Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்கள் அவசரக் குடுக்கையர்களாம் - பெண்களே எதையும் நன்கு திட்டமிடுவார்களாம்! - நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆண்கள் அவசரக் குடுக்கையர்களாம் - பெண்களே எதையும் நன்கு திட்டமிடுவார்களாம்! - நிபுணர்கள் கூறுகிறார்கள். 
[Wednesday, 2013-10-30 11:43:30]
 
பல வகையான வேலைகளை ஒரே நேரத்தில் கொடுக்கும் போது அதனை ஆண்களை விட பெண்களே மிகவும் வேகமாக செய்து முடிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது பல வேலைகளை ஒன்றாக கொடுத்து இவற்றை முடியுங்கள் என்று கூறினால், அவற்றை திட்டமிட்டு, எதனை முதல் செய்வது எதனை பின்னர் செய்வது என்று ஒழுங்கு படுத்திச் செய்வதில் ஆண்கள் மிகவும் தாமதமாக இருக்கிறார்கள் என்று பிரிட்டிஷ் உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
ஆனால், இந்த விடயத்தில் இப்போது இரு கேள்விகள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். முதலாவது கேள்வி இது ஏன் என்பதாகும். அடுத்தது எந்த வேலையை கொடுத்தாலும் இந்த நிலைமைதானா அல்லது சில வேலைகளில் மாத்திரந்தான் இந்த நிலைமையா என்பதாகும்.
 
இதற்கான விடைகளை கண்டுபிடிக்கும் போதுதான் வேலைத்தளங்களை எப்படி ஏற்பாடு செய்வது என்பதில் சரியான திட்டங்களைத் தீட்ட முடியும். பல வேலைகளை ஒன்றாக அடுத்தடுத்து முடிப்பது என்பது வேலைத்தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், அதுதான் எமது வேலை தொடர்ச்சியாக நடப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்துகிறது.
 
முன்னைய ஆய்வுகள்
 
முன்னர் இந்த விடயங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெவ்வேறான முடிவுகளைத் தந்துள்ளன. சீனாவில் நடந்த ஒரு ஆய்வில் பெண்கள், ஆண்களை விட பல வேலைகளை ஒன்றாக முடிப்பதில் மிகவும் வேகமனவர்கள் என்ற பதில் வந்திருக்கிறது. ஆனால் சுவீடனில் நடந்த ஆய்வில் ஆண்கள்தான் வேகமானவர்கள் என்ற முடிவு வந்திருக்கிறது.
 
இதற்காக இன்னுமொரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சில அலுவலக வேலைகளை, அதாவது மின்னஞ்சல்களை படிப்பது, அதற்கு பதிலளிப்பது, தொலைபேசிகளுக்கு பதிலளிப்பது, அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்துகொள்வது என பல வேலைகள் இருதரப்பாருக்கும் கொடுக்கப்பட்டது. அதேபோல வீட்டுவேலைகள், அதாவது, சமைப்பது, குழந்தைகளை பார்த்துக்கொள்ளவது, வீட்டு தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் சொல்வது என்று பல வேலைகள் ஒன்றாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
 
ஒற்றை வேலையைச் செய்வதில் இருவரும் சமம் இதில் ஒவ்வொரு வேலையாகச் செய்யச் சொன்னால், இரு தரப்பாரும் ஒரே வேகத்திலேயே செய்தார்கள். ஆனால் எல்லா வேலைகளை ஒன்றாகக் கொடுத்த போது, அவற்றை ஒவ்வொன்றாக செய்து முடிப்பதற்கும் ஒரு வேலையில் இருந்து அடுத்த வேலைக்கு மாறும் போதும் இருதரப்பாரும் சிரமப்பட்டார்கள், ஆனாலும் பெண்கள், ஆண்களை விட அவற்றை வேகமாக முடித்தார்கள். இந்த வேறுபாடு மிகவும் சிறியதுதான் என்றாலும், தொடர்ச்சியாக வாரக்கணக்கில் இவற்றைச் செய்யும்போது அது மிகவும் அதிகமாகிவிடும்.
 
நன்கு திட்டமிடும் பெண்களும் அவசரக்குடுக்கையான ஆண்களும்
 
அதன் பின்னர் 8 நிமிடத்துக்குள் சில வேலைகளை ஒன்றாக செய்ய வேண்டும் என்று இரு தரப்பாருக்கும் கொடுக்கப்பட்டது. உண்மையில் அந்த அனைத்து வேலைகளையும் 8 நிமிடத்தில் முடிக்க முடியாது. இப்போது, வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவற்றை திட்டமிடுவதற்கு நீண்ட நேரத்தை பெண்கள் எடுத்துக்கொண்டார்கள், ஆனால் ஆண்கள் அவசரக் குடுக்கையாக, நிறைய யோசிக்காமல் வேலையில் குதித்துவிட்டார்கள்.
 
ஆனால் இங்கும் பெண்கள்தான்முன்னணியில் இருந்தார்கள். இதில் இருந்து எந்த அழுத்தமான நிலைமைகளிலும் நின்று நிதானமாகச் சிந்தித்து, திட்டமிட்டு, செயற்படும் திறன் பெண்களுக்கே அதிகம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தார்கள்.
 
அதுமாத்திரமன்றி ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள், பல வேலைகளை ஒன்றாகக் கையாள்வதில் தாம் உண்மையில் எவ்வளவு திறமையானவர்களோ, அதனைவிட அதிகமாகவே தம்மிடம் திறமை இருப்பதாக அவர்கள் தம்மைப் பற்றி நினைத்துகொள்வதாகவும், ஆனால் பெண்களோ மறுபுறமாக, தமக்கு இந்த விடயங்களில் இருக்கும் உண்மையான திறமையின் அளவை விட குறைவாகவே தமக்கு திறமை இருப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 
தம்மிடம் அதிக திறமை இருப்பதாக அளவுக்கு அதிகமாக ஆண்கள் நினைப்பதால்தான் அவர்கள் சிந்திக்காமலேயே வேலையைத் தொடங்கிவிட்டு முடிக்க முடியாமல் தடுமாறுகிறார்களாம்.
  • Replies 56
  • Views 3.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்றாலும் ஆண்குலம் என்ன ஒத்துக்கொள்ளவா போகுது????????? :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆண்கள் அவசரக் குடுக்கையர்களாம்

 ஓமோம் அதெண்டால் உண்மைதான்  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பத்து மெகாசீரியல்களை ஒரேயடியாகப் பார்த்தாலும் கதைகளை ஞாபகம் வைத்திருப்பார்கள்.. அதுமாதிரித்தான் இதுவும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆய்வுபற்றி அண்மையில் அறிந்து கொண்ட போதும் யாழில் பகிர்ந்து கொள்ளவில்லை. காரணம்.. இதே இன்னொரு ஆய்வில் நிராகரிக்கப்படு ஆண்களே அதிகம் பன்முகத் தொழிற்பாட்டை காண்பிப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதைவிட மனிதர்களை விட கெரில்லாக்கள் அதிகமாக இதை கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆக.. இந்த ஆய்வுகள் ஒரு பருமட்டான ஆய்வுகளே தவிர.. நிரந்தர தீர்வுகளை தரப் போதுமானவை அல்ல..!

இவற்றை கொள்கை ரீதியில் எடுத்து சில நிறுவனங்கள் பாவிக்க வெளிக்கிட்டாலும் கூட.. பெண்கள்.. மாதம்.. வருடம் என்று லீவு கேட்டு வீட்டில் குந்தி விடுவதால்.. நிச்சயம் பெண்களை நம்பி நிறுவனங்கள் பெரிசாக இதனைப் பாவிக்க முன்வர மாட்டா. ஆனாலும்.... சோம்பேறிப் பெண்களிடம் வேலை வாங்க நல்ல வாய்ப்பை இந்த ஆய்வு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சில விசயங்களில் "யோசிக்காமல்" சட்டென்று செயற்படுவது தான் உயிரைக் காப்பாற்றும் <_< . திட்டமிட நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் சங்கு தான்! எல்லாம் சரி பெண்களுக்கு ஏன் தெளிவாகப் போடப் பட்டிருக்கும் இரண்டு சமாந்தர வெள்ளைக் கோடுகளுக்கிடையில் வாகனத்தை நேராகத் தரிக்க முடியாமல் இருக்கு? இதற்கென்ன காரணம் எண்டு யாராவது கண்டு பிடிச்சால் பக்கத்துக் கார்களுக்கு பல தலையிடிகள் குறையும்! :lol:
Photo_31-12-2012_12_21_27.jpg

சில ஆண்களும் தான் வாகனத்தை சரியாக தரிப்பதில்லை அதற்காக எல்லா ஆண்களையும் குறை கூற முடியுமா என்ன? :) அது சரி இந்த வாகனத்தை பெண் தான் தரித்தார் என்பதற்கு என்ன அத்தாட்சி? பெண் என்றால் சிறிதளவு தான் கோட்டை தாண்டியிருப்பார் இது சரி நடுவில் தரித்திருப்பதால் குறுக்கால போறவர் தான் இப்படி செய்திருக்கவேண்டும் :icon_idea: :icon_idea:

அது தானே

நானும் காரைச்சுற்றியும்  உள்ளேயும்  10  தடவை பார்த்துவிட்டேன் :icon_idea:

பெண்ணின் கார் என்பதற்கு எந்த அத்தாட்சியுமில்லை :D  :D

இது அலாப்பல் ஆய்வு... நான் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

ஒரு வேலையை செய்து முடிப்பது என்பது எதனை வைத்து தீர்மானிக்கின்றனர்? Perfection என்று பார்த்தால் பெண்களால் செய்து முடிக்கப்படும் வேலைகளில் அது குறைவாக இருப்பதையும் இடைக்கிடை Minute அளவுக்காவது குறைகள் இருப்பதையும் அனுபவத்தில் கண்டுள்ளேன். 4 வேலைகளை ஒரே நேரத்தில் அவர்களால் செய்ய முடிந்தாலும் நான்கில் இரண்டிலாவது இலகுவாக கண்டு பிடிக்கக் கூடிய பிழைகள் இருக்கும்.

இது என் கணணித் துறையில் நான் கண்ட உண்மை. அதே போல் ஒரு குக்கரில் 4 burners இல் 4 கறிகளை ஒரே அடியாக வைத்து சமைக்கச் சொன்னால், 2 ஆவது உப்பு குறைவாக அல்லது கூடுதலாக இருக்கும் அல்லது ஒன்றாவது அடிப்பிடிச்சு போகத் தொடங்கி இருக்கும். இது எம் தமிழ் பெண்களில் நான் கண்டது. இதே தவறினை ஆண்கள் தாம் வேலை செய்யும் உணவு விடுதிகளில் விடுவதில்லை என்பதால் தான் அநேக உணவு விடுதிகளில் ஆண்களே chef ஆக இருக்கின்றனர்.

எப்பவும், எங்கும் ஆண்கள் தான் வல்லவர்கள், வெல்லுபவர்கள் அத்துடன் வடிவானவர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இது என் கணணித் துறையில் நான் கண்ட உண்மை. 

எப்பவும், எங்கும் ஆண்கள் தான் வல்லவர்கள், வெல்லுபவர்கள் அத்துடன் வடிவானவர்கள்!

உங்களது ஆய்வுகள்

நேரிடையாக உங்களால் செய்யப்பட்டுள்ளமை பெரும் மகிழ்வு தருகிறது

உங்களால் ஆய்வுக்குட்பட்ட பெண்களின் எண்ணிக்கையையும் படங்களையும் முடிந்தால் விடீயோக்களையும் தந்தால்

ஆய்வுக்கு ஆதரவாக நாமும்  குரல் கொடுக்கலாம் :D

சில ஆண்களும் தான் வாகனத்தை சரியாக தரிப்பதில்லை அதற்காக எல்லா ஆண்களையும் குறை கூற முடியுமா என்ன? :) அது சரி இந்த வாகனத்தை பெண் தான் தரித்தார் என்பதற்கு என்ன அத்தாட்சி? பெண் என்றால் சிறிதளவு தான் கோட்டை தாண்டியிருப்பார் இது சரி நடுவில் தரித்திருப்பதால் குறுக்கால போறவர் தான் இப்படி செய்திருக்கவேண்டும் :icon_idea: :icon_idea:

தமிழினி நீங்கள் எப்படித்தான் சமாளித்தாலும் வாகனம் ஓட்டுவதில் ஆண்கள் தான் கிங்குகள்!

முன்னர் ஒரு இடத்தில் எழுதியது போன்று வாகன தரிப்பின் சின்ன பெட்டிக்குள் சதுரங்கம் ஆடித்தான் பெண்கள் வாகனத்தினை தரிப்பிடத்தில் விடுவார்கள். அத்துடன் இடது ஒழுங்கில் (left lane) இற்கும் வலது ஒழுங்குக்கும் வித்தியாசம் தெரியாது இடது ஒழுங்கிலும் அந்த வீதிக்குரிய வேகத்தினை விட ஆகக் குறைந்தது 10 கிலோ மீற்றர் வேகம் குறைவாக ஓட்டுவதிலும் பெண்கள் வல்லவர்கள்.

ஆனால், வாகனம் ஓட்டிக் கொண்டே லிப்ஸ்ரிக் பூசுவது, சிக்னல் மாறுவதையும் கவனிக்காது சீப்பால் தலைமுடியை வாருவது, Hand bag இனுள் இருக்கும் சின்ன முகக் கண்ணாடியை எடுத்து மூஞ்சியை அடிக்கடி பார்ப்பது என்ற multi task இல் பெண்களை அடிக்க எந்த ஆணாலும் முடியாது!

ஒருவேளை

ஆண்களுக்கு 

அவரது தகப்பனார்

பாட்டனார்

பூட்டனார் போன்றவர்களின் ரத்தத்தில் இந்த அனுபவம் வந்ததாக இருக்கலாம் :icon_idea:

பெண்களுக்கு

அவரது தாயார்

அம்மம்மா

பாட்டி...... போன்றவர்களின் அனுபவம் இன்மையால் இந்த அனுபவம் வராமலிருக்கலாம்

இன்னும் மூன்று நாலு தலைமுறை  போக 

அவர்களும் இது விடயத்திலும் எம்மை மடக்கலாம் :lol:  :D  :D

இன்னும் மூன்று அல்ல அடுத்த தலைமுறையின் காலத்தில் driver less வாகனங்கள் வந்து விடும். சாரதி இல்லாமல் அல்லது வாகனத்தினை செலுத்த சாரதி தேவைப்படாமல் தானாகவே இயங்கக் கூடிய வாகனங்கள் தான் அடுத்த தலைமுறை ஓடப் போகின்றது.

ஆக, பெண்கள் எக்காலத்திலும் வாகனத்தினை சரியாக ஓட்ட கற்றுக் கொள்ளப் போவதில்லை.

தமிழினி நீங்கள் எப்படித்தான் சமாளித்தாலும் வாகனம் ஓட்டுவதில் ஆண்கள் தான் கிங்குகள்!

முன்னர் ஒரு இடத்தில் எழுதியது போன்று வாகன தரிப்பின் சின்ன பெட்டிக்குள் சதுரங்கம் ஆடித்தான் பெண்கள் வாகனத்தினை தரிப்பிடத்தில் விடுவார்கள். அத்துடன் இடது ஒழுங்கில் (left lane) இற்கும் வலது ஒழுங்குக்கும் வித்தியாசம் தெரியாது இடது ஒழுங்கிலும் அந்த வீதிக்குரிய வேகத்தினை விட ஆகக் குறைந்தது 10 கிலோ மீற்றர் வேகம் குறைவாக ஓட்டுவதிலும் பெண்கள் வல்லவர்கள்.

ஆனால், வாகனம் ஓட்டிக் கொண்டே லிப்ஸ்ரிக் பூசுவது, சிக்னல் மாறுவதையும் கவனிக்காது சீப்பால் தலைமுடியை வாருவது, Hand bag இனுள் இருக்கும் சின்ன முகக் கண்ணாடியை எடுத்து மூஞ்சியை அடிக்கடி பார்ப்பது என்ற multi task இல் பெண்களை அடிக்க எந்த ஆணாலும் முடியாது!

அதே போல் விபத்துக்களில் சிக்குவதி்லும் ஆண்கள் தான் கிங்குகள் ஒத்துக்கிறோம் நிழலி அண்ணா  :)

பெண்கள் இப்படியான பிழைகள் விடுவது அப்பப்ப நிகழ்வது தான் ஆனால் ஆண்கள் எத்தனை போ் ஒழுங்காக வண்டி ஓட்டுகின்றார்கள்? பல நேரங்களில் ஆண்கள் கையில் தொலைபேசியுடன் ஓடுவதையும் text அனுப்பிக்கொண்டு வாகனம் ஒடுவதையும் தான் காண்கின்றோம்...அப்போ ஆண்களும் வாகனம் ஓடும் போது multi task கையாள்கின்றார்கள் தானே :) :) :icon_idea:

இது உண்மைதான்

அப்போ

வாழ்க்கை  பூரா

நாம   சாரதியாக காரோட்ட :( 

அவர்கள் பின்னால் உட்கார்ந்திருக்கும் இளவரசிகள் தானா...?? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல் விபத்துக்களில் சிக்குவதி்லும் ஆண்கள் தான் கிங்குகள் ஒத்துக்கிறோம் நிழலி அண்ணா  :)

பெண்கள் இப்படியான பிழைகள் விடுவது அப்பப்ப நிகழ்வது தான் ஆனால் ஆண்கள் எத்தனை போ் ஒழுங்காக வண்டி ஓட்டுகின்றார்கள்? பல நேரங்களில் ஆண்கள் கையில் தொலைபேசியுடன் ஓடுவதையும் text அனுப்பிக்கொண்டு வாகனம் ஒடுவதையும் தான் காண்கின்றோம்...அப்போ ஆண்களும் வாகனம் ஓடும் போது multi task கையாள்கின்றார்கள் தானே :) :) :icon_idea:

ஆஹா! இது சரியான அண்டப் புழுகு! வாகனம் ஓடும் போது குறுஞ்செய்தி அனுப்புவது, காதில் தொலைபேசியை வைத்துப் பேசுவது போன்ற வேலைகளை பெண்கள் தான் செய்கிறார்கள், இது நூறு வீதம் நான் என் வாகனமோட்டும் அனுபவத்தில் கண்ட சாட்சியம்! (ஒரு தடவை நெடுஞ்சாலையில் ஒரு பெண் steering wheel மீது ஒரு புத்தகத்தை விரித்து வைத்து வாசித்த படியே வாகனம் ஓடிய அதிசயக் காட்சியையும் கண்டேன், புத்தகத்தின் அளவைப் பார்த்தால்  நாவல் போல தெரிந்தது!)) ஆண்கள் தொலைபேசியில் மணிக்கணக்காகப் பேசுவதில்லை. மேலும் ஆண்கள் பெரும்பாலும் "நீலப் பல்" அணிந்த படி தான் வாகனம் ஓட்டுவர். பெண்கள் "நீலப் பல்" அணிந்து நான் கண்டதே இல்லை! (அழகைக் கெடுக்கும் என்ற கரிசனையாம்!) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி நீங்கள் எப்படித்தான் சமாளித்தாலும் வாகனம் ஓட்டுவதில் ஆண்கள் தான் கிங்குகள்!

முன்னர் ஒரு இடத்தில் எழுதியது போன்று வாகன தரிப்பின் சின்ன பெட்டிக்குள் சதுரங்கம் ஆடித்தான் பெண்கள் வாகனத்தினை தரிப்பிடத்தில் விடுவார்கள். அத்துடன் இடது ஒழுங்கில் (left lane) இற்கும் வலது ஒழுங்குக்கும் வித்தியாசம் தெரியாது இடது ஒழுங்கிலும் அந்த வீதிக்குரிய வேகத்தினை விட ஆகக் குறைந்தது 10 கிலோ மீற்றர் வேகம் குறைவாக ஓட்டுவதிலும் பெண்கள் வல்லவர்கள்.

ஆனால், வாகனம் ஓட்டிக் கொண்டே லிப்ஸ்ரிக் பூசுவது, சிக்னல் மாறுவதையும் கவனிக்காது சீப்பால் தலைமுடியை வாருவது, Hand bag இனுள் இருக்கும் சின்ன முகக் கண்ணாடியை எடுத்து மூஞ்சியை அடிக்கடி பார்ப்பது என்ற multi task இல் பெண்களை அடிக்க எந்த ஆணாலும் முடியாது!

உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்குக் கார் ஓட்டத் தெரியாது என்பதற்காக எல்லோரையும் ஒரே தட்டில் வைப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. இதுக்காகவேனும் நான் கனடா வந்து உங்களுடன் போட்டிக்குக் கார் ஓடத்தான் வேண்டும் :lol:

பாவ பட்டவங்கியா நாங்க விட்டுடுங்க எங்களை

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும், எங்கும் ஆண்கள் தான் வல்லவர்கள், வெல்லுபவர்கள் அத்துடன் வடிவானவர்கள்!

இது உண்மையா இருந்தாலும் ஒரு சின்னக் கேள்வி என்ர மண்டையக் குடையுறதால கேக்கிறன் மாஸ்ரர்: வடிவான நாங்கள் ஏன் ஐஸ்வர்யா ராய் மாதிரியான பெண்கள் நடந்து கடந்து போகேக்க கொஞ்சம் நிண்டு திருப்பிப் பாக்கிறம்? :icon_mrgreen:

அந்த மாதிரி வேளைகளில்

நிழலியானந்தா  எமக்குள் இறங்கிவிடுவதனால்........ :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே

நானும் காரைச்சுற்றியும்  உள்ளேயும்  10  தடவை பார்த்துவிட்டேன் :icon_idea:

பெண்ணின் கார் என்பதற்கு எந்த அத்தாட்சியுமில்லை :D  :D

விசுகர், இப்பிடியா சேம் சைட் கோல் போடுறது? போற வாற இடத்தில பெண்களின் கார் தரிக்கும் லட்சணங்களைப் பார்த்த பிறகு, கூகிள் ஆண்டவரிடம் "பெண்களும் கார் தரித்தலும்" என்ற சொற்களைப் பாவித்துத் தேடினால் இந்தப் படமும் வருகுது. வந்ததுக்குள்ள இது ஒண்டு தான் கார் "தரையில" நிக்கிற படம் எண்டால், மிச்சத்தை யோசிச்சுப் பாருங்கோவன்! :D

நீங்கள் நெடுக்கின் இணையத்துக்குள் போய் விட்டீர்கள் போலும்....... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் சில விசயங்களில் பெண்கள் பொறுமைசாலிகளே

ஆண்கள் அவசரக்காரர்களே
ஒரு வீட்டைத் துப்பரவாக்கி அழகுபடுத்தி அலங்கரித்துப் பின்னர்
சமையல் குழந்தை குட்டி கணவன் என ஒரு பெரிய லிஸ்ட்டையே 

வைத்து வேலை செய்வது ஆண்களால் முடியாது :rolleyes:

இதற்குத்தான் வாத்தியார் வேணும் என்பது...! நன்றி வாத்தியார் ஐயா :)

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குத்தான் வாத்தியார் வேணும் என்பது...! நன்றி வாத்தியார் ஐயா :)

இது தான்  பெண்கள்

வாழப்பழத்தில் ஊசிஏற்றுவது   போல்

பெண்கள் வீட்டின் அடிமைகள் என்பதை வாத்தியார் சொல்ல

தமிழ் இனி ஆமா  போட........ :lol:

இதில் வாத்தியார் (ஆண்கள்) வல்லவர்கள் :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.