Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்ள வட மாகாண சபை ஆவண செய்யவேண்டும் - சந்திரநேரு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையான ஆக்கள் இருக்கினம் தல, முதலிட என்னட்ட காசுதான் இல்லை.

நான் சொன்னது அரசு உங்கள் வியாபாரத்தை நேஷனலைஸ் பண்ணீட்டா என்ன செயுறது என்று.

  • Replies 132
  • Views 15k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

 நீங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசிக்க வேண்டும். விவாதமொன்றுக்கு அதைத்தான் வைத்து ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் நாங்கள் சொல்வதாக, காட்டுவத்தாக விவாதம் ஒன்றை ஆரம்பிப்பது பொருள் இல்லாதது.

 

இதை யாரும் எந்த இடத்திலும் சொல்லவரவில்லை. தப்பபிராயத்துடன் கூட்டமைப்பு மீது குற்றம் காண்கிறீர்கள்.   கூட்டமைப்பு வடமாகாணத்துக்கு பொறுப்பாக இருக்க போவதால் அதன் பொருளாதாரததை கையில் எடுப்பதால் மாகாண ஆட்சிக்கு மேலால் உரிமை கேட்டுவிட்டால் அவரகள் யாரை எதோ செய்ய போவதாக ஏன் பொருள் கொள்ள வேண்டும். வடமாகாண பொருளாதாரம், அகதிகள் நிலை என்பனவற்றுக்கு வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து முடிய கூட்டமைப்பு பொறுப்பு. இதற்கும் உரிமையை தேடுவதற்கும் தொடர்புகள், சிக்கல்கள் வரும் போது பேசிக்கலாம். இப்போ புலம் பெயர்மக்கள் முன்னால் வந்து வடக்கில் முதலிட ஆயத்தமாக வேண்டும்..

 

மிச்சம் எல்லாம் யாரும் கேட்காதவை.

 

 

தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன சொன்னவை..???! மாகாண சபைகள் ஆட்சி தான் தீர்வு..! புலம்பெயர் மக்களிடம் முதலீடு வாங்கி மாகாண சபையை வளப்படுத்துவம்.. ராஜபக்சவோடு கைகுலுக்கி இணக்க அரசியல் செய்வம். இந்தியாவை துணைக்கு பக்கத்தில வைச்சுக்குவம் என்றா..???!

 

இல்லைத் தானே.

 

மேலும்.. முதலீடு என்பதை இப்போ சிறுமுதலீட்டுக்குள்ள கொண்டு வந்திட்டீங்க நல்ல விசயம். பெரிய முதலீடுகள் உந்த வெட்டி மாகாண சபையில் சாத்தியமில்லை.. பாதுகாப்பில்லை என்பதை உணர்கிறீர்கள்.

 

சிறு முதலீடுகளை.. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மேம்பாட்டுத்திட்டங்களை.. புலம்பெயர் மக்கள் 2009 மே க்குப் பின்னர் கொண்டு போக வெளிக்கிட்டிட்டார்கள். மாகாண சபையை பார்த்துக் கொண்டிருக்கேல்ல..! போருக்கு முன்னரும் பல்வேறு சிறு முதலீடுகளை மக்கள் செய்திருக்கிறார்கள்..! போரைச் சாட்டி சும்மா உட்காந்திருக்கல்ல..!

 

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் குறுகிய கால தேவைகளை பூர்த்தி செய்ததில் இருந்து இன்று நீண்ட கால தேவைகளுக்கான உதவிகள் வரை புலம்பெயர் மக்கள் செய்து கிட்டுத்தான் இருக்கிறார்கள். மாகாண சபை வரும்.. செய்வம் என்று அவர்கள் காத்துக் கொண்டிருக்கவில்லை. பல்வேறு வழிகளிலும் அதனை அவர்கள் கொண்டு சென்று தான் இருக்கிறார்கள். அது கூட்டமைப்புக்கும் தெரியும் சந்திரநேருவுக்கும்  தெரியும்.

 

ஆக.. இங்கு அவர் மொழியும் முதலீடு என்பது என்ன...???! என்ற இன்னொரு கேள்வி எழுகிறது. நிச்சயம் அது சிறுமுதலீடாக இருக்காது. அப்படி இல்லாத பட்சத்தில்.. அது என்ன.. என்பதை நீங்கள் தான் விளக்கனும். அத்தகைய முதலீட்டைக் கொண்டு செல்ல.. புலம்பெயர் மக்களுக்கு என்ன உத்தரவாதத்தை இந்த மாகாண் சபை வழங்க முடியும்..??! அதற்கான சட்ட வலுக்கள் எவை..???! அந்த முதலீடுகள் சிங்களம் ஏப்பம் விடாது.. ஒட்டுக்குழுக்கள் கொள்ளை அடிக்காது.. இந்தியா தன்பக்கம் இழுக்காது.. சீனா தனக்கு சார்ப்பாக்காது.. என்பதற்கு என்ன உத்தரவாதம்..???! :icon_idea::rolleyes:

 

Edited by nedukkalapoovan

யார் முதலிடீனமோ தெரியாது.. எனக்குத் தெரிந்து 2009 க்கு முதல் புலிகளுக்கு இங்கே காசு சேர்த்த ஒருவர் யாழில shopping complex கட்ட வெளிக்கிட் டூட்டார். இன்னும் முடியேலை.. முடியும்போது என்னென்ன முடியுமோ என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறன். :o

  • கருத்துக்கள உறவுகள்

யார் முதலிடீனமோ தெரியாது.. எனக்குத் தெரிந்து 2009 க்கு முதல் புலிகளுக்கு இங்கே காசு சேர்த்த ஒருவர் யாழில shopping complex கட்ட வெளிக்கிட் டூட்டார். இன்னும் முடியேலை.. முடியும்போது என்னென்ன முடியுமோ என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறன். :o

 

இதுக்கெல்லாம் அழுது கொண்டிருந்தால்.. சனம்.. கேட்ட உடன.. தங்கப்பவுனா அள்ளிக்கொடுக்க புலிகள் அதனை பந்திரமா.. கடைசியில.. மகிந்த குடும்பத்திட்ட.. அனுபவங்க ராசாக்கள் என்று கிலோ கணக்கில.. பத்திரமா கொடுத்ததை என்னென்று சொல்லுறது..??! கப்பலை வாங்கிவிட்டு.. அதில.. கே பி உயிர் வாழ வைச்சதை என்னென்று சொல்லுறது.

 

கொடுத்த தங்கத்தில.. கடைசியில... கடலுக்க கொட்டியாவது விட்டிருக்கலாம்... அதில ஆமிக்காரன் அமுக்கினதும் வேற..! ஒட்டுக்குழுக்கள் புடுங்கிக் கொண்டதும் வேற..! உதெல்லாம் எதிர்பார்க்காமல் வந்த அதிஷ்டம். என்ன செய்யுறது நீங்களும் அன்று களத்தில இறங்கி காசு சேர்ந்திருந்தா.. இப்ப பெரிய கோடீஸ்வரனாகி இருக்கலாம். அதை விட்டிட்டு இப்ப கவலைப்பட்டு என்ன பிரயோசனம்..! :):icon_idea:

இது நல்ல ஐடியா. யாழ் களத்திலோ அல்லது ஒரு blog மூலமாகவோ சிறி லிங்கம் how to start a business in Northern Sri Lanka என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு பதிவு போட்ட்டால் பலருக்கு வசதியாய் இருக்கும்.

புலம் பெயர்ந்தவையை நான் திட்டுறது உண்மைதான், ஆனால் நடக்க கூடிய விசயங்களை செய்யும் சொல்லும் போது வரெவேற்க்கத்தானே வேணும்.

நெடுக்கு கிண்டல் பண்றமாரி சிறு வியாபாரங்கள் ஒன்ரும் இன்ன விசயங்கள் இல்லை. அவை ஒவ்வொரு வீட்டில் அடுப்பெரிய உதவும் சக்தி உடயன.

 

வடக்கில் முதலீடு செய்யவிரும்புபவர்களுக்கான இணையமும் அரச கடமைப்பில் எங்கே அனுமதிகள் பெறவேண்டும் என்ற விபரங்களுடன் இனோரு மாத்த்தில் வரவிருக்கின்றது. இப்போ அதட்க்கான வேலைகள் தட்ட்ப்ோது பொறுப்பற்றுள்ள மகாணசபையில் இடம்பெறுகின்றன. அதோடு one-stop-shop என்றின்ற அடிப்படையில் முதலீடு செய்யவிரும்புபவர்களுக்கு உதவிகள் வழங்கலாம் என்பது பற்றியும் எமது மக்கள் புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் இது பற்றி தெரியபபடுத்த்தும் (out reach programs) தொடர்பான திட்டாங்கள் வரையும் நடைபெறுகின்றது. இந்த திரியில் இன்னும் சில வாரங்களில் இணைய முகவரியை கேட்டு தெரியப்படுத்த்துவேன். இணைத்திருங்கள். தொடர்ந்து உங்கள் எண்ணங்களை பரிமாறுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் புதல்வன் மாகாணசபையை பற்றி நெடுக்கு தொடுக்கும் தொடர் நெகடிவ் தாக்குதலால், நான் கூட கொஞ்சம் சோர்வாய்தான் இருந்தனான். இப்ப கொஞ்சம் நம்பிக்கை வருது.

தகவல்களுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைவான் அங்க வரும் அங்க ஒண்டும் செய்ய ஏலாது எண்டால்.... வன்னி மக்களைச் சாட்டி புலத்தில் பணம் வாங்குபவர்கள் என்ன சொல்றாங்க???

மக்களே துணிந்து நில்லுங்கள்... தொடர்ந்து செல்லுங்கள் ... முதலீட்டை சும்மா உண்டியலில் அனுப்பி முட்டாள் முறையில் பணப்பரிமாற்றம் செய்யாமல்.. முறையாக நீங்கள் வாழும் நாட்டின் வங்கியூடாக அனுப்பி,, அதை இலங்கை மத்திய வங்கியூடாக எடுத்து , இலங்கை கம்பனிச் சட்டதிட்டத்தின் கீழ் பதிந்து , உங்கள் நாட்டின் கொழும்பு தூதரகத்துடன் தொடர்பில் இருந்து .. வியாபாரத்தில் வெற்றி பெறுங்கள்...

சண்டை முடிந்ததும் எனக்கு தெரிந்த ஒருவர் யாழில் சீமெந்து கல் ஆலையை நிறுவினார் ,...இன்று அவர் ஒரு கோடிஸ்வரர்.. இன்னுமொருவர் பெயிண் கடை வைத்தார் அவர் இலட்சாதிபதி.. ஆனால் முட்டாள்களின் நடாத்தும் ஊடகங்களின் பொய் செய்தியை கேட்ட நாங்கள் இன்றும் வெள்ளைக்காரரிடம் அடிமையாக இங்கே வேலை செய்கின்றோம்...

குறுப்பு : உங்களுக்கு விரிப்பமென்றால் வழிகாட்ட நான் தயார் , ஏனேனில் நான் வெற்றிகரமாக எனது நிறுவனத்தை அங்கே நடாத்தி வரிகின்றேன் , தினமும் மின்னஞ்சல் மூலமாக கணக்கு வழக்கு எனக்கு வந்து சேர்ந்து விடும் , நான் 10 இலட்சம் சிறிய முதலீட்டில் ச்தொடங்கினேன் , இப்போது மாதம் மாதம் 50,000 - 60,000 இலாபம் கிடைக்கின்றது ..இது இன்னம் அதிகரிக்கும்... /// இதைச் சொல்வதால் யாரும் என்னை சிங்கள உளவாளி , துரோகி எது வேணும் எண்டாலும் சொல்லுங்கோ.. இன்று எனது நிறுவனத்தில் 5 பேர் வேலை செய்கின்றனர் அதில் 3 பேர் மாவீரர் குடும்ப உறுப்பினர்கள்..

அண்ணே அங்க யாழ்ப்பாணத்தில் இருக்கும் உயர்தரம் முடித்த இல்லை பல்கலை முடித்த நல்ல பிசினஸ் பிளானோட (குறைந்த அளவு முதலீட்டுடன்) இருப்பவர்களை யாழின் ஊடாக நீங்க அறிய தரலாமே?

தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன சொன்னவை..???! மாகாண சபைகள் ஆட்சி தான் தீர்வு..! புலம்பெயர் மக்களிடம் முதலீடு வாங்கி மாகாண சபையை வளப்படுத்துவம்.. ராஜபக்சவோடு கைகுலுக்கி இணக்க அரசியல் செய்வம். இந்தியாவை துணைக்கு பக்கத்தில வைச்சுக்குவம் என்றா..???

 

உங்களுக்கு வசிக்க பஞ்சியா? நீங்கள்அதை பற்றி கேட்கும்  கேள்விகளுக்கு அதில் பதில் இருக்க இல்லையா என்று படித்து பார்க்க முடியவில்லையா? 

 

தேர்தல் விஞ்ஞாபனத்தில்  என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்களின் கேள்விகளுக்கு அதில் பதில் இருக்க வேண்டுமா? அது எத்தைய ஆவணம் என்றைதை புரிந்து கொள்ள் முடிகிறதா?

 
ஒருதடவை அதை படித்து பார்த்துவிட்டு உங்கள் கேள்விகளுக்கு அதில் பதில் இருக்க இல்லையா என்றும் எழுத முடியுமா?

 

தேர்தல் விஞ்ஞாபனத்தை நான் சொல்லியிருந்தது ஏன் என்பது உங்களுக்கு புரியவில்லையா? அதாவது நானங்கள் எதையோ விதைப்பதாக சொன்னீர்கள்.  மக்கள் நாங்கள் விதைப்பது ஒன்றையும் நம்பி வாக்கு போடவில்லை என்றதை காட்டவே அது எழுதியிருந்தேன். புலத்தில் பலரை விட நன்ற்க்க அவர்கள் அதை விளங்கித்தான் வாக்களிதும் இருக்கிறார்கள். அதை புரிந்து இவ்வளவு கஸ்டமா? இரண்டு மூண்று முறை படித்து பார்க்க முடியவில்லையா?. மாகாணத்தை பற்றி யாரும் விதைப்பதை மக்கள் எதிர் பார்த்திருக்கவில்லை. அதலால் நீங்கள் விதைப்பதும் அவர்களுக்கு தேவை இல்லை. நாங்கள் விதைப்பதும் அவர்களுக்கு தேவையில்லை. விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பு சொன்னவைகளைதான் நிறை வேற்றும். இவ்வளவு நேரமும் அங்கே போய்முதலிட பாதுகாப்பு இல்லை என்று விட்டு இப்போ அங்கே எல்லோரும் முதலிட்டுவிட்டார்கள் என்றும் எழுதுகிறீர்கள்.தேவையில்லாமல் புலத்து மக்கள் அங்கே நேரத்துக்கு போய் பிடிக்க வேண்டிய இடத்தை குழப்பமாக கதைத்து கெடுக்காதீர்கள். அது சிங்களவர் மற்ற்வர்கள் கைகளுக்குதான் போய் முடியும். அவர்கள் தான் அங்கு இப்போது வியாபரங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை.

டில்கோ ஹோட்டல்,திரு.திலகராசா  என்ற புலம் பெயர் தமிழரின் முயற்ச்சி.இதற்கு 500 மில்லியன் முதலிடபட்டு,இன்று வெற்றிகரமாக நடைபெறுகிறது.ஏன் இவர் மாதிரி BOI ஊடாக முதலிடமுடியது ? 

டில்கோ ஹோட்டல்,திரு.திலகராசா  என்ற புலம் பெயர் தமிழரின் முயற்ச்சி.இதற்கு 500 மில்லியன் முதலிடபட்டு,இன்று வெற்றிகரமாக நடைபெறுகிறது.ஏன் இவர் மாதிரி BOI ஊடாக முதலிடமுடியது ? 

மெல்ல மெல்ல இனி புலம் பெயர் அமைப்புக்கள் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். பல கருத்துக்கள் இருக்கும். பல வித விளக்கம் இருக்கும். போர் இனி ஒரு முறை அல்ல என்பத்தால் எமது உரிமையும் மெல்ல மெல்ல வாதாடிப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  வெளிநாடுகளை நாம் தயார். நீங்களும் வாங்க முன்னேற்ற என்று கேடக வேண்டும்.

உதாரணமாக , நான் 09 வருடம் புலம்பெயர்ந்து இருந்து பின்பு இலங்கைக்கு அனுப்பியபின் என்னுடைய புலம்பெயர் நண்பருடன் இணைந்து Event & Wedding Management கம்பெனி  நடத்துகிறேன்.அநேகமான புலம் பெயர் தமிழர் எமை நாடிவருகினம்.எம்மிடம் வேலை செய்பவர்கள் யாழ்,வன்னி பிரதேசத்தவர்கள்.ஏதோ ஒருவகையல்,எமது மக்களுக்கு உதவிரமாதிரியும் அதேநேரம் எமக்கும் ஒரு வருமானம் கிடைக்குது.இது போன்ற தொழில்கள்,இருபக்க நன்மை தருபவை.நீங்கள் முதலீடு செய்ய,சட்டரீதியாக உதவி செய்ய வேண்டுமெண்டால் இங்கு நிறைய பேர் உதவ தயார்.

  • கருத்துக்கள உறவுகள்

டில்கோ ஹோட்டல்,திரு.திலகராசா என்ற புலம் பெயர் தமிழரின் முயற்ச்சி.இதற்கு 500 மில்லியன் முதலிடபட்டு,இன்று வெற்றிகரமாக நடைபெறுகிறது.ஏன் இவர் மாதிரி BOI ஊடாக முதலிடமுடியது ?

அண்ணே 10 லட்சம் 15 லட்சம் முதலீட பற்றி சொல்ல சொன்னால் 500 மில்லியன் லெவல் க்கு சொல்லுறீங்க....

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வசிக்க பஞ்சியா? நீங்கள்அதை பற்றி கேட்கும்  கேள்விகளுக்கு அதில் பதில் இருக்க இல்லையா என்று படித்து பார்க்க முடியவில்லையா? 

 

தேர்தல் விஞ்ஞாபனத்தில்  என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்களின் கேள்விகளுக்கு அதில் பதில் இருக்க வேண்டுமா? அது எத்தைய ஆவணம் என்றைதை புரிந்து கொள்ள் முடிகிறதா?

 
ஒருதடவை அதை படித்து பார்த்துவிட்டு உங்கள் கேள்விகளுக்கு அதில் பதில் இருக்க இல்லையா என்றும் எழுத முடியுமா?

 

தேர்தல் விஞ்ஞாபனத்தை நான் சொல்லியிருந்தது ஏன் என்பது உங்களுக்கு புரியவில்லையா? அதாவது நானங்கள் எதையோ விதைப்பதாக சொன்னீர்கள்.  மக்கள் நாங்கள் விதைப்பது ஒன்றையும் நம்பி வாக்கு போடவில்லை என்றதை காட்டவே அது எழுதியிருந்தேன். புலத்தில் பலரை விட நன்ற்க்க அவர்கள் அதை விளங்கித்தான் வாக்களிதும் இருக்கிறார்கள். அதை புரிந்து இவ்வளவு கஸ்டமா? இரண்டு மூண்று முறை படித்து பார்க்க முடியவில்லையா?. மாகாணத்தை பற்றி யாரும் விதைப்பதை மக்கள் எதிர் பார்த்திருக்கவில்லை. அதலால் நீங்கள் விதைப்பதும் அவர்களுக்கு தேவை இல்லை. நாங்கள் விதைப்பதும் அவர்களுக்கு தேவையில்லை. விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பு சொன்னவைகளைதான் நிறை வேற்றும். இவ்வளவு நேரமும் அங்கே போய்முதலிட பாதுகாப்பு இல்லை என்று விட்டு இப்போ அங்கே எல்லோரும் முதலிட்டுவிட்டார்கள் என்றும் எழுதுகிறீர்கள்.தேவையில்லாமல் புலத்து மக்கள் அங்கே நேரத்துக்கு போய் பிடிக்க வேண்டிய இடத்தை குழப்பமாக கதைத்து கெடுக்காதீர்கள். அது சிங்களவர் மற்ற்வர்கள் கைகளுக்குதான் போய் முடியும். அவர்கள் தான் அங்கு இப்போது வியாபரங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை.

 

நாங்க தேர்தல் விஞ்ஞாபனமும் படித்தோம்.. மாகாண சபை பற்றிய உங்களின் குளறுபடியான கருத்துக்களையும் படிக்கிறோம்.. கூட்டமைப்பின் மேலான உங்களின் பயபக்தியையும் படிக்கிறோம்.

 

கேட்ட கேள்விக்கு.. நீ படிச்சியா வாசிச்சியா என்பதல்ல பதில். உங்கள் விளக்கம் என்ன என்பது தான் பதில்..???!

 

மேலும்.. புலம்பெயர் மக்கள் வேறு.. தாயக மக்கள் வேறு என்ற உங்கள் இரு நிலைக்கருத்தோட்டம் முற்றிலும் தவறு. இதனை கூட்டமைப்பே தேர்தலுக்கு தேர்தல் வாக்குக் கேட்டு நாடு நாடா ஓடி வருவதில் இருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

மேலும்.. முதலீடு முதலீடுன்னு கத்துறீங்களே.. இந்த முதலீடுகள்.. மாகாண சபையை அல்ல பலப்படுத்தும். சிங்கள பொருண்மியத்தையே பலப்படுத்தும். சிங்கள இராணுவத்தையே பலப்படுத்தும். அதன் ஆக்கிரமிப்பையே பலப்படுத்தும்.

 

ரில்கோகாரர்கள்.. ஈபிடிபி யோட இணைந்து மேற்கொண்ட உந்த முதலீட்டுக்குப் பின்னால் நடந்த கொடுக்கல் வாங்கல்களையும் ஒருக்காச் சொல்லலாமே..???! மேலும் ரில்கோகாரர் உந்த முதலீட்டை தாயக மக்களை நோக்கிச் செய்யவில்லை. மாறாக.. புலம்பெயர் மக்களை நோக்கி செய்துள்ளனர். ரில்கோ விடுதியில் கொண்டு போய் வன்னி மக்களையா வேலைக்கு அமர்த்தி வைச்சிருக்கிறார்கள். அங்கு போவது உள்ளூர் மக்களும் அல்ல. சிங்களவர்களும்.. புலம்பெயர் மக்களுமே அங்கு அதிகம் போகிறார்கள்.

 

சிங்களவன்.. உங்கள் முதலீடுகளின் தன்மை.. அதன் நோக்கம் இவை எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டு தான் உள்ளான். கொழும்பில்.. மாடிவீடுகளில் முதலிட்டுவிட்டு.. அது புலிகளின் சொத்தென்று பறித்த போது நம்மவர்கள் பதைபதைத்ததை மறந்துவிட்டீர்கள் போலும்..! இப்போதும் புலம்பெயர்ந்தவர்களின் பெருமளவு கொழும்பு முதலீடுகளை புலிகளின் சொத்தென்று.. கோத்தா சொந்தமாக்கி வைச்சிருக்கிறார்.

 

அதுமட்டுமன்றி.. புலம்பெயர் தமிழர்களின் முதலீட்டில்.. வேலை வாய்ப்பை பெறப் போவது சிங்களவர்களே. தேர்ச்சியற்ற தமிழ் தொழிலாளர்கள்.. தேர்ச்சியற்ற தொழில்நுட்பவியலாளர்கள்.. பொறியலாளர்கள்.. நிர்வாகிகள் என்ற நிலை உள்ளூர் சமூகத்தில் தொடரும் நிலையில்.. எம்மவர்களும் சிங்கள கட்டடத் தொழிலாளர்களை  தான் வேலைக்கு அமர்த்துகிறார்கள். கன்ராக்ரர்களாக சிங்களவர்களே இருக்கிறார்கள். சிங்களம் இப்படி ஒரு நன்மையை தனதாக்கி வைச்சுக் கொண்டு தான் உங்களை முதலீடு செய்யுன்னு சொல்லுது. நீங்களும் விழுந்தடிச்சு உள்ள போய் அவன் விரிக்கும் வலையில் விழனும் என்று கூட்டமைப்பு மீதான மாயை ஈர்ப்பில் கருத்துச் சொல்லிக்கிட்டு இருக்கீங்க.

 

ஆனால்.. களத்தில் உள்ள உண்மை நிலவரத்தை புலம்பெயர் மக்கள் தங்கள் உறவுகளூடு அறிகிறார்கள். இது முதலீட்டுக்கான தருணமா... பொறியில் சிக்கும் தருணமா என்பதை அவர்கள் நிதானமாகச் சிந்திக்கவே செய்கிறார்கள். தாயகத்தை நோக்கி என்ன முதலீட்டை கொண்டு போனாலும்.. அதனை சிங்கள அரசு கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வைத்துள்ள நிலையில்.. நீங்கள் மாகாண சபையைக் காட்டி.. புலம்பெயர் மக்களை முதலீடு செய்யச் சொல்வதில் எந்த ஒரு உருப்படியான அடிப்படையும் இல்லை என்பதே இங்குள்ள வாதம்.

 

சில புலம்பெயர்ந்தவர்கள்.. உயர்மட்ட சிங்கள அரசுத் தொடர்பு.. ஒட்டுக்குழு தொடர்புகள் இவற்றைப் பயன்படுத்தி.. போட்டியற்ற துறைகளில் முதலீடுகளை செய்தாலும் அவர்கள் பல்வேறு நெருக்கடிகள் மத்தியில் தான் இயங்கி வருகிறார்கள். சுதந்திரமான.. தலையீடற்ற முதலீடு அதன் மூலம் எமது  மக்கள் முழு..நேரடிப் பயன்பெறுவது என்பதில் பல இடர்கள் பல.. பின்னடைவுகள் உள்ளன. இவற்றைக் களையாமல்.. முதலீடுகளைக் கோருவது என்பது.. சிங்கள ஆக்கிரமிப்பாளர்களையே பலப்படுத்தும். அவர்களின் சர்வதேசப் பிரச்சாரங்களையே பலப்படுத்தும்.

 

மேற்கு நாடுகள் உல்லாசப் பயணம் போகக் கூட எச்சரிக்கும் ஒரு தேசத்தில்.. கூட்டமைப்பின் மாகாண சபை வெற்றியை வைத்துக் கொண்டு.. முதலீட்டைக் கோரும் உங்கள் நோக்கம் சந்தேகம் அளிக்கிறது.

 

எமது மக்களை நோக்கி உதவிகள்.. சிறு முதலீடுகள்... போய்க்கொண்டுதான் உள்ளன. அப்படி ஒன்றும் போகவில்லை.. எனித்தான் மாகாண சபை வந்துவிட்டதால் கொண்டு போகலாம் என்று நீங்கள் காட்ட விளைவதுதான் அபந்தம். மேலும்.. இன்று போய்க்கொண்டிருக்கும் உதவிகளும்.. சிறு முதலீடுகளும் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்ப என்று போகிறது. எமது மக்களின் பிரதேசத்தின் பொருண்மியத்தை.. வியாபாரத்தை.. உற்பத்திகளை.. உள்ளகக் கட்டுமானங்களை.. தொழில்துறைகளை.. தொழில்நுட்பங்களை.. கல்வியை.. நிர்வாகங்களை.. சேவைகளை பெருமளவில்.. கட்டியமைக்கக் கூடிய பெரும்.. மித முதலீடுகளை அங்கு கொண்டு செல்வது என்பதில்.. மாகாண சபை வெற்றி என்பது பெரும் முன்னேற்றம் என்று எப்போதுமே சொல்ல முடியாது. காரணம்.. மாகாண சபை என்பது வெற்று டப்பா. அதனை நம்பி பெரும் தொகையை அதில் போடுவது என்பது திருடுறவனுக்கு கொட்டிக் கொடுப்பது போன்றது. மகிந்த கூட்டணியை திருட அழைப்பது போன்றது. சிங்கள ஆக்கிரமிப்பை பலப்படுத்துவது போன்றது. :):icon_idea:

 

Occupying SLAF demands money from people to access their beach in Trincomalee.

 

[TamilNet, Wednesday, 09 October 2013, 23:35 GMT]

The Sri Lankan Air Force, which had appropriated the popular Marble Beach in 2001 at the southern tip of Trincomalee under the pretext of providing ‘high security’ to the SL Air Force base at China Bay, has transformed it into a military run corporate outfit after the war, naming it ‘Marble Beach Air Force Resort’. The occupying SL Air Force has now started to charge money from the public to even access that limited area, civil sources in Trincomalee said.

The occupying SLAF personnel harass the people visiting their beach to pay 20 rupees each to ‘Air Force Command Welfare Fund’.

The ‘Marble Beach Air Force Resort’ was declared opened by the SL president Mahinda Rajapaksa in March 2011.

In the beginning, the SLAF said it allowed people of Trincomalee to access an ‘open area’ in the beach, but now the entire beach has been under the administrative control of the occupying SL military.

Legal sources in Trincomalee alleged that the occupying Sri Lankan Air Force had also violated the Sri Lankan parliamentary act called Coast Conservation Act (Act No. 57 of 1981), in appropriating the beach and making it into a military run corporate property.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36732

 

இப்படியான சூழ்நிலைகளை வைச்சுக் கொண்டு தான் நீங்க புலம்பெயர் மக்களை முதலீடும் செய்யச் சொல்லுறீங்க என்றப்போ.. உங்கள் மீதும் கூட்டமைப்பு மீதும் சந்தேகமே வலுக்கிறது. :icon_idea::rolleyes:

 

Edited by nedukkalapoovan

<மேலும் ரில்கோகாரர் உந்த முதலீட்டை தாயக மக்களை நோக்கிச் செய்யவில்லை. மாறாக.. புலம்பெயர் மக்களை நோக்கி செய்துள்ளனர். ரில்கோ விடுதியில் கொண்டு போய் வன்னி மக்களையா வேலைக்கு அமர்த்தி வைச்சிருக்கிறார்கள். அங்கு போவது உள்ளூர் மக்களும் அல்ல. சிங்களவர்களும்.. புலம்பெயர் மக்களுமே அங்கு அதிகம் போகிறார்கள்.>

தவறு நெடுக்ஸ்,டில்கோ ஹோடேலில் பெருமளவில் யாழ் மற்றும் வன்னியை சார்ந்த இளையோரே வேலை செகின்றனர்.மேலும் இங்கு சிங்களவர்களும், புலம்பெயர் மக்களுமே அதிகம் வருவதால் எமது மக்களுக்குத் தான் நன்மை, நல்ல வேலைவாய்பு. இங்கு வருமானத்தில் பெரும் பகுதி சம்பளமாகவும் மிகுதி யாழ்ப்பாணத்தில் புதிய முதலீடுகளுக்கும் செல்வதாக திரு.திலகராசா சென்றவருடம் கூறினார்.நான் இங்கு எனது தொழில் சம்பந்தமாக அடிகடிசென்ரு  வருவதால் உறுதியாக கூறமுடியும் . எல்லாவற்றையும் தவறாக விமர்சிக்க  வேண்டாம்.உண்மையை அறிந்துவிட்டு விமர்சிக்கவும்.

<அண்ணே 10 லட்சம் 15 லட்சம் முதலீட பற்றி சொல்ல சொன்னால் 500 மில்லியன் லெவல் க்கு சொல்லுறீங்க.>

சுண்டல், திலகராசா Tilko Properties எண்டு UK-East Ham இல் வைத்திருந்தவர் அதை எல்லாம் விற்று மிகுதிக் காசு பேங்க் லோன்ல்லதான் இன்வெஸ்ட் பண்ணினவர்.நீங்கள் உங்கள் வருமானம்,சேமிப்புக்கு தகுந்தவாறு முயற்சிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

<மேலும் ரில்கோகாரர் உந்த முதலீட்டை தாயக மக்களை நோக்கிச் செய்யவில்லை. மாறாக.. புலம்பெயர் மக்களை நோக்கி செய்துள்ளனர். ரில்கோ விடுதியில் கொண்டு போய் வன்னி மக்களையா வேலைக்கு அமர்த்தி வைச்சிருக்கிறார்கள். அங்கு போவது உள்ளூர் மக்களும் அல்ல. சிங்களவர்களும்.. புலம்பெயர் மக்களுமே அங்கு அதிகம் போகிறார்கள்.>

 

தவறு நெடுக்ஸ்,டில்கோ ஹோடேலில் பெருமளவில் யாழ் மற்றும் வன்னியை சார்ந்த இளையோரே வேலை செகின்றனர்.மேலும் இங்கு சிங்களவர்களும், புலம்பெயர் மக்களுமே அதிகம் வருவதால் எமது மக்களுக்குத் தான் நன்மை, நல்ல வேலைவாய்பு. இங்கு வருமானத்தில் பெரும் பகுதி சம்பளமாகவும் மிகுதி யாழ்ப்பாணத்தில் புதிய முதலீடுகளுக்கும் செல்வதாக திரு.திலகராசா சென்றவருடம் கூறினார்.நான் இங்கு எனது தொழில் சம்பந்தமாக அடிகடிசென்ரு  வருவதால் உறுதியாக கூறமுடியும் . எல்லாவற்றையும் தவறாக விமர்சிக்க  வேண்டாம்.உண்மையை அறிந்துவிட்டு விமர்சிக்கவும்.

 

 

இதற்கான ஆதாரத்தைக் காட்ட முடியுமா..??! எமக்கு போய் வந்தவர்கள் சொன்ன தகவலின் படி.. அங்கு சிங்களவர்களும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள செய்தியே கிடைத்தது. மேலும்.. வன்னியில் இருந்து என்று யாரும் தெரிவு செய்யப்பட்டு வேலை வழங்கும் பக்குவதில் அவர்கள் இல்லை என்றும் தெரிகிறது. அப்படி இல்லை என்று கூறும் நீங்கள் இதனை மறுக்கக் கூடிய ஆதாரங்களைக் காட்ட முடியுமா..??!

 

ரில்கோ ஹொட்டல்.. வன்னியில் போர் நடந்த காலத்திற்கு முன்னரே முதலீடு கொண்டு.. சென்று.. இயங்க ஆரம்பித்துவிட்டது. சமாதான காலத்தில் அது வளர்ச்சி கண்டது.

 

ரில்கோ.. லண்டனில் இறங்கு முகம் கண்ட போது நிறைய சுருட்டிக் கொண்டு போனதுதான் அங்க முதலீடானது. அதில்  ஒட்டுக்குழு தலைவருக்கு லண்டனில் பிஸ்னஸ் போட்டுக் கொடுத்து வாங்கினதுகளும் அடங்குமாமே..????! ஒரு பக்கம் புலி ஆதரவு போல காட்டிக்கொண்டு இன்னொரு பக்கம்.. சிங்களவனோடும்.. ஒட்டுக்குழுக்களோடும் ஒட்டி ஓடியவர்களே இவர்கள். :lol::D

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்கின்ற உதவிகள் ஒப்பீட்டளவில் மிகச் சொற்பம். அவையும் முழுமையாக தாயக மக்களை வந்தடைவதில்லை: லண்டனில் பா உ மு சந்திரகுமார் -த ஜெயபாலன் (ஒட்டுக்குழு ஈபிடிபி பாராளுமன்ற ஆட்கள் கருத்து.)

 

“”புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்கின்ற உதவிகள் ஒப்பீட்டளவில் மிகச் சொற்பம். அவையும் முழுமையாக தாயக மக்களை வந்தடைவதில்லை” என இன்று ஓகஸ்ட் 12 இலங்கை திரும்பிய சந்திரகுமார் அதற்கு முன்னதாக ஓகஸ்ட் 10, 2012 அன்று கிழக்கு லண்டனில் இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார்.

 

புலம்பெயர் மக்களின் உதவிகள்:

 

புலம்பெயர்ந்து வாழும் மக்களின் உதவி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பா உ சந்திரகுமார் ”புலம்பெயர் நாடுகளில் சொல்லப்படுகின்ற அளவுக்கு அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகின்ற அளவுக்கு தாயக மக்களுக்கு உதவிகள் கிடைப்பதில்லை. கிடைக்கின்ற உதவிகள் மிகச் சிறியவையே. அவை இல்லங்களைப் பராமரிப்பது பத்துத் தையல் இயந்திரத்தை வாங்கிப் போடுவது என்ற அளவிலேயே நின்றவிடுகின்றது. அந்த உதவிகளும் முழுமையாக தாயக மக்களை வந்தடைவதில்லை. இவற்றினால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடிவத்தில்லை” எனறும் சந்திரகுமார் தெரிவித்தார். (சரியா கப்பம் அறவிட முடியல்லையாம்.)

 

அவர் தொடர்ந்தும் கூறுகையில் ”முதலீடுகளைச் செய்து அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்றார்.

 

ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் வி வசந்தனும் அபிவிருத்தி வேலை வாய்ப்புத் தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார்.

 

ஒப்பீட்டளவில் அரசாங்கம் தெற்கில் ஒரு நபருக்கு அபிவிருத்திக்கு செலவிட்ட தொகையிலும் பார்க்க மிக அதிகமாகவே வடக்கில் செலவிட்டுள்ளது. அரசாங்கத்திடம் இருந்து எவ்வளவு உதவிகளை அதிகமாகப் பெற முடியுமோ அவ்வளவுக்கு உதவிகளைப் பெற்று பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். ஆனாலும் 30 வருட போரின் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு இன்னும் பெரும் தொகை உதவி தேவையாக உள்ளது. அரசு இன்னும் நிறையச் செய்ய வேண்டியுள்ளது” என்றும் சந்திரகுமார் தெரிவித்தார். (அப்புறம் எதுக்கு புலம்பெயர் மக்களின் உதவி உங்களுக்கு.. உங்களை வளர்க்கும் சிங்கள அரசாங்கம் மிச்சத்தையும் கவனிக்கும் தானே. ஏன் அவசரப்படுறியள். ஒட்டுக்குழுக்கள் என்றாலே அர்த்தமற்றுத்தான் பேசனுமா..???!)

 

(தேசம் என்ற ஒட்டுக்குழு இணையத்தில் இருந்து................!)

Edited by nedukkalapoovan

ரில்கோ.. லண்டனில் இறங்கு முகம் கண்ட போது நிறைய சுருட்டிக் கொண்டு போனதுதான் அங்க முதலீடானது. அதில்  ஒட்டுக்குழு தலைவருக்கு லண்டனில் பிஸ்னஸ் போட்டுக் கொடுத்து வாங்கினதுகளும் அடங்குமாமே..????! ஒரு பக்கம் புலி ஆதரவு போல காட்டிக்கொண்டு இன்னொரு பக்கம்.. சிங்களவனோடும்.. ஒட்டுக்குழுக்களோடும் ஒட்டி ஓடியவர்களே இவர்கள். :lol::D

 

 

முன்பே பாக்கிஸ்தானியர்களுடன் சேர்ந்து பெரிய காப்புறுதி தில்லு முல்லுகள் நடந்துள்ளது. பெரிய புலி ஆதரவாளராக இருந்தவர். அவர்களின் சொத்துகளும் இருந்ததாக தகவல்.

 

மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டினால்தான் பிழைக்கலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலீடு செய்து போடுவன் ஆனால் புலம் பெயர் புர்ஷ்வா எண்டு யாராவது சொல்லிபோடுவினம் என்று சும்மா இருக்கிறன்...:D சோசலிச சமதர்ம புரட்சி செய்து தமிழ்மக்களுக்கு ஒரு விடிவை கொடுக்க நான் ஒரு திட்டம் வைத்துள்ளேன் ...ஆனால் முதலில் சாதியத்தை முறியடிக்க வேண்டும் :D

கடுமையாக தொடந்து முன்னு பின்னர் முரண்பாடாக எழுதிகிறிர்கள். ரில்கோ கோட்டால் மாதிரி காடினால் தான் முதலீடு என்று புயத்த வெளிக்கிட்ட ஆள் நீங்கள் தான். ஆனால் அதற்கு முன்னர் வன்னி மக்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் பற்றி எழுதுயிருக்கிறேன். சின்ன மென்பொருள் உற்பத்தி இடங்கள் அரம்பிக்கும் படி கேட்டிருந்தேன். நான் எங்கே ரில்கோ பற்றி பேசினேன்.

 

முதலில் பொருளாதார அடிபடையை தெரியாமல் குழம்புகிறீர்கள். வங்காளத்தில் நோபல் பரிசு பெற்ற் முகமெட் யூனி மைக்குறோ கடனை கண்டுபிடித்தவர்.

 

அர்சியல், பொருளாதாரம் எல்லாவற்றையும் போட்டு குழப்பு கிறீர்கள். முன்னுக்கு பின் முரனாக எழுதுகிறீகள். குறைந்த பட்சம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பு அகதிகளின் பற்றி சொல்லியிருப்பதையாவது படியுங்கள். நுனி புல்லு கடிக்காமல் ஆழமாக சிந்த்தித்து பார்த்துவிட்டு எழுதுங்கள். 

 

சம்பந்தரும் மாவையும் ஒட்டுக்குழுக்கள் கேட்ட அதே வகை முதலீடுகளை கேட்கிறார்கள் என்று எழுத தலைக்குள் எவ்வளவு குழ்ப்பம். அதே மாதிரித்தான் இசைப்பிரியா என்ற புனை பெயரில் எழுதிய ஒருவர் "விக்கினேஸ்வரனும் சிரிக்கிறார். டக்கிளசும் சிரிக்கிறார், விக்கினேஸ்வரனும் வேட்டி கட்டியிருந்தார் டக்கிளசும் வேட்டிகட்டியிருந்தார்" என்று எழுதியிருந்தார்.  இந்த ஒப்பீடுகளை எழுதுவது  எவ்வளவு அவமானகரமாக, சிந்தனை திறன் உள்ள மனித குலத்தை கேவலப்படுத்துகிறது என்பது புரியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் படித்து சாதாரண மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. அதில் உள்ள விடயங்கள் மெத்தப் படித்தவர்களுக்கே மயக்கம் தரக்கூடியது. விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை மேடைகளில் முழங்கி கூட்டமைப்பு வாக்குவேட்டையில் ஈடுபடவும் இல்லை.

தமிழ் மக்களின் இனமான உணர்வைத் தூண்டியே கூட்டமைப்பு வாக்குக் கேட்டது. தமிழ் மக்களும் சிங்கள அடக்குமுறைக்கு எதிர்ப்புக் காட்டவும், முள்ளிவாய்க்கால் அவலத்திற்குக் காரணமானவர்களையும் அவர்களின் அடிவருடிகளையும் வடமாகாணத் தேர்தலில் ஒதுக்கவுமே கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள்.

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் படித்து சாதாரண மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. அதில் உள்ள விடயங்கள் மெத்தப் படித்தவர்களுக்கே மயக்கம் தரக்கூடியது. விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை மேடைகளில் முழங்கி கூட்டமைப்பு வாக்குவேட்டையில் ஈடுபடவும் இல்லை.

தமிழ் மக்களின் இனமான உணர்வைத் தூண்டியே கூட்டமைப்பு வாக்குக் கேட்டது. தமிழ் மக்களும் சிங்கள அடக்குமுறைக்கு எதிர்ப்புக் காட்டவும், முள்ளிவாய்க்கால் அவலத்திற்குக் காரணமானவர்களையும் அவர்களின் அடிவருடிகளையும் வடமாகாணத் தேர்தலில் ஒதுக்கவுமே கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள

கூட்டமைப்பு எந்த வழிமுறைகளைப் பாவித்து மக்களின் உணர்வுகளை தூண்டியது? அதை விவரமாக எழுத முடியுமா? மக்களின் வாக்களிப்புக்கள் இந்த கோரிக்கையுடன் ஒத்துப் போயிருக்கா இல்லையா? நீங்கள் காட்டவரும் இதற்கும் விஞ்ஞாபனத்துக்கும் இடையில் உள்ள முரன்பாடுகளை பட்டியல் இட முடியுமா? தேர்தலில் வாக்களித்த அதனை மக்களையும் ஒதுக்கி தள்ளிவிட்டு  உங்களின் போரில் தோல்வில் படித்த  பாடத்துக்கான ஒரே ஒருவாக்கு மட்டும்தான் பிரதானமானத? எதிர்கட்டிசிகள் ஒன்றும் தேர்தலில் நிற்கவில்லையா? அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை விட்டு விலத்தி மக்களின் உணர்வுகளை தூண்டி வாக்கு கேட்ட போது அவர்கள் மக்களை கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்துடன் செல்லவில்லை என்று எச்சரிக்கை செய்யவில்லையா?

 

தயவு செய்து நான் என்ன எழுதினேன் என்று புரிந்ததா. நான் விதைக்கிறேன் என்றதுக்கு பதிலாகவே. மக்கள் ஏன வாக்களித்தார்கள என்றதற்கு பதிலாக அல்ல. தேர்தல் விஞ்ஞாபனம் பல அரசியல் மேடைகளில் கூட்டமைப்பால் மக்களின் வசநங்களில் விளங்கப்படுத்தப்படுவிட்டது.

 

மக்கள் உரிமை இல்லையாமல் "ஒருவாய் சோறு வாய்க்குள் போட மாட்டோம்" என்று அடம்பிடிக்கிறார்கள் என்று எழுத முனைவதா நீங்கள் போரில் வந்த தோல்விகளில் இருந்து படித்த பாடம்? 

 

மக்கள் தங்களுக்கு தங்களின் ஆட்சி தங்களுக்கு வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள். அதில் பொருளாதார எதிப்பார்ப்பு இருக்கிறது. யார் வேட்டிகாட்டியிருக்கிறார்கள் என்ற ஒப்புவமைகளை விடுத்து மக்களுக்கு சோறு போடத்தக்க சிறு சிறு கைத்தொழில் முனனேற்றங்களை முதலிட புலம் பெயர் மக்கள் முன்னால் வரவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப 100 மில்லியன் அளவுக்கு முதலீடு செய்வதெண்டால் அது இலங்கையின் எந்த பகுதியா இருந்தாலும் கண்டிப்பா அரசியல் செல்வாக்கு இருந்தே ஆகணும் மற்றது கவனிக்க வேண்டியவங்களையும் அவ்வபோது கவனிக்கணும் இல்லாட்டி கஷ்டம் அண்ட் also இலங்கை இன்னும் பூரண ஜனநாயகத்துக்கு திரும்பல்ல ஒருத்தனிட்ட ஒரு துப்பாக்கி இருந்தால் காணும் அவனே friends கூட சேர்ந்து கடத்தி பணம் பண்ணுற வேலை எல்லாம் நடக்குது பணம் சம்பாதிக்க இது ஈஸி என்றதால

அண்மையில் ஒரு பிரதி போலீஸ் மா அதிபரே ஒரு முஸ்லிம் வர்த்தகர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு இருக்கார்.......

இறுதியில் பெரிய அளவில் முதலீடு செய்து அங்கெ தமிழர்கள் தொல்லை இல்லாமல் பிசினஸ் செய்ய முடியாது என்பதே உண்மை எல்லாருக்கும் சலாம் போட்டு சம்பாதிக்கிறதில பாதி கப்பமா போயிட்டே இருக்கணும்

பட் சின்ன முதலீடுகள் work out ஆகும்

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து நான் என்ன எழுதினேன் என்று புரிந்ததா. நான் விதைக்கிறேன் என்றதுக்கு பதிலாகவே. மக்கள் ஏன வாக்களித்தார்கள என்றதற்கு பதிலாக அல்ல. தேர்தல் விஞ்ஞாபனம் பல அரசியல் மேடைகளில் கூட்டமைப்பால் மக்களின் வசநங்களில் விளங்கப்படுத்தப்படுவிட்டது.

வழமைபோன்று புரியவேயில்லை :)

கூட்டமைப்பின் விஞ்ஞாபனமும் மல்லை ஐயாவின் கருத்துக்கள் மாதிரி ஒரு சாம்பார்க் குழம்பி. அதை எல்லாம் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மேடையில் விளக்கித்தான் வாக்குக் கேட்டு வென்றார்கள் என்று நீங்கள் நம்புவது மாதிரி எல்லோரும் நம்பவேண்டும் என்று விரும்புகின்றீர்கள். <_< 

தேர்தல் காலத்திலும் பின்னரும் வந்த கட்டுரைகள் பலவற்றை நான் வாசித்துவிட்டுத்தான் யாழில் இணைத்திருந்தேன். அவற்றை நீங்களும் வாசித்திருப்பீர்கள் என்பதால் உங்களுக்கு கூட்டமைப்பு எப்படித் தேர்தலில் வென்றது என்பது புரியும். எனவே ஒரு சொல்லுக்கே நாலைந்து வியாக்கியானங்கள் வைத்திருக்கும் உங்களைப் போன்ற மெத்தப் படித்தவர்களுக்கு மேலதிகமாக விளக்கம் சொல்வது நேர விரயம். ^_^

சிறு முதலீடுகளுக்கு எதுக்கு மாகாண சபை. மாநகரசபை.. நகர சபை.. உள்ளூராட்சி சபை அனுமதி போதுமே..! :lol::D

இவ்வளவு காலமும்.. மாகாண சபை இருந்தா நம்மவர்கள் கடை போட்டவர்கள். ஹோட்டல் கட்டினவர்கள்.. இல்லையே..???! :lol:

சும்மா சும்மா மாகாண சபை பற்றி ஒரு போலி விம்பத்தை மக்கள் மத்தியில் விதைப்பது கூடாது..! :icon_idea:

 

பெரிய முதலீடுகளுக்கு சிங்களம் அனுமதிக்காது. அவை தனக்கூடாகப் போவதையே அது பார்த்துக் கொள்ளும். மாகாண சபை அவற்றை கட்டுப்படுத்தும் எந்த அதிகாரத்தையும் கொண்டதல்ல..! :icon_idea:

 

இதற்கு மாகாணசபையின் அனுமதி அதிகளவில் தேவையில்லை... ஆனால் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் முதலீட்டுக்கான நம்பிக்கையை ஏற்பட்டிருக்கின்றது.. தயவு செய்து திங் பொசிட்டிவ்.. உங்களின் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்கின்றேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.