Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ கோரிக்கையை சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும்கைவிட்டிருந்தனர்

Featured Replies

Published on September 28, 2013-10:04 pm   ·   No Comments

LTTE-Logo_eelam-150x150.jpgவடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள சிலரும் கண்டனக்கணைகளை தொடுத்து வருகின்றனர். 

மாகாணசபை தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலுக்கு முன்னர் கோரி வந்தனர்.

தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விட்டோம் என்று சொல்ல இந்த அயோக்கியர்கள் யார் என கவிஞர் காசி ஆனந்தன் ஆவேசமாக பேசிய காணொளி ஒன்றும் இணையத்தளங்களில் பார்க்க முடிந்தது.

தனிநாட்டு தமிழீழ கோரிக்கையை கைவிடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் தமிழ்நாட்டில் உள்ள சிலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த மாகாணசபையில் எதுவுமே இல்லை, மாகாணசபையை விடுதலைப்புலிகள் நிராகரித்திருந்தனர் என்றும் சிலர் எழுதி வருகின்றனர்.

காசி ஆனந்தனும் சரி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் சரி தமிழ்நாட்டில் உள்ள ஈழவிடுதலை ஆதரவாளர்கள் என கூறுபவர்களும் சரி விடுதலைப்புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் திட்டி தீர்ப்பது போலவே எனக்கு படுகிறது.

பாவம் இத்தனை தியாகங்களை புரிந்த அவர்களை ஏன் இவர்கள் இப்படி திட்டி தீர்க்கிறார்கள் என எண்ணிக்கொள்வதுண்டு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை மாகாணசபையை ஏற்றுக்கொண்டிருந்தது, தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு சுயாட்சி அடிப்படையிலான தீர்வு பற்றி திம்பு தொடக்கம் ஜெனிவா வரை பேசி வந்தது என்று நான் சொன்னால் உடனடியாக இவன் துரோகி என சொல்வதற்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள சில புலன்பெயர்ந்தவர்கள் இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும்.

ஆனால் வரலாற்றை மூடி மறைக்க முடியாதல்லவா

1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாகவும், இந்த ஒப்பந்தத்தை நம்பி ஆயுதங்களை தாம் கையளிப்பதாகவும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சுதுமலை கூட்டத்தில் பேசியிருந்தார். அந்த நேரத்தில் ஒரு பத்திரிகையாளனாக நான் அக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன்.sampanthan-and-vicneswaran-300x193.jpg

அதன் பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்த சட்டத்தின் கீழ் மாகாணசபைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாகாணசபைக்கு தேர்தலை நடத்தி உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு முதல் இடைக்கால சபை ஒன்றை உருவாக்குவது என்ற ஆலோசனையையும் விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டனர்.

இடைக்கால சபைக்கான தலைவரை தெரிவு செய்வதற்காக மூன்று பெயர்களை விடுதலைப்புலிகள் சிபார்சு செய்வதென்றும் அந்த மூன்று பேரில் ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்வார் என்றும் முடிவாகியிருந்தது.

வடகிழக்கு மாகாணசபைக்கான இடைக்கால சபை உறுப்பினர்கள் பங்கீடும் அறிவிக்கப்பட்டு விடுதலைப்புலிகள் தங்கள் தரப்பு உறுப்பினர்களின் பெயர்களையும் அறிவித்திருந்தனர்.

அந்த நாட்களில் விடுதலைப்புலிகள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புக்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அப்போது எல்லாம் வடகிழக்கு மாகாண இடைக்கால சபையை ஏற்றுக்கொண்டு அதனை உருவாக்கி நடத்துவதற்கு தயாராக இருப்பதாக கூறிவந்தனர்.

வடகிழக்கு மாகாண இடைக்கால சபை தலைவர் பதவிக்காக மூன்று பேரின் பெயர்களை விடுதலைப்புலிகள் சிபார்சு செய்திருந்தனர்.

1. செல்லையா பத்மநாதன், மட்டக்களப்பு அமிர்தகழியை சேர்ந்த இவர் இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்தவர். மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மேலதிக அரசாங்க அதிபராகவும் இருந்தவர். போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்தவர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர்.

2. எஸ்.சிவபாதசுந்தரம், வடமராட்சி பிரஜைகள் குழுக்களின் தலைவராக இருந்த இவர் எழுதுவினைஞர் சங்க தலைவராக இருந்தவர். தந்தை செல்வாவின் பிரத்தியேக செயலாளராக இருந்தவர்.

3. சி.வி.கே.சிவஞானம், இவர் அப்போது யாழ். மாநகரசபையின் ஆணையாளராக இருந்தவர்.

இந்த மூன்று பேரின் பெயர்களை தான் விடுதலைப்புலிகள் வடகிழக்கு மாகாணசபையின் இடைக்கால சபையின் தலைவர் பதவிக்கு சிபார்சு செய்தார்கள். இவர்களில் அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனா சி.வி.கே. சிவஞானத்தை வடகிழக்கு மாகாணசபையின் இடைக்கால சபை தலைவராக அறிவித்தார்.

ஆனால் இதனை நிராகரித்த விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த செல்லையா பத்மநாதனைத்தான் தெரிவு செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் இடைக்கால சபையிலிருந்து விலகப்போவதாகவும் அறிவித்தனர்.

%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%B5%E0%AF%80.%Eவிடுதலைப்புலிகள் விலக வேண்டும் என்ற வஞ்சக நோக்கத்துடனேயே ஜே.ஆர்.ஜனவர்த்தனா சி.வி.கே. சிவஞானத்தை தெரிவு செய்தார் என்பதுதான் உண்மை

பத்மநாதனைதான் வடகிழக்கு மாகாணசபையின் இடைக்கால சபையின் தலைவராக நியமிக்க வேண்டும் என்பதில் விடுதலைப்புலிகள் உறுதியாக இருந்திருந்தால் அவரின் பெயரை மட்டும் சிபார்சு செய்து அனுப்பியிருக்க வேண்டும். மூவரின் பெயரை சிபார்சு செய்து அனுப்பியிருக்க கூடாது. அதேவேளை விடுதலைப்புலிகள் வடகிழக்கு மாகாண இடைக்கால சபையிலிருந்து விலகி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்னாவுக்கு இது பெரும் வாய்ப்பாக அமைந்திருந்தது.

இந்த வேளையில் ஒன்றையும் நான் குறிப்பிட வேண்டும். செல்லையா பத்மநாதனை வடக்கு கிழக்கு மாகாண இடைக்கால சபையின் தலைவராக நியமிக்க வேண்டும் இல்லையேல் அதிலிருந்து விலகி விடுவதாகவும் விடுதலைப்புலிகள் அறிவித்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவரை நியமிக்க மறுத்ததை அடுத்து வடகிழக்கு மாகாண இடைக்கால சபையிலிருந்து விடுதலைப்புலிகள் விலகினர்.

ஆனால் அதன் பின்னர் வடகிழக்கு மாகாணசபைக்கு இந்திய அரசாங்கம் தனக்கு சார்பான வரதராசபெருமாள் தலைமையில் பொம்மை மாகாண அரசை அமைத்த போது வரதராசபெருமாள் அமைச்சரவையின் செயலாளராக பத்மநாதன் நியமிக்கப்பட்டார்.

தன்னை நியமிக்கவில்லை என்பதற்காகவே வடகிழக்கு மாகாண இடைக்கால சபையை விடுதலைப்புலிகள் நிராகரித்து இந்திய இராணுவத்துடன் போருக்கு சென்றனர் என்பது தெரிந்தும் இந்தியாவினால் உருவாக்கப்பட்ட வரதராசபெருமாள் தலைமையிலான மாகாண அரசில் செயலாளர் பதவியை பத்மநாதன் பெற்றுக்கொண்டார்.

இந்த வேளையில் இன்னொன்றையும் கூற வேண்டும், வடகிழக்கு மாகாண இடைக்கால சபைக்கு விடுதலைப்புலிகள் சிபார்சு செய்த சிவபாதசுந்தரத்தை இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் சண்டை நடந்த காலத்தில் வல்லைவெளியில் வைத்து இந்திய இராணுவத்தினருடன் சேர்ந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் சுட்டுக்கொன்றனர்.

சிவபாதசுந்தரம் என்னுடைய ஊரான வடமராட்சியை சேர்ந்தவர். அந்த வகையில் அவருடனான பழக்கம் எனக்கு இருந்தது.

நான் முரசொலியில் உதவி ஆசிரியராக பணியாற்றிய போது அரியாலையில் நடந்த கூட்டத்தில் சிவபாதசுந்தரம் பேசினார். அந்த கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். இந்திய இராணுவ கெடுபிடியிலும் அவர் உறுதியுடன் பேசினார். விடுதலைப்புலிகள் தான் எங்கள் பிரதிநிதிகள், இதனை இந்திய இராணுவம் உணர்ந்து கொள்ள வேண்டும், யுத்தத்தை நிறுத்தி அவர்களுடன் பேசி தீர்வு காண வேண்டும் என பேசியிருந்தார்.

அவரின் பேச்சை அடுத்த நாள் பத்திரிகைக்கு தலைப்பு செய்தியாக போடலாம் என பிரதம ஆசிரியரிடம் கூறிவிட்டு மதிய உணவிற்காக சென்றிருந்தேன்.

நான் திரும்பி அலுவலகம் வந்த போது வல்லைவெளியில் சிவபாதசுந்தரத்தை சுட்டு விட்டார்கள் என பிரதம ஆசிரியர் சொன்ன போது அதிர்ச்சியடைந்தேன். மறுநாள் அவர் இறந்த செய்தி தலைப்பு செய்தியானது. அவர் அரியாலையில் பேசிய பேச்சு சிவபாதசுந்தரத்தின் இறுதி உரை என்ற தலைப்போடு பின்பக்க தலைப்பு செய்தியாக வெளிவந்திருந்தது.

லிபறேசன் ஒப்பிறேசன் காலத்தில் பருத்தித்துறை பகுதியில் யுத்தத்தால் அவலப்பட்ட மக்களுக்கு பெரும் துணையாக நின்று உதவி புரிந்தவர் சிவபாதசுந்தரம், அப்படி பட்ட நல்ல மனிதரை இந்திய இராணுவத்தினருடன் சேர்ந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் சுட்டு விட்டனரே என்ற கோபம் இன்றும் எனக்கு ஆறவில்லை.

இதேவேளை வடகிழக்கு மாகாணசபைக்கு 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் எப்படி அந்த தேர்தலை நடத்தினர் என்பது பற்றியும் முக்கியமாக வடமாகாணத்தில் அது எப்படி நடந்தது எப்படி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பது பற்றியும் இன்னொரு தடவை எழுத இருக்கிறேன். அதில் இந்திய இராணுவமும் அதனுடன் சேர்ந்த ஒட்டுக்குழுக்களும் செய்த அயோக்கிய தனங்கள் அதிகம்.

வடகிழக்கு மாகாண இடைக்கால சபையிலிருந்து விலகி இழுபறியில் இருந்த வேளையில் தான் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயர்நீத்ததும் அதன் பின்னர் குமரப்பா புலேந்திரன் உட்பட 16 போராளிகளை சிறிலங்கா கடற்படை கைது செய்து அவர்கள் சயனட் அருந்திய சம்பங்களும் இடம்பெற்று விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்தினருடனான யுத்தத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே விடுதலைப்புலிகள் மாகாணசபையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஒரு போதும் சொல்ல முடியாது. அவர்கள் மாகாணசபையை ஏற்றுக்கொண்டுதான் வடக்கு கிழக்கு மாகாணத்தின் இடைக்கால சபைக்கு உறுப்பினர்களையும் அதற்கான தலைவரையும் தெரிவு செய்வதில் ஈடுபட்டனர். மாகாணசபையை முற்றாக நிராகரித்திருந்தால் அவர்கள் மாகாணசபை தேர்தலுக்கு முன்னரான இடைக்கால சபை பற்றி கவனத்தை செலுத்தி இருக்க தேவை இல்லை.

தமிழீழத்தை தவிர வேறு எது பற்றியும் பேசுவதற்கு உரிமை இல்லை என கூறுபவர்கள் மறு புறத்தில் விடுதலைப்புலிகளை திட்டி தீர்ப்பதாகவே எனக்கு படுகிறது.

திம்பு முதல் ஜெனிவா வரை நடந்த பேச்சுவார்த்தைகளில் தமிழீழ கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. அதிகார பரவாக்கல் உள்ள சுயாட்சி அதிகாரம் பற்றியே விடுதலைப்புலிகளும் சிறிலங்கா தரப்பும் பேசி வந்தாhர்கள். முக்கியமாக ஒஸ்லோ உடன்படிக்கை என்பது தமிழீழத்தை முற்றாக கைவிட்ட ஒப்பந்தமாகும்.

ஓஸ்லோ உடன்படிக்கையில் தமிழீழம் என்ற வார்த்தையே இல்லை, இலங்கையில் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு என்பதே ஒஸ்லோ உடன்படிக்கையாகும். இதனை ஒஸ்லோ பிரகடனம் என்றும் அழைப்பர்.

அது தவிர ஜெனிவாவில் நடந்த பேச்சு வார்த்தைகளில் தனிநாடு பற்றி எந்த கட்டத்திலும் விடுதலைப் புலிகள் பேசவில்லை, முழுக்க முழுக்க மாநில சுயாட்சி பற்றியே பேசினர். சுவிஸ் போன்ற நாடுகளில் உள்ளது போன்று அதிகாரப்பரவலாக்கல் செய்யப்பட்ட மாநில சுயாட்சி பற்றியே பேச்சுக்கள் நடந்தன.

2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் கீழ் விடுதலைப்புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ஒன்றிற்கு இணக்கம் கண்டிருந்தனர் என்பதையும் அது பின்னர் சிறிலங்கா உயர்நீதிமன்றத்தால் தடை செய்ததையும் நாம் மறந்து விட முடியாது.

எனவே தமிழ் தலைமைகள் என்று சொல்பவர்கள் தமிழீழ கோரிக்கையை காலத்திற்கு காலம் எல்லோருமே கைவிட்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை.

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் பிரகாரம் சர்வஜன வாக்கெடுப்பாக அறிவித்து 1977 ஏப்ரலில் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் தமிழீழத்திற்கான ஆணையை வழங்கினார்கள்.

ஆனால் அவர்கள் 1988க்கு பின்னர் நடந்த தேர்தல்களில் இலங்கை அரசியலமைப்பின் 6ஆவது திருத்த சட்டத்தினை ஏற்று நாட்டு பிரிவினைக்கு ஆதரவாக செயற்பட மாட்டோம் என சத்திய பிரமாணம் செய்தே தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றனர்.

இப்போது இலங்கையில் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவாக செயற்பட மாட்டோம் என சத்திய கடதாசியில் கையொப்பம் இட்டே வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.

தேர்தல் திணைக்களத்தில் ஒரு கட்சி பதிவு செய்வதாக இருந்தால் நாட்டை பிளவு படுத்துவதற்கோ அல்லது தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவாகவே செயற்பட மாட்டோம் என்று கையொப்பம் இட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் பட்சத்திலேயே தேர்தல் ஆணையாளரால் அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகள் கூட தங்களை சிறிலங்கா தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்த போது இந்த நிபந்தனைகளை ஏற்றே தமது கட்சியை பதிவு செய்தனர்.

ஒரு நாடு இரு தேசம் என்ற கொள்கையுடைய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட தேர்தலில் போட்டியிடுகின்ற போது அல்லது பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்கின்ற போது 6ஆவது திருத்த சட்டத்தை ஏற்றுக்கொள்கிறோம் என கூறியே சத்திய பிரமாணம் செய்து கொள்கின்றனர்.

இதை நான் தவறு என கூறவரவில்லை, இதுதான் யதார்த்தம்.

இந்த யதார்த்தத்தை தான் சம்பந்தன் கூறுகிறார்.

அவர் அப்படி கூறுகின்ற போது நான் உட்பட எங்களில் பெரும்பாலானவர்கள் அவர் மீது கோபம் கொள்கிறோம்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் பூரண அதிகாரம் கொண்ட சுயாட்சி அதிகாரத்தை உடைய நிரந்தர தீர்வு என்றுதான் சம்பந்தன் கூறுகிறார்.

இதுபற்றிதான் விடுதலைப்புலிகளும் திம்பு முதல் ஜெனிவா வரை பேசி வந்தனர்.

தமிழீழ கோரிக்கையை கைவிட்ட சம்பந்தனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் துரோகிகள் என்றால் காலத்திற்கு காலம் சிறிலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்திய போது சுயாட்சி கோரிக்கையை முன்வைத்த விடுதலைப்புலிகள் யார்?

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மாகாணசபையை ஏற்றுக்கொண்டு இடைக்கால சபைக்கு உறுப்பினர்களை சிபார்சு செய்த விடுதலைப்புலிகள் யார்?

ஓன்றை ஆட்சியின் கீழ் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையை ஏற்றுக்கொண்ட விடுதலைப்புலிகள் யார்?

அண்ணன் காசி ஆனந்தன் பாஷையில் கூறுவதானால் தமிழீழ கோரிக்கையை கைவிட்ட விடுதலைப்புலிகள் அயோக்கியர்களா?

யார் துரோகி? யார் தியாகி?

எனக்கு இது புரியவில்லை,

-இரா.துரைரத்தினம்

- See more at: http://www.thinakkathir.com

திரு துரைரத்தினம்

வணக்கம். நல்ல கட்டுரை. புலிகளை தலையில் வைத்து சன்னதம் ஆடுகிறவர்களுக்கு நல்ல சவுக்கடி.

வி.புலிகள் கேட்ட அதே உள்ளக சுயாட்சியைத்தான் சம்பந்தரும் கேட்கிறார்.

காசி ஆனந்தனுக்கு அறளை பேர்ந்துவிட்டது.

அவருக்கு சூடாக பதில் கொடுக்க இருக்கிறேன்.

விக்னேஸ்வரன் ஒரு போதும் தமிழீழத்தைக் கைவிட்டதாகப் பேசவில்லை.

அப்படியிருக்க காசி ஆனந்தன் ஏன் அவர் மீது விழுந்து பிராண்டுகிறார்?

அவர் சொந்த வீடு, சொந்த வண்டி, அதை ஓட்ட ஓட்டுநர். பிள்ளைகள் இரண்டும் மருத்துவர். வசதியாக வாழ்கிறார்.

மூத்த மகளின் திருமணத்தை தடபுடலாக நடத்தினார். நான் கூட எனது பிள்ளைகளுக்கு அப்படி ஆடம்பரத்

திருமணம் செய்து வைக்கவில்லை.

நான் அவரது கவிதைத் தொகுதியை 2002 இல் என் செலவில் வெளியிட்டு அதில் வந்த 10,000 டொலரோடு

மேலதிகமாக 1,000 டொலர் போட்டு மொத்தம் 11,000 டொலர் அனுப்பி வைத்தேன்.

என்னுடைய மகன் “ஏன் அப்பா செலவழித்தது போதாதென்று மேலும் ஏன் பணம் கொடுக்கிறீர்கள்?” எனக் கேட்டான்.

நான் சொன்னேன் “அவன் ஒரு தேசியக் கவி,  நலிந்த நிலையில் உள்ளார். அவனை உயிரோடு இருக்கும் போதே மதிப்பளிக்க வேண்டும். வீட்டில் மனைவி மக்கள் அவனை மதிப்பதில்லை.

எனவே வேதான் இந்த மதிப்பளிப்பு. மேலும்  “எல்லா நாளும் இல்லை ஒரு முறைதானே செய்கிறேன்” என அவனுக்கு சமாதானம் சொன்னேன்.

காசி ஆனந்தனுக்கு  சம்பந்தரையோ விக்னேஸ்வரனையோ பார்த்துக் குரைப்பதற்கு எந்த யோக்கியதையும்  இல்லை. அவர்கள் அந்த மண்ணில்

இருக்கிறார்கள். காசி ஆனந்தன் அங்கே போகாமல் சொகுசாக சென்னையில் இருக்கிறார்.

முடியுமென்றால் அவர் இலங்கை சென்று தமிழீழம் கேட்கட்டும். விக்னேஸ்வரனுக்கு அரசியல் பாடம் எடுக்கட்டும். அதுதான்

யோக்கியனுக்கு அழகு.

வல்லை வெளியில் சுட்டுக் கொல்லப்பட்டவர் பெயர் சிவஞானசுந்தரம். அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் முதல் தலைவர். ஒன்பது பேர் கூடி

அந்தச் சங்கத்தை தொடக்கினோம். அதில் நானும் ஒருவன்.

தந்தை செல்வநாயகத்துக்கு தனிச் செயலராகவும் சில ஆண்டு காலம் இருந்தவர். பிடிச்சிராவி. விட்டுக்கொடுக்கமாட்டார்.

நக்கீரன்

எனது Email முலம் கிடைக்கப்பெற்றது 

  • கருத்துக்கள உறவுகள்

துரைரத்தினம் எப்படிப்பட்டவர் என்று தெரியாதது எங்களுக்கு... அதனால் நக்கீரன் ஐயா அதை வைத்துப் பாடம் எடுக்கின்றாராம். நக்கீரன் ஐயா வயதில் முதுமைக்காலத்திலும் கூட யாரைக் குத்தல், குடையலாம் எனச் சிந்தித்துக் கொண்டிருப்பது பெருமைமிகு விடயமல்ல. உங்களைத் தனிப்பட்டரீதியில் இருந்து அவதானித்துக் கொண்டு வரும் காலங்களில் சின்ன விடயங்களைப் பெரிதாக்கிப் பிரச்சனைகளைச் சமூகத்தில் உருவாக்குவதில் நக்கீரன் ஐயாவின் பங்கு முக்கியமானது.

குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடநூல்களில் பெரியாரை வேண்டுமென்றே திணித்தீர்கள். தமிழீழப் போராட்டத்தை விடப் பெரியாருக்கே முக்கியத்துவம் கொடுதீர்கள். அதை விட சில மாதங்களில் நான் புரிந்து கிளப்பும் பிரச்சனைகளில் இது ஒன்று. அதற்கு முன்னர் பெட்னா...

காசி ஆனந்தனுக்குப் பணஉதவி செய்தால் நீங்கள் பெரியவரா? ஒரு மனிதனின் ஏழ்மை வைத்து எதுவும் கதைக்கலாம் என்ற வக்கிரம் படைத்த நெஞ்சு தானே இது...

--------------------------------------

மகாணசபைப் புலிகள் ஏற்றுக் கொண்டதாகச் சொன்னதில்லை. அப்படியெனில் இடைக்காலநிர்வாக சபையையும் ஏற்றுக் கொண்டதாக அல்லவா பொருள் கிடைக்கும். மாகாணசபையை தலைவரை ராஜவ் ஏற்கச் சொல்லி வற்புத்தியபோதும் அதற்குத் தலைவர் மறுத்தார். அது பற்றிய காணோளி .20 நிமிடத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. துரைரத்தினம், நக்கீரன் போன்றோர் சென்ற நாடாழுமன்றத் தேர்ததில் ஏற்படுத்திய பிரச்சனைகள் போதாது என்று, இம்முறை காசி ஆனந்தனும் கூட்டுச் சேர்ந்து குழப்பிக் கொள்கின்றார்கள்....

வயது போனால் பேசாமல் அடங்கி இருப்பது தான் எல்லோருக்கும் நன்று....

புலிகள் தமிழீழ கொள்கையை கைவிட்டு விட்டார்ளோ இல்லையோ என்பதல்ல இப்போது பிரச்சனை. அவர்கள் கைவிடாவிட்டிருந்தாலும் தற்போதைய நிலையில் தமிழ் மக்கள் அதை கைவிட வேண்டிய நிர்ப்பந்த்த்தில் உள்ளார்கள் என்பதே உண்மை. அதையே தமிழ் மக்கள் வட மாகாணசபை தேர்தலில் காட்டியுள்ளார்கள். ஆகவே புலிகள் கைவிடவில்லை நீங்கள் கைவிட்டுவிட்டீர்கள்  என்று கூட்டமைப்பை திட்டுவதில் பிரஜோசனம் இல்லை.2000 ம் ஆண்டின் ஆனையிறவு வீழ்ச்சிக்கு பின்னர் பலத்தின் உச்சியில் இருந்த விடுதலை புலிகள்  அந்த மூலதனமாக வைத்து தமது ராஜதந்திரத்தை  பயன்படுத்தி உலக நாடுகளுடன் நல்லுறவை வளர்த்திருப்பதன் மூலம்  அதியுச்ச சமஸ்டி அரசாட்சியை பெற்று கொள்ள கூடிய நிலை இருந்தது உண்மை( அந்த பலமான நிலையில் கூட தமிழீழம் சாத்தியமாகி இருக்க வில்லை என்பதே நிதர்சனம்) புலிகள் அதை தவறவிட்டதால் தற்போது  13 ஆவது திருத்தம் காணி, காவற்துறை போன்றவற்றிற்கே அல்லாடுகின்ற நிலையில் தமிழ் மக்கள் உள்ளார்கள். இந்த நிலையில் தமிழீழம் பற்றி பேசும் காசி போன்ற மனநோயாளிகளின் பேச்சை கேட்க தமிழ்மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

தமிழ் நாட்டையும் வட மாகான சபை தேர்தலையும் மையமாக வைத்து தமிழ் மக்கள் தமிழ் ஈழம் கேட்கவில்லை என்பதி நிறுவ பாரிய ஒரு சதி திட்டம் நடக்குது, தமிழ் அரசு கட்சியை விட்டால் வேறு தெரிவு இல்லை என்பதால் தான் அதற்கு வாக்களிக்கப்பட்ட்தே ஒழிய தமிழ் ஈழ கொள்கையை விடும்படி எவரும் எதுவும் கூறவில்லை, இன்னமும் தெளிவாக கூறினால் முள்ளிவாய்க்கலைவிட ஒரு பாரிய அளிவின் விளிம்பில் தமிழ் இனம் நிற்கிறது, முள்ளிவாய்க்காலில் இராணுவ மயமான போராட்டம் தான் ஒழிந்தது ஆனால் தேர்தலின் பின்னர் தமிழ் ஈழம் என்ற எண்ணக்க்ருவையே உடைக்க முயற்சி நட்க்குது, இது சம்பந்தன்,சுமந்திரன்,விக்கினேஸ்வரன் மற்றும் இந்திய ஊடகங்களில் வரும் விடயங்களை வைத்து இதெல்லா யாருடைய கைங்கரியம் என உணர்ந்து கொள்ளலாம், என்னைப் பொறுத்தவரை இந்த தேர்தல் தமிழ் கூட்டமைப்புக்கு வெற்றி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டதிற்கு பாரிய தோல்வி மகிந்தவுக்கு பாரிய தோல்வி ஆனால் சிங்கள தேசத்துக்கும் அதற்கு ஆதரவாக இருக்கும் மலையாளிக்கும் மாபெரும் வெற்றி இதை எப்படி உடைத்து வெற்றி பெறப்போகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டையும் வட மாகான சபை தேர்தலையும் மையமாக வைத்து தமிழ் மக்கள் தமிழ் ஈழம் கேட்கவில்லை என்பதி நிறுவ பாரிய ஒரு சதி திட்டம் நடக்குது, தமிழ் அரசு கட்சியை விட்டால் வேறு தெரிவு இல்லை என்பதால் தான் அதற்கு வாக்களிக்கப்பட்ட்தே ஒழிய தமிழ் ஈழ கொள்கையை விடும்படி எவரும் எதுவும் கூறவில்லை, இன்னமும் தெளிவாக கூறினால் முள்ளிவாய்க்கலைவிட ஒரு பாரிய அளிவின் விளிம்பில் தமிழ் இனம் நிற்கிறது, முள்ளிவாய்க்காலில் இராணுவ மயமான போராட்டம் தான் ஒழிந்தது ஆனால் தேர்தலின் பின்னர் தமிழ் ஈழம் என்ற எண்ணக்க்ருவையே உடைக்க முயற்சி நட்க்குது, இது சம்பந்தன்,சுமந்திரன்,விக்கினேஸ்வரன் மற்றும் இந்திய ஊடகங்களில் வரும் விடயங்களை வைத்து இதெல்லா யாருடைய கைங்கரியம் என உணர்ந்து கொள்ளலாம், என்னைப் பொறுத்தவரை இந்த தேர்தல் தமிழ் கூட்டமைப்புக்கு வெற்றி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டதிற்கு பாரிய தோல்விமகிந்தவுக்கு பாரிய தோல்வி ஆனால் சிங்கள தேசத்துக்கும் அதற்கு ஆதரவாக இருக்கும் மலையாளிக்கும் மாபெரும் வெற்றிஇதை எப்படி உடைத்து வெற்றி பெறப்போகிறோம்

என்ன செய்யலாம்? ஒரே வழி நீங்கள் ஊருக்குப் போய் தனி நாடு கேட்டு, மக்களை திரட்டி போராடலாம். ஆனால் என்ன ஊருக்குப் போய் போராட்டம் என்று சொன்னால் தமிழ் மக்களே உங்களை பிச்சி மேய்ந்து விடுவார்கள்.

தாம் உச்ச பலத்தில் இருந்த போதே சமஸ்டிக்கு போயிருந்தால் எமது மக்கள் இப்படி மாகாண சபைக்கு அல்லாட வேண்டி வந்திருக்காது. சகலதையும் போட்டடித்து விட்டு இப்போ என்ன செய்ய முடியும்?

கூட்டமைப்பு தமீழக்கோரிக்கையைக் கைவிடட்டும், ஆனால் அதனை தமிழர்கள் ஏன் கைவிட வேண்டும். கூட்டமைப்பு இப்போது எதைப் பெற்றுக் கொண்டு தமீழீழக் கோரிக்கையைக் கைவிட்டுள்ளது?

இனித் தான் கூட்டமைப்பின் செயற்பாடு என்ன என்பது தெரிய வரும். தமிழீழக் கோரிக்கையை வலியுறுத்துபர்களை விட்டு விட்டு கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பெறும் நடவடிக்கைகளில் இறங்கட்டுமே. அதனையும் தமீழழம் பற்றிக் கதைப்பவர்களின் தலையில் போட்டு விட்டு , இவர்களால் தான் நாம் கூறியவற்றி எம்மால் பெற முடியவில்லை என்று முன்னர் புலிகளைச் சாட்டியவாறு கூறி , நான்கு வருடமாகப்  பதவிகளை அனுபவித்த பின் சொல்லப் போகிறதா?

புலிகள் உந்த மாகண சபைக்காகவா முள்ளிவாய்க்கால் வரை இத்தனை ஆயிரம் உயிர்களைப் பலி கொடுத்துப் போராடினார்கள்? என்னவொரு நயவஞ்சகாமான கருத்து. முன்னரும் துரைரட்டினம் இவ்வாறு தான் பிரதேச வாதக் கருத்துக்களைக் கூறி பலரது கண்டனங்களுக்கும் உள்ளானார்.   

இப்பொழுது புலிகள் இல்லை , ஏன் புலத்தில் இருந்த்தும் தமிழ் நாட்டில் இருந்த்தும் கத்தும் ஒரு சிலரைப் பற்றிக் கவலைப் படுகிறீர்கள். கூட்டமைப்பு மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது தானே?

உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் ரோவா? மலையாளி ? சிறீலங்கா புலனாய்வு முஸ்லீம் ? தமிழ் தெரிந்த சிங்கள்வர் ? திராவிட மாயைக்குள் திரியும் ஒருவர் ? உங்கள் கருத்தைப் பார்த்த பின் இது தான் என்னுடைய முடிவு, உங்களுடைய நுட்பங்கள் எல்லாம் படிப்பறிவு இல்லாத இனங்களிடையே பலிக்கும், ஆனால் நன்கு கற்ற ஈழத்தமிழரிடம் பலிக்காது, தற்காலிகமாக வேண்டுமானால் நீங்கள் எம்மைத் திசை திருப்பலாம் ஆனால் நீண்ட காலம் முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் ஒரு போதும் தமிழீழத்தைக் கைவிட்டதாகப் பேசவில்லை.

அப்படியிருக்க காசி ஆனந்தன் ஏன் அவர் மீது விழுந்து பிராண்டுகிறார்?

இன்றைய வீரகேசரிச் செவ்வியை வாசிக்கவில்லைப்போலும்.

நான் அவரது கவிதைத் தொகுதியை 2002 இல் என் செலவில் வெளியிட்டு அதில் வந்த 10,000 டொலரோடு

மேலதிகமாக 1,000 டொலர் போட்டு மொத்தம் 11,000 டொலர் அனுப்பி வைத்தேன்.

அவன் ஒரு தேசியக் கவி,  நலிந்த நிலையில் உள்ளார். அவனை உயிரோடு இருக்கும் போதே மதிப்பளிக்க வேண்டும். வீட்டில் மனைவி மக்கள் அவனை மதிப்பதில்லை.

எனவே வேதான் இந்த மதிப்பளிப்பு. மேலும்  “எல்லா நாளும் இல்லை ஒரு முறைதானே செய்கிறேன்”

ஐயா நீங்கள் எல்லாம் தமிழ் படித்து என்னத்தை கிழித்தீர்கள் ஒருவரை மரியாதையாக விழிக்கத் தெரியவில்லை, இதன்மூலமே உங்கள் தகுதியை நான் அறிந்துகொள்கிறேன்.

இப்போதெல்லாம் யாழ் களத்தில் பல அனாமத்துக்கள் வரத்தொடங்கியிருக்கிறார்கள்.

காசி ஆனந்தனையும் நக்கீரனையும் விக்னேஸ்வரனையும் ஒற்றைத்தராசில் போட்டுப்பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் யாழ் களத்தில் பல அனாமத்துக்கள் வரத்தொடங்கியிருக்கிறார்கள்.

காசி ஆனந்தனையும் நக்கீரனையும் விக்னேஸ்வரனையும் ஒற்றைத்தராசில் போட்டுப்பார்க்கிறார்கள்.

எழுதுவதைப்படியுங்கள்

தெரியும்

எங்கு நிற்கிறார்கள் என்று.

முகங்கள்

எழுத்தில் தெரியும்.

எல்லோரையும்

எப்பொழுதும் ஏமாற்றமுடியாது.......... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் ரோவா?மலையாளி ?சிறீலங்கா புலனாய்வுமுஸ்லீம் ?தமிழ் தெரிந்த சிங்கள்வர் ?திராவிட மாயைக்குள் திரியும் ஒருவர் ?உங்கள் கருத்தைப் பார்த்த பின் இது தான் என்னுடைய முடிவு, உங்களுடைய நுட்பங்கள் எல்லாம் படிப்பறிவு இல்லாத இனங்களிடையே பலிக்கும், ஆனால் நன்கு கற்ற ஈழத்தமிழரிடம் பலிக்காது, தற்காலிகமாக வேண்டுமானால் நீங்கள் எம்மைத் திசை திருப்பலாம் ஆனால் நீண்ட காலம் முடியாது

அது சரி கருத்துக்களை கருத்துக்களலால் எதிர்கொள்ள முடியாவிட்டில் இருக்கவே இருக்கு துரோகிப் பட்டம்.

நான் ஒரு சாமான்ய தமிழன். புலிகளின் காலத்தில், ஏதோ செய்வதாகச் சொல்கிறார்கள் செய்யட்டும் என்று வாயை மூடிக்கொண்டிருந்தவன். இப்போ புலிகளின் மிகதவறான அணுகுமுறையால் எனது இனம் உள்ளதையும் தொலைத்து விட்டு நிற்பதை கண்டு, இனியும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று நினைப்பவன்.

மற்றும் படி றோ எல்லாம் உங்களுக்கு கருத்து சொல்கிறது என்று நீங்கள் நினைப்பது அதீத கற்பனை.

அப்படி வாங்கோ வழிக்கு புலிகள் விட்ட 10 பிழைகளை உங்களால் கூற முடியுமா? ஏழும் என்றால் பட்டியல் இடவும்

புலிகள் தமிழீழ கொள்கையை கைவிட்டு விட்டார்ளோ இல்லையோ என்பதல்ல இப்போது பிரச்சனை. அவர்கள் கைவிடாவிட்டிருந்தாலும் தற்போதைய நிலையில் தமிழ் மக்கள் அதை கைவிட வேண்டிய நிர்ப்பந்த்த்தில் உள்ளார்கள் என்பதே உண்மை. அதையே தமிழ் மக்கள் வட மாகாணசபை தேர்தலில் காட்டியுள்ளார்கள்.

ஊரிலை என்ன நடக்குது எண்டு தெரியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள்... அதிலை தாங்களும் ஒருத்தர்...வேட்பாளர்கள் கொடுத்த வாக்குறுதிகளாவது என்ன ஏது எண்டாவது அறிந்து வைதிருப்பது போலவும் தெரியவில்லையே... குறைந்தது அனந்தி அவர்களின் பேச்சையாவது கேட்டு இருக்கலாம்..

ஒருவேளை தலைமையில் இருக்கும் சம்பந்தர் குலாம் மற்ற வேட்ப்பாளர்களை மதிக்க வேண்டியதில்லை எண்டும் சொல்வியளோ...??

முதலிலை மாகானசபை தேர்தல் விஞ்ஞாபனத்தை எடுத்து பாருங்கள்...! அதில் கூட தமிழீழத்துக்கு மாற்றான தீர்வை வாங்க போவதாக சொல்லப்படவில்லை... நீங்கள் சொல்வது உண்மையானால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது தான் அர்த்தம்...

குறைந்தது தமிழ் தேசியம் எண்றால் என்ன எண்டாவது அறிந்து வைத்து இருக்கிறீர்களா...?? பிறகெதுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு...?? இலங்கை தேசிய கூட்டமைப்பு எண்று வைக்க வேண்டியது தானே...

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினக்கிறேன் யாழ்களம் என்ன நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டதோ அந்நோக்கத்தினின்றே அது பாதைதவறிச்செல்ல எத்தனிப்பது பலநாட்களாகத் தொடர்கின்றது. அதன் காரணமாகவே பல பெருமைமிகு உறவுகளைக் களம் இழந்துவிட்டிருக்கின்றது. புலத்துப் புண்ணாக்குகள் என யாரையும் புலம்பெயர் தேசத்திலேயே விழிப்பதை யாழ்களம் இனிமேலும் அங்கீகரிகாது என எதிர்பார்க்கிறேன். தந்தை செல்வாவினால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீது கடக்கால் போடப்பட்டு பல்லாயிரம் மாவீரர்ச்செல்வங்களது உயிராலும் குருதியாலும் தற்கொடையாலும் உயிரூட்டப்பட்டு பல்லாயிரம் உறவுகளது  புலம், புலத்திற்கு வெளியேயான சாவுகளாலும் கட்டியெளுப்பபட்ட தமிழீழத்தேசியப் போராட்டம் யாரது அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது தொடரும்.

தமிழினம் இத்தேர்தலை, சிங்களமோ அன்றேல் அதைத் தாங்கிப் பிடிக்கும் தமிழர் விரோததேசம்மாம் இந்தியாவோ ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடாது என்பதை நிரூபிக்கவே கூத்தமைப்பை வெற்றியீட்டியது. கூடிய விரைவில் அது நிறைவேறும், அதற்கான முதல் மணியே நேற்றையதினம் சிங்களத்தின் நீதிமன்றத்தீர்ப்பு. இன்னமும் இருக்கு நிறையவே. நாம் தன்னாதிக்கம் நிறைந்ததும் தனிச்சிறப்புக்கள் கொண்டதுமான ஒரு இனம் என்பதை ஒவ்வொரு கணமும்  எதிரிக்கும் உலகுக்கும் உணர்த்தியபடிதான் இருப்போம், இதிலிருந்து எள்ளளவும் பின்வாங்கமாட்டோம், மாகாணசபைத் தேர்தலும் அதனால் கிடைத்தவெற்றியும் தமிழர்களது வெற்றி, இதை யாரும் தனியொருவரது வெற்றியாகவோ அன்றேல் ஒரு தனிக்குழுவினது வெற்றியாகவோ கொண்டாட முடியாது. காலத்தால் பெற்ற இச்சந்தர்ப்பத்தை விடுதலை நோக்கி நகர்த்துவதிலிருந்து தமிழர் கூத்தமைப்பு எவ்வகையிலும் விலகிட முடியாது அவ்வாறு விலகிடில் ஆனந்தசங்கரிக்கு நடந்த கைங்கரியமே அடுத்த களங்களில் அவர்கட்கும் நடாத்தப்படும். விடுதலை எனபது மாகாணசபைத் தேர்தலுடணோ அன்றேல் கிளிநொச்சிவரைக்கும் அனுப்பப்பட்ட தொடரூந்துடணோ வந்துவிடாது இன்னமும் பலகாத தூரப் பயணிப்பின்பின்பே தொலைதூரத்தில் தெரியப்போகும் விடிவெள்ளி. ஆகையால் கள உறவுகளே, இன்று புதிதாகப் பிறந்தவர்கள் ஏதாவது உளறல்களை கடைவாய்வழியாக வெளிவிடலாம், அவையாவும் செமிபாட்டுக்குமுன்பான ஒவ்வாமை என எண்ணி உங்கள் கடன் பணிசெய்து கிடவுங்கள்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு தமீழக்கோரிக்கையைக் கைவிடட்டும், ஆனால் அதனை தமிழர்கள் ஏன் கைவிட வேண்டும். கூட்டமைப்பு இப்போது எதைப் பெற்றுக் கொண்டு தமீழீழக் கோரிக்கையைக் கைவிட்டுள்ளது?

இனித் தான் கூட்டமைப்பின் செயற்பாடு என்ன என்பது தெரிய வரும். தமிழீழக் கோரிக்கையை வலியுறுத்துபர்களை விட்டு விட்டு கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பெறும் நடவடிக்கைகளில் இறங்கட்டுமே. அதனையும் தமீழழம் பற்றிக் கதைப்பவர்களின் தலையில் போட்டு விட்டு , இவர்களால் தான் நாம் கூறியவற்றி எம்மால் பெற முடியவில்லை என்று முன்னர் புலிகளைச் சாட்டியவாறு கூறி , நான்கு வருடமாகப் பதவிகளை அனுபவித்த பின் சொல்லப் போகிறதா?

புலிகள் உந்த மாகண சபைக்காகவா முள்ளிவாய்க்கால் வரை இத்தனை ஆயிரம் உயிர்களைப் பலி கொடுத்துப் போராடினார்கள்? என்னவொரு நயவஞ்சகாமான கருத்து. முன்னரும் துரைரட்டினம் இவ்வாறு தான் பிரதேச வாதக் கருத்துக்களைக் கூறி பலரது கண்டனங்களுக்கும் உள்ளானார்.

இப்பொழுது புலிகள் இல்லை , ஏன் புலத்தில் இருந்த்தும் தமிழ் நாட்டில் இருந்த்தும் கத்தும் ஒரு சிலரைப் பற்றிக் கவலைப் படுகிறீர்கள். கூட்டமைப்பு மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது தானே?

கூட்டமைப்பு செய்ய எத்தனிக்கும் வேலை லேசுப்பட்டதல்ல. பேரினவாதிகள் ஒன்றையும் தர ஓம்படப் போவதில்லை. சாம பேத தான (தண்டம் இல்லை) முறைகளை பாவித்து சர்வதேச உதவியுடன் உச்சபட்ச தீர்வை பெற கூடமைப்பு முயற்சிக்கும். முயற்சிக்க வேண்டும்.

இடையில் இந்த புலம் பெயர் கொசுக்கடி வேறு.

புலம் பெயந்தவையும் ,அவர்களின் செயற்பாடுகளும் இல்லை எண்டால் கூட்டமைப்பு எப்பவோ காணாமல் போய் இருக்கும்... இதை புரிந்து கொள்ள கொஞ்சம் ஆளமான சிந்தனை ஆற்றல் தேவை கண்டியளோ..

ஊருக்கு புலம்பெயந்தவை வேண்டாம் அனுப்புற சில்லறை மட்டும் வேணும்...??

ஒருவேளை ஊரிலை பிரச்சினை தீர்ந்தால் வெளிநாட்டிலை இருந்து சில்லறை தேறாது எண்டு இப்படியே இழுத்தடிக்க வேணும் எண்டு நினைக்கினமோ என்னவோ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி வாங்கோ வழிக்கு புலிகள் விட்ட 10 பிழைகளை உங்களால் கூற முடியுமா? ஏழும் என்றால் பட்டியல் இடவும்

அவர்கள்தான் இப்போது இல்லையே. மேலும் அவர்கள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா? அவர்களும் எம்மில் இருந்து வந்தோரே. அவர்கள் விட்ட பிழைகளை வரிசைப்படுத்தி இனி ஆகப்போவது ஏதுமில்லை. நீங்கள் நினைப்பது போல் அவர்களை வசைபாடி சுகம் காணும் ஆர்வமும் எனக்கில்லை. தமிழ் இனத்துக்கு தெரியும் எது அப்பிழைகள் என்று. அந்த பிழைகளை விடாமல் இருக்கும் பாடத்தை நாம் கற்றுக்கொள்வோம், அதுவே போதும்.

புலம் பெயந்தவையும் ,அவர்களின் செயற்பாடுகளும் இல்லை எண்டால் கூட்டமைப்பு எப்பவோ காணாமல் போய் இருக்கும்... இதை புரிந்து கொள்ள கொஞ்சம் ஆளமான சிந்தனை ஆற்றல் தேவை கண்டியளோ..

ஊருக்கு புலம்பெயந்தவை வேண்டாம் அனுப்புற சில்லறை மட்டும் வேணும்...??

ஒருவேளை ஊரிலை பிரச்சினை தீர்ந்தால் வெளிநாட்டிலை இருந்து சில்லறை தேறாது எண்டு இப்படியே இழுத்தடிக்க வேணும் எண்டு நினைக்கினமோ என்னவோ...??

என்ன ஒரு கீழ்தர சிந்தனை? நீங்கள் சில்லறை அனுப்பிறியள் என்பதற்க்காக அவர்கள் உங்களுக்கு அடிமை சேவகம் செய்யோணுமோ?

அவர்களின் அரசியல் உரிமையை யாரும் பறிக்க முடியாது, இந்தியாவோ, சர்வதேசமோ, இனவாதிகளோ இல்லை புலம்பெயர் சில்லறைகளோ.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு செய்ய எத்தனிக்கும் வேலை லேசுப்பட்டதல்ல. பேரினவாதிகள் ஒன்றையும் தர ஓம்படப் போவதில்லை. சாம பேத தான (தண்டம் இல்லை) முறைகளை பாவித்து சர்வதேச உதவியுடன் உச்சபட்ச தீர்வை பெற கூடமைப்பு முயற்சிக்கும். முயற்சிக்க வேண்டும்.

இதை  எல்லோரும்  உணர்ந்துள்ளோம்

இடையில் இந்த புலம் பெயர் கொசுக்கடி வேறு.

இது  மேற்கூறிய
மற்றும் கூட்டமைப்பு செய்ய  நினைக்கும்
ஏன் தமிழரின் சுயநிர்ணயப்போராட்டத்தின் வேரையே
புரியாத  எழுத்து.......... :( 

என்ன ஒரு கீழ்தர சிந்தனை? நீங்கள் சில்லறை அனுப்பிறியள் என்பதற்க்காக அவர்கள் உங்களுக்கு அடிமை சேவகம் செய்யோணுமோ?

அவர்களின் அரசியல் உரிமையை யாரும் பறிக்க முடியாது, இந்தியாவோ, சர்வதேசமோ, இனவாதிகளோ இல்லை புலம்பெயர் சில்லறைகளோ.

எங்களுக்கு அடிமை சேவகம் செய்ய வேன்டியதில்லை... அப்படி யாரும் இங்கை கேக்கவும் இல்லை... யாருடைய ஆதரவும் இல்லாமல் உங்களால் ஏதும் புடுங்க முடியும் எண்டால் புலம்பெயந்தவர்களிடம் எதுக்கும் வரக்கூடாது... ???

அப்படி முடிஞ்சால் செய்து காட்டுங்கோவன்...

அங்கை ஆமி பிடிச்சாலும் , வீடு கட்டவும் , வியாபாரம் செய்யவும் வாழ்வாதாரத்தை பெருக்கவும் புலம்பெயந்தவன் தேவை காசு புடுங்க ... ஆனால் தீர்வு மட்டும் தருவது பற்றி பேசப்படாது... அப்படித்தானே...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு புலத்தில் எல்லாம் கொசுக்கடியில்லை. சிலதுகள் களயதர்தம் புரியாமல் சொல்லும் கருத்துகளைதான் சொல்கிறேன். புலத்தவர் நிலத்தலைமைகளை மக்களை மத்தித்து அவர்கள் வேண்டும் உதவியை செய்யவேண்டும்.ஸ் சும்மா இங்கிருந்து கொண்டு கட்டளைகள் போடக்கூடாது.

ஏன் வரக்கூடாது. நீங்கள் எங்கள் உறவுகள் இல்லையா?

உங்களிடம் நாம் கேட்பது முடிவை நாம் எடுக்கிறோம், அதை நடைமுறை செய்ய நாம் கேட்கும் வழியில் உதவுங்கள் என்பதே.

நாம் சில்லறை அனுப்பிகிறோம், நீங்கள் அடிபட்டு சாவுங்கள் என்பது சரியில்லை.

அப்படி யாரும் இங்கு எழுதியதாக தெரியவில்லை.

அப்படி ஒரு நாட்டை எடுத்தும் பிரயோசனமில்லை.

இங்கு கருத்து வைப்பவர்கள்

தாயக மக்கள் மேல் அன்பு  கொண்டவர்கள் என்பதையாவது பரிந்து கொள்ளுங்கள்.

புலத்துக்கும்

தாயகத்தும்   தமிழகத்துக்கும்  இருக்கும்  உறவின் பலமே எமக்கான தீர்வைப்பெற்றுத்தரும்

இதில் ஒன்று விடுபட்டாலும்

நாம் அழிந்தோம்

நாம் சில்லறை அனுப்பிகிறோம், நீங்கள் அடிபட்டு சாவுங்கள் என்பது சரியில்லை.

அங்கே போராட சொல்லி யாரும் யாரையும் வற்புறுத்தவில்லை... அதே நேரம் ஜே ஆருக்கு கொடிகாமத்தில் கறுப்பு கொடி காட்டி விட்டு யாழ்ப்பாணத்தில் வரவேற்ப்பு நிகழ்த்தி இரண்டும் கெட்டான் தனம் வேண்டாம் என்கிறேன்...

கடந்த நான்கு வருடத்தின் மாநகர சபை தேர்தலிலையும் ,தோல்வி உற்று நாடாளுமண்றில் வெறும் 54% வாக்குகளை மட்டும் வடக்கில் வாங்கிய கூட்டமைப்பு கிழக்கில் மாகானசபை தேர்தலிலையும் தோல்வி அடைந்தது... இப்போது மாகானசபையில் வெற்றி எண்றால் அதன் காரணத்தை பிழையாக மொழி பெயர்க்காதீர் எண்று தான் சொல்ல வருகிறோம்...

புலம்பெயர்ந்தவர்களோடை மோதல் போக்கை நீங்கள் கொஞ்சப்பேர்தான் கை கொள்கிறீர்கள்... ஆனால் கூட்டமைப்பின் தலைமை எத்தினை தடவைகள் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வந்து சந்தித்து போனார்கள் என்பதை செய்திகள் மூலம் கூட நீங்கள் அறிந்து கொள்ள வில்லை என்பது மட்டும் புரிகிறது...

சொல்ல வருவதின் சுருக்கம் இதுதான்... நீங்களாக ஒண்றை நினைத்து கொண்டு இல்லாத பொய்களைபரப்பாதிர்... குழப்ப வாதம் மேலோங்க காலம் இது அல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி யாரும் இங்கு எழுதியதாக தெரியவில்லை.

அப்படி ஒரு நாட்டை எடுத்தும் பிரயோசனமில்லை.

இங்கு கருத்து வைப்பவர்கள்

தாயக மக்கள் மேல் அன்பு கொண்டவர்கள் என்பதையாவது பரிந்து கொள்ளுங்கள்.

புலத்துக்கும்

தாயகத்தும் தமிழகத்துக்கும் இருக்கும் உறவின் பலமே எமக்கான தீர்வைப்பெற்றுத்தரும்

இதில் ஒன்று விடுபட்டாலும்

நாம் அழிந்தோம்

வாஸ்தவமான வார்த்தைகள். நிலத்து மக்கள் மீது கண்மூடித்தனமான அன்பு தேவையில்லை.

அவர்களும் மனிதர்களே, அவர்களும் இனமானம் உடையோரே, அவர்களும் புத்திசாலிகளே, அவர்களும் சரியான தலைவர்களை தெரிவுசெய்யுமளவுக்கு அரசியல் ஞானம் உடையவரே எனறு புரிந்து அவர்களிற்கு என்ன வேண்டும் எனறு அவர்களையும் அவர்களின் தலைமையையும் மதிக்க கர்ருக்கொண்டலே போதும்.

அவர்களை ஏதோ எமது அசையா சொத்துக்கல் போல பாவித்து, நமது கனவை அவர்கள்

செத்து பெற்றுத்தர வேண்டும் என்று அதிர்பார்க்க கூடாது. எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும். ஒரு மலையாலியாள் இவ்வலவுதான் முடியும். :)

கூட்டமைப்பு காரர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் தடவைகளை விட வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழர்களை சந்திப்பது ஏனுங்க?.
 
புலம் பெயர் தமிழர்களின் ரத்த உறவுகள் தான் தமிழீழத்தில் வாழ்பவர்கள். பண உதவி முதற்கொண்டு பலவற்றை செய்கிறார்கள்.கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழர் பலத்தை காட்டுங்கள் என எனது பெற்றோரை அன்பாக கேட்டது போல் நிச்சயமாக ஏனையோரும் கேட்டிருப்பார்கள். சொல்லி இருப்பார்கள். அம்மக்களுக்கு ஒரு பாதகமான முடிவை கேட்டிருப்பார்களா?
 
ஒரு முடிவை திணிப்பதற்கும் அன்பாக கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா?

தேர்தல் காலத்தில்

லட்சக்கணக்கான குறும் செய்திகள் தொலைபேசி  வாயிலாக தாயக மக்களுக்கு அனுப்பப்படடுள்ளன என அறிகின்றேன்.

புலிகள், ஆரம்பகாலத்தில் ஆமிகளின் ஊரடங்கு அட்டகாசங்களை பாவித்து திருட்டு வேலைகளில் இறங்கியோருக்குக் கொடுத்த மரண தண்டனைகளை வைத்து 2009 ஆண்டு ஆமி செய்த அழிவுகள் சரி என்று பலதடவைகள் யாழில் கருத்துக்கள் வைக்கப்பட்டன. அது போலத்தான் இரா. துரைரத்தினத்தின் கருத்தும் செல்கிறது.

துரைரத்தினம் மற்றவர்கள் எழுதியது போல சரித்திரத்தை மாற்றி எழுதவில்லை. ஆனல் அதற்கு விளக்கத்தை மட்டும் மாற்றிக் கொடுக்கிறார். புலிகள் பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள் என்பதால் தனி நாட்டுக்கொள்ளைகளை கைவிட்டிருந்தார்கள் என்று விளக்கம் வைக்கிறார். ஆனால் முள்ளி வாய்க்காலில் ஆயுதங்களை மௌனிக்கும் போதும் அவர்கள் தனி நாடு ஒன்றால்த்தான் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நினைத்தார்கள்.   அதனால் போராட்டத்தை தொடரச்சொல்லி கேட்டார்கள்.

Gari, இந்த துரைரத்தினம் யார் எனபது எனக்கு தெரியாது. ஆனால் அவர் புலிகள் ரஜீவுடன் பேசிய போதே தனிநாட்டுக் கொள்கையை கைவிட்டுவிட்டார்கள் என்று சொல்வது சரி போலப்படவில்லை.

மேலும் விக்கினேஸ்வரனின் தெரிவு தமிழீழத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்பட்டத்தல்ல. எந்த இடத்திலும் யாரும் விக்கினேஸ்வரன் வந்தால் இனி தமிழ் ஈழம் தேவை இல்லை என்று தேர்தல் மேடைகளில் பேசவில்லை. விக்கினேஸ்வரன் இருப்பதால் தனி நாடு கெடுக்கப்பட்டுவிட்டது என்பது கற்பனைக் கதையே. இது வரையில் விக்கினேஸ்வரனால் சமாதானத்தை கொண்டுவர முடியுமா என்பதை யாரும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஏற்கனவே கோடுகள் வடக்குக் கிழக்கை பிரித்து, காணி அதிகாரத்தை இல்லாமல் செய்துவிட்டன.  (இந்த கோடு மீது வெளிநாடுகளுக்கு நம்பிக்கை இல்லை)

விக்கினேஸ்வரன் கொண்டுவரப்பட்ட காரணங்களில் சில.

1). சர்வதேசத்திற்கு, சிங்கள மக்களுடனும், அரசுடனும் தொடர்பில் இருந்த ஒருவரை கொண்டுவருவதால் தமிழ்ர்கள் சிங்களவருக்கு எதிரான கொள்ளைகளை கடைப்பிடிக்க முயவில்லை. தமக்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்பதில் உண்மையாக இருக்கிறார்கள் என்றதை சொல்லி வைக்க்கிறது.

2). சட்டத்துறையில் இருந்த காலத்தில் அவரின் நேர்மையான, நிர்வாக நடத்தைகள் வெளிக்காட்டப்படிருப்பதால் அவரின் நேர்மை கேள்விக்குறி சேராதது.

3). சட்டத்துறையில் இருந்ததால் அவரின் விளக்க அறிவு, ஆற்றல், திறமை நிருபிக்கப்பட்டது. அவரின் சட்டத்துறை ஆளுமைதான் அவரின் தீர்வுக்ககான விசேட போராட்ட வலுவாக பார்க்கப்பட்டது.

4). அவர் கூட்டமைப்பில் இல்லாத படியால், கூட்டமைப்பை புலிகளின் பினாமிகளாக பார்த்த அரசுகள் அதை கைவிட நேரலாம்.

5). கக்கீம் போன்ற துரோகிகளால் பாதை விலக வைக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் தமிழீழத் தலையமைகள் மீது நம்பிக்கை வைக்க ஒரு எற்றுக்கொள்ளப்பட்ட தலைவர். 

6). அரசியல்வாதியாக தொழில் புரியாவிட்டாலும் அரசியலுடன் தொடர்பில் இருந்தவர். 

7). தனது சமய,மத நம்பிக்கைகளால், அர்ப்பணிப்புக்களால் பாமரமக்கள் பயப்படாமல் நம்பிக்கை வைக்கத் தயங்காதவர்.

8). கூட்டமைப்பில் பதவிப் போட்டி தலை தூக்கி, கூட்டமைப்பு உடைய இருந்த நேரம் அதன் பங்குக் கட்சிகளால் எற்றுக்கொள்ள கூடியவராக இருந்த ஒருவர்( கூட்டமைப்பின் ஐந்து கட்சிகளும் அவரை ஏற்றுக்கொண்டன. அவரை சுமந்திரன், சம்பந்தர், இந்தியா.. மட்டும்தான் நியமித்தது என்பது வெறும் ஏமாற்று).

எனவே விக்கினேஸ்வரன் வந்து துவக்கை மட்டும்தான் தூக்கலாம் என்று கருத்து வைப்பது அர்த்தமில்லாதது. அமெரிக்காவரை சொல்லியிருக்க்கிறது இலங்கை அரசு தீர்வை வைக்காவிடில் நாளடைவில் போராட்டம் வெடிப்பதை தவிர்க்க முடியாது என்று. எவ்வளவுக்கெவ்வளவு தமிழர்களின் பாரம்பரியங்களை அழித்து அவர்களை காடைகளாக்குகிறார்களோ, அவ்வளவுக்கு கடுமையாக முடியும் அதன் பின்னர் ஒரு போராட்டம் வெடித்தால் என்பதை நாடுகள் உணருகின்றன. 

பண்டாரநாயக்க, டட்லி போன்றவர்கள் அந்த நாட்களில் ஒப்பந்தம் எழுத வைக்க தமிழர்களால் முடிந்தது. ஆனால் அதை கிழித்து முடிய எதும் செய்ய முடியவில்லை. அது இந்திய இலங்கை ஒப்பந்ததில் நடக்கவில்லை. இந்தியா தனக்கு இலங்கை கொடுத்த வாக்குறுதிகளை தவறவிட்ட பின்னர் ஒப்பந்தத்தில் தீவிரம் காட்டுகிறது. அதுவேதான் மேற்கின் நிலைப்படுகளும். அவர்கள் இந்தியா எழுதிய மாதிரி ஒரு ஒப்பந்தம் இலங்கையுடன் எழுதவில்லை. ஆனால், சொலேயிம், பிளேக் போனறவர்கள் இலங்கை அரசுடன் தமக்கும், தமிழர்களுக்குமாக பேசி  எடுத்த சில வாக்குறுதிகள் வாங்கியிருந்தார்கள். அவை ஏமாற்றப்பட்டவுடன் பிளேக், காங்கிரசில் இலங்கை அரசு அமெரிக்காவை ஏமாற்றிவிட்டது என்று பேசினா. அதன் எதிரொலியாகத்தான் மகிந்தா சென்ற கிழ்மை ஐ.நா.வில் சில நாடுகள் உலகத்தின் பொலிஸ்காரனாக நடந்து கொள்ள முயல்கின்றன என்று புதிய அழுத்தங்களால் ஏற்ப்பட்ட தனது அமெரிக்கா மீதான கோபமாக பேச வைத்தது.

ஆயுத போரில் ஈடுபட்டிருந்த தமிழ்மக்கள் அதை விட்டுவிட்டால் சர்வதேசம் உடனே அவர்கள் மாறிவிட்டார்கள் என்று ஏற்றுக்கொள்ளும் என்பதில்லை. ஆனல் இந்த தேர்தல் இரண்டை அவர்களுக்கு சொல்கிறது. ஒன்று தமிழ் மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்ததால் எந்த மாகாணத்தையும் விட வடக்கில் வாக்களிப்பு கூடுதலாக இருந்தது. அரசுக்கு எதிரான கூட்டமைப்பை பல ஆயிர வாக்குகள் வித்தியாசத்தால் தெரிந்ததால் அவர்கள் எல்லோரும் அரசால் இழைக்கப்படும் வேதனைகளை உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பது உணர்த்தப்பட்டது. எனவே இப்படியான் மக்களால் தெரியப்பட்ட அப்படியான விக்கினேஸ்வரன் இனிமேல் பேசப்போவதை, செய்யப் போவதை உலகம் அவதானிக்க போகிறது. அதுதான் இராஜதந்திர போராட்டத்தின் ஆரம்பம்.

அரசு உரிமைகளை தரவேண்டும், இல்லையேல் தமிழ் மக்கள் உலக நாடுகளிடம் தாம் பிரிந்து போக உதவும் படி கேட்பார்கள். இதை விக்கினேஸ்வரந்தான் செய்வார் என்பதில்லை. ஆனல் அவருக்கு நிச்சயமாக அவரால் முடியுமான சமாதம் பேசும் பாகம் கை அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் தோல்வியுற்றால் போராட்ட திசை மாறும் அதை சர்வதேசம் அங்கீகரிக்கும். அப்போது தலைமையும் மாறும்.  பால் கறக்கும் பசுமாட்டை ஒருவரும் வண்டிலில் பூட்டுவத்தில்லை. எனவே விக்கினேஸ்வரன் தலை தாங்கும்வரை போராட்டம் இந்த திசையில்மட்டும்தான் இருக்கும். இதில் காசியானந்தன் ஆடாலம், பாடாலாம், ஆனால் மாற்றம் எதுவும் வரபோவதில்லை.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.