Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேல்மாகாணத்தில் எங்களை பலவீனபடுத்தாதீர்கள் - பிரதான தமிழ் கட்சிகளுக்கு மனோ கணேசன் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேல்மாகாணத்தில் எங்களை பலவீனபடுத்தாதீர்கள் - பிரதான தமிழ் கட்சிகளுக்கு மனோ கணேசன் தெரிவிப்பு
28 அக்டோபர் 2013


மேல்மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு  கொழும்பில் நேரடியாக போட்டியிடுமா அல்லது உங்கள் கட்சிக்கு ஆதரவு வழங்குமா என்று என்னை பலர் கேட்கிறார்கள். இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? இந்த கேள்வியை கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனிடம் கேளுங்கள் என்று நான் சொல்கிறேன். அதேபோல் சேவல் சின்னம் மேல்மாகாணத்தில் களமிறங்குமா என்றும் என்னிடம் கேட்கிறார்கள். இதற்கும் நான் என்ன சொல்ல முடியும்?  இதுபற்றி சேவலுக்கு  சொந்தக்காரரான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கேளுங்கள்  என்றுதான் நான் கூறியுள்ளேன்.

சமீபகால வடமாகாண, சப்ரகமுவ மாகாண  தேர்தல் வரலாறுகளை எடுத்து பார்த்து, மேல்மாகாணத்தில் எங்களை பலவீனப்படுத்தாமல் இருக்கும் கடப்பாடு பெரியவர் சம்பந்தனுக்கும், நண்பர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் உள்ளது. அதை அவர்கள் செய்யவேண்டும். ஆனால், அவர்கள் அதை மறந்து செயல்பாட்டாலும், அதையிட்டு  நான் என்ன செய்ய முடியும்?  அவர்களுக்கு எதிராக நான் நீதிமன்றத்தில் வழக்கா தொடர முடியும்? எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கும் இந்நாட்டின் எந்த ஒரு தொகுதியிலும் போட்டியிட சட்டப்படி உரிமை இருக்கின்றது. அதை நான் சட்டம் போட்டு தடுக்க முடியாது. கடந்த காலத்தில் நாங்கள் அவர்களுக்கு செய்துள்ளதை சுட்டிகாட்டி, மேல்மாகாணத்தில் எங்களை பலவீனப்படுத்தாமல் இருப்பதற்கு, கூட்டமைப்புக்கும், இதொகாவுக்கும் இருக்கின்ற கடப்பாட்டை ஞாபகப்படுத்த மட்டுமே எனக்கு முடியும்.  அதையே இந்த கண்ணதாசன் மன்ற மேடையிலிருந்து நான் இன்று செய்கிறேன்.

இந்த இரண்டு கட்சிகளை தவிர இங்கு போட்டியிட போவதாக அறிக்கை விடும் சில சில்லறை அமைப்புகளை நாங்கள் கணக்கில்கூட எடுப்பது இல்லை. நாங்கள் எங்கள் கட்சியை நம்பித்தான், எங்கள் மக்களை நம்பித்தான் போட்டியிடுகிறோம். ஏனென்றால் மேல்மாகாணத்தில் நமது மக்கள் நொந்து போயிருந்த அந்த நெருக்கடிமிக்க துன்பம் நிறைந்த வேளையில் மக்களுடன் துணை இருந்தது இந்த மனோ கணேசன்தான் என்பது இங்கு வாழும் அனைத்து தரப்பு தமிழ் பேசும் மக்களுக்கும் தெளிவாக தெரியும். ஆகவே மேல்மாகாணத்தில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கும் கடப்பாடு தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கின்றது. அதை அவர்கள் செவ்வனே செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.    

கொழும்பு தமிழ் சங்கத்தில் கவிஞர் வாலி அரங்கம் என்ற பெயரில் மறைந்த இலங்கை ஊடகவியலாளர்கள் செ. நடராஜா,  ரவிவர்மன் ஆகியோருக்கு, அகில இலங்கை கண்ணதாசன் மன்றம் நினைவஞ்சலி கூட்டம் நடத்தியது. மன்ற தலைவர் வேலணை வேணியன் ஏற்பாட்டில் சண், குகவரதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டமைப்பு எம்பி விநாயகமூர்த்தி, கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி, ஜமமு பிரதி தலைவர் குமரகுருபரன், பிரச்சார செயலாளர் பாஸ்கரா, ஓய்வு பெற்ற போலிஸ் அத்தியட்சகர் அரசரத்தினம், தினக்குரல் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம், வீரகேசரி நாளிதழ் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன், தினக்குரல் வாரமலர் பிரதம ஆசிரியர் பாரதி உட்பட பெருந்தொகையினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பிரதம அதிதி உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,            

இன்று பல தமிழ் அரசியல்வாதிகள் தங்களை சாதனையாளர்களாக அறிவித்துக்கொண்டு பதவிகளையும், பட்டங்களையும், மலர் மாலைகளையும் கேட்டு வாங்கி சூட்டிகொள்கிறார்கள். ஏனெனில் பகிரங்கமாக சமூகத்துக்கு தெரிவது அரசியல்வாதிகளின் முகங்கள்தான். தமிழ் தேசிய அரசியல் போக்கை நிர்ணயிப்பதில் தமிழ் ஊடகவியலாளர்களின் பங்கு பலவேளைகளில் பகிரங்கத்துக்கு வருவதேயில்லை. இப்படி பங்களித்த ஊடகவியாளர்கள் வரிசையில் வீரகேசரி நடராஜவுக்கும், தினக்குரல் ரவிவர்மனுக்கும் வெவ்வேறு  தளங்களில் வரலாற்று பதிவு பெருமைகள் உண்டு,

வேலணை வேணியன் தள்ளாத வயது வயோதிபர் அல்ல. அவர் எங்கள் கட்சியின் முன்னணி இளைஞர். அவர் சமீபத்தில் ஆர்வமிகுதியால் எதிர்வரும் மேல்மாகாணசபை தேர்தலில் நமது கட்சி போட்டியிடவேண்டிய பாங்கு பற்றி ஒரு கருத்தை சொன்னார். பிறகு நான் அதை முறைபடுத்த வேண்டி வந்தது. இன்று கொழும்பில் தமிழ் மக்கள் மத்தியில், உத்தேச மேல்மாகாணசபை தேர்தல் தொடர்பில், ஜனநாயக மக்கள்  முன்னணி  எந்த சின்னத்தில் போட்டியிட போகிறது என்றும்,  எங்களுக்கு யார் ஆதரவு வழங்குவார்கள் என்றும், எங்களுக்கு எதிராக யார் போட்டியிடுவார்கள் என்றும் ஆர்வமிகு கேள்விகள் எழுந்துள்ளன. 

நடைபெற்ற வடமாகாணசபை தேர்தலின்போது, நாங்கள் வடக்கே சென்று கூட்டமைப்புக்கு ஆதரவளித்தோம். அதேபோல் சப்ரகமுவ மாகாண தேர்தலில் இலங்கை தொழிலாளர்  காங்கிரசுடன் கரங்கோர்த்து போட்டியிட்டு அங்கு தமிழ் பிரதிநிதித்துவங்களை பெற்று எடுத்தோம். நமது கூட்டு செயல்பாடு பற்றி நண்பர் ஆறுமுகன் தொண்டமானுக்கும், பெரியவர் சம்பந்தனுக்கும் நன்கு தெரியும். 

வடக்கை  விட, மலையகத்தை விட மேல்மாகாணம் ஒரு சிறிய தளம். ஆகவே மேல்மாகாண தேர்தலை இந்த இரண்டு கட்சிகளுடன் பகிர்ந்துகொள்ள  சாத்தியம் கிடையாது. அத்துடன் பெரும்பான்மை கட்சி வேட்பாளர்களுடன் சமர் செய்து இங்கே வெற்றிபெறுவது சுலபமும் அல்ல. இந்நிலையில் இங்கு தமிழ் வாக்குகள் சிதறடிக்கபட்டால், தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோகும். இதை கவனத்தில் கொண்டே நாங்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும்   எங்களுக்கு எதிராக போட்டியிடும் அனைத்து அணியினருக்கும் எதிராக போட்டியிட வியூகம் வகித்துவருகிறோம்.

இங்கே தமிழர்களை கடத்தி, கப்பம் வாங்கி, சுற்றி வளைப்பு தேடுதல் என்ற பெயரில் வத்தளை, நீர்கொழும்பிலிருந்து, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ஊடாக களுத்தறை வரை போலிஸ் நிலையங்களில், இரவு உடையுடன்  அடைத்து வைத்த போது அவற்றுக்கு  எதிராக நாம் உயிரை  பணயம் வைத்து போராடினோம். அப்போது இங்கு வாழும் சிலர்  என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கும், மேல்மாகாண போலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் நன்கு தெரியும். இத்தகைய சில நபர்களுக்கு இன்று மேல்மாகாணசபையில் மந்திரியாக வேண்டுமென்று ஆசை வந்துவிட்டது.  இதனால் கொழும்பில் போட்டியிட்டு மனோ கணேசனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என தங்கள் கட்சி தலைவர்களை தொந்தரவு செய்கிறார்கள். இப்படி ஆசைப்பட்டு கனவு காணும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அவர்களின் ஆசைகளும், கனவுகளும் நனவாகி நிறைவேற வேண்டும்  என வாழ்த்தும் பெருந்தன்மை என்னிடம் இருகின்றது.
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98232/language/ta-IN/article.aspx

இவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? 

 

களத்தில் நின்று பல நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் துணிந்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர். 

 

கூட்டமைப்பு இவரின் பிரச்சாரத்துக்கு ஆதரவினை கேட்காமலே வழங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான கோரிக்கை. மனோ தலைமையில் கூட்டமைப்பு. அசாத்சாலி விக்ரமபாகு இணைந்து கேட்பதுதான் முறை.

அரசியல் சாணக்கியம் என்பதற்கப்பால் மனோ கணெசன் தலைமையிலான அணிக்கு அதரவு வழங்க வேண்டிய தார்மீக கடமை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கிறது.

 

வேண்டுமானால் தமது அணியைச் சேர்ந்தவர்களையும் அந்த அணியில் போட்டியிடச் செய்யலாம்.

 

ஆனாலும் கடந்த கால்ஙகளில் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கின்ற போது இதனைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யும் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பலத்தை சிதைக்கும் எவரும் மனம் வருந்தவேண்டிவரும்..... :(

  • கருத்துக்கள உறவுகள்

கூப்பிடும் போதெல்லாம் ஓடிவந்து ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் தேர்தல் பிரச்சாரமாக இருந்தாலும் சிட்டாக பறந்துவந்து கூட்டமைப்புடன் கைகோர்க்கும் மனோவிற்கு கூட்டமைப்பு மேல் மாகான தேர்தலில் முழு ஆதரவை வழங்க வேண்டும்

நிச்சயமாக மனோவுக்கு ஆதருவு தாருவதுடன் அந்த தேர்தலில் தேசிய கூட்டமைப்பு போடியிடுவதை தவிர்க்கவேண்டும். இரு கட்சிகளும் ஒரு புரிந்துணர்வு அடிப்படியில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இயங்கவேண்டும். முதலில் வடக்கிலும் கிழக்கிலும் சொன்னதை கூட்டமைப்பு சாதிக்கவேண்டும்

கூட்டமைப்பு தெற்கில் தேர்தலில் இறங்க சிந்தித்தமைக்கு வேறு காரணம் என்று நினைக்கிறேன். இதை முதலில் சொன்னவர் சுமந்திரன். அவர் மனோகனேசனின் நண்பர்களில் ஒருவர் என்பதால் மனோகணெசனின் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்ளும் சந்தர்ப்பம் இல்லை. தெற்கில் தேர்தலில் நிற்பது சிறிதரன், சுரேஸ் போன்றவர்களுக்கு ஒத்துவராது. அந்த இடங்களில் வாக்குகள் வாங்கத்தக்க பாணியில் கூட்டமைப்பின் மேடை பேச்சுக்களை மாற்ற அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

 

சுமந்திரன் தெற்கில் தேர்தலில் நின்று கூட்டமைப்பு பிரதேச வாரியான கட்சி இல்லை என்று நிருபிக்க முயன்றார் என்று நினைக்கிறேன். ஆனால் அதனால் வெளிநாடுகளிடம் ஏற்ப்படுத்த கூடிய சின்ன லாபம் தமிழரின் ஒற்றுமையில் பாரிய குழி விழவைக்கும். தெற்கில் கூட்டமைப்பு தேர்தலில் நிற்கவேண்டும் என்று இந்தியா எள்ளவும் எதிர்ப்பார்க்காது. அது மேற்கிலுகும் மலை நாட்டிலும் இதுவரையும் இருந்த மாதிரியே தமிழர்கள் இருந்து கொள்வதைத்தான் விரும்பும். வடக்கில் மட்டும் இந்தியா தன் சொல்லை கேட்க கூடியவர்கள் பதவியில் இருக்க வேண்டும் என்று விரும்பும்.

 

அதே நேரம் மேற்கில் ஒரு தொகுதியை கூட்டமைப்பு வென்று தான் பிரதேச கட்சி இல்லை என்று மேற்குநாடுகளுக்கு காட்டினாலும் அவர்கள் கூட்டமைப்பை பிரதேசகட்சியாக மட்டுமே பார்ப்பார்கள். அவர்கள் இந்தியா இலங்கையில் தேர்தல் வெற்றிகளை கணக்கு போடுவது போல் கணக்கு போடுவதில்லை. கூட்டமைப்பு பிரதேச கட்சியில்லை என்று அவர்களுக்கு நிருபிக்க வேண்டுமாயின் சிங்களரும் கூட்டமைப்புக்கு கணிசமான அளவு வாக்களிக்க வேண்டும். வென்ற தொகுதில் எத்தனை சதவீத சிங்களவர்கள் கூட்டமைப்புக்கு வாக்களைத்தார்கள் என்பதை பார்த்துத்துதான் அவர்கள் கூட்டமைப்பு பிரதேச கட்சி இல்லை என்று முடிவுக்கு வருவார்கள். என்வே ஒரு தொகுதியை வென்றாலும் கூட்டமைப்பு அதானல் அடையத்தக்க லாபம் என்று ஒன்றும் இல்லை. இது நான் சுமந்திரனின் பேச்சை வைத்து கிரகிக்க முயன்றது. ஆனால் கூட்டமைப்பு அப்படி ஒரு பேசுக்கு கதைதிருக்கலாமே அல்லாமல் வடக்கு கிழக்கைவிட அதற்கு எங்கும் தேர்தலில் நிற்கும் நோக்கம் இருக்காது. 

இதை பெரிய பிரச்சனை ஆக்காமல் மனோகணேசன் நேரடியாகவே கூட்டமைப்புடன் பேசமுடியும் .கனடா வரும் TNA பிரமுகர்களிடம் கேட்டுவிடுவம் .

கூட்டமைப்பின் கோமாளி சுமந்திரன் ,நாங்கள் மேல்மாகணத்திலும் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பரிசீலிக்கின்றோம்....., என்று சொல்லியதற்க்கு பதிலாகவே திரு மனோ கணேசனின் இந்த கருத்து அமைந்துள்ளது. சுமந்திரனுக்கு நாவடக்கம் மிக முக்கியம், சென்னை லயோல கல்லூரியில் பேசும் போது இலங்கையில் தமிழர்கள்  தமிழீழம் கேட்கவில்லையில்லை என உளறியவர் இவர். சம்மந்தரின் சறுக்கல்களில் இதுவும் ஒன்று (சுமந்திரனின் தேசிய பட்டியள் நியமணம்) . கூட்டமைப்புக்குக் கிடைக்கப் பெற்ற தேசிய பட்டியள் மூலம் நாம் திரு மனோ கணேசனை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து இருக்கவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு தமிழ்மக்களுக்காக....
தனது உயிர் ஆபத்தையும்.... பொருட்படுத்தாது, ஈழப் போர் நடந்த காலத்திலிருந்தே.... துணிந்து குரல் கொடுத்து வரும்...
மனோ கணேசனுக்கு, தார்மீக ஆதரவு வழங்க... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முன் வர வேண்டும்.

 

"செய்த‌ ந‌ன்றியை, ம‌ற‌ப்ப‌து... ந‌ன்ற‌ல்ல‌" இதனை... கூட்ட‌மைப்பும் உண‌ரும் என‌.. ந‌ம்புகின்றேன்.

மகிந்தையின் ஆதரவு ஆள் சம்மந்தர் செய்வாரா பொறுத்து இருந்து பார்ப்பம் :icon_idea:

மனேகனேசன் மட்டும் தமிழர்களை கொழும்புவில் பிரதிநிதிப்படுத்துவதுதான் சரி என்ற நிலைப்பாட்டுடன் இந்த பேச்சு முரணாது. மேலும் இந்த செய்திக்கும் சுமந்திரனின் பேச்சுக்கும் தொடர்பும் இல்லை. ஆதாவது மனோகனேசன் 2010 அப்படி பேசினார் எனவே 2013 முடிவில் சுமந்திரன் இப்படி பேசினார் என்ற தர்க்கத்தை யாழில் கொண்டுவருவதை ஏற்க முடியாது.

 

ஆனால் அது திரிக்கப்பட்ட செய்தி போல் படுகிறது. மகிந்தாவின் படத்தை போட்டு கூட்டமைப்பை அழிக்க மனோகனேசன் தொடங்கிவிட்டத்தாக ஒரு உணர்வு ஏற்படுத்த போடப்பட்டது.

 

தோல்வி போன, சுதந்திரக் கட்சியுடனான, கூட்டமைப்பின் இரு கட்சி தீர்வு பேச்சு நேரம் மனேகனேசன் மலையக தமிழரின் பிராசனைகளைப் பேச தனக்கும் இடம் தரும்படி கேட்ப்பதற்காக வைத்த கோரிக்கை ஒன்று இப்படி திரிக்கப்பட்டிருக்கலாம். பேச்சுவார்த்தை வெற்றியாகியிருந்தால் முடிவில் மனோகனேசன், கக்கீம், தொண்டமான் எல்லோருமே அதில் வந்து சேர்ந்திருப்பார்கள். (அந்த நிலைப்பாடு கூட்டமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது) அதில் கூட்டமைப்பு கேட்டவை தமிழருக்கான தீர்வு என்பதிலும் பார்க்க வடக்கு-கிழக்குக்கான தீர்வு என்றே அழைப்பது சரி. கூட்டமைப்பு 13ம் திருத்தத்தை சார்ந்துதான் பேசியது. 13ம் திருத்தத்தில் மலையகத் தமிழருக்கு எந்த மீட்சியும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. 

 

கூட்டமைப்பு கொழும்புவில் தேர்தலில் இறங்குவதால் தாங்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் ஆக காட்ட முயலக்கூடாது. (மேலும் வடக்கு-கிழக்கில் இருக்கும் தமிழருக்குத்தான் பிரச்சனை என்று காட்ட முயலக்கூடாது.) . அல்லது தான் தமிழ் கட்சி அல்ல, பிரதேச கட்சி அல்ல என்றவை எவையையும் காட்ட முயலக்கூடாது. இரு தோணிக்குள் கால் வைக்காமல் வடக்கு-கிழக்கை தாயகமாக கொண்ட தீர்வொன்றில் கவனம் செலுத்த வேண்டும்.  தீர்வு கிடைக்கும் போது மலையகத்தமிழரின் பிரனைச்சனைகளையும் விடுவிக்க வேண்டும். அவர்களின் தீர்வு அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்படுத்தப்பட வேண்டும். வடக்கு-கிழக்கு வர விரும்பியவர்களுக்கு இடம்கொடுத்து புதுவாழ்வுக்கு வசதிகள் செய்யப்பட வேண்டும். 

Edited by மல்லையூரான்

 

 

சிறி!

 

நீங்கள் சுமந்திரனை கணக்கில் எடுக்காவிட்டால் சுமந்திரனுக்கா நட்டம்?

 

போக, கூட்டமைப்பின் ஆதரவோ பிரச்சாரமோ இல்லாமல் அவர் கொழும்பில் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு தெரிவானவர். 

Edited by nunavilan

மனோ கணேசன் மேல்மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு செய்த நல்ல விடயங்களிலும் துணிந்து எதிர்த்து குரல் கொடுத்த விடயங்களிலும் பத்தில் ஒரு பங்கினைக் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் செய்யவில்லை. 

 

2005 இற்கும் 2009 இற்கும் இடைப்பட்ட காலத்தில் கோத்தாவினால் மிகக் கடுமையான அழுத்தங்கள் தமிழ் அரசியல் வாதிகள் மீது பிரயோகித்த காலப்பகுதியிலும் துணிந்து எதிர்த்து நின்றவர் மனோ. ரவிராஜ் போன்ற துணிச்சல் மிக்க  அரசியல் போராளிகள் எல்லாம் கொல்லப்படும் போதும் அஞ்சாமல் நின்றவர். ஒரு கட்டத்தில் அமெரிக்க தூதுவரே (அல்லது அமெரிக்க தூதுவராலய அதிகாரிகள்) மனோவினை விமான நிலையத்துக்கு கொண்டு சென்று வழி அனுப்பி சிறுது காலம் வெளிநாட்டில் தங்கி இருக்க செய்தனர்.

 

தந்தையின் வழி நின்று இன்னும் மக்களுக்காக போராடும் சிறந்த அரசியல் போராளியாகத்தான் மனோ இருக்கின்றார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறி!

 

நீங்கள் சுமந்திரனை கணக்கில் எடுக்காவிட்டால் சுமந்திரனுக்கா நட்டம்?

 

போக, கூட்டமைப்பின் ஆதரவோ பிரச்சாரமோ இல்லாமல் அவர் கொழும்பில் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு தெரிவானவர். 

 

எனது முழுமையான.... பதிவைக் காணவில்லை. சூறாவளி.

என்றாலும்.... நீங்கள் கேட்ட கேள்விக்கு, பதில் சொல்ல வேண்டிய... கடமை எனக்குள்ளது.

சுமந்திரன்... கொழும்பு மக்களால் தேர்வு செய்யப் பட்டவர் அல்ல.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு, விழுந்த விருப்ப வாக்குகளால்... கூட்டமைப்புக்குள் சம்பந்தனால்... திணிக்கப் பட்டவர்.

 

சுமந்திரனின் பேச்சும்... நடையும்.... எனக்கு, எப்போதும்... சந்தேகத்தை வரவழைக்கும்.

மாவை, அனந்தி... அமெரிக்கா போனாலும்... இந்த மனுசன், என்ன இழவுக்கு... உழவு பார்க்கப் போகுது என்று நினைப்பேன்.

எனக்குப் பட்டதைச் சொல்ல... எனக்கு உரிமை இருக்கு... சூறாவளி அண்ணை.

அதனை... நல்லதாக எடுப்பதும், கெட்டதாக எடுப்பதும்... உங்கள் விருப்பம். :)

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசன் மேல்மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு செய்த நல்ல விடயங்களிலும் துணிந்து எதிர்த்து குரல் கொடுத்த விடயங்களிலும் பத்தில் ஒரு பங்கினைக் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் செய்யவில்லை. 

----

 

உண்மையான... பல விடயங்களை, பலர் தமது வசதிக்காக மறப்பது வேதனை.

 

  • கருத்துக்கள உறவுகள்

மனோவின் செல்வாக்கான பகுதிகளில் அவரை வெல்ல வைக்க வேண்டும். அத்தோடு கூட்டமைப்பு அவருடனும் ஏனைய மலையகமக்களின் கட்சிகளுடனும் வேலைத்திட்ட அடிப்படையிலாவது இணைந்து செயற்பட வேண்டும்.

தினக்கதிரின் இணைப்பு இந்த திரியில் நீக்கப்பட்டது மிகப் பொருத்தமான செயல். 

 

நிர்வாகத்துக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசன் தலைமையில் வடகிழக்கு வெளியேயும் கூட்டமைப்பு தலைமையில் வடகிழக்கிலும் அணிதிரள்வது காலத்தின் கட்டாயம்.

மனோ தன் பங்கை வடக்கு தேர்தலில் செய்து விட்டார், இப்போ கூட்டமைப்பின் முறை.

சுமந்திரன் கூறியது, தெற்க்கின் சிங்களவரை கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைக்கு முகம் கொடுக்க வைப்பதை பற்றியது.

மனோ கூறுவது தெற்க்கில் தமிழர் பிரதிநிதிதுவத்தை பேணுவது பற்றி.

இரண்டும் ஒன்றல்ல ஆனால் mutually coexisting goals.

மனோ தலைமையில் கூட்டமைப்பு போட்டியிட்டால் இரண்டு நோக்கத்தையும் அடையலாம்.

மற்றும்படி, மனோவின் தலைமையை ஏற்க மறுப்பதற்க்கு, கொட்டஹேன குப்பத்தான் என்று மேலக தமிழரை பழிக்கும் கீழ்த்தர சிந்தனையை விட வேறு காரணிகள் இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மனோ

சம்பந்தர்

விக்கி ஐயா.............

என்று முகம் பார்க்காமல் 

தமிழரின் எதிர்காலம் சார்ந்து முடிவுகள்  எடுக்கப்படணும்

அதுவே தமிழரின் தேவை....

  • கருத்துக்கள உறவுகள்

ஹொட்டஹேன குப்பத்து, கோசானுக்கு... அரசியல் ஆசான்.... எவரோ? :wub:  :D 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை எனது தத்துவாசிரியன்.

நிழலியின் சிலவற்றில் பொருள் இருக்கிறது. அவற்றை விவாதிக்க தேவை இல்லை. ஆனால் எல்லவற்றுக்கும் இல்லை. இன்றைய கட்டத்தில் மனோ கனேசன் துணிச்சலான அரசியல் வாது என்பது வெளிப்படை. தன் கைகளை அழுக்காக்கதவர்களின் ஒருவர். விக்கிரமபாகுவும் இதே இயல்புகளை காட்டுபவர். மேலும் அச்சாத் சாலி, சிறிதரன் எல்லோரும் துணிச்சலானவர்களே. ஆனால் ஆபத்து என்ற வரிசையில் விக்கிரமபாகு, மனோ கனேசன், அசாத் சாலி, சிறிதரன் என்றுதான் படியேறுகிறது.. காணிகளுக்கு போராடவேண்டாம், வழக்கு மட்டும் போடுங்கள் என்று ஆறுமாதத்திற்கு முன்னர் கூட்டமைபின் மாவை மக்களுக்கு அறிவுறுத்தல் சொன்னவர். ரவிராஜ், பரராஜ சிங்கம் (,ஜெயராஜ், கதிர்காமர்) போன்றவர்களை அரசு சுட்டுத்தள்ளிய போது அமெரிக்க அரசு கூட்டமைப்பை பயங்கரவாதிகள் பட்டியலில் போட்டு வீசா மறுத்தது. வடமாகண முதலமைச்சர் பதவிக்காக, அமெரிக்காவுக்கு பிடிக்காத தேவானந்தாவுடன் போட்டியில் இறங்கி மகிந்தாவுக்கு காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்த ஆனந்தசங்கரிக்கு புல்சர் பரிசு வழங்கியது அமெரிக்க அரசு. கக்கீம் போன்ற தனி அலகு கேட்டவர்களுடன் தமிழருக்காக பேசியது. விமலின் காரியாலம் சென்று JVP யுடன் பேசியது. பொன்சேக்காவுக்கு பாதுகாப்பு கொடுத்து தேர்தலில் இறக்கியது. ஆனால் பயங்கரவாத பட்டியலில் இருந்த சம்பந்தருக்கு வீசா மறுக்கப்பட்டது. இதில் அமெரிக்க மனோகனேசனை ஆனந்தசங்கரி மாதிரி பிரித்து எடுக்க முயன்றதுதான் தோற்றது. ஒபாமாவின் அரசினால் ஏற்பட்ட கொள்ளகை மாற்றம், அதிகாரிகளின் புதிய நியமனங்கள் வரும் வரை இலங்கையில் தெரிய தொடங்கவில்லை. இதனால் பாதுகாப்பான அர்சியல் செய்ய வெளிக்கிட்ட மாவை காணிகளை இழந்தவர்களை போராட வேண்டாம் என்றார்.

 

அரசுக்கு தனக்கு விக்கிரமபாகு எதிரியா, மனோகனேசன் எதிரியா, அசாத சாலிஎதிரியா,  சிறிதரன் எதிரியா, என்பதை எவ்வாறு எடுத்துகொள்கிறது என்பதை பொறுத்தும் அவர்கள் இயங்கத்தக்க வீச்சம் மட்டுப்படுத்தப்படுகிறது. மொதத்தில் அமெரிக்கா அந்த நாட்களில் பாதுகாப்பு கொடுதது எனறதினால் மனோகனேசனின் செயல்ப்பாட்டை மற்றவகளினதிலிருந்து வித்தியாசப்படுத்தி பார்க்க தேவையான அமசம் எதுவும் அதில் இல்லை.

 

கோசான் சே சொல்வதிலும் சில பொருள் இல்லாதவை இருக்கு. தெற்கில் சிங்கள் மக்களுக்கு எப்படி தமிழ் மக்களின் பிரானைகளை எடுத்து விளங்க வைக்க முடியும் என்றதில் ஒரு ஆய்வு இல்லாத நிலையில் இதில் கூட்டமைப்பு இறங்குவது அநாவசியம். இது சர்க்கரை மலையை பொந்துக்கு கொண்டு போக ஆசைப்பட்ட எறும்பின் நிலைதான் வரும். 1948க்கு  முதல் JR, SWRD போன்ற அரசியல் தலைவர்கள்தான் துவேசிகளாக் இருந்தார்கள் என்று கொண்ட்டாலும் 1948 ல் ஆரம்பித்தது சிங்கள மகா ஜனங்களின் அரசியல் இனவாதம். அவர்கள் மட்டுமே சோல்பரின் பாராளுமன்ற அரசியல் அமைப்பு மாறி இன்றைய மூடி சூடுதல் ஒத்திகை பார்க்கும் மன்னர் ஆட்சி வந்ததற்கு பொறுப்பு. சமஷ்டி கேட்ட செல்வாவை பிரிவினை வாதியாக எடுதுக்கொண்டவர்கள் அவர்களே. SWRD கூட சமஷ்டியை ஏற்று ஒப்பந்தம் எழுதினார்.  எனவே தலைவர்களை விட துவேசிகளாக காணப்படும் சிங்கள மகா ஜனங்களை தேர்தலில் பேசி மாற்றுவது என்பது எவ்வளவு பிரஜயோசனமான செயல் என்பதை அறியாமல் கூட்டமைப்பு பொருளையும் நேரத்தையும் அதில் போடக்கூடாது. பொன்சேக்காவை கூட்டமைப்பு தேர்தலில் ஆதரித்ததை எழுதும் யாழில், பியசேனவை அம்பாறையில் போட்டதிற்கு எழுதும் யாழில் சிங்கள மகாஜனங்களின் எண்ணதை மாற்றுவது என்பதின் சாத்தியம் வேறு தலைப்பொன்றில் விவாதிக்கப்பட வேண்டியது. 

 

கொட்டகேன கதை என்ன என்பதின் விளக்கம் எனக்கு சரியாக இல்லை. மலையக மக்கள் பிரச்சனை யாழ்ப்பணத்தவரின் பிரச்சனையுமேதான். எனவே அந்தக் கதையில் ஏதாவது இனத்துவேசாம் காணப்படுகிறதாக இருந்தால் சம்பந்த பட்ட இருதரப்பும் அந்த கதையை இனி யாழுக்கு கொண்டுவருவதில்லை என்று முடிவு எடுக்க வேண்டும். 

வடக்கு கிழக்குக்கு வெளியே மனோ கனேசனுக்கு தேவையான ஆதரவை கொடுத்தால் கூட்டமைப்பு தனது மலையக மக்களுக்கான கடமையை செய்யத்தயாராக இருக்கிறது என்பது பொருள். அங்கு தேர்தலில் இறங்குவது அதன் கடந்த  தேர்தல் விஞ்ஞாபனத்துடன் போக கூடியது ஒன்றல்ல. சிங்கள் மக்களிடம் சுய நிர்ணய உரிமையை விளங்கப்படுத்துவது பொதுபல சேனாவை பலப்படுத்தும் முயற்சியாகத்தான் முடியும். ஆபிரகாம் லிங்கன் அடிமை விடுதலையை வெள்ளையர்களுக்கு விள்ங்க வைக்க முயவில்லை. அப்படி ஒரு சிங்களத்தலைவர் செய்ய முயன்றார் அவரை கூட்டமைப்பு அன்னியம் காட்டத்தேவை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.