Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் படைக்குறைப்புக்கு இந்தியா உதவும் – மத்திய அமைச்சர் வாசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

g.k.vasan.jpg

சிறிலங்காவின் வடக்குப் பகுதியில், இருந்து சிறிலங்கா இராணுவத்தை விலக்கிக் கொள்வதற்கு இந்தியா உதவும் என்றும் இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

"இந்திய அரசாங்கத்தின் நெருக்கடியினால் தான், சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்தியுள்ளது. 

படைக்குறைப்பின் மூலமே, சிறிலங்காவின் வடக்குப் பகுதியில், அமைதி சாத்தியமாகும். 

வடக்கு மாகாணத்தின் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரன், சிறிலங்கா இராணுவம் அங்கிருந்து விலக வேண்டும் என்பதை தனது முதல் கோரிக்கையாக முன்வைத்துள்ளார். 

அதற்கான சூழலை இந்திய அரசாங்கம் உருவாக்கிக் கொடுக்கும். அது ஒன்றே அங்கு அமைதியை திரும்ப வைக்கும். 

அங்குள்ள தமிழர்களை சமமாகவும் கௌரவமாகவும் நடத்தும்படி சிறிலங்காவை இந்தியா வலியுறுத்தும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130927109145

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே

வரதராஐப்பெருமாளைக்கொண்டு பொனது போல்

சில லட்சம் ஆமியையும் உங்களது பகுதிகளுக்கு கொண்டு பொனால்

எங்கட பிரச்சினைகளும்

உங்களது பிரச்சினைகளும் தீரும்

கெதியாச்செய்யுங்கோ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்வது ஒன்று ..... செய்வது ஒன்று ... :( 

பொறுத்திருந்து பார்ப்போம்  :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா படை விலக்க உதவுகிறேன் எண்டு உள்ளே வாற பிளான் போல..

 ஒருலட்சம் படையினரை தொண்ரூற்று ஒன்பதனையாயிரமாக குறைப்பதும் படைகுறைப்பு தானே. அதைதான் வாசன் குறிப்பிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் இந்தியாவை நம்புவதிலும்.. ஐநா மற்றும்.. மேற்கு நாடுகளின் அழுத்தம் இந்தியா மீதும் சிறீலங்கா மீதும் வருவதை ஊக்குவிக்க வேண்டும்.

 

வட அயர்லாந்துப் பிரச்சனையில் அமைதி உருவாக.. முதலில் முகாம்களில் அடைக்கப்பட்டது பிரித்தானிய இராணுவம். பின்னர் அது படிப்படியாக இராணுவ முகாம்களை விலக்கிக் கொண்டு விட்டது.

 

வடக்கு என்று மட்டுமே இப்போ எல்லாரும் சொல்லினம். கிழக்கில் பெருமளவு சிங்களப் படைமுகாம்கள் இன்னும் உள்ளன. அதைப் பற்றி ஒரு சீவனும் கதைப்பதாக இல்லை.

 

வடக்குக்கு என்ன நடக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ.. அத்தனையும் கிழக்கிற்கும் நடக்கனும். போர் நடந்த போது மலைய பகுதிகளில் உருவாக்கப்பட்ட அதிகரித்த இராணுவ பொலிஸ் பிரச்சன்னங்களும் அகற்றப்படனும்.. இதுவே தமிழ் மக்கள் எல்லோரினதும் பொது விருப்பாகும்...! இதுவே உண்மையான சமாதானத்திற்கு அடிப்படையும் கூட..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

g.k.vasan.jpg

சிறிலங்காவின் வடக்குப் பகுதியில், இருந்து சிறிலங்கா இராணுவத்தை விலக்கிக் கொள்வதற்கு இந்தியா உதவும் என்றும் இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

படைக்குறைப்பின் மூலமே, சிறிலங்காவின் வடக்குப் பகுதியில், அமைதி சாத்தியமாகும். 

 

ஜி.கே.வாசனை எங்கள் வாத்தியாரிடம் தமிழ் இலக்கணம் படிக்க அனுப்பவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.