Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் ' முன்னாள் ' பொதுச் செயலாளரான தியாகு அவர்களின் உண்ணா விரதத்தின் பின்ணனி என்ன??

Featured Replies

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை இதனுடன் இணைப்பது நல்லதல்ல.
எம் ஜி ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை கூட அப்படி நல்லதாய் இருக்கவில்லை.இன்னொரு நாட்டில் இருந்து எமக்காக போராடுவதை நாம் நன்றியுடன் அணுகவேண்டும். 
  • Replies 51
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அது எரு.. கேவலமானது .. என்கிறார் சாத்திரி அண்ணா..

அது எருவேயானாலும் உரமாகப் பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்..

பி.கு.: அது எருவாக இருந்தால் பரவாயில்லை.. ஆனால் பார்த்தீனியச்செடி என்பதை எப்போது புரிந்து கொள்ளப்போகிறீர்கள்?? (இது வரவிருக்கும் பதில்.. :D)

  • கருத்துக்கள உறவுகள்

///எங்கள் அன்பு தகப்பன் குமரேசன் (முத்துகுமாரின் தந்தை) அவர்களின் குடும்ப நண்பர் "ஊமை அழகிரி" இன்று என்னோடு பேசினார்! நான் வேதனையோடு போட்ட பதிவினால் சிலர் ,இதற்காக தான் இனத்திற்காக என்று யோசிக்காமல்-தன் சொந்த குடும்பத்தை மட்டும் பார்க்க வேண்டும் என்று தவறாக கருத்து தெரிவிக்கிறார்களாம்!

அதனால் எனது பதிவினை நீக்க சொல்லி கேட்டு கொண்டதன் பேரில்,நேற்று நான் போட்ட பதிவினை நீக்கி விட்டேன்! காரணம் அப்பா குமரேசன் தனது சொந்த தொழிலை விரும்பி செய்வதாகவும்,மற்றவர்கள் உதவி செய்ய முன் வந்தால் "என் மகன் எந்த மக்களுக்காக உயிரை விட்டானோ,அவர்களுக்கு இந்த உதவியை செய்யுங்கள் என சொல்லி மறுத்து விடுகிறாராம்!"

இது போன்ற ஒர் நல்ல மனிதருக்கு பிறந்ததால் தான் என் தம்பி தன் குடும்பம் பற்றி யோசிக்காமல்- தன் இனம் பற்றி யோசித்து -நேசித்து தியாக தீபமானான்!

தயவுசெய்து யாரும் இரக்கப்படுகிறேன் என சொல்லி என் முத்துகுமரனின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்!/////

Senkodi Vijiஎன்ற தோழி மேற்கண்ட நிலைச்செய்தியைப் பதிவிட்டிருந்தார்.

முத்துக்குமாரின் தந்தையின் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் தலைவணங்குகிறோம்.

முகநூலில லைக் வாங்குவதற்காக போடப்படும் பதிவுகளை பாவித்து தமிழகத்தின் இன உணர்வைக் கொச்சைப்படுத்த முன்னிற்கிற அஞ்சரன், சாத்திரி அணாணா போன்றவர்களுக்கு இப்போ சங்கடம்.. சும்மா தன்பாட்டுக்கு இருந்த முத்துக்குமாரின் தந்தையையும் இதற்குள் இழுத்துவிட்டு தங்களுக்குள்ளே சிரித்துக்கொளகிறார்கள்.. அவர்களுக்குள் இருக்கும் மிகுந்த காழ்ப்புணர்வைத்தான் இது காட்டுகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை இதனுடன் இணைப்பது நல்லதல்ல.
எம் ஜி ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை கூட அப்படி நல்லதாய் இருக்கவில்லை.இன்னொரு நாட்டில் இருந்து எமக்காக போராடுவதை நாம் நன்றியுடன் அணுகவேண்டும். 

எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி எழுத இவர்களுக்கு துணிவு வருமோ?

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட ரீதியில்

சாத்திரி  பற்றியும்  அவரது குடும்பவாழ்வு பற்றியும் முன்பு  இங்கு  பலமுறை  எழுதப்பட்டது.

அண்மையில் கூட இங்கு ஒருவர் அவரைப்பற்றிய  முழு குடும்ப வாழ்வையும் தாக்கி  கவிதை படைத்திருந்தார்.

அதை உடனேயே நிர்வாகத்துக்கு அறிவித்து தூக்கியிருந்தேன்.

காரணம்  ஒன்று தான்

கருத்துக்களத்தில் சில விடயங்களில் மட்டுமே எனக்கும்  சாத்திரிக்கும்  முரண்பாடுண்டு

அதுக்கும்  குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

அவரது மனைவியாருக்கு சுகயீனம் என்றதும் ஓடிவந்து திரி  திறந்தது நான்தான்.

தாயகம் சார்ந்து

எனக்கு உடன்பாடில்லாவிடயங்களை  விமர்சிப்பதற்கும் அவரது குடும்ப பின்னணி  எனக்கு தேவையற்றது.  அந்தளவுக்கு கருத்து பற்றாக்குறையோ 

நான் யோக்கியனோ கிடையாது.

தற்பொழுது ஒன்று மட்டும்  எனக்கு குத்துகிறது.

நாய்க்கு ஒருவன் கல்லால்  எறிந்த கதை. :(

மற்றும்படி கரும்பு சொல்வது அத்தனையும்  உண்மை.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை இதனுடன் இணைப்பது நல்லதல்ல.
எம் ஜி ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை கூட அப்படி நல்லதாய் இருக்கவில்லை.இன்னொரு நாட்டில் இருந்து எமக்காக போராடுவதை நாம் நன்றியுடன் அணுகவேண்டும். 

பெண்கள்  விடயத்தில் மிகவும் கீழ்த்தரமானவர் எம் ஜி ஆர்  அவர்கள்.

இது சிறுபிள்ளைக்கும் தெரியும்.

அப்படியாயின்

தலைவர் தெரிந்திருந்தும் பிழை  செய்துள்ளார். :( 

  • கருத்துக்கள உறவுகள்
தனிப்பட்ட வாழ்க்கையும்,அவர்களது பொது வாழ்க்கையும் கலக்கக் கூடாது என்று  சொல்பவர்களுக்கு வணக்கம்.உங்களிடம் ஒர் கேள்வி நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக் கொண்டால் பின் எதற்காக கருணாநிதி,டக்லஸ்,கருணா அம்மான் போன்றோரின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி விமர்சிக்கலாம்?
 
அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை வேறு,அவர்களது அரசியல் வேறு என்பது இங்கு பல திரிகளில் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் போது தெரியவில்லையா?....கலைஞனைத் தவிர மற்றவர்கள் அதைத் தானே செய்தீர்கள்.நாளைக்கும் அதைத் தான் செய்யப் போறீர்கள்.இதில் தியாகு அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காதே என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்கிறீர்கள்?
 
எம்ஜீஆர் தனிப்பட்ட வாழ்க்கையில் பொறுக்கியாக இருக்கலாம் ஆனால் ஒரு நாளும் தன்னை நிலை நிறுத்த/காப்பாற்ற எங்கள் போராட்டத்தை கையில் எடுக்கவில்லை.இதை தியாகு செய்கிறார் என்பது தான் என் கருத்து அது தான் சாஸ்திரியின் கருத்தாக இருக்கலாம்

சாத்திரியார் இப்படி போர் சரிதிரம் எழுவதும் பிறகு யாரோ வந்து சாத்திரியாரின் போர் சரித்திரம் எழுவதுவதும் யாழில் வழமைஆகிவிட்டது.  

அவமானப்படுத்துவதும் அவமானப்படுவதும்தான் தான் அரசியல் எழுத்துக்களா.

இதில் திருடனாக பார்த்து திருந்தி திருட்டை ஒழிக்க சாத்திரியார் தான் முந் வந்து உதாரணத்தை யாழுக்கு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் மற்றக்கரை உதரணத்தை யாழுக்கு தொடக்கி வைத்ததில் அவருக்கும் கணிசமான பங்கு உண்டு.

தனிப்பட்ட வாழ்க்கையும்,அவர்களது பொது வாழ்க்கையும் கலக்கக் கூடாது என்று  சொல்பவர்களுக்கு வணக்கம்.உங்களிடம் ஒர் கேள்வி நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக் கொண்டால் பின் எதற்காக கருணாநிதி,டக்லஸ்,கருணா அம்மான் போன்றோரின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி விமர்சிக்கலாம்?
 
அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை வேறு,அவர்களது அரசியல் வேறு என்பது இங்கு பல திரிகளில் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் போது தெரியவில்லையா?....கலைஞனைத் தவிர மற்றவர்கள் அதைத் தானே செய்தீர்கள்.நாளைக்கும் அதைத் தான் செய்யப் போறீர்கள்.இதில் தியாகு அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காதே என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்கிறீர்கள்?
 
எம்ஜீஆர் தனிப்பட்ட வாழ்க்கையில் பொறுக்கியாக இருக்கலாம் ஆனால் ஒரு நாளும் தன்னை நிலை நிறுத்த/காப்பாற்ற எங்கள் போராட்டத்தை கையில் எடுக்கவில்லை.இதை தியாகு செய்கிறார் என்பது தான் என் கருத்து அது தான் சாஸ்திரியின் கருத்தாக இருக்கலாம்

பொதுமக்கள்பணம், பொது மக்களால் தெரியப்பட்ட  ஒருவரின் கடமை, களத்தில் போராடும் ஒரு தனி மனிதன், தனி மனிதனின் வாழ்க்கை என்பவற்றை விள்ஙகாவிட்டல் தயவு செய்து கேளுங்கள். ஒவ்வொன்றாக விளக்கம் எழுத. அவரசப்பட்டு எதுவும் விளஙகாமல் குமைக்காதீர்கள். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட வாழ்க்கையும்,அவர்களது பொது வாழ்க்கையும் கலக்கக் கூடாது என்று  சொல்பவர்களுக்கு வணக்கம்.உங்களிடம் ஒர் கேள்வி நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக் கொண்டால் பின் எதற்காக கருணாநிதி,டக்லஸ்,கருணா அம்மான் போன்றோரின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி விமர்சிக்கலாம்?
 
அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை வேறு,அவர்களது அரசியல் வேறு என்பது இங்கு பல திரிகளில் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் போது தெரியவில்லையா?....கலைஞனைத் தவிர மற்றவர்கள் அதைத் தானே செய்தீர்கள்.நாளைக்கும் அதைத் தான் செய்யப் போறீர்கள்.இதில் தியாகு அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காதே என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்கிறீர்கள்?
 
எம்ஜீஆர் தனிப்பட்ட வாழ்க்கையில் பொறுக்கியாக இருக்கலாம் ஆனால் ஒரு நாளும் தன்னை நிலை நிறுத்த/காப்பாற்ற எங்கள் போராட்டத்தை கையில் எடுக்கவில்லை.இதை தியாகு செய்கிறார் என்பது தான் என் கருத்து அது தான் சாஸ்திரியின் கருத்தாக இருக்கலாம்

நான் தியாகுவிடம் இருந்து எதிர்பார்ப்பது

அவரது போராட்டத்தால்

இந்தியக்கொள்கையில் ஏதாவது மாற்றம் வருமா என்பது மட்டுமே.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை இதனுடன் இணைப்பது நல்லதல்ல.

எம் ஜி ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை கூட அப்படி நல்லதாய் இருக்கவில்லை.இன்னொரு நாட்டில் இருந்து எமக்காக போராடுவதை நாம் நன்றியுடன் அணுகவேண்டும்.

தவறான புரிதல் M G R அவர்கள் நிதி உதவி செய்தார் இங்கு தியாகு அவர்கள் நிதி உதவி கேட்கிறார் சாப்பிடாமல் இருப்பதற்கு எதுக்கு நிதி

  • கருத்துக்கள உறவுகள்

தவறான புரிதல் M G R அவர்கள் நிதி உதவி செய்தார் இங்கு தியாகு அவர்கள் நிதி உதவி கேட்கிறார் சாப்பிடாமல் இருப்பதற்கு எதுக்கு நிதி

இறுதிச் செலவுகளுக்கு :(

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட வாழ்க்கையும்,அவர்களது பொது வாழ்க்கையும் கலக்கக் கூடாது என்று  சொல்பவர்களுக்கு வணக்கம்.உங்களிடம் ஒர் கேள்வி நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக் கொண்டால் பின் எதற்காக கருணாநிதி,டக்லஸ்,கருணா அம்மான் போன்றோரின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி விமர்சிக்கலாம்?
 
அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை வேறு,அவர்களது அரசியல் வேறு என்பது இங்கு பல திரிகளில் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் போது தெரியவில்லையா?....கலைஞனைத் தவிர மற்றவர்கள் அதைத் தானே செய்தீர்கள்.நாளைக்கும் அதைத் தான் செய்யப் போறீர்கள்.இதில் தியாகு அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காதே என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்கிறீர்கள்?
 
எம்ஜீஆர் தனிப்பட்ட வாழ்க்கையில் பொறுக்கியாக இருக்கலாம் ஆனால் ஒரு நாளும் தன்னை நிலை நிறுத்த/காப்பாற்ற எங்கள் போராட்டத்தை கையில் எடுக்கவில்லை.இதை தியாகு செய்கிறார் என்பது தான் என் கருத்து அது தான் சாஸ்திரியின் கருத்தாக இருக்கலாம்

டக்ளஸ், கருணா போன்றோர் தமிழ் மக்களுக்கு செய்த  துரோக செயல்கள் நீங்கள் அறியாததா? அப்படி என்ன துரோகத்தை தியாகு செய்து விட்டார்?. பத்திரிகையாளர் மாநாட்டில் "யாரிந்த குதிரை கஜேந்திரனோ" என நக்கலாக கேட்கும் டக்ளசுக்கு யார் மரியாதை கொடுக்க வேண்டும் ஏன் மரியாதை கொடுக்க வேண்டும்??
 
தியாகு ஒரு இந்திய குடிமகன்.அதுவும் தமிழர். தனது நாட்டு அரசை தமிழர்களை கொல்லும்  சிறிலங்கா அரசுக்கு செல்லாதே என உரிமையுடன் கேட்க உரிமை உண்டு.அவரின் பெண்கள் மீதான சபல புத்தி (அவரின் தனிப்பட்ட பிரச்சனை) எப்படி ஈழதமிழர்களுக்காக குரல் கொடுப்பதோடு முடிச்சு போட முடியும்.கலைஞன் சொன்னது போல் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்ந்தால் அழுக்கானவை என அறிய முடியும்.
 
யார் என்றாலும்  எம்மக்களுக்கு உதவுவோரை, அல்லது உதவ முன்வருவோரை  எட்டி உதைப்பதா அல்லது அரவணைப்பதா சிறந்தது?
  • கருத்துக்கள உறவுகள்

யார் என்றாலும்  எம்மக்களுக்கு உதவுவோரை, அல்லது உதவ முன்வருவோரை  எட்டி உதைப்பதா அல்லது அரவணைப்பதா சிறந்தது?

தமிழருக்கான விடிவு சார்ந்து

பொதுத்தன்ரைம பற்றி  நாம் பேசுகின்றோம்

ரதி

அது தவறு என்றால் இது தவறு தான் என்று சட்ட புத்தகத்துடன்  நிற்கிறார்..

ஏதோ  அவரால் முடிந்தது.............. :(

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ், கருணா போன்றோர் தமிழ் மக்களுக்கு செய்த  துரோக செயல்கள் நீங்கள் அறியாததா? அப்படி என்ன துரோகத்தை தியாகு செய்து விட்டார்?. பத்திரிகையாளர் மாநாட்டில் "யாரிந்த குதிரை கஜேந்திரனோ" என நக்கலாக கேட்கும் டக்ளசுக்கு யார் மரியாதை கொடுக்க வேண்டும் ஏன் மரியாதை கொடுக்க வேண்டும்??
 
தியாகு ஒரு இந்திய குடிமகன்.அதுவும் தமிழர். தனது நாட்டு அரசை தமிழர்களை கொல்லும்  சிறிலங்கா அரசுக்கு செல்லாதே என உரிமையுடன் கேட்க உரிமை உண்டு.அவரின் பெண்கள் மீதான சபல புத்தி (அவரின் தனிப்பட்ட பிரச்சனை) எப்படி ஈழதமிழர்களுக்காக குரல் கொடுப்பதோடு முடிச்சு போட முடியும்.கலைஞன் சொன்னது போல் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்ந்தால் அழுக்கானவை என அறிய முடியும்.
 
யார் என்றாலும்  எம்மக்களுக்கு உதவுவோரை, அல்லது உதவ முன்வருவோரை  எட்டி உதைப்பதா அல்லது அரவணைப்பதா சிறந்தது?

முதலில் யாராக இருந்தாலும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க கூடாது.ஒருவர் உங்களுக்குத் தேவை என்டால் அவரை விமர்சிக்க கூடாது.தேவை இல்லை என்டால் விமர்சிக்க வேண்டும் என்ட அதிகாரத்தை உங்களுக்கு தந்தது யார்?
 
கருணாநிதியும் ஒரு இந்திய குடிமகன் தான்.அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை உங்களுக்கு விமர்சிக்கும் உரிமையைத் தந்தது யார்?
 
யார் என்டாலும் முழு மனத்தோடு உதவ வேண்டும்.நான் என்ட முதல் கருத்தில் சொன்ன மாதிரி தியாகு தன்ட முதுகில் உள்ள ஊத்தையை மறைக்க தமிழ்த் தேசியத்தை கையில் எடுத்து உள்ளார் அது தான் பிழை என்கிறேன்.மற்றப் படி அவர் எத்தனை கல்யாணம் கட்டினால் எனக்கென்ன? யாரோடு படுத்தால் எனக்கென்ன <_<
 
மற்றப்படி யார்,யாருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும்
 
தவறான புரிதல் M G R அவர்கள் நிதி உதவி செய்தார் இங்கு தியாகு அவர்கள் நிதி உதவி கேட்கிறார் சாப்பிடாமல் இருப்பதற்கு எதுக்கு நிதி

வீட்டுக்குள் மனைவியுடன் கோவித்துக்கொண்டு தியாகு படுத்திருக்கிறார் என்று நினைப்பதால் சில சில கருத்துக்கள் வருகின்றனவா என்று சந்தேகமாக இருக்கு. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவரின் வீட்டுப்பெண்களை இந்த விவாதத்திற்குள் இழுத்துவரலாம். சாப்பிடமாட்டன் என்றால் என்றால் சும்மா சோபாவில் போய் படுக்க வேண்டியதுதானே என்று அவரின் மனைவி அவர் மீது கடிந்தும் கொள்ளலாம். அங்கு அவர் பணம் தேடுவது வீட்டுச்சாப்பாட்டை விட உணவக சாப்பாடுகளை விரும்புபவர் என்று பொருள் தரும்.

மற்றும்படி அரசியலில் எல்லாவற்றுக்கும் தேவைப்படும் மூலதனம் பணம்.

Edited by மல்லையூரான்

முதலில் யாராக இருந்தாலும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க கூடாது.ஒருவர் உங்களுக்குத் தேவை என்டால் அவரை விமர்சிக்க கூடாது.தேவை இல்லை என்டால் விமர்சிக்க வேண்டும் என்ட அதிகாரத்தை உங்களுக்கு தந்தது யார்?
 
கருணாநிதியும் ஒரு இந்திய குடிமகன் தான்.அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை உங்களுக்கு விமர்சிக்கும் உரிமையைத் தந்தது யார்?
 
யார் என்டாலும் முழு மனத்தோடு உதவ வேண்டும்.நான் என்ட முதல் கருத்தில் சொன்ன மாதிரி தியாகு தன்ட முதுகில் உள்ள ஊத்தையை மறைக்க தமிழ்த் தேசியத்தை கையில் எடுத்து உள்ளார் அது தான் பிழை என்கிறேன்.மற்றப் படி அவர் எத்தனை கல்யாணம் கட்டினால் எனக்கென்ன? யாரோடு படுத்தால் எனக்கென்ன <_<
 
மற்றப்படி யார்,யாருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும்

அதிகாரம் கொண்ட பதவியில் இருக்கும் போது அரசியல்வாதி குடிமகன் அல்ல.  பொதுவாழ்வு பத்விகளுக்கு வரும் அரசியல்வாதிகள் தனது சொத்துப்பத்து, வரிவிபரங்கள் வரை வெளியே பொதுப் பார்வைக்கு வைக்கப்படவேண்டும் என்பது தி.மு.க கொண்டுவந்த சட்டம்.  

அமெரிக்காவில் மனைவிக்கு மேலாக உறவு வைத்து அண்மையில் பதவி இழந்த மிக சிறந்த அரசியல்வாதிகளாக ஸ்பிடசர், காரி காட், மக்கிறேவி, மார்க் சான் போட். அந்தனி வீனர்...... கலியான சட்டங்களை முறித்தாலும் அது சட்ட முறிப்பாகத்தான் பார்க்கப்படும். 

பதவியில் உள்ளவர் தவறு விட முடியாது. பதவியில் இல்லாதவரை கேட்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில லைக் வாங்குவதற்காக போடப்படும் பதிவுகளை பாவித்து தமிழகத்தின் இன உணர்வைக் கொச்சைப்படுத்த முன்னிற்கிற அஞ்சரன், சாத்திரி அணாணா போன்றவர்களுக்கு இப்போ சங்கடம்.. சும்மா தன்பாட்டுக்கு இருந்த முத்துக்குமாரின் தந்தையையும் இதற்குள் இழுத்துவிட்டு தங்களுக்குள்ளே சிரித்துக்கொளகிறார்கள்.. அவர்களுக்குள் இருக்கும் மிகுந்த காழ்ப்புணர்வைத்தான் இது காட்டுகிறது..

இதைத்தான்  தொடர்ந்து எழுதி  வருகின்றேன்

தொடர்ந்து வேசம் போடமுடியாது எவரும்.

முகங்கள் தெரியும் காலமிது

தெரிந்து கொள்ளுங்கள் :( 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி,

நீங்கள் எழுதியதில் உள்ள உண்மை, பொய் எனக்குத்தெரியாது. அண்மைய உலகநடப்பு, அரசியல் செய்திகளையும் பார்க்க அதிகம் வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும், உங்கள் பதிவின் அடிப்படையில் சில விடயங்களை நோக்கியபோது இவ்வாறு சொல்லத்தோன்றுகின்றது:

கவிஞர் தாமரை அவர்களின் உள்வீட்டுப்பிரச்சனைகளை தெருவுக்கு இழுத்து அவருக்கு நல்லது செய்வதாக எண்ணி இன்னும் பாதிப்பை ஏற்படுத்துகின்றீர்கள் என நினைக்கின்றேன்.

அடுத்ததாக, உள்வீட்டுப்பிரச்சனைகளையும், சமூகநடத்தைகளையும் ஒப்பிட்டு காரண, காரியங்கள் கற்பித்தால் அதிலிருந்து ஒருவருமே தப்பமுடியாது. இங்கு யோக்கியவான்கள், இராமன் என்று எவரும் கிடையாது. தனது உடம்பின் அழுக்கை கழுவித்துடைத்தபின்னரே சமூக விடயங்களினுள் கால்பதிக்கலாம் என்றால் பல்வேறு சமூக பொறுப்புக்களில் உள்ள 95%ஆனோரும் தமது பதவிகளை இராஜினாமா செய்யவேண்டியதுதான். அப்படிப்பார்த்தால் உலகில் இதுவரை காலமும் நடைபெற்ற புரட்சிகளும் சாத்தியமில்லை.

இங்கு நான் தியாகு என்பவருக்கு வக்காலத்து வாங்கவில்லை, ஆனால் தர்க்கரீதியாகவும், யதார்த்தரீதியாகவும் உங்கள் பதிவு தவறானதாகத்தெரிகின்றது. கவிஞர் தாமரை அவர்களின் மரியாதைக்குத்தான் உங்கள் இந்தப்பதிவு இழுக்கு.

கரும்பு தாமரை தியாகு விடயம் ஒரு ஆறு மாத காலமாக  நடந்து வருகின்றது. தாமரை  தியாகுவை மீண்டும் தன்னோடு சேர்த்து வைக்கும்படி தனது நட்பு வட்டதிடம் வேண்டுகோளை  வைத்து பலர் தியாகுவோடு கதைத்தும் பார்த்து விட்டார்கள்.பிரச்சனை ஆரம்பத்திலேயே என்னிடம் தெரிவித்தும் இருந்தார். ஆனால் இதுவரை நான் இந்த விடயத்தை பொது வெளியில் எங்கும் எழுதியது கிடையாது காரணம் அது அவர்களது தனிப்பட்ட விடயம் என்பதோடு  அவர்கள் விடயத்தில் தலையிடவும் இல்லை. அதே நேரம் நீங்கள் சொன்னது போல யோக்கியன் யாரும் கிடையாது நான் உட்பட. ஆனால் அண்மையில் தியாகுவின் விடயங்கள்  ஊடகர்களின் காதுகளிற்கு போய் அவர்கள் தியாகுவை தொடர்பு  கொண்டு கதைத்ததும்தான்  விடயம் வெளியே வராமல் இருக்க அல்லது வெளிவந்தாலும் உடனடியாக அனைவரது கவனத்தையும் திசை திருப்ப உண்ணா விரதம் என அறிவித்தார்.

எனதே தனது சொந்த நலன்களிற்காக மட்டுமே  வாறவன் போறவன் எல்லாம் ஈழத் தமிழன் தலையில்  மிளகாய் அரைத்துவிட்டு போக  பார்த்துக் கொண்டு இருக்க முடியாது அதே நேரம் இலட்சக் கணக்கில்  வன்னியில் மக்கள் கொல்லப் படும்போது  இந்திய அரசு தலையிட்டு யுத்தத்தை நிறுத்துபடி  கோரிக்கை வைத்து உண்ணா விரதத்தினை இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தாலும் யுத்தம் நிறுத்தப் பட்டிருக்காது. அதே போல இப்பொழுது  பொது நலவாய மகா நாட்டை புறக்கணிக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்தாலும் இந்திய  அரசு புறக்கணிக்கப் போவதில்லை அப்படிச் செய்தால்  இந்திய அரசின் நலன்கள் தான் பாதிக்கப் படும். இந்த மகா நாட்டில் கலந்து கொள்ளும் நாடுகள்  இலங்கையரசிற்கு அழுதத்தினை கொடுத்து தமிழர் பிரச்சனைகளை  தீர்த்து வைக்கச் செய்யக் கூடிய நாடுகளோடு  தமிழர் அமைப்புக்கள்  தங்கள் அரசியலை செய்வது புத்திசாலித் தனமே தவிர புறக்கணிப்பதால் இலங்கை அரசிற்குத்தான் இலாபம். எனவே  இப்படி தொடர்ந்தும்  ஈழத் தமிழர்கள் விடயம் மற்றையவர்கள் தங்கள் தேவைக்காக நக்கிவிட்டுப்போகும்  ஊறுகாயாக இருக்கக் கூடாது என்பதற்காகவே விடயத்தை வெளியே கொண்டு வந்தேன்.

அதே நேரம் உண்மையாகவே  சுய நலமோ கட்சி நலனோ இன்றி ஈழத் தமிழரின் நலனின் அக்கறையோடு போராடுபவர்களை  பாராட்டி ஊக்கம் கொடுத்தே வந்திருக்கிறேன். இறுதியாக  ..இந்த புறக்கணிப்பு என்பதை  தமிழர்கள் எப்படி உண்மையாக  கடைப்பிடிக்கிறார்கள் என்றும் அதனால் இதுவரை கிடைத்த பலாபலன்களையும் பார்த்த சலிப்பும் இதனை எழுதத்துண்டியது. :)

Edited by sathiri

இங்கே உள்ள பத்திரிகையாளர் வட்டத்தில் புழங்குபவன் என்ற முறையில் கூறுகிறேன்.

சாத்திரி பதிவிட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.

தியாகு முழுக்க முழுக்க தன் சொந்த லாபங்களுக்காகவே தான் இதைச் செய்கிறார் என்பது அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் தெரியும். எனவேதான் ஊடகவியலாளர்கள் பெரும்பாலும் அந்தப் பக்கம் போகவில்லை. போக நேர்ந்தவர்களும் ‘என்ன செய்வது ? ஆபிசில் அனுப்பி விட்டார்கள்’ என்று நொந்து கொண்டேதான் போய் வருகிறார்கள்.

ஏதோ இதை வெற்றிகரமான போராட்டம் போல் தோற்றம் காட்டுவது அத்தனையும் பொய் என்று இங்குள்ளவர்களுக்குத் தெரியும். தியாகுவின் ‘தமிழ்த் தேசிய’ இயக்கத்தில் மொத்தம் 7 உறுப்பினர்கள் மட்டுமே !. மீதி 50 பேர்கள் சென்ற ஆண்டு இவர் ‘அசிங்கம்’ வெளிப்பட்ட போது வெளியேறி விட்டார்கள். தன் கட்சிக்கு ஆள் பிடிக்கவும் இழந்த தன் செல்வாக்கை மீட்கவும் பூஜ்யமாகிப் போன கஜானாவை நிரப்பவும்தான் இந்த நாடகம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் பத்திரிகையாளர் மத்தியில் இல்லை.

எல்லா ஈழப் போராட்டங்களிலும் பங்கெடுக்கும் கவிஞர் தாமரை ஏன் இந்த மேடையில் தலைகாட்டவில்லை என்பது எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி. கேள்வியிலேயே பதிலும் உள்ளதுதானே.

தற்போது அவர் அருகில் அமர்ந்து காட்சியளிக்கும் லதா என்பவர் முதல் மனைவி என்று சில பேரும் முன்னாள் மனைவி என்று சிலபேரும் சொல்கிறார்கள். கவிஞர் தாமரை முன்வந்து தெளிவு படுத்த வேண்டியதுதானே ?.   ஏன் மௌனமாக இருக்கிறார் ?.

உண்ணாவிரதம் யார் இருந்தால் என்ன , நோக்கம் சரியாக இருந்தால் ஆதரிக்க வேண்டியதுதானே என்று கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி - ஏன் நீங்கள் எல்லோரும் கருணாநிதியுடைய உண்ணாவிரதத்தைப் பற்றி இப்போது வரை கேலிச்சித்திரம் போட்டுக் கொண்டேயிருக்கிறீர்கள் ?.  ஏன் அவருடைய டெசோ வை ஆதரிக்க மறுக்கிறீர்கள் ? .  அவர் இருந்தால் அது நாடகம், தியாகு இருந்தால் அது தியாகமா ???

தியாகு, தாமரை இரண்டு பேரும் விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டியவர்களே!.   பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், மக்கள் இத்தகைய ‘அசிங்க’மான கேள்விகளை எழுப்பும்போது அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.  ‘முடியாது’ என்று மறுத்தால் இருவரும் அரசியலை விட்டு வெளியேற வேண்டும்.  குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் ஈழத்தமிழனை சித்திரவதை செய்யக் கூடாது. ஈழ அரசியலை தங்கள் சொந்த லாபத்துக்குப் பயன் படுத்தும் எவராக இருந்தாலும் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்.

இன்னும் ஒரு செய்தியும் பத்திரிகையாளர்களை எட்டி விட்டது. எதிர்பார்த்த எழுச்சி கிடைக்காததால் , இன்னும் சில தினங்களையாவது ‘தெம்பாக’ ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தியாகு,  நல்ல ‘டயட்’ டில் தான் இருக்கிறார்.  குளுகோஸ் கலந்த தண்ணீர்தான் குடிக்கிறார்.  பகலில் நான்கைந்து  இளநீர், இரவு கோழி சூப் , நேராநேரத்திற்கு எனர்ஜி மாத்திரைகள் என்று தூள் கிளப்புகிறார்.

எனவே அவர் நிலை மோசமடைகிறது என்று யாரும் பதற வேண்டாம். எல்லோரும் சாப்பிட்டு நிம்மதியாகத் தூங்குங்கள்.

ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் வைக்கிறோம்.... தயவு செய்து , மாமனிதன் திலீபன் பெயரை மட்டும் ஒரு இடத்தில் கூட உச்சரிக்க வேண்டாம். அந்த கட் அவுட் டையும் நீக்கி விடுங்கள் ...

குருதி வடிக்கும் அப்பாவித் தமிழன்.

எனதே தனது சொந்த நலன்களிற்காக மட்டுமே  வாறவன் போறவன் எல்லாம் ஈழத் தமிழன் தலையில்  மிளகாய் அரைத்துவிட்டு போக  பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

உண்ணாவிர்தம் இருப்பது எந்த வகையில் மிளகாய் அரைப்பதாக விளங்கிக்கொள்ள முடிகிறது. உண்ணாவிரதம் இருந்தாரென்பதாலா?

அவர் தனது வீட்டு பிரசசனைக்கு உண்ணாவிரதம் இருந்தார் என்று வைத்துகொள்ளுவோம். இந்த இரண்டு விடையங்களில் ஏதாவது நடந்துவிட்டது என்றும் வைத்துக்கொள்ளுவோம். அதில் நீங்கள் கூறவரும் விளக்கம் என்னவாக இருக்கும். 

1). இறுதியில் இந்திய அரசாங்கம் பொதுநலவாய தலைவர்கள் மகாநாட்டால் விலக்கிக்கொண்டது. ஆனால் தியாகு உயிர் தப்பிவிட்டார்.

2). இந்த உண்ணவிரதம் காரணமாக தியாகு இறந்துவிட்டார்.

இந்தியா மகாநாட்டுக்குள் போனால் பொல்லாத நாராயணணாகத்தான் நடந்துகொள்ளும் என்பதில் கொஞ்சமும் சந்தேகப்படக்கூடாது. அப்படி இல்லையாயின் கடந்த ஐ.நா. கூட்டத்தில் தன்னும் இந்தியா "இலங்கை போட்ட நெடுந்தெரு அபிவிருத்திகளை நவிப்பிள்ளை தனது அறிக்கையில் உள்ளடக்கவில்லை" என்று கூறியிருக்காது. 

அதே நேரம் இலட்சக் கணக்கில்  வன்னியில் மக்கள் கொல்லப் படும்போது  இந்திய அரசு தலையிட்டு யுத்தத்தை நிறுத்துபடி  கோரிக்கை வைத்து உண்ணா விரதத்தினை இருந்திருக்கலாம்.

அந்த நேரம் கருணாநிதி தமிழக உறவுகளின் போராடங்களுக்கு அடக்குமுறையை தளர்த்தி இடம் கொடுத்திருந்தால் முத்துக்குமாரு தீக்குளிக்காமல் உண்ணவிரதம் இருந்திருப்பரே என்றும் நீங்கள எழுதியிருக்கலாம்தானே. அதை ஏன் நீங்கள் கூறவில்லை?

Edited by மல்லையூரான்

உண்ணாவிரதம் யார் இருந்தால் என்ன , நோக்கம் சரியாக இருந்தால் ஆதரிக்க வேண்டியதுதானே என்று கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி - ஏன் நீங்கள் எல்லோரும் கருணாநிதியுடைய உண்ணாவிரதத்தைப் பற்றி இப்போது வரை கேலிச்சித்திரம் போட்டுக் கொண்டேயிருக்கிறீர்கள் ?.  ஏன் அவருடைய டெசோ வை ஆதரிக்க மறுக்கிறீர்கள் ? .  அவர் இருந்தால் அது நாடகம், தியாகு இருந்தால் அது தியாகமா ???

குருதி வடிக்கும் அப்பாவித் தமிழன்.

இது குருதி வடிக்கும் அப்பவித்தமிழனின் முதல் எழுத்து. திரி திறந்த பின்னர் அங்கத்துவம் பெற்று வந்து எழுதும் குருதி வடிக்கும் அப்பவித்தமிழன் தியாகு உண்ணவிரம் இருப்பது குடும்ப்ப பிரச்சனைக்காக இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்புகிறார். இவர் யார், ஏன் இந்த திரியில் எழுத வந்தார் என்பதும் சந்தேகம் அதையும் தீர்த்து வைப்பாரா?

நீங்கள் தியாகு மட்டும்தான் சுயநலமி கருணாநிதி இல்லை என்கிறீர்களா? அல்லது கருணாநிதி தமிழருக்கு எதிராக செய்தது உண்ணாவிரத நாடகம் மட்டும்தான் என்கிறீர்களா. எல்லாவகைகளிலும் கருணாநிதி புலிகளுக்கும், ஈழத்தமிழருக்கும் உதவினார் என்பதாலா கருணாநிதியின் உண்ணாவிரத்தை மட்டும் பிரித்து எடுத்து தியாகுவின் உண்ணாவிரத்துடன் ஒப்பிடுகிறீர்கள்? அல்லது கருணாநிதியும் உண்ணாவிரதம் நான்கு மணிநேரம்தான் இருந்தார்; தியாகுவும் நான்கு மணிநேரம்தான் இருந்தார் என்கிறீர்களா. விமல் வீரவன்சாவையும் கருணாநிதியையும்விட எந்த ஆளும் கட்சி கோமாளிகள் தம் கட்சியின் அடக்கு முறைகளை தம் கையால் நடை முறைப்படுத்திக்கொண்டு அந்த அடக்கு முறைகளையே எதிர்ப்பத்தாக நாடகமாடி உண்ணாவிரதம் இருப்பார்கள்?

மிகக் குறைந்தளவாக தார்பரியம் உள்ள இன்னுமொரு கேள்வி,  கருணாநிதியின் அடக்கு முறைக்காலத்தில் கருணாநிதி அடக்குமுறைக்கெதிராக இருந்த உண்ணாவிரத நாடகத்தை ஈழத்தமிழர் ஏற்கவில்லை என்பதற்காகவா இன்று ஜெயலலிதா காலத்தில் தியாகு இருக்கும் உண்ணவிரத்தையும் ஏற்க கூடாது என்கிறீர்கள். நீங்கள் ஊடகவியலாராக இருந்த காலத்தில் எதற்காவது சிறைக்குப்போய் கஸ்ட்டப்பட நேர்ந்ததா? அப்படியாயின் எப்படி வெளியே வந்தீர்கள். தியாகுவை வெளியேவிட்டது மாத்ரியே கருணாநிதிதானா உங்களையும் வெளியேற  உதவினார்?

உண்ணா நோன்பிருந்த தியாகு கைது
திங்கட்கிழமை, அக்டோபர் 7, 2013
24c10bc4ef61f52b0383c3ac9725960e.jpg
பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தோழர் தியாகு கைது செய்யப்பட்ள்ளார். அவர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமைக்கு நாம் தமிழர் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.

தோழர் தியாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், சிறையில் அடைக்கப்பட்டாலும் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கையில், தோழர் தியாகுவின் கோரிக்கை ஒரு தனி மனிதனின் கோரிக்கையோ ஒரு அமைப்பின் கோரிக்கையோ அல்ல அது ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை.

ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் தொப்புள்கொடி உறவுகளை இழந்து தவிக்கும், இலங்கை உறவுகள் அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு நிற்கிறது.  இதுவே ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கை.

நியாயமிக்க இக்கோரிக்கையை மதிக்காது இந்திய காங்கிரஸ் அரசாங்கமும், கட்சிகளும் செயல்பட்டால் அதற்கான எதிர்வினையை எம்மக்கள் தாங்கள் செலுத்தும் வாக்குகள் மூலமாக வரும் தேர்தலில் காட்டுவார்கள் என்பதையும் அதற்கான பரப்புரையில் முழுமூச்சாக நாம் தமிழர் கட்சி செயல் படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ள

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் இந்த தியாகுவின் லீலைகளை தியாகு உண்ணா விரதம் ஆரம்பிக்க முன்பு யாரும் வெளியிடவில்லை?
அதென்ன இப்ப மட்டும் எதோ பெண்கள் நலன்களுக்காக குரல் கொடுக்கவே பிறந்தது போலே 24 மணிநேர பரப்புரையில் இறங்கி இருக்கிறீர்கள்??
 
இப்போ தியாகுவின் சொந்த வாழ்வில் தியாகு சுத்தமானவர் என்று யாரவது சொல்கிறார்களா?
அதை ஏன் இங்கே வந்து பரப்புறீங்கள்?
 
சில பெண்களுடைய வாழ்க்கை பாதிப்படைவது கண்டும் ஆதாரங்கள் இருந்தும். ஒன்றும் செய்யாது இருந்துவிட்டு. இப்போ ஒரு கொடியவன் என்றாலும் எதோ ஒரு நல்ல நோக்கில் தனது உயிரை விடுகிறேன் என்கிறான். அவன் செய்த பாவங்களுக்கு அது பாவமனிப்பாக கூட இருக்கலாம். 
எதோ எதோ ஒரு வகையில் அது ஒரு இனத்திற்கே ஒரு துடுப்பாக மாறலாம்
இந்த நேரம் பார்த்து....
 
இனத்திற்கும் எதுவும் செய்யாது..........
சில தனிபட்ட மனித வாழ்விற்கும் ஏதும் செய்யாது............
இருந்து விட்டு சுயவிளம்பரம் மட்டும் தக்க தருணம் பார்த்து செய்யும் உங்களுடைய அயோக்கிய தனங்களிலும்  விட தியாகு மேலானவன்!
 
பி.கு 
மக்களின் ஆதரவை தனது  சொந்த வாழ்விற்கு பாவிப்பதை ஒருவனால் ஏற்க முடியாது. இப்போ அவர் சாகும்வரை தான்தானே உனாவிரதம் இருக்கிறேன் என்கிறார். என்னையும் உங்களையும் இருக்க சொல்லவில்லையே ?
அவர் வங்கி கணக்கை போட்டால் ஏன் நீங்கள் காசை போடுகிறீர்கள்?
இந்திய கொடிய அரசை தட்டிகேட்க  உங்களால் என்னால் முடியாத போது. யாரோ ஒருவனால் முடிகிறது  என்று ஏன் உங்களால் சிந்திக்க முடியவில்லை ???
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டபோது இந்திய அரசு தலையிட்டு யுத்தத்தினை நிறுத்த சொல்லி கருணாநிதி அவர்கள் மன்மோகன் சிங்கிட்கு கடிதம் தந்தி என்று அனுப்பியபோதும் பதில் அனுப்பாத மன்மோகன் தியகுவிட்காக பதை பதைத்து பதில் கடிதம் எழுதியிருக்கிறார் .அதே நேரம் தமிழர்களின் நலனை முன் நிறுத்தியே கொமன் வெல்த் மகாநாடு பற்றி சிந்திக்கப்படும் என்றும் சொல்லியுள்ளார் .

இவர் எறிந்த கல்லில் விழுந்த முதலாவது மாங்காய்.....இந்தியா மகா நாட்டில் கலந்து கொண்டாலும் இல்லாது விட்டாலும் அது ஈழத்தமிழர்களின் நலன் களிட்காகவே என்றொரு மாயையை உருவாகியிருக்கிறார்

மாங்காய் இரண்டு ..உண்ணாவிரதம் இருந்தவர் தியாகு .மாநில முதலமைச்சராக இருப்பவர் ஜெயலலிதா அவர்கள்.ஆனால் உண்ணாவிரதத்தினை நிறுத்த சொல்லி கடிதம் எழுதியதோ கருணாநிதிக்கு .எனவே அடுத்த தேர்தலிலும் காங்கிரசுக்கு கருணாநிதிதான் நண்பேண்டா

மாங்காய் மூன்று ...இரண்டாவது தடவையாகவும் தியாகுவின் உயிரை தாயுள்ளத்தோடு தமிழினத் தலைவர் கருணாநிதி காப்பாற்றியுள்ளார் .

மாங்காய் நான்கு.....தனது தனிப்பட்ட பிரச்சனைகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகாமல் அவை திசை திருப்பப்பட்டு தன்னை தியாகியாக்கிய திருப்தியோடு வெற்றி அல்லது வீர மரணம் என்கிற கோசத்தோடு உண்ணாவிரதம் இருந்த தியாகு அவை இரண்டும் இல்லாமலேயே உண்ணாவிரதத்தை கை விட்டுள்ளார் .

எனவே ஈழத் தமிழர்களே இந்த நான்கு மாங்காய்களையும் பொறுக்கி ஊறுகாய் போட்டு வையுங்கள் இனியும் ஈழத் தமிழர்களிக்காக சாகாத ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வருவார்கள் அவர்கள் தொட்டு நக்கி கொள்ள உதவும் .

இதுக்கு மேலயும் அரசியல் புரியாமல் நம்ம ஆழுகள் இதுகளை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு பக்கம் பக்கமா எழுதிகொண்டே தான் இருப்பாங்கள்

மாணவர்கள் மற்றும் கட்சியினர் போராட்டத்தை தொடர்வதாக வாக்களித்ததால் தான் தியாகு ஐயா உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். அதையும் மன்மோகன் சிங்கின் கடிதத்தையும் சேர்த்து கதைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. மன்மோகன் சிங்கின் கடிதம் கிடைக்காவிட்டாலும் கூட இன்று போராட்டத்தை நிறுத்தியிருப்பார்.

எம்மால் செய்ய முடியாததை அவர் இவ்வளவு நாளாக செய்திருக்கிறார். அவர் மூலம் இப்பொழுது கட்சிகள் மக்களை திரட்டி போராட முன்வந்திருக்கிறார்கள். மக்களும் திரண்டிருக்கிறார்கள். அதுவே வெற்றி தான்.

சும்மா எழுதுவதற்கு ஒன்றும் கிடைக்காமல் இதை எழுதாமல் பிரயோசனமாக வேறு ஏதாவது எழுதுங்கள். <_<

அவர் தனது வீட்டு பிரசசனைக்கு உண்ணாவிரதம் இருந்தார் என்று வைத்துகொள்ளுவோம். இந்த இரண்டு விடையங்களில் ஏதாவது நடந்துவிட்டது என்றும் வைத்துக்கொள்ளுவோம். அதில் நீங்கள் கூறவரும் விளக்கம் என்னவாக இருக்கும். 

1). இறுதியில் இந்திய அரசாங்கம் பொதுநலவாய தலைவர்கள் மகாநாட்டால் விலக்கிக்கொண்டது. ஆனால் தியாகு உயிர் தப்பிவிட்டார்.

இது அன்றைய கேள்வி. சாத்திரியருக்கு அன்று இந்த கேள்விக்கு பதில் இல்லை.

தோழர் தியாகு நினைத்ததை சாத்தித்துவிட்டார். நான்கு மாங்காயும் + மன்மோகன் சிங் கின் கடிதமும். அது உண்ணாவிரதத்தால் வந்த ஐந்தாவது மாங்காய். அதையாராவது கருணாநிதிக்கு எழுதியதாக வாதாடலாம். ஆனல் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த போது யாரும் மத்திய அரசிலிருந்து கடிதம் எழுதவில்லை. இது தோழர் தியாகுவிற்கு வந்த கடிதம். வழமையான யாழ்ப்பாணத்து, பந்த, காவடிக்குணம், தபால் ஜெயலிதாவுக்கு போயிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் தியாகுதான் உண்ணாவிரதம் இருந்தவர். அதை கருணாநிதிதான் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தவர். எனவே தியாகுவிற்கு திமுக மூலம் கடித செய்தியை கொண்டுவந்திருக்கு. 

இன்றைய கேள்வி வேறு. யார் இவர்கள். ஏதற்காக இங்கே கூடியிருக்கிறார்கள்? யார் அழைத்து இங்கே வந்திருக்கிறார்கள்? அதை பற்றி எழுத முடியுமா? 

996944_738071389543656_586177835_n.jpg

1393488_738070232877105_887120334_n.jpg

தமிழ் நாட்டு தமிழர் மாகாண தேர்தலில் படிப்பித்த பாடம் மத்திய தேர்தல் வரைக்கும் சென்றிருக்கிறது. அந்த பாடம் காங்கிரசுக்குக்கு மட்டும் அல்ல. பா.ஜ.க வும் கூட தமிழரின் எதிரியான சு.சா வை அடைக்கி வாசிக்கும்படிதான் கூறியிருக்கிறது.

இலங்கையில் கல்வியில், வருமானத்தில் முன்னேறிய மாகாணமாக இருந்த வடக்கை ஈழத்தமிழர் தமது அரசியலால் சிதைத்து இன்று இலங்கையின் வக்கில்லா மாகாணம் ஆக்கிவைத்திருக்கிறார்கள்.  ஜி.ஜி.யின் வீரப்பிரதாபங்களுக்கு பிறகு வேலைகள் சொத்துப்பத்து, கலாச்சாரம் எல்லாவற்றையும் இழந்துவிட்டர்கள். ஆனால் இந்தியாவின் மிக விரைவாக வளரும் தமிழகத்தை நகைக்கிறாகள். 

ஊறுகாய் போட்டால் மாங்காய் பழுதகாமல் இருக்கும். ஆனால் இனியும் ஏன் ஏர்கனவே பாதுக்கக்க முடுடியாமல் நாறின மீன் குழம்பை ஆசைக்கு மணந்து பார்ப்பான்? தூக்கி தூரமாக எறிய வேண்டியதுதானே.

கடிதம் நேற்றே எழுதப்பட்டுவிட்டது. தியாகு இன்றுதான் உண்ணாவிரதத்தை முடித்தார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.