Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை ஆலோசகர் பதவிகள் சுரேஷ் கடும் சீற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணசபையினை எமது ஈ.பி.ஆர்.டில்.எப். கட்சி புறக்கணிக்கவில்லை. மாறாக, இன்று நடைபெற்ற பதவியேற்பு வைபவத்தினையே நாங்கள் புறக்கணித்தோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

இன்று யாழில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் மாகாணசபைக்கான பதவியேற்பு வைபவத்தில், மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் பங்குபற்றாமை தொடர்பில் அக்கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில்...

“கூட்டமைப்பு என்பதன் பதம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஒரு கூட்டமைப்பில் உள்ளவர்களின் முடிவுகள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் யாவரும் அறிவர். அதாவது எதேட்சாதிகார போக்கில் தனிப்பட்ட முடிவினை எவரும் எடுக்க முடியாது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளின் சம்மதத்திற்கிணங்கவே முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் மேலாதிக்க ரீதியான, தனிப்பட்ட முடிவுகளே எட்டப்படு வருகின்றன.

தேர்தல் காலத்தில் ஒன்றாக பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு, தேர்தல் வெற்றியின் பின்னர் மக்கள் தந்த ஆணையினை துஸ்பிரயோகம் செய்வதை எமது கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோரை மாத்திரம் உள்ளடக்கிய கட்சியல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை உணர மறுக்கிறது.

அடக்கப்பட்டிருந்த மக்களின் அபிலாஷைகளை தமது வாக்கு என்னும் ஆயுதத்தினால் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆறில் ஐந்து பெரும்பான்மை வெற்றிபெற்றிருக்கிறது. இவ்வெற்றியானது கூட்டமைப்பில் இருக்கின்ற தமிழரசுக் கட்சியினால் மாத்திரம் பெறப்பட்டதல்ல. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பும் இந்த வெற்றிக்கு வித்திட்டிருக்கின்றன.

ஆனால், அமைச்சர்களின் தெரிவில் எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் சுயேட்சையாக முடிவெடுப்பதென்பது எவ்வகையில் நியாயம். நான்கு அமைச்சுக்களையும் நான்கு கட்சிகளுக்கு பிரிந்துக் கொடுங்கள் என்று நாங்கள் கூட்டமைப்பின் தலைமையிடம் கேட்டோம். ஆனால், தமிழரசுக் கட்சிக்கு 2 அமைச்சுக்கள் வேண்டுமென சம்பந்தன் ஒற்றைக் காலில் நின்றார். அதுமட்டுமல்லாமல் எமது கட்சிக்கு வழங்கவேண்டிய அமைச்சுப் பதவியை முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட எமது உறுப்பினருக்கு வழங்கும்படி பரிந்துரைத்தோம். ஆனால், அதனையும் கூட்டமைப்பின் தலைமை நிராகரித்து, ஐங்கரநேசனை அமைச்சராக அறிவித்தார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - அமைச்சு ஆசைகளைக் காட்டி எதிர்க்கட்சியினரை வளைத்துப்போடுவதுபோல், கூட்டமைப்பின் தலைமையும் செயற்பட பார்க்கிறது. இது, கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

அதுமட்டுமல்லாமல், தேர்தலுக்காக இரவு பகலாக கஷ்டப்பட்ட பலர் வடக்கில் இருக்கும்போது, கொழும்பிலுள்ள சிலரை ஆலோசகர்களாக உள்வாங்கவும் முதலமைச்சர் முடிவுசெய்திருக்கிறார். இதனால் வடக்கிலுள்ள மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கவுள்ளது? இங்கு கஷ்டப்பட்டவர்கள் சும்மா இருக்க, கொழும்பிலிருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை என்றால் இதில் என்ன நியாயமிருக்கிறது?

இதுபோன்ற பல தவறுகளை கூட்டமைப்பின் தலைமை மேற்கொண்டுவருவதை தட்டிக்கேட்கின்ற எம்மை குழப்பவாதிகளாக ஊடகங்களும் தமிழரசுக் கட்சி விஸ்வாசிகளும் சித்திரிப்பது வேடிக்கையானதே. நாங்கள் ஒற்றுமையாக சேர்ந்து செயலாற்ற தயாராக இருக்கின்றோம். அதற்காகத்தான் மக்கள் எம்மை ஆதரித்திருக்கிறார்கள். ஆனால், அதனை கூட்டமைப்புக்குள்ளிருக்கும் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதனைவிடுத்து, ஏதேச்சாதிகார போக்கில் தன்னிச்சையான முடிவுகளை கூட்டமைப்பின் தலைமை எடுக்குமேயானால், இதன் பின்விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.

எமது கட்சி சார்பாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் நிச்சயமாக பதவிப்பிரமாணம் எடுப்பார்கள். அத்தோடு தங்களாலான அனைத்து உதவிகளையும் மக்களுக்குச் செய்வார்கள் என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/85470-2013-10-11-09-18-23.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சுரேஷ் கூறிய அத்தனையும் ஏற்றுக்கொள்ள கூடிய ஆரோக்கியமான விமர்சனம்

கூட்டணி தர்மம் என்றால் என்னவெண்டு தெரியாத சம்மந்தன் குழு மக்களால் நிச்சயாமாக ஒரு நாள் விரட்டப்படும்

அதுவும் வடக்கில் கஷ்டப்பட்டவர்களை விட்டுவிட்டு கொழும்பில் இருந்து கும்பல்களை கொண்டு வந்து ஆட்சி செய்து தமிழ் தேசியத்தை குழி தோண்டி புதைக்க இந்த விக்கி சம்மந்தன் துரோக குழு புறப்பட்டிருக்கு சிங்களவனின் அடிவருடிகளாக ஒட்டு மொத்த வடக்கு மக்களையும் மாற்றுவதற்கு ராஜதந்திரம் சாணக்கியம் என்ற போர்வையில் வெள்ளை வேட்டி கட்டிய தமிழர்களாக மக்களை ஏமாற்ற இந்த கும்பல் தனது வேலையை தொடங்கி இருக்கு இனி தமிழர்களுக்கு அரோகரா

இதைக் கிழக்கு மாகாண மக்கள் கேட்டால் பிரதேச வாதம்... ஆனா வடக்கு மக்கள் கேட்டால் தேசியமா ??? போடாங் கொய்யாலே???

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இல்லை என்றதும் மேய்ப்பன் இல்லாத மந்தைகள் போல் இருக்கின்றார்கள் இந்த தமிழ் அரசியல்வாதிகள்  :(

புலிகள் இல்லை என்றதும் மேய்ப்பன் இல்லாத மந்தைகள் போல் இருக்கின்றார்கள் இந்த தமிழ் அரசியல்வாதிகள்  :(

இல்லை 

புளிகளுக்குப்பிறகு எல்லாருமே மேய்ப்பவன் ஆயிட்டாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இல்லை என்றதும் மேய்ப்பன் இல்லாத மந்தைகள் போல் இருக்கின்றார்கள் இந்த தமிழ் அரசியல்வாதிகள்  :(

மக்களுக்கு யார் தேவை என்பதை 

மீண்டும்

மீண்டும்

மீண்டும்

உணர்த்துகிறார்கள்.....

அந்த  இடத்துக்கு எவரும் வரமுடியாது என்பதை சொல்கிறார்கள்

புலிகள் இல்லாது விட்டால் கிழிப்போம்  என்றது  இதைத்தான்.......... :(  :(  :(

இந்தளவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட அனைவரும், நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள அனைவருமே, இலங்கையை துண்டாடுவதற்குத் துணைபோக மாட்டோம் என்ற சத்தியக்கடதாசியை கொடுத்துள்ளவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் சுரேஷ் உள்பட   :( 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சுரேஷ் இலங்கையை துண்டாட சொல்லி கேட்க வில்லையே

இரவு பகலாக வெயில் மழை என்று கட்சிக்குள் பாடுபட்டவர்கள் இருக்க வடக்கு மக்களின் பிரச்சனைகளை நன்கு உணர்தவர்கள் இருக்க ஏன் வெளிமாவட்டத்தில் இருந்து அதவும் தலைநகரில் இருந்து ஆலோசகர்களை இறக்குமதி செய்வான் என்ற கேள்வி நியாமானதே

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு யார் தேவை என்பதை 

மீண்டும்

மீண்டும்

மீண்டும்

உணர்த்துகிறார்கள்.....

அந்த  இடத்துக்கு எவரும் வரமுடியாது என்பதை சொல்கிறார்கள்

புலிகள் இல்லாது விட்டால் கிழிப்போம்  என்றது  இதைத்தான்.......... :(  :(  :(

நாலு வருடத்தில் நாலாயிரம் பேர் மேய்ப்பன்களாக வர வெளிக்கிட்டதால் மக்களுக்குத் தேவைப்படும் மேய்ப்பன் வரமாட்டார் என்பதை உணரவேண்டும்.

தமிழர்களை சில்லறைகளுக்காக தங்களுக்குள்ளேயே அடிபட வைத்த மகிந்த உண்மையிலேயே ஒரு கெட்டிக்காரன்தான். <_<

இங்கே சுரேஷ் இலங்கையை துண்டாட சொல்லி கேட்க வில்லையே

இரவு பகலாக வெயில் மழை என்று கட்சிக்குள் பாடுபட்டவர்கள் இருக்க வடக்கு மக்களின் பிரச்சனைகளை நன்கு உணர்தவர்கள் இருக்க ஏன் வெளிமாவட்டத்தில் இருந்து அதவும் தலைநகரில் இருந்து ஆலோசகர்களை இறக்குமதி செய்வான் என்ற கேள்வி நியாமானதே

மாற்றுக் கட்சிகளும் உள்ளூர் வேட்பாளர்களும் இருக்க எதுக்கு கொழும்பில் இருந்து வந்த விக்கினேஸ்வரனுக்கு மக்கள் வாக்களித்தார்கள்?

இது நான் உங்களை பார்த்து கேட்கவில்லை இதை அறிக்கையாக வெளியிட்டவர்களிடமே கேட்க விரும்புகிறான்.

இந்த மாகாணசபையால் வரும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம் இருக்கும் போலகிடக்கு.

எது எப்படியோ இதுவே வடக்குக்கு முதல் மாகாண சபை. இதுவே கடைசியாக அமைந்தால் எல்லோரும் வேறு ஒரு பிரச்சனையைப்பற்றி அல்லது பொது எதிரியான சிங்கலவனைப்பறி யோசிப்பார்கள்.

தமிழன் தமிழனை கொன்றதன் பாவமோ என்னமோ தெரியாது இப்பவும் ஆளுக்காள் சேறடிக்கும் வேலையை தவறாமல் செய்கிறோம்.

பதவிப்பிரமாணம் எடுக்க முதலே இவ்வளவு வேட்டுகுத்துக்கள் .என்னதான் நடக்க போகிதேன்று பார்ப்பம் .

இதற்குள் புலிகளை இழுப்பதை நினைக்க சிரிப்பாக இருக்கு ,புலிகள் என்ன செய்திருக்கும் நாலு பேரை வீதியில் இழுத்து வெடிவைத்து வாயை மூட வைத்திருக்கும் .அவர்கள் இடத்திற்கு எவரும் இனி வரவும் வேண்டாம்,வரவும் விட மாட்டார்கள் , சனம் இப்பதான் ஒரு மாதிரி நிம்மதியாக இருக்கு .

ஜனநாயகத்தின் அருமை தெரியாமல் கதைகின்றார்கள் ஆனால் தாங்கள் ஓடி வந்து குடியிருப்பதோ ஜனநாயக நாட்டில்தான் .ஏன் எவரும் ஒரு சர்வாதிகார நாட்டிக்கு போகவில்லை .வாயை திறந்தால் அதை வெட்டி போடுவார்கள் .

இன்று அமெரிக்காவில் நடப்பதை பார்க்கவும் தான் சிரிப்பாகத்தான் இருக்கு ஆனால் அதுதான் ஜனநாயகம் .

இங்கே சுரேஷ் இலங்கையை துண்டாட சொல்லி கேட்க வில்லையே

இரவு பகலாக வெயில் மழை என்று கட்சிக்குள் பாடுபட்டவர்கள் இருக்க வடக்கு மக்களின் பிரச்சனைகளை நன்கு உணர்தவர்கள் இருக்க ஏன் வெளிமாவட்டத்தில் இருந்து அதவும் தலைநகரில் இருந்து ஆலோசகர்களை இறக்குமதி செய்வான் என்ற கேள்வி நியாமானதே

அன்பின் சுண்டல். உங்களுக்கு தெருயுமா இவர் வெளிநாடில் வாழ்த்துவரும் செல்வின் என்கின்ற கண்றாவியின் ஆலோசனைப்பத்‌தி தனது ச்கோதரன் சர்வேக்கு திடமிடல் அமைச்சு பதிவி தான் வேண்டும் என்று அடம் பிடித்தது. உங்களுக்கு தெருயுமா இவர் கொழும்பு என்று சொல்பவர்கள் தான் தமிழ் தேசியக்கூடமாப்பின் உருவாக்கத்தில் இவரை உள்வாங்கி கொண்டுவந்த்வராகல் என்று?. இவரின் முழுப்பிறச்னை சர்வேக்கு பதவி கிடைக்காமல் போனது தான். இவர் ஜனாணியாக்கம் பேசி தனது சகோதரனையும் தனது செல்வைக்கை பாவித்து கொண்டுவர முயற்சித்து அது தோல்வியில் முடிய பாய்ந்து விழுகின்றார். செல்வின் என்பவரைப்பற்றி தெரியாவிட்தால் இதோ ஒரு சின்ன உதாரணம். சென்ற ஆண்டு சர்வதேசத்தில் இடம்பெற்ற ஒரு மகாநட்தில் செல்வின் கூறினார் வன்னியில் இறந்த மக்கள் மற்றவர்கள் கூறியதை விட கூறவி என்று. நல்லவேளையாக அங்கிருந்த மூணாள் உதவி அரசாங்க அதிபர் ஒருவர் அதை மறுத்த்து எண்ணிக்கைகளை அங்கிருந்த ராஜதந்திரிகளுக்கு சோனார். இந்த ஆளின் உற்ற நண்பர் சர்வேஆ. இவர்களின் சூழ்ச்சிகள் பற்றி எமக்கு நல்லாகவே தெரியும் ராசா. 

ஆக இவர் மாத்திரம் வெளிநாடில் வாழும் செல்வினீடம் அட்வைஸ் கேட்து அங்கேஆ சூளிச்கள் செய்யலாம். ஆனால் யாழ்ப்பாணத்த்து தமிழர் கொழும்பில் வாழ்ந்தபின் அங்கு சென்றால் அவருக்கு பிரச்னை.

அன்பின் சுண்டல் தமிழ் தேசிய கூடமைப்பின் தலமை மீது இருக்கின்ற கோபத்ிக்காக இந்த மண்டையன் குழு மேதாவியை நீங்கள் இங்கு தர்மாவாதியாக தயவு செய்து எண்ணாதீர்கள்.

முதல் அரசியல் மட்டும் கதையுங்கோ மக்களின் வாழ்வியல் பற்றி கதையுங்கோ இங்க எதுக்கு புலிகளை இழுத்து உங்களை மிக உச்ச தமிழ் தேசியவாதிகளா காட்டுவதை நிறுந்துங்க உங்களை எங்களை விட அங்கு வாழும் மக்கள் நல்ல தொளிவா இருக்கினம் எதுக்கு எடுத்தாலும் புலிகளை பக்கத்தில் வைத்து நல்லவர்கள் ஆகும் நல்லவர்களே இதுகூட குளிர்காயும் அரசியல் தான் முதல் சாதாரண பொதுமகனா இருங்க எல்லோரின் சாயங்களும் வெளுத்து நான்கு வருடம் முடிந்து போயிட்டு .

மாற்றுக் கட்சிகளும் உள்ளூர் வேட்பாளர்களும் இருக்க எதுக்கு கொழும்பில் இருந்து வந்த விக்கினேஸ்வரனுக்கு மக்கள் வாக்களித்தார்கள்?

இது நான் உங்களை பார்த்து கேட்கவில்லை இதை அறிக்கையாக வெளியிட்டவர்களிடமே கேட்க விரும்புகிறான்.

இந்த மாகாணசபையால் வரும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம் இருக்கும் போலகிடக்கு.

எது எப்படியோ இதுவே வடக்குக்கு முதல் மாகாண சபை. இதுவே கடைசியாக அமைந்தால் எல்லோரும் வேறு ஒரு பிரச்சனையைப்பற்றி அல்லது பொது எதிரியான சிங்கலவனைப்பறி யோசிப்பார்கள்.

தமிழன் தமிழனை கொன்றதன் பாவமோ என்னமோ தெரியாது இப்பவும் ஆளுக்காள் சேறடிக்கும் வேலையை தவறாமல் செய்கிறோம்.

சூறாவளி நீங்கள் கொழும்பில் இருந்து அங்கு சென்று வாக்கு போட்டோர் பற்றி சொல்கிறீர்கள். எனது தந்தை 76 வயதில் தான் தேர்தல் நேரம் அங்கு நீக்கவேனும் என்று அங்கு போனவர். வாக்கும் போட்டார். அவர் தான் எனக்கு பல தகவல்களை தொடர்ந்து தருகின்றார் இந்த குத்து வெடுக்கள் பற்றி. உண்மையில் பலர், எனது தந்தை உட்ட்பாட தங்கள் செல்வைல் அங்கே போய் உதவுகிறார்கள். அப்படியிருக்க இவர் சொல்வது எனக்கு மிகவும் ஆத்திரத்தை உண்டுபபணியுள்ளது. நான் கூட பலதடவை இடம்பெயர்த்து பின்னர் கொழும்பில் வாழ்த்து வெளியூர் வந்தவன். இன்னும் எனது வீடு உயர் பாதுகாப்பு வலயத்தில். எனது குடும்பம் அங்கு போனால் கொழும்பில் தான் தாங்குவார்கள். ஏனென்றால் எங்களது உறவுகளின் வீடுகளும் உயர் பாதுகாப்பு வலயத்தில் தான். அப்படியிருக்க இவர் னி கொழும்பு னி யற்பாணம் னி முல்லைத்தீவு என்று பாக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்கள் தங்களுக்கான அடையாளத்தை தக்க வைக்கவும்.. தங்களின் வயிற்றுப் பிழைப்புக்கும்.. தங்களின் சுயலாபங்களை அடையவும்.. கூட்டமைப்பை பாவிக்க வெளிக்கிடுவதால்.. முரண்பாடுகள் அதிகமாகின்றன.

அதேபோல்.. தம்மை மிதவாதிகள்.. படித்தவர்கள் என்று கற்பனை செய்துகொள்ளும்.. கூட்டமைப்பின் உயர் மட்டத்தை அலங்கரிக்கும் சிலரும்..  தமது அடையாளங்களையும்.. விற்பன்னங்களையும்.. சுயலாபங்களையும் முன் வைப்பதால்.. முரண்பாடு ஆழப்படுத்தப்படுகிறது.

இந்த இரண்டு தரப்புமே முதலில் தங்களின் மூளைகளை சுத்தப்படுத்தி.. சிந்திக்கும் திசை நேர்த்தியாக.. நேர்மையாக தமக்கு வாக்களித்த வாக்களிக்க உதவிய.. மக்களின் நலன்சார்ந்து இருக்க பார்த்துக் கொண்டால்.. இந்தப் பிரச்சனை ஒன்றும் வராது.

கொழும்பை மையப்படுத்தி உள்ள சில தமிழர்களை வைச்சுக் கொண்டு.. மகிந்தவை சரிக்கட்ட நினைத்தால்.. அது மிகமோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். அதுவே.. மிதவாதிகளுக்கு சாணக்கியர்களுக்கு ஆப்பாகவும் இறங்கும்.

அதேபோல்.. இந்திய நலனை மட்டும் முன்னிறுத்துவதும்.. ஆபத்து. தனது நலன் ஓரளவு பூர்த்தியாகிறது.. அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய தேவை ஏற்படும் போது... தனக்கு இன்னும்.. விசுவாசமானவர்களை முன்னுக்கு நகர்த்தும்.. கைங்கரியத்தை இந்தியா செய்யும்.

எனவே சூழ்ச்சிகளும் ஆபத்துக்களும் அடக்குமுறைகளும் ஆக்கிரமிப்புக்களும் சூழ்ந்துள்ள இன்றைய சூழலில்.. ஆளையாள்.. தங்களை தங்களின் சுயதேவைகளை முன்னிறுத்திச் செயற்படாமல்.. மக்களை.. மக்களின் தேவைகளை.. உரிமைகளை.. விடிவை முன்னிறுத்திச் செயற்படும்... சிந்தனைப் பக்குவத்தை அடைய வேண்டும்..! அதற்கு இடமில்லையேல்.. விலகி இருந்து வேறு மார்க்கங்களில் மக்களுக்காக இதய சுத்தியோடு செயற்படலாம். எப்போதும் மக்கள்.. மக்கள் நலன் தான் முதல்..! மக்கள்.. மக்கள் நலன்.. சுயலாபத்திற்கான.. முதலீடு அல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

வேறு வழியில்லை இன்னும் ஆரம்பிக்க வில்லை நாங்கள் தொடங்கிட்டம் குழு பிரிக்க இதுதான் 81 நடந்தது .

சூறாவளி நீங்கள் கொழும்பில் இருந்து அங்கு சென்று வாக்கு போட்டோர் பற்றி சொல்கிறீர்கள். எனது தந்தை 76 வயதில் தான் தேர்தல் நேரம் அங்கு நீக்கவேனும் என்று அங்கு போனவர். வாக்கும் போட்டார். அவர் தான் எனக்கு பல தகவல்களை தொடர்ந்து தருகின்றார் இந்த குத்து வெடுக்கள் பற்றி. உண்மையில் பலர், எனது தந்தை உட்ட்பாட தங்கள் செல்வைல் அங்கே போய் உதவுகிறார்கள். அப்படியிருக்க இவர் சொல்வது எனக்கு மிகவும் ஆத்திரத்தை உண்டுபபணியுள்ளது. நான் கூட பலதடவை இடம்பெயர்த்து பின்னர் கொழும்பில் வாழ்த்து வெளியூர் வந்தவன். இன்னும் எனது வீடு உயர் பாதுகாப்பு வலயத்தில். எனது குடும்பம் அங்கு போனால் கொழும்பில் தான் தாங்குவார்கள். ஏனென்றால் எங்களது உறவுகளின் வீடுகளும் உயர் பாதுகாப்பு வலயத்தில் தான். அப்படியிருக்க இவர் னி கொழும்பு னி யற்பாணம் னி முல்லைத்தீவு என்று பாக்கிறார். 

ஐயா நான் வெளியூரில் இருந்தாலும் இன்னும் இலங்கை பிரஜைதான். பல ஆண்டுகளுக்குப்பிறகு தேர்தலில் வாக்களுக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. அங்கு வாக்க்களித்தவர்கள் மனதில் இருப்பதாய் இங்கு எழுதுபவர்கள் பிரதிபலிக்கவில்லை. 

மற்றையது, தேர்தலில் எந்த காவாலி எண்டாலும் நிக்கட்டும் மக்கள் வாக்களிப்பார்கள், எனது கோமாளி வேண்டுமானாலும் அமைச்சராகட்டும் கட்சியும் தலைமையும் தெரிவு செய்தால்.

அனால் திட்டமிடல் மற்றது ஆலோசனைக்கு திறமையானவர்கள்தான் வேண்டும். அதில் என்ன தவறு இருக்கிறது? வடக்கில் படித்த திறைமை சாலைகளில் அதிகமானோர் சுயநல வாதிகள்.

படித்ததை வைத்து முடிந்தவரை சீதனம் வாங்கிக்கொண்டு மேலதிகமா எவ்வாறு பணம் சம்பாதிப்பதென்று யோசிப்பார்கள். 

ஆக சுரேஷ் பிறேமச்சந்திரனோ அல்லது வேறு அரசியல் தலைவர்களோ பதவிக்கும் கதிரைக்கும் அடிபடட்டும் அது எங்கள் தலை எழுத்து.

வேலைகளை செய்யவும் அபிவிருத்தியை மேன்னேடுக்கவும், அதிகாரிகளும் ஆலோசகர்களும் தரமானதாக இருக்கவேண்டும். வெறும் மூன்றாந்தர அரசியல் சிந்தனையில் எழுதப்படும் இந்த மாதிரி கருத்துக்கள் ஆரோக்கியமானது இல்லை.

நன்றி சூறாவளி, நாங்கள் இவளவு தொலைவில் இருந்தாலும் அங்கிருப்போருக்கு என்றும் உதவுவோம். ஒரு நாள் மீண்டும் அங்கு சென்று உரிமையுடன் தலைநிமிர்த்து வாழும் நாளும் வரவேண்டும் என்று விரும்புகின்றோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைக் கிழக்கு மாகாண மக்கள் கேட்டால் பிரதேச வாதம்... ஆனா வடக்கு மக்கள் கேட்டால் தேசியமா ??? போடாங் கொய்யாலே???

இந்த ஆளுக்கு ஏன் இந்த வேலை.இவர் என்ன ஆக போகிறாரோ, ஐயோ பரிதாபம்!

கிழக்கு, கிழக்கு என்று ஆப்பிறுக்கி அவியாமல் பலர் யாழில் புயத்துவதை குறைத்துவிட்டர்கள். இப்போது கொழும்பு.

இவர்களா புலிகளின் தலைவர்போல மலையக மக்கள், முஸ்லீம் மக்கள் போல எல்லோரையும் சேர்த்து தீர்வுகாண வேண்டும் என்பவர்கள்?

சம்பந்தரை விழுத்த சுரேசுக்கு கொடி கட்டுகிறார்கள். சித்தார்த்தன் தமிழர் விரும்பாத அலுவலான மகிந்தாவின் கீழ் சத்திய பிரமாணம் எடுத்த போது அங்கும் நின்றார். ஆனால் அதை கூட்டமைப்பு தமிழரை திருப்திப்படுத்த அல்ல செய்தது. இப்போது சுரேஸ் தம்பியாருக்கு மந்திரிப்பதவி கொடுக்கவில்லை என்று பிரிந்து போகும் போது அங்கும் நிற்கிறார். இந்தக் கோமாளிகள் முதல் மந்திரிப் பதவியை விட்டுக்கொடுக்க தமிழரசுக்கட்சியில்மட்டும் தன் ஒருவன் இருக்கிறான் என்றதை பற்றி ஒருவசனம் சொல்லாதவர்கள்.  

சம்பந்தர் புலிகளைக்காட்டிக்கொடுத்ததை தாங்கள் கேட்டுக்கொண்டு நின்றுவிட்டு வந்ததாக புயத்துகிறார்கள். புலிகளின் தலைவர்தான் சம்பந்தரின் கீழ் கூட்டமைப்பை உருவாக்கினார் என்றதையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மொத்தத்தில் புலிகளின் தலைவர், எதிரி என்று தெரிந்து கொண்டே  தீர்க்க தரிசனம் இல்லாமல் தனது எதிரியை பதவியில் ஏற்றிவைத்துவிட்டு அழிந்து போனத்தாக பட்டம் கட்ட துடிக்கிறார்கள். சுத்த மடமை. அவ்வளவு முற் சிந்தனை இல்லாமல் தன்னை காட்டிகொடுத்தவரின் கையில் ஏன் கூட்டமைப்பின் தலைமையை கொடுக்கிறார் என்றதை இவர்கள் அன்று தேசியத்தலைவரிடம் கேட்டு பதில் பெற்றிருந்தார்கள் ஆயின் அதையும் இங்கே எழுதலாமே. 

Edited by மல்லையூரான்

அதுதான் போகுது சம்பந்தரை விழுத்த கஜேந்திர குமாரும் சுரேசும் இணைய முடியும் என்றும் எழுதுகிறார்கள். கஜேந்திர குமார் இனி நாளைக்கு தொடக்கம் கால்சட்டையை தலையில் கட்டிக்கொண்டு நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஜேந்திரகுமாருக்கு பிரமிக்கத்தக்க வாக்கு வங்கி இருப்பதுதான் நாடாளுமன்ற தேர்தலில் தெளிவானதே.. சுரேஷூடன் இணைந்தால் சம்மந்தர் தாக்குப்பிடிக்க முடியுமா? வெற்றி நமதே!!

கிழக்கு, கிழக்கு என்று ஆப்பிறுக்கி அவியாமல் பலர் யாழில் புயத்துவதை குறைத்துவிட்டர்கள். இப்போது கொழும்பு.

இவர்களா புலிகளின் தலைவர்போல மலையக மக்கள், முஸ்லீம் மக்கள் போல எல்லோரையும் சேர்த்து தீர்வுகாண வேண்டும் என்பவர்கள்?

சம்பந்தரை விழுத்த சுரேசுக்கு கொடி கட்டுகிறார்கள். சித்தார்த்தன் தமிழர் விரும்பாத அலுவலான மகிந்தாவின் கீழ் சத்திய பிரமாணம் எடுத்த போது அங்கும் நின்றார். ஆனால் அதை கூட்டமைப்பு தமிழரை திருப்திப்படுத்த அல்ல செய்தது. இப்போது சுரேஸ் தம்பியாருக்கு மந்திரிப்பதவி கொடுக்கவில்லை என்று பிரிந்து போகும் போது அங்கும் நிற்கிறார். இந்தக் கோமாளிகள் முதல் மந்திரிப் பதவியை விட்டுக்கொடுக்க தமிழரசுக்கட்சியில்மட்டும் தன் ஒருவன் இருக்கிறான் என்றதை பற்றி ஒருவசனம் சொல்லாதவர்கள்.  

சம்பந்தர் புலிகளைக்காட்டிக்கொடுத்ததை தாங்கள் கேட்டுக்கொண்டு நின்றுவிட்டு வந்ததாக புயத்துகிறார்கள். புலிகளின் தலைவர்தான் சம்பந்தரின் கீழ் கூட்டமைப்பை உருவாக்கினார் என்றதையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மொத்தத்தில் புலிகளின் தலைவர், எதிரி என்று தெரிந்து கொண்டே  தீர்க்க தரிசனம் இல்லாமல் தனது எதிரியை பதவியில் ஏற்றிவைத்துவிட்டு அழிந்து போனத்தாக பட்டம் கட்ட துடிக்கிறார்கள். சுத்த மடமை. அவ்வளவு முற் சிந்தனை இல்லாமல் தன்னை காட்டிகொடுத்தவரின் கையில் ஏன் கூட்டமைப்பின் தலைமையை கொடுக்கிறார் என்றதை இவர்கள் அன்று தேசியத்தலைவரிடம் கேட்டு பதில் பெற்றிருந்தார்கள் ஆயின் அதையும் இங்கே எழுதலாமே. 

அதோடு மல்லை, இந்த மாமனிதர் குமார் ஐய்யா, அவர்தம் புதல்வர் கஜான் மற்றும் புலிகளுக்கு பேச்சுவார்த்தையில் உதவியவர்கள் என்று பலர் கொழும்பிலே பிறந்து வளர்த்தவர்கள். ஆனாலும் புலிகள் எங்கேலாம் அறிவும், ஆற்றலும் இருந்ததோ அதை ஒன்றிணைத்த்து மக்களுக்காக செய்யவேண்டியததை செய்தார்கள். அப்படியிருக்க இங்குள்ள சிலர் சம்பத்தர், சுமந்திரன் மீதுள்ள கோபத்தை சுரேஷ்க் போரோரின் சுயநல கருத்துக்கள் ஊடக சாதிகமுனைவது சோகத்துக்குரியது. 

சுரேஷ் திடீர் என பிரதேசவாதம் பேசுவது கருணா கிழக்கின் விடிவெளியாக புறப்ப்டததை நினணிவு படுத்துகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.