஒரு சில திரிகளில் இந்த அக்கா கூட கருத்தாடல் பன்னி இருக்கிறேன்....இணைந்து இருங்கள் அக்கா யாழில்

 

 

 

பகிர்வுக்கு மிக்க நன்றி பையன்....நீங்கள் என்னைப் பற்றி எழுதி இருக்காது விட்டாலும் நான் ஒன்றும் சொல்ல மாட்டன்..

இன்னும் நிறையப் பேர்,எழுதக் கூடியவர்கள் இருக்கிறார்கள் அவர்களையும் கவனத்தில் எடுத்தால் நன்று பையா...ஆரம்பித்து வைத்தவரே மெதுவா யோசிச்சு,யோசிச்சு எழுதுங்கோ.

 

 

வணக்கம் அக்கா..
உங்களின் வருகைக்கு கருத்துக்கும் நன்றி
எல்லாரையும் நினைவு வைத்து எழுதுவது சுகமான காரியம் அல்ல...யோசிச்சு எழுதுறேன் அக்கா...
தெரிய படுத்தியமைக்கு நன்றி :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் ஒரு சில உறவுகளை எழுத மறந்து விட்டேன் நேர பற்றாக்குறையால் செய்ய வேண்டிய அலுவல்கள் நிறைய இருந்த படியால் எழுத முடிய வில்லை..மற்ற உறவுகளை பற்றி எழுதி கொண்டு இவர்களை விட்டு விட்டேன்..கோவிக்க மாட்டினம் என்று நினைக்கிறேன்... :D 
 

(71)

 

பொன்னி

 

பொன்னி அண்ணா..இந்த அண்ணா தீவிரமாக யோசிப்போர் சங்கம் என்ற திரியில் எழுதினதை யாரும் மறக்க மாட்டினம்...மனம் விட்டு சிரிக்கனும் என்றால் இந்த அண்ணாவின் திரிக்கி சென்றால் சிரிக்கலாம்.....இந்த அண்ணா இந்த திரியதவிர வேர திரியில் எழுதுவது குறைவு....ஆரம்ப காலத்தில் இந்த அண்ணா கூடவும் ஜொல்லு விட்டு எழுதி இருக்கிறேன்.....

 

(72)

 

தமிழச்சி

 

தமிழச்சி அக்கா...கனடாவில் வசிக்கும் உறவு...இந்த அக்கா கூட கருத்து களத்தில் நிறைய எழுதி இருக்கிறேன்...அந்த நாட்களில் வன்னியில் சிறிலங்கன் விமானம் மழை போல் குண்டை போட்டு எங்கள் உறவுகளை கொன்று குவிக்க..நானும் இந்த அக்காவும் இன்னும் ஒரு உறவும்...இந்த தாக்குதலை எப்படி நிப்பட்டலாம் எங்கை அதி வேகம் கூடிய ஏவுகனைகளை வேண்டலாம் என்று எல்லாம் எழுதி கொண்டு இருந்தோம்..தமிழ் ஈழம் மேல் அதிக‌  பற்றுக் கொண்ட இந்த அக்கா..தன்னால் ஆனதை செய்தா அந்த போராட்டத்துக்கு...இந்த அக்காவுக்கும் ஒரு சில ஈழப் பாடல்களை அனுப்பி வைத்து இருக்கிறேன்...ஜமுனாவும் கதைக்கேக்க பெருமையா சொல்லுவார் தமிழச்சி அக்காவை பற்றி...இணைந்து இருங்கள் அக்கா யாழுடன்

 

 

(73)

 

 

அகூதா

 

 

அகூதா அண்ணா..இந்த அண்ணாவை பற்றி என்ன சொல்ல நீங்களே பார்த்து இருப்பிங்கள் இவர் செய்த பணிகளை...கொஞ்ச நாளாக யாழ் வருவது இல்லை..என்ன நடந்தது என்று தெரியாது...நல்ல ஒரு யாழ் உறவு...மற்றவர்களுடன் வந்தா இல்லாமல் பழகக் கூடியவர்....கனடாவில் வசிக்கும் உறவு...இவர் யாழில் இணைந்த ஆரம்ப காலத்தில் அதிகம் எழுதுவது இல்லை...முள்ளி வாய்க்கால் பிரச்சனைக்குப் பிறக்கு தான் அகூதா அண்ணாவின் பணி புயல் வேகத்தில் ஆரம்பம் ஆனது...நானும் அகூதா அண்ணாவின் சொல்லைக் கேட்டு ஒரு சில பணிகளும் செய்து இருக்கிறேன்...மீண்டும் யாழ் வந்து பழைய படி அவரின் பணிகளை செய்வார் என்று எதிர் பாப்போம்....

 

 

(74)

 

நெல்லையன்

 

நெல்லையன் அண்ணா..இந்த அண்ணா பல யாழ் உறவுகளுடன் நேரில் பழகியவர் என்று நினைக்கிறேன்..பல திரிகளின் எங்கடையலில் ஒற்றுமையை பார்த்து சலிப்பு அடைந்தவர்...ஒரு சிலர் ஈழத்தை சாட்டி மக்களின் பணத்தை கொள்ளை அடிச்ச கூட்டத்தை பற்றியும் எழுதுவார்....ஈழ போராட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கியவர்...யாழ் கருத்துக்கள பொறுப்பாளர் மோகன் அண்ணாவின் நெருங்கிய நண்பர்...இந்த அண்ணாவும் ஏதோ மனக் கசப்பில் இப்ப யாழ் வருவது இல்லை...நல்ல ஒரு கருத்தாளர்.....நெல்லையன் அண்ணா மீண்டும் யாழ் வருவார் என்ற நம்பிக்கை இருக்கு பாப்போம்.......

 

 

(75)

 

இறைவன்

 

 

இறைவன் அண்ணா...இந்த அண்ணா யாழில் ஆரம்பத்தில் அதிகம் செய்திகள் இணைப்பார்..பெரிசா அலட்டி கொள்வது இல்லை...இறைவன் அண்ணா ஊர்ப் புதின திரியை

தவிர வேர திரியில் பெரிசா எழுத மாட்டார்...அமைதியான உறவு...மற்றவர்களுடன் நல்ல மரியாதையாய் பழகுவார்..இணைந்து இருங்கள் அண்ணா யாழில்....

 

(76)

 

சுவைப்பிரியன் சஜிவன்

 

 

சுவைப்பிரியன் அண்ணா..சுவிசில் வசிக்கும் உறவு...யாழில் இடைக் கிடை தான் இவரின் வருகை இருக்கும்...கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்...அப்ப அப்ப யாழில் வந்து கருத்தும் எழுதுவார்...புலத்தில் நடக்கும் ஈழப் போராட்டத்திலும் கலந்து கொள்வார்...வஞ்சகம் இல்லாத உறவு...இணைந்து இருங்கள் அண்ணா யாழில்......

 

(77)

 

சுஜி

 

சுஜி அக்கா...இந்தஅக்கா ஒரு காலத்தில் யாழை கலக்கிய ஆள்...இந்த அக்காவை நான் அதிகம் நினைப்பது உண்டு..யாழில் ஒரு ஜேசுஸ் பாட்டு இணைத்து இருந்தா அந்த பாடல் எனக்கு முகவும் பிடிச்சுப் போச்சு..அந்தப் பாடலை கேக்கையில் சுஜி அக்காவும் நினைவில் வந்து போவாங்க....ரதி அக்காவின் சினேகிதி என்று யாரோ சொன்ன மாதிரி இருக்கு வடிவாய் ஞாவகம் இல்லை.....இந்த அக்காவும் இப்ப யாழ் வருவது இல்லை...பழைய படி வந்து அந்த நாட்களை போல் மற்ற உறவுகளுடன் மனம் விட்டு எழுதுவா என்று எதிர் பாப்போம்

 

 

(78)

 

நாரதர்

 

நாரதர் அண்ணா..இந்த அண்ணாவுக்கும் எனக்கும் ஒரு விசயத்தில் நல்லா ஒத்துப் போக்கும் எங்க இரண்டு பேருக்கும் இந்தியா என்ர போலி ஜனனாயக நாட்டை கண்ணிலும் காட்டக் கூடாது....இவர சும்மா நினைத்துப் போடாதைங்கோ குறுக்கு வழியில் சிந்திக்க கூடிய உறவு..எதை எப்படி செய்தால் ஈழத்தை அடையலாம் என்று நாரதர் அண்ணாவுக்கு நல்லாவே தெரியும்...இதை நான் ஏன் சொல்லுறேன் என்றால் அவரின் பல எழுத்தை கண்டுவந்தவன் என்ற முறையில்..இணைந்து இருங்கள் அண்ணா யாழில்

 

 

(79)

தும்பளையான்

 

தும்பளையான் அண்ணா..அவுஸ்ரெலியாவில் வசிக்கும் உறவு..விளையாட்டு திரியல் அதிகம் எழுதி இருக்கிறோம்....பல தடவை வேலை சம்மந்தமாக எழுதி இருந்தார்...யார் கூடவும் வம்புக்குப் போரது இல்லை தானும் தன்ர பாடும்...இணைந்து இருங்கள் அண்ணா யாழில் 

 

 

யாரையும் எழுத மறந்து இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.....  :unsure:  :rolleyes:  

 

 

 

 

 

 

Edited by பையன்26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.