Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

heros-day-nov-27.jpg

 

கார்த்திகை திங்கள் மாவீரரை நினைவு கூறும் நாள்.. வாரம் அடங்கும்.. மாதம் என்ற வகையில் மாவீரர்களின் அவர்கள் வாழ்ந்த தேசத்தின் வரலாற்று அம்சங்களை நினைவூட்டத்தக்க ஒரு பொது அறிவுப் போட்டியை வினா - விடை வடிவில் கள உறவுகள் உங்களின் ஒத்துழைப்போடு.. நடத்தலாம் என்று எண்ணி உள்ளோம்.

 

போட்டி விதிமுறைகள்:

 

நாளுக்கு ஒரு கேள்வி என்று.. கள உறவுகள் தமக்கிடையே அமையும் புரிந்துணர்வு கொண்டு..ஓர் ஒழுங்கில்..தொடுக்க.. பதில் தெரிந்தவர்கள் தெரிந்த பதிலை எழுதலாம். அதற்கான கால அவகாசமாக கேள்வி தொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து.. 24 மணி நேரங்கள் கொடுக்கப்படும். அதன் பின் கேள்வியை தொடுத்த உறவு சரியான பதிலையும்.. சரியான பதிலை அளித்த உறவுகளுக்கு ஊக்குவிப்பையும் வழங்கலாம். அதனை அடுத்து மற்ற வினா தொடுக்கப்படுதல் வேண்டும். அதற்கிடையில் கேள்விகளைத் தொடுப்பதை மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகள் ஒரே தடவையில் பதியப்படுவதை கள உறவுகள் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். அப்படித் தப்பித் தவறி தொடுக்கும் பட்சத்தில் அதனை நீக்கிக் கொண்டு அடுத்த தடவைக்கு அதனை தொடுக்கலாம். படங்கள்.. வரலாற்றுக் குறிப்புகளுக்கான ஆதாரங்கள் வினாக்களில் விடைகளில் பாவிக்கப்படுவது வரவேற்கப்படும்.

 

** கேள்விகள் - பதில்கள் கட்டாயம்.. மாவீரரின் மேன்மை.. இலட்சியம்.. விழுமியம்.. தேசத்தின் வரலாறு பண்பாடு விழுமியம் காப்பதாகவும் களவிதிக்கு உட்பட்டதாகவும் அமைய வேண்டும்.

 

** கேள்விகள் - பதில்கள் கள உறவுகள் ஆட்சேபிக்கும் வகையில் இருப்பின் அதனை மட்டுறுத்தும் நீக்கும் திறந்த அதிகாரம் நிர்வாகத்துக்கு உள்ளது.

 

இப் போட்டி கார்த்திகை 1 இல் இருந்து 27 வரை தொடரும்.

 

நன்றி.

 

mavirar1.jpg

Edited by nedukkalapoovan

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
நல்ல முயற்சி .... !
வரவேற்கின்றேன் !
 
நன்றி நெடுக்ஸ். :)  
நல்ல முயற்சி .... !
வரவேற்கின்றேன் !
 
நன்றி நெடுக்ஸ்.  :)

செந்தமிழ் வணக்கம் நெடுக்ஸ்

 

நல்ல முயற்சி

 

களத்தில் சந்திப்போம்

 

வாழ்க வளமுடன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்கள் சம்பந்தமாக எனக்கும் அதிகம் தெரியாது......இருந்தாலும் என் ஆதரவு என்றுமிருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அமைய வேண்டிய கேள்வி வடிவங்கள் பின்வருமாறு அமையலாம்.

 

1. பல்தேர்வு வினாக்கள். (வினாவுடன் சரியான விடையுடன் கூடிய தேர்வுகள் கொடுக்கப்படுவது.)

 

2. கேள்வியைக் கொடுத்து.. பொருத்தமான விடையை கண்டறியச் சொல்வது.

 

3. பிரபல அல்லது வரலாற்றியல் வாசகத்தை தந்து இடம் விட்டு நிரப்பச் சொல்லுதல்.

 

4. படங்கள் அல்லது காணொளிகளை இணைத்து அது சார்ந்த அடையாளம் அல்லது வரலாற்றை கண்டறியச் சொல்வது.

 

5. மாவீரர்கள் உட்பட்ட.. தமிழர் வரலாற்று நாயகர்களை.. தமிழர் வீர வரலாற்றுக் குறிப்புக்களை கொடுத்து அவற்றின் தோற்றம் காலம் அவை இடம்பெற்றுள்ள ஆக்கங்கள் பற்றி கோருவது

 

6. மாவீரர் தம்மை ஆகுதியாக்கிய போர்க்களங்கள்.. சமர்கள்.. மாவீரரான வடிவம் இவை பற்றிய அறிவூட்டல்களுக்கு அமைய அவற்றை வரவிலக்கணப்படுத்தக் கேட்பது.

 

7. மாவீரர் தொடர்பான தமிழர் வரலாற்றியல்.. மரபியல் சார்ந்த பண்புகளை இனங்காட்டும் சிறந்த சிறுகுறிப்பை எழுதக் கேட்பது.

 

இந்த 7 வடிவங்களில் நீங்கள் கேள்விகளை முன்வைக்கலாம். இதன் ஆரம்பக் கேள்வியை நாங்கள் முன்வைக்கிறோம். கள உறவுகள் புரிந்துணர்வோடு இதனைத் தொடர்வீர்கள் என்று நம்புகிறோம். தினமும் ஒரு கேள்வி.. அவ்வளவே..! ஆனால் ஆரோக்கியமானதாக மாவீரர்களுக்கு மாவீரத்துக்கு தமிழர் வீர மரபுக்கு அது மதிப்பளிப்பதாக அமைதல் வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 1.

 

nadu-kal-1%282%29.jpg

 

சங்க காலத்தில் இருந்தே தமிழர் வீர வரலாற்றில் போரில் வீரமரணம் அடையும் வீரர்களை... அவர்களின் உருவம் பொறித்த..வீரக்கல் அல்லது நடுகல் நாட்டி போற்றி வழிபடும் முறை இருந்து வருகிறது. அந்த வகையில் கீழ் உள்ள நடுகற்களில் எது வீரமரணம் அடைந்த கணவனின் துக்கம் தாளாது தன்னை மாய்த்துக் கொண்ட பெண்ணை மதிக்கும் பொருட்டு நடப்பட்ட கல்லாக அமைந்துள்ளது.

 

1.

 

midle.jpg

 

2.

 

nadu-kal-3%281%29.jpg

 

3.

 

nadukal1-11-0.jpg

 

4.

nadu-kal-2.jpg

 

நடுகற்கள் குறித்த மேலதிக குறிப்புக்கள் இங்கு>>> http://tamizarvaralaru.blogspot.co.uk/2013/08/blog-post_9.html

 

இவ்வினாவுக்கான விடையை 01.11.2013 நள்ளிரவில் இருந்து 2.11.2013 நள்ளிரவு வரை அளிக்கலாம்

 

திருத்தம்: திருத்தத்திற்கான காரணம்; படங்களை குழப்பமின்றிய நிரலுக்குள் கொண்டு வர.

 

Edited by nedukkalapoovan

நான்காவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள சதிகல்.

  • கருத்துக்கள உறவுகள்

பதியின்  இழப்பின் துயரத்தால் அவருடன் அவர் வழி சென்ற
சதிகளின் நினைவுக்கல் சதிகல்

1<விடுதலை புலிகளால் முதல் பெயர் சூட்டி நடத்தப்பட்ட ராணுவநடவடிக்கை எது ?

 

2<விடுதலைப்புலிகளால் முதல் கேணல் தரம் கொடுக்கபட்ட தளபதி பெயர் என்ன ?

1<விடுதலை புலிகளால் முதல் பெயர் சூட்டி நடத்தப்பட்ட ராணுவநடவடிக்கை எது ?

 

2<விடுதலைப்புலிகளால் முதல் கேணல் தரம் கொடுக்கபட்ட தளபதி பெயர் என்ன ?

ஒருத்தரும் சொல்லேல்லை ...  நானாவது சொல்லுவம்...  :)

 

 

 

1 - ஆ க வெ  நடவடிக்கை... 

 

2- கேணல் கிட்டு அண்ணை...  !  

Edited by தயா

ஒருத்தரும் சொல்லேல்லை ...  நானாவது சொல்லுவம்...  :)

 

 

 

1 - ஆ க வெ  நடவடிக்கை... 

 

2- கேணல் கிட்டு அண்ணை...  !  

 

சரியான பதில் நன்றி .

இப்ப என்னுடைய முறை...   

 

1 -  தமிழீழ தேசிய கொடியில் புலிச்சின்னத்திற்கு பின்னால் இருக்கும் இரண்டு துவக்குகளும் எதை குறிக்கும்....?? 

 

2 -  விடுதலை  புலிகளில் வீரச்சாவடைந்த முதலாவது  "லெப்ரினன் கேணல்"  பதவி கொடுக்கப்பட்ட மாவீரர் யார்...?? 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்
1.இரண்டு துப்பாக்கிகளும் சிறிலங்கா அரச படைகளின் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை பிரதிபலிக்கிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்

2. தியாக தீபம் திலீபன் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசிய கொடியில் மஞ்சள் நிறம் எதனை குறிக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

லெ.கேணல். விக்ரர்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசிய கொடியில் மஞ்சள் நிறம் எதனை குறிக்கிறது?

 

புலிக்கொடியில் உள்ள... மஞ்சள் நிறம், தமிழர் தனித்த தேசிய இனம் என்பதை குறிக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 1 க்கான பதில் சதிகல் என்பதே சரியானது. சரியான விடையளித்த வாத்தியார் மற்றும் புயலுக்கு நன்றிகள். அவர்கள் இருவருக்கும்... மாவீரர் மலர் அன்பளிப்பாகத் தரப்படுகிறது.

 

karthikai2bpoo.jpg

 

 

இத்தோடு.. மேற்படி பொதுஅறிவுப் போட்டியில்.. சில விதிகளில் தளர்வுகள் கொண்டுவரப்படுகின்றன. கள உறவுகள் வினாக்களுக்கு சரியான விடையளிக்கப்படும் பட்சத்தில் மேலும்.. கேள்விகளை தொடுக்கலாம். நாளுக்கு இத்தனை கேள்விகள் தான் கேட்கப்படனும் என்ற விதி மற்றும் விடையளிக்க உள்ள காலம் இவற்றில் தளர்வுகள் கொண்டு வரப்படுகின்றன.

 

நன்றி.

இப்ப என்னுடைய முறை...   

 

1 -  தமிழீழ தேசிய கொடியில் புலிச்சின்னத்திற்கு பின்னால் இருக்கும் இரண்டு துவக்குகளும் எதை குறிக்கும்....?? 

 

2 -  விடுதலை  புலிகளில் வீரச்சாவடைந்த முதலாவது  "லெப்ரினன் கேணல்"  பதவி கொடுக்கப்பட்ட மாவீரர் யார்...?? 

 

1.கேடையத்துக்கு பின் வாள் இருக்கும் அதுக்கு பதிலா துவக்கு வைக்கபட்டது புலி சின்னத்துக்கு  பின்னாடி .

 

2.லெப்டினன் கேணல் விக்டர் .

 

 

எனது கேள்வி இது .!

 

3.FNCF சண்டை என்று எதை சொல்வார்கள் புலிகள் ?

Edited by அஞ்சரன்

வினா 1 க்கான பதில் சதிகல் என்பதே சரியானது. சரியான விடையளித்த வாத்தியார் மற்றும் புயலுக்கு நன்றிகள். அவர்கள் இருவருக்கும்... மாவீரர் மலர் அன்பளிப்பாகத் தரப்படுகிறது.

 

karthikai2bpoo.jpg

 

 

அன்பளிப்பிற்கு நன்றி நெடுக்ஸ்

வாழ்க வளமுடன்

 

 

இத்தோடு.. மேற்படி பொதுஅறிவுப் போட்டியில்.. சில விதிகளில் தளர்வுகள் கொண்டுவரப்படுகின்றன. கள உறவுகள் வினாக்களுக்கு சரியான விடையளிக்கப்படும் பட்சத்தில் மேலும்.. கேள்விகளை தொடுக்கலாம். நாளுக்கு இத்தனை கேள்விகள் தான் கேட்கப்படனும் என்ற விதி மற்றும் விடையளிக்க உள்ள காலம் இவற்றில் தளர்வுகள் கொண்டு வரப்படுகின்றன.

 

நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்

1.கேடையத்துக்கு பின் வாள் இருக்கும் அதுக்கு பதிலா துவக்கு வைக்கபட்டது புலி சின்னத்துக்கு பின்னாடி .

2.லெப்டினன் கேணல் விக்டர் .

எனது கேள்வி இது .!

3.FNCF சண்டை என்று எதை சொல்வார்கள் புலிகள் ?

கட்டைக்காடு

தமிழீழத்தில் முதல் முதலாக தமிழீழ கலைஞ்சர்களால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட விடுதலை பாடல் எது ? 

கட்டைக்காடு

 

சரியான விடை நந்தன் உங்களுக்கு ஒரு பலத்த கரகோஷம் .அத்துடன் பரிசும் .

 

photo.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தில் முதல் முதலாக தமிழீழ கலைஞ்சர்களால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட விடுதலை பாடல் எது ? 

சரியோ பிழையோ தெரியல அண்ணா
 
 எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.