Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாசிலாந்து மன்னரை வரவேற்க அரை நிர்வாண நடனம் - மாணவிகளை தயார்படுத்தும் சிறிலங்கா அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

swaziland-women.jpg

கொமன்வெல்த் மாநாட்டுக்கு வரும் சுவாசிலாந்து அரச குழுவை வரவேற்க அந்த நாட்டு வழக்கப்படி, பாடசாலை மாணவிகளை மேலாடையின்றி அரைநிர்வாணமாக நடனமாடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயார்படுத்தி வருவது, பெற்றோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிறிலங்கா கல்வி அமைச்சு குளியாப்பிட்டியில் உள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றுக்கே, இந்த நடனத்துக்கான பொறுப்பை ஒப்படைத்துள்ளது. 

இதில் பல நடனங்கள், சுவாசிலாந்து கலாசாரப்படி – அரைநிர்வாணமாக ஆடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

இதுபோன்ற நடனங்களுக்கு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ள கல்வி அமைச்சுக்கு உரிமையில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா போன்ற நாடுகளில் இது ஏற்றுக்கொள்ளக் கூடியதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதனிடையே, கொமன்வெல்த் மாநாட்டுக்கு வரும் 54 நாடுகளையும் அந்தந்த நாட்டு கலாசார வழக்கப்படி வரவேற்பதற்கு, 54 பாடசாலை மாணவர்களுக்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மன்னராட்சி நடைபெறும் சுவாசிலாந்தில் மன்னர் முன்பாக இளம்பெண்கள் மேலாடையின்றி, நடனமாடுவது வழக்கமாகும். 

சுவாசிலாந்து மன்னர் அண்மையில் தான் 15வது பெண்ணைத் திருமணம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20131027109321

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எயிட்ஸ் பாதிப்புள்ள நாடுகளில் இதுவும் ஒன்று. விரைவில் சிறீலங்காவையும் அதில் சேர்த்துக் கொள்ள மகிந்த நடவடிக்கைகள் எடுத்து வருவது தெரிகிறது. விபச்சாரத்தை சட்டம் ஆக்கிறார். பாலுறவுக்கான வயதெல்லையைக் குறைக்கிறார்.. தமிழ் பெண்களை சிங்களப் படைகளுக்கு பாலியல் இரையாக்கிறார்..  கிறீஸ் பூதத்தை அனுப்பி முஸ்லீம் தமிழ் பெண்களை கெடுக்கிறார். இப்போ.. சுவாஸிலாந்து மன்னருக்கு அரை நிர்வாண நடனம்..! மகிந்த சிந்தனையின் எயிட்ஸ் பரப்பும்.. தார்ப்பரியமே அந்தோ சிறந்தது... இந்த உலகில்..! :icon_idea:

HIV/AIDS remains one of the major challenges to Swaziland’s socioeconomic development. The epidemic has spread relentlessly in all the parts of the country since the first reported case in 1986.[1]

Traditional Swazi culture discourages safe sexual practices, like condom use and monogamous relationships. There is a cultural belief in procreation to increase the population size, and Swazis believe a woman should have a minimum of five children and that a man's role is to impregnate as many partners as he can. Men may never get married but still have many children from multiple partners.[3] The few men who do get married often practice polygamy. Sexual aggression is common, with 18% of sexually active high school students saying they were coerced into their first sexual encounter.[1]

Many thousands of children have been orphaned by AIDS, and only 22% grow up in two-parent families.[9]

http://en.wikipedia.org/wiki/HIV/AIDS_in_Swaziland

Edited by nedukkalapoovan

அவனவன் சமுதாயத்தில் அவனவன் பண்பாடு மதிக்கப்படும், போற்றப்படும், பின் பற்றப்படும். தமிழருக்கும்  தங்களுக்கு என்று ஒரு பண்பாடு இருக்கிறது. வடக்கு-கிழக்கில் அவர்களின் விழாக்களில் கொடுக்கு கட்டிய கரகாட்டத்தை திணித்தவர்கள் சுவாசி மன்னருக்கு அவர்களின் மேலாடையில்லா நடனத்துடன் வரவேற்பளிப்பது பண்பாட்டை மதிக்கும் செயலா? அல்லது புத்தத்திற்கு இந்த நாடு என்று பறை தட்டும் திருடர் சுவாசிலாந்து மன்னரிடமும் 50% வீதம் கேட்டு வாங்க செய்யும் சதியா? 

கலாலுக்கு தெய்யற  தெய்யற பாடும் பொடுபலசேனைக்கு இந்த பள்ளியில் என்ன நடக்கிறது என்பது தெரியாதா? மனோகனேசன் சுன்னத் செய்யாமல் பள்ளிவாசல் இடிப்பை பற்றி பேசக்கூடாது என்ற அஸ்வருக்கு, கசினோ திறக்கூடாது என்று கொடி பிடித்தவர்களுக்கு இது மட்டும் கல்லாக, நிக்காப்பாக இருக்க போகிறது என்றா வாய் பேசவில்லை?  

http://www.flickr.com/photos/33685903@N02/3859819088/lightbox/

Edited by மல்லையூரான்

அஸ்வர் skin graft செய்துகொண்டுதான் பொது நலவாய மகாநாட்டுக்கு போவாராகும்.

சகிக்கமுடியல .............. :icon_mrgreen:

இது நம்ப முடியாத ஒரு செய்தி. இப்படியான ஏற்பாடு நடப்பதற்கு வாய்ப்பு ஏதும் இல்லை. புதினப்பலகை பொறுப்போடு செய்திகளை வழங்குவதாகவே நான் பொதுவாக கருதுவது உண்டு. இந்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இது நம்ப முடியாத ஒரு செய்தி. இப்படியான ஏற்பாடு நடப்பதற்கு வாய்ப்பு ஏதும் இல்லை. புதினப்பலகை பொறுப்போடு செய்திகளை வழங்குவதாகவே நான் பொதுவாக கருதுவது உண்டு. இந்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

முதலில் பத்திரிகையில் வந்த செய்தி உண்மையாக கொள்ளலாம். 

அது பிழையாக ஒரு உறவு சந்தேகித்தால் தனது விவாதத்தை முன் வைக்கலாம்.

இது ஒரு ஆசியர்சங்க கருத்துடன் இணைப்பட்டிருப்பதாலும், எதிர் தரப்பில் விவாதம் ஒன்றும் இல்லாமல் அரசை குற்றத்தில் இருந்துவிட்டுவிக்கத்தக்க முறையில் மட்டும் சந்தேகத்தை எழுப்புவத்தாலும் அந்த சந்தேகம் கனதி இல்லாதது. 

இப்படியான சந்தேகம் அரசர் ஆட்சி வந்த பின்னர் நடந்த இதை ஒத்த நிகழ்வுகளான  இலங்கையில் விபசாரம் சட்டப்படியாக்கப்படுவதைப் பற்றியோ, சூது விளையாட்டைப்பற்றியோ, வெள்நாட்டு பிரஜை ஒருவரை வன்முறை செய்து அவரின் துணையை கொலை செய்த பிரதேச சபைத்தலைவரை மன்னிப்பதையோ, சிராணியை பதவியில் இருந்து நீக்கியதையோ பற்றி சந்தேகங்களை எழுப்பவில்லை. நாட்டில் பல நம்ப முடியாதவை தினமும் நடக்கின்றன. என்வே "அது நடக்க முடியாதே" என்ற சந்தேகம் ஒரு விவாதப் பொருள் அல்ல. அத்தகைய விவாதம் 54 நாடுகளுக்கும் அவர்களின் பண்பாடுகளுடன் வரவேற்பை நிகழ்த்தும் பொறுப்பு 54 பள்ளிகளுக்கு அளியக்கப்பட்டதா என்பது முதலில் ஊர்ஜிதம் செய்ய வேண்டும். இந்த மன்னர் சென்ற தடவை இலங்கை வந்த போது இலனகையின், சர்வதேசத்தின் பாரம்பரியங்கள் கைவிடப்பட்டுத்தான் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. 

54 நாடுகளையும் வரவேற்கும் பொறுப்பு 54 பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட செய்தி உண்மையாக இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு எமது தமிழ் ஊடகங்கள் செய்த அயோக்கியத்தனமே இந்த அரை நிர்வாண நடனம் பற்றிய செய்தியாக இருக்கும்.

சுவாசிலாந்தில் ஆடுகிறார்கள் என்பதனால் இலங்கைப் பெண்களை அப்படி ஆடச் சொல்லி கேட்க முடியாது. அப்படிக் கேட்டால், அடுத்த நிமிடமே மகிந்த ஆட்சியை இழப்பார். மனிதரைக் கொன்றாலும், மாட்டைக் கொல்வதை தடுக்கச் சொல்லி தீக்குளிக்கின்ற ஒரு நாடு பற்றி நாம் பேசுகிறோம் என்பதை மறக்கக் கூடாது.

இன்னும் ஒரு செய்தி. சுவாசிலாந்தில் ஆடையோடு ஆடுகின்ற பாரம்பரிய நடனங்களும் உண்டு.

நீங்கள் உங்களை நமப சொல்கிறீர்கள். அது யாழைப்பொறுத்தது. ஊடகங்களா, சபேசனா யாழில் இதுவரையில் நம்ப கூடியதாக காணப்பட்டவர்கள் என்பதை அது பொறுத்தது. அதையல்ல நான் மேலே எழுதியிருப்பது.. நான் அதில் கவனமாக சொல்லியிருக்கிறேன்.  நீங்கள் அதைக் கூற முதல் அதன் நிரூபணத்தைதான் நான் கேட்டிருந்தேன்.  வெறுமனே அரசை நிரபராதியாகி அரசை காப்பற்ற விதைக்கும் சந்தேகங்களை யாரும் சட்டை செய்வதில்லை. இந்த ஆசியர் சங்கம் தான் பிழைவிட்டதாக அல்லது அந்த செய்தில் தனது பெயர் தவறாக கொடுக்கப்படிருக்கிறதாக அறிக்கை வெளிவிட்டால் அதௌ இங்கே பதியவும். 

சுவாசிலாந்தில் ஆடுகிறார்கள் என்பதனால் இலங்கைப் பெண்களை அப்படி ஆடச் சொல்லி கேட்க முடியாது. அப்படிக் கேட்டால், அடுத்த நிமிடமே மகிந்த ஆட்சியை இழப்பார். மனிதரைக் கொன்றாலும், மாட்டைக் கொல்வதை தடுக்கச் சொல்லி தீக்குளிக்கின்ற ஒரு நாடு பற்றி நாம் பேசுகிறோம் என்பதை மறக்கக் கூடாது.

மகிந்தா மன்னர் ஆட்சியை நோக்கி போகிறார். ய்தை நான் அல்ல சொல்வதுலரச சகோதரகளே. இதுவெல்லாம் பதையில் அவரை பாதுகாக்கும் முயற்சியாக மட்டும்தான் காணப்படும். அவர் செய்தவை ஒன்றல்ல இரண்டல்ல. அவைக்கு இதுவரையில் அவர் பதவி இழக்கவில்லை. 150,000 தமிழரை 6 மாததிற்குள் கொன்றார். தமிழரே அதைப்பற்றி எழுத மறுக்கிறார்கள். 

இன்னும் ஒரு செய்தி. சுவாசிலாந்தில் ஆடையோடு ஆடுகின்ற பாரம்பரிய நடனங்களும் உண்டு.

இங்கே நாங்கள் நாடுகளின் பாரம் பரியங்களை விவாதிக்கவில்லை. பள்ளிக்கு என்ன கட்டளை கொடுக்கபட்டது என்பது பற்றி சம்பந்த பட்ட ஆசிரியர் சங்கம் எழுப்பிய கேள்விகளைப் பற்றியதே இந்த விவாதம்.  இலங்கையில் பரத நாட்டியமும், கொடுக்கு கட்டிய கூத்தும் பாரம்பரியம். ஆனால் அரச  மாளிகை பரத நாடியம் ஆடப்பட்டால் அதை கவனிப்பதில்லை. மன்னர் எதை கவனிப்பர் என்பதில்தான் அங்கு எத்தனை வகை நடனங்கள் உணடு என்பதின் பொருள் தங்கும். மிகுதி எல்லாம் விக்கி பீடியா கட்டுரைகள் மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தூயவன்!

இந்த இணைப்பிலிருந்து எனக்கு புரிகிற விடயம் எதுவென்றால், நான் ஊகித்தது போன்று, 54 பாடசாலைகள் 54 நாடுகளின் கலாச்சார நடனங்களை ஆடும்படி கேடக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் குளியாப்பிட்டி மகாவித்யாலத்திற்கு சுவாசிலாந்து வந்திருக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஊடகங்கள் குசும்பு விளையாட்டை செய்கின்றன.

சுவாசிலாந்து நடனம் என்பதற்காக அரைநிர்வாணமாக ஆட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. இலங்கையில் அப்படிக் கேட்க முடியாது. நூறு தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொல்லலாம். ஆனால் ஒரு சிங்களப் பெண்ணை வெளிநாட்டவர் முன் அரைநிர்வாணமா ஆடு என்று கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் மகிந்த தொலைந்தார்.

மல்லை! இலங்கையின் நிலைமை தெரியாது போன்று நடித்து என்னுடன் அர்த்தமற்ற விதண்டாவாதம் செய்ய வேண்டாம். அதில் இருவருக்கும் பயனில்லை.

மனிதரைக் கொன்றாலும், மாட்டைக் கொல்வதை தடுக்கச் சொல்லி தீக்குளிக்கின்ற ஒரு நாடு பற்றி நாம் பேசுகிறோம் என்பதை மறக்கக் கூடாது. 

இதை போன்று முழு பூசனிக்கயை சோற்றில் மறைப்பது என்பது எதுவும் இல்லை. இதில் தான்சபேசன் முன்னின்று அரசை காப்பற்றும் சந்தேகங்களை விதைப்பதில் ஆரவம் காட்டி தனது நம்பிக்கையை வீண் அடிப்பவர்.  

1.புத்தத்தில் மாடு சாப்பிடக்கூடாது என்று எங்கும் சொல்லி இல்லை.

2.மாட்டை கொல்வதை தடுப்பது மற்றைய உயிர்களை கொலை செய்தல்ல. தன் உயிரையும் சேர்த்து. 

3. அதேநேரம் மனிதரை கொல்லாமல் என்பது, அவர்களை பாலியல் வன்முறை செய்யலாம் என்பதும் ஆனால் நிர்வாணம் செய்ய கூடாது என்பதை சொல்லாது. பல்லாயிரம் நிர்வாணகொலைகளை புரிந்ததை பதிந்த ஊடகங்களை தடை செய்து ஊடகவியலாரையும் கொலை செய்த  நாடு என்பதைதான் சபேசன் இதில் மறைக்கிறார்.

4.பிக்கு ஒரு மத வேறியன். சபேசன் இதுவரயில் வாதாடி வந்த முஸ்லீம் மக்களுக்கு எதிராக, கலாலுக்கு எதிராக செய்த தற்கொலையை தன் விதண்ட வாதத்தால் சபேன் மறுக்கிறார்.

நன்றி தூயவன்!

இந்த இணைப்பிலிருந்து எனக்கு புரிகிற விடயம் எதுவென்றால், நான் ஊகித்தது போன்று, 54 பாடசாலைகள் 54 நாடுகளின் கலாச்சார நடனங்களை ஆடும்படி கேடக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் குளியாப்பிட்டி மகாவித்யாலத்திற்கு சுவாசிலாந்து வந்திருக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஊடகங்கள் குசும்பு விளையாட்டை செய்கின்றன.

சுவாசிலாந்து நடனம் என்பதற்காக அரைநிர்வாணமாக ஆட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. இலங்கையில் அப்படிக் கேட்க முடியாது. நூறு தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொல்லலாம். ஆனால் ஒரு சிங்களப் பெண்ணை வெளிநாட்டவர் முன் அரைநிர்வாணமா ஆடு என்று கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் மகிந்த தொலைந்தார்.

மல்லை! இலங்கையின் நிலைமை தெரியாது போன்று நடித்து என்னுடன் அர்த்தமற்ற விதண்டாவாதம் செய்ய வேண்டாம். அதில் இருவருக்கும் பயனில்லை.

சபேசனின் விவாதம் பற்றி ஆசியர் சங்கமோ, பெற்றார்களோ சட்டை செய்யவில்லை. அவர்களுக்கு சுவாயில் இருக்கும் மற்றைய நடனங்களை ஆடலாம் என்று அரசில் இருந்து யாரவது இதுவரையில் கூறவில்லை. அத்னால்த்தான் அவர்களின் கவலை செய்தியானது. அதை பற்றியதுதான் விவாதம். 

Edited by மல்லையூரான்

சுவாசிலாந்து கலாச்சார நடனங்களின் நிகழ்வுகளை இங்கு இணைத்திருந்தேன்.

காணவில்லை.   :D

மல்லை! எழுதியவர் யார் என்பதை விடுத்து என்ன எழுதியிருக்கிறார் என்பதை வைத்து நீங்கள் உங்கள் கருத்துக்களை வைக்கப் பழகினால், அது சிறப்பாக இருக்கும்.

"மனிதரைக் கொல்லும், ஆனால் மாட்டை வெட்ட விடாது" என்றும் "நூறு தமிழச்சிகளை வல்லுறவு செய்து கொல்லும், ஆனால் ஒரு சிங்களப் பெண்ணை அரை நிர்வாணமாக ஆட விடாது" என்று எழுதுவதை சிறிலங்காவிற்கு ஆதரவான எழுத்து என்று விளங்கிக் கொள்கின்ற ஓரே ஆள் நீங்களாக மட்டும்தான் இருப்பீர்கள்.

உங்களுக்கு உள்ள மனப்பிரச்சனையில் இருந்து விடுபட்டு சாதரணமாக வாருங்கள். நல்ல விவாதங்கள் எம்மை வளர்க்கட்டும்.

இதில் இன்னொன்றைக் கவனிக்க வேண்டும். அந்த விடயம் பற்றி பொதுவான இலங்கையின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை. ஏதோ ஒரு கிசுகிசு தளம் இதை வெளியிட்டிருக்கிறது. அதை எமது தமிழ் ஊடகங்கள் வழமை போன்று மொழி பெயர்த்திருக்கின்றன.

பொய்யான ஒரு செய்தியை வைத்து நாமும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தச் செய்தியை நம்புகின்ற அளவிற்குத்தான் சிறிலங்காவின் சமூக, அரசியல் கட்டமைப்பை சிலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்தான் என்பது இதில் வருந்தத்தக்க ஒரு விடயம்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் வாதத்தை என்னால் உணரக்கூடியதாக இருக்கு.. மல்லைதான் வீண் விவாதம் செய்கிறார்.. :o

உண்மையிலேயே அரை நிர்வாண ஆட்டம் நடந்து முடிந்தால்தான் தமிழ் ஊடகங்கள் செய்தி போட வேண்டும்.. :unsure: அப்படியே செய்தி போட்டாலும் அதுவும் போலிச் செய்தியாகவே கருதப்படும்.. :rolleyes: ஏனெனில் காணொளியை தப்பிலி இணைக்க அதையும் நிர்வாகம் நீக்கிவிடும்.. :D இறுதி வெற்றியும் சபேசனுக்கே.. :icon_idea:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் புதினப்பலகையைச் சபேசன் திட்டினார், பிற்பாடு தமிழ் ஊடகங்களின் ஆயோக்கியம் என்றார்... என்ன நடக்கின்றது என்று புரியவில்லை. புதினப்பலகை அங்கே பெற்றோருக்கு ஏற்பட்ட குழப்பம் பற்றித் தான் சொல்கின்றது. வேறு ஒன்றும் திரித்துச் சொல்லவில்லையே. அதில் என்ன தமிழ் ஊடகங்களில தவறுண்டு. மேற்குறித்த சிங்கள இணையசான்னது போன்று தானே தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.

மனித மாமிசம் தின்ற கீழ்நாட்டுச் சிங்களவர்களுக்கு அரை நிர்வாணம் மட்டுமல்ல, முழு நிர்வாணமும் பெரிய விடயமாக இருக்காது. இறந்த உடல்களைக் கூடப் பாலியல் சிந்தனையோடு நோக்கும் குணம் அங்கிருந்து தான் அவர்களுக்கு வந்திருக்க வேண்டும்.

எதிரியை வெல்ல வேண்டும் என்றால், அவனுடைய சமூக, அரசியல், உளக் கட்டமைப்பை புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் வெல்ல முடியாது.

சீரியசாக கேட்கிறேன்! நீங்களெல்லாம் சிங்கள அரசு தன்னுடைய மாணவிகளை அரைநிர்வாணமாக ஆடச் சொல்லிக் கேட்டிருப்பதாக உண்மையாகவே நம்புகிறீர்களா???!!!!!!

தூயவன்! சிறிலங்கா அரசு மாணவிகளை அரைநிர்வாண நடனம் ஆடுவதற்கு தயார்படுத்துவது பற்றி குழப்பம் ஏற்பட்டுள்ளதாக புதினப்பலகை எழுதியிருக்கிறது. அதாவது சிறிலங்கா அரசு தன்னுடைய மாணவிகளை அப்படி தயார்படுத்துகிறது என்று எழுதுகிறது. இதையே நான் குறிப்பிட்டேன்.

அத்துடன் சிங்கள இணையத்தில் உள்ள ஆங்கிலச் செய்தியின் உள்ளடக்கத்தில் அரைநிர்வாண நடனம் ஆடும்படி கேட்கப்பட்டுள்ளதாக இல்லை. தலைப்பில் மட்டும் அப்படி இருக்கிறது.

இது ஒரு ஊடகத்தின் குசும்புத்தனம். அவ்வளவுதான். இதை யாரும் உண்மையாக கருத மாட்டார்கள். அப்படிக் கருதினால் அவர் சிறிலங்காவை சுனாமி வந்ததன் பின்பு செய்தியில் மட்டும் அறிந்த ஒருவராக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை வெல்ல வேண்டும் என்றால், அவனுடைய சமூக, அரசியல், உளக் கட்டமைப்பை புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் வெல்ல முடியாது.

சீரியசாக கேட்கிறேன்! நீங்களெல்லாம் சிங்கள அரசு தன்னுடைய மாணவிகளை அரைநிர்வாணமாக ஆடச் சொல்லிக் கேட்டிருப்பதாக உண்மையாகவே நம்புகிறீர்களா???!!!!!!

சபேசன்.. ஒரு கேள்வி..

ஃபிரான்சில் கல்வி அமைச்சர் பின்வருமாறு சொல்கிறார் என வைத்துக்கொள்வோம்...

"பள்ளி மாணவர்கள் அனைவருமே கட்டாயமாக நீச்சல் பயிற்சியில் ஈடுபட வேண்டும்."

இப்போது அல்ஜீரிய ஊடகம் செய்தி போடுகிறது..

"ஃபிரான்சின் முஸ்லிம் மாணவிகளை நீச்சல் உடை அணியச் சொல்லும் அமைச்சர்!" :D

செய்தி சரியா தவறா? :rolleyes:

அப்படி சொல்வது ஊடக தர்மம் இல்லை. நீச்சல் உடையிலும் பலவகை உண்டு. உடலை மறைக்கும் உடைகளும் உண்டு. அதை தேர்வு செய்யும் உரிமையும் ஒரு பெண்ணுக்கு உண்டு. ஆனால் இவற்றை மறைத்து, அத்துடன் நீச்சல் பயிற்சி என்கின்ற உண்மையான நோக்கத்தையும் மறைத்து, ஒரு ஊடகம் இப்படி செய்தி வெளியிட்டால் அது தவறு. இப்பயான செய்திகைள இங்கே யாழ் களத்தில் கருப்புப் பட்டியலில் உள்ள ஊடகங்கள்தான் வெளியிடும்.

சுவாசிலாந்து மன்னரை வரவேற்கும் பொறுப்பு ஒரு பாடசாலைக்கு வழங்கப்பட்டதை, அரைநிர்வாணம் ஆடும்படி கேட்கப்பட்டதாக செய்தி வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. இப்படியான ஊடகங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்.

கண்ணை மட்டும் காட்டும் நீச்சல் உடையும் உள்ளதா சபேசன்? :D

ஜேர்மனியில் என்ன மாதிரி என்று தெரியவில்லை.. ஆனால் கனடாவில் கடைகளில் சில பத்திரிகைகள் வைத்திருப்பார்கள்.. நடிகைகளின் அந்தரங்கங்கள், படங்கள் என்று போட்டு பார்க்கவே கலாதியாக இருக்கும்.. அவை மூன்றாந்தர பத்திரிகைகளாக கருதப்படுவதில்லை.. நீங்கள் இங்கு வந்தால் மிகவும் வெட்கப்படுவீர்கள்.. :D

இதை வாசிக்க எனக்கே அச்சம் ,மேடம்,நாணம் ......................மன்னிக்கவும் மடம்............... :D

ஓகே அந்த படங்களை போடும்வரை விவாதம் செய்யுங்கள் ஐயாம் வெயிடின்க் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஓகே அந்த படங்களை போடும்வரை விவாதம் செய்யுங்கள் ஐயாம் வெயிடின்க் :D

நானும் உள்ளேன் ஜயா  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓகே அந்த படங்களை போடும்வரை விவாதம் செய்யுங்கள் ஐயாம் வெயிடின்க் :D

நானும் உள்ளேன் ஜயா   :D

என்னமாதிரி? களத்திலை இறங்கட்டே? எதுக்கும் மேலிடத்தை  கேட்டுச்சொல்லுங்கோப்பா!!!! பிறகு ஒண்டு கிடக்க இண்னொண்டாயிடும்.... :icon_mrgreen:  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.