Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரை முடியை கருமையாக்க உதவும் பொருட்கள்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது.

 
அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர். ஆகவே இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
 
பொதுவாக நரைமுடியை போக்குவது சற்று கடினமானதாக இருந்தாலும், முறையாக நம்பிக்கையுடன் முடியை சரியாக பராமரித்து வந்தால், நிச்சயம் முடியை கருமையாக்க முடியும்.
 
இங்கு அத்தகைய நரைமுடியை கருமையாக்க உதவும் சில பொருட்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை தவறாமல் பின்பற்றி வாருங்கள். நிச்சயம் நரை முடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
 

01-1380610910-1-ginger.jpg

இஞ்சி
நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
 
01-1380610925-2-hibiscus.jpg
செம்பருத்தி
வாரத்திற்கு ஒரு முறை செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தாலும், நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
01-1380610941-3-coconutoil.jpg
தேங்காய் எண்ணெய்
சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
01-1380610962-4-henna.jpg
 
ஹென்னா/மருதாணி பொடி
விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, அதில் ஹென்னா பொடியை தூவி கெட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து வந்தால், நரைமுடி மறையும். அதிலும் இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவது நல்லது.
01-1380610984-5-curryleaves.jpg
கறிவேப்பிலை
நிபுணர்கள் கூட, நரைமுடியைப் போக்கக்கூடிய பொருட்களில் கறிவேப்பிலை மிகவும் சிறந்தது என்று பரிந்துரைக்கின்றனர். அதற்கு ஒரு கையளவு கறிவேப்பிலையை குளிக்கும் நீரில் போட்டு, அந்த நீரில் தினமும் கூந்தலை அலச வேண்டும்.

01-1380611005-6-curd.jpg

தயிர்
தயிர் மற்றும் ஹென்னாவை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரை முடி மறையும்.
 
வெங்காயம்
வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

 

மிளகு
நீரில் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரை கூந்தலில் ஊற்றி மசாஜ் செய்து, பின் கூந்தலை அலச வேண்டும்.
 
01-1380611064-9-amlaoil.jpg
நெல்லிக்காய்
கூந்தலை கருமையாக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். எனவே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலோ அல்லது நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு தடவி வந்தாலோ, நரைமுடியில் இருந்து விடுதலைப் பெறலாம்.
 
ப்ளாக் டீ/காபி
ப்ளாக் டீ/காபி கூட நரைமுடிக்கு நல்ல நிவாரணி. அதற்கு ப்ளாக் டீ/காபியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூந்தலில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

 

 

http://tamil.boldsky.com/beauty/hair-care/2013/reverse-grey-hair-natural-colour-004033.html

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழரசு.மண்டையில முடியில்லாதவர்கள் என்ன செய்வது

புத்தம் சரணம் கச்சாமி.....

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழரசு.மண்டையில முடியில்லாதவர்கள் என்ன செய்வது

மண்டையில சுத்தமாக முடி இல்லையென்றால் பிரச்சனை இல்லை விதவிதமாக விக்கி போட்டு திரியலாம் ....... சிலர் தலையில் ஓவியம் வரைந்து வைத்துள்ளார்கள் இதில் ஒன்றை தேர்வு செய்யவும் .........  :D
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் 17..18 வயதிலையே தலை நரைக்குது. 20 பதுகளை அடையும் போது பல நரைச்சிடுது. இதற்குக் காரணமாக.. பொதுவாக சம்பூக்களில் குற்றம் சுமத்தப்பட்டாலும்.. கூடிய stress உம் இதற்குக் காரணமாக உள்ளது. குறிப்பாக இளையோரில் தலைநரைக்க அது முக்கிய காரணமாக இருக்கக் கூடும்.

 

நன்றி ஆக்கப் பகிர்விற்கு. :)


The first silvery strands usually pop up around age 30 for men and age 35 for women, but graying can begin as early as high school for some and as late as the 50s for others.

 

http://www.scientificamerican.com/article.cfm?id=fact-or-fiction-stress-causes-gray-hair

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி.  :)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  தம்பி தமிழ் அரசு

தேவை  வந்திட்டுது போல... :D

இணைப்புக்கு நன்றி

 

 

 

மண்டையில சுத்தமாக முடி இல்லையென்றால் பிரச்சனை இல்லை விதவிதமாக விக்கி போட்டு திரியலாம் ....... சிலர் தலையில் ஓவியம் வரைந்து வைத்துள்ளார்கள் இதில் ஒன்றை தேர்வு செய்யவும் .........  :D

 

 

அவரவர் பிரச்சினை  அவரவருக்கு.. :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன  தம்பி தமிழ் அரசு

தேவை  வந்திட்டுது போல... :D

இணைப்புக்கு நன்றி

 

 

 

அவரவர் பிரச்சினை  அவரவருக்கு.. :lol:  :D  :D

ம் ....., புரியுது ..... புரியுது  :D

பகிர்வுக்கு நன்றி.  :)

 

இப்ப இப்ப சில DYEயளும் கூட விக்குது........... வாங்கி வைக்கலாம்.

 

அட்வைஸ் ஏதும் வேணும் என்டால்....... சொல்லுங்கோ. :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இப்ப சில DYEயளும் கூட விக்குது........... வாங்கி வைக்கலாம்.

 

அட்வைஸ் ஏதும் வேணும் என்டால்....... சொல்லுங்கோ. :D

 

 மல்லை அந்தளவுக்கு இன்னும் வரவில்லை தேவைபட்டால் சொல்லுறேன்  :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவதானித்த அளவில்.... தமிழகத் தமிழர்களுக்கும், சிங்களப் பெண்களுக்கும்.... நரை முடி குறைவாகவே காணப்படுகின்றது.
இவர்களுக்கிடையில்... ஏதாவது தொடர்புகள் இருக்குமோ... தெரியவில்லை.
தயவு செய்து... தொப்பிள் கொடி உறவு, என்று சொல்லி விடாதீங்கப்பா... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இப்ப சில DYEயளும் கூட விக்குது........... வாங்கி வைக்கலாம்.

 

அட்வைஸ் ஏதும் வேணும் என்டால்....... சொல்லுங்கோ. :D

 

உங்களுக்கா ???? :lol:

 

நன்றி தமிழரசு.மண்டையில முடியில்லாதவர்கள் என்ன செய்வது

 

உங்கட ஏரியாவில உள்ள கறுப்பியளைக் கேட்டா எப்பிடி ஒட்டுவது என்று விவரமாச் சொல்லுவினம்.

 

நன்றி பகிர்வுக்கு.. எனக்கும் முன்பிலிருந்தே 4,5 முடி நரைச்சு தான் இருக்கு.. :rolleyes:

நன்றி தமிழரசு.மண்டையில முடியில்லாதவர்கள் என்ன செய்வது

 

வெளிநாடுகளில் தலையில் முடியில்லாதவர்கள் முடி நட முடியும்.

ஆனால் இதற்கு அதிக செலவாகும். சில நாடுகளில் குறைந்த காசுக்கு நட்டு விட்டு வருவார்கள். ஆனால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டுமே. எனவே தரமான நாடுகளிலுள்ள தரமான இடங்களில் நடுவது நல்லது.

முன்னுக்கு மட்டும் முடி உதிர்ந்திருந்தால் பின்னுக்கு இருக்கும் அவர்களது முடியையே இடையிடையே பிடுங்கி நடுவார்கள்.

முழுமையாக உதிர்ந்திருந்தால் வேறு முடி தான் நடுவார்கள்.

 

சாதாரணமாக எமது முடி எவ்வாறு வளர்கிறதோ அதே போல் நட்ட முடியும் வளரும்.

 

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அவதானித்த அளவில்.... தமிழகத் தமிழர்களுக்கும், சிங்களப் பெண்களுக்கும்.... நரை முடி குறைவாகவே காணப்படுகின்றது.

இவர்களுக்கிடையில்... ஏதாவது தொடர்புகள் இருக்குமோ... தெரியவில்லை.

தயவு செய்து... தொப்பிள் கொடி உறவு, என்று சொல்லி விடாதீங்கப்பா... :D  :lol:

தமிழகத்தில் இருந்துதான் அந்தக்காலத்தில்  சிங்களவனுக்கு திருமணம் செய்வதற்கு பெண்களை கொண்டுவததாக அறிந்திருக்கின்றேன் அதனால்தான் சிங்களவர்களின் மனைவிமாருக்கு அழகான தமிழ் பெயர்கள் உள்ளதாம் .....  :lol:  :D   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.